சென்னை: நடிகை ஸ்ரேயா நடித்துள்ள ஆங்கிலப் படமான மிட்நைட் சில்ட்ரனை இந்தியாவில் ரிலீஸ் செய்ய தடைவிதிக்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.
இயக்குனர் தீபா மேத்தா பிரபல நாவல் ஆசிரியர் சல்மான் ருஷ்டியின் நாவலான தி மிட்நைட் சில்ட்ரன்ஸை ஆங்கிலத்தில் படமாக எடுத்துள்ளார். இதில் ஸ்ரேயா சரண், சித்தார்த், அனுபம் கேர், சபானா ஆஸ்மி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். டொரண்டோ திரைப்பட விழா உள்ளிட்ட பல்வேறு திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்ட இப்படத்தைப் பார்த்தவர்கள் அருமையாக வந்திருக்கிறது என்று பாராட்டியுள்ளனர்.
ஆனால் படத்தில் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியை மோசமானவராகக் காட்டியுள்ளனர் என்று காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியுள்ளது. மேலும் படத்தில் இந்திய வரைபடத்தில் காஷ்மீர் இல்லாமல் காண்பிக்கப்பட்டுள்ளது அரசியல் தலைவர்களை காயப்படுத்தியுள்ளது என்று தெரிகிறது.
இந்நிலையில் இந்த படத்தை இந்தியாவில் ரிலீஸ் செய்யத் தடை விதிக்க வேண்டும் என்று காங்கிரஸ் கோரிக்கை விடுத்துள்ளது.