கோச்சடையான் வினியோக உரிமையில் லதா ரஜினிகாந்த் ரூ.10 கோடி மோசடி: போலீசில் புகார்

சென்னை: ரஜினிகாந்த் நடித்த "கோச்சடையான்' திரைப்படத்தை விநியோகம் வழங்கியதில் லதா ரஜினிகாந்த் ரூ.10.2 கோடி மோசடி செய்ததாக சென்னை பெருநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் தனியார் நிறுவன நிர்வாகி அபிர்சந்த் நாகர் புகார் மனு அளித்தார்.

இது குறித்து அவர் கொடுத்த புகார் மனுவில் கூறப்பட்டிருப்பதாவது:

நடிகர் ரஜினி நடித்த "கோச்சடையான்' திரைப்படம் கடந்த மே மாதம் வெளியானது. இந்தத் திரைப்படத்தின் தமிழக உரிமையை அந்த திரைப்படத்தின் தயாரிப்பாளர் முரளி மனோகர் கடந்த ஏப்ரல் 25ம் தேதி எனது நிறுவனத்துக்கு அளித்தார்.

கோச்சடையான் வினியோக உரிமையில் லதா ரஜினிகாந்த் ரூ.10 கோடி மோசடி: போலீசில் புகார்

இதற்கான ஒப்பந்தத்தில் நானும், முரளி மனோகரும் கையெழுத்திட்டோம். இதற்கு நடிகர் ரஜினிகாந்த் மனைவி லதா உத்தரவாத கையெழுத்திட்டார். இதையடுத்து, இந்த உரிமத்துக்குரிய தொகையை நான் முரளி மனோகருக்கு அளித்தேன். இந்த ஒப்பந்ததை மீறி தமிழகத்தில் "கோச்சடையான்' திரைப்படத்தின் உரிமையை வேறு யாருக்கும் அளிக்கக் கூடாது.

அதைமீறி தமிழகத்தில் வேறு யாருக்கும் உரிமை அளித்தால், நஷ்ட ஈடு வழங்க வேண்டும். குறிப்பாக விற்பனைத் தொகையில் 20 சதவீதமும், லாபத்தில் பங்கும் அளிக்க வேண்டும் என்று அந்த ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.

ஆனால், அந்த ஒப்பந்ததை மீறி முரளி மனோகர் வேறு ஒரு நிறுவனத்துக்கு அனைத்து உரிமைகளையும் விற்றார். இதையடுத்து நான் அவர்களிடம் எனக்குரிய நஷ்டஈட்டுத் தொகையைக் கேட்டபோது, லதா ரஜினிகாந்தும், முரளி மனோகரும் என்னிடம் படம் வெளியானதும் அந்தத் தொகையைத் தருவதாக உறுதி அளித்தனர்.

நான் அவர்கள் மீது வைத்திருந்த நம்பிக்கையின் அடிப்படையில் திரைப்படத்தை வெளியிட அனுமதி அளித்தேன். ஆனால் படம் வெளியாகி ஓடி பல மாதங்களுக்குப் பின்னரும், அவர்கள் எனக்குத் தர வேண்டிய ரூ. 10.2 கோடியைத் தரவில்லை. நான் எனது பணத்தை பல முறை அவர்களிடம் கேட்டும், அவர்கள் தராமல் இழுத்தடித்து வருகின்றனர். எனவே காவல்துறை அவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுத்து, பணத்தை மீட்டுத் தர வேண்டும் என்று மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.

 

நடிகர் சங்கத்தில் இருந்து குமரிமுத்துவை நீக்க இடைக்கால தடை

சென்னை: தென்னிந்திய நடிகர் சங்கத்தில் இருந்து, நடிகர் குமரிமுத்துவை நீக்கும் தீர்மானத்தை அமல்படுத்த சென்னை சிவில் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.

சென்னை, தி.நகரில் உள்ள நடிகர் சங்கத்தின் இடத்தில் கட்டுமானம் கட்டுவதற்கான ஒப்பந்தத்தால் சங்கத்துக்கு ரூ. 150 கோடி இழப்பு ஏற்பட்டிருப்பதாக வெளியான தகவல் குறித்து வெள்ளை அறிக்கை அனுப்பும் படி, நடிகர் சங்கத்தின் தலைவர் சரத்குமார் மற்றும் பொதுச் செயலர் ராதாரவிக்கு சிரிப்பு நடிகர் குமரிமுத்து கடிதம் ஒன்றை அனுப்பினார்.

நடிகர் சங்கத்தில் இருந்து குமரிமுத்துவை நீக்க இடைக்கால தடை

இதையடுத்து, குமரிமுத்துவிடம் விளக்கம் கேட்டு நடிகர் சங்கத்தில் இருந்து 'நோட்டீஸ்' ஒன்று அனுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த குமரிமுத்து, கடந்தாண்டு மார்ச் மாதம் நடைபெற்ற நிர்வாகக் குழு கூட்டத்தில் விளக்கமும் அளித்தார்.

அதன் தொடர்ச்சியாக, நடிகர் சங்கத்தில் இருந்து குமரிமுத்துவை நீக்குவது என நிர்வாகக் குழு முடிவெடுத்தது. அந்த நடவடிக்கைக்கு ஒப்புதல் வழங்கி, கடந்த ஆண்டு செப்டம்பரில் நடந்த பொதுக்குழுவில் தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது.

இந்த தீர்மானத்தை எதிர்த்து, சென்னை சிவில் நீதிமன்றத்தில் குமரிமுத்து மனு ஒன்றைத் தாக்கல் செய்தார். அதில், அவர் ‘பத்திரிகைகளில் வந்த செய்திகளால், நடிகர் சங்கத்தின் புகழுக்கு களங்கம் ஏற்பட்டது, உறுப்பினர்களுக்கு குழப்பம் ஏற்பட்டது குறித்து, சங்கத்தின் தலைவர்களுக்கு, கடிதம் அனுப்பினேன். விதிமுறைகளை நான் மீறவில்லை. எனவே, நடிகர் சங்க உறுப்பினரில் இருந்து, என்னை நீக்கியது செல்லாது என, உத்தரவிட வேண்டும்.

பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம், சட்ட விரோதமானது என, உத்தரவிட வேண்டும். தீர்மானத்தை அமல்படுத்த, தடை விதிக்க வேண்டும்' என தெரிவித்திருந்தார்.

இந்த மனுவை விசாரித்த சிவில் நீதிமன்றம், பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை அமல்படுத்த, இடைக்கால தடை விதித்துள்ளது. மேலும், இந்த வழக்கு விசாரணையை, டிசம்பர் 11ம் தேதிக்கு தள்ளி வைத்துள்ளது.

 

காவியத் தலைவன் படத்தை குடும்பத்தோடு பார்த்து கொண்டாடுங்க: விஜய்

சென்னை: காவியத் தலைவன் படத்தை குடும்பத்தோடு பார்க்க வேண்டும் என்று இளைய தளபதி விஜய் தெரிவித்துள்ளார்.

வசந்தபாலன் இயக்கத்தில் சித்தார்த், பிரித்விராஜ், வேதிகா உள்ளிட்டோர் நடித்த காவியத்தலைவன் படம் கடந்த வெள்ளிக்கிழமை ரிலீஸானது. ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ள இந்த படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

இந்நிலையில் காவியத்தலைவன் படத்தை இளையதளபதி விஜய் பார்த்துள்ளார். படம் குறித்து விஜய் கூறுகையில்,

அண்மை காலத்தில் வெளிவந்துள்ள சிறப்பான, முக்கியமான தமிழ் படம் காவியத் தலைவன். இது போன்ற படங்கள் வருவது அரிது. அதனால் மக்கள் குடும்பத்தோடு சென்று பார்த்து கொண்டாட வேண்டிய படம். அதிலும் குறிப்பாக வசந்தாபலன் சார் இது போன்ற திரைக்கதையை இது போன்ற பின்னணியில் தெரிவித்துள்ளது பாராட்டுக்குரியது.

படத்தில் பணியாற்றிய சித்தார்த், பிரித்விராஜ், வேதிகா, நீரவ் ஷா, ரஹ்மான் சார் மற்றும் டெக்னீஷியன்களுக்கு என் வாழ்த்துக்கள் என்று தெரிவித்துள்ளார்.

 

விஜய் அண்ணா போன் செய்து பாராட்டினாரே: 'குஷி'யில் 'காவியத்தலைவன்' சித்தார்த்

சென்னை: காவியத் தலைவன் படத்தை பார்த்த விஜய் அண்ணா போன் செய்து பாராட்டினார் என்று நடிகர் சித்தார்த் தெரிவித்துள்ளார்.

வசந்தபாலன் இயக்கத்தில் சித்தார்த், பிரித்விராஜ், வேதிகா உள்ளிட்டோர் நடித்த காவியத்தலைவன் படம் கடந்த வெள்ளிக்கிழமை ரிலீஸானது. படத்திற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. படத்தை பார்த்த திரை பிரபலங்களும் படக்குழுவினரை பாராட்டி வருகிறார்கள்.

விஜய் அண்ணா போன் செய்து பாராட்டினாரே: 'குஷி'யில் 'காவியத்தலைவன்' சித்தார்த்

இந்நிலையில் இது குறித்து சித்தார்த் ட்விட்டரில் கூறுகையில்,

விஜய் அண்ணா காவியத்தலைவன் படத்தை பார்த்துள்ளார். அவருக்கு படம் மிகவும் பிடித்துள்ளது. அவர் எங்களுக்கு போன் செய்து பாராட்டினார். ரசிகர்களுக்கு ஒரு சர்பிரைஸ் காத்திருக்கிறது.

சினிமா துறையினர் எங்களுக்கு போன் செய்து வாழ்த்தி வருகிறார்கள். நல்ல ஊக்கம். இயக்குனர்கள், நடிகர்கள், தயாரிப்பாளர்கள்...வாவ்! என்று தெரிவித்துள்ளார்.

படம் பார்த்த விஜய் அதை அனைவரும் குடும்பத்துடன் சென்று பார்க்க வேண்டும் என மக்களை கேட்டுக் கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

வாடகைக்கு விட்டுட்டு பெட்ரூமை எட்டியா பார்க்க முடியும்?: விபச்சாரம் பற்றி பிரியங்கா சோப்ரா

டெல்லி: தனது வீட்டில் விபச்சாரம் நடந்தது தனக்கு தெரியாது என பாலிவுட் நடிகை என் வீட்டில் விபச்சாரம் நடந்தது எனக்கு தெரியவே தெரியாது: பிரியங்கா சோப்ரா  

அதற்கு அவர் கூறுகையில்,

வீட்டை வாடகைக்கு விட்டுவிட்டால் அங்கு சென்று படுக்கை அறையில் என்ன நடக்கிறது என்றா பார்க்க முடியும். அதனால் அங்கு நடந்தது பற்றி எனக்கு எதுவுமே தெரியாது. இந்த வழக்கு பற்றி போலீசார் விசாரணை நடத்தி எது கூறினாலும் அதை நான் கேட்டுக் கொள்வேன்.

இது போலீஸ் வழக்காகிவிட்டது. போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். நாம் எல்லாம் சட்டத்தை மதிப்பவர்கள். பாஜிராவ் மஸ்தானி படப்பிடிப்பில் நான் மயங்கியதாக வந்த செய்தியில் உண்மை இல்லை என்றார்.

 

கத்தி படம் பிடித்திருக்கிறது, ஆனால் தெலுங்கு ரீமேக்கில் நான் நடிக்கவில்லை: மகேஷ் பாபு

ஹைதராபாத்: கத்தி திரைப்பட ரீமேக்கில் தான் நடிக்கப்போவதில்லை என்று தெலுங்கு நடிகர் மகேஷ் பாபு தெரிவித்தார்.

ஹுட்ஹுட் புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதி திரட்டும் நிகழ்ச்சிக்கு தெளுஹ்கு திரையுலகம் இன்று ஏற்பாடு செய்திருந்தது. ஹைதராபாத்தில் நடந்த நிகழ்ச்சியில் பல்வேறு முன்னணி நடிகர், நடிகைகள் கலந்து கொண்டனர். ஒவ்வொருவரும் ஒவ்வொரு தீம் வாயிலாக நிகழ்ச்சிகளை நடத்தினர்.

கத்தி படம் பிடித்திருக்கிறது, ஆனால் தெலுங்கு ரீமேக்கில் நான் நடிக்கவில்லை: மகேஷ் பாபு

நடிகர் மகேஷ்பாபு மற்றும் நடிகை சமந்தா ஆகியோர் கேள்வி-பதில் நிகழ்ச்சியை நடத்தினர். அப்போது கத்தி திரைப்பட ரீமேக்கில் நீங்கள் நடிப்பீர்களா என்று சமந்தா, கேட்டதற்கு மகேஷ்பாபு அளித்த பதில்:

நான் கத்தி திரைப்படத்தை பார்த்தேன். அந்த படம் எனக்கு பிடித்திருக்கிறது. சமீப கால விஜய் படங்களில் கத்திதான் பெஸ்ட் படம் என்று நினைக்கிறேன். ஆனாலும், நான் கத்தி படத்தின் ரீமேக்கில் நடிக்க போவதில்லை. ஏனெனில் நான் வழக்கமாக ரீமேக் படங்களில் நடிப்பதை பெரிதாக விரும்புவதில்லை. என்றார்.

இதன்பிறகு தனது வாழ்வின் மகிழ்ச்சி, கஷ்டம் போன்ற பல்வேறு விஷயங்களை கூட்டத்தினரிடையே மகேஷ் பாபு பகிர்ந்து கொண்டார்.

 

மீண்டும் 'வாலு' தள்ளிப் போனது: ரசிகர்களின் ஆசையை நிறைவேற்றாததை நினைத்து சிம்பு வருத்தம்

சென்னை: என் ரசிகர்களின் ஆசையை நிறைவேற்றி வைக்க தவறியதில் வருத்தமாக உள்ளது என்று வாலு பட ரிலீஸ் தள்ளிப்போனது பற்றி சிம்பு தெரிவித்துள்ளார்.

சிம்பு, ஹன்சிகா, சந்தானம் நடித்துள்ள வாலு படம் ரிலீஸாகாமல் இழுத்துக் கொண்டே உள்ளது. இந்நிலையில் தான் படம் கிறிஸ்துமஸ் ஸ்பெஷலாக டிசம்பர் 24ம் தேதி ரிலீஸாகும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் தற்போது பட ரிலீஸ் மீண்டும் தள்ளிப் போயுள்ளது.

மீண்டும் 'வாலு' தள்ளிப் போனது: ரசிகர்களை நினைத்து சிம்பு வருத்தம்   | ஹன்சிகா  

படம் சிம்புவின் பிறந்தநாளையொட்டி பிப்ரவரி மாதம் 3ம் தேதி ரிலீஸ் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து சிம்பு கூறுகையில்,

ஒரு நடிகராக நடிப்பது, ஐடியாக்கள் கொடுப்பது தான் என் பணி. படத்தின் வர்த்தகம் தொடர்பான விஷங்களில் நான் தலையிடுவது இல்லை. என் ரசிகர்களின் ஆசையை நிறைவேற்றி வைக்காததால் நான் அதிருப்தி அடைந்துள்ளேன். ஆனால் இது தான் பிசினஸ் சட்டம். அதை நான் மதிக்கிறேன். வருத்தம் இருந்தாலும் 2015ம் ஆண்டை நான் வாலு படத்துடன் வரவேற்கிறேன்.

அந்த படத்தை அடுத்து இது நம்ம ஆளு ரிலீஸ் ஆகும் என்றார்.

அனைத்தும் திட்டமிட்டபடி நடந்தால் 2015ம் ஆண்டின் துவக்கத்திலேயே 2 சிம்பு படங்கள் ரிலீஸாகும்.