பிலிம்பேர் விருதுகள்: கமல் கையால் விருது வாங்கிய ஸ்ருதி ஹாசன்

Aadukalam Bags 4 Filmfare Awards

2011ம் ஆண்டுக்கான பிலிம்பேர் விருதுகள் வழங்கப்பட்டன. அதில் சிறந்த நடிகர், சிறந்த இயக்குனர், சிறந்த படம் உள்பட 4 விருதுகளை ஆடுகளம் படம் அள்ளியது.

2011ம் ஆண்டுக்கான பிலிம்பேர் விருதுகள் வழங்கும் விழா நேற்று இரவு சென்னையில் உள்ள நேரு ஸ்டேடியத்தில் நடந்தது. அப்போது சிறந்த தமிழ் நடிகருக்கான விருது ஆடுகளம் படத்திற்காக தனுஷுக்கு கிடைத்தது. பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே தனுஷுக்கு விருது வழங்கினார். எங்கேயும் எப்போதும் படத்திற்காக அஞச்லிக்கு சிறந்த நடிகைக்கான விருது கிடைத்தது.

பிற விருது விவரம் வருமாறு,

சிறந்த படம்: ஆடுகளம்

சிறந்த இயக்குனர்: வெற்றிமாறன் (ஆடுகளம்)

சிறந்த துணை நடிகர்: அஜ்மல் (கோ)

சிறந்த துணை நடிகை: அனன்யா (எங்கேயும் எப்போதும்)

சிறந்த இசை அமைப்பாளர்: ஜி.வி. பிரகாஷ் (ஆடுகளம்)

சிறந்த பாடகர்: ஆலப்ராஜு (கோ படத்தில் என்னமோ ஏதோ பாடல்)

சிறந்த பாடகி: சின்மயி (வாகை சூடவா படத்தில் சரசர பாடல்)

சிறந்த பாடலாசிரியர்: வைரமுத்து (சரசர பாடல்)

சிறந்த புதுமுக நடிகைக்கான விருதை ஸ்ருதி ஹாசனுக்கு அவரது தந்தை கமல் ஹாசன் வழங்கி வாழ்த்தினார்.

இந்த விழாவில் கார்த்தி, விக்ரம், த்ரிஷா, ரம்யா, குஷ்பு, இயக்குனர் எஸ்.பி. முத்துராமன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

 

தில்லு முல்லு, மன்மதலீலையை ரீமேக் செய்யும் கே.பாலச்சந்தர் மகள்!

Pushapa Kandasamy Remake Thillu Mullu Manmatha Leelai

கே.பாலச்சந்தரின் இயக்கத்தில் வெளியாகி, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகிய இரு பெரும் நட்சத்திரங்களின் நடிப்பில் பெரும் ஹிட் ஆன தில்லுமுல்லு மற்றும் மன்மத லீலை ஆகிய இரு படங்களையும் பாலச்சந்திரன் மகளும், தயாரிப்பாளருமான புஷ்பா கந்தசாமி ரீமேக் செய்யவுள்ளார். ஒரே நேரத்தில் இந்த இரண்டு படங்களையும் அவர் ரீமேக் செய்யவுள்ளதால் திரையுலகில் புதிய எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது.

முதன் முதலில் ரஜினிகாந்த் மீசையை எடுத்த படம் தில்லுமுல்லு. பெண் பித்தராக கமல்ஹாசன் நடித்த முதல் படம் மன்மத லீலை. இரண்டுமே இரு பெரும் சூப்பர் டூப்பர் ஹிட் படங்களாக உருவாகியவை. இரண்டையும் இயக்கியவர் கே.பாலச்சந்தர்.

இரண்டு அக்காலத்தில் பெருவாரியான ரசிகர் ஆதரவைப் பெற்ற படங்கள். இதில் தில்லுமுல்லு படத்தில் கமல்ஹாசனும் இருப்பார். அதாவது கிளைமேக்ஸ் காட்சியில் போலி வக்கீலாக வரும் கமல்ஹாசன் தன்னைப் போல நூற்றுக்கணக்கான போலி வக்கீல்களுடன் வந்து கலகலப்பூட்டுவார்.

இப்போது இந்த இரு ஹிட் படங்களையும் ரீமேக் செய்யவுள்ளார் பாலச்சந்தரின் மகளும், தயாரிப்பாளருமான புஷ்பா கந்தசாமி.

இதுகுறித்து அவர் கூறுகையில், இரண்டுமே ஹிட் படங்கள். எனவே இதை ரீமேக் செய்வது எளிதான வேலை அல்ல. இருப்பினும் இரு படங்களின் கதையும் எக்காலத்துக்கும் பொருந்தும் ஒன்றுதான். எனவேதான் இப்படங்களை ரீமேக் செய்யவுள்ளோம்.

கமல், ரஜினி வேடங்களில் நடிக்கப் போவது யார் என்பதை இன்னும் முடிவு செய்யவில்லை. பரிசீலித்து வருகிறோம். இக்காலத்திற்கேற்ற வகையில் கதையை உருவாக்கி திரைக்கதை அமைக்கப்படும். சில பிரபல இயக்குநர்களிடம் பேசி வருகிறோம் என்றார்.

இன்னும் சில மாதங்களில் இரட்டிப்பு விருந்துக்கு ரசிகர்கள் தயாராகலாம்...!

 

5 நிமிடம் நடிக்க ரூ.25 லட்சம் வாங்கிய அனுஷ்கா

Anushka Gets Rs 5 Lakh Minute

சகுனி படத்தில் 5 நிமிடங்கள் வந்து செல்ல அனுஷ்காவுக்கு ரூ.25 லட்சம் சம்பளமாகக் கொடுத்துள்ளார்கள்.

சகுனி படத்தில் கார்த்தியின் வேண்டுகோளை ஏற்று அனுஷ்கா காமெடி போலீஸாக நடித்துள்ளார். அவர் படத்தில் மொத்தம் 5 நிமிடங்கள் தான் வருவார். ஆனால் அந்த 5 நிமிடங்களும் தனது காமெடியால் திரையரங்குகளை அதிர வைத்துள்ளார். அட கவர்ச்சிக் கன்னி அனுஷ்கா காமெடியில் கலக்குகிறாரே என்று பலரும் பேசும் அளவுக்கு பின்னி பெடலெடுத்துள்ளார்.

சரி நம்ம மேட்டருக்கு வருவோம். சாதாரணமாக அனுஷ்காவை நடிக்க வைக்க வேண்டும் என்றால் பெரிய தொகையை சம்பளமாகக் கொடுக்க வேண்டும். உச்சத்தில் இருக்கையில் கெஸ்ட் ரோலில் நடித்துள்ள அனுஷ்காவுக்கு 5 நிமிடங்கள் நடிக்க ரூ.25 லட்சம் கொடுத்துள்ளார்களாம். அதாவது நிமிடத்திற்கு ரூ. 5 லட்சம் சம்பளம்.

அனுஷ்கா எவ்வளவு சம்பளம் கேட்டாலும் கொடுக்க தயாரிப்பாளர்களும், இயக்குனர்களும் தயாராக இருக்கையில் நிமிடத்திற்கு ரூ. 5 லட்சம் பெரிய விஷயம் இல்லை தான்.

 

வீட்டுக்கு அருகே வெடிகுண்டு: மும்பையை காலிசெய்யும் ரிச்சா?

Richa Shift Her Base From Mumbai   

நடிகை ரிச்சா மும்பையை விட்டுவிட்டு சென்னை அல்லது ஹைதராபாத்தில் குடியேறிவிடலாமா என்று யோசித்துக் கொண்டிருக்கிறார்.

கடந்த புதன்கிழமை மும்பையில் உள்ள ஷாப்பிங் மாலுக்கு வெளியே இருந்த குப்பைத் தொட்டியில் வெடிகுண்டு இருப்பதாக செய்தி வெளியானது. பின்னர் அங்கு கிடைத்த பொருள் வெடிகுண்டு இல்லை என்று தெரிய வந்தது. குண்டு இருந்ததாகக் கூறப்பட்ட மாலுக்கு அருகில் தான் மயக்கம் என்ன நாயகி ரிச்சா கங்கோபத்யாயவின் வீடு உள்ளது.

வெடிகுண்டு செய்தி கேட்டு ரிச்சா ஆடிப் போய்விட்டாராம். இது என்னடா இந்த மும்பையில எப்பொழுது பார்த்தாலும் ஏதாவது வெடிகுண்டு அச்சுறுத்தலாக உள்ளதே என்று அவர் அஞ்சுகிறாராம். இதனால் பேசாமல் ஜாகையை சென்னை அல்லது ஹைதராபாத்திற்கு மாற்றிவிட்டால் என்ன என்று தீவிர யோசனையில் உள்ளார்.

தற்போது ரிச்சா கார்த்தி நடிக்கும் பிரியாணி படத்தில் நடிக்கிறார். இது தவிர அவர் கையில் 2 தெலுங்கு படங்கள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

 

நானா குடிகாரி?...மாஜி கணவர் மீது மானநஷ்ட வழக்கு போடும் ஊர்வசி

Urvashi File Defamation Case Against Manoj K Jayan

தன்னை குடிப்பழக்கத்திற்கு அடிமையானவள் என்று சொல்லிய முன்னாள் கணவர் மனோஜ் கே. ஜெயன் மீது மான நாஷ்ட வழக்கு தொடரப் போவதாக நடிகை ஊர்வசி தெரிவி்ததுள்ளார்.

நடிகை ஊர்வசி தன்னுடைய கணவர் நடிகர் மனோஜ் கே.ஜெயனிடம் இருந்து விவகாரத்து பெற்றார். அவர்களது மகள் குஞ்ஞட்டா மனோஜுடன் அனுப்பப்பட்டார். ஆனால் தம்மிடம் மகளை ஒப்படைக்கக் கோரி ஊர்வசி எர்ணாகுளம் குடும்ப நல நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் குறிப்பிட்ட நாட்களில் மகளை ஊர்வசியுடன் அனுப்ப உத்தரவிட்டது.

இதற்கு மனோஜ் கே. ஜெயன் தரப்பு எதிர்ப்பு தெரிவித்து தொடர்ந்த வழக்கில் மீண்டும் விசாரணை நடைபெற்றது. இதில் ஜூலை 6ம் தேதி முதல் ஒருவார காலத்துக்கு மகளை ஊர்வசியுடன் அனுப்ப உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. மேலும் எர்ணாகுளம் நீதிமன்றத்தில் வைத்து தான் ஊர்வசியிடம் குழந்தையை ஒப்படைக்கவும் உத்தரவிடப்பட்டது.

இதற்காக எர்ணாகுளம் நீதிமன்றத்துக்கு ஊர்வசி, மனோஜ் கே ஜெயன், அவர்களது மகள் ஆகியோர் கடந்த வெள்ளிக்கிழமை வந்திருந்தனர். ஆனால் ஊர்வசியுடன் மகள் செல்ல மறுத்துவிட்டார். மேலும் ஊர்வசி எப்போதும் போதையில் இருப்பதால் அவரை நம்பி மகளை ஒப்படைக்க முடியாது. இப்போதும் அவர் குடிபோதையில் தான் இருக்கிறார் என்று மனோஜ் கே ஜெயன் நீதிபதியிடம் புகார் தெரிவித்தார்.

இது குறித்து நேற்று ஊர்வசி செய்தியாளர்களிடம் கூறுகையில்,

அண்மையில் தான் எனக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அதனால் நான் தற்போது மருந்து, மாத்திரைகள் எடுத்து வருகிறேன். மருந்து, மாத்திரைகளின் தாக்கத்தால் தான் நான் நேற்று நீதிமன்றத்திற்கு வந்தபோது போதையில் இருந்தது போன்று தெரிந்தது. அப்படி இருக்கையில் மனோஜ் நான் குடிபோதையில் இருப்பதாக கூறியுள்ளார். இதனால் சமுதாயத்தில் எனது பெயருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. எனவே, நான் அவர் மீது மானநஷ்ட வழக்கு தொடர்வேன் என்றார்.

 

''பின்லேடன் கொல்லப்பட்டபோது சன்னி லியோன் ஆபாச சிடியைப் பார்த்துக் கொண்டிருந்தார்''

World Osama Was Addicted Sunny Leone Videos

ஆபாசப் பட நடிகை சன்னி லியோனின் வெறித்தனமான ரசிகர் ஒசாமா பின்லேடன். சன்னி லியோனின் ஆபாசப் பட வீடியோக்களை வெறித்தனமாக பார்த்து ரசித்து வந்தார் பின்லேடன். அமெரிக்கப் படையினரால் அவர் சுட்டுக் கொல்லப்பட்டபோது கூட அவர் சன்னி லியோன் வீடியோவைத்தான் பார்த்துக் கொண்டிருந்தார் என்று எனக்குத் தகவல் கிடைத்துள்ளது என்று கூறியுள்ளார் பாலிவுட் இயக்குநர் ராம்கோபால் வர்மா.

உலகை மட்டுமல்லாமல், அமெரிக்காவையே நடுநடுங்க வைத்த தீவிரவாதி ஒசாமா பின்லேடன். இவனைப் பிடிக்க அமெரிக்காவைப் போல யாருமே பணத்தை வாரியிறைத்திருக்க மாட்டார்கள். கடைசியில் பாகிஸ்தானில் அபோதாபாத் நகரில் வைத்து பின்லேடனை சுட்டுக் கொன்றனர் அமெரிக்க வீரர்கள்.

அதன் பின்னர் பின்லேடன் வீட்டில் என்னென்ன இருந்தது என்பது குறித்து அமெரிக்கத் தரப்பில் சில தகவல்கள் வெளியிடப்பட்டன. பின்லேடன் வீட்டில் வயாகரா இருந்தது. ஆபாசப் பட வீடியோக்கள் இருந்தன என்றெல்லாம் கூறப்பட்டது.

இந்த நிலையில் நம்ம ஊர் ராம்கோபால் வர்மா, இதுவரை யாருமே சொல்லிடாத ஒரு புத்தம் புதிய தகவலை, அதுவும் பரபரப்பான தகவலை கூறி அனைவரையும் திகிலடைய வைத்துள்ளார்.

இதுகுறித்து அவர் அனுப்பியுள்ள டிவீட்டர் செய்தியில், அபோதாபாத் வீட்டில் ஒசாமா பின்லேடன் கொல்லப்பட்டபோது அவரது வீட்டில் ஏகப்பட்ட சன்னி லியோன் ஆபாசப் பட வீடியோக்கள் சிடி இருந்தது தெரிய வந்தது. மேலும், பின்லேனை அமெரிக்கப் படையினர் சுற்றி வளைத்துக் கொன்றபோது கூட அவர் சன்னிலியோன் வீடியோவைத்தான் பார்த்துக் கொண்டிருந்ததாக எனக்குத் தெரிந்த நம்பகமான தகவல் தெரிவித்துள்ளது என்று கூறியுள்ளார் ராம் கோபால் வர்மா.

இப்படிப்பட்ட 'அதி' முக்கியமான தகவலை ராம் கோபால் வர்மாவுக்குக் கொடுத்தது யார் என்ற பெரும் கேள்வி எழுந்துள்ளது.

எது எப்படியோ, நிச்சயம் ராம் கோபால் வர்மாவின் இந்த டிவிட்டர் செய்தி, சன்னி லியோன் மீது மேலும் வெளிச்சம் பாய் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்கும் என்று நம்பலாம்!!!

 

ரூ.1 கோடி கொடுத்தும் நடிக்க மறுத்த த்ரிஷா, ஸ்ரேயா

Trisha Shriya Decline Rs 1 Crore Pay    | ஸ்ரேயா  

ரூ.1 கோடி சம்பளம் கொடுக்க தயாராக இருந்தபோதிலும் புதுமுக நடிகருடன் ஜோடி சேர நடிகைகள் த்ரிஷா, ஸ்ரேயா ஆகியோர் மறுத்துவிட்டனர்.

புதுமுக நடிகர் அச்சுதன் சங்கர் என்பவர் கோப்பெருந்தேவி என்ற படத்தை இயக்கி தானே ஹீரோவாகவும் நடிக்கிறார். இந்த படத்தில் பெரிய நடிகைகளை நடிக்க வைக்க நினைத்தார். இதையடுத்து த்ரிஷாவை அணுகி தனக்கு ஜோடியாக நடிக்க கேட்டுள்ளார். இதற்காக த்ரிஷாவுக்கு ரூ.1 கோடி சம்பளம் கொடுக்க தயாராக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

த்ரிஷா முதலில் ஓ.கே. சொல்லிவிட்டு பிறகு புதுமுக ஹீரோவோடா நடிக்க என்று நினைத்து மறுத்துவிட்டார். இதையடுத்து ஸ்ரோயாவை கேட்டுள்ளனர். அவருக்கும் ரூ. 1 கோடி சம்பளமாகக் கூறப்பட்டது. ஆனால் அவரும் புதுமுக ஹீரோ அச்சுதன் சங்கருடன் நடிக்க மறுத்துவிட்டார்.

த்ரிஷாவுடன் நடிக்க இளம் ஹீரோக்கள் எல்லாம் வரிசையில் நிற்கையில் அவர் எப்படி புதுமுக நாயகனுடன் நடிக்க ஒப்புக் கொள்வார். ஸ்ரேயா கையில் படங்கள் அவ்வளவாக இல்லாவிட்டாலும் எதுக்கு ரிஸ்க் என்று நினைத்துவிட்டாரோ என்னவோ.

 

ஆமீர் கான் படத்தில் ரஜினிகாந்த் ஆடவில்லை: இயக்குனர் ரீமா

No Item Number Rajinikanth Talaash

பாலிவுட் நடிகர் ஆமீர் கானின் தலாஷ் படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஒரு பாடலுக்கு ஆடவில்லை என்று அப்படத்தின் இயக்குனர் ரீமா காக்டி தெரிவித்துள்ளார்.

பாலிவுட் நடிகர் ஆமீர் கானின் தலாஷ் படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஒரு பாடலுக்கு ஆடவிருக்கிறார் என்றும், அதற்காக அவருக்கு ரூ.15 கோடி சம்பளம் கொடுக்கப்படுகிறது என்றும் ஒரே பேச்சாகக் கிடந்தது. இந்நிலையில் ஆமீர் கான் படத்தில் ரஜினிகாந்த் ஒரு பாட்டுக்கு ஆடவில்லை என்று அப்படத்தின் இயக்குனர் ரீமா காக்டி தெரிவி்த்துள்ளார்.

ரஜினிகாந்த் தன்னுடைய கோச்சடையான் படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணியில் பிசியாக இருக்கிறார். அவர் தனது மகள் சௌந்தர்யாவுக்கு உதவியாக எடிட்டிங், மிக்ஸிங் ஆகிய வேலைகளில் ஈடுபட்டுள்ளார். அந்த படம் சிறப்பாக வர வேண்டும் என்று அவர் விரும்புகிறார் என்று ரஜினிக்கு தெரிந்த வட்டாரங்கள் தெரிவி்த்தன.

பாலிவுட் நடிகர்கள் ரஜினிகாந்தை தங்கள் படங்களில் ஒரு காட்சியிலாவது நடிக்க வைக்க வேண்டும் என்று விரும்புகின்றனர். ஏற்கனவே ஷாருக்கான் தனது ரா ஒன் படத்தில் ரஜினியை ஒரு காட்சியில் தோன்ற வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

உலகிலேயே செக்ஸியான பெண்கள் வரிசையில் வீணா மாலிக்?

Veena Malik Beat Anjelina Jolie Magen Fox Sexiest Women

உலகின் செக்ஸியான பெண்கள் வரிசையில் வீணா மாலிக்குக்கும் முக்கிய இடம் கிடைத்துள்ளதாம். செம ஹாட்டான பெண்களாக கருதப்படும் கிம் கர்தஷியான், ஏஞ்செலினா ஜூலி, மேகான் பாக்ஸ் போன்றோரையெல்லாம் பின்னுக்குத் தள்ளி விட்டாராம் வீணா மாலிக்.

இதுதொடர்பாக வீணா மாலிக்கின் செய்தித் தொடர்பாளர் வெளியிட்டுள்ள செய்தி அறிக்கையில் ஒரு இணையதள கருத்துக் கணிப்பில் இது தெரிவிக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார். ஆனால் எந்த இணையதளம் என்பதை அவர் சொல்லவில்லை. வீணா மாலிக் செக்ஸியான பெண்களின் பட்டியலில் இடம் பெற்றிருப்பதாக எங்கும் செய்தியைக் காண முடியவில்லை.

இந்தப் பட்டியலில் தான் இடம் பெற்றிருப்பதுகுறித்து வீணா மாலிக் கூறுகையில், மிகவும் ஆச்சரியமா உள்ளது. என்னை விட அழகான பெண்கள், செக்ஸியான பெண்கள் பலரும் உள்ளனர். ஆனால் எனக்கும் ஒரு இடம் கிடைத்திருப்பது சந்தோஷம் தருகிறது. மேலும் எனது உடல் ரீதியான லுக்கை மட்டும் பார்த்து யாரும் ஓட்டுப் போடவில்லை. ஒட்டுமொத்தமாக என்னை எடை போட்டு வாக்களித்துள்ளனர் என்றார் அவர்.

ஆச்சரியம்தான்...!

 

அஜீத்தின் ஆசையை நிறைவேற்றப் போவது யார்?

Who Ll Fulfill Ajith Kumar S Dream

அஜீத் குமாருக்கு கிராமத்து கதாபாத்திரங்களில் நடிக்க ஆசையாக இருக்கிறதாம்.

அஜீத் குமார் பெரும்பாலும் நகரத்து கதாபாத்திரங்களில் தான் நடித்து வருகிறார். தொடர்ந்து நகரத்து கதாபாத்திரங்களில் நடித்து வரும் அவருக்கு கிராமத்து மனுஷனாக நடிக்க ஆசையாக உள்ளதாம். அவர் தனது ஆசையை நெருங்கிய நண்பர்களில் ஒருவரிடம் தெரிவி்ததுள்ளாராம்.

ஏ.எல்.விஜய், வசந்த், ஏ.ஆர். முருகதாஸ், எஸ்.ஜே. சூர்யா ஆகியோர் அஜீத்துக்கு நெருக்கமான இயக்குனர்கள் ஆவர். இதில் யார் அவரின் ஆசையை நிறைவேற்ற தயாராக உள்ளார்கள் என்று தெரியவில்லை.

நான் இன்றைக்கு இந்த நிலைமையில் இருக்க அஜீத் குமார் தான் காரணம் என்று அண்மையில் ஏ.ஆர். முருகதாஸ் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அஜீத் குமார் பில்லா 2 படத்தை முடித்துவிட்டு விஷ்ணுவர்தனின் பெயரிடப்படாத படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

பில்லா 2 படம் ஜூன் 22ம் தேதி ரிலீஸாகவிருந்து தள்ளிப் போனது என்பது குறிப்பிடத்தக்கது.

 

ஓவியாவை ஹீரோயினா போடுங்க: டைரக்டர்களைக் கேட்கும் விமல்

Oviya Vimal S Lucky Charm    | கலகலப்பு    | களவாணி  

நடிகர் விமல் தான் நடிக்கும் படங்களில் ஓவியாவை நாயகியாகப் போடுமாறு கோரிக்கை விடுத்து வருகிறார்.

நடிகர் விமல், ஓவியா ஜோடியாக நடித்த களவாணி, கலகலப்பு ஆகிய படங்கள் ஹிட்டானது. இதையடுத்து தனது படங்களில் ஓவியா நடித்தால் அது ஹிட்டாகிவிடும் என்று விமல் நம்புகிறார் போலும். அதனால் தன்னை ஒப்பந்தம் செய்ய வரும் இயக்குனர்களிடம் தனது படத்தில் ஓவியாவையே நாயகியாகப் போடுமாறு கேட்டுக் கொள்கிறார்.

இந்நிலையில் எழில் விமலை வைத்து படம் ஒன்றை எடுக்கவிருக்கிறார். அந்த படத்தில் ஓவியாவை கதாநாயகியாக்குமாறு விமல் கோரிக்கை விடுத்துள்ளார். ஆனால் ஓவியாவை ஒப்பந்தம் செய்ய இயக்குனர் தயாராக இல்லை.

விமலுக்கு என்ன சென்டிமென்ட்டோ தெரியவில்லை. அது சரி சினிமாவில் ஆளாளுக்கொரு சென்டிமென்ட் வைத்துள்ளார்கள். விமலை மட்டும் சொல்லி என்ன செய்ய.

 

கௌதம் மேனனுக்காக விஜயுடன் டூயட் பாருவாரா ஸ்ருதி?

Vijay S Pair Gautham Menion S Yohan   

கௌதம் மேனன் விஜயை வைத்து எடுக்கும் யோஹான்: அத்தியாயம் ஒன்று படத்தில் ஸ்ருதி ஹாசனை நாயகியாக்க பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.

கௌதம் மேனன் விஜய் இணையும் படம் யோஹான்: அத்தியாயம் ஒன்று. இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக கமல் மகள் ஸ்ருதி ஹாசனை நடிக்க வைக்க அவருடன் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பார் என்று எதி்ர்பார்க்கப்படுகிறது.

இந்தி படங்களில் கவனம் செலுத்த மும்பையில் குடியேறியுள்ள ஸ்ருதியை கௌதம் மேனன் தமிழகத்திற்கு அழைத்து வர முயற்சி செய்து வருகிறார். விஜய் ஏ.ஆர். முருகதாஸின் துப்பாக்கி படத்தில் பிசியாக இருக்கிறார். அந்த படம் வரும் ஆகஸ்ட் 15ம் தேதி ரிலீஸ் ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதே போன்று கௌதம் மேனன் ஜீவா, சமந்தாவை வைத்து நீ தானே என் பொன் வசந்தம் படத்தை எடுத்து வருகிறார். இந்த இரண்டு படங்களும் முடிந்த பிறகு ஆகஸ்ட் மாதத்தில் யோஹான் படப்பிடிப்பு துவங்கும் என்று கூறப்படுகிறது.