மீண்டும் படப்பிடிப்பில் தனுஷ்

Again Dhanush start to act படப்பிடிப்பில் ஏற்பட்ட விபத்து காரணமாக சிகிச்சை பெற்று வந்த தனுஷ், இப்போது குணமடைந்து மீண்டும் படப்பிடிப்புக்குத் திரும்பியுள்ளார்.

இந்தியில் ராஞ்ஜனா என்ற படத்தில் நடித்தபோது தனுஷுக்கு விபத்து ஏற்பட்டு காயம் அடைந்தார். தோள்பட்டை மற்றும் முதுகு தண்டில் காயம் ஏற்பட்டு அவதிப்பட்ட தனுஷுக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வந்தனர். இதையடுத்து படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டன.

தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த தனுஷின் உடல் நிலை இப்போது முழுமையாக குணமடைந்துள்ளது. இதையடுத்து 'மரியான்' படத்தில் நடிக்க துவங்கியுள்ளார்.

பரத்பாலா இயக்கும் இப்படத்தில் பார்வதி மேனன் நாயகியாக நடிக்கிறார். படப்பிடிப்பு நாகர்கோவிலில் மீண்டும் தொடங்கியது.

இதுகுறித்து தனுஷ் கூறுகையில், "முதுகு தண்டு காயம் குணமான பிறகு மீண்டும் 'மரியான்' படத்தில் நடிக்க வந்துள்ளேன். நாகர்கோவில் கடற்கரை பகுதிகளில் நடக்கும் இதன் இறுதி கட்ட படப்பிடிப்பில் பங்கேற்று நடித்து வருகிறேன்," என்றார்.
 

அஜீத்துக்கு மீண்டும் அறுவைச் சிகிச்சை?

Ajeeth Going under Operation நடிகர் அஜீத்துக்கு மீண்டும் முதுகில் அறுவைச் சிகிச்சை நடக்கவிருக்கிறது. சண்டைக் காட்சியின் போது ஏற்பட்ட விபத்தில் அவரது முதுகுத் தண்டு வடத்தில் பிரச்சினை ஏற்பட்டிருப்பதால் இந்த அறுவைச் சிகிச்சை என தகவல்கள் தெரிவிக்கின்றன.

ரேஸ் வீரரான அஜீத், ஏற்கெனவே விபத்துக்களைச் சந்தித்தவர். பல முறை முதுகில் அவருக்கு அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. இதனை அவரே தெரிவித்துள்ளார்.

தற்போது விஷ்ணுவர்த்தனின் பெயரிப்படாத படத்தில் நடித்துவரும் அஜீத், கடந்த வாரம் மும்பையில் நடந்த படப்பிடிப்பில் ஒரு சண்டைக் காட்சியின் மீண்டும் விபத்துக்குள்ளானார்.

அதில் அவருக்கு காலில் அடிபட்டது. முதுகில் தண்டுவடத்தில் எலும்பு விலகியுள்ளதாக மருத்துவர்கள் கூறியுள்ளனராம்.

சமீபத்தில் இயக்குநர் ஜோதிகிருஷ்ணா திருமண வரவேற்புக்கு வந்திருந்த அவர் காலைத் தாங்கித் தாங்கி நடந்து வந்தார்.

அவரது உடல்நிலை இயல்புக்குத் திரும்ப கண்டிப்பாக அறுவை சிகிச்சை செய்தே ஆகவேண்டும் என அவரது குடும்ப டாக்டர் வற்புறுத்தியதாக தெரிகிறது.

டாக்டர்களின் பேச்சை மீறி, தொடர்ந்து படப்பிடிப்பில் ஈடுபட்டுக் கொண்டிருந்த அஜீத், வரும் டிசம்பர் பத்து முதல், சிறுத்தை சிவா இயக்கவுள்ள படத்தில் கலந்துகொள்ள இருப்பதால், அதற்கு முன்பு சிகிச்சை செய்துகொள்ள சம்மதித்ததாகத் தெரிகிறது.
 

நீர்ப்பறவை படப் பாடலில் மேலும் சில வரிகள் நீக்கம்!

Some More Lines Deleted From Neer Paravai Song

நீர்ப்பறவை படத்திற்காக எழுதப்பட்ட சர்ச்சைக்குரிய பாடலிலிருந்து மேலும் சில வரிகளை நீக்கியுள்ளார் கவிஞர் வைரமுத்து. இதையடுத்து படப் பாடலுக்குக் கிளம்பிய சிக்கல் தீர்ந்துள்ளது. படமும் திட்டமிட்டபடி நவம்பர் 30ம் தேதி வெளியாகவுள்ளது.

சீனு ராமசாமியின் இயக்கத்தில் விஷ்ணு, சுனைனா நடித்திருக்கும் படம் ‘நீர்ப்பறவை'. இப்படத்தின் பாடல்கள் சமீபத்தில் வெளியிடப்பட்டன. இதில் கிறித்தவர்களை அவமதிக்கும் கருத்துக்கள் இருப்பதாக சர்ச்சை எழுந்தது. வைரமுத்து மன்னிப்பு கேட்காவிட்டால் வீட்டின் முன்பு போராட்டம் நடத்தப்போவதாகவும் கிறித்தவ மதத்தவர்கள் அறிவித்தனர்.

இதனால் குறிப்பிட்டபடி நவம்பர் 30ம் தேதி திரைப்படம் வெளியாகுமா என்ற சந்தேகம் எழுந்தது. ஆனால் இந்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக சர்ச்சைக்குரிய வரிகளை பாடலாசிரியர் வைரமுத்து மாற்றியுள்ளார்.

முதலில்

உன் பெயரை ஸ்தோத்திரம் செய்தேன்
சத்தியமும் ஜீவனுமாய் நிலைக்கிறாய் என்ற வரிகளை மாற்றினர். அதற்குப் பதில்,

என் பெயரும் ஞாபகம் இல்லை
சத்தியமாய் என்னருகே நீ இருக்கிறாய் என்று மாற்றப்பட்டது.

தற்போது அதே பாடலில் மேலும் சில வரிகளை மாற்றி விட்டனர்.

கிச்சு கிச்சு பண்ணும் கிறிஸ்துவப் பெண்ணே
பச்சை முத்தம் தர மனமில்லையா?
ஒரு கன்னம் தர மறு கன்னம் காட்டு
திருமுறை வரி நினைவில்லையா?

என்ற வரிகளுக்குப் பதிலாக

கிச்சு கிச்சு பண்ணும் கிளிவண்ணப் பெண்ணே
பச்சை முத்தம் தர மனமில்லையா?
இரு இருதயம் நெருங்கிய
பின்னே இதழுக்கு என்ன இடைவெளியா? என்று மாற்றியுள்ளனர்.

மேலும், கன்னித்தாய் என்ற வார்த்தைக்குப் பதில், காதல்தாய் என்ற வரியை பயன்படுத்தியுள்ளார் வைரமுத்து.

 

சனா கானின் கால்ஷீட் சொதப்பல்.. மலையாள இயக்குநர் புலம்பல்!

Improper Call Sheet Management San Khan   

சில்க் ஸ்மிதா வேடத்தில் நடிக்கும் புதிய மலையாளப் படத்தில் கால்ஷீட்படி வராமல் சனாகான் சொதப்பியதால் நஷ்டமடைந்ததாக இயக்குநர் புலம்பியுள்ளார்.

தற்கொலை செய்து கொண்ட கவர்ச்சி நடிகை சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கை 'கிளைமாக்ஸ்' என்ற பெயரில் மலையாளத்தில் படமாகி வருகிறது. இதில் சில்க்ஸ்மிதா வேடத்தில் சனாகான் நடிக்கிறார்.

இந்தப் படப்பிடிப்பு சில மாதங்களாக நடந்து வந்தது. இதுபற்றி பெருமையாக பேட்டியல்லாம் கொடுத்து வந்தார் சனாகான்.

ஆனால் திடீரென படப்பிடிப்புக்கு போகாமல் ஏமாற்ற ஆரம்பித்துவிட்டாராம் சனா.

இதனால் திட்டமிட்டபடி படத்தை முடிக்க முடியவில்லை. சனாகானால் ஏகப்பட்ட நஷ்டமாகிவிட்டது என படத்தின் இயக்குநர் புலம்ப ஆரம்பித்துவிட்டார்.

இன்னும் ஒரு வாரத்துக்குள் படத்தை முடித்துக் கொடுக்க சனாகான் வராவிட்டால், தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் தர முடிவு செய்துள்ளாராம் க்ளைமாக்ஸ் இயக்குநர்.

 

நானும் ஆடியே தீருவேன்... அடம் பிடித்த அசின்.. சரண்டரான இயக்குநர்!

Asin Insists Being Part Claudia Item Song   

கவர்ச்சி நடிகைக்கு நல்ல பாடல் அமைந்ததால் பொறாமையடைந்த அசின், அந்தப் பாடலில் கவர்ச்சி நடிகையுடன் தானும் ஆடுவேன் என்று அடம்பிடித்தார்.

இதனால் படப்பிடிப்பை நிறுத்திவிட்டு காட்சிகளை மாற்றி அமைத்தார் இயக்குநர்.

கில்லாடி 786 எனும் இந்திப் படத்தில் அசின் நாயகியாக நடிக்கிறார். இதில் இடம்பெறும் ஒரு ஐட்டம் பாட்டுக்கு நடிகை கிளாடியா சியல்சாவுடன் அக்ஷய் குமார் நடனம் ஆடுவது போலவும், அந்த ஆட்டத்தை அசின் பொறாமையுடன் பார்ப்பது போலவும் காட்சி அமைத்திருந்தார் இயக்குநர்.

பாடல் படமாக்கப்பட்டபோது, திடீரென எழுந்த அசின் ஷூட்டிங்கை நிறுத்திவிட்டார்.

"என்ன இது.. இவ்ளோ நல்ல பாட்டு ஒரு கவர்ச்சி நடிகைக்கா... இதில் நானும் ஆடுவது போல காட்சியை மாற்றுங்கள். அப்போதான் நான் நடிப்பேன்," அடம் பிடித்தார்.

இயக்குநர் ராகேஷ் உபாத்யாய்க்கு வேறு வழியில்லை. ஹீரோயினாச்சே.. எதுக்கு வம்பு என்று அசின் சொன்ன மாதிரியே காட்சியை மாற்றிவிட்டாராம்.

 

ரஜினிகாந்த்தை அடுத்து இயக்கப் போவது மணிரத்தினம்?

Rajini Join Hands With Manirathnam

கோச்சடையான் படத்துக்குப் பின்னர் ரஜினிகாந்த், இயக்குநர் மணிரத்தினத்துடன் கை கோர்க்கப் போவதாக à®'ரு செய்தி வெளியாகியுள்ளது.

கோச்சடையான் படத்தில் ரஜிநி நடித்து முடித்துள்ளார். இப்படத்தை அவரது இளைய மகள் செளந்தர்யா இயக்கியுள்ளார். இதைத் தொடர்ந்து அடுத்து யார் படத்தில் ரஜினி நடிப்பார் என்பது குறித்து வழக்கம் போல ஊகங்கள் கிளம்பின. அவர் இயக்கப் போகிறார், இவர் இயக்குவார் என்று புற்றீசல் போல செய்திகள் வெளியாகிய வண்ணம் உள்ளன.

ஆனால் தற்போது ரஜினி தனது அடுத்த இயக்குநராக மணிரத்தினத்தைத் தேர்வு செய்துள்ளதாக à®'ரு புதுச் செய்தி வெளியாகியுள்ளது. இருவரும் இதுதொடர்பாக சமீபத்தில் சந்தித்துப் பேசி முடித்து விட்டதாகவும் கூறப்படுகிறது. கதை குறித்துக் கூட விவாதம் நடந்து வருகிறதாம்.

ஏற்கனவே ரஜினியை வைத்து தளபதி என்ற வெற்றிப் படத்தைக் கொடுத்தவர் மணிரத்தினம். ரஜினி, இளையராஜா என்ற மாயாஜாலம் காரணமாக அப்படம் பெரும் வெற்றி பெற்றது.

இந்த நிலையில் இவர்கள் இருவரும் மீண்டும் இணையப் போவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. தற்போது கடல் என்ற படத்தை இயக்கி வருகிறார் மணிரத்தினம். அதை முடித்து விட்டு ரஜினியிடம் அவர் வரலாம் என்று தெரிகிறது.

இப்படத்தைத் தயாரிக்கப் போவது யார் என்று தெரியவில்லை. ஆனால் கண்டிப்பாக இசை ஏ.ஆர்.ரஹ்மானாக இருக்கும் என்பதை இப்போதே சொல்லி விடலாம்.

 

திருமணமாயிட்டா நடிகைகள் நடிக்கக் கூடாதா? - சினேகாவின் ஆதங்கம்

Kollywood Not Encouraging Married Actresses

சென்னை: திருமணமாயிட்டா நடிகைகள் நடிக்கக் கூடாது என்று சிலர் நினைக்கின்றனர். ஆனால் அதைப் போக்கும் வகையில் என்னை ஹரிதாஸ் படத்தில் இயக்குநர் குமாரவேலன் நடிக்க வைத்தார் என்றார் நடிகை சினேகா.

சினேகா, கிஷோர் இணைந்து நடித்துள்ள படம் ‘ஹரிதாஸ்'. ஜி.என்.ஆர். குமரவேலன் இயக்கியுள்ளார்.

இந்தப் படத்தில் நடித்தது குறித்து நடிகை சினேகா கூறுகையில், "என் கேரியர்ல ரொம்ப திருப்தியான கேரக்டர் இது. இயக்குனர் ஜி.என்.ஆர். குமரவேலன் என்னை அணுகி கதை சொன்னப்போ, எனக்கு திருமணம் முடிவாகி இருந்தது.

திருமணத்துக்கு பிறகு நடிகைகளை வேறு மாதிரி பார்ப்பார்கள். திருமணத்துக்கு பின் கதாநாயகிகள் நடிக்கக்கூடாது என்ற நிலைமை இன்னும் உள்ளது. நான் எனது திருமணம் பற்றி இயக்குனரிடம் சொன்ன பிறகு, 'பரவாயில்லை. நீங்கள்தான் நடிக்க வேண்டும்,' என்றார்.

அவரது நம்பிக்கைக்கு தலை வணங்கி நடித்துள்ளேன். மிக மரியாதைக்குரிய à®'ரு டீமோட வேலை செய்த அனுபவம் திருப்தியாகவும் நிறைவாகவும் இருந்தது," என்றார்.

 

ஜனவரி 11-ம் தேதி விஸ்வரூம் ரிலீஸ்... கமலின் பொங்கல் விருந்து!!

சென்னை: பொங்கல் விருந்தாக வெளிவருகிறது உலக நாயகன் கமல்ஹாஸனின் விஸ்வரூபம் படம்.

vishwaroopam from jan 11 11   
பொங்கலுக்கு மூன்று தினங்களுக்கு முன்பே உலகம் முழுவதும் இந்தப் படத்தை வெளியிடத் திட்டமிட்டுள்ளார் கமல்.

இதுகுறித்த அதிகாரப்பூர்வமான விளம்பரங்கள் இன்று வெளியிடப்பட்டுள்ளது.

கமல்ஹாஸன் எழுதி இயக்கி நடித்து தன் ராஜ்கமல் இன்டர்நேஷனல் சார்பில் தயாரித்துள்ள படம் இந்த விஸ்வரூபம். கடந்த à®"ராண்டு காலமாக தயாராகி வந்தது.

இந்தப் படத்தின் பாடல்கள் வரும் டிசம்பர் 4-ம் தேதி வெளியாகிறது. சோனி நிறுவனம் இதனை வெளியிடுகிறது.

இந்த நிலையில் படத்தின் வெளியீடு குறித்து அதிகாரப்பூர்வமாக இன்று அறிவித்துள்ளார் கமல். ஜனவரி 11-ம் தேதி விஸ்வரூபம் வெளியாகிறது. தமிழ், தெலுங்கு மற்றும் இந்தியில் இந்தப் படம் வெளியாகிறது.

பொங்கலுக்கு இந்தப் படத்துடன் அமீரின் ஆதி பகவன், விஷாலின் மதகஜராஜா, கார்த்தியின் அலெக்ஸ் பாண்டியன் படங்கள் வெளியாகவிருக்கின்றன.

 

டிச 5-ல் '6' பட இசை வெளியீடு... முதல் அழைப்பிதழை ரஜினிக்கு தந்த ஷாம்!

Shaam Dedicates His First Invitation To Superstar

ஷாம் நாயகனாக நடிக்கும் புதிய படம் ‘6' ன் இசைவெளியீடு வரும் டிசம்பர் 6-ம் தேதி வெளியாகிறது. இதற்கான முதல் அழைப்பிதழை சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு வழங்கி மரியாதை செலுத்தினார் அவரது ரசிகரான ஷாம்.

ஷாம் தன் திரையுலக வாழ்க்கையின் திருப்புமுனையாக அமையும் என நம்பும் படம் இது. இப்படத்தில் அவருக்கு ஜோடியாக பூனம் கவுர் நடிக்கிறார். வி.இசட்.துரை இயக்கியுள்ளார். ஸ்ரீகாந்த் தேவா இசையமைத்துள்ளார்.

இந்த படத்துக்காக ஷாம் ஏகத்துக்கும் மெனக்கெட்டுள்ளார். உடற்பயிற்சிகள் செய்து தனது தோற்றத்தை யாரும் அடையாளம் கண்டு கொள்ளமுடியாதபடி மெலிய வைத்துள்ளார்.

தாடி, மீசை, கண்களின் கீழ் இமைகள் வீக்கம் என மிகுந்த உடல் வலிக்குள்ளாகி அவர் நடித்துள்ள படம்.

இப்படம் சென்னையில் துவங்கி பல்வேறு மாநிலங்களில் பயணப்படுவது போல் திரைக்கதை அமைக்கப்பட்டு எடுக்கப்பட்டள்ளது. இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிவடைந்துள்ள நிலையில், பாடல் வெளியீட்டை வரும் டிசம்பர் 5-ந் தேதி நடத்த முடிவு செய்துள்ளார்கள்.

அதன்படி, டிசம்பர் 5-ந் தேதி சென்னை சத்யம் திரையரங்கத்தில் இப்படத்தின் பாடல் வெளியீடு நடைபெறவிருக்கிறது. இதற்கான முதல் அழைப்பிதழை தனது மானசீக குரு ரஜினிக்கு தந்தார் ஷாம்.

'சுப காரியங்களுக்கான முதல் அழைப்பை எப்படி ஏழுமலையானுக்கு தருகிறார்களோ... அப்படி இந்தப் படத்துக்கான அழைப்பிதழை எங்கள் திரையுலகின் முதல்வரான ரஜினிக்குத் தருகிறோம்', என்று குறிப்பிட்டு அழைப்பிதழைத் தந்துள்ளார் ஷாம்.

 

நடுவுல கொஞ்சம் பக்கத்தைக் காணோம்... 35லிருந்து 155!

Naduvula Konjam Pakkathai Kanom From Nov 30   

கடந்த மாதமே வெளியாகவிருந்து, கடைசி நேரத்தில் நிறுத்தி வைக்கப்பட்ட படம் நடுவுல கொஞ்சம் பக்கத்தைக் காணோம்.

காரணம்... படத்துக்குக் கிடைத்த பாஸிடிவ் விமர்சனங்கள்.

அன்றைக்கு இந்தப் படத்தை எப்படியாவது வெளியிட்டுவிட்டால் போதும் என்ற மனநிலையில், கிடைத்த 35 அரங்குகளில் வெளியிடத் தயாராக இருந்தனர்.

ஆனால் படத்தைப் பார்த்த திரையுலக பிரமுகர்கள், பத்திரிகையாளர்கள், 'நல்ல படத்தை ஏன் கொல்கிறீர்கள்... கொஞ்சம் தள்ளிப் போட்டு பெரிசாக வெளியிடுங்கள்,' என்று அறிவுறுத்த, நிறுத்தி வைத்தார்கள்.

அது ரொம்ப நல்லதாகப் போயிற்று. படத்தைப் பற்றி கேள்விப்பட்ட ஜேஎஸ்கே பிலிம்ஸ், சதீஷ் குமார், இந்தப் படத்தை நல்ல விலைக்கு வாங்கிக் கொண்டார்.

நாளை மறுநாள் 155 அரங்குகளில் பிரமாண்டமாக வெளியிடுகிறார்.

இதுகுறித்து இயக்குநர் பாலாதி தரணீதரன் கூறுகையில், "கடவுளுக்கும் பத்திரிகை உலகினருக்கும்தான் நான் நன்றி சொல்ல வேண்டும். சினிமா மீது உண்மையான அக்கறையோடு, இந்தப் படத்தைப் பார்த்தார்கள் பத்திரிகையாளர்கள். அவர்களின் நேர்மையான விமர்சனம் இந்தப் படத்துக்கு நல்ல விலையையும், மிக அருமையான வெளியீட்டுச் சூழலையும் ஏற்படுத்திக் கொடுத்துள்ளது.

நாங்கள் 35 தியேட்டர் கிடைச்சாலே பெரிய விஷயம்னு நினைச்சோம். ஆனால் இன்னிக்கு பத்திரிகையாளர்கள் யோசனையால், 155 அரங்குகளில் வெளியிடும் நிலை வந்திருக்கிறது.

படத்தில் தேவையில்லாத 25 நிமிடக் காட்சிகளைக் குறைத்துவிட்டோம். இன்னும் க்றிஸ்ப்பாக வந்திருக்கிறது படம். நாளை மறுநாள் படம் வெளியாகிறது," என்றார்.

பீட்சா படத்துக்குப் பிறகு இன்னொரு வெற்றிப்படமாக இந்த நடுவுல கொஞ்சம் பக்கத்தைக் காணோம் அமையும் என நம்புவதாக ஹீரோ விஜய் சேதுபதி சந்தோஷமாகக் குறிப்பிட்டார்.

படத்தில் அவருக்கு ஜோடியாக காயத்ரி நடித்துள்ளார்.

 

எனக்கும் இளையராஜாவுக்கும் கருத்து வேறுபாடு வந்ததே மணிரத்னத்தால்தான் - கோவைத் தம்பி

Kovaithambi Blasted Manirathnam Again

சென்னை: எனக்கும் இளையராஜாவுக்கும் கருத்துவேறுபாடு வந்ததே மணிரத்னத்தால்தான் என்று பிரபல தயாரிப்பாளர் கோவைத் தம்பி கூறியுள்ளார்.

கோவைத் தம்பியின் இதயக் கோவில் படத்தை இயக்கியவர் மணிரத்னம். ஆனால் அவரோ சமீபத்தில் 'இதயக் கோவில் நான் எடுத்த மோசமான படம். அந்த கதைக்குள் தெரியாமல் சிக்கிவிட்டேன்' என்று பேட்டியளித்திருந்தார்.

அப்போதே மணிரத்னத்துக்கு தனது கடுமையான கண்டனத்தைத் தெரிவித்த கோவைத் தம்பி, மணிரத்னம் à®'ரு மோசமான இயக்குநர் என்றார்.

இப்போது மீண்டும் மணிரத்னத்தை கடுமையாகத் திட்டியுள்ளார் கோவைத் தம்பி.

அவர் கூறுகையில், "மணிரத்னம் ஸ்கூட்டரில் என் அலுவலகத்துக்கு வந்து வாய்ப்பு கேட்டார். நான் இதயக்கோவில் கதையை கொடுத்து இயக்கச் சொன்னேன். தற்போது 28 வருடத்துக்கு பிறகு அது மோசமான படம். அந்த கதைக்குள் சிக்கிக்கொண்டேன் என்றெல்லாம் கூறியுள்ளார்.

கதை பிடிக்காவிட்டால் அப்போதே மறுத்து இருக்கலாம். அவரொன்றும் சின்னப் பிள்ளையில்லை. உண்மையில் அப்போதுதான் அவர் பயிற்சி எடுத்துக் கொண்டு இருந்தார்.

மணிரத்னத்துக்கு ஷாட் எடுக்க அப்போது சரியாக தெரியவில்லை. செட்டுக்குப் போட்ட பணம் வீணானது. கல்யாண மண்டபங்களையெல்லாம் வாடகைக்கு எடுத்து கொடுத்தேன். அவரை இயக்குநராகப் போட்ட பிறகுதான் இதெல்லாம் எனக்கே தெரிந்தது.

எனக்கும் இளையராஜாவுக்கும் கருத்து வேறுபாடு ஏற்படவும் இவர்தான் காரணமாக இருந்தார். அதுவே எனக்கு ஈடு செய்ய முடியாத இழப்பாகிவிட்டது.

இதயகோவில் படத்தை நன்றாக இயக்கி இருந்தால் எனக்கு நிறைய லாபம் கிடைத்து இருக்கும். 35 ரோலில் முடிக்க வேண்டிய படத்தை 70 ரோலுக்கு கொண்டு போய்விட்டார். இதனால் நிறைய நஷ்டம் ஏற்பட்டது. அவருக்கு கதை அறிவே சுத்தமாகக் கிடையாது. சொந்தமாக கதை எழுதவும் தெரியாது," என்றார்.

 

டேமேஜ் பண்ணாதீங்க! - குத்து ரம்யா

Dont Damage Me With False Reports   

தப்புத் தப்பா எழுதி என் பெயரை டேமேஜ் பண்ணாதீங்க, என்று கேட்டுக் கொண்டுள்ளார் குத்து ரம்யா எனப்படும் திவ்யா ஸ்பந்தனா.

'குத்து', 'பொல்லாதவன்', 'வாரணம் ஆயிரம்' படங்களில் நடித்தவர் திவ்யா ஸ்பந்தனா. 'வடசென்னை' படத்தில் இப்போது நடிக்கிறார். கன்னடத்தில் முன்னணி நடிகையான இவர், காங்கிரஸ் கட்டியின் இளைஞர் பிரிவில் முக்கிய தலைவியாக உள்ளார்.

ஆனால் எப்போதும் காதல் கிசுகிசு, தயாரிப்பாளருடன் தகராறு என சர்ச்சைகளின் நாயகியாகத் திகழ்கிறார்.

பேட்டி கேட்டு வருபவர்களையும் துரத்திவிடுவது இவரது வழக்கமாம். சமீபத்தில் சென்னை வந்த அவரிடம் இதுபற்றி கேட்டனர்.

அதற்கு அவர் அளித்த பதில்:

நான் யாருடைய வற்புறுத்தலுக்கும் பணிய மாட்டேன். என் விருப்பப்படிதான் வாழ்கிறேன்.

சின்ன வயதிலேயே சினிமாவுக்கு வந்துவிட்டேன். சினிமா வாழ்க்கை நன்றாகவே இருக்கிறது. என்னைப் பற்றி பரவும் வதந்திகளை நான் கண்டு கொள்வதில்லை.

காதல், திருமணம் போன்றவை எல்லாம் என் தனிப்பட்ட விருப்பம். அதை பொதுவில் பேச முடியாது. என் விருப்பப்படி அந்த தனிப்பட்ட வாழ்க்கையை அமைத்துக் கொள்கிறேன்.

அரசியலில் நிறைய சாதிக்க வேண்டும், நல்லது செய்ய வேண்டும் என்ற எண்ணம் உள்ளது.

என்னைப் பற்றி இந்த அளவு வெளியில் தெரிந்தாலே போதும். ஆனால் சிலர் தேவையில்லாமல் எனது சொந்த வாழ்க்கையை எழுதுகிறார்கள். கண்டதையும் எழுதி என்னை டேமேஜ் பண்ண வேண்டாம்," என்றார் திவ்யா.

 

தாத்தா வழியில் டைரக்ஷன்.... - எஸ்ஏசி பேத்தி சினேகா பிரிட்டோ!

Sac Introduces His Grand Daughter As Director Formally

சென்னை: தாத்தா எஸ்ஏசி வழியில் படங்களை தொடர்ந்து இயக்குவேன் என்று கூறியுள்ளார் சட்டம் à®'ரு இருட்டறை மூலம் இயக்குநராகும் சினேகா பிரிட்டோ.

எஸ்.ஏ.சந்திரசேகரன் டைரக்டு செய்து, விஜயகாந்த் நடித்து, 30 வருடங்களுக்கு முன்பு வெளிவந்த படம், சட்டம் à®'ரு இருட்டறை.' இந்த படம், அதே பெயரில் மீண்டும் தயாராகியிருக்கிறது.

ஆனால் இந்த முறை எஸ்.ஏ.சந்திரசேகரன் இயக்காமல், தன் பேத்தி சினேகா பிரிட்டோவை இயக்குநராக அறிமுகப்படுத்துகிறார். சினேகாவின் தாயார் விமலாராணிதான் படத்தின் அதிகாரப்பூர்வ தயாரிப்பாளர்.

தமன், ரீமாசென், பிந்து மாதவி, பியா ஆகியோர் நடித்துள்ள இந்தப் படத்தின் அறிமுக நிகழ்ச்சி நேற்று நடந்தது. அதில், டைரக்டர் எஸ்.ஏ.சந்திரசேகரன் கலந்துகொண்டு தனது பேத்தி சினேகா பிரிட்டோ, மற்றும் நடிகர்-நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்களை அறிமுகம் செய்தார்.

எஸ்ஏசி கூறுகையில், "சட்டம் à®'ரு இருட்டறை படம் தமிழில் வெற்றி பெற்றபின், தெலுங்கில் சிரஞ்சீவி நடித்து தயாரானது. கன்னடத்தில், சங்கர் நாக் நடித்தார். மலையாளத்தில், கமல்ஹாசன் நடித்தார். இந்தியில், அமிதாப்பச்சன், ரஜினிகாந்த் இருவரும் நடித்தார்கள்.

இந்த படத்தின் டைரக்டர் சினேகா பிரிட்டோ, என் அக்காள் மகளின் மகள். அவள் பிறந்து வளர்ந்தது, எங்கள் வீட்டில்தான். குழந்தையாக இருந்தபோது, என் மார்பில்தான் தூங்குவாள். கொஞ்சம் வளர்ந்த பிறகு, ''தாத்தா கதை சொன்னால்தான் தூங்குவேன்'' என்பாள்.

நானும் ஏதாவது கதை சொல்லி தூங்க வைப்பேன். சின்ன வயதில் இருந்தே கதை கேட்ட அனுபவம்தான் அவளை டைரக்டர் ஆக்கியிருக்கிறது என்று கருதுகிறேன்.
பழைய 'சட்டம் à®'ரு இருட்டறை' கருவை மட்டும் எடுத்துக் கொண்டு, காதலுக்கு முக்கியத்துவம் கொடுத்து, இந்த படத்தை உருவாக்கியிருக்கிறோம்,'' என்றார்.

சினேகா பிரிட்டோ

சினேகா பிரிட்டோ பேசுகையில், ''படம் இயக்குவது அத்தனை சாதாரண சமாச்சாரமல்ல. இதில் ரீமாசென் சம்பந்தப்பட்ட 'சேசிங்' காட்சியை படமாக்க மிகவும் சிரமப்பட்டேன். எங்க தாத்தா (எஸ்.ஏ.சந்திரசேகரன்) உதவியுடன் படமாக்கி முடித்தேன். படத்தில் தாத்தா, போலீஸ் அதிகாரியாக நடித்திருக்கிறார். தாத்தாவைப் போலவே தொடர்ந்து படங்களை இயக்குவேன்," என்றார்.

 

அஜீத்துக்கு மீண்டும் முதுகுத் தண்டில் அறுவைச் சிகிச்சை?

Ajith Undergo Surgery   

நடிகர் அஜீத்துக்கு மீண்டும் முதுகில் அறுவைச் சிகிச்சை நடக்கவிருக்கிறது. சண்டைக் காட்சியின்போது ஏற்பட்ட விபத்தில் அவரது முதுகுத் தண்டுவடத்தில் பிரச்சினை ஏற்பட்டிருப்பதால் இந்த அறுவைச் சிகிச்சை என தகவல்கள் தெரிவிக்கின்றன.

ரேஸ் வீரரான அஜீத், ஏற்கெனவே விபத்துக்களைச் சந்தித்தவர். பல முறை முதுகில் அவருக்கு அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. இதனை அவரே தெரிவித்துள்ளார்.

தற்போது விஷ்ணுவர்த்தனின் பெயரிப்படாத படத்தில் நடித்துவரும் அஜீத், கடந்த வாரம் மும்பையில் நடந்த படப்பிடிப்பில் à®'ரு சண்டைக் காட்சியின் மீண்டும் விபத்துக்குள்ளானார்.

அதில் அவருக்கு காலில் அடிபட்டது. முதுகில் தண்டுவடத்தில் எலும்பு விலகியுள்ளதாக மருத்துவர்கள் கூறியுள்ளனராம்.

சமீபத்தில் இயக்குநர் ஜோதிகிருஷ்ணா திருமண வரவேற்புக்கு வந்திருந்த அவர் காலைத் தாங்கித் தாங்கி நடந்து வந்தார்.

அவரது உடல்நிலை இயல்புக்குத் திரும்ப கண்டிப்பாக அறுவை சிகிச்சை செய்தே ஆகவேண்டும் என அவரது குடும்ப டாக்டர் வற்புறுத்தியதாக தெரிகிறது.

டாக்டர்களின் பேச்சை மீறி, தொடர்ந்து படப்பிடிப்பில் ஈடுபட்டுக் கொண்டிருந்த அஜீத், வரும் டிசம்பர் பத்து முதல், சிறுத்தை சிவா இயக்கவுள்ள படத்தில் கலந்துகொள்ள இருப்பதால், அதற்கு முன்பு சிகிச்சை செய்துகொள்ள சம்மதித்ததாகத் தெரிகிறது.

 

கிசு கிசு - பீதியில் இயக்கம் : நழுவும் இசை

Kodambakkam Kodangi நல்ல காலம் பொறக்குது...
நல்ல காலம் பொறக்குது...

சுவேதா நடிகை டெலிவரி காட்சி எவ்ளோ பரபரப்பாச்சோ அந்தளவுக்கு பிரச்னையாவும் ஆயிடுச்சாம்... ஆயிடுச்சாம்... அந்த சீன் இருந்தா படத்த திரையிட மாட்டேன்னு  தியேட்டர் காரங்கள்ல ஒரு குரூப் கொடி பிடிக்குதாம். யாராவது எதிர்ப்பு தெரிவிச்சா ஆக்ஷன் எடுப்பேன்னு சினிமா மினிஸ்டரே சுவேத காட்சிக்கு சப்போர்ட் பண்ணாராம். ஆளும்கட்சியோட இன்னொரு முக்கிய அதிகாரி சுவேத காட்சிக்கு எதிர்ப்பு தெரிவிச்சிருக்காராம். பிரச்னை சினிமாவோட முடிஞ்சா சரி. அரசியல்வாதிங்க மோதலா மாறுனா மேட்டர் சிக்கலாயிடும்னு ஒருபக்கம் பிளஸியான இயக்கம் பீதில இருக்காராம்... இருக்காராம்...

வர்மா இயக்கம் காணாமபோன ஃபிரண்டை வருஷ கணக்கா தேடிட்டிருக்காராம்... இருக்காராம்... காலேஜ் படிச்சப்ப நெருக்கமா இருந்த பிரண்டு ஒரு பெண்ண காதலிச்சாரு. அவர் ஸ்டோரிய பாலிவுட் படமா இயக்கம் எடுத்தாராம். இத ஃபிரண்டுகிட்ட சொல்லணும்னு அவர பல வருஷமா தேடியும் கெடக்கலயாம். இந்த விஷயம் மனச உறுத்திட்டே இருக்குன்னு இண்டஸ்ரிகாரங்கிட்ட சொல்லி வருத்தப்படுறாராம்... வருத்தப்படுறாராம்...

விஜய இசைக்கு திடீர்னு நடிப்பாசை வந்து நடிச்சதுல சக்சஸ் ஆயிடவே தொடர்ச்சியா நடிக்க முடிவு பண்ணிட்டாராம்... பண்ணிட்டாராம்... இதனால புதுசா வர்ற படங்களுக்கு இசை அமைக்கற வாய்ப்ப ஏத்துக்க தயங்குறாராம்... தயங்குறாராம்... மூணு படம் நடிக்க வேண்டி இருக்கு. அதனால இசை அமைக்க¤றதுக்கு டைம் க¤டைக்காது. வேற இசை இயக்கத்த பாத்துக்கங்கனு நைசா நழுவுறாராம்... நழுவுறாராம்...
 

ஹீரோவுடன் குத்தாட்டம் போட ஷூட்டிங்கை நிறுத்தினார் அசின்

Actress Asin stopped shooting and started dance ஹீரோவுடன் கவர்ச்சி நடிகை குத்தாட்டம் போட்டபோது தானும் ஆட வேண்டும் என்று முரண்டு பிடித்தார் அசின். பிறகு அவர் ஆடியகாட்சி படமானது. அக்ஷய்குமார் ஜோடியாக அசின் நடிக்கும் இந்திபடம் 'கில்லாடி 786'. இப்படத்துக்காக 'பால்மா' என்ற பாடலில் கவர்ச்சி நடிகை கிளாடியா சியல்சாவுடன் அக்ஷய் குமார் நடனம் ஆடுவதுபோன்றும். அதை பொறாமையுடன் அசின் பார்ப்பதுபோலவும் காட்சி அமைக்கப்பட்டது. இதற்காக மும்பை ஸ்டுடியோவில் கண்கவர் பிரமாண்ட செட் போடப்பட்டது. பாடல் காட்சி தொடங்கியது. அசின் அதை ரசிப்பதுபோல் சீன் எடுத்தார் இயக்குனர். திடீரென்று எழுந்த அசின். காட்சியை நிறுத்தும்படி கூறினார்.

ஷாக் ஆன இயக்குனர் அருகில் வந்து, 'என்ன விஷயம்' என்று கேட்டபோது, 'இந்த பாடலை ஏன் எனக்கு முதலிலேயே கேட்க கொடுக்கவில்லை. பாடல் இவ்வளவு சூப்பராக இருக்கிறது. நிச்சயம் ஹிட்டாகும். அதில் ஹீரோவுடன் நான் ஆடாமல் வேறு நடிகை மட்டும் ஆடினால் நன்றாக இருக்காது. எனவே காட்சியை மாற்றுங்கள். நானும் அந்த பாடல் காட்சியில் ஆடுவதுபோல் சீனை அமையுங்கள்' என்றார். இதைக் கேட்டு இயக்குனர் கையை பிசைந்தபடி நின்றார். ஆனால் அசின் பிடிவாதம் பிடித்தார். இதையடுத்து அதேபாடலில் கனவு காட்சியில் அக்ஷய்குமாருடன் அசினும் நடனம் ஆடுவதுபோல் படமாக்கினார். இதுபற்றி பட தயாரிப்பாளர் ராகேஷ் உபாத்யாயிடம் கருத்துகேட்டபோது பதில் சொல்ல மறுத்துவிட்டார்.
 

நிர்வாண காட்சியில் நடித்தேனா? : ஆண்ட்ரியா கோபம்

Pretended nude scene? : Andrea angry என்றென்றும் புன்னகை படத்தில் நிர்வாண காட்சியில் ஆண்ட்ரியா நடித்ததாக தகவல் பரவியதால் கோலிவுட்டில் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து ஆண்ட்ரியா கூறியதாவது: இதுபோன்ற வதந்திகளுக்கு நான் பதில் சொல்லவே விரும்பவில்லை. இருந்தாலும் நான் சம்பந்தப்பட்ட விஷயம் என்பதால் சொல்கிறேன். இதுவரை நடித்த படத்தில் கவர்ச்சியாக கூட நான் நடித்ததில்லை.

எனக்கு என சில பால¤சி இருக்கிறது. கேரக்டருக்கு தேவையென்றால் கவர்ச்சியாக நடிக்கலாம். அதற்காக நிர்வாண காட்சியில் எல்லாம் நான் நடிக்க மாட்டேன். என்றென்றும் புன்னகை படத்தை பொருத்தவரை இந்த படத்தில் அப்படியொரு காட்சியே இல்லை. இந்த படத்தில் மாடலிங் துறையை சேர்ந்த பெண் வேடம் எனக்கு. ஒரு காட்சியில் உடல் தோல் நிறத்திலான ஆடை அணிந்திருப்பேன்.

அதை பார்த்த யாரோ நிர்வாண காட்சியில் நடித்துவிட¢டதாக கிளப்பிவிட்டிருக்கிறார்கள். இவ்வாறு ஆண்ட்ரியா கூறினார். என்றென்றும் புன்னகை பட இயக்குனர் அஹமத் கூறுகையில், இந்த படத்துக்கு யூ சான்றிதழ் வாங்க வேண்டும் என்பதுதான் எனது விருப்பம். அதற்கேற்ப கதையும் காட்சிகளும் இருக்கிறது. அப்படி இருக்கும்போது இதில் எப்படி நான் நிர்வாண காட்சியை சேர்ப்பேன்? என்றார்.
 

பெங்களூர் மாணவி தமிழில் அறிமுகம்

The introduction of a student in Bangalore பெங்களூர் மாணவி தமிழ் படத்தில் அறிமுகமாகிறார். கிருஷ்ணகிரி யில் நடந்த உண்மை சம்பவத்தை மையமாக கொண்டு உருவாகிறது 'நீ என் உயிரே'. இப்படம் பற்றி இயக்குனர் விகாஷ் லலித்ராஜா கூறியது. குடும்பம் வாழ்வதும், வீழ்வதும் பெண்கள் கையில்தான் இருக்கிறது. இதுதான் படத்தின் கரு. நவரசன் ஹீரோ.

கதை திரைக்கதை, தயாரிப்பு பொறுப்பையும் இவரே ஏற்றுள்ளார். பெங்களூரை சேர்ந்த மாணவி வைசாலி ஹீரோயினாக அறிமுகமாகிறார். இதன் ஷூட்டிங் பெங்களூரில் நடந்து வருகிறது. கிருஷ்ணகிரி, ஓசூர், சேலம், தர்மபுரி ஆகிய இடங்களிலும் ஷூட்டிங் நடக்கிறது. விஜய் மந்த்ரா இசை. ஜீவா ஆண்டனி ஒளிப்பதிவு. பிறைசூடன் பாடல். இவ்வாறு இயக்குனர் கூறினார்.
 

சிகிச்சை முடிந்து மரியான் படப்பிடிப்புக்கு திரும்பினார் தனுஷ்!

Dhanush Returns Mariyan Shoot

சென்னை: படப்பிடிப்பில் ஏற்பட்ட விபத்து காரணமாக சிகிச்சை பெற்று வந்த தனுஷ், இப்போது குணமடைந்து மீண்டும் படப்பிடிப்புக்குத் திரும்பியுள்ளார்.

இந்தியில் ராஞ்ஜனா என்ற படத்தில் நடித்தபோது தனுஷுக்கு விபத்து ஏற்பட்டு காயம் அடைந்தார். தோள்பட்டை மற்றும் முதுகு தண்டில் காயம் ஏற்பட்டு அவதிப்பட்ட தனுஷுக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வந்தனர். இதையடுத்து படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டன.

தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த தனுஷின் உடல் நிலை இப்போது முழுமையாக குணமடைந்துள்ளது. இதையடுத்து 'மரியான்' படத்தில் நடிக்க துவங்கியுள்ளார்.

பரத்பாலா இயக்கும் இப்படத்தில் பார்வதி மேனன் நாயகியாக நடிக்கிறார். படப்பிடிப்பு நாகர்கோவிலில் மீண்டும் தொடங்கியது.

இதுகுறித்து தனுஷ் கூறுகையில், "முதுகு தண்டு காயம் குணமான பிறகு மீண்டும் 'மரியான்' படத்தில் நடிக்க வந்துள்ளேன். நாகர்கோவில் கடற்கரை பகுதிகளில் நடக்கும் இதன் இறுதி கட்ட படப்பிடிப்பில் பங்கேற்று நடித்து வருகிறேன்," என்றார்.

 

கங்னம் ஸ்டைல் டான்ஸ் ஆடிய பிரபுதேவா! 40 லட்சம் வீடு பரிசாக வென்ற கார்த்திக்!!

Ungalil Yaar Adutha Prabu Deva 2 Title Winner Karthik

கோயம்புத்தூரில் நடைபெற்ற ‘உங்களில் யார் அடுத்த பிரபுதேவா சீசன் 2' இறுதிப்போட்டியில் சிறப்பு நடுவராக பங்கேற்ற விழா நாயகன் பிரபுதேவா கங்னம் ஸ்டைல் நடனமாடி ரசிகர்களை உற்சாகப்படுத்தினார். இந்த நிகழ்ச்சியில் பிரபுதேவா பட்டத்துடன் நடனப்புயல் பிரபுதேவாவின் கையால் 40 லட்சம் மதிப்புள்ள வீட்டினை பரிசாக வென்றார் கார்த்திக்.

விஜய் டிவியில் கடந்த ஒரு ஆண்டுகாலமாக நடைபெற்று வந்த உங்களில் யார் அடுத்த பிரபுதேவா சீசன் 2 நிகழ்ச்சி நவம்பர் 11ம் தேதி இறுதிக்கட்டத்தை எட்டியது. கோவை இந்துஸ்தான் கல்லூரியில் ஆயிரக்கணக்காக ரசிகர்களுக்கு மத்தியில் நடைபெற்ற இந்த நடன நிகழ்ச்சி கடந்த ஞாயிறன்று (நவம்பர் 25) விஜய் டிவியில் காலை 11 மணிக்கு ஒளிபரப்பானது.

இறுதிப்போட்டியில் கார்த்திக், ஜாபர், விஜய்வர்மா, சந்த்ரு, ஜெயந்த் ஆகிய ஐந்து போட்டியாளர்கள் பங்கேற்றனர். இரண்டு சுற்றுக்களிலும் ஒவ்வொரு போட்டியாளரும் புதிது புதிதான தீம்களில் ஆடி தங்களின் திறமையை வெளிப்படுத்தினர்.

நிகழ்ச்சியில் நடுவர்களாக வந்திருந்த ஸ்ரீதர், காயத்ரி ரகுராம், அசோக்ராஜா ஆகியோர் கங்னம் ஸ்டைல் நடனம் ஆடி நடனப்போட்டியை களை கட்டச் செய்தனர். நிகழ்ச்சியின் சிறப்பு நடுவராக இறுதிப்போட்டிக்கு நடிகர் பரத் வந்திருந்து போட்டியாளர்களையும், ரசிகைகளையும் உற்சாகப்படுத்தினார்.

சீசன் 1 நிகழ்ச்சியில் பிரபுதேவா பட்டம் வென்ற ஷெரீப் நடனமாடியதோடு மட்டுமல்லாது போட்டியாளர்களுக்கு பரிசு வெல்வதற்கான ஆலோசனைகளை கூறினார்.கடல் படத்தின் ‘நெஞ்சுக்குள்ளே' பாடலுக்கு நடனமாடி ரசிகர்களை உற்சாகப்படுத்தினார் நடிகை பூர்ணா.

இந்த நிகழ்ச்சியின் நாயகன் இந்திய மைக்கேல் ஜாக்சன் என்று புகழப்படும் பிரபுதேவா தனது இரண்டு மகன்களுடன் பங்கேற்றார். ரசிகர்களை உற்சாகப்படுத்தும் வகையில் "கோ கோ கோவிந்தா"... பாடலுக்கும் "கங்னம் ஸ்டைல்" பாடலுக்கும் நடனமாடினார். எனக்கு கோவை ரொம்ப பிடிக்கும் இங்கு சூட்டிங்கிற்கு வரும்போது சாலையோரங்களில் இட்லி சாப்பிடுவேன் ரொம்ப டேஸ்ட்டி என்று கூறி கோவை மக்களுக்கு ஐஸ் வைத்தார்.

உடம்பெல்லாம் சாம்பல் பூசி அகோரி ஸ்டைல் நடனமாடிய கார்த்திக் ப்ரீ ஸ்டைல் சுற்றில் சர்வதேசத் தரத்திலான நடனத்தை வெளிப்படுத்தினார். ரசிகர்களை மட்டுமல்லாது நடனப்புயலையும் கவர்ந்த கார்த்திக், பிரபுதேவாவின் கையால் உங்களில் யார் அடுத்த பிரபுதேவா பட்டம் வென்றதோடு 40 லட்சம் ரூபாய் மதிப்புள்ள வீட்டினை பரிசாக பெற்றார். சந்த்ரு இரண்டாம் இடத்தை பிடித்து ரூ10 லட்சத்திற்கான காசோலையை பரிசாகப் பெற்றார். ஜாபருக்கு இந்த நிகழ்ச்சியில் மூன்றாம் இடத்தை பெற்றார்.