வேட்டியில் அசத்திய ‘சதுரங்க வேட்டை’!

சதுரங்க வேட்டைப் படக்குழுவினர் பத்திரிகையாளர் சந்திப்பின் போது வெள்ளை வேட்டி, சட்டையில் வந்திருந்து தமிழர்களின் பாரம்பரியத்தைப் பறைசாற்றினர்.

சென்னை கிரிக்கெட் கிளப்பில் வேட்டி கட்டி சென்ற நீதிபதிக்கும், வக்கீல்களுக்கும் அனுமதி மறுக்கப்பட்டதற்கு பல தரப்பிலும் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன. போராட்டங்களும் நடந்து வருகிறது. சட்டமன்றத்திலும் இப்பிரச்சினை எதிரொலித்துள்ளது.

இந்த நிலையில் வடபழனியில் உள்ள ‘கிரீன் பார்க்' நட்சத்திர ஓட்டலில் ‘சதுரங்க வேட்டை' படக்குழுவினர் பத்திரிகையாளர்களை சந்தித்தனர்.

வேட்டியில் அசத்திய ‘சதுரங்க வேட்டை’!

வேட்டி சட்டையில்

‘சதுரங்க வேட்டை'யில் கதாநாயகனாக நடித்துள்ள நட்ராஜ், நடிகர்கள் மனோபாலா, பொன்வண்ணன், இளவரசு ராமச்சந்திரன் சத்யா, செந்தில், வளவன், டைரக்டர் வினோத் படத்தை வாங்கி வெளியிடும் டைரக்டர் லிங்குசாமி, சுபாஷ் சந்திரபோஸ் ஆகியோர் பாரம்பரிய உடையில் பங்கேற்றனர்.

தொழில் நுட்பக்குழுவினரும்

இசையமைப்பாளர் ஷான் ரால்டன், ஒளிப்பதிவாளர் கே.வெங்டேஷ், எடிட்டர் ராஜா சேதுபதி, உள்ளிட்டோர் வெள்ளை வேட்டி, சட்டையுடன் கலந்து கொண்டனர். விழாவிற்கு வந்திருந்த பாலாஜி சக்திவேல், சசி போன்றோரும் வெள்ளை வேட்டியில் வந்திருந்தனர்.

வேட்டிதான் கதைக்கரு

‘சதுரங்க வேட்டை' படத்தின் கதையில் வெள்ளை வேட்டி, சட்டை முக்கிய கருவாக வருகிறது என்றும் எனவேதான் இந்த ஆடை உடுத்தி வந்தோம் என்றும் படக்குழுவினர் தெரிவித்தனர்.

யோசித்த லிங்குசாமி

செய்தியாளர்களிடம் பேசிய இயக்குநர் லிங்குசாமி, இவ்வருடம் எங்களது திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் ‘கோலி சோடா', ‘மஞ்சப்பை' என தொடர் வெற்றி படங்களை கொடுத்துள்ளது. அடுத்து ‘அஞ்சான்' தயாராகிறது. எனவே வேறு படங்களை வாங்க வேண்டாம் என்று இருந்தேன்.

விறுப்பான சதுரங்க வேட்டை

சிலர் வற்புறுத்தியதால் ‘சதுரங்க வேட்டை' படத்தை பாதி தூக்க கலக்கத்தில் பார்த்தேன். தூக்கம் அப்படியே பறந்து போனது. கடைசி வரை அவ்வளவு விறுவிறுப்பாக படம் இருந்தது. உடனே இதை வாங்கி வெளியிட முடிவு செய்தேன்.

ரசிகர்களுக்குப் பிடித்த படம்

‘கும்கி', ‘வழக்கு எண்' படங்கள் மாதிரி இது எங்கள் நிறுவனத்தின் முக்கிய படமாக இருக்கும். வசனங்கள் பிரமாதமாக உள்ளது. எல்லோரும் சிறப்பாக நடித்துள்ளனர். ரசிகர்களுக்கு நிச்சயம் இப்படம் பிடிக்கும் என்றார்.

இயக்குநர்கள் பாராட்டு

டைரக்டர்கள் பாலாஜி சக்திவேல், சசி, நவீன், கார்த்திக், சுப்பாராஜ், உள்ளிட்ட பலர் படத்தை பாராட்டி பேசினர்.

நட்சத்திர ஓட்டலில் வியப்பு

நட்சத்திர ஓட்டலில் வெள்ளை வேட்டி, சட்டையில் வந்தவர்களை ஜீன்ஸ், டீசர்ட் என மாடர்ன் டிரெஸ்சில் திரிந்தவர்களும் ஓட்டல் ஊழியர்களும் வியப்பாக பார்த்தனர்.

 

"நூன் ஷோவில் பிக் அப் ... மேட்னியில் பேக் அப்.. இதுதான் இன்றைய காதல்".. டி.ஆர் "நச்!

சென்னை: சென்னையில் நேற்று நடந்த மணல் நகரம் பட இசை வெளியீட்டு விழாவில் ஒரு தலை ராகம் படக்குழுவினர் கலந்து கொண்டனர். விழாவில் மணல் நகரம் படத்தின் இசையை டி.ஆர் வெளியிட ஒரு தலை ராகம் நாயகி ரூபா அதனைப் பெற்றுக் கொண்டார்.

பன்முகத் திறமையாளரான டி.ராஜேந்தர் பேச்சுக்கென்ற தனி ரசிகர் பட்ட ளம் உண்டு எனக் கூறினால் அது மிகையாகாது. அதனை நிரூபிப்பது போல், விழாவில் டி.ஆர். பேச எழுந்ததுமே கைதட்டலால் அரங்கம் அதிர்ந்தது.

முதலில் ஒரு தலை ராகம் படக்குழுவினரை வரவேற்று தன் பேச்சைத் தொடங்கினார் டி.ஆர். தொடர்ந்து விழாவில் அவர் பேசியதாவது:

ஒரு புயல் தென்றலாகிறது...

''நான் கடந்த 2 நாட்களாக நடந்த நிகழ்ச்சிகளில் பரபரப்பாக பேசினேன். புயல் வீசியது என்றார்கள் இங்கு. புயலாக வரவில்லை தென்றலாக வீசப் போகிறேன்.

விழுந்து கும்பிடுவேன்...

நான் என்றும் பழையதை மறக்கமாட்டேன். நான் 'ஒருதலை ராகம்' எடுத்த மாயவரம் ஏவிசி கல்லூரியை பார்த்தாலே இன்றும் விழுந்து கும்பிடுவேன். 34 ஆண்டுகளாக இது வரை அங்குபோனது இல்லை. அங்கு இந்த ஆண்டு போகவுள்ளேன்.

இது தான் ட்ரண்ட்...

இன்று எல்லாம் மாறி விட்டது. கேட்டால் ட்ரண்ட் என்கிறான். அன்று நாகரிகமாக காதல் ருந்தது இன்று மாறிவிட்டது. நூன் ஷோவில் பிக் அப் மேட்னியில் பேக் அப் என்று மாறிவிட்டது.

வெத்துப்பாட்டு...

அன்று கதைக்காகப் படம் எடுத்தார்கள் இன்று சதைக்காகப் படம் எடுக்கிறார்கள். அன்று குத்துப்பாட்டு வைத்தார்கள். இன்று வெத்துப்பாட்டு வைக்கிறார்கள்.

செண்டிமெண்ட்...

இன்று தமிழ் சினிமாவில் அம்மா, ஆத்தா, தங்கை செண்டி மெண்ட்டை மதிப்பதில்லை. அப்படி வைத்தால் சீரி ல் என்கிறான். ஆனால் ஆந்திரா, கேரளா, கர்நாடகாவில் இன்றும் அம்மா, ஆத்தா, தங்கை செண்டிமெண்ட்டை மதிக்கிறான்.

கிண்டல்...

இன்று புரிகிற மாதிரி பாட்டு இருக்கக் கூடாது. கேட்டால் ட்ரண்ட் என்கிறான். நான் 108 குரலில் பேசுவேன் இன்றுவரை ஃபீல்டில் இருக்கிறேன். என்னையே கிண்டல் செய்கிறான்.

திறமை...

பலபேர் உன்னைக் கிண்டல் செய்தால் கவலைப் படாதே. உன்னிடம் திறமை இருந்தால் கிண்டல் ச ய்வான். உன் மேல் பொறாமை இருந்தால் கிண்டல் செய்வான். உன்னை யாரும் சட்டை செய்யவில்லை என்றால் நீ சடை என்று அர்த்தம். யாரும் உன்னைக் கிண்டல் செய்தால் கவலைப் படாதே.

பலித்து விட்டது...

அன்று'ராகம் தேடும் பல்லவி'யில் சங்கரை நான் ஒரு இயக்குநராக காண்பித்தேன். இன்று அது பலித்து விட்டது

திரிஷ்யம்...

எனக்கு மலையாளத்தில் படமெடுக்க ஆசை. அங்குதான் கலாச்சாரம் இருக்கிறது. ங்குதான் குடும்பக்கதை 'திரிஷ்யம்' ஓடுகிறது.

வேட்டி கட்டி நடிக்கிறார்கள்...

மலையாளத்தில்தான் மம்முட்டி, மோகன்லால், திலீப் என எல்லாரும் வேட்டி கட்டி நடிக்கிறார்கள். இங்கு வேட்டி கட்டி நடிக்கிறார்களா? எல்லாரும் ஜீன்ஸ் போட்டு நடிக்கிறார்கள்'' என இவ்வாறு விழாவில் டி.ஆர் உரையாற்றினார்.

நினைவுப்பரிசு...

பேச்சைத் தொடர்ந்து படக்குழுவினரை வாழ்த்தி, அவர்களுக்கு ினைவுப் பரிசுகள் வழங்கினார் டி.ஆர்.

ரசித்தனர்...

டி.ஆர். தனது பேச்சினூடே ஆங்காங்கே பாடியும், குரல் மாற்றிப் பேசியதை பார்வையாளர்கள் வெகுவாக ரசித்தது குறிப்பிடத்தக்கது.

 

4 பாதுகாவலர்கள் புடை சூழ ஷூட்டிங்கிற்கு வரும் அங்காடி நடிகை!

சில காலம் தலைமறைவாக இருந்த அங்காடி நடிகை, தற்போது புதிய தமிழ்ப் படமொன்றில் நடித்து வருகிறார்.

தன்னை அறிமுகப்படுத்திய இயக்குநரின் படத்தில் நடிக்க மாட்டேன் என்ற பிரச்சினை நீதிமன்றத்தில் உள்ளது. இதற்கிடையே அங்காடியை புதிய படத்தில் நடிக்க விடக் கூடாது என ஒரு குரூப்பே செயல்பட்டு வருகிறது.

இதனால், படப்பிடிப்பு தளத்தில் தனக்கு ஏதாவது ஆபத்து நேரலாம் என அங்காடி நடிகை பயப்படுகிறாராம். இந்தப் பயம் காரணமாக தனக்கென ஒரு பாதுகாப்புப் படையை உருவாக்கி வைத்துள்ளார் அங்காடி.

நான்கு பேர் கொண்ட இந்த பாதுகாப்புப் படை படப்பிடிப்பு உள்பட அனைத்து இடத்திற்கும், எங்கேயும், எப்போதும் அங்காடி நடிகைக்கு பாதுகாப்பு வளையமாக உடன் வருகிறார்களாம். இவர்களுக்கான செலவை தயாரிப்பாளர் தலையில் கட்டாமல் தானே பார்த்துக் கொள்கிறாராம் நடிகை.

 

‘லேட்டா வந்தாலும் லேட்டஸ்ட் ஆகிட்டாரே’... நம்பர் நடிகை மீது கோபத்தில் யோகா நடிகை!

உச்ச நடிகர் மற்றும் கோட் சூட் நடிகரின் படங்களில் ஒரே நேரத்தில் நடிப்பதில் ரொம்பவும் குஷியாக இருந்தார் யோகா நடிகை.

இந்நிலையில், கோட் சூட் நடிகரின் படப்பிடிப்பு தொடங்கி சில மாதங்கள் கழிந்த நிலையில் திடீரென புத்த இயக்குநர் சின்ன நம்பர் நடிகையை படத்திற்குள் கொண்டு வந்தார். முன்பு, இப்படத்தில் தான் ஒரே நாயகி தான் என்ற நினைப்பில் இருந்த யோகா நடிகைக்கு இது மிகப்பெரிய அதிர்ச்சியாக இருந்தது.

திடீரென நடந்த கதை மாற்றப்படி, யோகா நடிகைக்கு நாயகனுடன் ஆடிப்பாடும் வேலை மட்டும் தானாம். மற்றபடி, நம்பர் நடிகைக்குத் தான் படத்தில் முக்கியத்துவம் தரப்படுகிறதாம். சிறிது நேரமே வந்தாலும் நம்பர் நடிகைக்கு கனமான கதாபாத்திரமாம்.

இதனால், புத்த இயக்குநர் மீது கடும் கோபத்தில் இருக்கிறாராம் யோகா நடிகை. உரிமைக்காக போராடினால் உள்ள வாய்ப்பும் போய் விடும் என்பதால், புயல் அமைதி காக்கிறதாம்.

 

அமலாபால் செட்டில்... 23 வருடங்களுக்கு பிறகு மீண்டும் நடிக்க வருகிறார் ‘பழைய’ அமலா !

சென்னை: நடிகர் நாகார்ஜூனாவை திருமணம் செய்து கொண்டு, சினிமாவிற்கு ‘பை பை' சொன்ன நடிகை அமலா, 23 வருடங்களுக்குப் பின் தற்போது மீண்டும் நடிக்க வருகிறார்.

1980 மற்றும் 90-களில் தமிழில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்தவர் அமலா. இவர் ரஜினி, கமல், விஜயகாந்த், பிரபு, சத்யராஜ் என அப்போதைய முன்னணி நாயகர்கள் அனைவருடனும் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார்.

இவர் நடித்த பல படங்கள் வெற்றி விழா கண்டவை.

அமலாபால் செட்டில்... 23 வருடங்களுக்கு பிறகு மீண்டும் நடிக்க வருகிறார் ‘பழைய’ அமலா !

திருமணம்...

தமிழைப் போலவே தெலுங்கிலும் நிறைய படங்களில் நடித்த அமலா, தெலுங்கு நடிகர் நாகார்ஜுனாவை திருமணம் செய்து கொண்டு சினிமாவை விட்டு ஒதுங்கினார்.

பிராணிகள் பாதுகாப்பு...

திருமணத்திற்குப் பின் குடும்பம், சமூக சேவை என தன் கவனத்தை வேறு திசையில் திருப்பினார். தற்போது பிராணிகள் பாதுகாப்பு அமைப்பில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு செயல்பட்டு வருகிறார்.

மறுப்பு...

இதற்கிடையே, கணவரின் திரைப்பட விழாக்களில் அவ்வப்போது தலை காட்டிய அமலா, தனக்கு படங்களில் நடிக்க வந்த வாய்ப்புகளை ஏற்கவில்லை.

மெகா சீரியல்....

ஆனால், தற்போது தமிழில் தயாராகும் டி.வி. தொடர் ஒன்றில் நடிக்கவுள்ளாராம் அமலா. கதை பிடித்திருந்ததால் அத்தொடரில் நடிக்க சம்மதித்துள்ளாராம்.

சென்னைப்பட்டணம்...

இதுகுறித்து அமலா கூறும்போது, ‘‘சென்னை எனக்கு மிகவும் பிடித்த நகரம். சினிமாவில் நடிப்பது பற்றி உடனடியாக முடிவு எதுவும் எடுக்கவில்லை. அதற்கு சில காலம். ஆகலாம்'' எனத் தெரிவித்துள்ளார்.

டாக்டர்...

மேலும், சீரியலில் தன் கதாபாத்திரம் குறித்து கூறுகையில், ‘இந்த சீரியலுக்கு உயிர்மை எனப் பெயரிடப்பட்டுள்ளது. இதில் நான் டாக்டராக நடிக்கிறேன்.

கதைக்களம்...

மொத்தம் 12 டாக்டர்களின் வாழ்க்கையைச் சுற்றி கதைக்களம் அமைக்கப் பட்டுள்ளது. சென்னையில் படப்பிடிப்பு நடந்து வருகிறது. வரும் ஆகஸ்ட் மாதம் இந்த சீரியல் ஒளிபரப்பைத் தொடங்கும் என எதிர்பார்க்கிறேன்' எனத் தெரிவித்துள்ளார் அமலா.