சென்னை: இன்று இரவு 12 மணிக்கு வெளியாக இருந்த புலி படத்தின் டீசர், மதியம் 2 மணிக்கே வெளியிடப் பட்டுள்ளது. இணையங்களில் திருட்டுத்தனமாக புலி படத்தின் டீசர் வெளியானதை அறிந்த படக்குழுவினர் தாங்களே டீசரை வெளியிட்டு விட்டனர்.
தற்பொழுது இணையங்களில் புலி படத்தின் டீசர் வைரலாக பரவி வருகிறது. 55 நொடிகள் ஓடக்கூடிய இந்த டீசரானது விஜய் ரசிகர்களிடம் மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது, ராணியாக ஸ்ரீதேவியும் அரச உடையில் விஜயும் வருவது போன்று காட்சிகள் அமைக்கப்பட்டு உள்ளன.
இசையமைப்பாளர் தேவி ஸ்ரீபிரசாத்தின் இசையில் வெளியான டீசரை விஜய் ரசிகர்கள் வெகுவாகப் புகழ்ந்து உள்ளனர். தற்போது #PuliTeaser என்னும் ஹெஷ்டேக்கை டிவிட்டரில் உருவாக்கி அதனை ட்ரெண்டாக்கும் தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளனர் விஜய் ரசிகர்கள்.