நான் 'பிட்டு' படம் எடுக்கலைங்க...! - இயக்குனர் புலம்பல்

அண்மையில் திரைக்கு வந்திருக்கும் படம் ‘கேரள நாட்டிளம் பெண்களுடனே'. பாரதியாரின் வரியாச்சே என்று அவர் ரசித்து வைத்த இந்த தலைப்பை, ஏதோ பிட்டு பட ரேஞ்சுக்கு சிலர் விமர்சித்து வருவது பொறுக்காமல் குமுறி தீர்க்கிறார் அப்படத்தின் இயக்குனர் எஸ்.எஸ்.குமரன்.

'சார்... நான் ஒரு டீசன்ட்டான படம் எடுத்திருக்கேன். தமிழ்சினிமாவில் இப்படியொரு கதை இதுக்கு முன்னாடி வந்ததேயில்ல. தியேட்டர்ல படத்தை பார்க்குற பெண்களும், குழந்தைகளும் என்ஜாய் பண்ணிட்டு போறங்க. ஆனால் இந்த தலைப்பை வைத்து இது ஒரு பிட்டு படம் என்ற ரேஞ்சுக்கு தவறான அபிப்ராயத்தை மக்கள் மனதில் பரப்பிக் கொண்டிருக்கிறது ஒரு கும்பல்.

நான் 'பிட்டு' படம் எடுக்கலைங்க...! - இயக்குனர் புலம்பல்

எந்த படம் ரிலீசானாலும் அந்த படத்திற்கு எதிராக புரளி கிளப்பும் ஒரு கும்பல்தான் என் படத்திற்கும் எதிராக புரளி கிளப்புகிறாங்க. இது ‘அந்த' மாதிரியான படம்னு புரளி கிளப்புறவங்க படத்துக்கு க்ளீன் யூ சர்டிபிகேட் வாங்கியிருக்குற தகவலையெல்லாம் ஏன்தான் மறந்துட்டு பேசுறாங்களோ தெரியல' என்று கவலைப்பட்டார்.

அதுமட்டுமல்ல, இந்த படத்திற்கு சென்னையில் இருக்கும் பிரபலமான தியேட்டர் வளாகம் ஒன்றும் முதலில் தியேட்டர் தர மறுத்துவிட்டதாம். உங்க படத்தின் தலைப்பு எனக்கு பிடிக்கலே என்று அந்த தியேட்டர் மேனேஜர் கூறிவிட்டாராம்.

அதற்கப்புறம் இந்த படத்தில் பாடல்கள் எழுதியிருக்கும் கவிப்பேரரசு வைரமுத்துவே அந்த மேனேஜருக்கு போன் செய்து, ‘அது நல்ல படம். உங்க தியேட்டருக்கு ஒரு இழுக்கும் வராது' என்று உத்தரவாதம் கொடுத்த பின்புதான் படத்தை வெளியிட சம்மதித்தாராம்.

நான் 'பிட்டு' படம் எடுக்கலைங்க...! - இயக்குனர் புலம்பல்

இதையெல்லாம் நம்மிடம் சொல்லி புலம்பிய எஸ்.எஸ்.குமரன், ‘உங்க படம் கமர்ஷியலாகவும் பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைஞ்சதாகவும் இருக்கு' என்று விநியோகஸ்தர்களே வாய் திறந்து பாராட்டுறாங்க. இந்த நேரத்தில் இந்த புரளி கிளப்புகிறவர்கள் அமைதியா இருந்தாலே என் படம் வெற்றி பெரும்' என்றார்.

புரளி சார்களே... வாயை மூடி பேசாமலிருங்க ப்ளீஸ்!

 

'உலகின் மிகச் சிறந்த இசையமைப்பாளர்' இளையராஜாவுக்கு பத்திரிகையாளர்கள் மாலை அணிவித்து மரியாதை!

சென்னை: உலகின் முதல் 25 இசையமைப்பாளர்களுள் ஒருவராக அங்கீகரிக்கப்பட்டுள்ள இசையமைப்பாளர் இளையராஜாவை சந்தித்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர் சினிமா பத்திரிகையாளர்கள்.

இசைஞானி என அழைக்கப்படும் இளையராஜா 1000 படங்களைத் தாண்டி இசையமைத்துக் கொண்டிருக்கிறார். இதோ இன்று கூட ஒரு மெகா பட்ஜெட் தெலுங்குப் படத்துக்கு இளையராஜா இசைதான் வேண்டும் என்று வந்து நிற்கிறார்கள்.

'உலகின் மிகச் சிறந்த இசையமைப்பாளர்' இளையராஜாவுக்கு பத்திரிகையாளர்கள் மாலை அணிவித்து மரியாதை!

தமிழில் இந்த ஆண்டு அவர் இசையில் 15-க்கும் மேற்பட்ட படங்கள் உருவாகி வருகின்றன.

இந்த நேரத்தில், உலகின் தலை சிறந்த இசையமைப்பாளர்கள் பட்டியலில் இடம்பிடித்துள்ள ஒரே இந்தியர் என்ற பெருமை இளையராஜாவுக்குக் கிடைத்துள்ளது. நம்பர் விளையாட்டுக்கு அப்பாற்பட்ட கலைஞர் இளையராஜா என்பது நூறு சதவீத உண்மை என்றாலும், இந்த கவுரவம் சாதாரணமானதல்ல. தேசமே கொண்டாட வேண்டியது.

எனவே தமிழ் சினிமா பத்திரிகையாளர்கள் சார்பில் இளையராஜாவுக்கு மரியாதை செய்ய முடிவு செய்யப்பட்டது. இன்று காலை பிரசாத் ஸ்டுடியோவில் இளையராஜாவைச் சந்தித்த பத்திரிகையாளர்கள் அவருக்கு வாழ்த்துக் கூறினர்.

'பொதுவா நாங்கதான் உங்களை அழைத்து செய்தி தருவோம். ஆனா நீங்க என்னைத் தேடி வந்து வாழ்த்து சொல்றீங்க. இந்த அன்புக்கு இணை ஏது.. யாருக்கும் தராத கவுரவத்தை எனக்குத் தந்ததற்கு நன்றி. இதுதான் மிகச் சிறந்த விருது எனக்கு,' என்றார் இளையராஜா பதிலுக்கு.

பின்னர் அவருக்கு பூங்கொத்துகள் தந்து, பொன்னாடை அணிவித்தனர் பத்திரிகையாளர்கள். அவற்றை மகிழ்ச்சியுடன் பெற்றுக் கொண்டார் ராஜா.

இளையராஜாவின் சாதனையை கவுரவிக்கும் வகையில் அவருக்கு அனைவர் சார்பாகவும் ஆளுயர மாலை அணிவிக்கப்பட்டது.

 

விஜய் படத்திற்காக ஆந்திரா வெயிலில் காய்ந்து கருவாடாகும் சமந்தா

ஹைதராபாத்: விஜய் படத்திற்காக வெயிலில் காய்வதாக நடிகை சமந்தா தெரிவித்துள்ளார்.

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் படத்தின் படப்பிடிப்பு ஆந்திர மாநிலம் ஹைதராபாத்தில் நடைபெற்று வருகிறது. படத்தின் நாயகி சமந்தா தோல் பிரச்சனை காரணமாக வெளிநாட்டுக்கு சென்றுவிட்டார் என்று செய்திகள் வெளியாகின.

விஜய் படத்திற்காக ஆந்திரா வெயிலில் காய்ந்து கருவாடாகும் சமந்தா

இந்நிலையில் தான் விஜய் படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொண்டு வருவதாக சமந்தா தெரிவித்துள்ளார். மேலும் ஹைதராபாத்தில் கொளுத்தும் வெயிலில் வாடும் தன்னை காப்பாற்றுமாறு அவர் கடவுளை வேண்டியுள்ளார்.

சமந்தா விஜய் படம் தவிர சூர்யாவுடன் அஞ்சான் படத்திலும் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

விஜய் இரட்டை வேடங்களில் நடிக்கும் இந்த படத்திற்கு தீரன் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. படம் வரும் தீபாவளிக்கு ரிலீஸ் செய்யப்படுகிறது.

 

உங்க மகனை கம்முன்னு இருக்கச் சொல்லுங்க: தாடி டாடியிடம் கூறிய போலீசார்

சென்னை: விரல் நடிகர் அண்மையில் பிரிந்த தனது காதலியின் புகைப்படங்களை எங்கும் வெளியிடக் கூடாது என்று அவரது தந்தையிடம் போலீசார் தெரிவித்துள்ளார்களாம்.

விரல் வித்தை நடிகரும், புஸு புஸு நடிகையும் பிரிந்துவிட்டார்கள் என்பது அனைவரும் அறிந்ததே. விரல் நடிகரின் காதல் முறிந்தால் அதையடுத்து அவருடன் பழகிய பெண்ணுடன் எடுத்த புகைப்படங்கள், வீடியோக்கள் ஆகியவை லீக்காவது வழக்கம்.

இந்நிலையில் புஸு புஸு நடிகையின் தாய் ஆந்திரா மற்றும் தமிழக போலீஸ் உயர் அதிகாரிகளுக்கு போன் செய்து என் மகளை காதலித்த காலத்தில் எடுத்த புகைப்படங்கள், வீடியோ எதையாவது அந்த நடிகர் கசியவிட்டுவிடாமல் தயவு செய்து பார்த்துக் கொள்ளுங்கள் என்று கேட்டுக் கொண்டாராம்.

இதையடுத்து போலீசார் நடிகரின் தாடிக்கார தந்தையை தொடர்பு கொண்டு நடிகையின் தாய் கூறியவற்றை தெரிவித்து தம்பியை கொஞ்சம் சும்மா இருக்கச் சொல்லுங்க, இல்லை என்றால் பெரிய பிரச்சனை ஆகிவிடும் என்றார்களாம்.

இதற்கிடையே நடிகையிடம் இருந்த புகைப்படங்கள், வீடியோக்களை எல்லாம் அவரது தாய் அழித்துவிட்டாராம்.

 

சன்னி லியோன் குத்தாட்டம் போடும் வடகறி படத்திலிருந்து விலகினார் யுவன் சங்கர் ராஜா!

சென்னை: தயாநிதி அழகிரி தயாரிப்பில், சன்னி லியோன் குத்தாட்டம் போடும் முதல் தமிழ்ப் படமான வடகறியிலிருந்து விலகினார் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா.

யுவனின் பிஸி ஷெட்யூல் காரணமாக அவரால் இந்தப் படத்தில் தொடர முடியவில்லை என்றும், அவருக்குப் பதில் அனிருத்திடம் சவுண்ட் எஞ்ஜினியர்களாகப் பணியாற்றிய இரட்டையர்களான விவேக் - மெர்வின் இசையமைப்பார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

சன்னி லியோன் குத்தாட்டம் போடும் வடகறி படத்திலிருந்து விலகினார் யுவன் சங்கர் ராஜா!

இது குறித்து தயாரிப்பாளர் தயாநிதி அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கை:

யுவன் சங்கர் ராஜாவின் பிஸியான ஷெட்யூல் காரணமாக வடகறி படத்தில் தொடர்ந்து அவருடன் பணியாற்ற முடியவில்லை. இந்தப் படத்துக்காக அவர் ஒரு அருமையான மெலடிப் பாடல் தந்துள்ளார். அதை நிச்சயம் இந்தப் படத்தில் பயன்படுத்துவோம்.

படத்தை விரைவாக முடிக்க வேண்டி, யுவனுக்கு பதில் புதிய இரட்டையர்களை இப்படத்துக்கு இசையமைப்பாளராக்கியுள்ளோம்.

இவர்களில் விவேக் சிவாவை எங்களுக்கு அறிமுகப்படுத்தியவர் இசையமைப்பாளர் அனிருத். அனிருத்தின் சவுன்ட் எஞ்ஜினியராகப் பணியாற்றியவர் விவேக் சிவா. இவரும் மெர்வின் சாலமனும் இணைந்து இரட்டையர்களாக இந்தப் படத்தில் பணியாற்றியுள்ளனர். நான்கு பாடல்கள் மற்றும் படத்தின் பின்னணி இசையை விவேக் - மெர்வின் தந்துள்ளனர்.

இருவருமே சென்னையைச் சேர்ந்தவர்கள். ஏஆர் ரஹ்மானின் இசைக் குழுவில் பணியாற்றிய அனுபவம் உள்ளவர்கள்," என்று அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

 

இளையராஜாவின் 999வது படம் ஒரு ஊர்ல... இந்த வாரம் ரிலீஸ்.. தயாரிப்பாளர் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்!

சென்னை: இளையராஜாவின் 1000வது படம் பாலா இயக்கும் தாரை தப்பட்டை. இந்த செய்தியை உங்களுக்கு முதன் முதலில் தெரிவித்தது ஒன்இந்தியா என்பது நினைவிருக்கலாம்.

இதோ, இன்று இளையராஜாவின் 999 வது படம் எதுவென்று அந்தப் படத்தின் தயாரிப்பாளரே அறிவித்துள்ளார். அந்தப் படம் ஒரு ஊர்ல.

வேலுச்சாமி தயாரிப்பில் பருத்திவீரன் வெங்கடேஷ் கதாநாயகனாக நடிக்க, கன்னட நடிகை நேகா பட்டீல் நாயகியாக அறிமுகமாகிறார். பாடல்களை மு மேத்தா எழுதியுள்ளார்.

இளையராஜாவின் 999வது படம் ஒரு ஊர்ல... இந்த வாரம் ரிலீஸ்.. தயாரிப்பாளர் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்!

கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியுள்ளார் கே.எஸ்.வசந்தகுமார்.

இளையராஜா இசையில் வெளியாகும் 999 வது படம் என்ற அறிவிப்போடு படத்தை வெளியிடுகிறார் வேலுச்சாமி. பத்திரிகையாளர்களுக்கு அனுப்பியுள்ள செய்திகளிலும் இந்தப் படம் இளையராஜாவின 999வது படம் என்றே குறிப்பிட்டுள்ளார்.

இளையராஜாவின் 1000வது படம் பாலா இயக்கும் தாரை தப்பட்டை என்பது குறிப்பிடத்தக்கது.

 

ரோமியோ - ஜூலியட்... மீண்டும் ஜோடி போடும் ஜெயம் ரவி - ஹன்சிகா

ரோமியோ - ஜூலியட் என்ற படத்துக்காக மீண்டும் ஜோடி சேர்கிறார்கள் ஜெயம் ரவியும் ஹன்சிகாவும்.

பிரபு தேவா இயக்கிய ‘எங்கேயும் காதல்' படத்தில் இருவரும் முதல் முறை ஜோடியாக நடித்தனர்.

தற்போது ரோமியோ ஜுலியட் என்ற பெயரில் தயாராகும் படத்தில் மீண்டும் ஜோடியாக நடிக்கிறார்கள்.

ரோமியோ - ஜூலியட்... மீண்டும் ஜோடி போடும் ஜெயம் ரவி - ஹன்சிகா

இந்த படத்தை லட்சுமண் இயக்குகிறார். மற்ற விவரங்கள் அதிகாரப்பூர்வமாக இன்னும் வெளியாகவில்லை.

இதுகுறித்து ஹன்சிகா கூறுகையில், 'ஜெயம் ரவியுடன் ‘ரோமியோ ஜுலியட்' படத்தில் நடிக்க நான் ஒப்பந்தமாகி இருப்பது உண்மைதான். பிரமாதமான கதை. என்னுடைய கேரக்டர் ரொம்பப் பிடித்தது.

படத்தை பற்றி வேறு விஷயம் எதையும் இப்போது நான் சொல்ல முடியாது.. இயக்குநர் அறிவிப்பார்,'' என்றார்.

 

பாட்டையும் கசியவிட்டுட்டு, புகாரும் கொடுப்பீங்களோ: படக்குழுவை அதிர வைத்த போலீசார்

சென்னை: பாட்டையும் பப்ளிசிட்டிக்காக லீக் செய்துவிட்டு புகாரும் கொடுக்க வருவீர்களோ என்று போலீசார் விரல் நடிகரின் இரண்டு எழுத்து படக்குழுவை எச்சரித்தார்களாம்.

விரல் நடிகர், தனது முன்னாள் காதலியுடன் சேர்ந்து விலங்கின் பின்னால் இருக்கும் உறுப்பின் பெயர் கொண்ட இரண்டு எழுத்து படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவை நடத்த படக்குழு திட்டமிட்டிருந்தது. ஆனால் அதற்கு முன்பே பாடல்கள் இணையதளத்தில் கசிந்துவிட்டன.

இதையடுத்து படக்குழுவினர் வரிந்து கட்டிக் கொண்டு கமிஷனரிடம் புகார் கொடுக்க கிளம்பினார்களாம். இது குறித்து தகவல் கிடைத்ததும் கமிஷனர் அலுவலகத்தில் இருந்தே படக்குழுவை அணுகினார்களாம். விளம்பரத்திற்காக நீங்களே பாட்டுகளை இணையதளத்தில் கசியவிடுவீர்கள் பின்னர் எங்களிடம் புகார் கொடுப்பீர்களா என்று கேட்டார்களாம்.

நீங்கள் தான் பாடல்களை கசியவிட்டது என்று எங்களுக்கு தெரியும். அதனால் புகார் கொடுத்து எங்கள் நேரத்தை வீணாக்காதீர்கள் என்று போலீசார் தெரிவித்தார்களாம். இதையடுத்து புகார் கொடுக்க கிளம்பிய படக்குழு சத்தத்தையே காணவில்லையாம்.