விவாகரத்து வழக்கை இன்றே விசாரியுங்கள்: பிரபு தேவா திடீர் மனு


சென்னை: தள்ளிப் போடப்பட்ட தனது விவாகரத்து வழக்கை இன்றே விசாரிக்குமாறு நடிகர் பிரபு தேவா திடீர் மனு தாக்கல் செய்துள்ளார்.

நடிகர் பிரபுதேவாவும் அவரது மனைவி ரம்லத்தும் சில மாதங்களுக்கு முன்பு பரஸ்பர முறையில் விவாகரத்து செய்து கொள்வதாக குடும்ப நல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.

பிரபுதேவா தனது இரு மகன்கள் மற்றும் ரம்லத்துக்கு கிழக்கு கடற்கரையில் உள்ள வீடு, அண்ணாநகரில் உள்ள வீடு மற்றும் ஹைதராபாத்தில் உள்ள இரண்டு பிளாட்டுகள் போன்றவற்றை எழுதி கொடுப்பதாக உத்தரவாதம் அளித்திருந்தார்.

இதையடுத்து ரம்லத் விவாகரத்துக்கு சம்மதித்தார். கடந்த வியாழக்கிழமை இவ்வழக்கு சென்னை முதன்மை குடும்ப நல நீதிமன்ற நீதிபதி ராஜா சொக்கலிங்கம் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது பிரபுதேவாவும், ரம்லத்தும் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை.

இதையடுத்து வழக்கு விசாரணையை வருகிற 10-ந் தேதிக்கு நீதிபதி தள்ளி வைத்தார்.

இந்த நிலையில் நீதிமன்றத்துக்கு இன்று சனிக்கிழமை காலை திடீரென வந்தார் பிரபுதேவா. காருக்குள்ளேயே தன்னை மறைத்துக் கொண்டு உட்கார்ந்திருந்த அவர், நீதிபதிகள் வந்ததும் உள்ளே நுழைந்து ஒரு மனுவை தாக்கல் செய்தார்.

தனு வழக்கை இன்றே விசாரிக்க வேண்டும் என்று கோரி நீதிபதி பாண்டியன் முன்பு மனுதாக்கல் செய்தார். பிரபுதேவா கோரிக்கை ஏற்கப்படுமா? என்பது இன்று தெரிந்துவிடும்.
 

நடிகை ராதா தோட்ட காவலாளிக்கு அரிவாள் வெட்டு-2 பேர் கைது


நெல்லை: ஏர்வாடி அருக நடிகை ராதாவுக்குச் சொந்தமான தோட்டத்தின் காவலாளிக்கு அரிவாள் வெட்டு விழுந்தது. இது தொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

ஏர்வாடி-திருங்குடிக்கு ரோட்டில் நடிகை ராதாவுக்கு சொந்தமான தோட்டம் உள்ளது. இங்கு திருவனந்தபுரம் பாலராமபுரத்தை சேர்ந்த ரவி என்பவர் காவலாளியாக உள்ளார். நேற்று இங்கு வள்ளியூர் கோட்டையடி தெருவைச சேர்ந்த ராஜேந்திரன், ஏர்வாடி காந்திநகர் வேலு, மற்றும் சரவணன், ஜெயகுமார், மகேஷ், வசந்த், பாபு ஆகியோர் இளநீர் வாங்குவதற்காக வந்தனர்.

பின்னர் அவர்கள் இளநீர் வாங்கி வி்ட்டு பணம் கொடுக்காமல் சென்றனர். இதனை ரவி கண்டித்தார். இதையடுத்து அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. ஆத்திரமடைந்த ராஜேந்திரன் உள்ளிட்ட 7 பேரும் அவரை அரிவாளால் வெட்டினர். இதில் படுகாயம் அடைந்த ரவி நெல்லை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

இதுகுறித்து ஏர்வாடி போலீசில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் முத்துராஜ், தனி்ப்படை சப்-இன்ஸ்பெக்டர் சிவசுப்பு மற்றும் போலீசார் விசாரணை நடத்தி ராஜேந்திரன், வேலு ஆகியோரை கைது செய்தனர். மற்ற 5 பேரை தேடி வருகின்றனர்.
 

கார்த்தி திருமணத்துக்காக கோவை வந்தார் நக்மா!


நாளை நடக்கும் நடிகர் கார்த்தியின் திருமணத்தில் பங்கேற்பதற்காக, நடிகை நக்மா இரு தினங்களுக்கு முன்பே கோவை நகருக்கு வந்துவிட்டார்.

கார்த்தியின் அண்ணி நடிகை ஜோதிகாவின் அக்கா நக்மா. தங்கை மைத்துனர் திருமணம் என்பதால் அவரும் உரிமையுடன் கல்யாண வேலைகளில் களமிறங்கியுள்ளார்.

திருமணத்துக்கு இன்னும் 1 நாள் மட்டுமே உள்ள நிலையில் நடிகர் சூர்யா, மணமகன் கார்த்தி, நடிகை ஜோதிகா ஆகியோர் கோவையில் உள்ள முக்கிய பிரமுகர்களுக்கு தாங்களே நேரில் போய் அழைப்பு வைத்து வருகின்றனர்.

உறவினர்கள், விவிஐபிகள் அனைவரும் தங்குவதற்கு வசதியாக கோவையில் உள்ள ஓட்டல் லீ மெரிடியன், ரெசிடென்சி, ஜென்னி கிளப் மற்றும் முக்கிய ஓட்டல்களில் 600 அறைகள் முன் பதிவு செய்யப்பட்டுள்ளன.

திருமணம் நடக்க உள்ள கொடீசியா அரங்கம் வெகு பிரமாண்டமாக அலங்கரிக்கப்பட்டு ஜொலிக்கிறது.
 

எங்கேயும் எப்போதும்..ஈகோ இல்லாத அனன்யா, அஞ்சலி


எங்கேயும் எப்போதும் படத்தில் நடிகர் விமலுக்கு பதிலாக புதுமுகம் ஷர்வானந்த் நடித்து வருகிறார். இப்படத்தில் அஞ்சலியும், அனன்யாவும் இரு நாயகிகளாக நடித்துள்ளனர்.

பாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோவுடன் சேர்ந்து ஆர். முருகதாஸ் தயாரிக்கும் படம் எங்கேயும் எப்போதும். இதில் 2 நாயகன்கள், நாயகிகள். ஜெய், அஞ்சலி, ஷ்ர்வானந்த் மற்றும் அனன்யா நடிக்கின்றனர். ஷர்வானந்திற்கு இது தான் முத்ல படம். இந்த படத்தி்ற்கு கதை, திரைக்கதை எழுதி இயக்குகிறார் முருகதாஸ் உதவியாளர் சரவணன்.

இது குறித்து சரவணன் கூறியதாவது,

இந்த படத்தில் 2 காதல் ஜோடிகள் உள்ளன. இது அவர்களின் காதல் கதை தான். கிளைமாக்ஸில் 2 ஜோடிகளும் இணைவது போன்று திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. இதில் வில்லனும் கிடையாது, காதல் எதிரிகளும் கிடையாது. என்னடா வில்லனே இல்லை என்று நினைக்கிறீர்களா?

வில்லன் இல்லாமலேயே காதல் என்னவாகிறது என்பதை சுவாரஸ்யமாகக் கூறுகிறோம். ஹீரோயின் லிஸ்டில் சமமான இடத்தில் இருப்பவர்கள் அஞ்சலி, அனன்யா. கொஞ்சம் கூட ஈகோ இல்லாமல் நடிக்கின்றனர். அவர்கள் சேர்ந்து வரும் காட்சிகள் இல்லை. இருப்பினும் அவர்களுக்கு சமமாக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது.

ஷர்வானந்த் கதாபாத்திரத்தில் விமல் நடிப்பதாக இருந்தது. கால்ஷீட் பிரச்சனையால் அவரால் நடிக்க முடியாமல் போனது. 90 சதவீத படபிடிப்பு முடிந்துவிட்டது. வரும் ஆகஸ்ட் மாதம் படத்தை வெளியிட முயற்சி மேற்கொண்டு வருகிறேன் என்றார்.
 

பாலா மீது மேலும் ஒரு முஸ்லிம் அமைப்பு புகார்!


சென்னை: குர்பானி பற்றி அவதூறாக வசனம் வைத்ததற்காக இயக்குநர் மீது பாலா மீது தமிழ்நாடு சுன்னத் ஜமாஅத் போலீஸ் கமிஷனரிடம் புதிய புகார் கொடுத்துள்ளது.

ஏற்கெனவே தேசிய லீக் இது குறித்து கமிஷனரிடம் புகார் செய்துள்ள நிலையில், இப்போது இரண்டாவது புகார் பதிவாகியுள்ளது.

தமிழ்நாடு சுன்னத் ஜமாஅத் மாநில பொதுச் செயலாளர் அக்ரம்கான் சென்னை போலீஸ் கமிஷனருக்கு கொடுத்த புகார் மனுவில், "சமீபத்தில் வெளிவந்து உலகமெங்கும் திரையிடப்பட்டுள்ள அவன்-இவன் திரைப்படத்தில் முஸ்லிம்கள் குர்பாணி கொடுக்கும் புனிதச் செயலை மாபெரும் குற்றச்செயலாக சித்தரித்து காட்சிகளும் வசனங்களும் இடம் பெற்றுள்ளன. இது அரசியல் சாசனத்திற்கு எதிரான குற்ற செயலாகும். முஸ்லிம் சமுதாய மக்களை புண்படுத்துவதாக உள்ளது.

எனவே அவன்-இவன் படத்தின் இயக்குனர் பாலா மற்றும் தயாரிப்பாளர் கல்பாத்தி எஸ். அகோரம் ஆகியோர் மீது மதநம்பிக்கையை புண்படுத்துதல், மத நம்பிக்கை, செயல்பாட்டை குற்றச்செயல்போல் சித்தரித்தது ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்," என்று கூறியுள்ளார்.
 

விசா மோசடி கும்பலுடன் போய் கொரியாவில் மாட்டிய நடிகை லக்ஷா மீட்பு!


சென்னை: படப்பிடிப்பு என்ற பெயரில் விசா மோசடி கும்பலுடன் போய் மாட்டிக் கொண்ட கவர்ச்சி நடிகை லக்ஷா பெப்சி சங்கத்தின் துணையுடன் மீட்கப்பட்டார்.

பிரபல கவர்ச்சி நடிகை லக்ஷா. இவர் முன்னாள் கவர்ச்சி நடிகை பபிதாவின் மகள். லாலி, என்ற படத்தில் லக்ஷா நடித்துவருகிறார். இதன் படப்பிடிப்புக்காக தென் கொரியாவுக்கு லக்ஷாவை அழைத்து சென்றனர்.

அவருடன் சில நடன கலைஞர்களும் , துணை நடிகர்கள் என்ற பெயரில் மேலும் 29 பேரும் ஏறிக்கொண்டனர். தயாரிப்பாளர் செல்லவில்லை. தென் கொரியாவில் லக்ஷா பங்கேற்ற நடன காட்சி 4 நாட்கள் படமாக்கப்பட்டது. அப்போது டெல்லியில் இருந்து சென்ற 29 பேரும் திடீரென மாயமானார்கள்.

லக்ஷாவும் சென்னையில் இருந்து சென்ற நடனக் குழுவினரும் நாடு திரும்ப தென் கொரியா விமான நிலையத்துக்கு வந்தபோது அதிகாரிகள் தடுத்து நிறுத்தினார்கள். டெல்லியில் இருந்து வந்த 29 பேரும் ஜாயிண்ட் விசாவில் வந்திருப்பதால் அவர்களும் வந்தால்தான் நாடு திரும்ப அனுமதிப்போம் என்றனர்.

பெப்சி தலையீடு

லக்ஷா உள்ளிட்ட படக்குழுவினர் அங்குள்ள ஓட்டலில் சிறை வைக்கப்பட்டனர். லக்ஷா தாய் பபீதா இதுகுறித்து பெப்சி யூனியனில் புகார் செய்தார். பெப்சி நிர்வாகிகள் தலையிட்டனர். அவர்கள் முயற்சியால் லக்ஷா விடுவிக்கப்பட்டார்.

நேற்று அவர் டெல்லி வந்து சேர்ந்தார். இன்று காலை அங்கிருந்து விமானத்தில் புறப்பட்டு மதியம் சென்னை வந்து சேர்ந்தார். லக்ஷா மீட்கப்பட்டது பபிதா கூறுகையில், "சிறு தயாரிப்பாளர்கள்தான் இந்த மாதிரி வேலையைச் செய்கின்றனர்.

சினிமாவுக்கு சம்பந்தம் இல்லாத 29 பேரை டெல்லியில் இருந்து அழைத்து போனதால்தான் தென் கொரியாவில் பிரச்சினை ஏற்பட்டுள்ளது.

தயாரிப்பாளர்கள் தென் கொரியாவுக்கு போகவில்லை. இதில் மோசடி நடந்துள்ளது. என் மகளை மீட்டுத் தந்த பெப்சிக்கு நன்றி," என்றார்.
 

யார் கமலுக்கு ஜோடி?

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

யார் கமலுக்கு ஜோடி?

7/2/2011 11:20:28 AM

விஸ்வரூபம் படத்தில் கமலுக்கு ஜோடி சோனாக்‌‌சி சின்கா இல்லை என்பது ஏற்கனவே உறுதியாகிவிட்டது. சோனாக்‌‌சியிடம் வாங்கிய கால்ஷீட்டை முறையாகப் பயன்படுத்தவில்லை என்பதால் அடுத்தப் படத்துக்குப் போய்விட்டார். அப்படியானால் விஸ்வரூபத்தில் யார் கமலுக்கு ஜோடி? சோனாக்‌சி சின்கா மாதி‌ரி இந்திய அளவில் குறைந்தபட்சம் இந்தி அளவில் பிரபலமான ஒருவரையே கமல் தேடி வருகிறார். தீபிகா படுகோனும் அவரது லிஸ்டில் இருப்பதாக கூறுகிறார்கள்.

 

ஒஸ்தியில் விடிவி கணேஷ்

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

ஒஸ்தியில் விடிவி கணேஷ்

7/2/2011 10:54:59 AM

கணேஷை விடிவி கணேஷ் என்று சொன்னால்தான் ரசிகர்களுக்கே தெ‌ரிகிறது. விண்ணைத்தாண்டி வருவாயா படத்தில் சிம்புவுக்கு காதல் காவலனாக இருக்கும் அந்த‌க் கரகரக குரல் தான் கணேஷ். அவர்தான் அப்படத்தின் தயா‌ரிப்பாளர். வானம் படத்திலும் கணேஷின் காட்சிகள் இடம் பெற்றன. யாரு… ரேடியோவை ச‌ரியா டியூன் பண்ணாத மாதி‌ரி பேசுவானே… என்று கணேஷை சந்தானம் அறிமுகப்படுத்தும் விதம் திரையரங்கில் சி‌ரிப்பலையை ஏற்படுத்தியது. இந்த கணேஷ் சிம்புவின் ஒஸ்தியிலும் வருகிறார். சிம்புவின் மாமாவாக. அதாவது ஹீரோயின் ‌ரிச்சாவின் குடிகார தந்தை.

 

ஜூலை 18 முதல் மங்காத்தா இசை!

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

ஜூலை 18 முதல் மங்காத்தா இசை!

7/2/2011 10:50:40 AM

அ‌ஜீத்தின் மங்காத்தா படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் 18ஆம் தேதி நடக்கிறது. யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். மங்காத்தா அ‌‌‌ஜீத்தின் 50வது படம். வெங்கட்பிரபு இயக்கியிருக்கும் இந்தப் படத்தில் த்‌ரிஷா, அர்ஜுன், பிரேம்‌ஜி, லட்சுமிராய் என்று ஏகப்பட்ட நட்சத்திரங்கள். நடிகர்களைப் போலவே பாடல்களும். மொத்தம் ஒன்பது பாடல்கள் கம்போஸ் செய்திருக்கிறார் யுவன். இதில் ராம்‌ஜியின் மச்சி பாட்டிலை திற என்ற பார்ட்டி பாடலும் அடக்கம். வரும் 18ஆம் தேதி இசை வெளியீட்டை நடத்த திட்டமிட்டுள்ளனர். ஏற்கனவே படத்தின் விளம்பரத்துக்காக விளையாடு மங்காத்தா பாடலை மட்டும் வெளியிட்டது நினைவிருக்கலாம்.

 

கரையைக் கடந்த "ரௌத்திரம்"!

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
கரையைக் கடந்த 'ரௌத்திரம்'!

7/2/2011 10:48:46 AM

ஜீவா, ஸ்ரேயா நடித்த 'ரௌத்திரம்' விரைவில் திரைக்கு வர இருக்கிறது. 'கோ' படம் வெற்றி பிறகு ஜீவாவின் மார்கெட் உச்சத்தில் உள்ளது. இந்நிலையில் அவர் நடித்த 'ரௌத்திரம்' படம் மட்டும் அதிகம் அடிப்பட்டது. படம் வருமா வராதா என்று பல்வேறு சந்தேகங்கள் எழுந்தன. கடைசியாக 'ரௌத்திரம்' கரையைக் கடந்திருக்கிறது. ஆம், படத்தின் கடைசி இருநாள் படப்பிடிப்பை புது‌ச்சே‌ரியில் நடத்தியிருக்கிறார்கள். ஆக்சன் படமான இதில் சமூதாய கோபத்துடன் இயங்கும் கோபக்கார இளைஞன் வேடமாம் ‌ஜீவாவுக்கு. அறிமுக இயக்குனர் கோகுல் படத்தை இயக்கியுள்ளார். ஆர்.பி.சௌத்‌ரி தயா‌ரித்திருக்கும் இந்தப் படம் ‌ஜீவாவின் வந்தான் வென்றானுக்கு முன்பாக திரைக்கு வருகிறது.




 

3 பருவங்களில் படமான தாண்டவக்கோனே

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

3 பருவங்களில் படமான தாண்டவக்கோனே

7/2/2011 10:24:59 AM

அம்பீயன்ஸ் மூவி மேக்கர்ஸ் சார்பில் பிரபாகர் சீனிவாசகம் தயாரிக்கும் படம், 'தாண்டவக்கோனே'. சஞ்சய், நந்தகி, சம்பத், கஞ்சா கருப்பு நடிக்கின்றனர். ஒளிப்பதிவு, பானு முருகன். இசை, இளையராஜா. பாடல்கள்: வாலி, முத்துலிங்கம், நா.முத்துக்குமார், சினேகன். சீமான் உதவியாளர் சுப்பு சுஜாதா இயக்குகிறார். படம் பற்றி அவர் கூறியதாவது: விதி சார்ந்த கதையான இதில், சராசரி மனிதனுடைய வாழ்வை, இதுவரை ரசிகர்கள் பார்த்திராத கிளைமாக்ஸ் மூலம் சொல்லியிருக்கிறேன். படத்தை முழுமையாக பார்த்த பிறகு பாடல்களை உருவாக்கினார் இளையராஜா.

மனிதனுடைய வாழ்வில் அம்மாவின் மரணம் எந்தளவு பாதிப்பு ஏற்படுத்தும், பிறகு அவனுடைய வாழ்க்கை எப்படி அமையும் என்பதை சொல்லும், 'நீரால் உடல் கழுவி நித்த நித மூவேளை சோறால் குடல் கழுவும்' என்ற பாடலை இளையராஜா சிறப்பாக எழுதியுள்ளார். இதை மாணிக்க விநாயகம் பாடியுள்ளார். மேலும், இளையராஜா பாடிய 'காட்டுவழி துன்பம் இல்லை. கல்லும்முள்ளும் தொல்லை இல்லை' பாடலும் ரசிகர்களிடம் வரவேற்பு பெறும். குரங்கனி மலைப்பகுதிகளில், இயற்கை வெளிச்சத்தில் காட்சிகளை படமாக்கினோம். கதைக்கு முக்கியம் என்பதால் பனிக்காலம், வெயில் காலம், மழைக்காலம் ஆகிய மாறுபட்ட காலங்களில் படப்பிடிப்பு நடத்தி முடித்தோம். அடுத்த மாதம் படம் ரிலீசாகிறது.

 

சினிமாவில் ஜெயிக்க நேரம்தான் முக்கியம்

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
சினிமாவில் ஜெயிக்க நேரம்தான் முக்கியம்

7/2/2011 10:15:49 AM

வில்லேஜ் தியேட்டர்ஸ் சார்பில் எஸ்.முருகானந்தம் தயாரித்துள்ள படம், 'வாகை சூட வா'. விமல், இனியா, பாக்யராஜ், தம்பி ராமய்யா, பொன்வண்ணன் நடிக்கின்றனர். ஒளிப்பதிவு, ஓம்பிரகாஷ். இசை, எம்.ஜிப்ரான். பாடல்கள்: வைரமுத்து, அறிவுமதி, கார்த்திக் நேத்தா, வே.ராமசாமி. ஏ.சற்குணம் இயக்குகிறார். இப்படத்தின் பாடல் வெளியீட்டு விழா, சென்னையில் நேற்று நடந்தது. விழாவில் பாக்யராஜ் பேசியதாவது:

சினிமாவில் ஜெயிக்க கடின உழைப்பு முக்கியம் என்று நினைத்திருந்தேன். சில சம்பவங்களுக்கு பிறகு நேரம்தான் முக்கியம் என்று உணர்ந்து கொண்டேன். 'களவாணி' படத்தில், முதலில் ஹீரோவாக நடிக்கும் வாய்ப்பு சாந்தனுவுக்குதான் வந்தது. பிறகு என்ன நடந்ததோ தெரியவில்லை, விமல் ஹீரோ என்றார்கள். சற்குணம் வேறொருவர் மூலம், 'பாக்யராஜை கோபித்துக்கொள்ள வேண்டாம் என்று சொல்லுங்கள்' என்று, சொல்லி அனுப்பினார்.

இதற்குமுன் 'சுப்ரமணியபுரம்' படத்திலும் சாந்தனு ஹீரோவாக நடித்திருக்க வேண்டியது. கால்ஷீட் பிரச்னையால் நடிக்க முடியாமல் போனது. இப்படி, சில நல்ல வாய்ப்புகள் சாந்தனுவுக்கு அமையவில்லை. எல்லாம் நேரம்தான் காரணம் என்று நினைத்தேன். இப்போது சற்குணம் 'வாகை சூட வா' படத்தில் என்னை நடிக்க கேட்டபோது, அந்த வாய்ப்பை இழந்துவிடக் கூடாது என்று ஒப்புக்கொண்டேன். இதற்கும் நேரம்தான் காரணம். சினிமாவில் ஜெயிக்க நேரம் ரொம்ப, ரொம்ப முக்கியம். இவ்வாறு பாக்யராஜ் பேசினார். பாரதிராஜா, வைரமுத்து, அமீர், பாண்டிராஜ், சிம்புதேவன், பிரபு சாலமன் உட்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக தயாரிப்பாளர் முருகானந்தம் வரவேற்றார். சற்குணம் நன்றி கூறினார்.




 

லாரன்ஸ் இயக்கத்தில் சரத்குமார்

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

லாரன்ஸ் இயக்கத்தில் சரத்குமார்

7/2/2011 10:10:04 AM

என்.ராதா வழங்கும் ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ், ராகவேந்திரா புரொடக்ஷன் இணைந்து தயாரிக்கும் படம், 'காஞ்சனா'. இது, ராகவா லாரன்ஸ் இயக்கி நடித்த 'முனி' படத்தின் 2ம் பாகம். இதில் சரத்குமார் புதுமையான வேடத்தில் நடிக்கிறார். லட்சுமிராய் ஹீரோயின். ஒளிப்பதிவு, வெற்றி-கிருஷ்ணசாமி. இசை, தமன். பாடல்கள்: விவேகா, வேல்முருகன். ஹீரோவாக நடிக்கும் ராகவா லாரன்ஸ், இதன் கதை, திரைக்கதை, வசனம், பாடல், நடனம், இயக்கம் ஆகிய பொறுப்புகளை ஏற்றுள்ளார். படம் பற்றி அவர் கூறியதாவது:

திகில் காட்சிகளுடன் காமெடி மற்றும் ஆக்ஷன் கலந்த படமாக இது உருவாகியுள்ளது. டிரைலர் மற்றும் பாடல் காட்சிகளை பார்த்த இந்தி நடிகர் சல்மான்கான், இதை இந்தியில் ரீமேக் செய்ய விருப்பம் தெரிவித்துள்ளார். சரத்குமாருக்கு இதுவரை எந்த படத்திலும் கிடைக்காத வேடம். இதற்காக தனது கெட்டப்பை மாற்றி நடித்தார். பிரமாண்டமான சாமி சிலை முன் ஆயிரக்கணக்கான நடனக்கலைஞர்கள் மற்றும் துணை நடிகர், நடிகைகளுக்கு மத்தியில் ஆவேசத்துடன் நான் ஆடி நடித்த கிளைமாக்ஸ் பாடல் காட்சி பரவசமாக இருக்கும். முக்கிய கேரக்டரில் திருநங்கை பிரியா நடிக்கிறார்.  இம்மாதம் ரிலீசாகிறது.

 

மோசடி புகார்: பிரபல தெலுங்கு பட தயாரிப்பாளர் சென்னையில் கைது!


சென்னை: மோசடி வழக்கில் பிரபல தெலுங்கு சினிமா தயாரிப்பாளர் கல்யாண் சென்னையில் கைது செய்யப்பட்டார். பின்னர் அவரை ஆந்திரா போலீசார் ஹைதராபாத் கொண்டு சென்றனர்.

ஆந்திரா மாநிலத்தை சேர்ந்தவர் சில்லர் கல்யாண். இவர், தெலுங்கு பட உலகில் பிரபல தயாரிப்பாளர் ஆவார். இவர் தெலுங்கு படங்களின் வீடியோ உரிமைகளை வாங்கி விற்பனை செய்யும் நிறுவனத்தையும் நடத்தி வந்தார்.

கல்யாண் மீது தெலுங்கு பட உலகின் வீடியோ உரிமை வாங்கித் தருவதாக லட்சக்கணக்கில் பணம் வாங்கி மோசடி செய்து விட்டதாக ஆந்திரா போலீசில் புகார் கொடுக்கப்பட்டது. மேலும் தெலுங்கு சினிமா தயாரிப்பாளர்கள் சிலரது நிலங்கள் மற்றும் விவசாயிகளுக்கு சேர வேண்டிய நிலங்களையெல்லாம் இவர் ஆக்கிரமித்துவிட்டதாகவும் புகார் உள்ளது.

பிரபல தாதா சூரி கொலை வழக்கில் தொடர்புடைய பானு கிரணுடன் இவருக்கு நெருங்கிய தொடர்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது.

ஆந்திரா போலீசார் இவரை தேடி வந்தனர். ஆனால் பட அதிபர் கல்யாண், சென்னை தியாகராயநகரில் உள்ள தனது அடுக்கு மாடி குடியிருப்பு ஒன்றில் தங்கி பதுங்கியிருப்பதாக ஆந்திரா போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இதன் பேரில் நேற்று முன்தினம் ஆந்திரா போலீசார் சென்னை வந்து பட அதிபர் கல்யாணை கைது செய்தனர். பின்னர் அவரை எழும்பூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி, உரிய அனுமதி பெற்று ஆந்திரா அழைத்து சென்றனர். கல்யாண் கைது செய்யப்பட்டது தெலுங்கு பட உலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

'நானே இப்படி என்றால், வடிவேல் நிலைமையை யோசிச்சுப் பாருங்க!' - பாக்யராஜ்


“காலம் மாறிவிட்டது. இனி மைக் பிடித்து பேசாமல் இருப்பதுதான் நல்லது. நானே இப்படி என்றால், வடிவேல் நிலைமையை கொஞ்சம் யோசிச்சிப் பாருங்க, என்றார் இயக்குநரும் நடிகருமான கே பாக்யராஜ்.

‘களவாணி’ படத்தை இயக்கிய ஏ.சற்குணம் அடுத்து, ‘வாகை சூட வா’ என்ற புதிய படத்தை இயக்கியுள்ளார். ‘களவாணி’ பட நாயகன் விமல், இந்த படத்திலும் கதாநாயகனாக நடித்துள்ளார். கதாநாயகியாக கேரள நடிகை இனியா நடித்துள்ளார்.

இந்த படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா, சென்னை சத்யம் தியேட்டரில் நேற்று காலை நடந்தது.

விழாவில், இயக்குநர் கே.பாக்யராஜ் கலந்துகொண்டு பேசும்போது, திமுகவுக்கு தேர்தல் பிரச்சாரம் செய்த திரைக்கலைஞர்களுக்கு ஏற்பட்டுள்ள நிலைமையை குறிப்பிட்டுக் காட்டினார். நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் அவர் தி.மு.க.வுக்காக பிரசாரம் செய்ததையும், இப்போது ஆட்சி மாற்றம் ஏற்பட்டதால், “இனிமேல் அதிகமாக பேசப்போவதில்லை” என்பதையும் குறிப்பிட்டார்.

அவர் கூறுகையில், “முன்பெல்லாம் விழாக்களில் நிறைய பேசுவேன். அந்த காலம் கடந்து விட்டது. இனிமேல் அளந்துதான் பேசுவேன்.

தமிழ்நாட்டில் தேர்தல் முடிவுகள் வெளிவந்தபின், நான் ஊர் ஊராக சுற்ற ஆரம்பித்தேன். கேரளாவில் கொஞ்ச நாட்கள், ஆந்திராவில் கொஞ்ச நாட்கள் என வெளிïர்களில் தங்க ஆரம்பித்தேன்.

என் சூழ்நிலைக்கு தகுந்தபடி, ஒரு மலையாள பட வாய்ப்பு வந்தது. அங்கே போய் நடித்துவிட்டு வந்தேன். என் மகனுக்கு ஒரு தெலுங்கு பட வாய்ப்பு வந்தது. அதனால், ஹைதராபாத்தில் சில நாட்கள் இருந்தேன்.

இனிமேல், நான் அளந்துதான் பேசுவேன். அதிகமாக பேசமாட்டேன். ‘மைக்’கை பிடித்து பேசாமல் இருப்பது நல்லது என்ற முடிவுக்கு வந்து இருக்கிறேன். (சிரித்தபடி), நானே இப்படி என்றால், வடிவேல் நிலைமையை கொஞ்சம் யோசித்துப் பாருங்கள்.

முன்பெல்லாம் சினிமாவில் கடும் உழைப்பு இருந்தால் வெற்றி பெற்று விடலாம் என்று நம்பினேன். இப்போது அப்படி அல்ல. நேரம் நன்றாக இருந்தால்தான் வெற்றி பெற முடியும் என்பதை காலதாமதமாக உணர்ந்தேன்.

‘சுப்பிரமணியபுரம்’ படத்தில் நடிக்கும் வாய்ப்பு முதலில் என் மகனுக்குத்தான் வந்தது. அந்த வாய்ப்பை நழுவ விட்டேன். அடுத்து, ‘களவாணி’ படத்தில் நடிக்கும் வாய்ப்பும் முதலில் என் மகனுக்குத்தான் வந்தது. பிறகு அதுவும் கைநழுவிப் போனது.

என் மகனுக்கு நேரம் நன்றாக இருந்தால், அந்த இரண்டு பட வாய்ப்புகளும் கிடைத்து இருக்கும்,” என்றார்.

விழாவில் இயக்குநர்கள் பாரதிராஜா, எஸ்.ஏ.சந்திரசேகரன், ஆர்.கே.செல்வமணி, தங்கர்பச்சான், வசந்த், சேரன், அமீர், சிம்புதேவன், விஜய், பிரபு சாலமன், ஜனநாதன், பாண்டிராஜ், பொன்வண்ணன், தம்பி ராமையா, கவிஞர்கள் வைரமுத்து, அறிவுமதி, இசையமைப்பாளர் ஜிப்ரான், பட அதிபர் டி.சிவா, நடிகைகள் ராதிகா சரத்குமார், சரண்யா பொன்வண்ணன் ஆகியோரும் பேசினார்கள்.

பட அதிபர் முருகானந்தம் வரவேற்று பேசினார். இயக்குநர் சற்குணம் நன்றி கூறினார்.

 

காஞ்சனாவில் சரத்குமாருக்கு கலக்கல் ரோல்: லாரன்ஸ்


லாரன்ஸ் ராகவேந்திராவின் காஞ்சனாவில் சரத்குமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அவர் வரும் காட்சிகள் பெரும் பொருட்செலவில் படமாக்கப்பட்டுள்ளது. அனேகமாக அவர் முனி படத்தில் ராஜ்கிரண் நடித்த கேரக்டரில் நடித்திருக்கலாம் எனக் கருதப்படுகிறது.

டான்ஸ் மாஸ்டராக அறியப்பட்ட லாரன்ஸ் ராகவேந்திரா முனி என்ற படத்தில் ஹீரோவாக கலக்கியிருந்தார். அப்படத்தின் அடுத்த பாகமான காஞ்சனாவை இப்போது எடுத்து வருகிறார். முனியில் லாரன்ஸுக்கு ஜோடியாக வேதிகா நடித்தார். காஞ்சனாவில் லக்ஷ்மி ராய் நாயகியாக நடிக்கிறார். முதலில் இந்த ரோலில் நடிப்பதாக இருந்தவர் அனுஷ்கா. ஆனால் திடீரென அவர் ஜகா வாங்கி விடவே லக்ஷ்மி உள்ளே வந்தார்.

இந்த படத்தில் சரத்குமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது. அவர் வரும் இறுதிக் கட்ட காட்சிகளை பெரும் பொருட்செலவில் படமாக்கியுள்ளனர்.

இது குறித்து லாரன்ஸ் கூறியதாவது,

முனி படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இரண்டாம் பாகம் எடுக்க தீர்மானித்து அதற்கான திரைக்கதையை கடந்த ஆண்டே முடித்து விட்டேன். இந்த படமும் ஆச்சரியம் அளிக்கும் வகையில் இருக்கும். இந்த படத்தின் படிபிடிப்பை பெரும்பாலும் இரவு நேரங்களிலேயே நடத்தப்பட்டது. கோவளம் கடற்கரையில் 10 நாட்கள் இரவில் படபிடிப்பு நடத்தினோம். இதில் சரத் குமார் முக்கிய காதபாத்திரத்தில் நடிக்கிறார். அவர் வரும் இறுதிக் கட்ட காட்சிகளை பெரும் பொருட்செலவில் எடுத்துள்ளோம்.

முனி படத்தை விட இதில் நகைச்சுவைக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்துள்ளோம். இதில் ஹாலிவுட் படங்களுக்கு இணையான திகில் காட்சிகள் இருக்கும் என்றார்.

 

மரியா என் ஹீரோயின்-ராம்கோபால் வர்மா அதிரடி!


கொலை வழக்கிலிருந்து தப்பிய மரியா சூசைராஜை தனது படத்தில் நடிக்க வைக்க ராம் கோபால் வர்மா விருப்பம்

டிவி தொடர் தயாரிப்பாளர் நீரஜ் குரோவர் வழக்கிலிருந்து தப்பி வெளியே வந்துள்ள கன்னட நடிகை மரியா சூசைராஜை தனது அடுத்த படத்தில் நாயகியாக நடிக்க வைக்க விருப்பம் தெரிவித்துள்ளார் ராம் கோபால் வர்மா.

மும்பையைச் சேர்ந்த டிவி தொடர் தயாரிப்பாளர் நீரஜ் குரோவருக்கும், மரியாவுக்கும் இடையே நட்பு இருந்தது. கடந்த 2008ம் தேதி மரியாவைத் தேடி அவரது வீட்டுக்குப் போன மரியாவின் காதலர் ஜெரோம், மரியாவின் படுக்கை அறையில் ஒய்யாரமாக இருந்த குரோவரைப் பார்த்து வெகுண்டு அவரைக் கொலை செய்தார்.

பின்னர் ஜெரோமும், மரியாவும் சேர்ந்து குரோவரின் உடலை 300 துண்டுகளாக வெட்டி காட்டில் போட்டு விட்டனர்.

இந்த கொலை வழக்கில் இருவரும் கைதாகினர். நேற்று இவர்களுக்கான தண்டனையை மும்பை கோர்ட் அறிவித்தது. அதில், கொலை செய்ய வேண்டும் என்ற நோக்கில் ஜெரோம் கொலை செய்யவில்லை. எனவே அவருக்கு 10 ஆண்டு சிறைத் தண்டனையும், தடயங்களை அழிக்க முயன்ற குற்றத்திற்காக மரியாவுக்கு 3 ஆண்டு சிறைத் தண்டனையும் அளிப்பதாக நீதிபதி அறிவித்தார்.

மேலும் மரியா ஏற்கனவே 3 ஆண்டுகளை சிறையில் கழித்து விட்டதால் அவரை விடுவிக்கவும் அவர் உத்தரவிட்டார். இதையடுத்து மரியா இன்றைக்குள் விடுதலையாகவுள்ளார்.

இந்த நிலையில் பரபரப்பு இயக்குநரான ராம் கோபால் வர்மா, மரியாவை தனது அடுத்த படத்தில் நடிக்க வைக்கப் போவதாக கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் ட்வீட்டரில் கூறுகையில், மரியா ஒரு பிரபல நாயகியாக வர வேண்டும் என்று விரும்பினார். ஆனால் மிகப் பிரபலமான கொலையாளி என்ற பெயர்தான் அவருக்குக் கிடைத்தது. எல்லாம் சரியாக அமைந்திருந்தால் அவருக்கும் ஒரு ரங்கீலா கிடைத்திருக்கும்.

இப்போது அவர் சிறையிலிருந்து வெளியே வரும் நிலை உருவாகியுள்ளது. எனவே எனது அடுத்த படத்தில் அவரை நடிக்க வைக்க விரும்புகிறேன் என்றார்.

ஏற்கனவே குரோவர் கொலை வழக்கை அடிப்படையாக வைத்து நாட் எ லவ் ஸ்டோரி என்ற பெயரில் ஒரு படத்தை உருவாக்கியவர் வர்மா என்பது நினைவிருக்கலாம். இப்போது மரியாவை வைத்து படம் எடுக்க வர்மா தீர்மானித்திருப்பதால் மரியாவின் வாழ்க்கையில் புதிய அத்தியாயம் தொடங்குவதாக கருதப்படுகிறது.

 

கோடையில் வசூல் குவித்த கவர்ச்சி படங்கள்

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

கோடையில் வசூல் குவித்த கவர்ச்சி படங்கள்

7/2/2011 10:07:08 AM

பொதுவாக கவர்ச்சி படங்கள் எப்போதாவது வருவதுண்டு. மலையாளம், இந்தி மொழிகளில் வெளியாகும் சில ஆர்ட் படங்கள்கூட கவர்ச்சி படங்களின் போர்வையில் வந்து கலக்கும். ஆனால் இந்த கோடையில் தமிழ் சினிமாவில் கவர்ச்சி படங்கள், ஓசைப்படாமல் கலெக்ஷனை அள்ளிக் கொண்டது. கோடை விடுமுறை துவங்கி பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டதுமே கவர்ச்சி படங்கள் படையெடுக்கத் துவங்கிவிட்டன.

ஏற்கெனவே தமிழில் டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் மிகக் குறைந்த பட்ஜெட்டில் படம் எடுக்கலாம் என்கிற சூழ்நிலை உருவான பிறகு இத்தகைய படங்கள் அதிகமாக தயாரிக்கப்பட்டு வருகிறது. பெரிய அளவில் விளம்பரம் இல்லாமல் சென்னையில் சில தியேட்டர்களிலும் வெளியூர்களில் அதிக தியேட்டர்களிலும் இத்தகைய படங்கள் வெளியிடப்பட்டு கல்லா கட்டுகின்றன. இந்த கோடை காலத்தில் 'மல்லிகா', 'காமேஸ்வரி', 'மோக மந்திரம்', 'அரங்கேற்ற நாள்' என்ற பெயரில் இந்தி படங்கள் டப் செய்யப்பட்டும், நேரடியாகவும் திரையிடப்பட்டது.

'டைட்டானிக்' கதாநாயகி நடித்த 'தி ரீடர்' என்ற ஹாலிவுட் படம் 'கனவு தேவதை' என்ற பெயரில் டப் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது. இதில் 17 வயது இளைஞனுக்கு அவர் காதல் பாடம் சொல்லித் தருவது மாதிரியான கதையாம். ஸ்வேதா மேனன் நடித்த 'தாரம்', 'ரதி நிர்வேதம்' என்ற மலையாளப் படங்கள் கவர்ச்சி சுவரொட்டிகளுடன் கலக்கியது. இவை தவிர நேரடியாக தமிழில் தயாரிக்கப்பட்ட படங்களும் வெளிவந்தது. இன்னும் பல படங்கள் வெளிவரக் காத்திருக்கிறது.

'இது போன்ற படங்களுக்கு தனி ரசிகர்கள் இருக்கிறார்கள். ஆனால் மாதத்துக்கு பத்து படங்கள் வெளியானால் அதுவும் போரடித்து விடும், கவர்ச்சி காட்சிகள் இருந்தால் மட்டுமே இத்தகைய படங்கள் ஓடுவதில்லை. கதையம்சமும் இருந்தால்தான் ஓடும். பெரிய படங்கள் வெளியாகாத காலங்களில் தியேட்டர்காரர்களும் இத்தகைய படங்களை திரையிடுவதில் ஆர்வம் காட்டுகிறார்கள்.  

இத்தகைய படங்களால் சிறிய தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள், தியேட்டர் அதிபர்கள் சிறிதளவு லாபம் பெறுகிறார்கள். தயாரிப்பு செலவு குறைவு, விளம்பரத்துக்கு அதிக செலவு செய்ய வேண்டியதில்லை என்பது போன்ற அம்சங்கள் இருப்பதால் இது போன்ற படங்களின் வருகை எப்போதும் இருந்து கொண்டுதான் இருக்கும். ஆனால் அவை சட்டத்திற்கு உட்பட்டும், நல்ல கருத்துக்களை சொல்லும் படமாக இருந்தால் நன்றாக இருக்கும்' என்கிறார் விநியோகஸ்தர்கள் சங்கத் தலைவர் கலைப்புலி ஜி.சேகரன்.

 

'பிரபுதேவா வாழ்க்கையை தீர்மானிக்கும் உரிமை அவருக்கு இருக்கிறது' - தங்கர்பச்சான்


தனது வாழ்க்கையை தீர்மானிக்கும் உரிமை பிரபுதேவாவுக்கு இருக்கிறது. இப்போதைய சிக்கல்களைக் கடந்து வரும் பக்குவம் அவருக்கு உண்டு," என்றார் இயக்குநர் தங்கர் பச்சான்.

களவாடிய பொழுதுகள் படத்தில் பிரபு தேவா ஹீரோவார நடித்துள்ளார். இந்தப் படத்தை தங்கர் பச்சான் எழுதி இயக்கியுள்ளார்.

இந்தப் படம் வெளிவரவிருப்பதால், அதுகுறித்து நிருபர்களுக்கு தங்கர் பச்சான் பேட்டியளித்தார்.

அந்தப் பேட்டி விவரம்:

'களவாடிய பொழுதுகள்' உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்ட கதையா?

இதுவும் ஒரு காதல் கதைதான். இதற்கு முன் என் இயக்கத்தில், 'அழகி' படம் காதலின் ஒரு பரிமாணத்தை சொன்னது. 'களவாடிய பொழுதுகள்' இன்னொரு பரிமாணத்தை சொல்கிறது. ஒவ்வொரு ஆண்-பெண்ணின் மணவாழ்க்கைக்கு முன்பும் அவர்கள் வாழ்க்கையில் காதல் எட்டிப்பார்த்து இருக்கும்.

வாழ்க்கையின் நெறிகளை மதித்து, மறைத்து வாழ வேண்டிய நிர்ப்பந்தம் ஒவ்வொருவருக்கும் இருக்கிறது. பல நேரங்களில், சமுதாயத்துக்காக பொய் சொல்லி வாழ வேண்டியிருக்கிறது. தமிழ் மரபுகளை காப்பாற்றுகிற ஒவ்வொரு ஆண்-பெண்ணின் பெருமையை இந்த படம் பேசும். காதலித்தவர்கள், காதலிக்கிறவர்கள், காதலிக்கப் போகிறவர்கள் மத்தியில் கேள்வியை எழுப்புகிற படமாக இருக்கும்.

இந்த கதைக்கு பிரபுதேவா எந்தவகையில் பொருத்தமாக இருந்தார்?

பிரபுதேவா நூற்றுக்கு நூறு பொருத்தமாக இருந்தார். அவர் எந்த இடத்தில் நடித்து இருக்கிறார்? என்று கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு கதாபாத்திரமாக வாழ்ந்து இருக்கிறார்.

நான், 1998-ம் வருடம் 'ஜேம்ஸ்பாண்டு' என்ற படத்துக்கு ஒளிப்பதிவு செய்தபோது, பிரபுதேவா எனக்கு அறிமுகம் ஆனார். கடந்த 13 வருடங்களாக நாங்கள் நண்பர்களாக பழகி வருகிறோம்.

நாங்கள் இருவரும் இணைந்து பணிபுரிந்த முதல் படம், 'களவாடிய பொழுதுகள்.' இந்த படத்துக்காக அவரை ஒப்பந்தம் செய்தபோது, எங்கள் இருவருக்கும் இடையே சண்டை வந்து, படம் பாதியில் நின்று விடும் என்று சிலர் கேலி பேசினார்கள். ஆனால், படத்தில் நான் சொன்னதை எல்லாம் பிரபுதேவா செய்தார். அவருடைய நடிப்பில் நான் மெய்மறந்ததுதான் உண்மை. அவர் நடிப்பில், நான் திருத்தம் சொல்லவே இல்லை.

படத்தின் குரல் பதிவு முடிந்ததும், பிரபுதேவா ஒரு மணி நேரம் தனியாக உட்கார்ந்திருந்தார். அவர் கண்கள் கலங்கியிருந்தன. எனது கண்களும்தான்... வாழ்க்கையை உரசிப்பார்க்கிற உரையாடல்களும், சம்பவங்களும் ஒவ்வொருவரையும் பாதிப்பது இயல்புதானே...''

பிரபுதேவாவுக்கு அவருடைய மனைவியுடன் விவாகரத்து, நயன்தாராவுடன் திருமணம் என்று அவருடைய சொந்த வாழ்க்கையில் சில சிக்கல்கள் உள்ளன. இதுபற்றி நீங்கள் அவரிடம் கருத்து சொல்வது உண்டா?

ஒரு நண்பனாக கருத்துக்களை சொல்ல வேண்டிய கடமை இருக்கிறது. அதனை அவர் விரும்பும்போதுதான் செய்ய முடியும். சிக்கலை கடந்து வரும் பக்குவம் அவருக்கு இருக்கிறது. கலைஞர்களுக்கு சிக்கல்கள் உருவாவது இயற்கையானதுதான். அவர் ஒரு பெருங்கலைஞன். அவருக்கான வாழ்க்கையை தீர்மானித்துக்கொள்ளும் உரிமை அவருக்கு இருக்கிறது," என்றார்.

இதே தங்கர் பச்சான், கடந்த ஆண்டு பிரபு தேவாவின் நடிப்பு மற்றும் அவரது ஒத்துழைப்பு குறித்து மிகக் கடுமையாக விமர்சித்திருந்தார். அவர் ஒரு தொழில்முறையற்ற சினிமாக்காரர் என்று கூறியிருந்தது நினைவிருக்கலாம்.
 

வடிவேல் மீதான விஜயகாந்த் மேலாளர் தொடர்ந்த வழக்கு-தள்ளி வைப்பு


சென்னை: விஜயகாந்தின் மேலாளர் தொடர்ந்த நடிகர் வடிவேல் மீதான அடிதடி வழக்கின் இறுதி விசாரணையை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளி வைத்துள்ளது.

சென்னை சாலிகிராமத்தில் வசித்து வந்தவர் வக்கீல் முத்துராம். இவர், தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்தின் மைத்துனர். இவர் 12.9.07 அன்று மரணமடைந்தார். எனவே இறுதி அஞ்சலிக்காக பலர் அவரது வீட்டுக்கு வந்திருந்தனர். அங்கு அதிக கூட்டமாக இருந்ததால், அதே பகுதியில் வசித்து வந்த நகைச்சுவை நடிகர் வடிவேல் தனது அலுவலகத்துக்கு செல்வதில் இடையூறு ஏற்பட்டது.

இதனால் வடிவேலுவுக்கும், இறுதி அஞ்சலிக்கு வந்த சிலருக்கும் இடையே வாய்த் தகராறு ஏற்பட்டது. பின்னர் வடிவேல் வீட்டுக்குச் சென்றுவிட்டார். மீண்டும் வடிவேல் 20 பேரை அழைத்து வந்து விஜயகாந்தின் மேலாளர் சதீஷ்குமாருடன் தகராறு செய்ததாகக் கூறப்படுகிறது. அப்போது சதீஷ்குமாருக்கு காயம் ஏற்பட்டது.

இதுகுறித்து விருகம்பாக்கம் போலீசில் சதீஷ்குமார் புகார் கொடுத்தார். இந்த புகாரின் அடிப்படையில் வடிவேல் உட்பட 20 பேர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.

பதிலுக்கு தன் வீட்டு மீது கல்லெறிந்து, குடும்பத்தினரை காயப்படுத்தியதாக வடிவேல் கொடுத்த புகாரின் அடிப்படையில் சதீஷ்குமார் உட்பட 8 பேர் மீது விருகம்பாக்கம் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.

இந்த நிலையில் வடிவேல் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கை விருகம்பாக்கம் போலீசார் கைவிட்டனர். அந்த வழக்கை ரத்து செய்து மாஜிஸ்திரேட்டு உத்தரவிட்டார். சதீஷ்குமார் மீதான வழக்கு சைதாப்பேட்டை மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் விசாரிக்கப்பட்டு வருகிறது.

வடிவேலுவின் வக்கீல் வரவில்லை

இந்த நிலையில் மாஜிஸ்திரேட்டு உத்தரவை ரத்து செய்து, தனது புகாரை வேறொரு இன்ஸ்பெக்டர் விசாரிக்க உத்தரவிட வேண்டும் என்று உயர்நீதிமன்றத்தில் சதீஷ்குமார் மனு தாக்கல் செய்தார். இந்த மனு, நீதிபதி கே.என்.பாஷா முன்னிலையில் இறுதி விசாரணைக்கு வந்தது.

சதீஷ்குமார் தரப்பில் வக்கீல்கள் நமோ நாராயணன், பெரியசாமி ஆகியோர் ஆஜரானார்கள். ஆனால் வடிவேல் தரப்பில் வக்கீல்கள் யாரும் ஆஜராகவில்லை. எனவே வழக்கின் இறுதி விசாரணையை அடுத்த வாரத்துக்கு நீதிபதி தள்ளி வைத்தார்.