பாலியல் தொந்தரவு புகார்: நர்த்தகி பட பெண் இயக்குநர் - பைனான்சியர் மோதல்!

Director Vijaya Padma Files Abuse Complaint   

திருநங்கைகளின் வாழ்க்கையை அடிப்படையாக வைத்து 'நர்த்தகி' என்ற படத்தை எடுத்த பெண் இயக்குநர் விஜயபத்மாவுக்கும், சினிமா பைனான்சியர் ஒருவருக்கும் கடும் மோதல் ஏற்பட்டுள்ளது.

அந்த பைனான்சியர் பெயர் அசோக் லோதா. நிறைய படங்களுக்கு வட்டிக்கு பணம் தந்துள்ளார்.

இயக்குநர் விஜய பத்மாவுக்கு சினிமா எடுக்க ரூ 35 லட்சம் கடன் கொடுத்ததாகவும் அதை திருப்பித் தருவதாகக் கூறி, பின் ஏமாற்றியதாகவும் தேனாம் பேட்டை காவல் நிலையத்தில் அசோக் லோதா புகார் தெரிவித்திருந்தார்.

ஆனால் விஜயபத்மாவோ, அசோக் லோதா தன்னை பாலியல் தொல்லை செய்ததாக புகார் கொடுத்திருந்தார். இந்த புகார்களை விசாரித்த போது, அசோக் லோதாவுக்கு தான் கொடுக்க வேண்டியது ரூ 10 மட்டும்தான் என்றும், அதை மட்டுமே தரமுடியும் என்றும் கூறினார்

அதே நேரம், போலீசார் அசோக் லோதாவிடம் பணம் வாங்கிக் கொண்டதால், தான் கொடுத்த புகாரை மட்டும் கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டனர் என்றும் குற்றம்சாட்டியுள்ளார் விஜயபத்மா.

போலீசாரோ, அந்தக் குற்றச்சாட்டை மறுத்துள்ளதோடு, பாலியல் புகார் குறித்தும் விசாரிக்கப் போவதாக அறிவித்துள்ளனர்.

 

அடுத்த வாரம் சென்னை வருகிறார் அஞ்சலி... களஞ்சியம் படத்தில் நடிப்பாரா?

Anjali Come Chennai Next Week

கடந்த இரண்டு வாரங்களாக பரபரப்பு நாயகியாகத் திகழும் அஞ்சலி, அடுத்த வாரம் சென்னைக்கு வரப் போவதாக தெரிவித்துள்ளார்.

சித்தி கொடுமை, 'கருங்காலி' இயக்குநர் களஞ்சியம் மிரட்டல் என்றெல்லாம் ஏகப்பட்ட புகார்களை அள்ளிவிட்டு, திடீர் தலைமறைவாகி, 5 நாட்கள் கழித்து வெளியில் வந்த அஞ்சலி, இப்போது மீண்டும் படப்பிடிப்புகளில் வழக்கம் போல பங்கேற்று வருகிறார்.

ஹைதராபாத் போலீஸில் சமீபத்தில் ஆஜராகி, தான் காணாமல் போனதற்கான விளக்கங்களைச் சொல்லிவிட்டு வந்துள்ள அஞ்சலி, அடுத்து சென்னை நீதிமன்றம் மற்றும் கமிஷனர் அலுவலகத்தில் ஆஜராக வேண்டியுள்ளது.

இப்போது புனேயில் போல்பச்சன் படப்பிடிப்பில் உள்ளார் அஞ்சலி. இன்னும் 5 தினங்களில் புனே ஷெட்யூல் முடிந்துவிடும் என்றும், அதன் பிறகு அவர் சென்னை வருவார் என்றும் அஞ்சலி தரப்பில் கூறப்பட்டுள்ளது.

இன்னொரு பக்கம், களஞ்சியத்தின் அடுத்த படமான ஊர் சுற்றிப் புராணத்தில் ஏற்கெனவே 10 நாட்கள் நடித்துள்ளார் அஞ்சலி. இன்னும் 10 நாட்கள் நடிக்க கால்ஷீட்டும் கொடுத்துள்ளாராம். அதன்படி நடித்துக் கொடுக்காவிட்டால், நடிகர் சங்கம் மற்றும் தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் கூறி, அஞ்சலிக்கு தடை விதிக்க முயற்சிப்பேன் என களஞ்சியம் கூறி வருவதால், அஞ்சலி என்ன முடிவு எடுக்கப் போகிறார் என்பதை கவனித்து வருகிறது கோலிவுட்!

 

அஞ்சலி... மிரளும் தமிழ் நடிகர்கள், இயக்குநர்கள்!!

Anjali Becomes Nightmare Kollywood Directors

அஞ்சலி தமிழுக்கு வராவிட்டாலும் பரவாயில்லை... அவர் தெலுங்கிலேயே இருந்து கொள்ளட்டும்... ஆனால் நம்மைப் பற்றி எதுவும் சொல்லாமல் இருக்க வேண்டுமே என தவிக்கிறார்களாம் தமிழ் சினிமா இயக்குநர்களும் நடிகர்களும்.

காரணம், ஹைசதராபாத் போலீசாரிடம் தன்னை டார்ச்சர் செய்தவர்கள், தப்பாக அணுகியவர்கள் என பெரிய லிஸ்டையே கொடுத்திருக்கிறாராம் அஞ்சலி.

இன்னும் சென்னைக்கு அஞ்சலி வரவில்லை. இங்கு வந்த பிறகு போலீசாரிடமும் நீதிமன்றத்திலும் அஞ்சலி வாக்குமூலம் தர வேண்டியிருக்கும். அப்படித் தந்தால் யார் யாரையெல்லாம் அவர் போட்டுக் கொடுப்பாரோ என திகிலில் உள்ளார்களாம்.

சித்தியும், 'கருங்காலி' இயக்குநரும் தன்னை எப்படியெல்லாம் படுத்தினார்கள் என்பதையும், வாய்ப்புகளுக்காகவும் பணத்துக்காகவும் அவர்கள் தன்னை நிர்ப்பந்தப் படுத்தியதையும் மீண்டும் ஒரு முறை சென்னை போலீசில் சொல்லிவிட அஞ்சலி முடிவு செய்திருக்கிறார்.

இதிலிருந்து அவரை திசை திருப்பவே சித்தியும் 'கருங்காலி'யும் வழக்கு, புகார் என பரபரப்பு கிளப்பி வருகிறார்களாம்!

 

செல்வராகவனின் இரண்டாம் உலகம் என்னாச்சு?

தமிழ் சினிமா இயக்குநர்களில் வெற்றி தோல்விகளுக்கு அப்பால் ரசிகர்கள் எதிர்ப்பார்ப்பது சிலரிடம்தான். அவர்களில் செல்வராகவனும் ஒருவர்.

தமிழில் அவரது கடைசி வெற்றிப் படம் என்றால்... 7 ஜி ரெயின்போ காலனிதான்.

ஆனால் அதன் பிறகு வந்த புதுப்பேட்டை, ஆயிரத்தில் ஒருவன், மயக்கம் என்ன போன்ற படங்கள் பெரிய வெற்றிப் படங்கள் என்று சொல்ல முடியாது.

ஆனால் அவரது இயக்கத்தில் அமையும் காட்சிகள், கேரக்டர்கள் பெருமளவு பேசப்பட்டன. அவரது அடுத்த படம் எப்போது வரும் என கணிசமான ரசிகர்கள் எதிர்ப்பார்க்கின்றனர்.

what happened selvaraghavan irandam ulagam   

விக்ரம், கமல் ஆகியோருடன் இணையவிருந்த செல்வராகவன், கடைசி நேரத்தில் பின்வாங்கிக் கொண்டார். சொந்தமாக இரண்டாம் உலகம் என்ற படத்தை ஆரம்பித்தார். ஆர்யாவும் அனுஷ்காவும் ஜோடியாக நடித்துள்ள இந்தப் படத்தில் முதல் முறையாக ஹாரிஸ் ஜெயராஜுடன் இணைந்தார் செல்வராகவன்.

படம் தொடங்கி கிட்டத்தட்ட 2 ஆண்டுகள் ஆகிவிட்டன. அவ்வப்போது செய்தி வரும். பின்னர் அமைதியாகிவிடும். இதுதான் இரண்டாம் உலகத்தின் நிலை.

இப்போது செல்வராகவனே படம் குறித்து ட்வீட் செய்துள்ளார். அதில், படத்தின் ஷூட்டிங் முழுவதுமாக முடிந்துவிட்டது. விஎப்எக்ஸ் பணிகளுக்காக காத்திருக்கிறேன், என்று குறிப்பிட்டுள்ளார்.

தமிழ், தெலுங்கில் உருவாகிவரும் இந்தப் படத்தில் தனுஷ் ஒரு பாடலைப் பாடியுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

பிலிம்சேம்பர் திரையரங்கம் கட்ட சூர்யா - கார்த்தி ரூ 1 கோடி நன்கொடை!

Surya Karthi Donates Rs 1 Cr Film Chamber Theater

சென்னை: பிலிம்சேம்பர் எனப்படும் தென்னிந்திய சினிமா வர்த்தக சபையின் கட்டிட வளாகத்தில் புதிய திரையரங்குகள் அமைக்க ரூ 1 கோடியை நன்கொடையாகக் கொடுத்து பிரமிக்க வைத்துள்ளனர் நடிகர்கள் சூர்யா மற்றும் கார்த்தி.

சமீப காலமாக எங்கும் எதிலும் சூர்யாவின் பெயர்தான் நிறைந்து நிற்கிறது. மாணவர்களுக்கு கல்வி உதவி, ரசிகர்களுடன் சந்திப்பு, சமூக நலப்பணிகள், அடுத்தடுத்த புதிய படங்கள் என பரபரப்பாக செயல்பட்டு வருகிறார்.

இப்போது பிலிம்சேம்பர் வளாகத்தில் புதிய திரையரங்கம் கட்ட ரூ 1 கோடியை நன்கொடையாகக் கொடுத்திருக்கிறார், தன் தம்பி கார்த்தியுடன் இணைந்து.

அண்ணா சாலையில் உள்ள பிலிம்சேம்பர் வளாகத்தில் ஏற்கெனவே ஒரு பகுதி புதுப்பிக்கப்பட்டு கட்டப்பட்டுள்ளது.

இப்போது அடுத்த பகுதியை இடித்துவிட்டுக் கட்டப் போகிறார்கள். இந்தப் பகுதியில் ஒரு தியேட்டர் மற்றும் அதன் மாடியில் அலுவலகங்கள் உள்ளன. இவற்றை இடித்துவிட்டு, மூன்று புதிய திரையரங்குகளை கட்டப் போகிறார்கள்.

இதற்காகத்தான் சூர்யா - கார்த்தி அவ்வளவு பெரிய தொகையைக் கொடுத்துள்ளனர்.

இந்த திரையரங்குக்கு சூர்யா மற்றும் கார்த்தியின் பெயரையே சூட்டிவிடலாம் என பிலிம்சேம்பர் நிர்வாகிகள் முடிவு செய்தபோது, எங்கள் பெயரை விட எங்கள் தாய் - தந்தை பெயரைச் சூட்டுங்கள் என்று கூறிவிட்டார்களாம் சூர்யாவும் கார்த்தியும்.

எனவே புதிதாகக் கட்டப்படும் 3ல் ஒரு திரையரங்குக்கு சூர்யா, கார்த்தி ஆகியோரின் தந்தை சிவகுமார், தாயார் லட்சுமி ஆகியோரின் பெயர்கள் சூட்டப்படும், என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

 

சென்னையில் இந்திய சினிமா நூற்றாண்டு விழா - பிரணாப் முகர்ஜி, ஜெயலலிதாவுக்கு அழைப்பு

Chennai Celebrate 100 Years Indian Cinema

சென்னை: பிலிம்சேம்பர் சார்பில் சென்னையில் நடக்கும் இந்திய சினிமாவின் நூற்றாண்டு விழாவில் கலந்து கொள்ளுமாறுலை மாதம் 3 நாட்கள் நடக்கிறது. இந்த விழாவுக்கு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, முதல்வர் ஜெயலலிதா ஆகிய இருவரையும் அழைக்க முடிவு செய்து இருக்கிறார்கள்.

நூற்றாண்டு விழா

இந்திய சினிமா தொடங்கி 100 ஆண்டுகள் ஆகிறது. முதல் படமான ‘ஹரிச்சந்திரா,' 1913 - ம் ஆண்டு மே மாதம் 3 - ந் தேதி வெளியானது. இந்த ஆண்டு மே 3-ந் தேதியுடன் 100 வருடங்கள் நிறைவடைகிறது. நூற்றாண்டு விழா, சென்னையில் வருகிற ஜூலை மாதம் 3 நாட்கள் நடக்கிறது.

இதுபற்றி தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை (பிலிம்சேம்பர்) தலைவர் கல்யாண், சென்னையில் நிருபர்களிடம் கூறுகையில், "இந்திய சினிமாவுக்கு இந்த ஆண்டு நூற்றாண்டு விழாவைக் கொண்டாடுகிறது.

இந்திய சினிமாவில் தென்னிந்திய சினிமாவுக்கு சிறப்பான பங்கு உண்டு. இந்தியாவில் தயாராகும் சினிமாவில் தென்னிந்திய சினிமாக்களே எண்ணிக்கையில் அதிகம். எண்ணிக்கையில் மட்டுமல்லாமல், எண்ணங்களில் நீங்காத இடம்பெற்ற பல படங்களை தந்தது தென்னிந்திய சினிமாதான்.

தென்னிந்திய சினிமாவின் தாய்வீடு, சென்னை. அந்த சென்னையில் உள்ள தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை, இந்திய சினிமாவின் நூற்றாண்டை என்றும் நினைவில் நிற்கும்படி சிறப்பாக கொண்டாட முடிவு செய்து இருக்கிறது.

3 நாட்கள் விழா

அதன்படி, இந்திய சினிமாவின் நூற்றாண்டு விழா, சென்னையில் வருகிற ஜூலை மாதம் 12, 13, 14 ஆகிய தேதிகளில் 3 நாட்கள் நடக்கிறது. தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை, இந்திய திரைப்பட சம்மேளனத்துடன் இணைந்து இந்த விழாவை நடத்துகிறது.

விழாவில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய 4 மொழிகளை சேர்ந்த மூத்த கலைஞர்கள் கவுரவிக்கப்பட்டு, அவர்களுக்கு விருதுகள் வழங்கப்படும்.

குடியரசுத் தலைவர் - முதல்வர்

விழாவுக்கு குடியரசுத் தலைவர் பிரணாப்முகர்ஜி, முதல்வர் ஜெயலலிதா, மற்றும் மற்ற தென்மாநில முதல்வர்களையும் அழைக்க முடிவு செய்திருக்கிறோம்.

4 மாநிலங்களை சேர்ந்த நடிகர்-நடிகைகள் விழாவில் கலந்து கொள்வார்கள். விழாவையொட்டி நடிகர்-நடிகைகளின் கலைநிகழ்ச்சிகள் நடைபெறும்.

ஜூலை 12, 13 தேதிகளில் சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கிலும், 14-ந் தேதி சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்திலும் நிகழ்ச்சிகள் நடைபெறும்.

விழா மிக பிரமாண்டமான முறையில் நடைபெறுவதையொட்டி தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய 4 மொழி படங்களின் படப்பிடிப்புகளும் 5 நாட்கள் ரத்து செய்யப்படும். அந்த நான்கு நாட்களும் மற்ற பட வேலைகளும் நடைபெறாது.

இதற்காக ஒவ்வொரு மாநிலத்துக்கும் ஒரு கமிட்டி அமைக்கப்பட்டு இருக்கிறது. தமிழ்நாட்டின் கமிட்டிக்கு தலைவராக டைரக்டர் கே.பாலசந்தர் இருப்பார். இயக்குநர்கள் எஸ்.பி.முத்துராமன், எஸ்.எம்.வசந்த், பட அதிபர்கள் டி.சிவா, ஆர்.மாதேஷ் ஆகிய 4 பேரும் அமைப்பாளர்களாக இருப்பார்கள்.

எஸ்.ஏ.சந்திரசேகரன், கே.முரளிதரன், பி.எல்.தேனப்பன், எஸ்.தாணு, டி.ஜி.தியாகராஜன், எம்.சரவணன், பாரதிராஜா, சரத்குமார், ராதாரவி, சிவகுமார், கேயார், பிரபு, ஆர்.பி.சவுத்ரி, ஏ.எம்.ரத்னம், முரளி மனோகர், பி.வாசு, ஏ.எஸ்.பிரகாசம், சுரேஷ் பாலாஜி, கவுதம் மேனன், பாக்யராஜ், அமீர், ஜி.சிவா ஆகியோர் கமிட்டி உறுப்பினர்களாக இருப்பார்கள்," என்றார்.

 

ஏஞ்சலினா ஜூலியின் டாப்லெஸ் படம் ரூ. 21 லட்சத்திற்கு ஏலம்!

Topless Angelina Jolie Photo Hits Auction Look

லண்டன்: ஹாலிவுட் நடிகை ஏஞ்சலினா ஜூலியின் டாப்லெஸ் புகைப்படம் ஒன்று 21 லட்சம் ரூபாய்க்கு ஏலம் போகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பிரபல ஹாலிவுட் நடிகை ஏஞ்சலினா ஜூலிக்கு தற்போது 37 வயதாகிறது. இவர் தற்போது பொதுசேவையில் ஆர்வம் காட்டி வருகிறார். இவரின் அபூர்வ புகைப்படங்கள் லண்டனில் அடுத்தமாதம் ஏலம் விடப்படுகிறது.

2001 ஆம் ஆண்டில் மேலாடையின்றி எடுத்த இவரது படம் ஒன்று 21 லட்சம் ரூபாய்க்கு ஏலம் போகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படம் அவர் 25 வயதாகும் போது எடுக்கபட்டபடம். இந்தபடத்தில் அவரது முன்னாள் கணவர் பில்லிபாப்பின் உருவத்தை பச்சை குத்தி இருப்பது கூட தெரியுமாம். இந்த படத்தை டேவிட் லச்சபெல்லெ எனற புகைப்பட கலைஞர் எடுத்துள்ளார்.

ஏஞ்சலினா ஜூலிக்கும் பில்லிபாப்பிற்கும் இடையேயான உறவு மூன்றாண்டுகளில் விவாகரத்தில் முடிந்தது. இதனையடுத்து பச்சைக் குத்தியிருந்த பில்லிபாப்பின் உருவத்தை அழித்துவிட்டார் ஏஞ்சலினா.

இந்த படத்தைத் தவிர ஜூலி தனது கணவர் மற்றும் குழந்தைகளுடன் 2005 ஆம் ஆண்டில் எடுக்கப்பட்ட மற்றொரு புகைப்படம் 7 லட்சம் ரூபாய்க்கு ஏலம் போகும் என எதிர்பார்க்கபடுகிறது.

 

புனே சர்ச்சில் நயன்தாரா - ஆர்யா 'திருமணம்'!

Arya Weds Nayanthara Pune Church

நிஜ வாழ்க்கையில் நயன்தாரா - ஆர்யா திருமணம் விரைவில் நடக்கப் போகிறது என பத்திரிகைகள் ஆரூடம் கூறிக் கொண்டிருக்கும் நிலையில், புனே சர்ச்சில் இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.

ஆனால் இது ராஜா ராணி படத்தில் வரும் ஒரு முக்கிய காட்சிக்காக!

அட்லீ குமார் இயக்கும் இந்தப் படத்தில் நயனும் ஆர்யாவும் ஜோடியாக நடிக்கின்றனர். நயன்தாராவின் தந்தையாக சத்யராஜ் நடிக்கிறார். சந்தானம் முக்கிய வேடத்தில் வருகிறார்.

இந்தப் படத்தில் நயன்தாராவும் ஆர்யாவும் திருமணம் செய்து கொள்வது போன்ற காட்சியை புனேயில் உள்ள தேவாலயத்தில் எடுக்க முடிவு செய்த இயக்குநர், அதற்காக புனே செயின்ட் மேரீஸ் சர்ச்சில் அனுமதி பெற்றார்.

நாட்டில் உள்ள ஏஞ்சலிகன் தேவாலயங்களில் மிகப் பழமையானது இதுதான். ஒரு சர்ச்சில் நடக்கும் திருமணத்தில் என்னென்ன சடங்குகள் முறைப்படி நடக்குமோ, அதில் ஒன்றுவிடாமல் இருவருக்கும் நடத்தப்பட்டது.

ஆர்யா கோட் சூட் அணிந்திருந்தார். நயன்தாரா பாரம்பரிய வெள்ளை கவுன் அணிந்து வந்தார். கிட்டத்தட்ட மூன்று நாட்கள் இந்த திருமணக் காட்சி படமாக்கப்பட்டது.

ஆனால் அது சினிமாக்காட்சி போலவே தெரியவில்லை. நிஜ திருமணம் போலவே இருந்தது, என்கிறார்கள் செட்டிலிருந்த ராஜா ராணி குழுவினர்.

அப்படித்தான் நடந்துவிட்டுப் போகட்டுமே!

 

பைரஸியை ஒழிப்பது பெரும் தலைவலி! - இசைஞானி இளையராஜா

Fighting Piracy Legally Is Headache Ilaiyaraja

சென்னை: திருட்டு சிடி, காப்பியடித்தல் போன்றவை இசைக் கலைஞர்களுக்கு பெரும் தலைவலியாக உள்ளது. ஆனால் இவற்றை ஒழிப்பது கலைஞர்களின் வேலையல்ல, என்று இசைஞானி இளையராஜா கூறினார்.

சமீபத்தில் அவர் இதுகுறித்துக் கூறுகையில், "முன்பெல்லாம் இசை என்பது கலைஞர்களின் வயிற்றுப் பிழைப்பாக இருந்தது. குறிப்பிட்ட கலைஞனின் இசை புகழ்பெற்றால், அவர்களுக்கு ஏதோ ஒரு தொகையைக் கொடுத்துவிட்டு காப்பி அடித்துக் கொள்வது வழக்கம்.

டான் ஜியோவன்னி ஓபராவை கம்போஸ் செய்ய மொசார்ட்டுக்கு கொடுக்கப்பட்டது வெறும் 20 ப்ராங்குகள். ஆனால் அதை இன்றும் பயன்படுத்தி மில்லியன் டாலர்களில் சம்பாதிக்கிறார்கள்.

பல பெரும் இசைக் கலைஞர்கள் வறுமையில் செத்திருக்கிறார்கள். ஆனால் எனக்கு அப்படி ஒரு நிலை ஏற்படவில்லை. காரணம் எனக்கு அமைந்த நல்ல தயாரிப்பாளர்கள்.

ஆனால் இன்றைக்கு உள்ள மோசமான நிலை என்னவென்றால், ஒரு பாடல் ஹிட்டானதுமே அதை உடனடியாக காப்பி அடிக்கிறார்கள். அல்லது திருட்டுத்தனமாக பதிவிறக்கி சம்பாதிக்கிறார்கள். படைத்தவனுக்கு ஒன்றுமில்லாமல் போகிறது.

அரசாங்கம், தயாரிப்பாளர்கள், இசையமைப்பாளர் என அனைவருக்குமே அது நஷ்டம்தான். இதைத் தடுக்க சட்டம் இருந்தாலும் அது பயனற்றதாக உள்ளது.

பைரசியை ஒழிப்பது பெரும் தலைவலியாக உள்ளது. ஆனால் இது ஒரு கலைஞனின் வேலையல்ல. கேரளாவில் இதைத் தடுக்க ஒரு சிஸ்டம் வைத்திருக்கிறார்கள்.

அதையே இங்கும் பின்பற்ற வேண்டும் என்று சொல்லவில்லை. நான் என் வேலையைச் செய்கிறேன். மக்கள்தான் இந்த மாதிரி திருட்டு சிடியைத் தடுக்க வேண்டும். அவர்கள் மனது வைத்தால் செய்யலாம். அதுதான் ஒரு கலைஞன் மீது அவர்கள் வைத்துள்ள மரியாதை," என்றார்.

 

டப்பிங் சீரியல்களை ஒளிபரப்புவதா?... ஹைதராபாத் மா டிவி அலுவலகம் சூறை

ஹைதராபாத்: தமிழ், இந்தி மொழி சீரியல்களை தெலுங்கில் டப்பிங் செய்து ஒளிபரப்புவதைக் கண்டித்து சின்னத்திரைக் கலைஞர்கள் ஹைதராபாத்தில் உள்ள மா டிவி அலுவலகம் மீது கல்வீசி தாக்குதல் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

பிரபல தெலுங்கு சேனலான ‘மா டிவி' நேரடியாக தயாரிக்கப்பட்ட தெலுங்குத் தொடர்களை மட்டுமே ஒளிபரப்ப வேண்டும் என்பது சின்னத்திரைக் கலைஞர்களின் கோரிக்கையாகும்.

tv artists attack maa tv office

டப்பிங் செய்யப்பட்ட தொடர்களை ஒளிபரப்புவதன் மீது தங்களுக்கு வேலை கிடைப்பதில்லை என்பது அவர்களின் குற்றச்சாட்டு. பல தொலைக்காட்சி நடிகர்கள் உண்ணாவிரதம், ஆர்ப்பாட்டம் போன்ற போராட்டங்கள் மூலம் அவர்களது எதிர்ப்பை தெரிவித்து வந்தனர்.

இந்த நிலையில் தமிழ், இந்தி தொடர்களை அதிக அளவில் தெலுங்கில் டப்பிங் செய்து ஒளிபரப்பும் மா டிவி அலுவலகம் மீது சில தினங்களுக்கு முன்பு சின்னத்திரை கலைஞர்கள் சிலர் தாக்குதல் நடத்தினர். அங்கு நிறுத்தப்பட்டிருந்த கார்களும், அலுவலகத்தி இதனால் சேதம் ஏற்பட்டது.

தங்கள் அலுவலகம் மீது தாக்குதல் நடந்ததையடுத்து மா டிவி நிர்வாகம் காவல் துறையில் புகார் அளித்துள்ளது.

இந்நிலையில் பத்திரிக்கையாளர்களை சந்தித்த மா டிவி நிர்வாகிகள் தங்கள் தொலைக்காட்சி அலுவலகம் மீது தாக்குதல் நடத்தியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவித்தனர். இனி டப்பிங் சீரியல்களை குறைத்துக் கொண்டு நேரடி தெலுங்கு தொடர்களை அதிக அளவில் ஒளிரப்ப முடிவு செய்துள்ளதாக தெரிவித்தனர்.

தமிழ்நாட்டிலும் சன் டிவி தவிர பெரும்பாலான சேனல்களில் அதிக அளவில் இந்தி டப்பிங் சீரியல்கள்தான் ஒளிபரப்பாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

 

கமல் - சூர்யா - ஷங்கர் இணையும் இந்தியன் 2?

Kamal Surya Indian 2

ஷங்கர் இயக்கத்தில் கமல் - சூர்யா முதல் முறையாக இணைந்து நடிக்கப் போவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. ஷங்கர் - கமல் இணைந்த வெற்றிப் படமான இந்தியனின் தொடர்ச்சியாக இந்தப் படம் இருக்கும் என்றும், இந்தியன் 2 என இதற்குப் பெயர் சூட்டத் திட்டமிட்டிருப்பதாகவும் அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தப் படத்தின் சிறப்பு, கமலும் சூர்யாவும் இணைந்து நடிப்பதுதான்.

இந்தியன் படத்தின் க்ளைமாக்ஸில் தாத்தா கமல், பெரிய விபத்திலிருந்து தப்பி வெளிநாட்டுக்குத் தப்பி விடுவதுபோல காட்சியமைக்கப்பட்டிருந்தது.

இப்போது அதை வைத்தே இரண்டாம் பாகத்தை உருவாக்கப் போகிறார்களாம். முதல் பாகத்தில் கமல் இரு வேடங்களில் நடித்திருந்தார். இந்த இரண்டாம் பாகத்தில் இளவயது கமல் இருக்கமாட்டார். அவருக்குப் பதில் சூர்யா என யோசித்து வைத்துள்ளார்களாம்.

சூர்யா மற்றும் கமலிடமும் பேச்சுவார்த்தை நடப்பதாகக் கூறப்படுகிறது.

கமல் தனது விஸ்வரூபம் -2 படத்தை முடித்த பிறகு இந்தியன் 2-ல் நடிக்கிறார். அதே போல சூர்யாவும் கவுதம் மேனன், லிங்குசாமி படங்களை முடித்துவிட்டு இந்தியன் -2க்கு வருகிறார்.

இந்தப் படத்தினை சுமார் 125 கோடி செலவில் இயக்க திட்டமிட்டு இருக்கிறாராம் ஷங்கர்.

எப்படியென்றாலும், இந்த தகவல்கள் அனைத்துமே மீடியாவில் உலா வருபவைதான்.