மார்ச் 2 முதல் இங்கிலாந்தில் கோச்சடையான் ஷூட்டிங்

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
வரும் மார்ச் 2ம் தேதி முதல் இங்கிலாந்தில் 'கோச்சடையான்' ஷூட்டிங் நடக்கிறது என்றார் சவுந்தர்யா. சூப்பர் ஸ்டார் ரஜினி, லதா தம்பதிக்கு நேற்று 31வது ஆண்டு திருமண விழா. போயஸ்கார்டன் வீட்டில் எளிமையான கொண்டாட்டத்துடன் விழா நடந்தது. நெருக்கமான நண்பர்கள் தம்பதிகளுக்கு வாழ்த்து கூறினார்கள். ஐஸ்வர்யா தனது குழந்தைகளுடன் நேரில் சென்று பெற்றோருக்கு வாழ்த்து தெரிவித்து ஆசி பெற்றார். இதுபற்றி டுவிட்டரில் ஐஸ்வர்யா கூறும்போது,''ஞாயிறு மாலை அப்பா, அம்மாவுடன் மகிழ்ச்சியை பகிர்ந்துகொண்டேன். 31 ஆண்டுகள் இணைபிரியாத தம்பதிகளாக வாழ்ந்து அசத்தி உள்ளனர். இருவரையும் நான் மனமாரா விரும்புகிறேன்'' என்று குறிப்பிட்டுள்ளார்.

'கோச்சடையான்' பட பணிக்காக ஹாங்காங் சென்றிருக்கும் ரஜினியின் இளையமகளும், இயக்குனருமான சவுந்தர்யா டுவிட்டரில் கூறும்போது, ''சிறந்த தம்பதிகளாக அம்மாவும், அப்பாவும் வாழ்கின்றனர். கோச்சடையான் பணிக்காக பட குழுவினருடன் ஹாங்காங்கில் இருக்கிறேன். பணிகள் சிறப்பாக நடக்கிறது. மார்ச் 2ம் தேதி முதல் இங்கிலாந்தில் ஷூட்டிங் நடக்கிறது'' என்று கூறி உள்ளார்.


 

திகில் படத்தில் நடுங்கிய சதா

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
சதா நடித்த இந்தி திகில் படம் தமிழுக்கு வருகிறது. 'சில காட்சிகளில் நிஜமாகவே நடுங்கிவிட்டேன்' என்றார் சதா. இதுபற்றி அவர் கூறியதாவது: 'ஜெயம்' படம் தொடங்கி 'அந்நியன்', 'பிரியசகி', 'வர்ணஜாலம்' உள்ளிட்ட படங்களில் நடித்தேன். பி.வாசு இயக்கத்தில் நடித்த 'புலிவேஷம்' சில மாதங்களுக்கு முன் ரிலீஸ் ஆனது. இந்தியில் 'கிளிக்' என்ற படத்தில் கிளாமராக நடித்திருக்கிறேன். இது தமிழில் 'கிளிக் 3' என்ற பெயரில் ரிலீஸ் ஆகிறது. சங்கீத் சிவன் இயக்கி இருக்கிறார். சினேகா உல்லால், ரியா சென் ஆகியோரும் நடித்திருக்கிறார்கள். இதில் மாடல் அழகியாக நடித்திருக்கிறேன். என் வேடம் கிளாமராகவும், சவாலாகவும் அமைந்தது. திகில் படமான இதில் சில காட்சிகள் நடிக்கும்போது நிஜமாகவே நடுங்கி பயந்திருக்கிறேன்.

புது அனுபவமாக இருந்தது. தமிழ், இந்தி. தெலுங்கு 3 மொழிகளிலும் என்னை ரசிகர்கள் ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள். இந்த துறையில் 90 சதவீதம் திருப்தி இருக்கிறது. ஸ்டார் அந்தஸ்து என்பது என்னைப் பொறுத்தவரை எட்டாக்கனியாக இருக்கவில்லை. பெரிய இயக்குனர், பெரிய நடிகர்களுடன் நடித்திருக்கிறேன். நிறைய படங்கள் வந்தாலும் தேர்வு செய்துதான் ஒப்புக்கொள்கிறேன். கமர்ஷியல் ஹீரோயினாக நடிக்கவே விரும்புகிறேன்.


 

இந்திக்காக தமிழ் வாய்ப்பை இழக்க மாட்டேன்

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
இந்திப்பட வாய்ப்புக்காக, தமிழ் படங்களை இழக்க மாட்டேன் என்று சமந்தா கூறினார். அவர் மேலும் கூறியதாவது: தமிழ்தான் என்னை அறிமுகப்படுத்தியது. ஆனால் வாழ்க்கை கொடுத்தது தெலுங்கு. எனவே இரண்டும் எனக்கு இரு கண்கள் மாதிரி. மணிரத்தினம், கவுதம் மேனன் என்று  நான் உயர்வாக மதிக்கும் இயக்குனர்கள் படத்தில் இவ்வளவு சீக்கிரம் நடிப்பேன் என்று நினைக்கவில்லை.இடையில் இரண்டு இந்திப்பட வாய்ப்புகள் வந்தது. தொடர்ச்சியாக நான்கு மாதங்கள் கால்ஷீட் கேட்டார்கள். கொடுத்தால் ஒரு தமிழ் படத்தையும், ஒரு தெலுங்கு படத்தையும் இழக்க வேண்டியது வரும். அதனால் மறுத்து விட்டேன். இந்தி வாய்ப்பை விட தமிழ், தெலுங்கில் முக்கியமான இடத்தை பிடிக்க வேண்டும் என்பதே  ஆசை. தெலுங்கில் முன்னணி ஹீரோக்களுடன் நடிப்பது போன்று தமிழிலும் பெரிய ஹீரோக்களுடன் நடிக்க வேண்டும் என்பது கனவு. அதுவும் விரைவில் நிறைவேறும் என்ற நம்பிக்கை இருக்கிறது.


 

அனன்யா-ஆஞ்சநேயன் திருமணம் நடக்குமா?

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
'ஆஞ்சநேயன்தான் என் கணவர். எங்கள் திருமண தேதி விரைவில் முடிவாகும்' என்றார் அனன்யா. 'நாடோடிகள்', 'எங்கேயும் எப்போதும்' உள்ளிட்ட படங்களில் நடித்திருப்பவர் அனன்யா. இவருக்கும் கேரளாவை சேர்ந்த தொழில் அதிபர் ஆஞ்சநேயன் என்பவருக்கும் சமீபத்தில் நிச்சயதார்த்தம் நடந்தது. ஆனால், ஆஞ்சநேயன் ஏற்கனவே திருமணம் ஆனவர் என்பதால் இத்திருமணம் நடக்காது என்று தகவல் வெளியானது. இதை மறுத்த அனன்யா, 'ஆஞ்சநேயனைத்தான் மணப்பேன்' என்றார். அவர் மீண்டும் அதை உறுதி செய்து நேற்று அளித்த பேட்டி:

எங்களைப் பற்றி ஆதாரமில்லாமல் வதந்தி பரப்புகிறார்கள். ஆஞ்சநேயன்  திருமணம் ஆகி விவாகரத்து பெற்றவர் என்பதை என்னிடம் கூறி இருக்கிறார். என்னை ஏமாற்றவில்லை. இருவரும் விரும்பியே திருமணம் செய்ய முடிவு செய்தோம். பத்திரிகைகளில் வந்ததுபோல் அவருக்கு குழந்தைகள் கிடையாது. சிறந்த நணபரான அவருடன் என் உறவு உறுதியாக இருக்கிறது. ஆஞ்சநேயன் பெற்றோரும், என் பெற்றோரும் எங்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. விரைவில் திருமண தேதி முடிவாகும். எனக்கும் இதயம் இருக்கிறது. இதில் எங்கள் குடும்பம் சம்பந்தப்பட்டிருக்கிறது. ஒவ்வொரு நாளும் காலையில் எழுந்து நாங்கள் வேலைக்கு செல்ல வேண்டும். இதை மற்றவர்கள் மனதில் வைத்துக்கொண்டு எழுத வேண்டும். இப்போதுகூட மலையாள பட ஷூட்டிங்கில் நடித்துக்கொண்டிருக்கிறேன். இவ்வாறு அனன்யா கூறினார்.


 

ரெடியாகிறது முனி 3

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
லாரன்ஸ் இயக்கி நடித்த 'முனி' மற்றும் முனியின் 2ம் பாகமான 'காஞ்சனா' ரிலீசாகி வெற்றிபெற்றது. இதையடுத்து 'ரிபெல்' தெலுங்கு படத்தை இயக்கி, இசையமைக்கும் அவர், ஜூன் மாதம் இப்படத்தை ரிலீஸ் செய்கிறார். பிறகு 'முனி 3ம் பாகம்' உருவாக்குகிறார். இதுகுறித்து லாரன்ஸ் கூறியதாவது: ஏப்ரலில், முனி 3ம் பாகத்தின் ஷூட்டிங்கை தமிழ், தெலுங்கில் தொடங்குகிறேன். டைட்டில் முடிவாகவில்லை. இயக்கி நடிக்கும் நான், என் தம்பி வினோவை அறிமுகம் செய்கிறேன். அவரும், நானும் சேர்ந்து ஆடுகின்ற நடனக்காட்சி ஹைலைட்டாக இருக்கும்.


 

நல்ல வேடத்துக்கு காத்திருக்கிறார் ஸ்ருதி

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
'காதலர் குடியிருப்பு', 'ஆண்மை தவறேல்' படங்களில் நடித்தவர் ஸ்ருதி. அவர் கூறியதாவது: கன்னடப் படங்களில் நடித்தபோது, தமிழில் அழைப்பு வந்தது. எனது நடிப்பில் இரு படங்கள் ரிலீசானது. இப்போது 'அமரா'வில் நடிக்கிறேன். இதையடுத்து, தமிழில் அதிக கவனம் செலுத்த விரும்பி,  சென்னையில் குடியேறியுள்ளேன். நல்ல வேடங்களுக்காக காத்திருக்கிறேன். சினிமா உலகம் போட்டி நிறைந்ததுதான். நான் யாரையும் போட்டியாக நினைக்கவில்லை. வழக்கம்போல காதலிக்கவும் டூயட் பாடவும் அல்லாமல் கதையை நகர்த்தி செல்லும் கேரக்டரில் நடிக்க ஆர்வமாக இருக்கிறேன். அப்படியொரு வேடத்துக்கு காத்திருக்கிறேன்.


 

ஸ்லம்டாக் மில்லினர் தான்வி தமிழ் ஹீரோயின் ஆனார்

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
ஆஸ்கர் விருது பெற்ற 'ஸ்லம்டாக் மில்லினர்' படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்த தான்வி லோன்கர் தமிழ் சினிமாவில் ஹீரோயின் ஆனார். முன்னாள் பள்ளித் தோழர்கள் சிலர் இணைந்து, யூ அன்ட் மீ புரொடக்ஷன் என்ற நிறுவனம் மூலம் தயாரிக்கும் படம் 'காதல்தீவு'. இதில் 'அழகி' படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்த ராம்சரண் ஹீரோவாகவும் 'ஸ்லம்டாக் மில்லினர்' குழந்தை நட்சத்திரம் தான்வி லோன்கர் ஹீரோயினாகவும் அறிமுகமாகிறார்கள். மனோஜ் கே.பாரதி வில்லனாக நடிக்கிறார். மிதுன் ஈஸ்வர் இசை. முகேஷ்ஞானி ஒளிப்பதிவு. 'இது காதல் கதை. அதோடு சுற்றுலாத் தலங்களில் நடக்கும் சில திகிலூட்டும் சம்பவங்களையும் காதலோடு இணைத்து சொல்கிறோம்" என்றார் படத்தை இயக்கும் வெற்றி வீரன். ஹீரோயினாக நடிப்பது பற்றி தான்வி கூறும்போது, "கன்னட படம் ஒன்றில் நடிக்க வந்தபோது வெற்றி வீரன் அறிமுகமானார். அவரது கதைக்கு நான் பொருத்தமாக இருந்ததால் இந்த வாய்ப்பு கிடைத்தது. ஹாலிவுட் படத்தில் நடித்ததால் ஆங்கிலம் பேசக் கற்றுக்கொண்டேன். தமிழ் வசனங்களை ஆங்கிலத்தில் எழுதி மனப்பாடம் செய்கிறேன். 16 வயதில் ஹீரோயினாகியிருக்கிறேன். திறமையை வளர்த்து தமிழ் ரசிகர்கள் மனதில் இடம் பிடிப்பேன்" என்றார்.


 

மூக்கு ஆபரேஷன் செய்தது ஏன்?

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
சில வருடங்களுக்கு முன் மூக்கு ஆபரேஷன் செய்து கொண்ட தகவலை இப்போதுதான் வெளியிட்டுள்ளார் ஸ்ருதி ஹாசன். நடிகைகள் பலர் முக அழகை கெடுக்கும் வகையில் இருக்கும் மூக்கு பகுதியை அறுவை சிகிச்சை மூலம் சரிசெய்வது வாடிக்கை. ஆனால் அதை மறுத்து விடுவதுண்டு. ஆனால் அது பற்றி வெளிப்படையாக கூறியிருக்கிறார் ஸ்ருதி. அவர் கூறியதாவது: சினிமாவில் நடிக்க வருவதற்கு முன் எனக்கு மூச்சுவிடுவதில் சிரமம் இருந்தது. இதனால் இரவில் தூங்கும்போது அவஸ்தைபடுவேன். இதுபற்றி ஆலோசித்தபோது மூக்கு பகுதியில் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று கூறினார்கள். மூக்கில் ஆபரேஷன் செய்தால் குரல் மாறிவிடும் என்று சிலர் பயமுறுத்தினார்கள். இதனால் முதலில் யோசித்தேன். அப்படி எந்த மாற்றமும் இருக்காது என்று தெரிந்தபின் அறுவை சிகிச்சைக்கு ஒப்புக்கொண்டேன். இந்தியில் 'லக்கி' என்ற படத்தில் நடிப்பதற்கு முன்பே அமெரிக்கா சென்று மூக்கு அறுவை சிகிச்சை செய்துகொண்டேன். இப்போது நிம்மதியாக இருக்கிறேன். இரவிலும் நிம்மதியாக தூங்குகிறேன். இவ்வாறு ஸ்ருதி ஹாசன் கூறினார்.


 

நடிகை என்றால் எல்லா வேடத்திலும் நடிக்க வேண்டும்

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
எந்த ஹீரோயினுக்கும் அம்மாவாக நடிக்க மாட்டேன் என்றார் மேக்னா ராஜ். இது பற்றி அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது: சரத்குமாருடன் நான் நடித்துள்ள 'நரசிம்மன் ஐபிஎஸ்' என்ற படம் வெளியாகிறது. இது மலையாளத்தில் 'அச்சன்டே ஆண்மக்கள்' என்ற பெயரில் உருவானது. கோவை போலீஸ் அதிகாரியாக சரத் நடிக்கிறார். 2 வயது குழந்தைக்கு தாயாக வேடம் ஏற்றிருக்கிறேன். 'அம்மா வேடத்தில் நடிக்கிறீர்களே' என்கிறார்கள். நடிகை என்றால் எல்லா வேடத்திலும் தன்னை நிரூபிக்க வேண்டும். இதில் நடிப்புக்கு அதிக வாய்ப்பு உள்ளது. 2 வயது குழந்தைக்குத்தான் தாயாக நடிக்கிறேன். எந்த ஹீரோயினுக்கும் அம்மாவாக நடிக்கவில்லை, அப்படி நடிக்கவும் மாட்டேன். ஏனென்றால் நானே ஹீரோயின்தான். இப்படத்தை சந்திரசேகர் இயக்கி இருக்கிறார். ஜாஸிகிப்ட் இசை. அடுத்து 'நந்தா நந்திதா' வெளியாக உள்ளது. இவ்வாறு மேக்னா ராஜ் கூறினார்.


 

சில்க் வேடத்தில் நடிக்க தயங்கினேன்

bollywood news, latest bollywood news, tamil bollywood news, bollywood latest news, bollywood masala, cinema news
வித்யாபாலன் கூறியதாவது: சில்க் ஸ்மிதா வாழ்க்கை வரலாறு படத்தில் நடிக்க வேண்டும் என்ற வாய்ப்பு என்னை தேடி வந்தது. அப்படத்தில் நடிப்பதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட தயக்கம் காட்டினேன். எதிர்பார்த்ததைவிட படம் ஹிட் ஆனது. படத்தின் பெயர்தான் டர்ட்டி (அழுக்கு) என்றிருந்ததே தவிர அழுக்கான படம் கிடையாது. இதில் நல்ல கருத்து சொல்லப்பட்டிருந்தது. சில்க் ஸ்மிதாவை வாழ்க்கையில் உயர்த்துவதாக கூறி அவரை தவறான வழியில் பயன்படுத்தி சீரழித்திருக்கிறார்கள். அதற்கு ஒரு முடிவும் இருந்தது. அப்படத்தை பார்த்தவர்கள் அதை உணர்ந்திருப்பார்கள். சில்க் போல் வேடம் ஏற்று நடித்தேனே தவிர என் வாழ்க்கை அவரது வாழ்க்கைபோல் கிடையாது. அதிர்ஷ்டவசமாக அவரைபோல் என்னை யாரும் சீரழிக்கவில்லை. திரையுலகினர் எனக்கு ஆதரவாக இருந்தார்கள். விரைவில் நான் திருமணம் செய்துகொள்வேன் என்பதுபோல் எழுதுகிறார்கள். என்னைப் பொறுத்தவரை இப்போதைக்கு திருமணம் செய்து கொள்ளும் எண்ணம் இல்லை. இவ்வாறு வித்யாபாலன் கூறினார்.


 

தயாரிப்பாளர் ஆகிறார் விஜய்

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
துப்பாக்கி பட ஷூட்டிங்கில் பிஸியாக இருக்கும் இளைய தளபதி விஜய் தன்து தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கிய 'சட்டம் ஒரு இருட்டறை' படத்தை ரீமேக் தயாரிப்பு பொறுப்பை ஏற்றிருக்கிறார் விஜய். இந்த படத்தில் தானே நடிக்காமல் வேறு ஒரு ஹீரோவை வைத்து படம் பண்ண வேண்டும் என்பதில் விஜய் உறுதியாக இருந்தாராம். இதனையடுத்து நடிகர் பிரபுவின் மகன் விக்ரம் பிரபுவை ஹீரோவாக நடிக்க வைக்க உள்ளாராம் விஜய். விக்ரம் பிரபுக்கு ஜோடியாக கார்த்திகா நடிக்கிறாராம். படத்தை புது இயக்குனர் ரமேஷ் இயக்குகிறார்.