தாண்டவம் - திரை விமர்சனம்

எஸ். ஷங்கர்
நடிப்பு: விக்ரம், எமி ஜாக்ஸன், அனுஷ்கா, சந்தானம், ஜெகபதிபாபு, நாசர்
இசை: ஜிவி பிரகாஷ்குமார்
ஒளிப்பதிவு: நீரவ் ஷா
பிஆர்ஓ: ஜான்சன்
தயாரிப்பு: யுடிவி
எழுத்து - இயக்கம்: விஜய்
ஏகப்பட்ட பரபரப்பைக் கிளப்பியபடி வெளியாகியிருக்கும் தாண்டவம், ஒரு வழக்கமான பழி வாங்கல் கதைதான். ஆனால் அதற்கு லண்டன் லொகேஷன், கலர் கலராக ஹீரோயின்கள், ஸ்டைலிஷ் மேக்கிங் என கோட்டிங் கொடுத்து, பார்க்க வைத்துவிடுகிறார் இயக்குநர் விஜய்.

thaandavam movie review   

இந்தியாவின் முதன்மையான ரா அதிகாரிகளுள் ஒருவரான விக்ரமுக்கு, தீவிரவாதிகளைக் களையெடுக்கும் வேலை. அவருடைய சக அதிகாரி ஜெகபதிபாபு.திடீரென ஊரில் விக்ரமுக்கு திருமணம் நிச்சயமாகிறது. வேண்டா வெறுப்பாக வருபவர், அனுஷ்காவைப் பார்த்ததும் மனம் மாறி மணக்கிறார். திருமணமான கையோடு வேலை விஷயமாக மனைவியுடன் லண்டன் கிளம்புகிறார். அங்கே வில்லன்கள் சதியில் மனைவியை இழக்கிறார்.. கூடவே தன் இரு கண்களையும்!

இதற்குக் காரணமான 5 வில்லன்களை கண்தெரியாத விக்ரம் எப்படி பழி தீர்க்கிறார் என்பது க்ளைமாக்ஸ்.

இந்தக் கதைதான் தமிழ், தெலுங்கு, இந்தி சினிமாக்களில் பல முறை அடித்துத் துவைக்கப்பட்ட சமாச்சாரமாச்சே... அதற்கு ஏன் இத்தனை ஆர்ப்பாட்டம்... வழக்கு.. பஞ்சாயத்து.. ராஜினாமாக்கள்? என்ற கேள்விதான் முதலில் எழுகிறது.

தெரிந்த கதை, யூகிக்கும் காட்சி நகர்வுகளைக் கூட சுவாரஸ்யமாய் சொல்வது ஒரு திறமைதான். அந்த வகையில் இயக்குநர் விஜய் தன்னைக் காப்பாற்றிக் கொண்டிருக்கிறார்.

விக்ரம் நன்றாக நடித்திருக்கிறார் என்பது எவரெஸ்டில் எக்கச்சக்க பனி என்பது மாதிரி ரொம்ப வழக்கமான சொல்லாடல். ஆனால் அவர் முகத்தில் எட்டிப் பார்க்கும் முதுமை டூயட் காட்சிகளில் நெருடுகிறது. எக்கோலொகேஷன் முறையில், காதுகளைக் கண்களாக அவர் பாவிக்கும் காட்சிகளில் சில ஓஹோ ரகம்.. சில காதுல பூ சமாச்சாரம்.

அனுஷ்கா, எமி ஜாக்ஸன், லட்சுமி ராய் என மூன்று ஹீரோயின்கள். மூவரில் அனுஷ்காவுக்கே வாய்ப்புகளும் கைத்தட்டல்களும் அதிகம்.

படத்தில் ஒரு இளைப்பாறல் என்றால் அது டாக்சி ட்ரைவராக சந்தானம் வரும் காட்சிகள்.

வெட்டி ஆபீசராக வருகிறார் நாசர்.

தன்னை வளைக்கும் லண்டன் போலீசை, நிராயுதபாணியாக இருக்கும் விக்ரம் சுட்டுக் கொல்லும் காட்சி, சந்தானம் காமெடியைவிட டாப்!!

அதேபோல, அந்த தீவிரவாதிகளை அழிக்கப் போடும் பிளானை பென் ட்ரைவில் அனுப்புவது. 'என்னப்பா... இன்னும் கடுதாசி காலத்திலேயே இருக்கீங்களே' என்ற கமெண்டடிக்கும் அளவுக்கு இப்படி சில காட்சிகள். தவிர்த்திருக்கலாம்.

படத்தில் ஈர்க்கும் விஷயம் நீரவ் ஷாவின் ஒளிப்பதிவு. வேண்டா வெறுப்பாக கேட்க வைக்கும் விஷயம் ஜிவி பிரகாஷின் இசை. கிராமத்துப் பாடல் என்ற பெயரில் அவர் 'படுத்தியிருக்கும்' அனிச்சம் பூவழகியைக் கேட்ட பிறகு... 'தம்பி, நீங்க இன்னும் நல்ல கிராமிய இசை கேட்கணும்!'

ஏகப்பட்ட பஞ்சாயத்துக்களைச் சந்தித்ததாலோ என்னமோ பெரிய ஈர்ப்போ எதிர்ப்பார்ப்போ இல்லாமல்தான் தாண்டவம் படத்தைப் பார்க்க நேர்ந்தது.

அதுகூட ஒருவிதத்தில் நல்லதுதான். தாண்டவம் ஆனந்த தாண்டவமாக இல்லையென்றாலும், மோசமான ஆட்டம் என்று சொல்லும்படி இல்லை. கதையில் சறுக்கினாலும், காட்சிப்படுத்திய விதத்தில் பார்வையாளர்கள் கவனத்தை வென்றிருக்கிறார் விஜய்!

Read in English: Thaandavam Movie Review
 

டான்ஸில் அம்மா, நடிப்பில் அப்பாவை நினைவுபடுத்தும் ஸ்ருதி: அக்ஷய் குமார்

Shruti Reminds Akshay Kamal Sarika   

மும்பை: ஸ்ருதி ஹாஸனின் நடிப்பு அவரது அப்பா கமலை நினைவுபடுத்துவதாக பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் தெரிவித்துள்ளார்.

ஸ்ருதி ஹாஸன் தற்போது பிரபுதேவா இயக்கத்தில் தமிழில் வெளியான உனக்கும் எனக்கும் சம்திங் சம்திங்கின் இந்தி ரீமேக்கில் நடித்து வருகிறார். இதற்காக பிரபுதேவாவிடமே நடனம் கற்றுக்கொண்டுள்ளார். பாலிவுட் மூலமாகத் தான் ஸ்ருதி நடிகையானார். அவரது முதல் படமான லக் கை கொடுக்காவிட்டாலும் தற்போது ரீமேக் மன்னன் என்று பாலிவுட்டில் பெயர் எடுத்துள்ள பிரபுதேவாவின் படம் ஸ்ருதி மார்க்கெட்டை அங்கே தூக்கி நிறுத்தும் என்று நம்பப்படுகிறது.

இந்நிலையில் ஸ்ருதியைப் பற்றி இந்தி நடிகர் அக்ஷய் குமார் கூறுகையில்,

ஸ்ருதியின் நடனத்தைப் பார்க்கையில் அவரது அம்மா சரிகா ஞாபகம் வருகிறது. அவரது நடிப்பைப் பார்க்கையில் அப்பா கமல் ஹாஸன் ஞாபகம் வருகிறது. ஸ்ருதி ஒரு சமத்துப் பொண்ணு என்றார்.

 

'தல' அஜீத்தின் அடுத்த படத்தலைப்பு என்ன தெரியுமா?

சென்னை:

அஜீத்தின் குமாரின் அடுத்த படத்தின் தலைப்பு என்ன என்பது தெரிந்துவிட்டது.

அஜீத்தின்அடுத்த படத்தின் தலைப்பு வெளியிடப்பட்டுள்ளது. விஷ்ணுவர்தன் இயக்கத்தில் அவர் நடித்து வரும் படம் அல்ல. அந்த படத்தின் தலைப்பை இன்னும் ரகசியமாகத் தான் வைத்துள்ளனர். நாம் சொல்வது அஜீத்தின் 53வது படத்தின் தலைப்பு. அதாவது விஷ்ணுவர்தன் படத்தை முடித்துவிட்டு அவர் சிறுத்தை இயக்குனர் சிவா இயக்கத்தில் நடிக்கிறார்.

இந்த படம் அஜீத்தின் 53வது படமாகும். அதன் தலைப்பு தான் கசிந்துள்ளது. 'வெற்றி கொண்டான்', தலைப்பு எப்படி இருக்கு? இப்படத்தில் அஜீத் ஜோடியாக அனுஷ்கா நடிப்பார் என்று தெரிகிறது. அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானவுடன் சொல்கிறோம். வெற்றி கொண்டான் ஷூட்டிங் வரும் டிசம்பர் மாதம் துவங்கும் என்று கூறப்படுகிறது.

அதென்ன வெற்றி கொண்டான் என்று நம்மிடம் தலைப்பைத் தெரிவித்தவர்களிடம் கேட்டதற்கு, அஜீத்தின் இமேஜிற்கு இந்த தலைப்பு தான் பொருத்தமாக இருக்கும் என்பதால் அதை தேர்வு செய்துள்ளனர் என்றனர்.

 

'தல' அஜீத்தின் அடுத்த படத்தலைப்பு என்ன தெரியுமா?

28 Ajith Kumar S Next Movie Title Revealed

சென்னை: அஜீத்தின் குமாரின் அடுத்த படத்தின் தலைப்பு என்ன என்பது தெரிந்துவிட்டது.

அஜீத்தின்அடுத்த படத்தின் தலைப்பு வெளியிடப்பட்டுள்ளது. விஷ்ணுவர்தன் இயக்கத்தில் அவர் நடித்து வரும் படம் அல்ல. அந்த படத்தின் தலைப்பை இன்னும் ரகசியமாகத் தான் வைத்துள்ளனர். நாம் சொல்வது அஜீத்தின் 53வது படத்தின் தலைப்பு. அதாவது விஷ்ணுவர்தன் படத்தை முடித்துவிட்டு அவர் சிறுத்தை இயக்குனர் சிவா இயக்கத்தில் நடிக்கிறார்.

இந்த படம் அஜீத்தின் 53வது படமாகும். அதன் தலைப்பு தான் கசிந்துள்ளது. 'வெற்றி கொண்டான்', தலைப்பு எப்படி இருக்கு? இப்படத்தில் அஜீத் ஜோடியாக அனுஷ்கா நடிப்பார் என்று தெரிகிறது. அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானவுடன் சொல்கிறோம். வெற்றி கொண்டான் ஷூட்டிங் வரும் டிசம்பர் மாதம் துவங்கும் என்று கூறப்படுகிறது.

அதென்ன வெற்றி கொண்டான் என்று நம்மிடம் தலைப்பைத் தெரிவித்தவர்களிடம் கேட்டதற்கு, அஜீத்தின் இமேஜிற்கு இந்த தலைப்பு தான் பொருத்தமாக இருக்கும் என்பதால் அதை தேர்வு செய்துள்ளனர் என்றனர்.

 

'மசாஜ்' செய்வதில் கிரிக்கெட் வீரர் ஆசிப் 'சூப்பர்'... புளகாங்கிதமடையும் வீணா மாலிக்!

மும்பை: பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் முகம்மது ஆசிப்புடன் முன்பு தீவிரக் காதலில் இருந்தவரான பாகிஸ்தான் நடிகை வீணா மாலிக் தனது பழைய காதல் மற்றும் காதலர் குறித்து உணர்ச்சிமயமாக பேசியுள்ளார். ஆசிப், மசாஜ் செய்து விடுவதில் வல்லவர் என்றும் அவர் புளகாங்கிதத்துடன் கூறியுள்ளார்.

mohd asif was better at foot massage
Close
 
கிரிக்கெட் சூதாட்டப் புகாரில் ஆசிப் சிக்க ஒரு வகையில் வீணா மாலிக்கும் கூட காரணம்தான். ஆசிப்புக்கு கிரிக்கெட் புக்கிகளுடன் தொடர்பு இருப்பதை வீணாதான் உறுதி செய்தார். ஆனால் இந்த விவகாரத்திற்கு முன்பு இருவரும் நெருக்கமான காதலர்களாக இருந்தனர். காதல் முறிந்த பின்னர்தான் ஆசிப்பைப் போட்டுக் கொடுத்து விட்டார் வீணா.

இந்த நிலையில் தனது பழைய காதல் குறித்துப் பேசியுள்ளார் வீணா. இதுகுறித்து அவர் கூறுகையில், நான் ஆசிப்புடன் இருந்த நாட்கள் அருமையானவை. அவரை நான் நிறைய மிஸ் செய்கிறேன். எனக்காகவே இருந்தவர் ஆசிப்.

அவருடன் நான் இருந்தபோது எனக்கு கால்களில் அருமையாக மசாஜ் செய்வார். உண்மையில் அவர் நல்ல கிரிக்கெட் வீரர் என்பதை விட நல்ல மசாஜ் செய்பவர் என்றுதான் நான் சொல்வேன் என்று கூறியுள்ளார் வீணா.

மறுபடியும் 'மசாஜுக்காக' ஆசிப்பை அணுகும் திட்டத்தி்ல உள்ளாரோ வீணா...!

 

நான் கல்யாணமே பண்ணிக்க மாட்டேம்பா: மல்லிகா ஷெராவத்

I Dont Think I Will Ever Get Married Mallika Sherawat

மும்பை: தான் கல்யாணமே செய்துகொள்ளப் போவதில்லை என்று பாலிவுட் நடிகை மல்லிகா ஷெராவத் தெரிவித்துள்ளார்.

பாலிவுட் நடிகை மல்லிகா ஷெராவத்துக்கும், ஹாலிவுட் நடிகர் ஆன்டனியோ பண்டாரஸு்க்கும் காதல் என்று பேசப்படுகிறது. மல்லிகாவால் தான் பண்டாரஸின் மனைவி பிரிந்து சென்றார் என்று கூட கிசுகிசுக்கப்பட்டது.

இந்நிலையில் திருமணம் குறித்து மல்லிகா ஷெராவத் கூறுகையில்,

நான் திருமணமே செய்துகொள்ள மாட்டேன். திருமணம் ஓல்டு பேஷன். சிங்கிளாக இருக்கத் தான் பிடித்திருக்கிறது. எனது ரசிகர்களின் அன்பை எதற்காக நான் இழக்க வேண்டும்?

எந்த மாதிரி கணவர் வேண்டும் என்று நான் யோசித்துப் பார்த்ததே இல்லை. இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் படங்களில் நடித்து வருகிறேன். அதனால் பிசியாக இருக்கிறேன் என்றார்.

முன்னதாக கேன்ஸ் திரைப்பட விழாவுக்கு சென்ற மல்லிகா ஆன்டனியோ பண்டாரஸுடன் மிகவும் நெருக்கமாகப் பழகியதுடன், நடனமும் ஆடினார். அதன் பிறகு பண்டாரஸுடன் விடுமுறையைக் கழிக்க பாரீஸ் செல்வதாக தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

பட்டையை கிளப்பப் போகும் ராகவா லாரன்ஸ்சின் ‘ரிபல்’

Rebel Gets A

தெலுங்குத் திரையுலகில் பெரும் எதிர்ப்பார்ப்புக்கிடையே ரிலீசாகிறது ‘ரிபல்' திரைப்படம். நம்ம ஊர் ராகவா லாரன்ஸ் எழுதி இயக்கியுள்ள இந்த படத்தில் பிரபாஸ், தமன்னா நடித்துள்ளனர். வியாபாரத்தின் போதே நாற்பது கோடியை தொட்டுவிட்டது. படத்தின் ஆடியோ ஏற்கனவே ஹிட் அடித்து எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. படத்திற்கு சென்சாரில் ‘ஏ' சான்றிதழ் அளித்திருக்கிறார்கள் இருந்தாலும் ஒருவாரத்திற்கான டிக்கெட்டுகள் ஏற்கனவே விற்றுத் தீர்ந்து விட்டன.

லாரன்ஸ்சின் காமெடி ப்ளஸ் ஆக்சன் பாணி படம்தான் இதுவும் எழுத்து இயக்கத்துடன் இசையும், நடனமும் சேர்ந்து தன்னால் எதுவும் முடியும் என்று மீண்டும் நிரூபித்திருக்கிறார் லாரன்ஸ். காஞ்சனா வெற்றிக்குப் பின்னர் லாரான்ஸ்சுக்கு தெலுங்கில் இது சூப்பர் டூப்பர் வெற்றியை கொடுக்கும் என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே நாகர்ஜூனாவை வைத்து லாரன்ஸ் இயக்கிய ‘மாஸ்' திரைப்படம் பெறும் வெற்றி பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 

'பாட்ஷாவும் நானும்...' - ரஜினி பற்றி சுரேஷ் கிருஷ்ணா புத்தகம்!

Suresh Krishna Writes Book On His Experience

சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் தான் பணியாற்றியபோது ஏற்பட்ட அனுபவங்களை பாட்ஷாவும் நானும் என்ற பெயரில் தனி புத்தகமாக எழுதியுள்ளார் இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணா.

அண்ணாமலை, வீரா, பாட்ஷா மற்றும் பாபா என நான்கு படங்களில் ரஜினியை இயக்கியவர் சுரேஷ் கிருஷ்ணா.

இந்த படங்களில் ரஜினியுடன் ஏற்பட்ட நட்பு, அனுபவங்களை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் புத்தகமாக வெளியிடுகிறார்.

இந்தப் புத்தகம் குறித்து சுரேஷ் கிருஷ்ணா தரப்பில் வெளியிட்டுள்ள அறிவிப்பு இது:

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் என்றும் பசுமை நிறைந்த வெற்றிகளான, அண்ணாமலை, பாட்ஷா, வீரா திரைப்படங்களின் இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணா, மேற்கண்ட திரைப்படங்களின் திரையாக்கத்தை இதுவரை இல்லாத அளவிற்கு முதல் முறையாக புத்தக வடிவில் பதிவு செய்துள்ளார்.

அனைத்து விதமான சுவாரசிய சம்பவங்களும், ‘பன்ச்' வசனங்கள் உருவான விதமும், இசை மெட்டுக்கள் உருவான விதமும், இசைக்கோர்ப்புகளின் சூழலும், சண்டைக் காட்சிகளின் சூழ்நிலை விவாதங்களும் எளிய நடைமுறையில் இடம் பெற்றுள்ளன.

அது மட்டுமல்லாமல் ரஜினிகாந்தின் மறுபக்கம், தினசரி படப்பிடிப்பு முடிந்ததும், அவர் எப்படி இருப்பார், ‘மேக்கப்' புடன் இருக்கும் போது அவருடைய கதாபாத்திரத்துடன் ஒன்றி இருக்கும் மனநிலை, வெள்ளோட்ட காட்சியின் போது ஏற்படும் பதட்டம், முதல் பட நடிகன் போன்ற அவரின் செயல்பாடுகள் ஆர்வத்தை தூண்டும் வகையில் எழுதப்பட்டுள்ளன.

ஒரு சாதாரண மனிதனாக, அசாதாரண உச்சநட்சத்திரம் ரஜினிகாந்தைப் பற்றிய இப் புத்தகம் தமிழ், ஆங்கிலம், தெலுங்கு மொழிகளில் வெளிவருகிறது.

‘பாஷாவும் நானும்' என இப்புத்தகத்திற்கு தலைப்பிடப்பட்டுள்ளது.

ஆங்கிலத்தில் ‘My Days With Baasha'என்ற பெயரில் இப்புத்தகம் தயாராகியுள்ளது.

 

இன்னிக்கு தாண்டவம் மட்டும்தான்!

Thaandavam Releasing Big Today   

இந்த வாரம் வெள்ளிக்கிழமை தாண்டவம் படம் மிகப் பிரமாண்டமாக வெளியாகிறது. பெரிய படம் என்பதால், இந்தப் படத்துடன் வேறு படங்கள் போட்டியிடவில்லை.

யுடிவி தயாரிப்பில், இயக்குநர் விஜய் உருவாக்கியுள்ள இந்தப் படத்தில் விக்ரம்-அனுஷ்கா -எமி ஜாக்ஸன் - ஜெகபதி பாபு நடித்துள்ளனர்.

ஜிவி. பிரகாஷ்குமார் இசையமைக்க, பாடல்களை நா.முத்துக்குமார் எழுதியுள்ளார். நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்ய, ஆண்டனி எடிட்டிங் செய்துள்ளார்.

கதைப் பிரச்சினை, தலைப்புப் பிரச்சினை, உதவி இயக்குநர்கள் எதிர்ப்பு என பல்வேறு பிரச்சினைகளைத் தாண்டி இந்தப் படம் இன்று வெளியாகியுள்ளது.

சென்னையில் மட்டும் 55 அரங்குகளில் இந்தப் படம் வெளியாகியுள்ளது. உலகம் முழுவதிலும் 750-க்கும் மேற்பட்ட அரங்குகளில் வெளியாகியுள்ளது.

படம் பற்றி எதிர்ப்பார்ப்பு பெரிதாக இருந்ததால், அட்வான்ஸ் புக்கிங் திருப்திகரமாக இருந்ததாக திரையரங்குகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தப் படத்தோடு ராகவா லாரன்ஸ் இயக்கிய தெலுங்குப் படம் ரிபெல், பிரியதர்ஷன் இயக்கியுள்ள இந்திப் படம் கமால் தமால் மலாமால், அக்ஷய் குமாரின் ஒ மை காட், ஹாலிவுட் படம் ரெஸிடென்ட் ஈவில் ஆகியவையும் வெளியாகின்றன.

 

நீர்குமிழியில் தொடங்கிய திரை வாழ்க்கை: பாலசந்தர்

K Balachandar Look Back On His Films Tirumbipaarkiren

ஜெயா டிவியில் ஒளிபரப்பாகும் திரும்பிப் பார்க்கிறேன் நிகழ்ச்சியில் செப்டம்பர் மாதம் முழுவதும் திங்கள் முதல் வெள்ளி வரை இயக்குநர் சிகரம் கே. பாலசந்தரின் அனுபவங்கள் ஒளிபரப்பாகி வருகிறது.

மலரும் நினைவுகள் என்றைக்கும் இனிமையானவை. அந்த நினைவுகளை மீண்டும் மீண்டும் நினைத்து மகிழ்வது அனைவருக்கும் பிடித்தமானது. அதுவும் பிரபலமானவர்களின் நினைவுகளை அவர்களின் மூலமே தெரிந்து கொள்ளவேண்டும் என்பதற்காகவே தொடங்கப்பட்டதுதான் திரும்பிப்பார்க்கிறேன் நிகழ்ச்சி. செப்டம்பர் மாதம் முழுவதும் கே. பாலசந்தர் தன்னுடைய திரை உலக வாழ்க்கையில் நடந்த பல சம்பவங்களை பகிர்ந்துகொண்டார்.

மேடைநாடகங்களில் வெற்றிகரமான இயக்குநராக, கதாசிரியராக அறியப்பட்ட கே. பாலசந்தர் 1965-ம் ஆண்டு நீர்க்குமிழி என்ற திரைப்படத்தின் மூலம் திரையுலகிற்கு வந்தவர்.

இத்திரைப்படம் மிகுந்த வெற்றிப் படமாக அனைவராலும் பேசப்பட்டது. அதனைத் தொடர்ந்து அபூர்வ ராகங்கள், எதிர்நீச்சல், சர்வர் சுந்தரம், புன்னகை, இரு கோடுகள், வறுமையின் நிறம் சிவப்பு, மூன்று முடிச்சு போன்ற தொடர் வெற்றிப்படங்களை இயக்கினார். அவர்கள், அரங்கேற்றம், அவள் ஒரு தொடர்கதை, என பெண்களின் கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து இயக்கி இயக்குனர் சிகரம் பெருமைக்குரியவராக போற்றப்பட்டவர் கே.பாலசந்தர். இவர் இயக்கியவை பெரும்பாலும் மனித உறவுக்கு இடையிலான சிக்கல்கள், சமூகப் பிரச்சினைகள் ஆகியவற்றை எடுத்துக் கூறும் திரைப்படங்களாக திகழ்ந்தன. அந்த அனுபவங்களையும், அதற்கான கதைக்களம் உருவான விதம் பற்றியும் பாலசந்தர் பகிர்ந்து கொண்டார்.

பழைய திரைப்படங்களை மட்டுமல்லாது இன்றைய இளைஞர்களுக்கு படிப்பினை தரக்கூடிய வகையில் எடுக்கப்பட்ட ‘வானமே எல்லை' திரைப்படம் பற்றி கூறியது சுவாரஸ்யமாக இருந்தது. வாழ்க்கையை வெறுத்துப்போய் வெவ்வேறு சந்தர்ப்பங்களில் இருந்து வெளியேறிய ஐவர் ஒன்றாக சந்தித்து தற்கொலை செய்து கொள்ள முடிவெடுப்பதும். இறுதியில் காந்தி ராமன் என்ற மாற்றுத்திறனாளியின் சாதனையை கண்டு மனம் மாறுவதும் அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட கிளைமேக்ஸ் என்று கூறினார்.

ரஜினிகாந்த், கமல்ஹாசன், சரிதா, சுஜாதா போன்ற பல முன்னணி நடிகர்-நடிகைகளை திரையுலகிற்கு அறிமுகம் செய்த பின்னணியையும் கூறினார். இவர் ஒவ்வொரு திரைப்படம் பற்றி கூறும் போதும் அதிலிருந்து சிறப்பான காட்சிகள் ஒளிபரப்பானது. நான்கு வாரமும் ஒளிபரப்பான இவருடைய வாழ்க்கை அனுபவங்கள் வரும் தலைமுறை இயக்குநர்களுக்கு நிச்சயம் ஒரு பாடமாக அமையும்.

 

சூப்பர் சிங்கர் ஜூனியரில் வீடு வெல்லப்போவது யார்?

Super Singer Junior 3 Finalist

தமிழகத்தின் செல்லக்குரலுக்கான தேடல் சூப்பர் சிங்கர் ஜூனியர் சீசன் 3 இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இறுதிப்போட்டியில் மூன்று போட்டியாளர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். வைல்ட் கார்டு சுற்று மூலம் இன்னும் ஒருவர் தேர்ந்தெடுக்கப்பட்டு இறுதிப்போட்டியில் முதலாவதாக வெற்றி பெருபவர்களுக்கு 60 லட்சம் ரூபாய் மதிப்புள்ள வீடு பரிசாக வழங்கப்படும்.

விஜய் டிவியின் சூப்பர் சிங்கர் ஜூனியர் சீசன் 3 இப்பொழுது அரையிறுதிச் சுற்றை எட்டியுள்ளது. நான்கு போட்டியாளர்கள் இப்பொழுது முதல் மூன்று இடங்களுக்காக போட்டி போட்டு வருகின்றனர். இறுதிச்சுற்றில் முதலிடத்தைப் பிடித்து 60 லட்சம் ரூபாய் மதிப்புள்ள வீட்டினை வெல்லப்போவது யார் என்ற ஆவல் அதிகரித்துள்ளது.

சூப்பர் சிங்கர் ஜூனியர் சீசன் 3 கடந்த 2011 ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இதற்காக தமிழ்நாடு முழுவதிலும் இருந்தும் போட்டியாளர்களை தேர்வு செய்தனர். இறுதியில் 25 போட்டியாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு பல சுற்றுகள் மூலம் அரை இறுதிச் சுற்றுக்கு நான்கு பேர் தேர்தெடுக்கப்பட்டனர். பாடகர் மனோ, சித்ரா, மால்குடி சுபா ஆகியோர் நடுவர்களாக இருந்து செல்லக்குரல்களை தேர்ந்தெடுத்தனர். இறுதிச் சுற்றுக்கான மூன்று போட்டியாளர்களை பாடகி சாதனா சர்க்கம் மனோ, மால்குடி சுபா ஆகியோர் தேர்ந்தெடுத்தனர். சுகன்யா, பிரகதி, கௌதம் ஆகியோர் இறுதிச்சுற்றில் நுழைந்துள்ளனர்.

வைல்ட்கார்டு சுற்று நடைபெறுகிறது. போட்டியில் இருந்து வெளியேறிய 10 குழந்தைகள் மீண்டும் ஒரு வாய்ப்பு பெற்று பாடத் தொடங்கியுள்ளனர். அவர்களில் வெற்றி பெரும் ஒருவருக்கு இறுதிச்சுற்றில் பாட வாய்ப்பு வழங்கப்படும். இவர்களுக்கு உற்சாகமூட்ட உன்னிமேனன், உஷா உதூப், விஜய் யேசுதாஸ் உள்ளிட்ட சிறப்பு நடுவர்களும் இணைந்துள்ளனர். இந்த நிகழ்ச்சியை மா.பா.க ஆனந்த், பாவனா ஆகியோர் தொகுத்து வழங்குகின்றனர். சூப்பர் சிங்கர் ஜூனியராக தேர்ந்தெடுப்படுபவருக்கு 60 லட்சம் ரூபாய் மதிப்புள்ள வீடு ஒன்று பரிசளிக்கப்படும்.

 

டான்ஸ் மாஸ்டருக்கு நிறைய வேலையிருக்கு – ஜான்பாபு

Athiradi Aattam Dance Master S Interview

பாடலுக்கு ஏற்ப நடனம் அமைப்பது சாதாரண காரியமில்லை. அது திரைப்பட இயக்குநரைப் போல சிக்கலான விஷயம்தான் என்று உணர்த்தினார் நடன இயக்குநர் ஜான் பாபு.

ஜெயா டிவியின் அதிரடி ஆட்டம் நிகழ்ச்சியில் பேசிய ஜான்பாபு தான் நடனம் அமைத்த திரைப்படங்களில் தன்னுடைய பணியாற்ற இயக்குநர், கேமராமேன் ஆகியோர் தன்னுடன் எந்த அளவிற்கு ஒத்துழைப்பு கொடுத்தனர் என்பதையும் ஆர்வமாய் தெரிவித்தார்.

ஒரு பாடலுக்கான நடனம் நன்றாக அமைய நடன இயக்குநரின் ஐடியாக்களை திரைப்படத்தின் இயக்குநரும், கேமராமேனும் புரிந்து கொண்டால் மட்டுமே அந்த நடனம் நன்றாக அமையும் என்றும் கூறிய ஜான்பாபு தன்னுடைய நடனத்தின் மீது இயக்குநர்கள் அதிக நம்பிக்கை வைத்தனர் என்று கூறினார்.

தித்திக்குதே படத்தில் அறிமுகமான ஜீவா விற்கு முதல் முதலாக நடனம் அமைத்த விதத்தினை ஜான்பாபு கூறிய விதம் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. ஜெயா டிவியில் செவ்வாய்கிழமை தோறும் 6.30 மணி ஒளிபரப்பாகும் 'அதிரடி ஆட்டம்' நிகழ்ச்சியில் வரும் வாரமும் நடன இயக்குநர் ஜான் பாபு தன்னுடைய அனுபவங்களை பகிர்ந்து கொள்கிறார்.

 

உடல் உறுப்புகளை தானம் செய்த 'ஈ' பட இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமவுலி

S S Rajamouli Pledges Donate Organs

ஒரு படம் வெற்றி பெற்றாலே பந்தா காட்டும் இயக்குநர்கள் வரிசையில் ஒன்பது படம் வரிசையாக வெற்றி பெற்றும் விளம்பரப்படுத்திக் கொள்ளாமல் இருப்பவர் எஸ்.எஸ். ராஜமவுலி. ஈகா ( நான் ஈ ) வெற்றிக்குப் பின்னர் சத்தமில்லாமல் ஒரு காரியம் செய்திருக்கிறார்.ஐதரபாத்தில் உள்ள காந்தி மருத்துவக்கல்லூரிக்கு தனது உடல் உறுப்புகளை தானமாக கொடுத்திருக்கிறார்.

இது குறித்து டிவிட்டரில் செய்தி வெளியிட்டுள்ள ராஜமவுலி, என்னுடைய உடல் உறுப்புகள் நான் இறந்த பின்னர் 8 பேருக்கு வாழ்வு அளிக்கும் என்பதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன் என்று கூறியுள்ளார்.

அவரது இந்த செயல் தெலுங்குத் திரையுலகில் இப்போது பெரிய விசயமாக பேசப்படுகிறது.

 

ஜோசியருக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பிய கரீனா கபூர்

Kareena Sends Legal Notice Astrologer For Predicting

பாலிவுட் நட்சத்திரங்கள் ஒவ்வொரு செயலையும் ஜாதகம், ஜோசியம் அடிப்படையில்தான் பார்த்து பார்த்து செய்வார்கள். ஆனால் தனக்கு பலன் குறித்துச் சொன்ன ஜோசியர் ஒருவருக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பியிருக்கிறார் கரீனா கபூர்.

சாயீஃப் அலிகானுடன் காதல், திருமணம் முடிந்துவிட்டது, 250 வது தேனிலவு, என நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக கரீனா கபூர் - சாயீஃப் அலிகான் பற்றிய செய்திகள் இறக்கை கட்டி பறந்து கொண்டிருக்கையில் ஜோசியர் ஒருவர் கரீனாவிற்கு ஜோசியம் சொல்லியிருக்கிறார்.

சாயீஃபை திருமணம் செய்துகொண்டால் உங்கள் வாழ்க்கை நரகமாகிவிடும், சிலமாதங்களிலேயே விவாகரத்து பெற்றுவிடுவீர்கள் என்று கூறி கிரகங்களின் அடிப்படையில் நீங்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ளாமல் இருப்பதே நல்லது என்று பலன் கூறியிருக்கிறார் அந்த ஜோசியர்.

இதனைப் பார்த்த கரீனா என்ன செய்தார் தெரியுமா? தனக்கு ஜோசியம் சொன்னவரின் மீது மான நஷ்ட வழக்கு தொடர்ந்து வக்கீல் நோட்டீஸ் அனுப்பியிருக்கிறார்.

பாவம் அந்த ஜோசியர் அவருடைய ஜாதகத்தை சரியாகப் பார்க்காமல் விட்டுவிட்டார் போலிருக்கிறது.

 

தாண்டவம் படத்தின் கதை என்னுடையதுதான்... அமீர் ராஜினாமா வேதனை அளிக்கிறது - இயக்குநர் விஜய்

Director Vijay S Letter On Thaandavam Issue

சென்னை: தாண்டவம் படத்தின் கதை முழுக்க முழுக்க என்னுடையதுதான். இந்த விவகாரத்தில் அமீர் தன் பதவியை ராஜினாமா செய்திருப்பது வேதனை அளிக்கிறது என்று கூறியுள்ளார் இயக்குநர் விஜய்.

தாண்டவம் கதையின் உரிமை பிரச்சினையில் இயக்குநர்கள் சங்கமே இரண்டாக உடைந்துள்ளது.

இந்த நிலையில், தாண்டவம் படத்தின் இயக்குநர் என்ற முறையில், விஜய் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை:

"தாண்டவம் படத்தின் இயக்குனர், கதாசிரியர் என்ற முறையில் , இப்படத்ன் தொடர்பாக ஏற்பட்ட சில பிரச்சனைகள் குறித்தும், அதில் நீதிமன்றம் மூலம் நியாயம் கிடைத்தது பற்றிய எனது கருத்துக்களை பதிவு செய்ய விரும்புகிறேன்.

கடந்த ஒரு மாத காலமாக, தாண்டவம் திரைப்பட பிரச்சனை தொடர்பாக, இயக்குனர் சங்கம் உதவி இயக்குனர் திரு.பொன்னுச்சாமி தொடுத்த வழக்கை எடுத்து, இரு தரப்புக்கும் நியாயமான முறையில் விசாரித்து வந்ததும், பின் இவ்வழக்கு நீதிமன்றத்துக்கு எடுத்துச் செல்லப்பட அனுமதிக்கப்பட்டதும் யாவரும் அறிந்ததே. உதவி இயக்குனர் பொன்னுச்சாமி தொடுத்த இவ்வழக்கு நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டு இதுநாள் வரையிலான பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது.

இவ்வழக்கை கையிலெடுத்துக் கொண்ட நாள் முதல், நான் முழுமையான ஒத்துழைப்பு தரவிழைந்ததற்கு காரணம் இயக்குனர் அமீர் மற்றும் இயக்குனர் ஜனநாதன் அவர்கள் மேல் வைத்த அளவு கடந்த நம்பிக்கை , சங்கத்தின் மீது எனக்கிருக்கும் அளவற்ற மரியாதை, இவையனைத்தையும் மீறி உதவி இயக்குனர் திரு.பொன்னுச்சாமிக்கு அவர் கதை வேறு, என் கதை வேறு என்று தெளிவுபடுத்த விரும்பியதால், நான் எனது திரைக்கதையை வாசிக்கக் கொடுத்தேன், தொடர்ந்து என் படத்தையும் பார்க்க அனுமதித்தேன்.

இன்று இவ்வழக்கு வெற்றி பெற்றதால், இதுவரை போராடிய நியாயத்தின் பக்கம் கிடைத்த வெற்றிக்காக நான் மகிழ்ச்சியடையலாம், ஆனால் உள்ளூர வேதனையும், வருத்தமும் எனக்குள் இருக்கிறது. காரணம், இப் பிரச்சனை தொடர்பாக, இயக்குனர் அமீர் அவர்கள், தனது இயக்குனர் சங்க பொதுச்செயலாளர் பதவியை ராஜினாமா செய்ததை கேட்டு , அதிர்ச்சி அடைந்தேன்.

உண்மையில் இப்பிரச்சனையை நேர்மையாகவும், உண்மையாகவும் விசாரித்து, இரு குழுவினரையும் படம் பார்க்க வைத்து, அதில் கருத்து வேற்றுமை ஏற்பட்டதால், என்னையும் பொன்னுச்சாமியையும் நீதிமன்றத்துக்கு சென்று சரியான தீர்வு காணும்படி அறிவுறுத்தினார்.

அவர் ஒரு போதும் ஒரு சாராராக நடந்து கொள்ளாமல் உண்மையே வெல்ல வேண்டும் என்று தனது அனைத்து வேலைகளின் நடுவிலும், ஒரு மாத காலமாக எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் போராடினார்.

அப்படி நடுநிலை வகித்த திரு. அமீர் அவர்கள் மீது, இன்று சில பேர் அவதூறு பேசுவதாக அறிந்து மிகவும் வேதனை அடைந்தேன்.

இயக்குனர் சங்கம் இன்று தமிழ்த் திரையுலகில் ஒரு முக்கியமான சங்கமாக உருவெடுத்ததற்கும், காரணம் அமீர் அவர்களும் இன்று பதவி வகிக்கும் சக நிர்வாகிகளுமே காரணம் என்பது மறுக்க முடியாத உண்மை.

அப்பேர்ப்பட்ட ஒருவர் மீது அவதூறு சுமத்துவது நீதியை குலைப்பது போன்ற செயலாகும். இயக்குனர் அமீர் அவர்கள் சங்க நலன் கருதியும், உறுப்பினர்கள் நலன் கருதியும் தனது ராஜினாமா முடிவை மாற்றிக் கொள்ள வேண்டும் என்று உறுப்பினர் என்ற முறையில் ஊடக நண்பர்கள் மூலமாக தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன். "

-இவ்வாறு அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

 

ஸ்ரேயா காரால் ட்ராபிக் ஜாம்.. திட்டித் தீர்த்த வாகன ஓட்டிகள்!

Shriya S Worst Experience With Public

மும்பை: தோழிகளை அழைத்து வர சென்றபோது நடிகை ஸ்ரேயாவின் கார் பஞ்சரானதால் மும்பையில் பெரும் ட்ராபிக் நெரிசல் ஏற்பட்டது. ஸ்ரேயாவை மக்கள் திட்டித் தீர்த்தனர்.

ஸ்ரேயாவின் சொந்த ஊர் மும்பைதான். அவரைப் பார்க்க வெளிநாட்டிலிருந்து சில தோழிகள் வந்துள்ளனர்.

இவர்களை நேரில் வரவேற்க விமான நிலையத்துக்கே கிளம்பினார் ஸ்ரேயா. தோழிகளை ஏற்றிக் கொண்டு உற்சாகமாக வீடு திரும்பிக் கொண்டிருந்தார் ஸ்ரேயா. அப்போது மும்பை மெயின் ரோடில் அவர் கார் பஞ்சராகி நின்றது.

இதனால் பெரும் ட்ராபிக் ஜாம் ஏற்பட்டது. மிகுந்த பதட்டத்துடன் தன் தந்தை மற்றும் உறவினர்களை அழைத்தார் ஸ்ரேயா. அதற்குள் வாகன ஓட்டிகள் ஸ்ரேயாவை சூழ்ந்து கொண்டு திட்ட ஆரம்பித்தனர். வெகு சிலர் மட்டும் வேடிக்கைப் பார்த்தனர்.

வேதனை மற்றும் ஆத்திரத்தில் கண்கலங்க நின்று கொண்டிருந்தார் ஸ்ரேயா.

சற்று நேரத்தில் அவர் தந்தை போலீசாருடன் வந்து சேர, பிரச்சினையை சமாளித்து வீடு திரும்பினார்.

தோழிகள் முன்னிலையில் தனக்கு நேர்ந்த இந்த சங்கடம் குறித்து கருத்து தெரிவித்த ஸ்ரேயா, மிக மோசமான அனுபவம் அது என்றார்.

 

இளையராஜாவை கவுரவிக்க 1000 கிலோ எடையில் 100 மீட்டர் மெகா கேக்!

சென்னை: இந்தியாவின் பிரபல கேக் தயாரிப்பு நிறுவனம் ஒன்று இளையராஜாவைக் கவுரவிக்க 1000 கிலோ எடை கொண்ட, 100 மீட்டர் மெகா கேக் ஒன்றை தயாரித்து வருகிறது.

அந்த கேக்கில் இளையராஜாவின் 1000 புகைப்படங்கள் இடம்பெறுகின்றன.

salute ilayaraja with 100 meter cake
Close
 

முட்டை கலக்காமல் தயாரிக்கப்பட்டுள்ள இந்த சைவ கேக்கில், இளையராஜா தன் இசைப் பயணத்தை ஆரம்பித்த அன்னக்கிளி தொடங்கி, அவர் நடத்திய கச்சேரிகள், சமீபத்திய ரிலீசான நீதானே என் பொன்வசந்தம் வரை புகைப்படங்களை தேதி வாரியாக அதில் இடம்பெறச் செய்கின்றனர்.

வரும் அக்டோபர் 2-ம் தேதி காந்தி பிறந்த நாளில் இந்த கேக் எக்ஸ்பிரஸ் அவென்யூவில் பார்வைக்கு வைக்கப்படுகிறது.

இந்த கேக்கை 25 பேர் கொண்ட குழு தயாரித்துள்ளது. 600 கிலோ சாக்லேட், 150 கிலோ பிரஷ் க்ரீம், 80 கிலோ சர்க்கரை, 240 கிலோ கறுப்பு சாக்லேட், 100 கிலோ வெள்ளை சாக்லேட், 60 கிலோ ஜெல் மற்றும் 600 சர்க்கரை ஏடுகள் கொண்டு இந்த கேக்கை தயாரிக்கின்றனர்.

இதுகுறித்து அந்த நிறுவனத்தின் வர்த்தக தலைவர் விபுல் மெஹ்ரோதா கூறுகையில், "ஒரு சமூக சேவை நோக்கில் இந்த கேக்கை தயாரித்துள்ளோம். கண்காட்சிக்குப் பின்னர், ஒரு சமூக நல அமைப்பிடம் இந்த கேக்கின் விற்பனை உரிமையை வழங்கவிருக்கிறோம்," என்றார்.

கடந்த ஆண்டு, தமிழ் சினிமாவின் 70 ஆம் ஆண்டைக் கொண்டாடும் வகையில் இதே நிறுவனம் ஒரு மெகா கேக் செய்தது நினைவிருக்கலாம்.