நான்கு நாட்களில் 384 மில்லியன் டாலர்களைக் குவித்தது ஃபாஸ்ட் & ஃப்யூரியஸ் 7!

வெளியான முதல் நான்கே நாட்களில் அமெரிக்காவில் 384 மில்லியன் டாலர்களைக் குவித்து புதிய சாதனைப் படைத்துள்ளது ஃபாஸ்ட் & ஃப்யூரியஸ் 7.

யுனிவர்சல் நிறுவனம் இதுவரை வெளியிட்ட படங்களிலேயே அதிக முதல் வார வசூல் இந்தப் படத்துக்குத்தான்.

அதேபோல, இதுவரை வெளியான ஃபாஸ்ட் & ஃப்யூரியஸ் படங்களின் வரிசையில், அதிக வசூல் குவித்ததும் இந்தப் படம்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

நான்கு நாட்களில் 384 மில்லியன் டாலர்களைக் குவித்தது ஃபாஸ்ட் & ஃப்யூரியஸ் 7!

ஜேம்ஸ் வான் இயக்கத்தில் வெளியாகியுள்ள ஃபாஸ்ட் & ஃப்யூரியஸ் 7, உலகம் முழுவதும் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

உலகெங்கும் 10500 அரங்குகளில் இந்தப் படம் வெளியானது. இந்தியாவில் மட்டுமே ஆயிரத்துக்கும் மேற்பட்ட அரங்குகளில் இந்தப் படம் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் அதிகபட்சமாக 200 அரங்குகள் இந்தப் படத்துக்கு தரப்பட்டது.

வசூலில் உலகெங்கும் இந்தப் படம் புதிய சாதனை நிகழ்த்தியுள்ளது. அமெரிக்க பாக்ஸ் ஆபீஸில் முதல் நான்கு நாட்களில் மட்டும் 143.6 மில்லியன் டாலர்கள் குவித்து முதலிடத்தில் உள்ளது இந்தப் படம். உலகெங்கும் 384 மில்லியன் டாலர்களைக் குவித்துள்ளது. இதுவரை எந்தப் படத்துக்கும் இந்த வசூல் கிடைத்ததில்லை.

இந்தியாவில்..

இந்தியாவில் மட்டுமே கடந்த நான்கு தினங்களில் ரூ 50 கோடி இந்தப் படத்துக்கு வசூலாகியுள்ளது புதிய சாதனையாகப் பார்க்கப்படுகிறது.

 

இளையராஜாவுக்கு மாற்றா.. நெவர்!- சீறிய ரஹ்மான்!

இளையராஜாவுக்கு மாற்று என்று யாருமில்லை. இன்னொரு முறை இப்படி ஒரு கேள்வியை என்னிடம் கேட்க வேண்டாம், என கோபமாக பதிலளித்தார் ஏஆர் ரஹ்மான்.

அமைதியானவராக, சாந்த சொரூபியாகத்தான் ஆஸ்கர் நாயகன் ரஹ்மானைப் பெரும்பாலானோர் பார்த்திருப்பார்கள். ஆனால் சமீபத்தில் அவர் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற நிகழ்ச்சி ஒன்று சென்னையில் நடந்தது.

இளையராஜாவுக்கு மாற்றா.. நெவர்!- சீறிய ரஹ்மான்!

இந்த நிகழ்ச்சிக்கு வந்திருந்த மீடியாக்காரர்கள், ரஹ்மான் உள்ளே நுழைந்ததும் ஒரு கேள்வியை எழுப்பினர்.

நீங்கள்தான் அடுத்த இளையராஜா என்பதைக் கேட்கும்போது எப்படி உணர்கிறீர்கள்? என்றனர்.

சட்டென்று நிமிர்ந்து ரஹ்மான், "இன்னொரு முறை இப்படிச் சொல்லாதீர்கள். இளையராஜாவுக்கு மாற்றே கிடையாது. அவர் இடத்தில் யாரையும் வைக்கவும் முடியாது. இந்த மாதிரி முட்டாள்தனமான கேள்விகளை என்னிடம் கேட்டு என்னிடமிருந்து எதையாவது பதிலாகப் பெற்று விடலாம் என நினைக்காதீர்கள்," என்றார் ஆவேசமாக.

ஆடிப் போனார்கள் சுற்றியிருந்தவர்கள். கேள்வி கேட்டவரும் மன்னிப்புக் கேட்டுக் கொண்டார்.

 

ஸ்பெக்டர் படப்பிடிப்பில் ஜேம்ஸ்பாண்டுக்கு காயம்... அறுவைச் சிகிச்சை!

ஸ்பெக்டர் படப்பிடிப்பில் ஜேம்ஸ்பாண்டாக நடித்து வரும் டேனியல் க்ரெய்க்குக்கு காயம் ஏற்பட்டது.

அரை நூற்றாண்டு காலமாக ஆக்ஷன் ரசிகர்களை குஷிப்படுத்தி வருகிறது ஜேம்ஸ்பாண்ட் படங்கள்.

இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை வெளியாகும் இந்த ஜேம்ஸ்பாண்ட் படங்களின் வரிசையில், புதிய படைப்பாக உருவாகிவரும் ‘ஸ்பெக்டர்' படத்தில் டேனியல் கிரெய்க் (47) கதாநாயகனாக நடித்து வருகிறார்.

கடந்த மாதம் ஆஸ்திரியாவின் ஆல்ப்ஸ் மலைத்தொடரில் நடைபெற்ற ஒரு அதிரடி சண்டைக்காட்சி படப்பிடிப்பின்போது இவரது கால் மூட்டில் லேசான காயம் ஏற்பட்டது.

ஸ்பெக்டர் படப்பிடிப்பில் ஜேம்ஸ்பாண்டுக்கு காயம்... அறுவைச் சிகிச்சை!

இந்த காயத்தையும் பொருட்படுத்தாமல் பக்கிங்ஹாம்ஷைர் பகுதியில் உள்ள பைன்வுட்ஸ் ஸ்டூடியோவில் மற்றொரு சண்டைக் காட்சியில் சமீபத்தில் பங்கேற்றார் டேனியல் கிரெய்க்.

அப்போது மூட்டில் ஏற்பட்டிருந்த காயம் மேலும் அதிகமானது. இதனால், அவர் வலியால் துடித்தார். இதனையறிந்த அவரது உதவியாளர்கள் உடனடியாக நியூ யார்க் நகரில் உள்ள டேனியல் கிரெய்க்கின் டாக்டர்களைத் தொடர்பு கொண்டு அவசர ஆபரேஷனுக்கு ஏற்பாடு செய்யுமாறு தகவல் அளித்தனர்.

உடனடியாக இங்கிலாந்தில் இருந்து அமெரிக்காவின் நியூ யார்க் நகருக்கு அவர் அழைத்து வரப்பட்டார். கடந்த ஈஸ்டர் அன்று அங்கு அவரது கால் மூட்டில் அவசரமாக சிறிய ஆபரேஷன் செய்யப்பட்டது. தற்போது ஓய்வு எடுத்துவரும் க்ரெய்க் விரைவில் படப்பிடிப்பில் கலந்து கொள்வார் என ‘ஸ்பெக்ட்ர்' படத்தைத் தயாரிக்கும் எம்ஜிஎம் அறிவித்துள்ளது.

 

சன்னி லியோன் படம்... 'அந்த ஒரே ஒரு காட்சி'க்கு மட்டும் கட் கொடுத்த சென்சார்!

சன்னி லியோனின் புதிய படமான ஏக் பெஹ்லி லீலாவில், ஒரே ஒரு அரை நிர்வாண காட்சிக்கு மட்டும் கட் கொடுத்துள்ளது சென்சார் போர்டு.

சன்னி லியோன் நடிப்பில் இந்தியில் உருவாகியிருக்கும் படம் ‘ஏக் பெஹ்லி லீலா'வின் ட்ரைலர் மற்றும் புகைப்படங்கள் ஏக பரபரப்பைக் கிளப்பியுள்ளன.

சன்னி லியோன் படம்... 'அந்த ஒரே ஒரு காட்சி'க்கு மட்டும் கட் கொடுத்த சென்சார்!

சன்னி லியோன் இரட்டை வேடத்தில் நடித்திருக்கிறார். பாபி கான் இயக்கியுள்ளார்.

இந்நிலையில், இப்படத்திற்கு சான்றிதழ் வழங்குவதற்காக சென்சார் போர்டுக்கு படத்தை போட்டுக் காண்பித்துள்ளனர். படத்தை பார்த்த சென்சார் போர்டு அதிகாரிகள் படத்திற்கு எந்த கட்டும் கொடுக்காமல் 'ஏ' சான்றிதழ் வழங்கியுள்ளனர்.

இருந்தாலும், படத்தில் ஹோலி பண்டிகையின் போது ஒரு பெண்ணின் மார்பில் வண்ணப் பொடி பூசுவது போன்ற ஒரு காட்சிக்கு மட்டும் கட் கொடுத்துள்ளனர்.

மற்றபடி, படத்தில் எந்தவொரு காட்சியையும் கட் செய்யவில்லை என்று கூறப்படுகிறது. சன்னி லியோனின் படுக்கை அறைக் காட்சிக்குக் கூட கட் இல்லையாம்.

ஏப்ரல் 10-ந் தேதி இப்படம் வெளிவரவிருக்கிறது.

 

ஸ்ரீதேவியின் கணவரின் இமெயிலை ஹேக் செய்து வாலிபரிடம் ரூ.3.5 லட்சம் அபேஸ் செய்த ஜோடி

மும்பை: நடிகை ஸ்ரீதேவியின் கணவரும், பாலிவுட் தயாரிப்பாளருமான போனி கபூரின் இமெயிலை ஹேக் செய்த இருவர் படத்தில் நடிக்க வாய்ப்பு வாங்கித் தருவதாகக் கூறி வாலிபர் ஒருவரிடம் இருந்து ரூ.3.5 லட்சம் பெற்று ஏமாற்றியுள்ளனர்.

தென்னாப்பிரிக்காவில் வசித்து வந்தவர் கரண் கமல் சர்தா. அவர் தனது பெற்றோரின் மறைவுக்கு பிறகு தனது சகோதரியுடன் கடந்த 2010ம் ஆண்டு மும்பை வந்து செட்டிலாகியுள்ளார். கரணின் சகோதரி மும்பையில் அழகு நிலையம் நடத்தி வருகிறார். கரண் மேடை நாடகங்களில் நடித்து வருகிறார். மேலும் கஹானி தேவி என்ற படத்திலும் நடித்துள்ளார். அந்த படம் இன்னும் ரிலீஸாகவில்லை.

நடிகரிடம் ரூ. 3.5 லட்சம் மோசடி: ஸ்ரீதேவியின் கணவர் போனியை தேடி வரும் வம்புகள்

இந்நிலையில் கரணின் மாமா லண்டனில் இருந்து மும்பை வருகையில் விமானத்தில் அவருக்கு அர்ச்சனா சர்மா(27) என்ற பெண் பழக்கமாகியுள்ளார். அர்ச்சனாவிடம் கரண் பற்றி அவரது மாமா தெரிவித்துள்ளார். அதற்கு அர்ச்சனா கரணுக்கு சினிமாவில் தான் வாய்ப்பு வாங்கித் தருவதாகக் கூறியுள்ளார். அதன் பிறகு அழகு நிலையத்தில் வைத்து அர்ச்சனா கரணை சந்தித்து பேசியுள்ளார்.

மோஹித் ரெய்னா என்பவர் 2005ம் ஆண்டு ரிலீஸான ஹிட் படமான நோ என்ட்ரி படத்தின் இரண்டாம் பாகமான நோ என்ட்ரி மெய்ன் என்ட்ரி என்ற படத்தை எடுக்கிறார் என்று தெரிவித்துள்ளார் அர்ச்சனா. பின்னர் வீடியோ கான்பரன்சிங் மூலம் கரணை ரெய்னா என்பவரிடம் பேச வைத்துள்ளார். படத்தில் நடிக்க ரூ.3.5 லட்சம் தர வேண்டும் என்றும் இது தொடர்பாக ஜுஹுவில் உள்ள பிவிஆரில் கௌரவ் ஜோஷி(28) என்பவரை சந்திக்க வேண்டும் எனவும் அர்ச்சனா கரணிடம் கூறியுள்ளார்.

கரணும் ஜோஷியை சந்தித்து இரு தவணைகளில் பணத்தை அளித்துள்ளார். கரணுக்கு நடிகை ஸ்ரீதேவியின் கணவரும், பாலிவுட் தயாரிப்பாளருமான போனி கபூரிடம் இருந்து படம் குறித்து இமெயில் வந்துள்ளது.

பணத்தை பெற்ற பிறகு அர்ச்சனாவும், ஜோஷியும் கரணை கண்டுகொள்ளவில்லை. அதன் பிறகு அவர் இது குறித்து போலீசில் புகார் அளித்தார். விசாரணையில் போனி கபூரின் இமெயிலை அந்த 2 பேரும் ஹேக் செய்து இமெயில் அனுப்பியது தெரிய வந்தது. இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் அர்ச்சனா மற்றும் ஜோஷியை கைது செய்துள்ளனர்.

 

சென்னையில் இன்று வெற்றி விழா கொண்டாடிய கொம்பன்

ஏக பிரச்சினைகளுக்கிடையில் கடந்த வாரம் வெளியான சென்னையில் இன்று வெற்றி விழா கொண்டாடிய கொம்பன்  

படத்தை வெளியிடாமல் தடுக்க வழக்கும் தொடர்ந்தனர். ஆனால் அனைத்திலும் வென்று வெளியானது படம்.

ரசிகர்கள் படத்துக்கு ஏக ஆதரவை வழங்கினர். நல்ல வசூல். இதைக் கொண்டாடும் வகையில் இன்று படக்குழுவினர் பிரசாத் லேப் தியேட்டரில் கூடினர்.

சென்னையில் இன்று வெற்றி விழா கொண்டாடிய கொம்பன்

நடிகர் சூர்யா, இயக்குனர் முத்தையா, தயாரிப்பாளர் ஸ்டுடியோ கிரீன் ஞானவேல் ராஜா ஆகியோர் கலந்துகொண்டனர். படத்தை பெரிய வெற்றியடைய வைத்த அனைத்து ரசிகர்களுக்கும், நலம் விரும்பிகளுக்கும் தங்களது நன்றிகளை தெரிவித்துக் கொண்டனர்.

சென்னையில் இன்று வெற்றி விழா கொண்டாடிய கொம்பன்

குறிப்பாக மீடியாவுக்கு மிகப் பெரிய நன்றி என்றார் ஞானவேல் ராஜா.

நடிகர் கார்த்தி பேசுகையில், "கிராம மக்கள் கூட்டம் கூட்டமாக இந்தப் படத்தைப் பார்த்து வருகின்றனர். ஒரு அழகான குடும்பப் படத்தில் நடித்ததற்காக எனக்கு நன்றி கூறுகின்றனர். படத்தைப் பாராட்டி வரும் விமர்சனங்களைப் படிக்கும்போது மிக நெகிழ்ச்சியாக உள்ளது," என்றார்.

முன்னதாக நடிகை கோவை சரளா கேக் வெட்டி வெற்றி விழாவை தொடங்கி வைத்தார்.

 

தனக்கு திருமணமாகிவிட்டதாக நடிகை சார்மி ட்விட்டரில் திடீர் அறிவிப்பு

தனக்கு திருமணமாகிவிட்டதாக நடிகை சார்மி ட்விட்டரில் திடீர் அறிவிப்பு வெளியிட்டுள்ளதால் பரபரப்பு கிளம்பியுள்ளது.

ஆனால் யாருடன் திருமணம், எப்போது நடந்தது என்பது குறித்து அவர் எந்த தகவலும் வெளியிடவில்லை.

இது உண்மையிலேயே திருமண செய்திதானா அல்லது பரபரப்பான விளம்பரத்துக்காக அவர் இப்படிச் செய்துள்ளாரா என்று மீடியாவில் கேள்வி எழுந்துள்ளது.

தனக்கு திருமணமாகிவிட்டதாக நடிகை சார்மி ட்விட்டரில் திடீர் அறிவிப்பு

சமீப காலமாகவே இப்படி திடீர் திருமண தகவல்களை வெளியிடுவது, பின்னர் அது குறிப்பிட்ட படத்தின் பிரமோஷனுக்குத்தான் என விளக்கம் கொடுப்பது வாடிக்கையாகிவிட்டது.

ராஜாராணி படத்துக்காக நடிகை நயன்தாரா - ஆர்யா திருமணம் என்று  ஒரு வாரம் புரளி கிளப்பி, ஸ்டில் வெளியிட்டு, அதற்கு நயன்தாரா வேறு மறுப்பு தெரிவித்து, பின்னர்தான் எல்லாம் 'ச்சும்மா..லுல்லாயி' என்று விளக்கியது நினைவிருக்கலாம்.

சார்மி விவகாரமும் அப்படித்தானா என்பது நாளை தெரிந்துவிடும்.

சார்மி தற்போது, ‘பத்து எண்றதுக்குள்ள' படத்தில் விக்ரமுடன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் என்பது ஒரு கூடுதல் தகவல்.

 

மே 1-ம் தேதி உத்தம வில்லன் ரிலீஸ்... தயாரிப்பாளர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பு

வரும் மே 1-ம் தேதி மே 1-ம் தேதி உத்தம வில்லன் ரிலீஸ்... தயாரிப்பாளர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பு

திருப்பதி பிரதர்ஸ், ராஜ் கமல் பிலிம்ஸ் இணைந்து தயாரித்துள்ள படம் உத்தம வில்லன். கமலுடன் கே பாலச்சந்தர், கே விஸ்வநாத், ஜெயராம், பூஜா குமார், ஆன்ட்ரியா நடித்துள்ளனர்.

மே 1-ம் தேதி உத்தம வில்லன் ரிலீஸ்... தயாரிப்பாளர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பு

இந்தப் படத்தை ரமேஷ் அரவிந்த் இயக்கியுள்ளார். கமல் கதை திரைக்கதை எழுதியுள்ளார்.

ஜிப்ரான் இசையமைத்துள்ள இந்தப் படம் கடந்த ஆண்டே வெளி்யாகவிருந்தது. ஆனால் சில தள்ளிப் போடல்களுக்குப் பின் கடந்த ஏப்ரல் 2-ம் தேதி வெளியாகவிருந்தது. ஆனால் சென்சார் பணிகள் முடிவடையாததால் ரிலீஸ் தேதி தள்ளிப் போடப்பட்டது.

இந்த நிலையில், திருப்பதி பிரதர்ஸ், ராஜ்கமல் பிலிம்ஸ் மற்றும் படத்தை வெளியிடும் ஈராஸ் நிறுவனம் ஆகியவை கூட்டாக படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்துள்ளனர்.

மே 1-ம் தேதி உத்தம வில்லன் ரிலீஸ்... தயாரிப்பாளர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பு

மே 1-ம் தேதி உலகெங்கும் அதிக அரங்குகளில் உத்தம வில்லன் வெளியாகும் என தெரிவித்துள்ளதோடு, படத்தின் ரிலீஸ் போஸ்டரையும் வெளியிட்டுள்ளனர்.

 

நான் சொல்லல... சார்மி மேட்டர் ச்சும்மா லுல்லாயிதானாம்!

ஆமாம்... நான் திருமணம் செய்து கொண்டேன் என்று பதிவிட்டு சில மணி நேரம் பரபரக்க வைத்த சார்மி, இப்போது, அது நிஜத்தில் அல்ல, பூரி ஜெகன்னாத் படத்துக்காகத்தான் என்று விளக்கியுள்ளார்.

நான் சொல்லல... சார்மி மேட்டர் ச்சும்மா லுல்லாயிதானாம்!

ஜோதிலட்சுமி என்ற தெலுங்குப் படத்தில் நடித்து வருகிறார் சார்மி. அவருக்கு ஜோடியாக சத்யா என்ற புதுமுகம் நடிக்கிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு கோவாவில் நடந்து வருகிறது.

நான் சொல்லல... சார்மி மேட்டர் ச்சும்மா லுல்லாயிதானாம்!

இந்த நிலையில் தன் படத்தை பெரிய அளவில் பரபரப்பாக்க, தனக்கு திருமணம் நடந்துவிட்டதாக காலையில் ட்விட்டரில் தன் திருமண கோல படத்தை வெளியிட்டார்.

சில மணி நேரத்துக்குப் பிறகு, மீண்டும் ட்விட்டரில் தனது திருமணக் கோலப் படத்தை வெளியிட்டுள்ள சார்மி... ஆங், சொல்ல மறந்துட்டேன், எல்லாம் ஜோதிலட்சுமி மற்றும் பூரி ஜெகன்னாத்துக்காகத்தான் என்று கூறியுள்ளார்.

 

கொம்பனிடம் அடி வாங்கும் அந்த வில்லன் யார் தெரியுமா?

கொம்பன் படத்தில் கார்த்தியிடம் அடி வாங்கும் வில்லன் இந்திய கால்பந்து அணியின் முன்னாள் கேப்டன் ஐ.எம்.விஜயன் என்பது உங்களுக்குத் தெரியுமா? இவர் ஏற்கனவே திமிரு படத்தில் டெரர் காட்டியவர்தான்... சில ஆண்டுகள் இடைவெளிக்குப் பின்னர் தற்போது மீண்டும் கொம்பனில் வில்லனாக வந்துள்ளார்.

மலையாளத்தில் ஐ.எம்.விஜயன் நடித்த முதல் படம் சாந்தம். கடந்த 2001ஆம் ஆண்டு ஜெயராஜ் இயக்கத்தில் வெளி வந்த இந்த படம் தேசிய அளவில் சிறந்த படமாக தேர்வு செய்யப்பட்டது.

கொம்பனிடம் அடி வாங்கும் அந்த வில்லன் யார் தெரியுமா?

கால்பந்தை பொறுத்த வரை, கடந்த 1989ஆம் ஆண்டு முதல் 2004ஆம் ஆண்டு வரை இந்திய கால்பந்து அணிக்காக ஐ.எம்.விஜயன் விளையாடியுள்ளார். இந்திய அணியின் சிறந்த கேப்டன்களில் இவரும் ஒருவர். இன்னொருவர் பாய்ச்சுங் பூட்டியா. இந்த இருவரும் இணைந்து இந்திய கால்பந்து அணிக்கு பல வெற்றிகளை தேடி கொடுத்துள்ளனர். ஐ.எம்.விஜயன் இந்திய அணிக்காக 79 சர்வதேச போட்டிகளில் பங்கேற்று 40 கோல்களை அடித்துள்ளார். மோகன்பாகன், சர்ச்சில் பிரதர்ஸ்,ஈஸ்ட் பெங்கால், எப்.சி. கொச்சி போன்ற புகழ்பெற்ற கிளப் கால்பந்து அணிகளுக்காகவும் ஐ.எம்.விஜயன் விளையாடியுள்ளாராம்.

திமிருவில் கலக்கல்

சிறந்த கால்பந்து வீரரான ஐ.எம்.விஜயன், தமிழில் நடித்துள்ள இரண்டாவது படம் கொம்பன். ஏற்கனவே 'திமிரு' படத்தில் ஷ்ரேயா ரெட்டிக்கு அண்ணனாக வந்து கலக்கியிருப்பார் விஜயன். அந்த படத்தில் உன் கையால உயிர் பிழைப்பதா? என்று விஷாலிடம் கூறியவாறே தனது கையை வெட்டிக்கொண்டு கட்டடத்தின் மேல் இருந்து விழுந்து சாகும் கேரக்டரில் விஜயன் மிரட்டியிருப்பார்.

கொம்பனில் சாதா வில்லன்

'கொம்பன்' படத்தில் மெயின் வில்லனான சூப்பர் சூப்பராயனின் இரண்டு மகன்களில் ஒருவராக விஜயன் நடித்துள்ளார். கரடு முரடான அவரது முகத்துக்கு ஏற்ற வில்லன் வேடமாக இருந்தாலும், கொம்பன் படம் விஜயனின் நடிப்புக்கு தீனி போடும் விதத்தில் இல்லை.

கொஞ்சம் வில்லத்தனம்

சும்மா ஒப்புக்கு சப்பாணியாக வந்து போயிருப்பார். ஒரு கொலை செய்துவிட்டு ஜெயிலுக்கு போனதோடு அவ்வப்போது ஜாமீன் கேட்பார். பின்னர் ஜெயிலுக்குள் வைத்து ராஜ்கிரணை போட்டுத்தள்ள திட்டமிட்டு வாங்கிக் கட்டுவார்.

கார்த்தியிடம் அடி

கிளைமாக்ஸ் கட்சியில் கார்த்தியிடம் அடி வாங்குவதோடு அவரது நடிப்பு முடிகிறது. அந்த வகையில் கொம்பன் படத்தில் ஐ.எம்.விஜயனின் நடிப்பு பெரியதாக இல்லையென்றாலும், நீண்ட காலம் கழித்து கொம்பனில் வில்லனாக ஐ.எம்.விஜயன் களமிறங்கியிருப்பது மீண்டும் அவர் தமிழில் ஒரு ரவுண்டு வருவார் என்ற எதிர்பார்ப்பை கிளப்பியிருக்கிறது.

 

முறிந்தது இன்னொரு கூட்டணி.. வெற்றி மாறன் படத்தில் ஜிவி பிரகாஷுக்கு பதில் சந்தோஷ் நாராயணன்!

கோடம்பாக்கத்தில் சில கூட்டணிகளுக்கு மவுசு அதிகம். இன்றைய இளைஞர்களுக்கு யுவன் சங்கர் ராஜா - செல்வராகவன், ஜிவி பிரகாஷ் - வெற்றிமாறன் கூட்டணியில் வெளிவந்த பாடல்களை ரொம்பப் பிடிக்கும்.

யுவன் சங்கர் ராஜா - செல்வராகம் கூட்டணி ஆயிரத்தில் ஒருவன் படத்தின்போது உடைந்து, இப்போது மீண்டும் சேர்ந்திருக்கிறது.

முறிந்தது இன்னொரு கூட்டணி.. வெற்றி மாறன் படத்தில் ஜிவி பிரகாஷுக்கு பதில் சந்தோஷ் நாராயணன்!

ஆனால் பொல்லாதவன், ஆடுகளம் படங்கள் மூலம் ரசிகர்களைக் கவர்ந்த ஜிவி பிரகாஷ் - வெற்றிமாறன் ஜோடி, இப்போது பிரிந்துவிட்டது.

விசாரணை படத்துக்குப் பிறகு வெற்றி மாறன் இயக்கும் புதிய படம் சூதாடி. இதில் தனுஷ் நாயகனாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக சமந்தா நடிக்கிறார்.

இந்தப் படத்தை தனுஷும் வெற்றி மாறனும் இணைந்து தயாரிக்கின்றனர்.

படத்துக்கு முதலில் ஜிவி பிரகாஷ்தான் இசை என அறிவித்திருந்தனர். ஆனால் இப்போது அதிலிருந்து ஜிவி பிரகாஷ் விலகிக் கொண்டார்.

இந்தப் படத்தில் ஜிவி பிரகாஷுடன் பணியாற்றுவது வசதியாக இல்லை என்று தனுஷ் வெளிப்படையாகக் கூறிவிட்டாராம். இதனால் ஜிவி வெளியேற, அவருக்குப் பதில் சந்தோஷ் நாராயணனை சிபாரிசு செய்துள்ளார் தனுஷ்.

இதை வெற்றி மாறனும் ஏற்றுக் கொண்டாராம்.

சூதாடி படத்துக்கு தான் இசையமைப்பதை ட்விட்டரில் உறுதி செய்துள்ளார் சந்தோஷ் நாராயணன். குக்கூ, ஜிகிர்தண்டா, மெட்ராஸ் படங்களுக்கு இசையமைத்தவர் சந்தோஷ் நாராயணன்.

 

தேசிய விருது பெற்றதும் ஆளே மாறிட்டாருங்க.. - பாபி சிம்ஹா மீது இயக்குநர் புகார்

தேசிய விருது பெற்ற பிறகு பாபி சிம்ஹா முழுவதும் மாறிவிட்டார். படப்பிடிப்புக்கு ஒத்துழைப்பே தரவில்லை, என்று இயக்குநர் மருதுபாண்டியன் புகார் தெரிவித்தார்.

ஜிகர்தாண்டா படத்தில் நடித்ததற்காக சிறந்த துணை நடிகருக்கான தேசிய விருது பெற்ற பாபி சிம்ஹாதான் இப்போது கோடம்பாக்கத்தின் பரபர மனிதராகிவிட்டார்.

இவர் ஆரம்பத்தில் நடித்த படம் 'சென்னை உங்களை அன்புடன் வரவேற்கிறது.' இந்தப் படத்தில் பாதியிலேயே நடிக்காமல் போய்விட்டதாக பாபி சிம்ஹா குறித்து ஏற்கெனவே புகார் கூறினர்.

தேசிய விருது பெற்றதும் ஆளே மாறிட்டாருங்க.. - பாபி சிம்ஹா மீது இயக்குநர் புகார்

குறும்படம் என்று கூறி நடிக்க அழைத்தவர்கள், கடைசியல் பெரிய படம் எடுத்து ஏமாற்றிவிட்டார்கள் என பாபி சிம்ஹா கூறியிருந்தார்.

இந்த நிலையில் இதற்கு பதிலளித்து ‘சென்னை உங்களை அன்புடன் வரவேற்கிறது' படத்தின் இயக்குநர் மருது பாண்டியன் கூறுகையில், "இந்தப் படத்துக்காக பாபி சிம்ஹாவை கதாநாயகனாக ஒப்பந்தம் செய்தேன். இதுதான் அவர் நாயகனாக அறிமுகமான முதல் படம். 67 நாட்கள் படப்பிடிப்பு நடத்தினோம். 30 நாட்களுக்கு மேல் நடித்து கொடுத்தார். ஆரம்பத்தில் நன்றாக ஒத்துழைப்பு அளித்தார்.

ஆனால் ஜிகர்தண்டா படம் ஹிட்டானதும் அவர் ஆளே மாறிவிட்டார். ஐந்து நாட்கள் நடிக்க வேண்டிய காட்சிகள் பாக்கி இருந்தன. அவற்றை முடித்துக் கொடுக்க மறுத்துவிட்டார்.

இப்போது என் நிலைமை வேறு. ‘சென்னை உங்களை அன்புடன் வரவேற்கிறது' படத்தின் கணக்கு வழக்குகளை என்னிடம் ஒப்படையுங்கள். அந்த படத்துக்கான வசூலில் பாதியை எனக்கு தருவதாக உத்தரவாதம் அளிக்க வேண்டும். அப்போதுதான் நடிப்பேன் என்று நிபந்தனை விதித்தார்.

பல மாதங்கள் காத்திருந்தோம். விஜய் சேதுபதி மூலம் சமரசமும் பேசினோம். ஆனால் நடிக்க வரவில்லை. டப்பிங் பேசவும் மறுத்து விட்டார். இதனால் அவர் நடிக்காமல் விட்ட சீன்களை வேறு ஒருவரை நடிக்க வைத்து முடித்துவிட்டோம். வருகிற 10-ந்தேதி படம் ரிலீசாகிறது.

இதை குறும்படம் என்று பாபி சிம்ஹா கூறி இருப்பது தவறு. 2 மணி நேரம் 15 நிமிடம் படம் வந்துள்ளது. அவரிடம் கதை சொன்னபோதே 115 சீன்கள் விளக்கினேன்.

திரைப்பட துறையில் சாதிக்க துடிக்கும் மூன்று இளைஞர்கள் பற்றிய கதையே இப்படம். இந்த படத்தை பார்த்த இயக்குநர் பாரதிராஜா, ‘நாயகன்' படத்துக்கு பிறகு நான் பார்த்து வியந்த படம் என பாராட்டினார்," என்றார்.

 

மீண்டும் ட்விட்டருக்கு வந்தார் யுவன் சங்கர் ராஜா!

பிரபல இசையமைப்பாளர் இளையராஜாவின் இளைய மகனும், இசையமைப்பாளருமான யுவன் சங்கர் ராஜா மீண்டும் ட்விட்டரில் இணைந்தார்.

சில ஆண்டுகளுக்கு முன்பே யுவன் ட்விட்டரில் இருந்தார். ஆனால் அவர் இஸ்லாம் மதத்தைத் தழுவிய தகவலை அவர் ட்விட்டரில் வெளியிட்டபோது, கார சாரமான கமெண்டுகள் வர ஆரம்பித்தன.

மீண்டும் ட்விட்டருக்கு வந்தார் யுவன் சங்கர் ராஜா!

இதனால் ட்விட்டரிலிருந்து விலகுவதாக அறிவித்துவிட்டார்.

ஒரு சின்ன இடைவெளிக்குப் பிறகு @thisisysr என்ற முகவரியுடன் இப்போது ட்விட்டரில் இணைந்துள்ளார் அவர்.

யுவன், சூர்யாவுடன் தாமிருக்கும் படத்தை இன்று ட்வீட் செய்திருந்தார் வெங்கட் பிரபு. அந்த ட்வீட்டை ரிட்வீட் செய்துள்ளார் யுவன்.

யுவன் மறுபடியும் ட்விட்டருக்கு வந்துள்ளது அவரது ரசிகர்களை மிகவும் மகிழ்ச்சியடைய செய்துள்ளது. அவருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர்.

 

எஸ்பி முத்துராமன் இல்ல திருமண விழாவில் கருணாநிதி, ரஜினி

சென்னை: மூத்த இயக்குநர் எஸ்பி முத்துராமனின் பேத்தியின் திருமண விழாவில் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினார்கள் திமுக தலைவர் கருணாநிதி மற்றும் நடிகர் ரஜினி காந்த்.

எஸ்பி முத்துராமனின் மகள் வழிப் பேத்தியும் டாக்டர் விசாலாட்சி - டாக்டர் முத்தையா தம்பதிகளின் மகள் முத்துலட்சுமிக்கும் முத்துக்குமாருக்கும் சில தினங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது.

எஸ்பி முத்துராமன் இல்ல திருமண விழாவில் கருணாநிதி, ரஜினி

அதன் வரவேற்பு நிகழ்ச்சி ஏவிஎம் ராஜேஸ்வரி திருமண மண்டபத்தில் நடந்தது.

நிகழ்ச்சிக்கு ரஜினிகாந்த் நேரில் வந்து மணமக்களை வாழ்த்தினார். அவரை எஸ்பி முத்துராமன் வரவேற்று அழைத்துச் சென்றார்.

எஸ்பி முத்துராமன் இல்ல திருமண விழாவில் கருணாநிதி, ரஜினி

திமுக தலைவர் கருணாநிதி, பொருளாளர் முக ஸ்டாலின் உள்ளிட்டோரும் நேரில் வந்து மணமக்களை வாழ்த்தினர்.