கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் இறைவியில் எஸ் ஜே சூர்யா, விஜய் சேதுபதி!

டஜிகர்தண்டா' படத்திற்கு பிறகு கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் ‘இறைவி' படத்தில் எஸ் ஜே சூர்யா மற்றும் விஜய் சேதுபதி இணைந்து நடிக்கிறார்கள்.

திருக்குமரன் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்தில் பாபி சிம்ஹா, கருணாகரன் ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் இறைவியில் எஸ் ஜே சூர்யா, விஜய் சேதுபதி!

இதுகுறித்து அந்நிறுவனம் வெளியிட்டள்ள அறிக்கையில், "இறைவி படத்தில் எஸ்.ஜே.சூர்யா, விஜய் சேதுபதி, பாபி சிம்ஹா ஆகியோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். கருணாகரன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். கதாநாயகிகள் மற்றும் பிற நடிகர்கள், நடிகைகள் விவரம் பின்னர் அறிவிக்கப்படும்.

தொழில்நுட்பத் துறையில் ஒளிப்பதிவாளராக கேவ்மிக் யு ஆரி, இசையமைப்பாளராக சந்தோஷ் நாராயணன், படத் தொகுப்பாளராக விவேக் ஹர்ஷன், கலை இயக்குனராக விஜய் முருகன் ஆகியோர் பணியாற்றுகின்றனர்.

ஏப்ரல் இறுதியில் படப்பிடிப்புக்குச் செல்ல ஆயத்தமாகி வருகிறார்கள்," என்று கூறியுள்ளனர்.

 

மிர்ச்சி சிவா- பாபி சிம்ஹா நடிக்கும் மசாலா படம்


‘ஆல் இன் பிக்சர்ஸ்' முதல் தயாரிப்பாக வெளி வருகிறது ‘ மசாலா படம்'. மிர்ச்சி சிவா, பாபி சிம்ஹா, புதுமுகம் கவுரவ் மற்றும் ‘நில் கவனி செல்லாதே' நடித்த லக்ஷ்மி தேவி ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடிக்கின்றனர். ‘வெண்ணிலா கபடி குழு' படத்தை ஒளிப்பதிவு செய்த லக்ஷ்மன் குமார் இப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகம் ஆகிறார்.

புதுமுகம் கார்த்திக் ஆச்சார்யா இப்படதிற்கு இசையமைக்கிறார். படத்தொகுப்பை ரிச்சர்ட் கெவின் மேற்கொள்கிறார் , கலை இயக்கம் விஜி, நிர்வாக தயாரிப்பை அப்சர் கவனிக்கிறார்.

மிர்ச்சி சிவா- பாபி சிம்ஹா நடிக்கும் மசாலா படம்

வெண்ணிலா கபடி குழு, குள்ள நரி கூட்டம், போடா போடி, பாகன் , தில்லு முல்லு' என பல படங்களுக்கு ஒளிப்பதிவு செய்து லக்ஷ்மன் குமார் இப்படத்தை தயாரிப்பாளர் விஜய ராகவேந்திராவுடன் இணைந்து தயாரிக்கவும் செய்கிறார்.

படம் குறித்து லஷ்மன் குமார் கூறுகையில், 'ஒரு ஒளிபதிவாளருக்கு ஒளியை பதிவு செய்வது மட்டும் பிரதானமில்லை. சுற்றி நடக்கும் விஷயங்களை கண்டும், கேட்டும், உணர்ந்தும் பதிவு செய்துக் கொள்வேன். அப்படி என்னுடைய திரை வாழ்வில் நான் அடிக்கடி சந்திக்க நேர்ந்த ஒரு விஷயம் மசாலா படங்கள் குறித்த விவாதம். அதை ஒட்டி வரும் கருத்துகள்.

நம்முள் இந்த அளவுக்கு ஊடுருவும் இந்த மசாலா படத்தின் தாக்கத்தை முதல் படமாக பதிவு செய்துக் கொள்ள விரும்பினேன். இப்படி ஒரு வித்தியாசமான கருவை மக்கள் இடையே கொண்டு செல்ல பிரதான கருவிகளாக மிர்ச்சி சிவாவும், பாபி சிம்மாவும் நடித்து உள்ளனர். இந்தப் படத்தின் இசை மிகவும் பேசப்படும். இறுதிக் கட்ட பணிகள் நடைப்பெற்றுக் கொண்டு இருக்கிறது. கோடை விடுமுறையில் வெளி ஆக உள்ளது 'மசாலா படம்', என்றார்.

 

குற்றப் பரம்பரையின் வலிகளைச் சொல்லும் வைரமுத்துவின் வரிகளில் தொப்பி!


தொப்பி... குற்றப் பரம்பரை என ஆங்கிலேயர்களால் முத்திரையிடப்பட்ட மலைவாழ் பழங்குடி இனத்தில் வாழும் ஒருவனின் லட்சியத்தையும் அதற்கு அவன் மேற்கொள்ளும் கஷ்டங்களையும் கூறும் கதை இது.

ராயல் ஸ்க்ரீன்ஸ் பரமராஜ் தயாரிப்பில், நிமோ புரடக்ஷன்ஸ் பாலு வழங்கும் இப்படத்தை இயக்குனர் யுரேகா இயக்கியுள்ளார். பிரபல தொலைக்காட்சி தொகுப்பாளர் முரளி ராம் கதாநாயகனாக அறிமுகமாகிறார்.

குற்றப் பரம்பரையின் வலிகளைச் சொல்லும் வைரமுத்துவின் வரிகளில் தொப்பி!

இந்த குற்றப் பரம்பரையின் பின்னணியின் நன்கு அறிந்தவரான வைரமுத்து எழுதிய பாடல்களுக்கு இசையமைத்து இருக்கிறார் அறிமுக இயக்குனர் ராம் பிரசாத் சுந்தர்.

வைரமுத்துவின் பாடல்கள் படத்தின் சிறப்புகளுள் ஒன்று என்கிறார் இயக்குநர்.

அவர் மேலும் கூறுகையில், "பழங்குடியினரின் வாழ்வியலையும், அவர்களின் பொருளாதார சூழலையும், எடுத்துக் கூறும் வகையில் வரிகளை வடித்துள்ளார் வைரமுத்து.

குற்றப் பரம்பரையின் வலிகளைச் சொல்லும் வைரமுத்துவின் வரிகளில் தொப்பி!

படத்தில் இடம்பெறும் "பாவப்பட்ட நாங்க.." என்ற பாடலில் வரும் ‘தேனை எடுத்தவன் வாழ்க்கை உப்பு கரிப்பதா, தினைய விதைச்சவன் வினைய அறுப்பதா...' என்ற வரிகள் அமைதியாக வாழ்கையை மேற்கொண்டிருந்த ஆதி தமிழர்களின் இன்றைய நிலையை எடுத்துக் கூறும் வகையில் அமைத்துள்ளது.

‘இச்சி இச்சி மரக் காட்டுல... ' என்ற பாடலில், மலையிலுள்ள வளங்களையும், இயற்கையின் எழிலையும் மேற்கோள்காட்டி எழுதியுள்ளார் கவிஞர்.

‘ ஊத்து தண்ணி மலையில தேங்கும், ஆத்து தண்ணி சமவெளி தோண்டும்... ஊத்து தண்ணி நீ தான் ஆத்து தண்ணி நான்தாண்டி..."

‘ நிதானமா யோசிச்சு பாரு நீயும் வேர் நானும் நீரு' ... ஆகிய வரிகள் மலைவாழ் நாயகன் நாயகியின் உள்ளார்ந்த காதலையும்,

"கழுத்துக்கு மேல காதல் பண்ணு... கல்யாணம்தான் ஆகும் முன்னே" என்ற வரிகள் இவர்தம் காதலின் நாகரிகத்தையும் எடுத்து கூறுவதாக உள்ளது.

இப்பாடல்களுக்கு உயிர் கொடுக்கும் வகையிலும் மலை கிராமங்களின் அழகை கண் முன்னே நிறுத்தும் வகையிலும் ஒளிப்பதிவு செய்திருக்கிறார் மைனா, கும்கி படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த ஒளிப்பதிவாளர் சுகுமார்," என்றார்.