'காமராஜ்' திரைப்படத்துக்கு புதுவை அரசு ஆதரவு!

2004-ல் வெளியான ‘காமராஜ்' திரைப்படம் புதிதாகப் படமாக்கப்பட்ட 20 காட்சிகளுடன் டிஜிட்டல் தொழில் நுட்பத்தில் விரைவில் வெளியாக இருக்கிறது.

தகவல் தொழில் நுட்பம், இணையம், சமூக ஊடகங்களை பயன்படுத்தி நாட்டின் வரலாற்றை தீர்மானிக்கும் இன்றைய நவீன இளைஞர்களிடம் பெருந்தலைவரின் அரசியல் பண்பை எடுத்துச்செல்வதே இந்தப் படத்தின் நோக்கம் என படத்தின் இயக்குநர் அ பாலகிருஷ்ணன் கூறினார்.

'காமராஜ்' திரைப்படத்துக்கு புதுவை அரசு ஆதரவு!

இணைப்புக் காட்சிகளில் காமராஜர் வேடத்தில் பிரதீப் மதுரம் நடித்துள்ளார். சுதந்திரப்போராட்ட தியாகியின் மகனாக இயக்குனர் சமுத்திரகனி நடித்துள்ளார்.

சுமார் 100 திரையரங்குகளில் வெளியாக இருக்கும் இப்படத்தின் வெளியீட்டுச் செலவு தொகை காமராஜர் ஆர்வலர்களிடம் திரட்டப்பட்டு வருகிறது.

இதன் ஓர் அங்கமாக பெருந்தலைவர் காமராஜரின் பக்தராக திகழும் புதுவை முதல்வர் ரங்கசாமி அவர்களிடம் இயக்குநர் அ.பாலகிருஷ்ணன் உதவி கோரினார்.

திரைப்படத்துக்கு உதவி செய்வதாகவும், புதுவையில் திரையிட ஆவன செய்வதாகவும் முதல்வர் கூறினார்.

இளையராஜா இப்படத்துக்கு இசையமைத்துள்ளார். ரமணா கம்யூனிகேஷன்ஸ் இப்படத்தை தயாரித்துள்ளது.

 

கஸ்தூரிராஜா வாங்கிய கடனுக்கு நான் எந்த உத்தரவாதமும் தரவில்லை - ரஜினிகாந்த்

பைனான்சியர் போத்ராவிடம் தனுஷின் அப்பா இயக்குநர் கஸ்தூரிராஜா வாங்கிய கடனுக்கு தான் எந்த உத்தரவாதமும் தரவில்லை என்று நடிகர் ரஜினிகாந்த் சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

கஸ்தூரிராஜா வாங்கிய கடனுக்கு நான் எந்த உத்தரவாதமும் தரவில்லை - ரஜினிகாந்த்

வட சென்னையைச் சேர்ந்த சினிமா பைனான்சியர் போத்ராவிடம் கஸ்தூரிராஜா ரூ 65 லட்சம் கடன் வாங்கியிருந்தார். இந்தத் தொகையை அவர் திருப்பிச் செலுத்தாததால், அவர் மீது மோசடி வழக்குத் தொடர்ந்தார் போத்ரா. அதில், தான் வாங்கிய கடனுக்கு ரஜினிகாந்த் உத்தரவாதம் அளித்துள்ளதாக தன்னிடம் கூறித்தான் கஸ்தூரிராஜா கடன் வாங்கினார் என்றும், இப்போது கடனை திருப்பித் தராததால், ரஜினியை இதில் தலையிடக் கோர வேண்டும் என்றும் கோரியிருந்தார்.

இந்த வழக்கில் ரஜினிக்கு நோட்டீஸ் அனுப்பியிருந்தது நீதிமன்றம்.

இதற்கு பதிலளிக்கும் வகையில் மனு தாக்கல் செய்துள்ள ரஜினிகாந்த், கஸ்தூரி ராஜா வாங்கிய கடனுக்கு தான் உத்தரவாதம் வழங்கவில்லை என்றும், தமது பெயருக்கு களங்கம் விளைவிக்க பைனான்சியர் போத்ரா முயற்சிப்பதாக புகார் தெரிவித்துள்ளார். மேலும் பைனான்சியர் போத்ரா மனுவை தள்ளுபடி செய்யவும் ரஜினிகாந்த் கோரிக்கை விடுத்துள்ளார்.

 

‘பாலிவுட்டின் முடிசூடா மன்னன்’ நடிகர் சசிகபூருக்கு தாதா சாகேப் பால்கே விருது!

டெல்லி: மூத்த பாலிவுட் நடிகரான சசிகபூருக்கு திரைத்துறையின் மிக உயரிய விருதான தாதா சாகிப் பால்கே விருது வழங்கப்பட உள்ளது.

பாலிவுட் திரையுலகில் முடிசூடா மன்னனாக விளங்கிய சசிகபூர், 1938ம் ஆண்டு கொல்கத்தாவில் பிறந்தவர். தனது நான்கு வயது முதலே நடிக்கத் தொடங்கிய சசிகபூர், இதுவரை 160க்கும் அதிகமான படங்களில் நடித்துள்ளார்.

‘பாலிவுட்டின் முடிசூடா மன்னன்’ நடிகர் சசிகபூருக்கு தாதா சாகேப் பால்கே விருது!

நடிப்பு மட்டுமின்றி இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர் என திரைத் துறையில் தன் பன்முகத்திறமைகளோடு ஜொலித்தவர் சசிகபூர். இந்தி படங்கள் மட்டுமல்லாது ஆங்கிலப் படங்களிலும் நடித்துள்ளார் இவர்.

1979ம் ஆண்டு வெளியான ஜூனூன் படத்திற்கு சிறந்த தயாரிப்பாளருக்கான தேசிய விருதைப் பெற்ற சசிகபூர், 1986ம் ஆண்டு நியூ டெல்லி டைம்ஸ் படத்திற்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருதைப் பெற்றார். இதேபோல், 1993ம் ஆண்டு முஹாபிஜ் படத்திற்காக ஸ்பெஷல் ஜூரி பிரிவு விருதும் இவருக்குக் கிடைத்தது.

இவரது சாதனையைப் பாராட்டி, 2010ம் ஆண்டில் பிலிம்பேர் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப் பட்டது. அதனைத் தொடர்ந்து கடந்த 2011ம் ஆண்டு சசிகபூருக்கு பத்மவிபூஷன் விருது வழங்கி இந்திய அரசு கவுரவித்தது.

இந்நிலையில், தற்போது திரைத்துறையின் மிக உயரிய விருதான தாதா சாகிப் பால்கே விருது சசிகபூருக்கு அறிவிக்கப் பட்டுள்ளது.

 

பண மோசடி விவகாரம்: ஹைகோர்ட் உத்தரவுப்படி நடிகை ஷில்பா ஷெட்டி மீது போலீசார் வழக்கு

கொல்கத்தா: பணமோசடி விவகாரத்தில் ஹைகோர்ட் உத்தரவுப் படி நடிகை ஷில்பா ஷெட்டி மற்றும் அவரது கணவர் மீது கொல்கத்தா போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

மும்பையின் பாந்த்ரா பகுதியில் நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார் நடிகை ஷில்பா ஷெட்டி.இந்த நிறுவனம் சார்பில் கொல்கத்தாவை சேர்ந்தா எம்.கே. மீடியா நிறுவனத்திடம் இருந்து ரூ. 9 கோடி பணம் பெறப்பட்டது.

பண மோசடி விவகாரம்: ஹைகோர்ட் உத்தரவுப்படி நடிகை ஷில்பா ஷெட்டி மீது போலீசார் வழக்கு

இந்தப் பணமானது 2 ஆண்டுகளில் 10 தவணைகளாக திருப்பித் தரப்படும் என்றும், தங்களது நிறுவனத்திலிருந்து ரூ. 30 லட்சம் மதிப்பிலான பங்குகள் எம்.கே.மீடியாவுக்கு வழங்கப்படும் என்றும் அப்போது உறுதி அளிக்கப் பட்டுள்ளது. ஆனால், கூறியபடி ஷில்பாவின் நிறுவனம் பணத்தைத் திருப்பித் தரவில்லை.

இது தொடர்பாக எம்.கே.மீடியா நிறுவனம் கொல்கத்தா ஹைகோர்ட்டில் வழக்குத் தாக்கல் செய்தது. இந்த வழக்கை விசாரித்த ஹைகோர்ட், ஷில்பா உள்ளிட்டோர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்த போலீசாருக்கு உத்தரவிட்டது.

அதன்படி எம்.கே. மீடியா நிறுவனம் சார்பில் தேபஷிஸ் குகா என்பவர் கொல்கத்தா ஷேக்ஸ்பியர் சாரணி போலீசில் புகார் செய்தார். இதை பெற்றுக்கொண்ட போலீசார் நடிகை ஷில்பா ஷெட்டி மற்றும் அவரது கணவர் தொழிலதிபர் ராஜ் குந்த்ரா ஆகியோர் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணையை தொடங்கி உள்ளனர்.

 

ரசிகர்களின் கைத்தட்டல் ஆஸ்கார் விருதுக்கு சமம்: நடிகர் டெல்லி கணேஷ்

ஈரோடு: ரசிகர்களின் கைத்தட்டல் ஆஸ்கார் விருதுக்கு சமம் என்று நடிகர் டெல்லி கணேஷ் கூறினார்.

ஈரோடு கவிதாலயம் அமைப்பு சார்பில் குணசித்திர நடிகர் டெல்லி கணேஷுக்கு ஈரோட்டில் ஞாயிற்றுக்கிழமை வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது.

இந் நிகழ்ச்சிக்கு வந்த அவர், நிருபர்களுக்கு அளித்த பேட்டி:

இதுவரை 500 திரைப்படங்கள், 750 தொலைக்காட்சி நாடகங்கள் மற்றும் ஆயிரம் மேடை நாடகங்களிலும் நடித்துள்ளேன். தற்போது நடிகர் கமலின் பாபநாசம், ஜோதிகா நடித்த 36 வயதினிலே ஆகிய படங்களில் நடித்து வருகிறேன். டெல்லியில் விமானப் படையில் பணியாற்றி, திரைப் படத்துறைக்கு வந்தேன். எனவே, எனக்கு டெல்லி கணேஷ் என்ற பெயரை, இயக்குநர் பாலச்சந்தர்தான் வைத்தார்.

ரசிகர்களின் கைத்தட்டல் ஆஸ்கார் விருதுக்கு சமம்: நடிகர் டெல்லி கணேஷ்

தமிழக திரையுலகை காப்பாற்ற, சென்னையில் திரைப்பட நகரம் உருவாக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். தற்போதுள்ள திரைப்பட நகர், பயனற்ற நிலையில் உள்ளது. ஹைதராபாத்தில் அனைத்து வசதிகளுடன் கூடிய, திரைப்பட நகர் உள்ளது. அதேபோல், சென்னையில் 40 ஏக்கர் பரப்பில் அனைத்து வசதிகளுடன் கூடிய திரைப்பட நகரை உருவாக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து நெருக்கடியை காரணம் காட்டி, பொது இடங்களில் இரவு நேரங்களில் மட்டும் படம் எடுக்க அரசு அனுமதி அளித்து வருகிறது. பகல் மற்றும் இரவு நேரங்களில் பொது இடங்களில் படப்பிடிப்பை நடத்த அரசு அனுமதி அளிக்க வேண்டும்.

கோவில்கள் உள்ளிட்ட முக்கிய பகுதிகளில், திரைப்படத் துறையினர் சேதம் செய்கிறார்கள் என்ற குற்றச்சாட்டை கூறி, அங்கு படப்பிடிப்புப் பணிகள் மேற்கொள்ளத் தடை விதிக்கப்படுகிறது. திரைப்படம் எடுக்கவே நாங்கள் உள்ளோம். திரைப்படப் படப்பிடிப்பு என்ற பெயரில் முக்கிய இடங்களை கெடுக்க நாங்கள் இல்லை. எனவே, பிரபலமான கோவில்களிலும் படப்பிடிப்பு மேற்கொள்ள அரசு அனுமதிக்க வேண்டும்.

எனக்கு, உலக நாயகன் கமல்ஹாசனை பிடிக்கும்.

மதம், ஜாதி உள்ளிட்ட பிரச்னைகளை தூண்டாத வகையில் தயாரிக்கப்படும் குறைந்த பட்ஜெட் படங்களுக்கு அரசு வரிவிலக்கு அளிக்க வேண்டும்.

சேரனின் சிடி திட்டம், சிறிய பட்ஜெட் பட இயக்குநர்கள் மற்றும் தயாரிப்பாளர்களை காக்கும் திட்டமாகும். ரசிகர்கள் ஏற்றுக்கொள்ளாததால், கதாநாயகனாகவும், வில்லனாகவும் நடிப்பதில் எனக்கு ஆர்வமில்லை. அதேபோல், அரசியலிலும் எனக்கு ஈடுபாடில்லை.

எனது மகன் மகா தற்போது ஒரு படத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார். விரைவில் படத்துக்கான தலைப்பை வெளியிடுவோம்.

தமிழ் படத்துக்கு ஆஸ்கார் விருது கிடைக்கவில்லையே என்ற வருத்தம் அனைத்து தமிழ் சினிமா கலைஞர்களிடமும் உள்ளது. ஆனால், என்னை பொறுத்தவரை, ரசிகர்களின் கைத்தட்டல்களே நல்ல கலைஞனின் ஆஸ்கார் விருதாகும்," என்றார் டெல்லி கணேஷ்.

இந் நிகழ்ச்சியில் கொங்கு கலையரங்கத் தலைவர் பாலு (எ) பாலசுப்பிரமணியன், செயலர் ராஜமாணிக்கம், வேளாளர் கல்வி நிறுவனங்களின் தாளாளர் எஸ்.டி.சந்திரசேகர், சென்னிமலை எம்.பி.நாச்சிமுத்து என்.ஜெகநாதன் பொறியியல் கல்லூரித் தாளாளர் வசந்தா சுத்தானந்தன், கவிதாலயம் ராமலிங்கம் உள்பட பலர் பங்கேற்றனர்.

கடந்த கல்வி ஆண்டு அரசுப் பொதுத் தேர்வுகளில் ஈரோடு மாவட்ட அளவில் ஒவ்வொரு பள்ளிகளிலும் முதலிடம் பிடித்த மாணவ, மாணவிகளுக்கு முதல்வன் விருதை, நடிகர் டெல்லி கணேஷ் வழங்கினார்.

 

கன்னத்தில் கை வைத்த அன்னக்கொடி.. காரணம் ராசா!

சென்னை: முன்னாள் கனவுக்கன்னியின் மூத்த வாரிசு நடிகைக்கு, தன் தாயின் கிளாசிக் படங்களை ரீமேக் செய்து நடிக்க வேண்டும் என்ற ஆசை ஏற்பட்டுள்ளதாம்.

இந்தப் பட்டியலில் தாயை அறிமுகம் செய்த கிங் இயக்குநரின் மூன்று படங்களும் அடக்கம். எனவே, தாயின் படங்களில் தன்னை வைத்து ரீமேக் செய்யும்படி இயக்குநருக்கு தூது அனுப்பியுள்ளார் நடிகை.

ஆனால், ‘அவையனைத்தும் கிளாசிக் படங்கள். எனவே, அவற்றை உன்னை நடிக்க வைத்து பிளாப் படங்கள் ஆக்க விரும்பவில்லை. மேலும், அப்படங்களை ரீமேக் செய்யும் திட்டமே தனக்கில்லை' என கறாராகச் சொல்லி விட்டாராம்.

இதனால், நடிகை ரொம்பவே அப்செட் ஆகிவிட்டாராம். அம்மாவை அறிமுகப் படுத்தி, முகவரி தந்தவராயிற்றே என அவரது கொடி படத்தில் நடித்து தான் நான் என் மார்க்கெட்டை இழந்தேன் என பார்ப்பவர்களிடத்தில் எல்லாம் புலம்பி வருகிறாராம்.

என்னம்மா இப்டி பண்றீங்களே....