காஜல் அகர்வாலுடன் நடிக்க மறுத்த அபிஷேக் பச்சன்


என் படத்தில் காஜல் அகர்வால் வேண்டாம். வேறு யாராவது புது முகத்தை போடலாமே என்று கூறியுள்ளார் அபிஷேக் பச்சன்.

தெலுங்கு இயக்குனர் பூரி ஜெகன்னாத் தெலுங்கு மற்றும் இந்தியில் எடுக்கும் படம் தி பிசினஸ் மேன். தெலுங்கில் மகேஷ் பாபு கதாநாயகனாக நடிக்கிறார். அவருடன் ஜோடி சேர்கிறார் காஜல் அகர்வால்.

இந்தியில் அபிஷேக் பச்சன் தான் கதாநாயகன். தெலுங்கில் நாயகியாக நடிக்கும் காஜர் அகர்வாலையே இதற்கும் நாயகியாக்கிவிடலாம் என்று இயக்குனர் கூறியிருக்கிறார். அதற்கு அபிஷேக் பச்சன் காஜல் வேண்டாம், யாராவது புது முகத்தை போட்டால் நன்றாக இருக்கும் என்று கூறியிருக்கிறார்.

காஜல் அகர்வால் ஏற்கனவே சிங்கம் படம் மூலம் பாலிவுட்டில் அறிமுகமாகவுள்ளதால் தான் அபிஷேக் வேண்டாம் என்றிருக்கிறார்.
 

ஐட்டமா, வேண்டவே வேண்டாம்: பிரியங்கா சோப்ரா


பாலிவுட்டில் குத்துப்பாட்டுக்கு நான், நீ என போட்டி போட்டு ஆடிக் கொண்டிருக்கையில் குத்துப் பாட்டுக்கு ஆட மாட்டேன் என்கிறார் நடிகை பிரியங்கா சோப்ரா.

பாலிவுட்டின் முன்னணி கவர்ச்சி நாயகி பிரியங்கா சோப்ரா(28). பாலிவுட்டில் தற்போது குத்துப் பாட்டில்லாத படமே இல்லை எனலாம். இந்த குத்துப் பாட்டிற்கு குத்தாட்டம் போட முன்னணி நாயகிகள் எல்லாம் போட்டி போடுகின்றனர். அங்கு குத்துப் பாட்டு அவ்வளவு பிரபலம்.

இந்நிலையில் குத்துப் பாட்டே வேண்டாம் என்கிறார் பிரியங்கா சோப்ரா. தற்போதும் சரி, எதிர்காலத்திலும் சரி குத்துப் பாட்டுக்கு ஆடும் எண்ணமே இல்லை என்கிறார் அவர்.

இதற்கிடையே அனில் கபூர், அஜய் தேவ்கன் மற்றும் கங்கனா ரனௌத் நடிக்கும் இயக்குனர் பிரியதர்ஷனின் தேஸ் படத்தில் பிரியங்கா ஒரு பாட்டிற்கு மட்டும் வந்து குத்தாட்டம் போடுவார் என்று பேசப்படுகிறது. ஆனால் இதை திட்டவட்டமாக மறுத்துள்ளார் பிரியங்காவின் செய்தித் தொடர்பாளர்.

எனினும் தீபாவளிக்கு வெளியாகும் ஷாருக் கானின் ரா ஒன் படத்தில் கௌரவ வேடத்தில் நடிக்க சம்மதித்துள்ளார் பிரியங்கா.
 

சன் டிவி மீது நடவடிக்கை எடுக்கக் கோரி கமிஷனரை சந்திக்கிறார் நடிகை ரஞ்சிதா?


சென்னை: தானும், சாமியார் நித்தியானந்தாவும் இருந்தது போன்ற வீடியோ காட்சியை ஒளிபரப்பிய சன் டிவி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி சென்னை போலீஸ் கமிஷனரை நேரில் சந்தித்து புகார் கொடுக்கவுள்ளார் நடிகை ரஞ்சிதா என்று தகவல் வெளியாகியுள்ளது.

சன் பிக்சர்ஸ் தலைமை நிர்வாக அதிகாரி ஹன்ஸ்ராஜ் சக்சேனா கைது செய்யப்பட்டுள்ளார். அவர் மீது இதுவரை 3 வழக்குகள் பாய்ந்துள்ளன. மேலும் வழக்குகள் பாயக் காத்துள்ளன. குண்டர் சட்டத்தின் கீழும் அவர் கைது செய்யப்படவுள்ளதாக கூறப்படுகிறது.

சக்சேனா மீதும் சன் பிக்சர்ஸ் மீதும் சன் டிவி நி்ர்வாகம் மீதும் தொடர்ந்து புகார்கள் குவிந்து வருகின்றன.

இந்த நிலையில் நித்தியானந்தா பக்தர்களும் சன் டிவி மீது புகார் கொடுக்க ஆரம்பித்துள்ளனர். சமீபத்தில் அவரது பக்தர்கள் கூட்டமாக சென்னை கமிஷனர் அலுவலகத்திற்கு வந்து நித்தியானந்தா, ரஞ்சிதா இடம் பெற்ற காட்சிகளை ஒளிபரப்பிய சன் டிவி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி மனு கொடுத்தனர்.

இந்த நிலையில் நடிகை ரஞ்சிதாவும் கமிஷனரை நேரில் சந்தித்து மனு கொடுக்கவுள்ளாராம். இன்று காலையே அவர் வருவதாக கூறப்பட்டிருந்தது. ஆனால் இதுவரை வரவில்லை. மாலையில்வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், நடிகை ரஞ்சிதா இன்று இரவு 7 மணிக்கு தி.நகரில் உள்ள ஸ்டார் சிட்டி ஹோட்டலில் சந்தித்துப் பேட்டி அளிப்பார் என்றும் பி.ஆர்.ஓ மூலம் செய்தி ஒன்றும் பத்திரிக்கையாளர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது.
 

தள்ளிப் போன லாரன்ஸின் காஞ்சனா!


லாரன்ஸ் இயக்கத்தில் உருவாகியுள்ள காஞ்சனா படத்தின் வெளியீடு மீண்டும் தள்ளிப் போடப்பட்டது.

2007-ம் ஆண்டு ராஜ்கிரண் நடிப்பில் முனி என்ற படத்தை இயக்கி வெளியிட்டார் ராகவா லாரன்ஸ். இந்தப் படத்தின் இரண்டாவது பாகமாக முனி - 2 எடுத்துள்ளார் லாரன்ஸ். இதற்கு காஞ்சனா என்றும் பெயரிட்டுள்ளார்.

லாரன்ஸே ஹீரோவாகவும் நடித்துள்ளார். லட்சுமிராய், சரத்குமார், ஸ்ரீமன் என முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர். தமன் இசையமைத்துள்ளார்.

திகில் படமான இது தமிழ் - தெலுங்கு என இருமொழிகளில் தயாராகியுள்ளது. இந்த மாத ஆரம்பத்தில் வெளியாகும் என்று கூறப்பட்ட படம் ஜூலை 15-ம் தேதிக்கு தள்ளிப் போடப்பட்டது.

ஆனால் அன்று தெய்வத் திருமகள், ஹாரி பாட்டர் என முக்கிய படங்கள் வருவதால், ஜூலை 22-ம் தேதிக்கு தள்ளிப் போடப்பட்டுள்ளது.

தெலுங்கில் பிரபல தயாரிப்பாளர் பெல்லம்கொண்டா சுரேஷ் இதனை பெரும் விலைக்கு வாங்கி வெளியிடுகிறார்.
 

இனி துவங்குவது என் வாழ்க்கையின் புதிய அத்தியாயம்! - நயன்தாரா


சினிமாவில் போதிய அளவு சாதித்துவிட்ட திருப்தி கிடைத்துவிட்டது. இனி புதிய அத்தியாயம் துவங்கப்போகிறது என் வாழ்க்கையில், என்கிறார் நயன்தாரா.

நயன்தாரா சினிமாவுக்கு முழுக்குப் போட்டுவிட்டார். அவரது கடைசி படம் ஸ்ரீராம ராஜ்யம் படப்பிடிப்பின் கடைசி நாளில் இதை தெரிவித்துவிட்டார் அவர்.

இனி நடிப்பதை தனது வருங்கால கணவர் பிரபு தேவா விரும்ப மாட்டார் என்றும் அவர் கூறிவிட்டார்.

இந்த நிலையில் தனது கடைசி படம் மற்றும் புதிய வாழ்க்கை குறித்து அவர் சமீபத்தில் அளித்துள்ள பேட்டி:

எனது வாழ்க்கையில் ராமராஜ்யம் படத்தின் கடைசி நாள் அனுபவத்தை மறக்க முடியாது. அந்த படக்குழுவினருடன் நான் முழுமையாக கலந்து விட்டேன். அதிலிருந்து என்னால் மீள முடியவில்லை. பின்னர் படத்தில் பணியாற்றிய அனைவரும் என்மேல் அன்பும் பாசமும் காட்டினார்கள். அவர்களை பிரிய நேரம் வந்தபோது என்னால் உணர்ச்சிகளை கட்டுப்படுத்த முடியவில்லை. அதனால் அழுது விட்டேன்.

ராமராஜ்ஜியம் படம் புராண கதை. ராமனுடன் சீதை சேருகிற வரலாறும், பிறகு அவர் மேலோகம் செல்வதும் காட்சி எடுக்கப்பட்டு உள்ளது. நான் ராமாயண கதையை படித்து உள்ளேன். அந்த படத்தில் நானும் ஒரு அங்கமாக இருந்தது மகிழ்ச்சி அளிக்கிறது.

இதுபோன்ற புராண படங்களில் அம்மன் வேடத்தில் நடிக்கும் நடிகைகள் சைவ உணவுகளை மட்டுமே சாப்பிட்டதை அறிந்துள்ளேன். தொடர்ந்து கோவில்களுக்கும் சென்று ஒழுக்க நெறியை கடைபிடித்து உள்ளேன். நானும் அதுபோல சைவம் சாப்பிட்டேன்.

இனி நான் புதுப்படங்கள் எதையும் ஒப்புக் கொள்ளமாட்டேன். எனது வாழ்க்கையில் இன்னொரு அத்தியாயத்துக்கு நான் தயாராகிக் கொண்டிருக்கிறேன். இந்த முடிவை மிக சந்தோஷமாக எடுத்துள்ளேன்.

என் வாழ்க்கையில் அடுத்து நடப்பது முக்கியமான விஷயம் (பிரபுதேவாவுடன் திருமணம்). அது உறுதியானதும் உங்களுக்கு (ரசிகர்களுக்கு) சொல்கிறேன், என்று கூறியுள்ளார் நயன்தாரா.
 

16 இயக்குனர்கள் நடிக்கும் ஞானி: இசை, 5 புதுமுகங்கள்


தமிழ் திரையுலகின் புதிய முயற்சியாக 16 இயக்குனர்கள் சேர்ந்து ஒரு படத்தில் நடிக்கின்றனர்.

தமிழ் திரையுலகில் இயக்குனர்கள் நடிப்பது புதிதன்று. ஆனால் தற்போது ஞானி என்ற படத்தில் 16 இயக்குனர்கள் சேர்ந்து நடிக்கின்றனர்.

16 இயக்குனர்கள் சரி, ஹீரோ யார் என்று தானே கேட்கிறீர்கள். அது வேறு யாருமன்று நம்ம மாயாண்டி குடும்பத்தார் படத்தில் நடித்த இயக்குனர் தருண் கோபி தான். ஹீரோயின் நடிகை ஸ்வேதா.

இயக்குனர்கள் எஸ்.எஸ்.ஸ்டன்லி, பிரபுசாலமன், தம்பி ராமய்யா, சரவண சுப்பையா, சிங்கம்புலி, ரவிமரியா, அரவிந்த்ராஜ், சித்ராலட்சுமணன், சசிமோகன், கேயார், செல்வபாரதி, பிரவின்காந்தி, சஞ்சய்ராம், ஆர்த்திகுமார் உள்ளிட்ட 15 பேர் நடிக்கின்றனர்.

இந்த படத்திற்கு இன்னொரு சிறப்பு அம்சமும் உண்டு. அது என்னவென்றால் இதற்கு பிரசாந்த், ராகவேந்திரா, ராபர்ட், இப்ராகிம், அய்யர் ஆகிய 5 புதுமுகங்கள் இசையமைக்கின்றனர். இதை ஒளிப்பதிவு செய்கிறார் மதியழகன்.

படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் என்று பெரிய பொறுப்பை ஏற்றிருக்கிறார் ஆர்த்தி குமார். சுபாசினி புரொடக்ஷன்ஸ் சார்பில் ஜே.எஸ்.குமார், எல்.சுரேஷ்குமார் ஆகியோர் படத்தை தயாரிக்கின்றனர்.

ஒரு பெரிய பட்டாளமே இருக்கின்றதே அப்படி என்ன கதை என்று நினைக்கிறீர்களா. வேறு என்ன கிராமம் தான். அண்ணனைக் கொன்றவர்களை தம்பி பழிக்கு பழி வாங்குகிறான்.

அண்ணன் முத்து, தம்பி முருகன். இருவரும் ஒரு மரக்கடைக்காரரிடம் வேலை செய்கின்றனர். ஒரு வழக்கில் எங்கே முத்து தங்களைக் காட்டிக் கொடுத்துவிடுவானோ என்று நினைத்து அவனை கடைக்காரரின் மைத்துனர்களும், தம்பியும் சேர்த்து தீர்த்துக் கட்டுகின்றனர். அவர்களை பழிக்குப் பழி வாங்குகிறான் முருகன். ஆனால் விதி அவனையும் பழிவாங்குகிறது.
 

டீஸல் விலை உயர்வைக் கண்டித்து டி ராஜேந்தர் ஆர்ப்பாட்டம்


சென்னை: பெட்ரோல், டீசல், சமையல்எரிவாயு விலை உயர்வைக் கண்டித்து டி ராஜேந்தரின் லட்சிய தி.மு.க. சார்பில் சைதாப்பேட்டை பனகல் மாளிகை எதிரில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

தென் சென்னை மாவட்ட லட்சிய தி.மு.க. செயலாளர் எம்.எம்.சீடுர். மதன் ஆர்ப்பாட்டத்துக்கு தலைமை வகித்தார்.

லட்சிய தி.மு.க. தலைவர் டி. ராஜேந்தர் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு விலை உயர்வுக்கு எதிராக கண்டன கோஷங்கள் எழுப்பினார். லட்சிய தி.மு.க.வை சேர்ந்த ஏராளமான தொண்டர்கள் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.

ஆர்ப்பாட்டத்தில் டி. ராஜேந்தர் பேசுகையில், "மத்திய அரசு பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலைகளை உயர்த்தி வருவதால் ஏழை, நடுத்தர மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இலங்கைக்கு மத்திய அரசுதான் பெட்ரோல் ஏற்றுமதி செய்கிறது. ஆனால் இலங்கையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 50 ரூபாய். ஆனால் இங்கு லிட்டருக்கு 67 ரூபாய் கட்டணம் நிர்ணயித்துள்ளனர்.

பாகிஸ்தானில் ஒரு லிட்டர் பெட்ரோல் 45 ரூபாய், பணக்கார நாடான அமெரிக்காவில் 50 ரூபாய், நமது நாட்டில்தான் அநியாயத்துக்கு விலை ஏற்றி உள்ளனர். பெட்ரோல், டீசல், சமையல் கியாஸ் விலை உயர்வை ரத்து செய்யவேண்டும்.

இலங்கைக்கு பெட்ரோல் ஏற்றுமதி செய்வதை நிறுத்த வேண்டும். இலங்கைக்கு பொருளாதார தடை விதிக்க வேண்டும் என்ற தமிழக அரசு தீர்மானத்தை மத்திய அரசு நிறைவேற்ற வேண்டும்," என்றார் அவர்.

ஆர்ப்பாட்டத்தில் மாநில நிர்வாகிகள் ஏ. முரளி, எஸ். துரை, மேகநாதன், டி. வாசு, பி. கருணாநிதி, வி.என். கருணா, மகளிர் அணி செயலாளர் வசந்தி பாண்டியன், வட சென்னை மாவட்ட செயலாளர் கே.ஜே. சுரேஷ் உள்ளிட்ட பலர் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.
 

மூன்றாவது வழக்கிலும் சக்ஸேனா கைது... மீண்டும் போலீஸ் காவலில் விசாரணை!


சென்னை: மாப்பிள்ளை பட விவகாரத்தில் தயாரிப்பாளர் நேமிச்சந்த் ஜெபக் கொடுத்த புகாரிலும் சன் பிக்சர்ஸ் ஹன்ஸ்ராஜ் சக்ஸேனா கைது செய்யப்பட்டார்.

இந்த வழக்கிலும் அவரை காவலில் எடுத்து விசாரிக்கிறது போலீஸ்.

சன் பிக்சர்ஸ் நிர்வாக இயக்குனர் சக்சேனா மீது சேலம் சினிமா விநியோகஸ்தரான செல்வராஜ் புகார் கொடுத்தார். தீராத விளையாட்டு பிள்ளை படம் தொடர்பாக ரூ.82 லட்சத்தை அவர் மோசடி செய்து விட்டதாக அதில் தெரிவித்திருந்தார்.

இதன்பேரில் சக்சேனா கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார். இந்த வழக்கு தொடர்பாக காவலில் வைத்து அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வந்தது.

அப்போது சேலத்தைச் சேர்ந்த சண்முகவேலு என்பவர் கே.கே.நகர் போலீசில் மேலும் ஒரு புகார் கொடுத்தார். அதில், சன் பிக்சர்ஸ் சக்சேனா அவரது உதவியாளர் அய்யப்பன் ஆகியோர் தன்னை அறையில் பூட்டி வைத்து தாக்கியதாக கூறியிருந்தார்.

இந்த புகார் மீது போலீசார் நடவடிக்கை எடுத்து சக்சேனாவையும், அய்யப்பனையும் கைது செய்தனர்.

இந்த நிலையில் கோடம்பாக்கத்தைச் சேர்ந்த சினிமா தயாரிப்பாளர் நேமிசந்த் கோடம்பாக்கம் போலீசில் சக்சேனா மீது மேலும் ஒரு புகார் அளித்தார்.

தனுஷ் நடித்து வெளியான மாப்பிள்ளை படத்தை ரூ.17 கோடிக்கு சன்பிக்சர்ஸ் நிறுவனத்துக்கு விற்பனை செய்தேன். இதில் ரூ.15 கோடி கொடுக்கப்பட்டது. மீதமுள்ள 2 கோடி ரூபாய்க்கு கோவை விநியோக உரிமையை தருவதாக சக்சேனா கூறியிருந்தார். ஆனால் விநியோக உரிமை தரப்படவில்லை. பணத்தை நான் திருப்பி கேட்டபோது எனக்கு மிரட்டல் விடுத்தனர் என்று புகாரில் குறிப்பிட்டு இருந்தார்.

தற்போது இந்த வழக்கிலும் 3-வது முறையாக சக்சேனா கைது செய்யப்பட்டு உள்ளார்.

இந்த வழக்கில் அவரிடம் விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்துள்ளனர். இதற்காக கோர்ட்டில் மனு தாக்கல் செய்யவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இன்று அல்லது நாளை இதற்கான மனுவை போலீசார் கோர்ட்டில் தாக்கல் செய்கிறார்கள்.

நீதிமன்ற அனுமதி பெற்று புழல் சிறையில் இருக்கும் சக்சேனாவை காவலில் எடுத்து விசாரணை நடத்த உள்ளனர்.
 

தமிழ் நடிகையுடன் கேத்ரினா சண்டையா?

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

தமிழ் நடிகையுடன் கேத்ரினா சண்டையா?

7/12/2011 12:39:08 PM

புதுச்சேரியை சேர்ந்த கல்கி, இந்தியில் ‘தேவ் டி’ படத்தில் அறிமுகமானார். அடுத்ததாக ‘ஜிந்தகி நா மிலேகி துபாரா’ படத்தில் ஹிருத்திக் ரோஷன், கேத்ரினா கைப் ஆகியோருடன் நடித்துள்ளார். அவர் கூறியது: எனது பெற்றோர் பிரான்ஸ் நாட்டை சேர்ந்தவர்கள். 38 வருடங்களுக்கு முன் புதுச்சேரி வந்தனர். அப்போது தமிழர்களின் கலாசாரம் மீது அவர்களுக்கு காதல் உண்டானது. இங்கேயே தங்கிவிட்டனர். நான் பிறந்தது புதுச்சேரியில்தான். வளர்ந்தது ஊட்டியில். அங்குதான் படித்தேன். மும்பையில் நடிப்பு பய¤ற்சி பெற்றபோது, இந்தி பட வாய்ப்பு கிடைத்தது. ‘ஜிந்தகி நா மிலேகி துபாரா’ படத்தில் நடிக்கும்போது கேத்ரினா கைபுக்கும் எனக்கும் சண்டை என மும்பை மீடியா செய்தி வெளியிட்டன. அதில் துளியும் உண்மையில்லை. அடுத்த வாரம் படம் வெளியாகிறது. இப்பட ரிலீசை எதிர்பார்த்து காத்திருக்கிறேன். இவ்வாறு கல்கி கூறினார்.

 

யோகா டீச்சர் யானா குப்தா

Kollywood news, bollywood news, hollywood news, Cinema news, movie review, cinema in tamil, tamil cinema news

யோகா டீச்சர் யானா குப்தா

7/12/2011 12:32:47 PM

தமிழில் ஒரு சில படங்களில் ஒரு பாடலுக்கு மட்டும் நடனம் ஆடிய கவர்ச்சி நடிகை யானா குப்தா யோகா டீச்சர் ஆகி இருக்கிறார். தமிழில் மன்மதன், அந்நியன் படத்தில் ஒரு பாடலுக்கு மட்டும் ஆடினார். இந்தியில் வாய்ப்புகள் குறைந்ததால். அவர் யோகா டீச்சர் ஆகி விட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனையடுத்து வித விதமான யோகா செய்முறைகளை விளக்கி சிடிக்கள் வெளியிட்டிருக்கிறார்.

 

தாடி சிக்கலால் பூலோகம் தவிப்பு!

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

தாடி சிக்கலால் பூலோகம் தவிப்பு!

7/12/2011 12:27:08 PM

அமீர் இயக்கத்தில் ஜெயம் ரவி நடிக்கும் படம் ‘ஆதிபகவான்’. நீது சந்திரா ஜோடி. பாங்காங்கில் படத்தின் பெரும்பகுதி படமாக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்துக்குப் பிறகு அறிமுக இயக்குன‌ரின் இயக்கத்தில் ஜெயம் ரவி ‘பூலோகம்’ என்ற படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டிருந்தார். ஆக்ஷன் த்‌ரில்லரான இதன் படப்பிடிப்பு திட்டமிட்டபடி எப்போதோ தொடங்கியிருக்க வேண்டும். ஆனால் ஆதி பகவானுக்காக ஜெயம் ரவி தாடி மீசை வளர்த்திருக்கிறார். பூலோகத்தில் தாடி கிடையாது. பூலோகத்துக்காக தாடியை எடுத்தால் ஆதிபகவானை முடிக்க முடியாது. இந்த தாடி சிக்கலால் பூலோகம் படப்பிடிப்பு தாமதமாகி வருகிறது.

 

சாராவை வஞ்சனையில்லாமல் புகழ்ந்த விக்ரம்

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

சாராவை வஞ்சனையில்லாமல் புகழ்ந்த விக்ரம்

7/12/2011 12:22:08 PM

தெய்வத்திருமகள்… இந்த டைட்டிலுக்கு உ‌ரியவர் சாரா. மும்பையைச் சேர்ந்த இந்த சிறுமி விக்ரமுக்கு மகளாக நடித்திருக்கிறார்கள். இவர்களுக்குள் உள்ள பாசப் போராட்டம்தான் கதை. தனக்கு மகளாக நடித்திருக்கும் சாராவை வஞ்சனையில்லாமல் புகழ்ந்தார் விக்ரம். யாருக்கு விருது கிடைக்கிறதோ இல்லையோ சாராவுக்கு நிச்சயம் கிடைக்கும் என்றார் பிள்ளை பாசத்துடன்.

 

பாலா படத்தில் விஷாலா? விக்ரமா?

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

பாலா படத்தில் விஷாலா? விக்ரமா?

7/12/2011 12:14:29 PM

பாலாவின் ‘அவன் இவன்’ படம் வெற்றி நடை போடும் நேரத்தில், அவரது அடுத்தப் படம் குறித்து தகவல்கள் கிடைத்துள்ளது. ஆனால் எந்த அளவுக்கு உண்மை என்பைதை பாலாவிடம் கேட்க வேண்டும். பெ‌ரிய ஹீரோக்களை மட்டுமே இயக்குறீங்களே என்ற கேள்விக்கு பதிலளித்த பாலா , அடுத்து ஒரு புதுமுகத்தை இயக்குகிறேன் என்று கூறியிருந்ததார். ஆனால் பாலா மீண்டும் விஷாலுடன் இணைந்து படம் செய்யவிருப்பதாக விஷாலுக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. அதேநேரம் பாலாவுடன் விரைவில் இணைய உள்ளேன் என விக்ரம் தெரிவித்துள்ளார். ஆக, பாலா படத்தில் நடிக்கயிருப்பது விஷாலா? விக்ரமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

 

ஒஸ்தி சிம்புவின் விருப்பம்!

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

ஒஸ்தி சிம்புவின் விருப்பம்!

7/12/2011 11:36:52 AM

சல்மான் கான், சோனாக்ஷி சின்கா நடித்து ஹிட்டான இந்தி படம் 'தபாங்'. இந்த படம் தமிழில் சிம்பு நடிக்க, 'ஒஸ்தி' என்ற பெயரில் ரீமேக் ஆகிறது. தெலுங்கில் பவன் கல்யாண் நடிக்க, 'கப்பார் சிங்' என்ற பெயரில் ரீமேக் ஆகிறது. யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கும் இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா குறித்து இப்போதே பிரமிப்பாக பேசுகின்றனர். ஒஸ்தி தொடக்க விழாவில் சல்மான்கானின் தம்பியும் , தபாங் தயா‌ரிப்பாளருமான அர்பாஸ்கான் கலந்து கொண்டார். படத்தின் இசை வெளியீட்டு விழாவில் எப்படியும் சல்மான்கானை பங்கு பெற செய்தாக வேண்டும் என விரும்புகிறாராம் சிம்பு. சல்மான் தனது சம்மதத்தை தெ‌ரிவித்தால் விழாவை பிரமாண்டப்படுத்தி அசத்தவும் திட்டமிட்டுள்ளனர்.

 

ரஜினி வருகை... பலத்த போலீஸ் பாதுகாப்பு... ரசிகர்களுக்கு லதா வேண்டுகோள்!


சென்னை: ரஜினி சிங்கப்பூரிலிருந்து சென்னை திரும்புவதையொட்டி விமான நிலையம், கிண்டி, அண்ணாசாலை மற்றும் போயஸ் கார்டன் பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

ரசிகர்கள் கட்டுப்பாட்டுடன், மேற் குறிப்பிட்ட இடங்களில் நின்று அவருக்கு வரவேற்பளிக்க அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ரஜினியைப் பார்க்கவும் அவரை வரவேற்கவும் சென்னை வரும் ரசிகர்கள், பாதுகாப்பு கருதி தனி வாகனங்களில் வராமல், அரசு பஸ்கள் அல்லது ரயில்களில் மட்டும் வருமாறு லதா ரஜினி கேட்டுக் கொண்டுள்ளார்.

புதன்கிழமை இரவு 10.30 மணிக்கு வரும் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானத்தில் ரஜினியும் அவரது குடும்பத்தினரும் வருகிறார்கள்.

முதலில் அவர், விமான நிலையத்திலிருந்து நேராக கேளம்பாக்கத்தில் உள்ள பண்ணை வீட்டுக்குச் செல்வார் என்றும் அங்கு அவர் ஒருமாத காலம் ஓய்வு எடுப்பார் என்றும் தெரிவித்தனர்.

இப்போது, ரஜினி நேராக போயஸ் வீட்டுக்கே செல்வார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வீட்டில் இதற்கான விசேஷ ஏற்பாடுகள் நடக்கின்றன. ரஜினி வீடு திரும்புவதையொட்டி விசேஷ ஹோமங்களும் நடத்தப்படுகின்றன.

ரஜினி வருகையையொட்டி ரசிகர்களுக்கு லதா ரஜினி விடுத்துள்ள செய்தி:

என் கணவர் ரஜினி மீது ரசிகர்கள் கொண்டிருக்கும் அன்புக்கும் பாசத்துக்கும் எப்படி நன்றி சொல்வதென்றே தெரியவில்லை. ரஜினி அவர்கள் நாளை இரவு 10.30 மணிக்கு சென்னை விமான நிலையத்தில் இறங்குகிறார்.

அவரைப் பார்க்க வரும் ரசிகர்கள் பொறுமையுடன் நடந்துகொள்ளவும். அதே நேரம் வெளியூர்களிலிருந்து வரும் ரசிகர்கள் தனி வாகனங்கள் வைத்துக் கொண்டு வருவதைத் தவிர்க்கவும். தேவையற்ற ஆபத்துக்களைத் தவிர்க்க, தயவு செய்து அரசு பேருந்துகள், ரயில்களில் வரவும்.

ரசிகர்கள் அனைவருக்கும் நன்றியும் வாழ்த்துக்களும்."

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
 

தெலுங்கில் சக்கை போடு போடும் டாப்ஸி!


தமிழில் பெரிய வாய்ப்புகள் இல்லாமல் போனாலும், டாப்ஸியின் கால்ஷீட் புத்தகம் நிரம்பி வழிகிறதாம்- எல்லாம் தெலுங்கில் வந்து குவியும் படங்களால்தான்.

டெல்லிக்காரப் பொண்ணான டாப்ஸி, தமிழ், தெலுங்கு, மலையாளம் என கலந்து கட்டி கலக்கி வருகிறார். தமிழில் அவர் நடித்த முதல் படமான ஆடுகளம், அவருக்கு நல்ல அறிமுகத்தைக் கொடுத்தாலும், படம் பிரமாண்ட வெற்றியைப் பெறத் தவறியதால், ராசியில்லாத நாயகியாக அறியப்பட்டு விட்டார்.

இதனால் தமிழில் டாப்ஸிக்கு பெரிய அளவில் வாய்ப்புகள் வரவில்லை என்று கூறப்படுகிறது. இருப்பினும் தற்போது டாப்ஸி, தெலுங்கில் படு சுறுசுறுப்பாக நடித்துக் கொண்டிருக்கிறார். மலையாளத்திலும் அவருக்கு வாய்ப்புகள் வருகிறதாம்.

தெலுங்கில் சத்தம் போடாமல் நான்கு படங்களை முடித்து விட்ட டாப்ஸிக்கு இப்போது மேலும் 2 புதிய படங்கள் வந்துள்ளன. ஒரு படத்தில் கோபிசந்த்துடன் இணைந்து நடிக்கிறார். இன்னொரு படத்தில் சுனிலுடன் இணைகிறார்.

இதில் சுனிலுடன் இணையும் படம், இந்தியில் வெற்றிகரமாக ஓடிய மாதவன், கங்கணா ரனவத் நடித்த தனு வெட்ஸ் மனு படத்தின் ரீ்மேக்காம்.

இது போக இந்தியிலும் அவருக்கு பட வாய்ப்பு வந்துள்ளதாம். டேவிட் தவன் இயக்கும் புதிய படத்தில் நடிக்கப் போகிறாராம் டாப்ஸி. இப்படத்தில் தெலுங்கு சூப்பர் ஹீரோக்களில் ஒருவரான சித்தார்த், 2 நாயகர்களில் ஒருவராக நடிக்கிறாராம்.

அப்புறம் என்ன, கொஞ்ச நாளைக்கு தமிழுக்கு டாப்ஸி டாட்டா காட்டுவார் என்பதில் சந்தேகமில்லை...!
 

ஹாலிவுட் நடிகையுடன் சிம்ரன்


சுத்தமாக சினிமா வாய்ப்பே இல்லாவிட்டாலும், சினிமா சம்பந்தப்பட்ட பெரிய நிகழ்வுகளில் இருக்குமாறு பார்த்துக் கொள்கிறார் சிம்ரன்.

இப்படித்தான் சமீபத்தில் டொரண்டோவில் நடந்த சர்வதேச இந்திய திரைப்பட விழாவில் பங்கேற்றார். இவ்விழாவுக்கு தமிழகத்திலிருந்து போன ஒரே நடிகை சிம்ரன்தான்.

விழாவின் நிறைவு நாள் நிகழ்ச்சியில் பிரபல ஹாலிவுட் நடிகை ஹிலாரி ஸ்வாங் பங்கேற்றார். அப்போது அவருடன் அறிமுகம் ஏற்பட்டதாம் சிம்ரனுக்கு.

அப்போது ஹிலாரியும் சிம்ரனும் சிறிது நேரம் சந்தித்து உரையாடினார்கள். இருவரும் சேர்ந்து போட்டோவும் எடுத்துக் கொண்டனர்.

இச்சந்திப்பு குறித்து சிம்ரன் கூறும்போது, "ஹிலாரி இந்திய சினிமா, மற்றும் இங்குள்ள வித்தியாசமான கலாசரங்கள் பற்றி தெரிந்து கொள்ளுவதில் ஆர்வமாக இருக்கிறார். அவருக்கு இந்திய சினிமா என்பது பாலிவுட் மட்டுமல்ல, அதையும் தாண்டியது என்பதைப் புரிய வைத்தேன்.

உடனே இங்குள்ள பல்வேறு மொழி திரைப்படங்கள் பற்றியும் அறிந்து கொள்ள விரும்பினார். என்னுடன் தொடர்பில் இருப்பதாக கூறியுள்ளார்," என்றார்.
 

சம்பள உயர்வு பிரச்சினை... சினிமா தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்!


சென்னை: சம்பள உயர்வு கேட்டு திரைப்பட தொழிலாளர்கள் நேற்று பெப்ஸி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனத்தில், மொத்தம் 23 சங்கங்கள் உள்ளன. அதில் லைட் மேன், நடன கலைஞர்கள், ஸ்டண்ட் நடிகர்கள் உள்பட 9 சங்கங்களில், தினக்கூலி தொழிலாளர்கள் உள்ளனர். இவர்கள் கடந்த 7 மாதங்களாக சம்பள உயர்வு கேட்டு வருகிறார்கள்.

இதுவரை சம்பள உயர்வு கிடைக்கவில்லை. எனவே சென்னை 100 அடி சாலையில் உள்ள சம்மேளன அலுவலகம் முன்பு நேற்று காலை சுமார் 200 தொழிலாளர்கள் கூடி, ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.

"சம்மேளன தலைவர் வி.சி.குகநாதன் உடனடியாக பட அதிபர்களுடன் சம்பள உயர்வு பற்றி பேசி முடிக்க வேண்டும் என்றும், அப்படி முடிக்காத பட்சத்தில், அவர் பதவி விலக வேண்டும்'' என்றும் அவர்கள் கூறினார்கள்.

இதுபற்றி வி.சி.குகநாதனிடம் கேட்டபோது, "தொழிலாளர்களின் சம்பள உயர்வு பற்றி விரைவில் பேசி முடிக்கப்படும்'' என்று தயாரிப்பாளர்கள் சங்க செயலாளர் கே.முரளிதரன் கடிதம் எழுதியிருக்கிறார். அதற்கு உடன்படாமல், தன்னிச்சையாக தொழிலாளர்கள் சம்பள உயர்வை அறிவித்தால், அது அரசாங்கத்துக்கு எதிராக அமைந்துவிடும். எனவே தொழிலாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படுகிறது'' என்றார்.
 

லிங்குசாமியின் அனைத்துப் படங்களையும் வாங்கியது யுடிவி!


லிங்குசாமியின் இயக்கம் மற்றும் அவர் பங்குதாரராக உள்ள திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் இப்போது தயாரிக்கும் அனைத்துப் படங்களின் உரிமையையும் வாங்கியது யுடிவி மோஷன் பிக்சர்ஸ்.

லிங்குசாமியுடன் இதற்கான ஒப்பந்தம் ஒன்றையும் ஏற்படுத்தியுள்ளது இந்த நிறுவனம்.

இந்தியாவின் முன்னணி கார்ப்பரேட் திரைப்பட தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்று யுடிவி. ராவணன் உள்ளிட்ட பல பெரிய படங்களைத் தயாரித்த நிறுவனம் இது.

தற்போது தெற்கில் முழுமையாக கவனம் செலுத்த ஆரம்பித்துள்ளது.

லிங்குசாமி இயக்கும் 'வேட்டை', அவர் பங்குதாரராக உள்ள திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் 'வழக்கு எண் 18/9', பிரபு சாலமன் இயக்கும் 'கும்கி' ஆகிய மூன்று படங்களையும் இப்போது யுடிவி வாங்கியுள்ளது.

இந்த மூன்றில் முதலில் வரும் படம் பாலாஜி இயக்கத்தில் உருவாகியுள்ள வழக்கு எண் 18/9.
 

சிவாஜியின் பேரன் விக்ரம் அறிமுகமாகும் 'கும்கி'!


நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் பேரனும் நடிகர் பிரபுவின் மகனுமான விக்ரம் பிரபு கதாநாயகனாக அறிமுகமாகிறார். இந்தப் படத்தை மைனா புகழ் பிரபு சாலமன் இயக்குகிறார்.

படத்தின் பெயர் கும்கி!

விக்ரம் பிரபுவின் ஜோடியாக லட்சுமி மேனன் நடிக்கிறார். தம்பி ராமய்யா முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.

இந்தப் படம் முழுக்க முழுக்க யானைகள் மற்றும் அவற்றோடு பின்னிப் பிணைந்த மனித வாழ்க்கையை மையப்படுத்தி எடுக்கப்படுகிறது. அடர்ந்த காடுகளில் படமாக்கப்படுகிறது.

கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்குகிறார் பிரபு சாலமன். மைனா படத்துக்குப் பிறகு அவர் இயக்கும் படம் இது. இசை டி இமான், ஒளிப்பதிவு சுகுமார்.

இயக்குநர் லிங்குசாமியின் திருப்பதி பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்தை யுடிவி குழுமம் வெளியிடுகிறது.