பாகிஸ்தான் பாடகி பங்கேற்கும் டிவி நிகழ்ச்சி: ஆஷா போன்ஸ்லேவுக்கு ராஜ் தாக்கரே கடும் எதிர்ப்பு

Raj Thackeray S Party Is After Asha

மும்பை: பாகிஸ்தானிய பாடகி கலந்து கொள்ளும் நிகழ்ச்சியில் பாடகி ஆஷா போன்ஸ்லே பங்கேற்க மகராஷ்டிரா நவநிர்மான் சேனா கட்சி தலைவர் ராஜ் தாக்கரே கடும் எதிர்ப்பு தெரிவி்ததுள்ளார்.

கலர்ஸ் என்னும் இந்தி தொலைக்காட்சி சேனலில் சூர் ஷேத்ரா என்ற பாட்டு போட்டி நிகழ்ச்சிக்கு பாடகி ஆஷா போன்ஸ்லே, வங்க தேசத்தைச் சேர்ந்த பாடகி ருணா லைலா மற்றும் பாகிஸ்தானின் கவாலி பாடகி ஆபிதா பர்வீன் ஆகியோர் நடுவர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். இந்த நிகழ்ச்சி வரும் செப்டம்பர் மாதம் 8ம் தேதி முதல் ஒளிபரப்பப்படுகிறது. இந்நிலையில் பாகிஸ்தான் பாடகி கலந்து கொள்ளும் நிகழ்ச்சியில் ஆஷா போன்ஸ்லே பங்கேற்க மகாராஷ்டிரா நவநிர்மான் சேனா தலைவர் ராஜ்தாக்கரே கடும் எதிர்ப்பு தெரிவி்த்துள்ளார்.

இதையடுத்து நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் நடந்த செய்தியாளர் சந்திப்பின்போது ஆஷா கூறுகையில்,

எனக்கு அரசியல் பிடிக்காது. அது எனக்கு புரியவும் செய்யாது. ராஜ் தாக்கரே என்னைப் பற்றி என்ன நினைத்தாலும் சரி அவர் மீது நான் அன்பு வைத்துள்ளேன். நான் மகாராஷ்டிராவைச் சேர்ந்தவள். எனது மாநிலத்தை விரும்புகிறேன். நான் ஒரு பாடகி. எனக்கு இசையின் மொழி தான் புரியும். ராஜ் தாக்கரேவுக்கு எனது பாடல்கள் பிடிக்கும் என்று எனக்குத் தெரியும் என்றார்.

இந்த சந்திப்பு நடந்தபோது ஹோட்டலுக்கு வெளியே போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

ஈஷா குப்தா நிர்வாணமாக நடிக்க ஒத்தாசை செய்தாரா பிபாஷா பாசு?

Did Bipasha Basu Help Esha Gupta Do A Nude

மும்பை: ராஸ்3 படத்தில் நிர்வாணக் காட்சியில் படத்தின் நாயகிகளில் ஒருவரான ஈஷா குப்தா நடிக்க, பிபாஷா பாசுவும், இயக்குநர் விக்ரம் பட்டும் ஒத்தாசையாக இருந்ததாக செய்திகள் கூறுகின்றன. கூச்சம் நீங்கி, துணிச்சலாக ஈஷா குப்தா நடிக்க, பிபாஷா கூடவே இருந்து உதவியதாகவும் கூறப்படுகிறது.

ஜன்னத் 2 படத்தில் அறிமுகமானவர் ஈஷா குப்தா. இந்த நிலையில் அவரது 2வது படம்தான் ராஸ் 3. இதில் அவர் துணிகரமான நிர்வாணக் காட்சி ஒன்றில் நடித்து அசத்தியுள்ளார். எடுத்த எடுப்பிலேயே நிர்வாணத்திற்குப் போய் விட்ட அவரைப் பாற்றி பாலிவுட்டில் வாயைப் பிளந்து நிற்கின்றனர்.

ஆனால் படப்பிடிப்பின்போது அவருக்கு கூச்சம் நீங்கி, தைரியமாக நடிக்க படத்தின் நாயகியான பிபாஷா பாசுதான் ரொம்ப ஒத்தாசையாக இருந்ததாக செய்திகள் வெளியாகியுள்ளன. படப்பிடிப்பின்போது பிபாஷா பாசுவும், இயக்குநர் விக்ரம் பட்டும், ஈஷா குப்தா படபடப்பின்றி, தைரியமாக நடிக்க நிறைய டிப்ஸ் கொடுத்து கூடவே இருந்தனராம். இந்தக் காட்சியில் ஈஷா நடித்தபோது கூடவே ஏகப்பட்ட பூச்சிகளும் அவரை சுற்றிச் சுற்றி கடிப்பது போல காட்டியுள்ளனராம்.

இப்படத்தில் பிபாஷாவும், ஈஷாவும் எதிரும் புதிருமான கேரக்டர்களில் நடிக்கின்றனர். இருந்தாலும் ஈஷாவுக்கு, பிபாஷா ரொம்பவே உதவியாக இருந்து நடித்தாராம்.

இப்படியே எல்லோரும் இருந்துட்டா, டைரக்டர்களுக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை..

 

கார்த்தியுடன் டூயட் பாட செல்வராகவனிடம் பெர்மிஷன் கேட்ட அனுஷ்கா

Anushka Seeks Selvaraghavan S Permission   

சென்னை: அலெக்ஸ் பாண்டியன் படத்தில் கார்த்தியுடன் டூயட் பாட இயக்குனர் செல்வராகவனிடம் அனுமதி கேட்டுள்ளார் நடிகை அனுஷ்கா.

நடிகை அனுஷ்கா செல்வராகவனின் இரண்டாம் உலகம் பட ஷூட்டிங்கிற்காக ஜார்ஜியா பறந்துவிட்டார். இதற்கிடையே அவர் கதாநாயகியாக நடிக்கும் அகெஸ் பாண்டியன் படத்தில் நாயகி இல்லாமல் கார்த்தியால் டூயட் பாடமுடியவில்லை. இதையடுத்து அலெக்ஸ் பாண்டியன் படக்குழுவினர் அனுஷ்காவு்ககு போன் மேல் போன் போட்டதுடன் ஏராளமான இமெயில் அனுப்பி உடனே சென்னை வாருங்கள், நீங்கள் நடிக்க வேண்டிய பாகங்கள் ஷூட் செய்ய வேண்டியுள்ளது என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஓயாது போன் ஒலித்ததையடுத்து அனுஷ்கா செல்வராகவனிடம் சென்று விவரத்தைக் கூறி சென்னை செல்ல அனுமதி கேட்டுள்ளார். அவரும் அனுமதி அளிக்கவே அம்மணி சென்னைக்கு வந்தார். வந்த கையோடு கார்த்தியோடு டூயட் பாட சென்றுவிட்டார்.

அலெக்ஸ் பாண்டியன் தெலுங்கில் 'பேட் பாய்' என்ற பெயரில் ரிலீஸ் ஆகிறது என்பது குறிப்பிடத்தக்கது. கார்த்தி மற்றும் அனுஷ்காவுக்கு ஆந்திராவில் ரசிகர்கள் அதிகம் என்பதால் படம் அங்கும் நிச்சயம் ஹிட்டாகும் என்று நம்பப்படுகிறது.

 

சந்தானம் பிஸி.. கேன்சலான ஷங்கரின் 'ஐ' ஷூட்டிங்

Shankar S I Shooting Cancelled Because

சென்னை: காமெடி நடிகர் சந்தானத்தால் ஷங்கரின் ஐ பட ஷூட்டிங் கேன்சல் செய்யப்ப்டடுள்ளது.

இன்றைய தேதிக்கு கோலிவிட்டில் மிகவும் பிசியாக இருக்கும் காமெடி நடிகர் யார் என்றால் அது சந்தானம் தான். மனிதன் ஓடி, ஓடி நடி்ததுக் கொண்டிருந்தார். அவர் டேட் இல்லை என்று கூறினால் கூட இயக்குனர்கள் அவரை விடுவதாக இல்லை. அவரிடம் டேட் இல்லை என்று தெரிந்தும் அவரை அணுகி ப்ளீஸ் சந்தானம் கொஞ்சம் அட்ஜஸ்ட் செய்து என் படத்திற்கு டேட் கொடுங்களேன் என்று ஒவ்வொரு இயக்குனரும் கோரிக்கை விடுக்கின்றனர்.

அட அவர்கள் இவ்வளவு இறங்கி வரும்போது பிஹ்ஹு பண்ண முடியாதல்லவா அதனால் சந்தானமும் எப்படியோ டேட் கொடுத்துவிடுகிறார். இப்படி அட்ஜெஸ்ட் பண்ணி டேட் கொடுத்தது இயக்குனர் ஷங்கரின் தலையில் வந்து விடிந்தது. ஆம், ஷங்கரின் ஐ படத்தில் சந்தானம் நடிக்கிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு சந்தானம் நடிக்கும் காட்சிகளை படமாக்க படக்குழுவினர் ரெடியானார்கள்.

ஆனால் சந்தானத்தால் அன்றைய ஷூட்டிங்கிற்கு வர முடியாமல் போனது. இதனால் ஷூட்டிங் கேன்சல் ஆனது.

 

குடிபோதையில் காரோட்டி போலீசாரிடம் சிக்கிய பாலகிருஷ்ணா மகன்

Balakrishna S Son Mokshagna Makes

ஹைதராபாத்: தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணாவின் தவப் புதல்வன் மோக்ஷாக்னா குடிபோதையில் கார் ஓட்டி போலீசாரிடம் சிக்கியுள்ளார்.

தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணா தன் அருமை மகன் மோக்ஷாக்னாவை மீடியாக்கள் கண்ணில் படாமல் வளர்த்து வந்தார். வெளிநாட்டில் படிக்கும் மோக்ஷாக்னா தற்போது சொந்த ஊருக்கு வந்துள்ளார். பாலகிருஷ்ணா நடிக்கும் ஸ்ரீமன்நாராயணா படத்தின் இசைவெளியீட்டு விழா அண்மையில் ஹைதராபாத்தில் நடந்தது. விழாவுக்கு மகனை அழைத்து வந்து அறிமுகம் செய்து வைத்தார் பாலகிருஷ்ணா. மேலும் மோக்ஷாக்னா படிப்பை முடித்தவுடன் நிச்சயம் நடிக்க வருவார் என்று உறுதியளித்தார். அவர் இந்த அறிவிப்பை வெளியிட்டவுடன் செய்தியாளர்கள் விறு, விறு என்று எழுத, புகைப்படக்காரர்கள் கிளிக், கிளிக் என்று போட்டோ எடுத்துத் தள்ளிவிட்டனர்.

இந்நிலையில் கடந்த 19ம் தேதி இரவு மோக்ஷாக்னா தனது நண்பர்களுடன் டாடா சபாரி காரில் ஜுபிளி ஹில்ஸ் சோதனைச்சாவடி வழியாக வீட்டுக்கு சென்றுள்ளார். அப்போது டிராபிக் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ண ரெட்டி அந்த காரை நிறுத்தியுள்ளார். மோக்ஷாக்னாவிடம் நடத்தப்பட்ட சோதனையில் அவர் குடிபோதையில் கார் ஓட்டியது உறுதியானது.

இதையடுத்து போலீசார் காரை பறிமுதல் செய்து அதை ஓட்டி வந்த மோக்ஷக்னா மீது வழ்ககுப் பதிவு செய்துள்ளனர். எங்கே மீடியா வந்து போட்டோ எடுத்துவிடுவார்களோ என்ற பயத்தில் மோக்ஷாக்னா தனது நண்பர்களுடன் வேறு காரில் ஏறி பறந்துவிட்டாராம்.

 

ஜெயம் ரவியை ஆட்டிவைத்த காயத்ரி ரகுராம்

Jayam Ravi Romances Amala Paul Goa

சென்னை: நிமிர்ந்து நில் படத்தின் நடன இயக்குனர் காயத்ரி ரகுராம் சொல்லியபடியே ஜெயம் ரவியும், அமலா பாலும் காதல் பாட்டுக்கு டான்ஸ் ஆடியுள்ளனர்.

சமுத்திரக்கனி இயக்கத்தில் ஜெயம் ரவி, அமலா பால் நடிக்கும் படம் நிமிர்ந்து நில். இந்த படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு கோவா மற்றும் சாலக்குடியில் சுமார் 12 நாட்கள் நடந்தன. அதிலும் கோவாவில் கடற்கரையோரம் அழகிய மர வீடு கட்டி அதில் ஷூட்டிங் எடுத்துள்ளனர். அந்த வீட்டில் வைத்து ஜெயம் ரவி, அமலா பால் டூயட் படமாக்கப்பட்டுள்ளது.

நடன இயக்குனர் காயத்ரி ரகுராம் ஸ்டெப்ஸ் சொல்லிக் கொடு்க்க அதை அப்படியே திருப்பி ஆடியுள்ளனர் ஹீரோவும், ஹீரோயினும். மர வீட்டில் எடுத்துள்ள இந்த பாடல் பேசப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த படத்திற்காக ரவி அவரது உடலை சும்மா கும்மென்று ஆக்கியுள்ளார். அவரது புது கெட்டப்புக்கு எக்கச்ச பாராட்டுகள் வந்து குவிகிறதாம். வேலை வேலை என்று ஓடியதால் முதல்கட்ட படப்பிடிப்பு முடிந்த கையோடு ரவி தனது மனைவியுடன் கோவாவில் பொழுதைக் கழித்துவிட்டு வந்துள்ளார்.

 

சத்யமேவ ஜெயதேவுக்காக ஆமீர் கானை பெருமைப்படுத்திய டைம் பத்திரிக்கை

Aamir Khan First Bollywood Hero On

நியூயார்க்: சத்யமேவ ஜெயதே நிகழ்ச்சியின் மூலம் மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்திய பாலிவுட் நடிகர் ஆமீர் கானின் போட்டோ பிரபல பத்திரிக்கையான டைமின் அட்டைப் படத்தில் வந்துள்ளது.

சமூகப் பிரச்சனைகளை அலசி, ஆராய்ந்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்திய பாலிவுட் நடிகர் ஆமீர் கானின் சத்யமேவ ஜெயதே நிகழ்ச்சி அமெரி்க்கா வரை பிரபலமாகியுள்ளது. இந்தியாவில் பெரும் வரவேற்பை பெற்ற இந்நிகழ்ச்சி பற்றி அமெரிக்காவின் முன்னணி பத்திரிக்கையான டைம் பத்திரிக்கையில் கட்டுரை வந்துள்ளது. அது மட்டுமி்ன்றி அட்டைப்படத்தில் ஆமீர் கானின் போட்டோவைப் போட்டுள்ளனர். இதன் மூலம் டைம் பத்திரிக்கையின் அட்டைப் படத்தில் வந்த முதல் பாலிவுட் ஹீரோ என்ற பெருமையைப் பெற்றுள்ளார் ஆமீர்.

முன்னதாக நடிகைகள் ஐஸ்வர்யா ராய், பர்வீன் பாபி ஆகியோரின் படங்களும் டைம் பத்திரிக்கையின் அட்டைப்படத்தை அலங்கரித்தன. அவர்கள் தவிர முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி, சச்சின் டெண்டுல்கர், சானியா மிர்சா மற்றும் தற்போதைய பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோரின் போட்டோவும் டைம் பத்திரிக்கையின் அட்டைப்படத்தில் வந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

 

பேஸ்புக்கை வைத்தும் ஒரு படம் வருதுங்கோ...!

A Movie Named Facebook Launched

தமிழ்ப் படவுலகினருக்கு டைட்டிலுக்கு மட்டும் ஒருபோதும் பஞ்சமே வருவதில்லை. நல்ல நல்ல பெயரைத் தவிர வித்தியாசமான பெயரையும் போட்டுத் தாக்கி படம் பண்ணி விடுகிறார்கள்.

முன்பெல்லாம் இலக்கிய நயம் மிக்க பெயர்களில் படங்கள் வந்தன. பின்னர் சில வருடங்களுக்கு முன்பு வரை ஆங்கிலப் பெயர்களாக வைத்துத் தள்ளினர். அதை விட கொடுமையாக ஏய், போடா, வாடா, சண்டை என்று கொத்துப் புரோட்டா போட்டனர். அதற்கு கருணாநிதி ஆட்சிக்காலத்தில் முடிவு கட்டினர். இதையடுத்து தமிழ்ப் பெயர்களில் பெயர்கள் வர ஆரம்பித்தன.

இந்த நிலையில் பேஸ்புக் என்ற பெயரில் ஒரு புதுப் படத்திற்குப் பெயர் போட்டுள்ளனர். இந்தப் படத்தின் பெயர் ஆங்கிலத்தில் இருப்பதால் படத்திற்கு வரிச் சலுகை கிடைக்காது என்பது உறுதியாகத் தெரிகிறது. இருப்பினும் அதுகுறித்து தயாரிப்பாளர்களுக்கு கவலை இல்லை போல. படத்திற்கான பன்ச் லைனாக காதல் என்று பெயர் வைத்துள்ளனர்.

இந்தப் படத்தின் கதை என்று தனியாக எந்த செய்தியும் தரத் தேவையில்லை. காரணம், பேஸ்புக் மூலம் ஏற்படும் ஒருகாதலைத்தான் இப்படம் சொல்லப் போகிறதாம்.

படத்தில் காதலுடன், கவர்ச்சியும் கரைபுரண்டோடும் என்று படத்தின் நாயகியைப் பார்த்தாலே தெரிகிறது...

வரட்டும், பார்க்கலாம்.

 

சேச்சே...ராணாவுடன் எதுவும் நடக்கலே... திரிஷா

I M Not Engaged Rana Trisha   

எனக்கும், ராணாவுக்கும் நிச்சயதார்த்தம் எதுவும் நடக்கவில்லை என்று கூறியுள்ளார் திரிஷா.

திரிஷாவும், அவரது திருமண செய்திகளும் என்று தனியாக ஒரு புக்கே போடலாம். அந்த அளவுக்கு அவருடைய திருமணம் குறித்து ஏகப்பட்ட செய்திகள் வந்து விட்டன.

கட்டக் கடைசியாக தெலுங்கு நடிகர் ராணா டகுபதியுடன் திரிஷா நெருக்கமாக பழகி வருகிறார். அவர்கள் திருமணம் செய்து கொள்வது உறுதி என்று செய்தி வந்தது.

இந்த நிலையில், இருவருக்கும் நிச்சயதார்த்தம் முடிந்து விட்டதாகவும், அதில் இரு வீட்டாரும் கலந்து கொண்டதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. அதுதொடர்பான புகைப்படங்களும் கூட வெளியாகியுள்ளன. நிச்சயதார்த்தத்தையொட்டி திரிஷாவுக்கு, ராணா, பிளாட்டினம் மோதிரமும், நகைகளையும் கொடுத்தார் என்றும் செய்திகள் கூறுகின்றன. ஆனால் இதை அப்படியே மறுத்துள்ளார் திரிஷா.

இதுகுறித்து திரிஷா சொல்லும்போது, இது அடிப்படையே இல்லாத செய்தி. நானும், ராணாவும் நல்ல நண்பர்களாகவே இருக்கிறோம். எங்களைப் போய் சேர்த்து வைத்துப் பேசுவது... சேச்சே... நல்லாவே இல்லை.

மேலும் எங்களுக்கு நிச்சயதார்த்தம் எதுவும் நடக்கவில்லை. நான் தொடர்ந்து சினிமாவில் நடித்து வருகிறேன். திருமணத்தைப் பற்றி நினைத்துக் கூட பார்க்கவில்லை. இப்போது 3 தமிழ்ப் படங்களில் நடித்து வருகிறேன் என்று கூறியுள்ளார்.

 

செப். 1ல் நீதானே என் பொன்வசந்தம் பாடல்கள் வெளியீடு.. பிரமாண்ட விழாவுக்கு ஏற்பாடு

Nee Thaanae En Ponvasantham Audio Release Sep 1

சென்னை: கோடானுகோடி இசைஞானி இளையராஜா ரசிகர்கள் மட்டுமல்லாமல் இசை ரசிகர்களும் கூட ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கும் நீதானே பொன்வசந்தம் படத்தின் பாடல்கள் வெளியீடு சென்னை நேரு உள்ளரங்கத்தில் செப்டம்பர் 1ம் தேதி கோலாகலமாக நடைபெறவுள்ளது.

ஆர்.எஸ். இன்போன்டெய்ன்மெய்ன்ட் நிறுவனம் தயாரித்து, கெளதம் வாசுதேவ மேனன் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படம் பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது. காரணம், இசைஞானி இளையராஜா இந்தப் படத்தில் நடத்தியிருக்கும் இசைத் திருவிழா. படத்தின் பாடல்கள் குறித்த சில சாம்பிள்களை ஏற்கனவே வெளியிட்டு ரசிகர்களிடையே பெரும் குஷியைக் கிளப்பி விட்டு விட்டார் கெளதம் மேனன். இதனால் எப்பப்பா பாட்டு வரும் என்று அத்தனை பேரும் வரிந்து கட்டிக் கொண்டு காத்திருக்கிறார்கள்.

ஜீவா, சமந்தா இணைந்து நடித்துள்ள இந்தப் படத்தில் இளையராஜா அழகான இசையைக் குழைத்து அமர்க்களமாக பாட்டு போட்டிருப்பதாக பேச்சு பலமாக அடிபடுகிறது.

இப்படத்தின் ஆடியோ ரிலீஸ் அதாவது பாடல்கள் வெளியீடு செப்டம்பர் 1ம் தேதி சென்னை நேரு உள்ளரங்கில் பிரமாண்டமாக நடைபெறவுள்ளது. அன்று மாலை 6.30 மணிக்கு விழா தொடங்குகிறது. இதில் கெளதம் வாசுதேவ மேனன், இளையராஜா, ஜீவா, சமந்தா உள்பட அனைவரும் பங்கேற்கின்றனர்.

படத்தின் பாடல்களை நேரடியாக மேடையில் அரங்கேற்றுகிறார் இசைஞானி.

இந்த நிகழ்ச்சியை முழுமையாக கவர் செய்கிறது ஜெயா டிவி. வேறொரு நாளில் இந்த ஆடியோ வெளியீட்டு விழா ஒளிபரப்பு செய்யப்படும்.

 

'இருட்டறை'க்கு வராத பிந்து மாதவி!

Bindu Madhavi Bunks Soi Shooting   

பெங்களூரில் நடந்த சட்டம் ஒரு இருட்டறை படத்தின் ஷூட்டிங்குக்கு வராமல் டிமிக்கி அடித்து விட்டாராம் நடிகை பிந்து மாதவி. இதனால் படக் குழுவினர் அப்செட் ஆகி விட்டனராம்.

கழுகு படத்தின் மூலம் தமிழுக்கு வந்தவர் பிந்து மாதவி. அப்படியே சிலுக்கு போலவே இருக்கிறார் என்று திரையுலகினரால் பாராட்டப்பட்டதால் பிந்து மாதவிக்கு தன் மீதே காதல் வந்து விட்டதாம். அந்தப் பெருமிதத்துடன் தற்போது நடித்து வரும் பிந்து, சட்டம் ஒரு இருட்டறை ரீமேக்கிலும் நாயகியாக நடித்து வருகிறார்.

இப்படத்தின் ஷூட்டிங் சமீபத்தில் பெங்களூரில் நடத்த திட்டமிட்டு படக்குழுவினர் போய் விட்டனர். ஆனால் பிந்து மாதவியைக் காணோம். அன்று முழுவதும் அவர் படப்பிடிப்புக்கே வரவில்லையாம். இதனால் ஷூட்டிங் கேன்சலாகி விட்டதாம்.

என்ன ஏது என்று விசாரித்தபோது அவருக்கு ஏதோ காயம் ஏற்பட்டு விட்டதாக தகவல் கிடைத்துள்ளது. இருப்பினும் தன்னைத் தேடி புதிதாக வந்த 3 படங்கள் தொடர்பான ஆழமான டிஸ்கஷனில் அவர் இருந்ததால்தான் சட்டம் ஒரு இருட்டறை ஷூட்டிங்குக்கு வர முடியாமல் போனதாக இன்னொரு தகவலும் கிடைத்ததால் படக் குழுவினர் கடும் அப்செட்டாம்.

உண்மை என்னவோ மாதவி ...!

 

ஹாலிவுட்டுடன் இணையப் போகிறதாம் தமிழ் இயக்குநர்கள் சங்கம்!!

Tamil Cinema Directors Association To Join Hollywood

சென்னை: ஏற்கெனவே தமிழ் இயக்குநர்கள் சிலர் ஹாலிவுட்டில் படம் இயக்கும் முயற்சியில் இறங்கியுள்ள நிலையில், தமிழ் சினிமா இயக்குநர்கள் சங்கத்தை ஹாலிவுட்டுடன் இணைக்கப் போவதாக அறிவித்துள்ளார் இயக்குநர் அமீர்.

இயக்குநர் பிரபு சாலமன் அவருடைய நண்பர் ஜான்மேக்சுடன் இணைந்து `சாட்டை' என்ற படத்தை சொந்தமாக தயாரித்துள்ளார். இந்த படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா சென்னை சத்யம் தியேட்டரில் நேற்று காலை நடந்தது.

விழாவில், 'பெப்சி' தலைவரும், இயக்குநர்கள் சங்க செயலாளருமான அமீர் கலந்துகொண்டு பேசுகையில், "சினிமா என்பது கூட்டு முயற்சி. அதில் நிறைய பேர் உழைப்பு இருக்கிறது. இன்றைய சினிமாவில் மூத்த கலைஞர்களை இளம் கலைஞர்கள் மதிப்பதில்லை என்று சிலர் குற்றம்சாட்டுகிறார்கள். நாங்கள் மூத்த கலைஞர்களை ஒருபோதும் மறந்ததில்லை. அவர்களை மதிக்க தவறியதில்லை.

மூத்த கலைஞர்கள் அவர்கள் காலத்தில் கடந்து வந்த பாதை வேறு. இப்போது நாங்கள் கடந்து செல்லும் பாதை வேறு. நாங்கள் நிறைய சவால்களை சந்திக்க வேண்டியிருக்கிறது. இயக்குனர்கள் சங்கம் இல்லாமல், சினிமா இல்லை. இந்தியாவிலேயே தமிழ் திரைப்பட இயக்குனர்கள் சங்கத்தில்தான் முதல்முறையாக 'வெப்சைட்' தொடங்கப்பட்டு இருக்கிறது.

தமிழ்நாடு திரைப்பட இயக்குனர்கள் சங்கத்தை ஹாலிவுட் இயக்குனர்கள் சங்கத்துடன் இணைக்க வேண்டும் என்று கவுதம் மேனன் பேசும்போது கேட்டுக்கொண்டார். அந்த முயற்சியில் நிச்சயமாக ஈடுபடுவோம்.

இயக்குனர்கள் சங்கத்துக்கு இன்னும் ஆறு மாதத்தில் தேர்தல் வர இருக்கிறது. அந்த தேர்தலில் நான் போட்டியிட மாட்டேன். லிங்குசாமி போன்றவர்கள் இயக்குனர்கள் சங்கத்துக்கு தலைவராக வரவேண்டும்,'' என்றார்.

விழாவில் டைரக்டர்கள் லிங்குசாமி, கவுதம் வாசுதேவ் மேனன், ஜெயம் ராஜா, ஜனநாதன், பிரபு சாலமன், சமுத்திரக்கனி, நடிகர்கள் விக்ரம் பிரபு, தம்பி ராமையா, யுவன், நடிகை மஹிமா, இசையமைப்பாளர் டி.இமான், பாடல் ஆசிரியர் யுகபாரதி, பட அதிபர் ஜான் மேக்ஸ் ஆகியோரும் பேசினார்கள்.

'சாட்டை' படத்தின் டைரக்டர் அன்பழகன் நன்றி கூறினார். நிகழ்ச்சிகளை டைரக்டர் கரு.பழனியப்பன் தொகுத்து வழங்கினார்.

 

எஸ்.தாணு, எஸ்.ஏ.சந்திரசேகரன் மீது "கள்ளத்துப்பாக்கி" தயாரிப்பாளர் கொலை மிரட்டல் புகார்

Kallathuppakki Producer Files Life Threat Complaint

சென்னை: தயாரிப்பாளர் சங்க தலைமைப் பொறுப்பில் இருக்கும் கலைப்புலி தாணு, எஸ்ஏ சந்திரசேகரன் ஆகியோர் மீது கள்ளத்துப்பாக்கி படத் தயாரிப்பாளர் ரவி தேவன் கொலைமிரட்டல் புகார் அளித்துள்ளார்.

சென்னை விருகம்பாக்கம், கிருஷ்ணா நகர், 2-வது தெருவை சேர்ந்தவர் ரவி என்ற ரவிதேவன் (வயது 39). இவர் நேற்று காலை சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை கொடுத்தார்.

அந்த மனுவில், "நான், கள்ளத்துப்பாக்கி என்ற பெயரில் கடந்த 2009-ம் ஆண்டு முதல் சினிமா படம் ஒன்றை தயாரித்து வருகிறேன். இந்த படம் வெளிவரும் நிலையில் உள்ளது.

இந்த நிலையில் துப்பாக்கி என்ற பெயரில் நடிகர் விஜய் நடிக்கும் படம் ஒன்றை, எஸ்.தாணு தயாரித்து வருகிறார். துப்பாக்கி என்ற தலைப்பை பயன்படுத்த, சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் நான் தடை ஆணை பெற்றுள்ளேன்.

இதனால் ஆத்திரம் அடைந்துள்ள சினிமா தயாரிப்பாளர் சங்கத் தலைவர் எஸ்.ஏ.சந்திரசேகரும், பொருளாளர் எஸ்.தாணுவும், அடியாட்களை ஏவிவிட்டு, என்னை மிரட்டுகிறார்கள். செல்போன் மூலமும் எனக்கு கொலை மிரட்டல்கள் வருகிறது. எனக்கும், எனது குடும்பத்தாருக்கும் உரிய பாதுகாப்பு கொடுப்பதோடு, சட்டபூர்வ நடவடிக்கையும் எடுக்குமாறு வேண்டுகிறேன்," என்று குறிப்பிட்டுள்ளார்.

 

பாபிலோனா 'பாடி'யுடன் 'விஞ்ஞானி' விஎஸ் ராகவன்... - இது 'பொம்மை நாய்கள்' மேட்டர்!

Vs Raghavan Babilona Bommai Naaigal

தலைப்பைப் படித்துவிட்டு கன்னா பின்னா கற்பனைகளுடன் மேட்டருக்குள் வராதீர்கள். விரைவில் வரவிருக்கும் ஒரு படத்தில் கவர்ச்சி நடிகை பாபிலோனாவின் 'பாடி'க்கு விஞ்ஞான ரீதியில் உயிர்கொடுக்கும் விஞ்ஞானியாக மூத்த நடிகர் விஎஸ் ராகவன் நடித்துள்ளாராம்!

பாபா சினி பிலிம்ஸ் தயாரித்துள்ள இந்தப் படத்தில், மூன்று பொம்மை நாய்கள் ஆக்ஷன் ஹீரோக்களாக நடித்துள்ளன. பகலெல்லாம் பொம்மைகளாக அலமாரியில் இருக்கும் இந்த மூன்று நாய்களும் இரவில் ஆக்ஷன் ஹீரோக்களாக மாறி எதிரிகளைப் பழி வாங்குகின்றன.

பொம்மை நாய்கள் எப்படி ஆக்ஷன் ஹீரோக்களாக மாறுகின்றன, ஏன் பழி வாங்குகின்றன என்பதை இயக்குனர் எஸ்.எஸ். பாபா விக்ரம் குழந்தைகளும் ரசிக்கிற விதத்தில் சொல்லியுள்ளாராம்.

இந்த பாபா விக்ரம் யார் என்று தெரிகிறதா..? கருணாநிதி கதை வசனம் எழுதி கண்ணம்மா என்று ஒரு படம் வந்ததே... அந்தப் படத்தின் இயக்குநர். இந்தப் படத்துக்கு கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள், இசை, தயாரிப்பு, இயக்கம் எல்லாம் இவரே.

இந்தப் படத்தில் இடம்பெற்றுள்ள ஒரு பாட்டுக்கு ரொம்பவே முக்கியத்துவம் உண்டு. காரணம், மறைந்த பாடகி சொர்ணலதா பாடிய கடைசி பாட்டு இது.

பட்டுச்சேலை வாங்கித் தாரேன் வாம்மா...
ஒரு பவுன் நகை வாங்கித் தரேன் வாம்மா...

- என புஷ்பவனம் குப்புசாமி பாட பதிலுக்கு

பட்டுச்சேலை தேவையில்லை மாமா
ஒரு பவுன் நகையும் தேவையில்லை மாமா
மஞ்சத்தாலி ஒண்ணுபோதும் மாமா

- என சொர்ணலதா பாடியுள்ளார்.

இந்தப் பாடலுக்காக ஏவிஎம்மில் பெரிய கடைவீதி செட் போட்டு குறவன் - குறத்தியாக கருணாஸும் கோவை சரளாவும் ஆட, நடனக் கலைஞர்களுடன்
30 ஜோடி நிஜ குறவன் - குறத்திகளும் ஆடியுள்ளனர்.

பாபிலோனா கவர்ச்சி மட்டும் காட்டாமல், இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

வி.எஸ். ராகவன் பொம்மை நாய்களுக்கு உயிர் கொடுக்கும் விஞ்ஞானியாக நடித்துள்ளார். ஒரு கட்டத்தில் பாபிலோனாவை சிலர் கொன்றுவிட, அந்த உடலுக்கு ராகவன்தான் உயிர்தருகிறாராம்!

ராதாரவி, நாசர், வடிவுக்கரசி, மீரா கிருஷ்ணன், பாண்டு, சூர்யகாந்த், சாம்ஸ், ஆர்த்தி, கிரேன் மனோகர், ஜாகுவார் தங்கம், டெல்லி கணேஷ், மும்பை மாடல் ப்ரியா, மைசூர் மாடல் காயத்ரி, பத்து வயது இளம் நட்சத்திரம் கண்ணம்மா ஆகியோரும் நடித்திருக்கிறார்கள்.

 

'சிக்'கென்று ஒரு சிரிப்புப் படம்... கமலின் புதிய பிளான்!

Kamal May Join With Crazy Mohan Yet Another Laugh Riot

சென்னை: விஸ்வரூபம் படத்தை முடித்து விட்டு ஹாலிவுட்டுக்குள் காலடி எடுத்து வைக்கப் போகும் கமல்ஹாசன் அதற்கு முன்பாக தமிழில் ஒரு முழு நீள காமெடிப் படத்தைக் கொடுக்கும் திட்டத்தில் இருக்கிறாராம்.

மின்னல் வேகத்தில் இந்தப் படத்தை ஆரம்பித்து எடுத்து முடித்து சட்டுப் புட்டென்று ரிலீஸ் செய்யப் போவதாகவும் கூறுகிறார்கள். இதில் கமலுடன் கை கோர்க்கப் போவது கிரேஸி மோகன்.

வழக்கமாக மிகப் பெரிய படத்தையோ அல்லது சீரியஸ் படத்தையோ நடித்து முடிக்கும்போது அடுத்து ஒரு லைட்டான படத்தைக் கொடுப்பது கமல்ஹாசனின் ஸ்டைல். இதை ஒரு வழக்கமாக கடைப்பிடித்து வரும் கமல்ஹாசன் தற்போது பெரும் பொருட் செலவில் விஸ்வரூபம் என்ற படத்தை முடித்துள்ளார். இந்தப் படத்தைத் தொடர்ந்து அவர் ஹாலிவுட்டிலும் அறிமுகமாகவுள்ளார்.

ஹாலிவுட் படத்தை நடிப்பதோடு, இயக்கியும், கதை வசனம் எழுதியும் பணியாற்றப் போகிறார்.

ஆனால் அதற்கு முன்பு ஒரு முழு நீள காமெடிப் படத்தைக் கொடுக்கும் திட்டத்தில் உள்ளாராம் கமல். இப்படத்தின் வசனத்தை கிரேஸி மோகன் எழுதுவார் என்றும் தெரிகிறது. கமல்ஹாசனும், கிரேஸி மோகனும் இணைந்த படங்கள் எல்லாமே சூப்பர் ஹிட் காமெடிப் படங்கள். அந்த வரிசையில் இந்தப் படத்தையும் இணைக்கும் திட்டம் உள்ளதாம்.

இப்படத்தை படு சடுதியாக எடுத்து முடித்து வெளியிடும் திட்டத்தில் உள்ளாராம் கமல். இந்தப் படத்தை முடித்த பின்னரே அவர் ஹாலிவுட்டுக்குச் செல்வார் என்றும் கூறப்படுகிறது.