2/10/2011 4:39:14 PM
சமீபத்தில் வெளிவந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் ‘சிறுத்தை’ கார்த்திக்கு நல்ல பெயரை வாங்கித் தந்திருக்கிறது. காமெடி காட்சிகளில் கார்த்தியின் வளர்ச்சி வியக்க வைக்கிறது. அதுமட்டுமின்றி புதுமுக இயக்குனர்களுக்கு கார்த்தி சிறப்பான வரவேற்பு அளிப்பதாக கோலிவுட் பக்கம் பேசப்பட்டு வருகிறது. அடுத்த படத்துக்காக சில புதுமுக இயக்குனர்களிடம் கதை கேட்டு வருகிறார் கார்த்தி.
மேலும், முதல் படம் பருத்திவீரனிலேயே தெலுங்கு ஆடியன்சை ஆட வைத்தவர் கார்த்தி. ஆந்திராவில் இவருக்கு ரசிகப் பட்டாளம் ஏராளம். இதனால் தெலுங்கு ரசிகர்களையும் திருப்தி படுத்த விரும்புகிறார். இதற்காக எந்த ஒரு நேரடி தெலுங்கு படத்திலும் கார்த்தி நடிக்கப் போவதில்லை. அதற்கு பதிலாக, தெலுங்கு இயக்குனர்களை தமிழுக்கு கொண்டு வர கார்த்தி பெரும் முயிற்சி செய்து வருவதாக கோலிவுட் பக்கம் பேசப்பட்டு வருகிறது. இதற்காக பொம்மரிலு பாஸ்கர், கருணாகரன் என்ற பல தெலுங்கு முன்னணி இயக்குனர்களிடம் கதை கேட்டு வருகிறாராம் கார்த்தி.