கோலிவுட் ஹீரோயின்களை பார்த்தால் முகத்தை திருப்பிக் கொள்ளும் அசின்

Asin Turns Her Face On Seeing Kolly   
மும்பையில் கோலிவுட் ஹீரோயின்களைப் பார்த்தால் நடிகை அசின் முகத்தை திருப்பிக் கொள்கிறார் என்று கூறப்படுகிறது.

அசின் மலையாளத்தில் அறிமுகமானாலும் தமிழில் தான் பெரிய நடிகையாகி கொடிகட்டிப் பறந்தார். இங்குள்ள முன்னணி ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்து நடித்துக் கொண்டிருந்தார். அப்போது திடீர் என்று பாலிவுட் ஆசை வந்து அங்கு சென்றார். அவர் என்றைக்கு பாலிவுட் சென்றாரோ அன்றில் இருந்து அவரைப் பற்றி ஏராளமான வதந்திகள், செய்திகள் வெளி வருகின்றன.

பாலிவுட் படங்களில் வாய்ப்பு பெறுவதற்காக அசின் தான் தன்னைப் பற்றி தானே வதந்திகளைப் பரப்புவகாக பாலிவுட் ஹீரோயின்கள் கூறுகிறார்களாம். யார் என்ன கூறினாலும் சளைக்காமல் இருக்கும் அசின் தானே பாலிவுட்டின் நம்பர் 1 ஹீரோயின் என்று கூறிக் கொள்கிறார். அங்கு அவர் மூன்று ஹிட் படங்கள் கொடுத்துவிட்டாராம் அதனால் தான் இப்படி சொல்லியிருக்கிறார்.

இனி தமிழ் படங்களில் எல்லாம் நடிக்க மாட்டேன் என்று அவர் கூறியதாக செய்திகள் வெளிவந்தன. இந்நிலையில் அவரைப் பற்றி புதிய செய்தி கிடைத்துள்ளது. நம்ம கோலிவுட் ஹீரோயின்கள் யாரையாவது மும்பையில் பார்த்தால் அசின் ஒரு வார்த்தை கூட பேசமால் முகத்தை திருப்பிக் கொள்கிறாராம். கோலிவுட் ஹீரோயின்கள் இது ஏன் இவர் இப்படி நடந்து கொள்கிறார் என்று கூறுகிறார்களாம்.
 

ரஜினியின் கோச்சடையானுக்காக காத்திருக்கும் ஜப்பான் ரசிகர்கள்

Rajinikanth S Japanese Fans Will Be
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் கோச்சடையான் படத்தைப் பார்க்க அவருடைய ஜப்பானிய ரசிகர்கள் பேராவலாக உள்ளனர்.

ரஜினிகாந்த், தீபிகா படுகோனே நடித்துள்ள கோச்சடையான் படப்பிடிப்பு முடிந்துவி்ட்டது. ஹாலிவுட் படமான அவதாரில் பயன்படுத்தப்பட்ட மோஷன் கேப்ச்சர் தொழில்நுட்பத்துடன் இந்தியாவில் வெளியாகும் முதல் 3டி படம் கோச்சடையான். இதற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் அசத்தலாய் இசையமைத்திருக்கிறார் என்று கூறப்படுகிறது.

கோச்சடையானில் கெஸ்ட் ரோலில் ஐஸ்வர்யா ராய் வருகிறார் என்று கூறப்பட்டது. ஆனால் அது உண்மை இல்லை என்று இயக்குனர் சௌந்தர்யா தெரிவித்துள்ளார். இந்த படம் ஜப்பானிய மொழி மற்றும் ஆங்கிலத்திலும் டப் செய்து வெளியிடப்படுகிறது. ரஜினிகாந்துக்கு ஜப்பானில் ரசிகர் பட்டாளமே உள்ளது என்பது அனைவரும் அறிந்ததே. அவர்களின் வசதிக்காகத் தான் ஜப்பானிய மொழியிலும் டப் செய்யப்படுகிறது.

இந்நிலையில் கோச்சடையான் படத்தைப் பார்க்க ஜப்பானிய ரசிகர்கள் பேராவலாக இருக்கிறார்களாம். அவர்கள் மட்டுமில்லை தமிழ் ரசிகர்களும் படம் எப்பொழுது வெளியாகும் என்று எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.
 

காதலை ஏற்க மறுத்த நடிகையை நடுரோட்டில் அடித்த பிரபல மலையாள நடிகர்

Sudhir Sukumaran Asked Surrender Po
டிராகுலா 2012 என்ற மலையாள படத்தின் ஹீரோ சுதீர் தனக்கு காதல் தொல்லை கொடுத்து தாக்கியதாக அந்த படத்தின் நாயகி ராஜேஸ்வரி நம்பியார் போலீசில் புகார் கொடுத்துள்ளார்.

மலையாளப் படங்களில் வில்லனாக நடித்தவர் சுதிர் சுகுமாறன். தற்போது வினயன் இயக்கி வரும் டிராகுலா 2012 என்ற படத்தில் ஹீரோவாக நடித்து வருகிறார். அவருக்கு ஜோடியாக ராஜேஸ்வரி நம்பியார் நடித்து வருகிறார். இந்நிலையில் சுதிர் ராஜேஸ்வரியிடம் தான் அவரை காதலிப்பதாகவும், மணக்க விரும்புவதாகவும் தெரிவித்து வந்துள்ளார். அதற்கு ராஜேஸ்வரி கண்டும் காணாததுமாய் இருந்துள்ளார்.

தொல்லை அதிகமாகவே அவர் தனது தாயிடம் இது குறித்து தெரிவித்தார். அவரது தாய் நேராக சுதிர் வீட்டுக்கு சென்று அவர் மனைவியிடம் இந்த விவகாரத்தை தெரிவி்த்து எச்சரித்துவிட்டு வந்துள்ளார். ஆம், சுதிருக்கு ஏற்கனவே திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர்.

ராஜேஸ்வரியின் தாய் வந்து எச்சரித்துவிட்டு போனது பற்றி அறிந்த சுதிர் ஆத்திரமடைந்தார். கடந்த வியாழக்கிழமை ராஜேஸ்வரி காரில் சென்றபோது பைக்கில் வந்து அவரது காரை வழிமறித்த சுதிர் ராஜேஸ்வரியை திட்டி, தாக்கியுள்ளார். இதையடுத்து ராஜேஸ்வரி திருப்போணித்தரா காவல் நிலையத்தில் இது குறித்து புகார் தெரிவித்தார்.

அந்த புகார் மனுவில் அவர் கூறியிருப்பதாவது,

டிராகுலா படப்பிடிப்புக்காக ருமேனியா சென்றபோது சுதிர் பலமுறை என்னை திருமணம் செய்து கொள்ள வலியுறுத்தி தொந்தரவு செய்தார். சம்பவத்தன்று நடன வகுப்பு முடிந்து காரில் வீட்டுக்கு திரும்பி கொண்டு இருந்தேன். அப்போது எனது காரை பின்தொடர்ந்து பைக்கில் வந்த சுதிர் வழிமறித்து நிறுத்தினார். காரில் இருந்து என்னை வலுக்கட்டாயமாக பிடித்து இழுத்து ஆபாச வார்த்தை கூறி தாக்கினார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.

இந்த வழக்கு திருப்போணித்துராவில் இருந்து கடவன்தரா காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்டது. தற்போது படப்பிடிப்புக்காக ஹைதராபாத்தில் இருக்கும் சுதிரை உடனடியாக கடவன்தரா காவல் நிலையத்தில் சரண் அடையுமாறு போலீசார் உத்தரவிட்டுள்ளனர்.
 

தி டர்ட்டி பிக்சர் கன்னட ரீமேக்கில் நடிகர் பார்த்திபன் நடிக்கவிருக்கிறார்.

Parthipan The Dirty Picture
சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கையை அடிப்படையாக வைத்து இந்தியில் எடுக்கப்பட்ட தி டர்ட்டி பிக்சர் படம் சூப்பர் ஹிட்டானது. அதில் சில்க்காக நடித்த வித்யா பாலனுக்கு சிறந்த நடிகைக்கான தேசிய விருது கிடைத்தது. இந்த படத்தின் வெற்றியைப் பார்த்து அதை தமி்ழ் மற்றும் கன்னடத்தில் ரீமேக் செய்கின்றனர்.

கன்னடத்தில் இந்தி நடிகை வீணா மாலிக் சில்க்காக நடிக்கிறார். தி டர்ட்டி பிக்சர்: சில்க் சக்கத் மகா என்று பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தை த்ரிஷுல் இயக்குகிறார். இந்த படத்தில் இந்தியில் நஸீருத்தீன் ஷா நடித்த கதாபாத்திரத்தில் நடிக்க பார்த்திபனை கேட்டுள்ளனர். அவரும் ஓ.கே. சொல்லிவிட்டாராம். இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று இயக்குனர் தெரிவித்தார்.

பார்த்திபனை இந்த படத்தில் நடிக்க வைப்பதில் தனது குழுவுக்கு மிகவும் மகிழ்ச்சி என்று அவர் மேலும் தெரிவித்தார்.

அண்மையில் இந்த படத்திற்காக வீணா மாலிக் போஸ் கொடுத்த சில புகைப்படங்கள் வெளியிடப்பட்டன. அதில் வீணா கவர்ச்சியாக இருந்தாலும் வித்யா பாலன் அளவுக்கு எபெக்ட் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்துக்காக வீணாவுக்கு ரூ.1 கோடி சம்பளம் பேசப்பட்டுள்ளது என்று கூறப்படுகிறது.
 

நடிகை சங்கீதா கர்ப்பமாக உள்ளாராம்!

Sangeetha Become Mom Soon
நடிகை சங்கீதா எத்தனையோ தமிழ் படங்களில் நடித்தும் அவருக்கு பெயர் வாங்கிக் கொடுத்தது பிதாமகன் படம் தான். அந்த படத்துக்காக அவருக்கு பிலிம்பேர் விருதும், சிறந்த துணை நடிகைக்கான தமிழக அரசின் விருதும் கிடைத்தது. அதையடுத்து அவர் நடித்த உயிர் படத்தில் அவரது நடிப்பு பேசப்பட்டது. அதன் பிறகு கமல் ஹாசனின் மன்மதன் அம்பு படத்தில் அவரது நடிப்புக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.

சங்கீதா பாடகர் கிருஷ்-ஐ கடந்த 2009ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 1ம் தேதி திருவண்ணாமலையில் உள்ள அருணாச்சலேஸ்வரர் கோவிலில் வைத்து மணந்தார். திருமணமாகி மூன்று ஆண்டுகளுக்கு பிறகு தற்போது அவர் கர்ப்பமாக இருக்கிறார். இன்னும் ஒரு சில மாதங்களில் தாயாகிவிடுவார் என்று கூறப்படுகிறது.

இதற்கிடையே, நடிகர் சத்யராஜ் தாத்தாவாகப் போகிறார். அதாவது அவரது மகன் சிபிராஜ் தந்தையாகப் போகிறார். மேலும் இயக்குனர் வெங்கட் பிரபு மீண்டும் அப்பாவாகிறார். அவருக்கு ஏற்கனவே ஷிவாணி என்ற மகள் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
 

முதலில் அஞ்சலி-ஓவியா, இப்போ த்ரிஷா-சுனைனா

Trisha Sunaina Stun Samar Team
சமர் படப்பிடிப்பில் நடிகைகள் த்ரிஷாவும், சுனைனாவும் பொழியும் பாச மழையைப் பார்த்து படக்குழுவினர் அதிசயப்படுகிறார்களாம்.

சமர் படத்தில் விஷாலுக்கு ஜோடியாக த்ரிஷா, சுனைனா ஆகியோர் நடித்து வருகிறார்கள். த்ரிஷா தான் நடிக்கும் படங்களில் தனக்கே அதிக முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரம் இருக்க வேண்டும் என்பதில் குறியாக இருப்பவர்.

என்றென்றும் புன்னகை படத்தில் இயக்குனர் அகமது தமன்னாவையும் போடலாம் என்று நினைக்க அதற்கு த்ரிஷா கடும் எதிர்ப்பு தெரிவித்தார். என் படத்தில் இன்னொரு நாயகியா என்று கொதித்துவிட்டார். அதன் பிறகு ஒரு வழியாக சமாதானம் ஆனார். ஆனால் அந்த படத்தில் த்ரிஷாவுடன் தமன்னா நடிக்கவில்லை, இந்தி நடிகை லிசா ஹேடன் நடிக்கிறார்.

இந்நிலையில் சமர் படப்பிடிப்பில் த்ரிஷாவும், இன்னொரு நாயகியான சுனைனாவும் அக்கா, தங்கச்சி ரேஞ்சுக்கு பழகுகிறார்களாம். அவர்கள் பொழியும் பாச மழையைப் பார்த்து படக்குழுவினரே ஆச்சரியப்படுகிறார்கள் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.

அதற்கும் காரணம் இருக்கிறது. படத்தில் த்ரிஷாவுக்குத் தான் வெயிட்டான கேரக்டர். சுனைனாவின் கேரக்டர் பற்றி நீங்களே புரிந்துகொள்ளுங்களேன்.
 

விஸ்வரூபத்தில் நடிக்க தீபிகா மறுத்து விட்டார்...கமல்ஹாசன்

Deepika Refused Act Viswaroopam
விஸ்பரூபம் படத்தில் தீபகா படுகோன் நடிப்பதாக இருந்தது. ஆனால் அவர் நடிக்க மறுத்து விட்டார். உண்மையில் அந்த வேடத்திற்கு தீபிகாவின் பெயரை நான் பரிந்துரைக்கவில்லை. எனது படத்தின் பைனான்ஷியர்தான் தீபிகா நடிக்க வேண்டும் என்று ஆர்வம் காட்டினார் என்று கமல்ஹாசன் கூறியுள்ளார்.

சிங்கப்பூரில் நடைபெற்று வரும் சர்வதேச இந்திய திரைப்பட அகாடமி விழாவில் முதல் முறையாக விஸ்வரூபம் காட்டப்பட்டது. படத்தப் பார்த்த அத்தனை பேரும் வியந்து பாராட்டித் தள்ளி விட்டனராம்.

மிகப் பெரிய அளவில் இப்படம் பேசப்படும் என்பதே படத்தைப் பார்த்தவர்களின் கருத்தாக உள்ளது.

விழாவில் கலந்து கொண்ட கமல்ஹாசனிடம் செய்தியாளர்கள், இப்படத்தில் முதலில் தீபிகா படுகோன் நடிப்பதாக இருந்தது. ஆனால் அவர் நடிக்கவில்லை, ஏன் என்று கேட்டனர்.

அதற்கு் பதிலளித்த கமல், தீபிகா இப்படத்தில் இடம் பெறுவதாக இருந்தது. ஆனால் அவர்தான் நடிக்க மறுத்து விட்டார். நாங்கள் கேட்ட தேதிகளை அவரால் கொடுக்க முடியவில்லை. எனவே நாங்கள் அவரை விட்டு வி்ட்டோம்.

உண்மையில் எனது படத்தின் பைனான்ஷியர்தான் தீபிகா நடிக்க வேண்டும் என்பதில் ஆர்வமாக இருந்தார். நான் அவரது பெயரை ஆரம்பத்திலிருந்தே பரிந்துரைக்கவில்லை.

இருந்தாலும், இப்படத்தில் நடித்துள்ள அத்தனை பேரும் மிகச் சிறப்பாக நடித்துள்ளனர். இது எனக்கு பெரும் திருப்தி அளித்துள்ளது, மகிழ்ச்சி அளித்துள்ளது என்றார் கமல்.
 

நயனதாராவைக் 'கடலுக்கு' கூப்பிட்ட மணிரத்தினம்!

Nayanthara S Promise Maniratnam   
மணிரத்னம் தனது கடல் படத்தில் நடிக்க வருமாறு நயன்தாராவை கேட்டுக் கொண்டுள்ளார்.

மணிரத்னம் கார்த்திக் மகன் கௌதம் மற்றும் ராதாவின் இளைய மகள் துளசியை வைத்து கடல் என்ற படத்தை எடுத்து வருகிறார். இந்த படத்தில் முதலில் சமந்தா தான் ஒப்பந்தம் ஆகியிருந்தார். ஆனால் அவர் திடீர் என்று விலகியதால் தற்போது துளசி நடிக்கிறார். இதில் விசேஷம் என்னவென்றால் அலைகள் ஓய்வதில்லை படத்தில் கார்த்திக்குடன் தான் ராதா அறிமுகமானார்.

தற்போது கார்த்திக் மகனுடன், ராதாவின் இளைய மகள் அறிமுகமாகிறார். மீனவ கிராமங்களில் எடுக்கப்பட்டு வரும் கடல் படத்தில் சில முக்கிய காட்சிகளில் நடிக்க வருமாறு இயக்குனர் மணிரத்னம் நயன்தாராவைக் கேட்டுக் கொண்டுள்ளார். மணி கேட்டு யாராவது இல்லை என்று சொல்வார்களா. நயனும் ஓ.கே. சொல்லிவி்ட்டார். நயன் தற்போது அஜீத் படத்தில் பிசியாக இருக்கிறார்.

இருப்பினும் கடல் படத்திற்கு நிச்சயம் நேரம் ஒதுக்கித் தருவதாக வாக்களித்துள்ளார்.
 

இஃபா விருதுகள்: சிறந்த இந்தி இசையமைப்பாளர் ரஹ்மான்-வி்ல்லன் பிரகாஷ் ராஜ்!

Iifa Awards 2012 Ar Rahman Bags
சிங்கப்பூரில் நடந்த சர்வதேச இந்திய திரைப்பட விருது வழங்கும் விழாவில் சிறந்த இசையமைப்பாளருக்கான விருதை இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் பெற்றார்.

சர்வதேச இந்திய திரைப்பட விருது வழங்கும் விழா சிங்கப்பூரில் நடந்தது. இதில் இந்தி திரைப்படங்கள் திரையிடப்பட்டன. கமல் ஹாசனின் விஸ்வரூபம் டிரெய்லர் வெளியிடப்பட்டது. இந்த விழாவில் இந்தி படங்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன.

ராக்ஸ்டார் மற்றும் ஜிந்தகி நா மிலேகி தோ பாரா ஆகிய இந்தி படங்கள் விருதுகளை அள்ளின. சிறந்த நடிகருக்கான விருதை ராக்ஸ்டார் படத்துக்காக ரன்பீர் கபூரும், சிறந்த நடிகைக்கான விருதை தி டர்ட்டி பிக்சருக்காக வித்யா பாலனும் பெற்றனர்.

சிறந்த இசையமைப்பாளருக்கான விருது ராக்ஸ்டார் படத்திற்கு இசையமைத்ததற்காக இசைப்புயல் ஏ. ஆர். ரஹ்மானுக்கு கிடைத்தது. மேலும் இந்தி சிங்கம் படத்தில் நடித்ததற்காக சிறந்த வில்லன் நடிகருக்கான விருது பிரகாஷ் ராஜுக்கு கிடைத்தது.

பிரியங்கா சோப்ராவின் தங்கை பரினீத்தி சோப்ராவுக்கு 2 விருதுகள் கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.
 

ஆஸ்போர்னுடன் கை கோர்த்து ஹாலிவுட்டுக்குள் புகுகிறார் கமல்-இயக்கமும் அவரே?

Kamal Haasan Make Hollywood Debut
நடிகர் கமல்ஹாசன் முதல் முறையாக ஒரு ஹாலிவுட் படத்தில் நடிக்கவிருக்கிறார். இந்தியப் பின்னணியுடன் கூடிய கதையில் அவர் நடிக்கிறார். பிரபல ஹாலிவுட் தயாரிப்பாளர் பேரி ஆஸ்போர்ன் இப்படத்தை உருவாக்குகிறார்.

தி லார்ட் ஆப் ரிங்ஸ் உள்ளிட்ட பல புகழ் பெற்ற படங்களை உருவாக்கியவர் ஆஸ்போர்ன். கமல்ஹாசனின் ஹாலிவுட் அறிமுகம் குறித்த அறிவிப்பை அவரும், ஆஸ்போர்னும் இணைந்து சிங்கப்பூரில் நடந்து வரும் சர்வதேச இந்திய திரைப்பட அகாடமி விழாவின்போது வெளியிட்டனர்.

அப்போது கமல் பேசுகயில், உலகம் நமது பணிகளை நிறைய பார்த்திருந்தாலும், ஆஸ்போர்ன் போன்றவர்கள் நம்மை அணுகும்போதுதான் நாம் இவ்வளவு செய்திருக்கிறோமா என்பதை உணர முடிகிறது.

பேரி ஆஸ்போர்ன் என்னை அணுகிய விதம் எனது இதயத்தைத் தொட்ட விஷயம். நான் மதிக்கும் பல ஹாலிவுட் பிரபலங்கள் இவருடன் இணைந்து பணியாற்றியுள்ளனர். பிரான்சிஸ் போர்ட் கப்போலா உள்பட ஹாலிவுட்டின் சாம்பயின்களாக போற்றப்படும் பலரும் இவருடன் பணியாற்றியுள்ளனர் என்றார்.

ஆஸ்போர்ன் பேசுகையில், கமல்ஹாசனை இந்திய மற்றும் மேற்கத்திய கலவையாக எனது படத்தில் காட்டவுள்ளேன். ஹாலிவுட் ஸ்டைலில், இந்திய வரலாறு மற்றும் பாரம்பரியத்தை சொல்லத் திட்டமிட்டுள்ளோம்.

கமல்ஹாசன் ஒரு சினிமா என்சைக்ளோபீடியா. அவரை சந்தித்தது பெருமையாக இருக்கிறது. தனது விஸ்வரூபம் படத்திற்காக ஹாலிவுட் வந்தபோது என்னை சந்தித்தார் கமல். அவருடைய படத்தைப் பார்க்க வருமாறு அழைத்தார். படம் என்னை வெகுவாக கவர்ந்து விட்டது.

பிறகுதான் இணைந்து பணியாற்றுவது குறித்து பேசத் தொடங்கினோம். அவருக்கு இலக்கியத்திலும், சினிமாவிலும் மிகப் பெரிய ஞானம் உள்ளது. அதை அவருடன் பேசியபோதுதான் உணர்ந்தேன். அவருடன் பேசியதையே பெருமையாக, கெளவரமாக கருதுகிறேன்.

எனக்கு அவர் பல ஐடியாக்களைக் கூறினார். அவை என்னை ஈர்த்து விட்டன. பிறக இணைவது என்ற முடிவுக்கு வந்தேன் என்றார் ஆஸ்போர்ன்.

படத்தின் கதை எப்படி இருக்கும் என்ற கேள்விக்கு கமல் பதிலளிக்கையில், அதை இன்னும் முடிவு செய்யவி்ல்லை. ஒரு ஐடியாவை தற்போது இறுதி செய்து விவாதித்து வருகிறோம். இது ஒரு சர்வதேசப் படமாக இருக்கும். உலகளாவிய கதையாக இருக்கும். இணைந்து பணியாற்றுவது என்பது மட்டுமே இறுதி செய்யப்பட்டுள்ளது. ஒரு நடிகராக என்னை நடிக்கச் சொன்னாலும் சரி, ஒரு எழுத்தாளராக திரைக்கதை அமைக்கச் சொன்னாலும் சரி, அல்லது ஒரு இயக்குநராக என்னை இயக்கச் சொன்னாலும் சரி அதைச் செய்ய நான் தயாராக இருக்கிறேன் என்றார் கமல்.

கமல் சொல்வதைப் பார்த்தால் இப்படத்தை கமல்ஹாசனே இயக்கினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

ஒரு வேளை இப்படத்தை கமல்ஹாசனே இயக்கினால், ஹாலிவுட் படம் ஒன்றில் ஹீரோவாக நடித்து, படத்தையும் இயக்கிய முதல் இந்திய நடிகர், தமிழர் என்ற பெருமை கமல்ஹாசனுக்குக் கிடைக்கும்.
 

எனக்கு தேசிய விருது வேண்டாம், விசில் போதும்: தனுஷை குத்திக்காட்டும் சிம்பு

Bala S Movies Are Dhanush Not Me

செல்வராகவன், பாலா படங்களில் எல்லாம் தனுஷ் தான் நடிப்பார் அது எனக்கு à®'த்து வராது என்று நடிகர் சிம்பு தெரிவித்துள்ளார்.

சிம்புவுக்கு தனுஷை வம்புக்கு இழுக்கவில்லை என்றால் தூக்கம் வராது போலும். அவரது வாலு படத்தில் தனுஷின் படிக்காதவன் படத்தில் வரும் வசனத்தை உல்டாவாக்கி பயன்படுத்தியுள்ளார். கேட்டால் அதற்கும் எனக்கும் சம்பந்தம் இல்லை என்று கூறிவிட்டார். இந்நிலையில் தனுஷை மீண்டும் வம்புக்கு இழுத்துள்ளார்.

இயக்குனர்கள் செல்வராகவன், பாலா ஆகியோர் படங்களில் நடிக்க விருப்பமில்லையா என்று கேட்டதற்கு அவர் கூறுகையில்,

அவர்கள் படங்களில் நடிக்க விருப்பமில்லை. அவர்களின் படங்களில் வரும் கதாபாத்திரங்கள் சீரியசாக இருக்கும். தனுஷ் தான் அந்த மாதிரி கதாபாத்திரங்களில் நடிப்பார். அவர் நடிப்பவர் நான் மக்களை மகிழ்விப்பவன். எனக்கு தேசிய விருதோ, ஆஸ்கர் விருதோ வேண்டாம். ரஜினிகாந்த் எப்படி தளபதியில் நடித்தாரோ அதே மாதிரி நானும் அந்த மாதிரி படங்களில் நடிப்பதில் ஆட்சேபனையில்லை. அதனால் தான் வெற்றி மாறனின் படத்தில் நடிக்க à®'ப்பந்தம் ஆகியுள்ளேன். நான் மக்களை மகிழ்விக்கும் மாஸ் படங்களில் நடிப்பதில் ஆர்வமுள்ளவன். என் படம் à®"டும் தியேட்டரில் கைதட்டல், விசில் பறக்க வேண்டும் என்றார்.

 

அஞ்சலி உதடுகளில் அதகளம் செய்யப் போகும் ஆர்யா!

Anjali Arya Perform Lip Lock Settai   

அமலா பாலைத் தொடர்நது தற்போது அஞ்சலியின் உதடுகள், ஆர்யாவி்ன் கஸ்டடிக்குப் போகப் போகிறது. சேட்டை படத்திற்காக இருவரும் சேர்ந்து à®'ரு லிப் லாக் காட்சியில் 'லைவ்லி'யாக க(ந)டிக்கப் போகிறார்களாம்.

டெல்லி பெல்லி இந்திப் படத்தை சேட்டை என்ற பெயரில் ரீமேக் செய்கின்றனர். கண்ணன் இயக்குகிறார். ஆர்யா ஹீரோவாக நடிக்கிறார். பிரேம்ஜி, சந்தானம் காமெடியைக் கவனிக்கிறார்கள். நாயகியாக மசாலா கபே அஞ்சலி.

டெல்லி பெல்லியில் சூடான, சுவையான லிப்லாக் உண்டு. அதே போல சேட்டையிலும் இருக்கிறதாம். அஞ்சலி உதடுகளை ஆர்யா கவ்விக் கொள்வது போல காட்சி வைத்துள்ளனராம். இந்த லிப்லாக்கின் அவசியம், முக்கியத்துவம், கட்டாயம் குறித்து ஆர்யாவிடமும், அஞ்சலியிடமும் கண்ணன் விளக்கினாராம். இதை ஏற்று இருவரும் முத்தமிட்டுக் கொள்ள சம்மதித்து விட்டனராம்.

இந்த à®'ப்பந்தத்தைத் தொடர்ந்து காட்சியை வடிவமைத்து விட்ட கண்ணன், அக்காட்சியை மும்பையில் போய் ஷூட் செய்ய திட்டமிட்டுள்ளாராம்.

இதையடுத்து ஆர்யாவும், அஞ்சலியும் தங்களது உதடுகளுடன் மும்பை செல்ல தயாராகிக் கொண்டிருக்கிறார்களாம். அதேசமயம், டெல்லி பெல்லியில் வருவது போன்ற படுக்கை அறைக் காட்சி சேட்டையில் இருக்காதாம்...

ஏற்கனவே அமலா பாலின் உதட்டில் விளையாடியுள்ளார் ஆர்யா. இப்போது அஞ்சலியிடம் வருகிறார்....!

 

த்ரிஷா தான் என்னுடைய இன்ஸ்பிரேஷன்: கார்த்திகா

Trisha Is My Inspiration Karthika    | கார்த்திகா  

நடிகை ராதாவின் மகள் கார்த்திகாவின் இன்ஸ்பிரஷேன் நடிகை த்ரிஷாவாம்.

நடிகை ராதாவின் மூத்த மகள் கார்த்திகா அறிமுகமானது என்னவோ தெலுங்கில் என்றாலும் அவருக்கு பெயர் வாங்கிக் கொடுத்தது 'கோ' படம் தான். அதைத் தொடர்ந்து அவர் தெலுங்கில் ஜூனியர் என்.டி.ஆருடன் நடித்த தம்மு ஹிட்டானது. அந்த படத்தில் த்ரிஷாவும் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. கார்த்திகா பாரதி ராஜாவின் அன்னக்கொடியும் கொடி வீரனும் படத்தில் நடித்து வருகிறார்.

சுந்தர் சி. யின் எம்.ஜி.ஆர். படத்தில் இருந்து வெளியேறினார். மேலும் சட்டம் à®'ரு இருட்டறை ரீமேக்கில் இருந்தும் வெளியேறிவிட்டார் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் அவர் தன்னுடைய முன்மாதிரி த்ரிஷா என்று கூறியுள்ளார். à®'வ்வொரு நடிகைக்கும் à®'ரு ரோல் மாடல் இருப்பார்கள். அப்படித் தான் கார்த்திகாவுக்கு த்ரிஷாவாம்.

த்ரிஷா மட்டும் என்ன சுமார் 10 ஆண்டுகளுக்கும் மேலாக திரையுலகில் ஹீரோயினாகவே வலம் வந்து கொண்டிருக்கிறார். நல்ல முன்மாதிரி தான்.

 

நான் இன்றைக்கு இப்படிக்கு இருக்க 'தல' தான் காரணம்: முருகதாஸ்

Ajith S The Reason What I M Now Ar Murugadoss

நடிகர் அஜீத் குமார் தான் தனக்கு திரையுலக வாழ்க்கையைத் தந்தவர் என்று இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் தெரிவித்துள்ளார்.

ஏ.ஆர். முருகதாஸ் கடந்த 2001ம் ஆண்டு தீனா படம் மூலம் இயக்குனரானார். அதைத் தொடர்ந்து அவர் பல வெற்றிப் படங்களைக் கொடுத்துள்ளார். கோலிவுட் தவிர பாலிவுட்டுக்கும் சென்று அங்கும் வெற்றி பெற்றுள்ளார். தெலுங்கிலும் à®'ரு படம் எடுத்துள்ளார். பல விருதுகளைப் பெற்றுள்ளார்.

இந்நிலையில் அவர் தான் கடந்து வந்த பாதை பற்றி கூறுகையில்,

வட இந்திய மக்கள் என்னை à®'ரு இயக்குனராக அதிலும் வெற்றிகரமான இயக்குனராக ஏற்க கஷ்டப்படுகிறார்கள். இப்பொழுதே இப்படி என்றால் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு நான் எப்படி இருந்தேன் என்பதை நினைத்து பாருங்களேன். ஆனால் அஜீத் எனக்கு 'நோ' சொல்லவில்லை. நான் கேட்டதும் à®'ப்புக் கொண்டார். நாங்கள் அப்போது தீனா படத்தில் பணியாற்றினோம். இன்றைக்கு நான் எனது ஏழாவது படத்தை விரைவில் ரிலீஸ் செய்யவிருக்கிறேன். நான் இன்றைக்கு இந்த நிலையில் இருக்க அவர் தான் காரணம்.

நான் 6 படங்கள் எடுத்த பிறகே விஜயுடன் பணியாற்ற முடிந்தது. அவர் என்னுடைய நல்ல நண்பர். அவர் பிறரிடம் படத்தை தவிர வேறு எதைப் பற்றியும் பேச மாட்டார். ஆனால் என்னிடம் மட்டும் சொந்த விஷயங்களைப் பற்றி பேசவும் தயங்கமாட்டார் என்றார்.