இங்கிலாந்து அழகியால் டென்ஷனான ஹன்சிகா

சென்னை: பிரியாணி படத்தில் தன்னை ஹீரோயினாக போடாவிட்டால் நடிக்க மாட்டேன் என்று ஹன்சிகா வெங்கட் பிரபுவிடம் கராராக சொல்லிவிட்டாராம்.

hansika threatens venkat prabhu
Close
 

பிரியாணி படத்தில் கார்த்தி ஜோடியாக நடிக்க ஹன்சிகாவை ஒப்பந்தம் செய்துள்ளார் வெங்கட் பிரபு. அவரும் சந்தோஷமாக நடிக்க வந்துள்ளார். இந்நிலையில் படத்தில் இங்கிலாந்து கவர்ச்சிக் கன்னியான மாண்டி தாக்கர் சேர்க்கப்பட்டுள்ளார் என்ற செய்தி காத்து வாக்கில் ஹன்சிகா காதுகளுக்கு சென்றது.

அவ்வளவு தான் அமுல் பேபி மாதிரி இருக்கும் ஹன்சிகா கோபத்தில் கொதித்துவிட்டாராம். நேராக வெங்கட் பிரபுவிடம் சென்று படத்தில் என்னை ஹீரோயினாகப் போட்டால் மட்டுமே நடிப்பேன். இல்லை என்றால் ஆளை விடுங்க என்று கராராகக் கூறிவிட்டாராம். இல்லம்மா, மாண்டியை கவர்ச்சிக்காக மட்டும் தான் படத்தில் எடுத்துள்ளேன். நீங்க தான் ஹீரோயின். நான் சொல்வதை நம்புங்க என்று வெங்கட் கூறிய பிறகே சாந்தம் அடைந்தாராம் ஹன்சி.

இந்த புள்ளைக்கு இவ்வளவு கோபம் வருமா என்று யோசிக்கிறீர்களா? ஹன்சிகா மட்டுமல்ல வேறு சில ஹீரோயின்களும் தங்கள் படத்தில் தங்களுக்கே முக்கியத்துவம் இருக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள். அவர்கள் நினைப்பையும் குறை சொல்ல முடியாதே...

 

பூனம் பாண்டேவின் முதல் 'ஷாட்'டே பெட்ரூமில்தான்...!

Poonam Pandey Gives Mahurat Shot With Bedroom Scene

மும்பை: நிர்வாண போஸ், குளியல் போஸ், அந்த போஸ், இந்த போஸ் என்று இன்டர்நெட்டிலேயே உலா வந்து கொண்டிருந்த பூனம் பாண்டே தற்போது நடிகையாகியிருக்கிறார். அவருக்கும் முதல் இந்திப் படமான நஷாவின் ஷூட்டிங் தொடங்கி விட்டது. பூனம் பாண்டேவும் முதல் காட்சியில் நடித்து விட்டார் - அது ஒரு கலக்கலான பெட்ரூம் காட்சியாம்.

ஜிஸ்ம் பட இயக்குநர் அமீத் சக்ஸேனா இப்படத்தை இயக்குகிறார். முதல் காட்சி குறித்து பூனம் டிவிட்டரில் கூறுகையில், எனது முதல் காட்சி படமாக்கப்பட்டு விட்டது. அது ஒரு பெட்ரூம் காட்சி. இதுதான் சினிமாவில் எனது முதல் காட்சி என்று கூறியுள்ளார் பூனம்.

நஷா குறித்து அவர் கூறுகையில், இளைஞர்கள் எதற்கெல்லாம் அடிமையாக இருக்கிறார் என்பதைச்சொல்லும் படம் இது. இது இளைஞர்களுக்கான படம். சரியான நேரத்தில் வரும பொருத்தமான படம் என்று கூறியுள்ளார் பூனம்.

 

தேமுதிக எம்.எல்.ஏ படத்தில் வடிவேலு நடிக்கும் வாய்ப்பை தட்டிப் பறித்த சந்தானம்!

Santhanam Grabs Vadivelu Chance

சென்னை: விஜயகாந்த்துடன் மோதலில் ஈடுபட்டு அதிமுகவுக்கு ஆதரவாக மாறியுள்ள தேமுதிக எம்.எல்.ஏ. மைக்கேல் ராயப்பன் தயாரிக்கும் புதிய படத்தில் நடிக்கக் கிடைத்த வாய்ப்பை வடிவேலுவிடமிருந்து தட்டிப் பறித்து விட்டாராம் சந்தானம். இதுதான் தமிழ்த் திரையுலகில் இப்போது பரபரப்பான செய்தியாக மாறியுள்ளது.

தமிழ்த் திரையுலகில் கவுண்டமணிக்குப் பிறகு தனக்கென தனி பாணி காமெடியில் கலக்கி வருபவர் வடிவேலு மட்டுமே. இவரும் விவேக்கும் இணைந்தும், தனித்தும் காமெடியில் பின்னிப் பெடலெடுத்தனர். இருவருக்கும் இணையான ஒரு காமெடியன் இதுவரை வரவில்லை.

இடையில் வந்த சந்தானம் கூட கவுண்டமணியை அப்படியே பச்சையாக காப்பியடித்துதான் நடித்துக் கொண்டிருக்கிறார். அவரது ஸ்டைல் என்று எதையுமே சொல்ல முடியவில்லை என்பதே திரையுலகினரின் கருத்தும் கூட.

வடிவேலுவுக்கு அரசியல் ரூபத்தில் ஏழரை நாட்டுச் சனி பிடித்து அவர் ஓரம் கட்டப்படவே அவருக்கு வர வேண்டிய வாய்ப்புகள் எல்லாம் சந்தானத்தைத் தேடி போக ஆரம்பித்தன. இளம் ஹீரோக்களையும் அவர் நைஸ் பண்ணி வைத்திருப்பதால் அவர்களும் வேறு வழியில்லாமல் சந்தானத்தை நாட வேண்டிய நிலை.

இந்த நிலையில் தற்போது மீண்டும் வடிவேலு முழு வீச்சில் நடிக்கப் போகிறார். சில படங்களை அவர் பேசிக் கொண்டிருக்கிறார். இந்த நிலையில்தான் வடிவேலு படத்தை சந்தானம் தட்டிப் பறித்து விட்டதாக செய்தி வெளியாகியுள்ளது.

தேமுதிக எம்.எல்.ஏவான மைக்கேல் ராயப்பன் தயாரிக்க, பூபதி பாண்டியன் இயக்கும் படம் பட்டத்து யானை. இந்தப் படத்தில் விஷால் ஹீரோவாக நடிக்கிறார். அர்ஜூன் மகள் ஐஸ்வர்யா ஹீரோயினாக நடித்து அறிமுகமாகிறார். இதில் வடிவேலுவை காமெடிக்குப் போட முடிவானது. வடிவேலுவும் படத்தை ஏற்றுக் கொண்டார்.

இந்த நிலையில்தான் விஷால் மூலமாக காமெடி பார்ட்டை கைப்பற்றி விட்டாராம் சந்தானம்.

வடிவேலுவும் விஷாலும் இணைந்து தில்லாலங்கடி, திமிரு உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளனர். அதேபோல விஷாலும், சந்தானமும் இணைந்து சில படங்களில் நடித்துள்ளனர். ஏன் தில்லாலங்கடி படத்தில் வடிவேலுவுடன், சந்தானமும் இணைந்து நடித்திருந்தார். இந்த நிலையில் விஷால் படத்தில் வடிவேலு நடிக்க கிடைத்த வாய்ப்பை, சந்தானம் தட்டிப் பறித்திருப்பது திரையுலகில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளதாம்.

 

சமருக்காக குரல் கொடுக்கும் த்ரிஷா

சென்னை: விஷாலுடன் நடித்துள்ள சமர் படத்தில் த்ரிஷா தன் சொந்தக் குரலில் பேசுகிறாராம்.

trisha dubs samar
Close
 

த்ரிஷாவுக்கு தமிழ் தெரியும் என்றாலும் அவரது படங்களில் அவருக்கு வேறு யாராவது டப்பிங் பேசி வருகிறார்கள். தனது நீண்ட நாள் நண்பரான விஷாலுடன் சேர்ந்து த்ரிஷா சமர் படத்தில் நடித்துள்ளார். ஷூட்டிங் முடிந்துவிட்ட நிலையில் படம் நல்லா வந்திருக்கு என்று இயக்குனர் திரு மகிழ்ச்சியாக உள்ளாராம்.

இது குறித்து திரு கூறுகையில்,

சமர் ஷூட்டிங் முடிந்து எடிட்டிங் வேலை நடந்து கொண்டிருக்கிறது. இது தவிர டப்பிங் பணியும் நடக்கிறது. இந்த படத்தில் த்ரிஷா தன் சொந்தக் குரலில் பேசுகிறார். ஆயுத எழுத்து, மன்மதன் அம்பு மற்றும் மங்காத்தாவுக்கு பிறகு அவர் சொந்தக் குரலில் பேசும் படம் இது தான் என்று நினைக்கிறேன். விரைவில் இசை வெளியீட்டு நிகழ்ச்சி நடத்த திட்டமிட்டுள்ளோம். பட ரிலீஸ் தேதியை அப்போது அறிவிப்போம். விஷால், த்ரிஷா, மனோஜ் பாஜ்பாய் மற்றும் ஜே.டி. சக்ரவர்த்தி ஆகியோர் இணைந்திருப்பது படத்தின் ஹைலட் என்றார்.

 

மும்பையில் அஜீத்தை முற்றுகையிட்ட ரசிகர்களால் பரபரப்பு

Fans Mob Ajith

மும்பை: விஷ்ணுவர்த்தனின் புதிய படத்தின் ஷூட்டிங்குக்காக மும்பைக்குப் போன இடத்தில் அஜீத்தை ரசிகர்கள் பெரும் திரளாக திரண்டு வந்து முற்றுகையிட்டதால் ரசிகர்களின் அன்புப் பிடியில் அவர் சிக்க நேரிட்டது.

பி்ல்லா 2வின் பெரும் தோல்விக்குப் பின்னர் தற்போது விஷ்ணுவர்த்தன் இயக்கத்தில் நடித்து வருகிறார் அஜீத். இதன் படப்பிடிப்பு தற்போது மும்பைக்கு போயுள்ளது. 2 மாதங்கள் அங்கு படப்பிடிப்பு நடத்தவுள்ளனர்.

அஜீத் படத்தின் ஷூட்டிங் நடக்கும் தகவல் தெரிந்து தமிழ் ரசிகர்கள் பலரும் திரண்டு வந்து விட்டனர். ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்த அஜீத்தை ஆர்வத்தில் முற்றுகையிட்டு விட்டனர். பலர் அஜீத்தின் கைகளைப் பிடித்து குலுக்கினர். பலர் ஆட்டோகிராப் கேட்டனர்.

இதனால் ரசிகர்களின் அன்புப் பிடியில் அஜீத் சிக்கிக் கொண்டார். அவரை மீட்க போலீஸார் வர வேண்டியதாயிற்று.ஆனால் அவர்களாலும் கட்டுப்படுத்த முடியவில்லை. இருப்பினும் பெரும் சிரமப்பட்டு அவர்கள் ரசிகர்களைக் கலைத்தனர். பின்னர் தடங்கலாகி நின்ற படப்பிடிப்பு தொடர்ந்து நடந்தது.

 

நான் மமதா பானர்ஜியின் தீவிர ரசிகன்: ஷாருக்கான்

Shah Rukh Declares He Is Big Fan Of Mamata

கொல்கத்தா: பாலிவுட் நடிகர் ஷாருக்கான் மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜியின் தீவிர ரசிகராம்.

மத்தியில் ஆளும் ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் இருந்து விலகி மத்திய அரசுக்கு சவாலாக இருந்து வருபவர் மேற்கு வங்க முதல்வரும், திரிணாமூல் காங்கிரஸ் தலைவருமான மமதா பானர்ஜி. என் வழி, தனி வழி என்று செயல்படும் மமதாவின் தீவிர ரசிகன் நான் என்று பாலி்வுட் நடிகர் ஷாருக் கான் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில்,

மமதா ஒரு சிறந்த தலைவர். நமது நாட்டில் அதுவும் ஒரு பெண் தலைவர் மிகவும் வெளிப்படையாக இருப்பது மிகவும் சிரமம் என்றார்.

ஷாருக்கான் மேற்கு வங்கத்தின் பிராண்ட் அம்பாஸிடர் என்பது குறிப்பிடத்தக்கது. அவரது கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி ஐபிஎல் 5வது சீசனை வென்றபோது மமதா அவர்களுக்கு பாராட்டு விழா நடத்தி வாழ்த்தினார் என்பது நாம் அறிந்ததே.

 

பத்ம விபூஷன் விருதுக்கு மறைந்த பாலிவுட் நடிகர் ராஜேஷ் கன்னா பெயர் பரிந்துரை

Rajesh Khanna Likely Be Awarded Padma Vibhushan

டெல்லி: மறைந்த பாலிவுட் நடிகர் ராஜேஷ் கன்னா, ஷோலே இயக்குனர் ரமேஷ் சிப்பி மற்றும் பாடகர் கைலாஷ் கேர் ஆகியோருக்கு பத்ம விருது கிடைக்கலாம் என்று தெரிகிறது.

பத்ம விருதுகளில் கலை பிரிவில் 3 பேரின் பெயர்களை மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் பரிந்துரை செய்துள்ளது. அது கடந்த ஜூலை 18ம் தேதி மறைந்த பாலிவுட் நடிகர் ராஜேஷ் கன்னா, ஷோலே பட இயக்குனர் ரமேஷ் சிப்பி மற்றும் பாடகர் கைலாஷ் கேர் ஆகியோரின் பெயர்களை பரிந்துரைத்துள்ளதாகத் தெரிகிறது.

பத்ம விருதுகள் பொதுவாக மறைந்தவர்களுக்கு கொடுப்பதில்லை என்றாலும் ராஜேஷ் கன்னா அந்த விருதைப் பெற தகுதியானவர் என்று கருதி அரசு அவருக்கு பத்ம விபூஷன் விருது அளிக்கலாம் என்று தெரிகிறது. கடந்த ஆண்டு மறைந்த பிரபல இந்தி பாடகர் புபென் ஹசாரிகாவுக்கு இறப்புக்கு பிறகு தான் பத்ம விபூஷன் விருது வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இயக்குனர் ரமேஷ் சிப்பி மற்றும் கைலாஷ் கேர் ஆகியோரின் பெயர்கள் பத்ம ஸ்ரீ விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளன. பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டாலும் பிரதமர் தலைமையிலான பத்ம விருதுகள் குழு தான் இறுதி முடிவை எடு்கக வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

 

எடுத்ததெற்கெல்லாம் 'கேஸ்' போட்டால்... சின்மயிக்கு சிம்புவின் அட்வைஸ்!

Simbu S Advice

சென்னை: திரைப்பட நட்சத்திரங்கள் குறித்து மக்களும் சரி, சமூக வலைத்தளங்களிலும் சரி பலரும் கருத்து தெரிவிப்பது சகஜம்தான். இதற்கெல்லாம் நாம் புகார் கொடுப்பது என்பது சரியாக இருக்காது. இதை சாதாரணமாக எடுத்துக் கொள்ள வேண்டும். நமது வேலையை நாம் சரியாக பார்த்தாலே போதும் என்று கூறியுள்ளார் நடிகர் சிம்பு.

பாடகி சின்மயி, சமீபத்தில் போலீஸ் வரை போய் கொடுத்த புகார் குறித்து சிம்பு கருத்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில்,

சமூக வலைதளங்களில் திரையுலகினரைப் பற்றி கருத்து தெரிவிப்பது சாதாரணமான விஷயம். நகைச்சுவையான கருத்துகள், சீரியசானவை என பலவித கருத்துகள் பகிரப்படும். ஆனால் அவை புகார் அளிக்கும் அளவிற்கு சீரியசான விஷயம் கிடையாது.

ஏன் நம் மக்கள் ஒவ்வொரு நடிகர்களை போலவும் மிமிக்ரி செய்து பலவிதமாக பேசுகிறார்கள். திரையுலகின் முக்கிய நட்சத்திரங்கள் அனைவரையும் அவர்கள் கிண்டல் செய்கிறார்கள்.

இண்டர்நெட்டில் இருப்பவர்களில் 5 சதவீதம் மக்கள் தான் இதை செய்கிறார்கள். அவர்களின் பேச்சை சீரியசாக எடுத்துக்கொண்டால் நமக்குத் தான் மனஉளைச்சல். இதையெல்லாம் பெரிய பிரச்சனையாக எடுத்துக்கொள்ளாமல் நாம் நம் வேலையை பார்த்தால் மட்டும் போதும் என்றார் சிம்பு.

நல்ல கருத்துதான்.