வேறு வழியில்லாமல் அசினை இயக்கும் கௌதம் மேனன்

Gautham Menon Direct Asin   

கௌதம் மேனன் நீண்ட இடைவெளிக்குப் பிறகு எடுக்கும் விளம்பரப் படத்தில் அசின் நடிக்கிறார்.

கௌதம் மேனன் படம் எடுப்பதற்கு முன்பு விளம்பரம் படம் எடுத்து வந்தார். மின்னலே படம் ஹிட்டானவுடன் விளம்பரப் படங்கள் எடுபபதை நிறுத்திவிட்டார். இந்நிலையில் ஒரு கூல் ட்ரிங்க் நிறுவனத்திற்கு விளம்பரப் படம் எடுக்க கௌதம் ஒப்பந்தமாகியுள்ளார். அந்த விளம்பரத்தில் அசினை நடிக்க வைக்குமாறு அந்நிறுவனம் கேட்டுக் கொண்டுள்ளது.

முதலில் அசினை வைத்து எடுப்பதா என்று அவர் யோசித்தார். ஆனால் அந்நிறுவனம் அசின் தான் வேண்டும் என்று வலியுறுத்தியதால் வேறுவழியின்றி சம்மதித்துள்ளாராம்.

அசினை இயக்க கௌதம் ஏன் தயங்கினார் என்று நினைக்கிறீர்களா? அவர் கடந்த 2003ம் ஆண்டு துவங்குவதாக இருந்த சென்னையில் ஒரு மழைக்காலத்தில் நடிக்க அசின் தான் ஒப்பந்தமாகியிருந்தார். ஆனால் அந்த படம் கைவிடப்பட்டது. அதன் பிறகு கௌதம் தனது காக்க காக்க தெலுங்கு ரீமேக்கில் அசினை நடிக்க வைத்தார்.

 

வேந்தர் டிவி: புதிய தமிழ் ஆகஸ்ட் 25 ல் தொடக்கம்

Vendhar Tv New Tamil Channel Launch On Aug 25

எஸ்.ஆர்.எம் குழுமத்தில் இருந்து புதிய தமிழ் சேனல் ஒன்று உதயமாக இருக்கிறது. ரவி பச்சமுத்து தலைமைப் பொறுப்பு ஏற்றுள்ள அந்த தொலைக்காட்சிக்கு வேந்தர் டிவி என்று பெயர் சூட்டியுள்ளனர்.

ஆகஸ்ட் 25 ம் தேதி இந்த சேனல் ஒளிபரப்பாகும் என்று எஸ்.ஆர்.எம் குழுமத்தின் இயக்குநர் திரு பச்சமுத்து கூறியுள்ளார். அதற்கான ஆயத்த கட்டப் பணிகள் முடிவடைந்துள்ள நிலையில் அரசிடம் இருந்து வரவேண்டிய சில அனுமதிகள் கிடைத்த உடன் சேனல் தொடங்கப்பட உள்ளது.

வேந்தர் என்றால் அரசர் என்று பொருள். பொழுதுபோக்கு அம்சங்களுடன் கூடிய நேர்மறையான செய்திகளை மட்டுமே வேந்தர் தொலைக்காட்சியில் ஒளிபரப்ப உள்ளதாகவும் பச்சமுத்து கூறியுள்ளார்.

 

சூப்பர் ஸ்டார் வழியில் செல்லும் அஜீத் குமார்

Ajith Follows Rajinikanth

அஜீத் குமார் தற்போது தத்துவ புத்தகங்களை படித்து வருகிறார்.

அஜீத் குமாருக்கு ரேசிங் என்றால் மிகவும் பிடிக்கும் என்பது அனைவரும் அறிந்ததே. அது மட்டுமின்றி விமான ஓட்ட உரிமம் பெற்றுள்ளார். அண்மை காலமாக அஜீத் குமார் ஆன்மீகத்தில் அதிக ஆர்வம் காட்டி வருகிறார் என்பதும் நமக்கு தெரியும். அதிலும் குறி்ப்பாக சாய்பாபாவின் தீவிர பக்தனாகிவிட்டார்.

இந்நிலையில் நேரம் கிடைக்கும்போதெல்லாம் புத்தகம் வாசிக்கிறாராம். அது என்ன அப்படி அந்த புத்தகத்தில் உள்ளது என்று நினைக்கிறீர்களா? அது ரேசிங் பற்றிய புத்தகமில்லை தத்துவங்கள் பற்றியது. இத்தகைய புத்தகங்களை படிப்பதால் தான் அவரது மூக்கின் நுனியில் இருந்த கோபம் எங்கோ ஓடிவிட்டதோ?

அண்மையில் அவர் புத்தரின் போதனைகள் அடங்கிய புத்தகத்தை ரசித்து படித்துள்ளார். இந்த புத்தகங்களையெல்லாம் படித்து சாந்தமாகியுள்ளதால் தானோ என்னவோ அவருடன் பணிபுரிபவர்கள் எல்லோரும் அஜீத் போன்று வருமா என்று புகழ்கிறார்களோ?

 

பாசக்கார பயபுள்ள பிரியங்கா சோப்ரா

Priyanka Chopra Is Dad S Lil Gal   

பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா தனது தந்தையின் மீதுள்ள பாசத்தை தெரிவிக்கும் வகையில் டாட்டூ குத்தியுள்ளார்.

தற்போது நடிகர், நடிகைகள் டாட்டூ குத்துவது பேஷனாகிவிட்டது. நம்ம நமீதா முதுகில் நட்சத்திர டாட்டூ குத்தியுள்ளார். குஷ்பு, த்ரிஷா, உதயநிதி ஸ்டாலின் என்று ஒரு பெரிய பட்டாளமே டாட்டூ குத்தியுள்ளது. இந்நிலையில் இந்த வரிசையில் சேர்ந்திருப்பவர் பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா. குஷ்பு தனது மகள்களின் பெயரையும், உதயநிதி தனது குழந்தைகளின் பெயர்களையும் டாட்டு குத்தியுள்ளனர்.

இதேபோன்று பிரியங்கா தான் தனது தந்தை மீது தான் வைத்திருக்கும் அன்பைத் தெரிவிக்க 'டாட்ஸ் லிட்டில் கேர்ள்' என்று டாட்டூ குத்தியுள்ளார். பிரியங்காவின் தந்தை அசோக் சோப்ரா புற்றுநோயுடன் போராடி வருகிறார். இதனால் பிரியங்கா தனது தந்தைக்காக தினமும் மனமுருக பிரார்த்தனை செய்து வருகிறார்.

பிரியங்காவுக்குள்ள இப்படி ஒரு பாசக்கார புள்ளயா?

 

சிக்னலில் ஹார்லி டேவிட்சன் நிற்கிறதா? தனுஷாக இருக்கலாம்

Dhanush His Harley Davidson

சென்னை: நடிகர் தனுஷின் லேட்டஸ்ட் பொழுதுபோக்கு தன்னுடைய காஸ்ட்லி பைக்கான ஹார்லி டேவிட்சனில் சென்னையை வலம்வருவது தான்.

சினிமா நடிகர்கள் பலரைப் போன்று நடிகர் தனுஷுக்கு பைக் ஓட்டுவது என்றால் அலாதி பிரியம். அதனால் பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள ஹார்லி டேவிட்சன் என்னும் வெளிநாட்டு பைக்கை வாங்கி வைத்துள்ளார். ஷூட்டிங் இல்லாத சமயத்தில் ஹெல்மெட் அணிந்து கொண்டு அந்த பைக்கில் ஜாலியாக சென்னையை சுற்றி வருகிறார்.

சிக்னலில் உங்கள் அருகில் ஒரு ஹார்லி டேவிட்சன் பைக் வந்து நின்றால் அது தனுஷாக இருக்கலாம். யார் கண்டது?

தனுஷ் கையில் இந்தி படமும், சொட்டவாளக்குட்டி ஆகிய படங்கள் உள்ளன. 3 படத்தில் வநத் 'ஒய் திஸ் கொலவெறி' பாடலால் புகழின் உச்சத்திற்கு சென்ற தனுஷை பாலிவுட் தனது பக்கம் ஈர்த்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 

எஸ்.எஸ். ராஜமௌலியின் இயக்கத்தில் சூர்யா?

Ss Rajamouli Direct Surya

சூப்பர் ஹிட் இயக்குநர் எஸ். எஸ். ராஜமௌலியின் படத்தில் சூர்யா நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

நான் ஈ படத்தில் மூலம் தமிழ்நாட்டு ரசிகர்களின் நெஞ்சங்களில் இடம் பிடித்தவர் எஸ். எஸ். ராஜமௌலி.

தெலுங்கு திரை உலகில் எஸ்.எஸ். ராஜமௌலி இயக்கிய 9 திரைப்படங்களும் சூப்பர் ஹிட். சமீபத்தில் தெலுங்கு ஈகா, தமிழில் நான் ஈ என்ற பெயரில் வெளியாகி வசூலை குவித்தது. இதனால் தமிழிலும் தெரிந்த இயக்குநராகிவிட்டார் ராஜமௌலி. இவரது அடுத்தப் படத்திற்கான வேலைகள் விறுவிறுப்பாக தொடங்கியுள்ளன. இதனிடையே சூர்யாவும், ராஜமௌலியும் சந்தித்து பேசியுள்ளனர்.

சூர்யா நடிக்கும் மாற்றான் ரிலீஸ்சுக்கு தயாராகிவிட்டது. அடுத்ததாக சிங்கம் 2, படத்தில் நடிக்க இருக்கிறார். இதன் பின்னர் 2013ல் எஸ்.எஸ். ராஜமௌலியின் இயக்கத்தில் சூர்யா நடிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

தடுமாற்றத்தில் தாண்டவம்: கதையை சுட்டாரா விஜய்?

Problem A L Vijay S Thaandavam   

இயக்குநர் விஜய்க்கும், சர்ச்சைகளுக்கும் நிறைய ஒற்றுமை இருக்கும் போலிக்கிறது. தெய்வத்திருமகன் படம் வெளியான போதே அது ‘ஐ யம் ஷாம்' படத்தின் அப்பட்டமான காப்பி என்று விமர்ச்சனம் எழுந்தது. ஆனால் அது என்னுடைய சொந்த ஸ்கிரிப்ட் என்று சத்தியம் செய்தார் விஜய்.

இப்போது அவர் இயக்கி வரும் தாண்டவம் படம் எந்த படத்தின் டி.வி.டியிலிருந்து சுடப்பட்டது என்று கோடம்பாக்கத்தினர் அலசிக் கொண்டிருக்கையில் வசமாக சிக்கியிருக்கிறது உதவி இயக்குநரின் புகார்.

இயக்குநர் ராதாமோகனிடம் உதவி இயக்குனராக இருந்த ஒருவர் யூடிவி தனஞ்செயனிடம் வாய்ப்பு கேட்டு போன போது ஒரு ஸ்கிரிப்ட் புத்தகத்தை கொடுத்தாராம். அதுதான் இப்போது தாண்டவமாக அவதாரம் எடுத்திருக்கிறதாம்.

இப்பொழுதுதான் தன்னுடைய கதை திருடப்பட்ட விசயத்தையையே அறிந்திருக்கிறார் அந்த உதவி இயக்குநர். நேரடியாகவே யூடிவி நிர்வாகத்தை அணுகி முறையிட்டதை அடுத்து சமாதான பேச்சு வார்த்தை நடந்து வருவதாக கோடம்பாக்க வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. தாண்டவம் வருவதற்கு முன்பே அந்தப் படத்தின் கதை தாண்டவமாடத் தொடங்கியிருக்கிறது. ரீலீசுக்குப் பின்னர் என்ன சர்ச்சை கிளம்பப் போகிறதோ?

 

வித்யா பாலன் மீது எனக்கு வெறித்தமான மோகம்... ஷெர்லின் 'திரில்' பேட்டி!

I D Love Do Passionate Scene With Vidya    | ஷெர்லின் சோப்ரா  

மும்பை: வித்யா பாலன்தான் என்னை வெகுவாக கவர்ந்த இந்தியப் பெண். அவர் மீது எனக்கு வெறித்தனமான மோகம் உள்ளது. என்னை நம்பி வித்யா பாலன் வந்தால், அவரது காதலர் சித்தார்த் ராய் கபூரை விட நன்றாகப் பார்த்துக் கொள்வேன். வித்யாவுடன் நெருக்கமான காட்சிகளில் நடிக்கவும் நான் விரும்புகிறேன் என்று பரபரப்பாக பேசியுள்ளார் ஷெர்லின் சோப்ரா.

பிளேபாய் பத்திரிக்கைக்காக நிர்வாணமாக போஸ் கொடுத்து பரபரப்பை ஏற்படுத்தியவர் ஷெர்லின் சோப்ரா. அவர் ஒரு இணையளத்துக்கு அளித்துள்ள பேட்டியில் நிர்வாணம், செக்ஸ் குறித்து வெளிப்படையாக கருத்துக்களைத் தெரிவித்துள்ளார். அதிலிருந்து சில பகுதிகள்...

உங்களுக்குப் பிடித்த நடிகை...

எனக்குப் பிடித்த ஒரே நடிகை வித்யா பாலன்தான். எனக்கு சரியான போட்டியாளரும அவரே. அழகான நடிப்பையும், பாலியல் ரீதியான நடிப்பையும் ஒரு சேரக் கொடுத்த ஒரே நடிகை அவர் மட்டுமே.

வித்யாபாலனுடன் எனக்கு நெருக்கமான காட்சிகளில் நடிக்க ரொம்ப ஆசையாக இருக்கு. அந்த அளவுக்கு அவர் மீது எனக்கு வெறித்தனமான மோகம் உள்ளது. அவர் மட்டும் என்னை நம்பி வந்தால், நான் சொல்வதைக் கேட்டால், அவரது காதலரை விட நன்றாகப் பார்ததுக் கொள்ள என்னால் முடியும்...

பாலிவுட் நடிகைகள் கவர்ச்சி காட்ட ரொம்பவே தயங்குவதாக சன்னி லியோன் கூறியுள்ளாரே என்ற கேள்விக்குப் பதிலளித்த ஷெர்லின், வெறும் உடம்பைக் காட்டுவது கவர்ச்சி அல்ல. அது மனசைப் பொறுத்தது. என்னைப் பொறுத்தவரை எனது வாழ்க்கையை என் இஷ்டத்திற்கு வாழ்ந்து வருகிறேன். என்னைக் கேள்வி கேட்க யாரும் கிடையாது, எனக்கென்று குடும்பம் கிடையாது. நான் யாருக்கும் பதில் சொல்ல வேண்டிய அவசியமும் இல்லை.

சன்னி லியோன் ஒரு ஆபாசப் பட நடிகை என்பதால் அவர்தான் கவர்ச்சியின் இலக்கணம் என்று தவறாக கருதி விடக் கூடாது. அவர் மட்டுமே கவர்ச்சியானவர் என்ற கருத்தும் தவறு என்றார் ஷெர்லின்.

பிளேபாய்க்கு போஸ் கொடுத்தது குறித்து...

நிர்வாணமாக போஸ் கொடுத்தபோது முதலில் லேசான கூச்சம் இருந்தது. ஆனாலும் அதை பின்னர் உதறி விட்டேன். என்னை முழுமையாக மாற்றி விட்டது பிளேபாய் அனுபவம் என்றார்.

பூனம் பாண்டே கூட ரொம்ப நாளாக நிர்வாணமாகப் போகிறேன் என்று கூறிக் கொண்டிருக்கிறாரே...

சரியான நேரத்தில், சரியான இடத்தில் அவர் போய்ச் சேர வாழ்த்துகிறேன் என்றார் ஷெர்லின்.

 

சூரியன் ரீமேக்கில் விஷால் – வரலட்சுமி ஜோடி ?

Vishal Suriyan Remake

சரத்குமார் நடித்த சூரியன் படம் ரீமேக் ஆகிறது. அதில் விஷால் - வரலட்சுமி ஜோடி நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கே.டி. குஞ்சுமோன் தயாரிப்பில் பவித்ரன் இயக்கிய படம் சூரியன். 1992ம் ஆண்டு வெளியான இந்த படத்தில் சரத்குமார் - ரோஜா நடித்திருந்தனர். இந்தப் படத்தில்தான் முதன் முதலாக பிரபுதேவா ஒரு நடன கலைஞராக அறிமுகமாயிருந்தார். சரத்குமாரின் வெள்ளி விழா படங்களில் இதுவும் ஒன்று.

இதனை தற்போது ரீமேக் செய்யும் முயற்சியில் இறங்கி இருக்கிறார் இயக்குனர் பவித்ரன். இன்றைய சூழ்நிலைக்கேற்ப கதையில் சில மாற்றங்கள் செய்து பிரமாண்டமாக தயாரிக்க பவித்ரன் முடிவு செய்துள்ளார் பவித்ரன்.

தமிழ், இந்தி மொழிகளில் ரீமேக் செய்து கொள்ள தயாரிப்பாளர் கே.டி.குஞ்சுமோனிடம் அனுமதி பெற்றுவிட்டாராம். தமிழில் சரத்குமார் நடித்த கேரக்டரில் விஷாலும், ரோஜா கேரக்டரில் சரத்குமார் மகள் வரலட்சுமியையும் நடிக்க வைக்க முயற்சி நடந்து வருகிறது. இந்தியில் சாருக்கான் அல்லது சல்மான்கான் நடிக்கலாம் என்று கூறப்படுகிறது.

 

தெலுங்கில் கவர்ச்சியாக நடிக்கும் அமலா பால்!

Amala Paul Prefers Glamour Roles   

இழுத்துப் போர்த்தி நடித்து போரடித்து போய்விட்டதால் கவர்ச்சியில் கலக்க முடிவு செய்திருக்கிறார் அமலாபால். தெலுங்கு ரசிகர்களுக்கு கவர்ச்சியாக இருந்தால்தான் பிடிக்கும் என்று காரணம் கூறும் அமலா தெலுங்கு மார்க்கெட்டை பிடிப்பதற்காக ஆடை குறைப்பில் இறங்கிவிட்டாராம்.

தமிழில் கவர்ச்சியாக நடிக்கத் தயார் என்று அமலாபால் அறிவித்தும் கோலிவுட் இயக்குநர்கள் அவருக்கு இழுத்துப் போர்த்தி நடிக்கும் கதாபாத்திரங்களையே கொடுத்தனர். அவர் நடித்த மைனா, தெய்வத் திருமகள்,வேட்டை போன்ற திரைப்படங்களில் கவர்ச்சிக்கு வேலை இல்லை. தமிழில் தற்போது நிமிர்ந்து நில், தனுசுடன் சொட்ட வாளக்குட்டி என நடித்துக் கொண்டிருக்கிறார்.

தெலுங்கில் ராம்சரண் தேஜா ஜோடியாக ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார் அமலா. இந்த வாய்ப்பை நன்றாகப் பயன்படுத்திக் கொண்டு தெலுங்கில் ஒரு இடத்தைப் பிடித்து விட வேண்டும் என்று முடிவு செய்துள்ள அமலாபால், எவ்வளவு கவர்ச்சியாக வேண்டுமானாலும் நடிக்கத் தயார் என்று கூறியுள்ளார்.

தமிழ் ரசிகர்கள் திறமைக்கே முன்னுரிமை கொடுப்பார்கள். ஆனால் தெலுங்கு ரசிகர்கள் திறமையுடன் கவர்ச்சியையும் எதிர்பார்ப்பார்கள். எனவே தான் ரசிகர்களுக்காக இந்த முடிவை எடுத்திருக்கிறேன் என்று விளக்கம் அளித்துள்ளார் அமலாபால்.

தமிழ் ரசிகர்கள் மட்டும் என்ன பாவம் செஞ்சாங்க அமலா?

 

பில்லா 2-வில் என்னை ஓரம் கட்டி விட்டார்களே..பார்வதி ஓமனக்குட்டன்

Parvathy Omanakuttan Disappointed Over Billa 2   

பில்லா படத்தில் தனக்கு முக்கியத்துவம் இல்லாமல் செய்துவிட்டார்கள் என்று பார்வதி ஓமனக்குட்டன் வருத்தமடைந்துள்ளார்.

கேரளாவைச் சேர்ந்த பார்வதி ஓமனக்குட்டன். இந்தியா சார்பாக உலக அழகிப் போட்டியிலும் பங்கேற்றவர். இந்த வெளிச்சத்தில் பில்லா 2 படத்தில் அஜீத் ஜோடியாக நடிக்க வாய்ப்பு கிடைத்தது. ஆனால் அந்தப் படத்தில் வெறும் 4 காட்சிகளில் மட்டுமே தலையைக் காட்டிவிட்டு போயிருப்பார். இதனால் பில்லா 2 படத்திற்குப் பின் வேறு எந்த படத்தில் நடிப்பதற்கும் இவருக்கு அழைப்புகள் வரவில்லை.

ஆனால் பில்லா 2 படத்தில் எனக்கு சிறிது கூட முக்கியத்துவம் தரவில்லை என்று வருத்தம் அடைந்துள்ளார் பார்வதி. என்னை வைத்து நிறைய காட்சிகள் படமாக்கப்பட்டன. ஆனால் படத்தில் அனைத்தையும் வெட்டி எறிந்திருக்கிறார்கள். ஏன் இப்படி செய்தார்கள் என்று தெரியவில்லை என்று கூறியுள்ளார். பில்லா 2 விற்குப் பின் வேறு எந்தப் படத்தையும் ஒப்புக் கொள்ளவில்லை. நடிப்புக்கு முக்கியத்துவம் இருக்கும் கதைகளுக்காக காத்திருக்கிறேன் என்கிறார் பார்வதி ஓமனக்குட்டன்.

 

மும்பை மக்களின் மனம் கவர்ந்த ராதே...வீணா மாலிக்!

Bjp Bollywood Accept Veena Malik

மும்பை: புதிய ராதையாக உருவெடுத்துள்ளார் பாகிஸ்தானின் வீணா மாலிக். மும்பையில் பாஜக சார்பில் நடந்த கிருஷ்ண ஜென்மாஷ்டமி விழாவில் அவரை சிறப்பு விருந்தினராக அழைத்து கெளரவப்படுத்தி அனுப்பி வைத்துள்ளனர்.

மும்பை பாஜக தலைவர் ராஜ் புரோஹித்தான், வீணா மாலிக்கை ஸ்பெஷலாக அழைத்திருந்தார். அந்த விழாவில் கிட்டத்தட்ட வீணாவையே அனைவரும் ராதையாக பாவித்து சிறப்பாக கவனித்தனராம்.

இதுகுறித்து ராதை அதாவது வீணா கூறுகையில், இது எனது வாழ்க்கையில் மறக்க முடியாத நாள். இப்படி ஒரு சிறப்பான விழாவுக்கு என்னை அழைப்பார்கள் என்பதை நான் எதிர்பார்க்கவே இல்லை. மும்பை மக்கள் மிகுந்த பாசக்காரர்கள், நேசக்காரர்கள். எனக்கு மும்பை மிகவும் அதிர்ஷ்டமான நகரம். எனது இதயத்தோடு நெருங்கிப் போய் விட்டது என்றார்.

பரவாயில்லை, கை நிறையப் படம் இல்லாவிட்டாலும் வாய் நிறையப் புன்னகையுன் அடிக்கடி புகைப்படம் சகிதமாக செய்திகளில் அடிபட்டுக் கொண்டுதான் உள்ளார் வீணா.

 

என்னைப் பற்றி கிசுகிசு கிளப்புறாங்க! அஞ்சலி வருத்தம்

Anjali Tired Rumours   

சுந்தர்.சி. - அஞ்சலி பற்றிய கிசு கிசுதான் லேட்டஸ்ட் ஆக கோலிவுட் வட்டாரங்களில் உலா வரும் செய்தி. ஆனால் தனக்கும் சுந்தர்.சிக்கும் இடையில் எதுவும் இல்லை என்று மறுத்துள்ளார் அஞ்சலி. தன்னைப் பற்றி கிசு கிசு பரப்புவதே 'நெட்' ஆட்களுக்கு வேலையாகப் போய்விட்டது என்று செல்லமாக கோபித்துக்கொண்டிருக்கிறார்.

ஆயுதம் செய்வோம் படத்தில் சுந்தர்.சி யுடன் ஜோடியாக நடித்தார் அஞ்சலி, பின்னர் அவரது இயக்கத்தில் கலகலப்பு படத்தில் கதாநாயகியாக நடித்து கவர்ச்சியும் காட்டினார். இப்பொழுது சுந்தர்.சி யின் இயக்கத்தில் விஷால் ஜோடியாக எம்.ஜி.ஆர் படத்தில் நடிக்கிறார்.

சுந்தர்.சி.யின் அடுத்தடுத்த படங்களில் நடிப்பதால் கிசுகிசுவை கிளப்பிவிட்டுவிட்டதாக தெரிவித்துள்ளார். அஞ்சலி அடுத்ததாக இயக்குனர் ஏ.ஆர்.முருகதாசின் படத்தில் அவரது தம்பிக்கு ஜோடியாக நடிக்கிறாராம்.

ஒவ்வொரு படமும் ரிலீஸ் ஆகும்போது திருப்பதிக்கு சென்று ஏழுமலையானிடம் வேண்டிக்கொள்வாராம் அஞ்சலி. அப்படி செய்தால் படம் ஹிட் ஆகும் என்பது நம்பிக்கையாம்.