கரைப்பார் கரைத்தால் கல்லும் கரையும் என்பார்கள். அன்பா அழகா சொன்னால் எந்தவித பிரச்சனையும் தீர்த்து வைக்க முடியும். நம் இந்தியா ஒரு மாபெரும் ஜனநாயக நாடு. இங்கு எத்தனையோ மதங்கள், மொழி, கலாச்சாரங்கள் இருக்கின்றன. இருந்தாலும் எல்லாருமே ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து புரிந்து கொண்டு இருந்ததனால்தான் இருப்பதால்தான் இந்தியா ஒற்றுமையாக இருக்கிறது.
இரு மதம் சார்ந்த குடும்பத்தினர் இப்படி அன்பாக அழகாக இருக்கிறார்கள். அங்கே தோன்றிய காதலால் ஒரு பிரச்சனை முளைக்கிறது. அப்போது தீர்த்துக் கொள்கிறார்களா என்பதுதான் 'அன்பா...அழகா...' படத்தின் கதை.
ஃபுட் புரொடஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கும் 3வது படம் இது. 'மறந்தேன் மெய் மறந்தேன்','சொல்லித் தரவா' படங்களைத் தொடர்ந்து எஸ்.சிவராமன் இயக்கும் படம்.
'மர்மதேசம்' டிவி தொடர் புகழ் இயங்குநர் நாகாவின் மகன் ஆகாஷ் பிரபு கதாநாயகனாக அறிமுகம் ஆகிறார். இவர் ஆஸ்திரேலியாவில் பைலட் பயிற்சி முடித்தவர்.
ப்ரீத்தி ஷங்கர் புதுமுக நாயகி இவர் ஒரு டென்டிஸ்ட். லாவண்யா இன்னொரு கதாநாயகி. இவர் 'பூவம்பட்டி','கலவரம்' படங்களைத் தொடர்ந்து நடிக்கும் 3வது படம்.
'இதுவரை ஓர் இளைஞனின் காதல் வெற்றிபெற 4 இளைஞர்கள் பாடுபடும் கதைகளைப் பார்த்திருக்கிறோம். இப்படத்தில் ஒருத்தியின் காதல் ஜெயிக்க இன்னொரு பெண் உதவி செய்வதைப் பார்க்கலாம்' என்கிறார் இயக்குநர்.
'ஒரு குடும்பத்தில் எல்லாரும் அன்பாக பற்றுதலோடு இருக்கும்போது யாரோ ஒருவர் சொல்வதை மட்டும் எல்லாருமே தட்டமாட்டார்கள். சொன்னால் கேட்பார்கள் அப்படி ஒருவன்தான் நம் நாயகன்.
இதில் இரு மதங்கள் பற்றிப் பேசப்பட்டுள்ளது. ஆனால் முழுக்க முழுக்க நல்லவிதமாக படத்தில் காட்டப்படும் ஒரு ப்ளாஷ் பேக் காட்சி மதங்கள் கடந்த அன்பையும் அழகையும் சொல்லும்படி இருக்கும்' என்று கூறுகிற இயக்குநர். தனக்கு வாய்த்த மதங்களாக கடந்து மனம் கவர்ந்த நண்பர்கள்தான் இப்படம் எடுக்க சிந்திக்க வைத்தவர்கள்' என்றார்.
முழுக்க முழுக்க புதுமுகங்களின் ஆதிக்கத்தில் உருவாகும்'அன்பா... அழகா...' படத்தின் ஒளிப்பதிவாளர் கவின் சுரேஷ். இசையமைபாளர் புதியவர் பெயர் அருள் முருகன். படத்தில் 5 பாடல்கள், 'வேணான்னு சொன்னடா' என்கிற ஒரு குத்துப்பாடலை சிம்பு பாடியதுடன் பாராட்டியுள்ளார். பாடல் பிடித்துப் போகவே சிம்பு பாடிக் கொடுத்துள்ளார்.
படத்தில் சண்டைக் காட்சிகள் இல்லை. பாடல்கள் மெலடி, குத்து, கிராமியம், தத்துவம் என்று வகைக்கு ஒன்று உண்டு.