இயற்கை விவசாயம்: கல்லூரி மாணவர்களுக்கு உதவி செய்த ராகவா லாரன்ஸ்

சென்னை: சில நாட்களுக்கு முன்பு 100 ஏழை மாணவர்களின் கல்விக்கு ரூபாய் 1 கோடி கொடுத்து உதவி செய்த ராகவா லாரன்ஸ், தற்போது கல்லூரி மாணவர்களுக்கு மற்றுமொரு உதவியை செய்திருக்கிறார்.

சென்னை அண்ணா பல்கலை மாணவர்கள் ஒன்றிணைந்து இயற்கை விவசாயம் செய்ய முடிவு செய்தனர், இதற்காக சென்னை கிண்டியில் உள்ள கல்லூரி வளாகத்தில் 1 ஏக்கர் நிலத்தை தேர்வு செய்து விவசாயம் செய்ய உள்ளனர்.

Natural Forming: Raghava Lawarence Helped Students

இதனை அறிந்த ராகவா லாரன்ஸ் அந்த மாணவர்களின் திட்டம் நிறைவேற சுமார் 2,50,000 ரூபாயை வழங்கி இருக்கிறார், விவசாயம் அழிந்து வரும் நிலையில் மாணவர்கள் அதனைக் கையிலெடுத்திருப்பதும் அவர்களை ஊக்குவிக்கும் வகையில் லாரன்ஸ் பண உதவி செய்திருப்பதும் உண்மையில் பாராட்டப்படவேண்டிய விஷயங்களே.

இயற்கை விவசாயத்திற்கான ஆரம்பப் பணிகளை மாணவர்கள் ஆரம்பித்து உள்ளனர், விரைவில் முழு வேகத்தில் விவசாயம் தொடங்கப் படவுள்ளது.

லாரன்சின் உருவம் கருப்பாக இருந்தாலும் உள்ளம் தும்பைப்பூ போன்றது என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபித்து விட்டார்.

 

கைவிட்ட தல, தளபதி: பிரின்ஸை வைத்து படம் எடுக்கும் சின்னப் பையன்

சென்னை: தல, தளபதி நடிகர்கள் கண்டுகொள்ளாததால் சின்னப் பையன் இயக்குனர் பிரின்ஸ் நடிகரை வைத்து தமிழ், தெலுங்கு ஆகிய 2 மொழிகளில் படத்தை தயாரிக்கிறாராம்.

பார்க்க சின்னப் பையன் போன்று இருக்கும் அந்த இயக்குனர் தளபதி நடிகரை வைத்து இரண்டு படங்களை எடுத்து ஹிட்டாக்கினார். இதையடுத்து மீண்டும் தளபதியுடனேயே பணியாற்ற விரும்பினார். இதை அவர் தெரிவித்தும் தளபதி இந்தா அந்தா என்று இழுத்தடித்துக் கொண்டிருந்தார்.

இந்நிலையில் தல நடிகருடன் பணியாற்ற விரும்பினார் இயக்குனர். அந்த நடிகரும் பதில் அளிக்காததால் அட போங்கப்பா நான் வேறு யாரையாவது வைத்து படம் பண்ணுகிறேன் என்ற முடிவுக்கு வந்துவிட்டார்.

டோலிவுட்டில் முன்னணி நடிகராக உள்ள பிரின்ஸை வைத்து சின்னப் பையன் ஒரு படத்தை தயாரிக்கிறாராம். தயாரிப்பதோடு மட்டும் அல்லாமல் கதையையும் அவர் தான் எழுதுகிறாராம். படம் தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியாகுமாம்.

இயக்குனர் தற்போது ரஜினி ஹீரோயினை வைத்து இந்தி படத்தை இயக்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

விஜயின் கத்தி பாதிப்பில் உருவாகியதா மகேஷ்பாபுவின் செல்வந்தன்?

சென்னை: கடந்த வாரம் மகேஷ்பாபு நடிப்பில் நேரடியாக தமிழில் வெளியாகிய செல்வந்தன் ( தெலுங்கில் ஸ்ரீமந்துடு) படத்தின் திரைக்கதை விஜயின் நடிப்பில் வெளியாகிய கத்தி படத்தைப் போன்று உள்ளதாக ரசிகர்கள் விமர்சித்து உள்ளனர்.

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் - சமந்தா நடித்து கடந்த வருடம் தீபாவளியன்று வெளியான திரைப்படம் கத்தி, குளிர்பான கம்பெனி ஒன்றை கட்டுவதற்காக விவசாய நிலத்தை அபகரிக்கும் முயற்சி நடக்கும். அந்த அராஜகத்தை விஜய் போராடித் தடுப்பார், இதுதான் படத்தின் கதை,திரைக்கதை, வசனம் எல்லாமே.

Makesh Babu's Selvandhan Movie Based on Vijay's Kaththi?

தற்போது மகேஷ்பாபு நடித்து வெளிவந்திருக்கும் செல்வந்தன் திரைப்படம் கத்தி படக்கதை போன்றே உள்ளதாக சினிமா உலகில் ஒரு பேச்சு அடிபடுகிறது. அதாவது கத்தி பாணியில் விவசாய நிலங்கள், தண்ணீர்ப் பிரச்சினை, தன்னலம் கருதாத ஹீரோ இடையில் குளிர்பான பிரச்சினை என்று செல்வந்தன் படம் எடுக்கப் பட்டிருக்கிறது.

இதெல்லாம் வழக்கமாக நடப்பது தானே என்று சொல்கிறீர்களா இந்த இடத்தில் ஒரு பிரச்சினை உள்ளது, அதாவது கத்தி படத்தின் தெலுங்கு உரிமையை முன்னணி நிறுவனம் ஒன்று வாங்கி வைத்துள்ளது.

தற்போது செல்வந்தன் திரைப்படம் தெலுங்கு மொழியிலும் ஸ்ரீமந்துடு என்ற பெயரில் வெளியாகி இருப்பதால் கத்தி படத்தை ரீமேக்கும் போது தகுந்த வரவேற்பு கிடைக்காத ஒரு நிலை தெலுங்கில் ஏற்பட்டு இருக்கிறது.

இதில் ஒரு சோகம் என்னவென்றால் முதலில் கத்தி படத்தின் ரீமேக்கில் நடிக்க மகேஷ்பாபுவை அணுகியபோது ரீமேக் படங்களில் தான் நடிப்பது இல்லை என்று கூறியிருக்கிறார்.

ரீமேக் படத்தில நடிக்க மாட்டீங்க ஆனா அதே மாதிரி கதையில நடிப்பீங்க...நல்ல கொள்கை

 

செம்மரக் கடத்தலை அடிப்படையாகக் கொண்டு உருவாகிறதா "கான்"?

சென்னை: ஆந்திராவில் செம்மரக் கடத்தலில் ஈடுபட்டார்கள் என்று கூறி 20 தமிழர்களை கொடூரமாக சுட்டுக் கொன்ற சம்பவத்தை பின்னணியாகக் கொண்டு செல்வராகவன் இயக்கி வரும் கான் படம் வளர்ந்து வருவதாக தகவல்கள் கூறுகின்றன.

செம்மரக் கட்டைகள் கடத்தல் சில மாதங்களுக்கு முன்பு தமிழகத்தை மொத்தமாக ஆட்டிப் படைத்த ஒரு விஷயம். செம்மரக் கட்டைகள் கடத்தினார்கள் என்று 20 தமிழர்களை எந்த வித விசாரணையும் இன்றி ஆந்திர காவல்துறையினர் சுட்டுக் கொன்றனர்.

Kaan Story is Based on Red Sandalwood Smuggling?

நாடையே தீப்பற்ற வைத்த இந்தப் பிரச்சினையை அடிப்படையாகக் கொண்டு செல்வராகவன் இயக்கத்தில் சிம்பு நடித்து வரும் கான் திரைப்படம் உருவாகி வருவதாக தகவல்கள் கசிந்து உள்ளன.

உண்மையில் தீவிரவாதத்தை அடிப்படையாக் கொண்ட இந்தக் கதையில் சில முக்கியமான காட்சிகளை அடர்ந்த வனப்பகுதிகளில் படமாக்க செல்வராகவன் திட்டமிட்டு இருப்பதாக நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

சிம்பு இந்தப் படத்தில் ரா (RAW) பிரிவில் வேலை பார்க்கும் அதிகாரியாகவும் அவரின் திட்டங்களை முறியடிக்கும் வேடத்தில் வில்லனாக ஜெகபதி பாபுவும் நடிக்கின்றனர். வேகமாக வளர்ந்து வரும் கான் படத்தில் சிம்புவுடன் இணைந்து டாப்ஸி மற்றும் கேத்தரின் தெரசா இருவரும் முக்கியமான வேடமேற்று நடித்துக் கொண்டிருக்கின்றனர்.

 

மம்முட்டியுடன் மீண்டும் இணையும் நயன்தாரா!

மலையாளத்தில் வெளியான பாஸ்கர் தி ராஸ்கல் வெற்றியைத் தொடர்ந்து மீண்டும் மம்முட்டியுடன் இணைகிறார் நயன்தாரா.

தமிழில் நீண்ட நாட்களாக நம்பர் ஒன் இடத்தில் ஆதிக்கம் செலுத்தி வரும் நயன்தாரா, சொந்த மொழியான மலையாளத்தில் அவ்வப்போது நடித்து வருகிறார்.

Nayanthara pairs up with Mammootty again

இங்கு கோடிகளில் சம்பளம் அவர், மலையாளத்தில் மட்டும் சில லட்சங்கள் பெற்றுக் கொண்டு நடிக்கிறார். அங்கு ஹீரோக்களின் அதிகபட்ச சம்பளமே ஒரு கோடிதான்!

தமிழ், தெலுங்கில் பிஸியாக இருந்தபோது, மலையாளத்தில் மம்முட்டியுடன் இணைந்து ‘பாஸ்கர் தி ராஸ்கல்' என்னும் படத்தில் நடித்தார் நயன்தாரா. இப்படம் கடந்த ஏப்ரல் மாதம் வெளியானது. நல்ல வரவேற்பும் வசூலும் இந்தப் படத்துக்குக் கிடைத்தது.

இந்த வெற்றியை தொடர்ந்து மீண்டும் மம்முட்டியுடன் ஜோடி சேர்கிறார் நயன்தாரா. இந்தப் படத்தை ஏகே சாஜன் இயக்குகிறார்.

Nayanthara pairs up with Mammootty again

நயன்தாரா நடித்துள்ள ‘மாயா', ‘நானும் ரௌடிதான்', ‘தனி ஒருவன்', ‘இது நம்ம ஆளு' ஆகிய படங்கள் விரைவில் வெளியாக உள்ளன. இப்போது கார்த்தியுடன் இணைந்து ‘காஸ்மோரா' படத்திலும், ஜீவாவுடன் இணைந்து ‘திருநாள்' படத்திலும் நடித்து வருகிறார்.

 

45 நாளா குளிக்கவே விடலைங்க இந்த டைரக்டர்!- ஹீரோக்கள் குற்றச்சாட்டு

அஞ்சுக்கு ஒண்ணு படத்தை இயக்கியுள்ள ஆர்வியார், அந்தப் படத்தில் நடித்த 5 ஹீரோக்களையும் குளிக்கவே அனுமதிக்கவில்லையாம். இதனை மேடையில் தெரிவித்தனர் படத்தின் ஹீரோக்களான ஜெரால்டு, ராஜசேகர், அமர், நசீர், சித்தார்த் ஆகியோர்.

அஞ்சுக்கு ஒண்ணு படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு ஆகஸ்டு ஆர்.கே.வி. ஸ்டுடியோவில் நடந்தது.

Anjukku Onnu team meets press

இதில் தயாரிப்பாளர் எவர்கிரீன் எஸ்.சண்முகம், இயக்குநர் ஆர்வியார், இசையமைப்பாளர் சாகித்யா, நாயகிகள், உமாஸ்ரீ, மேக்னா உள்ளிட்ட அனைத்து கலைஞர்களும் கலந்துகொண்டனர். கட்டடத் தொழிலாளர்கள் பற்றிய கதையாம் இது.

தயாரிப்பாளர் சண்முகம் பேசுகையில், "எனக்கு இயக்குநர் சொன்ன பட்ஜெட்டில் சொன்னபடியே படத்தை முடித்து கொடுத்துள்ளார்.இந்த படம் நன்றாக வந்துள்ளது,பாடல்கள் அனைத்தும் சிறப்பாகவுள்ளது அதேபோல் படமும் சிறப்பாக வந்துள்ளது என் போன்ற புதுமுக தயாரிப்பளருக்கு ஊடக நண்பர்களின் ஆதரவு வேண்டும்," என்றார்.

அதனை தொடர்ந்து பேசிய அனைத்து கதையின் நாயகர்கள் 5 பேரும், "இயக்குநர் எங்களை 45 நாள் குளிக்க விடாமலும்,முக அலங்காரம் செய்ய விடாமலும் செய்து எங்களை கட்டிட தொழிலாளர்களாகவே மாற்றிவிட்டார்," என்றனர்.

கடைசியாக பேசிய இயக்குநர் ஆர்வியார், "நான் தயாரிப்பளருக்கு சொன்ன பட்ஜெட்டில் சொன்னபடி படம் முடித்து கொடுத்துள்ளேன். அதனால் தான் அவர் எனக்கு அடுத்த படத்தை இயக்கும் வாய்ப்பு அளித்துள்ளார். அந்த படத்தின் தலைப்பு அழுக்கு என்று பெயர் வைத்துள்ளேன்," என்றார்.

5 ஹீரோக்களையும் குளிக்கவிடாத பாதிப்பு போலிருக்கிறது!

 

டான்ஸ் மாஸ்டர்ஸ் சங்க தலைவர் தேர்தலில் ஷோபி வெற்றி!

திரைப்படம் மற்றும் டி.வி. நடன கலைஞர்கள் நடன கலைஞர்கள் & நடன இயக்குநர்கள் சங்க தேர்தலில் பிரபல டான்ஸ் மாஸ்டர் ஷோபி வெற்றிப் பெற்றார்.

இந்த சங்கத்துக்கான தேர்தல் நேற்று சென்னை திநகரில் உள்ள சங்க கட்டடத்தில் நடந்தது. இதில் கமல்ஹாசன், ராஜுசுந்தரம் உள்ளிட்ட நடன கலைஞர்கள் கலந்துகொண்டு ஓட்டளித்தனர்.

Shobi elected as President of Cine Dance Artists Association

நேற்று மாலையே வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இதில் தலைவராக நடன இயக்குநர் ஷோபி பால்ராஜ் தேர்ந்து எடுக்கப்பட்டார்.

துணைத் தலைவர்களாக ஆர்.சுரேஷ், நடன இயக்குனர் பி.வி நோபில் ஆகியோர் தேர்வு பெற்றனர்.

செயலாளராக ஓய்.சிவா, பொருளாளராக கே.புவனசங்கர், இணை செயலாளர்களாக நடன இயக்குநர்கள் தினேஷ், ரகுராம் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

 

தமிழ் சினிமாவில் 2ம் பாகங்கள் தேறாதது ஏன்... ஏன் ...ஏன்?

சென்னை: பெரும்பாலான ஹாலிவுட் படங்கள் அடுத்தடுத்த பாகங்கள் வந்து மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து பதிவு செய்து வருகின்றன, இதற்கு சமீபத்திய உதாரணம் மிஷன் இம்பாஸிபிள் இதுவரை 5 பாகங்கள் முறையே வெளிவந்து மாபெரும் வெற்றியைப் பெற்று இருக்கின்றன.

ஆனால் தமிழ்த் திரையில் பார்ட் 2 படங்கள் குறைவான அளவிலேயே எடுக்கப் படுகின்றன.அவ்வாறு எடுத்தாலும் கூட அவை வெற்றியைப் பதிவு செய்ய பெரும்பாலும் தடுமாறுகின்றன அல்லது தவறி விடுகின்றன, இதற்குக் காரணம் என்னவென்று பெரும்பாலும் யாரும் அலசுவது இல்லை.

Why Part 2 Movies Less in Tamil Cinema?

ஏனெனில் இன்றைய காலகட்டத்தில் ஒரு படம் திரைக்கு வந்து ஒருவாரம் ஓடினாலே அதை வெற்றித் திரைப்படமாக அங்கீகரித்து விடுகிறார்கள், முதல் பாகமே ஓடாத நிலையில் பார்ட் 2 படங்கள் எடுத்து கையை சுட்டுக் கொள்ள எந்த தயாரிப்பாளரும் முன்வருவதில்லை.

தமிழ் சினிமாவில் பார்ட் 2 படங்களின் வரவு குறைவாக இருப்பது ஏன் என்று ஒரு சில முன்னணி இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளர்களிடம் கேட்டபோது, அவர்கள் சில முக்கியமான கருத்துக்களை முன்வைத்தனர்.

அவற்றை இங்கே தொகுத்துக் கொடுத்திருக்கிறோம்..

இரண்டாம் பாகம் சாதகமே - இயக்குநர் ஹரி

சாமி, சிங்கம் போன்ற வெற்றிப் படங்களின் இயக்குநர் ஹரி கூறும்போது "ஒரு வெற்றி பெற்ற படத்தின் அடுத்த தொடர்ச்சியை எடுக்கும் போது படத்திற்கு ஒரு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டு விடுகிறது, 2 ம் பாகம் எடுக்கும் போது அதனை மக்களிடம் கொண்டு சேர்க்க நிறைய சிரமப்பட வேண்டியதில்லை. அதே போன்று மக்களிடம் கதாபத்திரங்களை அறிமுகம் செய்ய மெனக்கேட வேண்டியதில்லை, நான் மேலே கூறிய விசயங்கள் அனைத்தும் 2 ம் பாகத்திற்கு சாதகமான விஷயங்கள்.

பாதகமான விஷயங்கள்

படத்திற்கு பாதகமான விஷயங்கள் என்று பார்த்தால் மக்கள் 2 ம் பாகத்தில் நிறைய புதுமையான விஷயங்களை, சுவாரசியங்களை எதிர்பார்க்கிறார்கள். அவற்றை சரியான அளவில் கொடுக்க முடியாமல் போகும்போது மக்கள் மத்தியில் படம் வரவேற்பு பெறத் தவறிவிடுகிறது.

சி.வி.குமார் தயாரிப்பாளர்

சூது கவ்வும், பீட்சா, இன்று நேற்று நாளை போன்ற வெற்றிப் படங்களின் தயாரிப்பாளர் சி.வி.குமார் கூறும் போது "ஒரு படத்தின் 2 ம் பாகம் தொடங்கும் போது முதல் பாகத்தின் முடிவில் இருந்து வித்தியாசமாக ஆரம்பிக்க வேண்டும் என்று மக்கள் விரும்புகின்றனர். நாம் சற்று வித்தியாசமாக கொடுத்தால் மக்கள் அதனை ஏற்றுக் கொள்ள மறுத்து விடுகிறார்கள். உதாரணத்திற்கு நான் தயாரித்த பீட்சா திரைப்படம் நல்ல வெற்றியைப் பெற்றது, ஆனால் அதன் தொடர்ச்சியாக நான் தயாரித்த வில்லா 2 மக்களிடம் வரவேற்பு பெறவில்லை.

2 ம் பாகம் சாதகமே

நான் ஒரு படத்தின் கதையைக் கேட்கும்போதே அதன் 2 ம் பாகத்தை தயாரிக்க வாய்ப்பு இருக்கிறதா என்றுதான் பார்க்கிறேன். தற்போது சூது கவ்வும், இன்று நேற்று நாளை மற்றும் தெகிடி ஆகிய படங்களின் 2 ம் பாகத்தை தயாரிக்கும் முடிவில் இருக்கிறேன்.

பார்த்திபன் நடிகர்/இயக்குநர்

தமிழ்த் திரையின் நடிகர்களில் ஒருவரும் வித்தியாசமான இயக்குனருமான பார்த்திபன் கூறும்போது "தமிழ்த் திரையில் 2 ம் பாகங்கள் என்பது ஒரு அரிதான விஷயமாகவே இன்றுவரை உள்ளது. ஒரு படம் 2 ம் பாகம் எடுப்பதும் எடுக்காததும் அதன் வெற்றியைப் பொறுத்தே முடிவாகிறது.

இங்கு வாய்ப்புகள் குறைவு

பெரும்பாலான கதைகளில் 2 ம் பாகம் எடுப்பதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவாகவே உள்ளன. நான் இயக்கிய கதை, திரைக்கதை, வசனம், இயக்கம்,திரைப்படம் வெற்றி பெற்றாலும் கூட அதன் 2 ம் பாகத்தை எடுப்பது கடினமான ஒரு செயலாகவே உள்ளது, ஏனெனில் 2 ம் பாகம் எடுக்கும்போது பட்ஜெட் பெரும்பாலும் அதிகரித்து விடும். நிறைய தயாரிப்பாளர்கள் என்னை புதிய பாதை படத்தின் 2 ம் பாகத்தை எடுக்கக் கோருகின்றனர். ஆனால் நான் இயக்கினால் அது 2 ம் பாகமாக இருக்குமே தவிர புதிய பாதையின் தொடர்ச்சியாக இருக்காது.

தனஞ்ஜெயன் தயாரிப்பாளர்

படங்களின் தொடர்ச்சிகளை எடுக்க நிறையத் திட்டமிட வேண்டும், தமிழ்நாட்டு மக்களைப் பொறுத்தவரை யார் நடிக்கிறார்கள் என்று பார்க்கிறார்களே தவிர என்ன கதை என்று பார்க்க மாட்டார்கள். ஹாலிவுட் படங்களான பேட்மேன், சூப்பர்மேன் படங்களின் வரிசையில் முகமூடி படத்தைத் தயாரித்தேன், அடுத்தடுத்த பாகங்கள் எடுக்கலாம் என்று திட்டமிட்டபோது முதல் பாகம் சரியாகப் போகாததால் அந்த முயற்சியைக் கைவிட்டு விட்டேன்.

மகிழ் திருமேனி இயக்குநர்

1970 களில் இருந்தே ஹாலிவுட்டில் படங்களின் தொடர்ச்சியை எடுக்க ஆரம்பித்து விட்டார்கள், உதாரணத்திற்கு ஹாலிவுட்டில் சக்கைப் போடு போட்ட காட்பாதர் திரைப்படம் அடுத்தடுத்த பாகங்கள் எடுத்தபோது அதை விளக்குவதற்கு காரணங்கள் இருந்தன. நான் மட்டுமல்லாது இளைய தலைமுறை இயக்குனர்களும், தயாரிப்பாளர்களும் அடுத்தடுத்த பாகங்களை இயக்க முன்வரவேண்டும்.

பழைய கதை புதிய வடிவங்களில்

இயக்குனர் கவுதம் மேனன் நடிகர் விஜயுடன் இணைந்து யோஹன் திரைப்படத்தைத் தொடங்கினார், அடுத்தடுத்த பாகங்களை எடுக்கும் எண்ணத்துடன் இருவரும் கைகோர்த்தனர் ஆனால் என்ன காரணத்தினாலோ படம் தொடரவில்லை. பெரும்பாலும் 2 ம் பாகம் எடுக்கும்போது பழைய திரைக்கதையை புதிய வடிவங்களில் தருகின்றனர் அதனை மக்கள் விரும்புவதில்லை.

 

வாலு... ட்விட்டரில் டிஷ்யூம் டிஷ்யூம் போட்டுக் கொண்ட சிம்பு - உதயநிதி

சென்னை: வாலு படத்தின் மீதுள்ள வழக்குகள் அனைத்தும் தீர்ந்த நிலையில் படம் விரைவில் வெளியாகும் என்று படக்குழுவினர் அறிவித்து உள்ளனர், அனேகமாக படம் ஆகஸ்ட் மாதம் 14 ம் தேதி வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப் படுகிறது.

Vaalu Movie Issue : Simbu, Udhayanidhi Clash in Twitter?

இந்நிலையில் சிம்பு தனது ட்விட்டர் பக்கத்தில் வாலு படத்தை வெளியிட முடியாமல் சிலர் தடுத்து என்னை கீழிறக்க முயற்சிக்கின்றனர். ஆனால் என்மீது உண்மையான அன்பு வைத்திருக்கும் ரசிகர்கள் இருக்கும் வரை உங்களால் என்னை ஒன்றும் செய்ய முடியாது, எனக்கும் கடவுளிற்கும் நீங்கள் ஒருநாள் பதில் சொல்லியே தீர வேண்டும் என்று நேற்று தனது ட்விட்டர் பக்கத்தில் மறைமுகமாக யாரையோ சாடியிருந்தார்.

மேலும் வாழு வாழ விடு என்று ஒரு தத்துவத்தையும் சிம்பு தனது ட்விட்டர் பக்கத்தில் உதிர்த்திருந்தார்.

என்ன காரணம் என்று விசாரித்ததில் ஆகஸ்ட் 14 ம் தேதி வாசுவும் சரவணனும் ஒண்ணாப் படிச்சவங்க படம் வெளியாகிறது, இந்தப் படத்தை தயாரிப்பாளரும் நடிகருமான உதயநிதி ஸ்டாலின் தனது ரெட் ஜெயன்ட் மூவிஸ் சார்பாக வாங்கி வெளியிடுகிறார்.

இந்தப் படத்திற்காக அதிகமான திரையரங்குகளை உதயநிதி புக் செய்து வைத்திருக்கிறார், எனவே வாலு படத்திற்கு போதிய திரையரங்குகள் கிடைக்கவில்லை. வாலு படத்திற்கு திரையரங்குகள் கிடைக்காத விவகாரத்தில் சிம்பு ரசிகர்களும் உதயநிதி ரசிகர்களும் காரசாரமாக நேற்று ட்விட்டரில் மோதிக் கொண்டனர்.

இந்த மோதலைத் தொடர்ந்து சிம்பு தனது ட்விட்டர் பக்கத்தில் " ரசிகர்கள் அமைதியாக இருக்க வேண்டும் எல்லாப் பிரச்சினைகளும் கடவுள் அருளால் தீர்ந்து விட்டது. ஏதேனும் பிரச்சினை என்றால் நான் கண்டிப்பாக உங்களிடம் கூறுவேன் எனவே அமைதியாக இருங்கள்" என்று கேட்டுக் கொண்டார்.

சிம்புவின் வாலு படவிவகாரத்தில் மேலும் ஒரு திருப்பமாக நான் எந்த நடிகருக்கோ அல்லது நடிகர்களின் ரசிகர்களுக்கோ எதிரானவன் அல்ல, ஒரு அடிப்படை உண்மையை மறந்து விடாதீர்கள். அடுத்தவர்களைக் குறை சொல்லுவதற்கு முன்பு மூளையை உபயோகப் படுத்துங்கள் (அப்படி ஒன்று இருந்தால்) என்று கடுமையாகத் தனது ட்விட்டர் பக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் பதிவிட்டிருக்கிறார்.

இதனால் சிம்பு மற்றும் உதயநிதி இருவரின் ரசிகர்களும் மிக வன்முறையாக ட்விட்டரில் வார்த்தை யுத்தம் நடத்திக் கொண்டிருக்கின்றனர்.

 

'பென்சிலுக்கு' பெரிய ஹீரோயின் வேணுமாமே!

சென்னை: மிக சுமாரான உடம்பை வைத்துக் கொண்டு சின்னப் பையன் போல இருக்கும் அந்த இளம் இசையமைப்பாளர் தற்போது நாயகனாக அவதாரம் எடுத்து உள்ளார். நடித்த முதல் படம் வெளிவராத நிலையில் அடுத்து வெளிவந்த பேய்ப்படம் சற்று சுமாராக ஓடியது.

இதனால் வரிசையாக அடுத்தடுத்த படங்களில் நாயகனாக நடித்துக் கொண்டிருக்கும் நடிகர், தற்போது ஆக்க்ஷன் திரைப்படம் ஒன்றில் நாயகனாக ஒப்பந்தம் ஆகியிருக்கிறார். இந்தப் படத்தில் முன்னணி நாயகியுடன் தான் நடிப்பேன் என்று தயாரிப்பாளரிடம் அடம்பிடித்திருக்கிறார்.

அது மட்டுமின்றி தாரா நடிகை அல்லது அஞ்சாத நடிகை இருவரில் ஒருவரை ஒப்பந்தம் செய்ய வேண்டும் என்று கறாராக தயாரிப்பாளரிடம் கூற, வேறு வழியில்லாத தயாரிப்பாளர் 2 நாயகியரிடமும் பேசியிருக்கிறார்.

தாரா நடிகை சம்பளம் ஓகே ன்னா எனக்கும் ஓகே என்று பச்சைக் கொடி காட்ட அஞ்சாத நடிகை சிவப்புமில்லாமல் பச்சையுமில்லாமல் இரண்டிற்கும் நடுவே, யோசித்துச் சொல்கிறேன் என்று கூறியிருக்கிறார்.

இதில் தயாரிப்பாளர் நிலைமைதான் பாவம் பின்ன படத்தோட மொத்த பட்ஜெட்டுல பாதி நடிகைகளோட சம்பளமா இருந்தா, தயாரிப்பாளர் கண்ணீர் வடிக்காம ஆனந்தக் கண்ணீரா வடிக்க முடியும்.

 

கை வசம் படமில்லை... கடனை சமாளிக்க முடியாமல் நாட்டையே காலி செய்த நடிகர்!

சென்னை: இளமையான தோற்றத்துடன் முதல் படத்திலேயே இளம் பெண்களின் மனதில் லவ் தேசம் அமைத்தவர் இந்த நடிகர். பாலிவுட் நடிகர் போன்ற வித்தியாசமான இவரது முகவெட்டு தமிழ் ரசிகர்களுக்கு பிடித்துப் போனது.

ஆனால், தொடர்ந்து வெற்றிப்படங்கள் அமையவில்லை. உலக அழகியோடு நடித்தும், தமிழில் சூப்பர் மருமகனாக நடித்தும் ஒன்றும் கை கொடுக்கவில்லை இவருக்கு. கொஞ்ச காலம் விளம்பரங்களில் தலை காட்டினார். ஆனால், புதுப்பட வாய்ப்புகள் எதுவும் கிடைக்கவில்லை.

Love nation actor settled in abroad

இதனால், மற்ற நடிகர், நடிகைகளை வெளிநாட்டு கலை நிகழ்ச்சிகளுக்கு அழைத்துச் செல்லும் தொழிலை நடத்தி வந்தார். ஆனால், அதிலும் கடன் அதிகமாகி விட்டதாம்.

இதனால், குடும்பத்தோடு இந்தியாவைக் காலி செய்து விட்டு வெளிநாட்டில் சென்று செட்டில் ஆகிவிட்டாராம் நடிகர்.

 

பில்லா, பில்லா 2 வில் அஜீத் ... பில்லா 3 யில் "யார்யா"?

சென்னை: 1980 ம் ஆண்டு ரஜினியின் நடிப்பில் வெளிவந்து மாஸ் ஹிட்டடித்த திரைப்படம் பில்லா, சுமார் 27 வருடங்களுக்குப் பின் பில்லா திரைப்படம் மீண்டும் எடுக்கப் பட்டது. இதில் பில்லாவாக அஜீத் நடிக்க படத்தை விஷ்ணுவர்த்தன் இயக்கியிருந்தார்.

பழைய சரக்காக இருந்தாலும் கூட படம் நன்றாக ஓடி கல்லா கட்டியது, பில்லா படம் வெளிவந்து சுமார் 5 ஆண்டுகள் கழித்து அஜீத்தின் நடிப்பில் பில்லா 2 வெளிவந்தது. படத்தை சக்ரி டொலட்டி இயக்கியிருந்தார்.

Ajith Acting in Billa 3?

பில்லா 2 வில் கதையை விட வன்முறை அதிகம் இருந்ததால் படம் எதிர்பார்த்த அளவிற்கு ஓடவில்லை, இந்நிலையில் பில்லா 3 இயக்கலாம் என்று விஷ்ணுவர்த்தன் கேட்டு அஜீத் சம்மதம் சொன்ன நிலையில் பில்லா 2 வின் தோல்வியால் அதனைத் தள்ளி வைத்திருக்கிறார்.

அஜீத்திடம் பில்லா 3 க்கு சம்மதம் கேட்டபின் 2 படங்களை (யட்சன், ஆரம்பம்) விஷ்ணுவர்த்தன் இயக்கிவிட்டார், ஆனால் அஜீத் இன்னமும் பச்சைக்கொடியும் காட்டவில்லை சிவப்புக் கொடியும் காட்டவில்லை மஞ்சளிலேயே விஷ்ணுவர்த்தனை காத்திருக்க வைத்திருக்கிறார்.

தமிழ்த் திரையுலகில் ஆக்க்ஷன் ஹீரோவாக மாறத் துடிக்கும் ஆர்யா பில்லா 3 கதையைக் கேட்ட பின் அந்தக் கதையில் நடிக்கத் துடித்துக் கொண்டிருக்கிறார், ஆனால் அதிலும் ஒரு சிக்கல் பில்லா 3 யில் ஆர்யா நடிப்பதற்கு அஜீத் தான் பச்சைக் கொடி காட்ட வேண்டும் என்று கூறுகிறார்கள்.

இன்னும் அஜீத்திடம் இருந்து எந்த பதிலும் வராததால் வெய்ட்டிங் லிஸ்டில் இருக்கிறது பில்லா 3...

 

இயக்குனரை தலைமுடியை பிய்த்துக் கொள்ள வைக்கும் 2 நடிகைகள்

சென்னை: புஸு புஸு நடிகையும், சின்ன நம்பர் நடிகையும் போடும் சண்டையை பார்த்து தலை முடியை பிய்த்துக் கொள்கிறாராம் சுந்தரமான இயக்குனர்.

சுந்தரமான இயக்குனர் புஸு புஸு நடிகையை வைத்து எடுத்த அந்த பெரிய வீட்டு படம் சூப்பர் ஹிட்டானது. இதையடுத்து அவர் அந்த படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க முடிவு செய்தார். இரண்டாம் பாகத்தின் வேலைகளை இயக்குனர் துவங்கிவிட்டார்.

2 actresses irk a director

இதிலும் புஸு புஸு நடிகை உள்ளார். ஆனால் இயக்குனர் சின்ன நம்பர் நடிகையையும் படத்தில் நடிக்க வைத்துள்ளார். முதல் பாகத்தை போலவே இரண்டாவது பாகத்திலும் தனது கதாபாத்திரத்திற்கு அதிக முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்கிறாராம் புஸு புஸு. சின்ன நம்பர் நடிகையோ ஓஹோய் நாங்க எல்லாம் சீனியர் ஆக்கும், அதனால் என் கதாபாத்திரத்திற்கு தான் அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும் என்கிறாராம்.

இரண்டு நடிகைகளும் தங்களுக்கு தான் முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்று போடும் சண்டையை பார்த்து இயக்குனர் தான் தலை முடியை பிய்த்துக் கொள்கிறாராம். நாங்கள் எல்லாம் தோழிகள் என்று முதலில் தெரிவித்த இரண்டு நடிகைகளும் தற்போது முகம் கொடுத்துக் கூட பேசுவது இல்லையாம்.

படப்பிடிப்பு தளத்திற்கு வந்தால் ஆளுக்கொரு பக்கமாக இருக்கிறார்களாம் புஸு புஸு நடிகையும், சின்ன நம்பர் நடிகையும்.

 

என்னது சிம்பு படத்தைத் தடுக்கிறேனா.. சொல்றதுக்கு முன்ன மூளைய யூஸ் பண்ணுங்க! - உதயநிதி காட்டம்

சிம்பு படத்தை நான் தடுப்பதாகக் கூறுவது அபத்தமானது. அப்படிச் சொல்வதற்கு முன் மூளையைப் பயன்படுத்தவும் என்று காட்டமாகக் கூறியுள்ளார் நடிகரும் தயாரிப்பாளருமான உதயநிதி.

சிம்பு நடித்து நான்கு ஆண்டுகளாக பல்வேறு சிக்கல்களில் சிக்கி, ஒரு வழியாக வரும் ஆகஸ்ட் 14-ம் தேதி வெளியாகவிருப்பதாக அறிவிக்கப்பட்ட படம் வாலு.

'Nonsense': Udhayanidhi's comment about Vaalu issue

இந்நிலையில் சிம்பு, ‘இன்னும் சிலர் ‘வாலு' படத்தை தடுக்கும் முயற்சிகளில் ஈடுபட்டிருக்கிறார்கள். ஆனால் உங்களால் படத்தை தடுக்க முடியாது. என்னை விரும்பும் ரசிகர்கள் என்னிடம் இருக்கிறார்கள். மேலும் ஆண்டவன் அவர்களுக்கு பதில் சொல்வான்,' என்று கூறியிருந்தார்.

இதையடுத்து சிம்புவின் ரசிகர்கள் ‘வாலு' படத்தை உதயநிதி தடுப்பதாக கூறி ட்விட்டரில் ட்ரெண்டாக்கி பதிவு செய்து வந்தனர்.

இதையறிந்த உதயநிதி, ‘‘வாலு' படத்தை நான் ஏன் தடுக்கணும். ஏதாவது லாஜிக் இருக்கா? இப்படிச் சொல்லும் முன் யோசியுங்கள். நான் எந்த நடிகருக்கும் நடிகரின் ரசிகர்களுக்கும் எதிரி இல்லை. உங்கள் மூளையை உபயோகித்த பின்னர் கருத்துக்களை தெரிவியுங்கள்,'' என்று காட்டமாகக் கூறியுள்ளார்.

 

ரஜினிதான் எனக்கு காட்ஃபாதர்!- அனிருத்

என் ஒவ்வொரு படத்தின் இசையையும் ரஜினி கேட்டு பாராட்டுவார். அவர்தான் எனக்கு காட்ஃபாதர் என்று இசையமைப்பாளர் அனிருத் கூறினார்.

தனுஷ் நடித்த ‘3' படத்துக்கு இசை அமைத்து தமிழ் திரை உலகின் இசை அமைப்பாளராக அறிமுகமானவர் அனிருத். தனுஷ், சிவகார்த்திகேயன் படங்களுக்கு இசையமைத்து முன்னணி இசையமைப்பாளராகியுள்ளார்.

Rajini is like my Godfather, says Anirudh

விஜய்யின் கத்தி படத்துக்கு இசையமைத்தவர், இப்போது அஜீத் படத்துக்கும் இசையமைத்துள்ளார்.

ஏ ஆர் ரஹ்மான், யுவன் சங்கர் ராஜா வரிசையில் அனிருத்தும் இடம்பிடித்துள்ளார். இதுகுறித்து அனிருத் கூறுகையில், "நான் அஜீத் ரசிகன். அவருடைய படம் ரிலீஸ் ஆன முதல் நாளே தியேட்டருக்கு சென்று விடுவேன். விசில் அடித்து, காகிதங்களை வீசி அமர்க்களப்படுத்துவேன். இப்போது அவரது படத்துக்கே இசை அமைக்க வாய்ப்பு கிடைத்துள்ளது,' என்றார்.

ரஜினி பற்றி குறிப்பிடுகையில், "நான் அவருக்கு உறவு முறை. என் மீது மிகுந்த பாசம் வைத்திருக்கிறார். என்னுடைய ஒவ்வொரு இசை ஆல்பத்தையும் கேட்டு கருத்து சொல்வார். எனது வளர்ச்சிக்கு அவை பயன்படுகின்றன. ரஜினிதான் எனது ‘காட்பாதர்'. அவர் எனக்கு அளிக்கும் ஊக்கத்தால்தான் முன்னேறுகிறேன்," என்றார்.

 

திருமணத்துக்கு தயாராகும் அசின்... மைக்ரோமேக்ஸ் அதிபர் ராகுல் சர்மாவை மணக்கிறார்!

பிரபல நடிகை அசினுக்கும் மைக்ரோமேக்ஸ் அதிபர் ராகுல் சர்மாவுக்கும் விரைவில் திருமணம் நடக்கவிருக்கிறது. இதற்காக புதிய படங்கள் எதிலும் கையெழுத்திடாமல் தவிர்த்து வருகிறார் அசின்.

தமிழ், தெலுங்கு, மலையாளத்தில் பிஸியாக இருந்தபோதே இந்திப் பட உலகுக்குப் போனவர் அசின். முதல் இரு படங்கள் ஓரளவு ஓடினாலும், அடுத்தடுத்த படங்கள் தோல்வியைத் தழுவியதால், அசின் பெரிதாக எடுபடவில்லை பாலிவுட்டில்.

Asin to marry billionaire Rahul Sharma

இருந்தாலும் அவரால் தென்னிந்தியாவுக்கு திரும்ப முடியவில்லை. தொடர்ந்து மும்பையிலேயே வசிக்கிறார். இப்போது ஆல் ஈஸ் வெல் படத்தில் நடித்து வருகிறார்.

இந்தப் படத்துக்குப் பிறகு வேறு படங்களில் நடிக்க ஒப்பந்தமாகவில்லை. தேடி வந்த சில வாய்ப்புகளையும் மறுத்துவிட்டாராம்.

காரணம் மைக்ரோமேக்ஸ் மொபைல் நிறுவன அதிபர் ராகுல் சர்மாவை அவர் காதலித்து வருகிறார். இவரையே திருமணம் செய்யவும் முடிவு செய்துள்ளாராம்.

இதுகுறித்து அசினிடம் கேட்டபோது, "இப்போதைக்கு எனது எல்லா சினிமா ஒப்பந்தங்களையும் முடிப்பதில் கவனமாக இருக்கிறேன். புதுப் படங்கள், புதிய நிகழ்ச்சிகள் எதையும் நான் ஒப்புக் கொள்ளவில்லை. எனது தனிப்பட்ட வாழ்க்கைக்கு அதிக முக்கியத்துவம் தர விரும்புகிறேன்," என்றார்.

விரைவில் திருமணத்தை முறைப்படி அறிவிக்கவிருக்கிறார் அசின்.

 

சரவணன் மீனாட்சி மைனாவுக்கு கல்யாணம்...

சீரியல் நடிகை நந்தினிக்கு விரைவில் டும் டும் டும் என்று சின்னத்திரை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. விசாரித்து பார்த்தால் தன்னை பெண் பார்க்க வந்தவரை முதலில் வேண்டாம் என்று சொன்ன நந்தினி இப்போது அவரையே காதலித்து திருமணம் செய்து கொள்ளப் போகிறாராம்.

சரவணன் மீனாட்சி சீரியலில் மைனாவாக நடித்து பிரபலமானவர் நந்தினி. பாண்டிராஜ் இயக்கிய வம்சம் படத்தில் காமெடி நடிகையாக நடித்த நந்தினி, விஜய் தற்போது விஜய் டிவியில் கலக்கப் போவது யாரு சீசன் 5 நிகழ்ச்சியின் நடுவராகவும் பங்கேற்றுள்ளார்.

Serial Actress Nandhini is ready to tie a knot

ரியாலிட்டி ஷோவில் நடுவராக இருப்பது சவாலான விசயம் என்று கூறும் நந்தினி டைமிங் சென்ஸ் இருந்தால் மட்டுமே ரியாலிட்டி ஷோவில் ஜொலிக்க முடியும் என்று கூறியுள்ளார்.

தன்னைப் பெண்பார்க்க வந்தவரையே காதலித்து திருமணம் செய்து கொள்ளப்போகிறார் நந்தினி. பெண்பார்க்க வந்த போது மாப்பிள்ளை கார்த்திக்கேயனிடம் திருமணத்தில் விருப்பமில்லை என்று கூறினாராம். தன்னுடைய ஜிம்மிற்கு வரச்சொல்லி நந்தினியின் மனதில் இடம் பிடித்து விட்டாராம் கார்த்திக்கிகேயன்.

நட்பு காதலாக, பெற்றோர் சம்மதம் சொல்லவே விரைவில் கார்த்திக்கேயனை திருமணம் செய்து கொள்ளப்போகிறாராம் நந்தினி. புது மணப்பெண்ணுக்கு உரிய களையோடு நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார் மைனா

 

ஜீ தமிழ் டிவியில் அர்ச்சனாவின் அதிர்ஷ்ட லட்சுமி...

ஜீ தமிழ் தொலைக்காட்சியின் புதிய கேம் ஷோ அதிர்ஷ்ட லட்சுமி. இல்லத்தரசிகளுக்கு பரிசுகளை அள்ளித்தர வருகிறார் தொகுப்பாளினி அர்ச்சனா.

தொலைக்காட்சிகளில் புதிது புதிதாக கேம்ஷோக்கள் ஒளிபரப்பாகிக்கொண்டிருக்கின்றன. போட்டிகளும் அதிகரித்துக் கொண்டுதான் வருகிறது. குழந்தைகளுக்கான கேம்ஷோவில் இல்லத்தரசிகளும், குடும்ப உறுப்பினர்களும் பங்கேற்கின்றனர்.

Athirshta Laksmi Game show on Zee Tamil TV

இந்த நிலையில் இல்லத்தரசிகளைக் கவரும் வகையில் கேம் ஷோ ஒன்றினை அறிமுகப்படுத்தியுள்ளது ஜீ தமிழ் டிவி. சமையல், சீரியல் என வீட்டிற்குள்ளேயே அடைந்து கிடக்கும் இல்லத்தரசிகளின் திறமைகளை உலகறியச் செய்யும் நிகழ்ச்சி அதிர்ஷ்ட லட்சுமி.

சன் டிவியில் காமெடி டைம், விஜய் டிவியில் நம்ம வீட்டுக் கல்யாணம் ஆகிய நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கிய அர்ச்சனா, ஜீ தமிழ் டிவியில் அதிர்ஷ்ட லட்சுமியை தொகுத்து வழங்குகிறார்.

பொது அறிவு கேள்விகளுக்கு பதில் சொல்லி அட்டகாச பரிசுகளை அள்ளிச் செல்லுங்க இல்லத்தரசிகளே என்கிறார் அர்ச்சனா. "அதிர்ஷ்ட லட்சுமி"., பெண்களுக்கான புத்தம் புதிய கேம் ஷோ, செப்டம்பர் 2 முதல், புதன் முதல் வெள்ளி வரை இரவு 8:30 மணிக்கு ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிறது.