வெங்காயம் மறு ரிலீஸ் ஏன்

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
சங்ககிரி ராச்குமார் இயக்கத்தில் சத்யராஜ், வெற்றி, பவீனா, எஸ்.எம்.மாணிக்கம் நடித்த படம், 'வெங்காயம்'. சில மாதங்களுக்கு முன் ரிலீசான இப்படத்தை இயக்குனரும், நடிகருமான சேரன் மறு ரிலீஸ் செய்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது: 'அன்னக்கிளி', 'ஒருதலை ராகம்', 'சித்திரம் பேசுதடி' ஆகிய படங்கள், ரிலீசானபோது சரியான வரவேற்பு பெறவில்லை. ஆனால், மறுரிலீஸ் செய்தபோது அப்படங்களின் மகத்துவம் தெரிந்து, ரசிகர்கள்  கொண்டாடினார்கள்.

அப்படங்கள்தான் தமிழ் சினிமாவின் டிரெண்ட் செட்டராகவும் மாறின. அதுபோல், சில மாதங்களுக்கு முன் ரிலீசான 'வெங்காயம்' படம் பற்றி கேள்விப்பட்டு பார்த்தேன். புதுமுக இயக்குனர் ராச்குமார், அற்புதமான படத்தை கொடுத்திருந்தார். சமூகத்துக்கு தேவையான நல்ல கருத்துகளை தைரியமாகச் சொல்லியிருந்தார். இன்றைய தலைமுறையினருக்கு தேவையான மெசேஜ் சொல்லும் படமாக, இது உருவாகியிருந்தது. இதுபோன்ற கருத்துகள் மக்களிடம் சேர வேண்டும். மேலும், இயக்குனர் ராச்குமாரின் உழைப்புக்கு ரசிகர்கள் அங்கீகாரம் கொடுக்க வேண்டும் என்று நினைத்து மதுரை தவிர தமிழகம் முழுவதும் 52-க்கும் மேற்பட்ட தியேட்டர்களில் ரிலீஸ் செய்துள்ளேன். இப்படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

இப்படத்தை பார்த்து ரசித்து வியந்த பல இயக்குனர்கள், தங்கள் கருத்துகளை வீடியோவில் பதிவு செய்து கொடுத்தனர். அதுவும் இப்படத்துக்கு உற்சாக டானிக்காக அமைந்துள்ளது. அவர்களுக்கும் இந்த வெற்றியில் பங்கு உண்டு. நல்ல படங்களை இதுபோல் தொடர்ந்து ரிலீஸ் செய்ய தயாராக இருக்கிறேன்.


 

ஹீரோயின் வேண்டாம் கேரக்டர் ரோல் போதும்

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
'ஹீரோயின் வாய்ப்பு வேண்டாம், கேரக்டர் வேடமே போதும் என்றார் சோனியா அகர்வால். இயக்குனர் செல்வராகவனை மணந்து விவாகரத்து பெற்று பிரிந்தவர் சோனியா அகர்வால். நடிக்காமல் ஒதுங்கி இருந்த அவர் விவாகரத்து பெற்ற பிறகு மீண்டும் நடிக்க தொடங்கினார். இதற்காக தனது உடல் எடையை குறைத்து ஸ்லிம் ஆனார். 'ஹீரோயின் வேடங்களில் நடித்து மீண்டும் எனக்குரிய இடத்தை பிடிப்பேன்Õ என்றார். அதன்படி 'ஒரு நடிகையின் வாக்குமூலம்Õ படத்தில் ஹீரோயினாக நடித்தார். அப்படம் வெளியாகி எடுபடாமல் போனதால் அதிர்ச்சி அடைந்தார். பின்னர் ஓய்வுக்காக சண்டிகர் சென்றார். அவரது சகோதரர் பிறந்த தினத்தையொட்டி சமீபத்தில் சென்னை திரும்பினார்.

தனது வீட்டில் நண்பர்கள், நெருக்கமான உறவினர்களுக்கு விருந்து அளித்தார். பின்னர் அவர் கூறியதாவது: மிகவும் மகிழ்ச்சி நிறைந்த பெண்ணாக நானிருக்கிறேன். முன்பு எப்போதும் இருந்ததைவிட இப்போது எல்லாவற்றையும் முறையாக அணுகி செயலாற்றுகிறேன். என் வாழ்க்கை மீண்டும் புதிதாக வடிமைத்துக்கொள்ள முயற்சி செய்துகொண்டிருக்கிறேன். இனி வரும் படங்களில் கேரக்டர் வேடங்களில் மட்டும் நடிப்பேன்.


 

தமிழ் ஸ்டார் இமேஜ் இந்தியில் எடுபடாது

bollywood news, latest bollywood news, tamil bollywood news, bollywood latest news, bollywood masala, cinema news
தமிழ் சினிமா ஸ்டார் இமேஜ் பாலிவுட்டில் எடுபடாது என்றார் மாதவன். இது பற்றி மாதவன் கூறியதாவது: கோலிவுட் ஹீரோக்களை பாலிவுட் ரசிகர்கள் ஏற்பதில்லை என்ற கருத்து நிலவுகிறது. இது மொழி, மாநிலம் சம்பந்தப்பட்ட விஷயம் கிடையாது. தமிழில் ஸ்டார் அந்தஸ்தில் உள்ள ஒரு ஹீரோ இந்தியிலும் அதே இமேஜுடன் நடிக்க வேண்டுமென்றால் எடுபடாது.

10 வருடத்துக்கும் மேலாக இந்தியில் நான் நடித்துக் கொண்டிருக்கிறேன். அதற்கு காரணம் நல்ல கதைகளையும், எனக்கேற்ற வேடங்களையும் ஏற்று நடிப்பதுதான். லுங்கி கட்டிக்கொண்டு பரிதாபமான காட்சியில் நடிப்பதற்கு எனது உடல்வாகோ, முகமோ பொருத்தமானதில்லை. இதை சொல்லிக்கொடுக்க எனக்கென்று யாரும் குரு கிடையாது. நானே படிப்படியாக உணர்ந்துகொண்டேன். பிறகு என்னால் என்ன செய்ய முடியும் என்பதை புரிந்து படங்களை ஒப்புக்கொண்டேன்.ரீமேக் படங்கள் இந்தியில் இப்போது நன்றாக ஓடுகிறது.

அதற்காக எல்லா படங்களையும் அப்படி செய்துவிட முடியாது. தமிழில் வெளியான 'விண்ணை தாண்டி வருவாயா' படம் இந்தியில் 'ஏக் தீவானா தா' என்ற பெயரில் ரீமேக் ஆனது. ஆனால் அது எடுபடவில்லை. ஆக்ஷன் படங்கள் கடந்த சில வருடங்களாக இந்தியில் உருவாகாமல் இருந்தது. அது ரீமேக் என்ற வகையில் உருவானபோது வெற்றி பெற்றது.


 

பெப்சி- தயாரிப்பாளர் பிரச்னை எதிரொலி : தள்ளிப்போகிறது பெரிய ஹீரோ படங்களின் ரிலீஸ்

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
பெப்சி தொழிலாளர்களின் ஊதிய உயர்வு பிரச்னை இழுத்துக்கொண்டே செல்வதால் அடுத்த மாதம் வெளியாக வேண்டிய பெரிய பட்ஜெட் படங்களின் ரிலீஸ் தள்ளிப்போகிறது. பெரிய ஹீரோக்கள் நடித்த பெரிய பட்ஜெட் படங்கள் பண்டிகை நாட்களில் மட்டுமே வெளியிடப்பட வேண்டும் என்று தயாரிப்பாளர் சங்கம் புதிய அறிவிப்பை கடந்த சில மாதங்களுக்கு முன் வெளியிட்டது. இந்நிலையில் பெப்சி தொழிலாளர்களுக்கான ஊதிய உயர்வு பேச்சுவார்த்தை தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகளுடன் நடந்து வந்தது. இப்பிரச்னை இழுபறியில் இருப்பதால் கடந்த சில நாட்களாக ஷூட்டிங் நடைபெறவில்லை. இதனால் ஏப்ரல் 14-ம் தேதி தமிழ்ப் புத்தாண்டு மற்றும் மே மாதம் வெளிவர வேண்டிய பெரிய பட்ஜெட் படங்கள், ரிலீஸ் ஆக முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

கார்த்தி நடித்துள்ள 'சகுனி' ஏப்ரல் 14-ம் தேதியும் அஜீத் நடித்த 'பில்லா 2' ஏப்ரல் 27ம் தேதியும் ரிலீஸ் செய்ய முடிவு செய்யப்பட்டிருந்தன. ஆனால், இன்னும் ஷூட்டிங் பாக்கி இருப்பதால் ரிலீஸ் தேதி முடிவாகவில்லை என்று கூறப்படுகிறது. இதே போல மே மாத ரிலீஸுக்கு முடிவு செய்திருந்த சூர்யாவின், 'மாற்றான்', கமலின் 'விஸ்வரூபம்' படங்களும் தள்ளிப்போக இருப்பதாகக் கூறப்படுகிறது. தமிழ் சினிமா வரலாற்றிலேயே தமிழ்ப் புத்தாண்டுக்கு பெரிய நடிகர்கள் நடித்த படங்கள் ரிலீஸ் ஆகாதது இப்போதுதான் எனக் கூறப்படுகிறது.

''பொதுவாக, கோடையில் தியேட்டர் வசூல் அதிகமாக இருக்கும். இந்த வருடம் அதற்கான வாய்ப்பில்லை என்று தெரிகிறது. ஏப்ரலில் ஐபிஎல் தொடங்குவதால் சிறு பட்ஜெட் படங்கள் வழக்கமாக ரிலீஸ் ஆகாது. பெரிய பட்ஜெட் படங்கள் மற்றும் பெரிய ஹீரோ நடித்த படங்களுக்கு ஐபிஎல் பிரச்னை இல்லை என்பதால் அப்போது ரிலீஸ் ஆவது வழக்கம். இந்த வருடம் பெப்சி- தயாரிப்பாளர்கள் ஊதிய பிரச்னை காரணமாக படங்கள் ரிலீஸ் ஆகவில்லை. அதனால், சிறு பட்ஜெட் படங்கள் அதிகமாக ரிலீஸ் ஆக வாய்ப்புள்ளது'' என்று விநியோகஸ்தர் ஒருவர் தெரிவித்தார்.


 

நடிகைகளுக்குள் ஈகோவா?

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
ஒரே படத்தில் இரண்டு மூன்று நடிகைகளுடன் நடிப்பது ஆரோக்கியமாக இருக்கிறது என்று அசின் கூறினார். இந்தியில், 'ஹவுஸ்புல் 2' என்ற படத்தில் நடித்துள்ளார் அசின். இதில் அக்ஷய்குமார் ஹீரோ. மேலும் ஜாக்குலின் பெர்னாண்டஸ், பிரியங்கா ராவத், சஷான் பதம்ஸி ஆகிய நடிகைகளும் நடிக்கின்றனர். காமெடி படமான இதன் ஷூட்டிங்கில் ஹீரோயின்களுக்குள் ஈகோ மோதல் ஏற்பட்டதாகக் கூறப்பட்டது. இதுபற்றி அசினிடம் கேட்டபோது கூறியதாவது:
ஒரே படத்தில் இரண்டு மூன்று நடிகைகளுடன் நடிப்பது இந்தி சினிமாவில் புதிதில்லை. அதிகமான படங்களில் இரண்டு மூன்று ஹீரோயின்கள் கேரக்டர்கள் இருக்கிறது.

இதனால் பொதுவாக எல்லா நடிகைகளும் சேர்ந்து நடிக்கும் வாய்ப்பு வருகிறது. இப்படி நடிப்பது ஆரோக்கியமானதுதான். 'ஹவுஸ்புல் 2' படத்தில் நடித்தபோது எங்களுக்குள் ஈகோ எட்டிப் பார்த்தது என்று வரும் தகவல்களில் உண்மையில்லை. ஷூட்டிங் முடிந்த பல நாட்கள் ஆகியும் இப்போதும் நாங்கள் எஸ்.எம்.எஸ் மூலம் பேசிக்கொண்டுதான் இருக்கிறோம். யாருடனும் எனக்குப் போட்டியில்லை. இந்தியில் ஆமிர்கான், சல்மான்கானுடன் நான் நடித்த படங்கள்தான் பெரிய ஹிட்டாகியுள்ளது என்கிறார்கள். வெற்றியை அவர்களுடன் நானும் பகிர்ந்துகொள்வதில் எனக்கு பெருமைதான்.

சூப்பர் ஸ்டார் நடிகர்களுடன் நடிக்கும்போதுதான் கமர்சியலாக நிலைக்க முடியும். 'நீல் நிதின் முகேஷூடன் உங்களுக்கு என்ன பிரச்னை?' என்று கேட்கிறார்கள். என்னுடன் நடித்த எல்லா ஹீரோக்களுடனும் நான் நட்புடன் இருக்கிறேன். நீல் நிதினை நான் இரண்டு முறை மட்டும்தான் பார்த்திருக்கிறேன். அவர் எனக்கு நண்பர் கூட கிடையாது. அப்படியிருக்கும்போது அவருக்கும் எனக்கும் என்ன பிரச்னை இருக்க முடியும்? இவ்வாறு அசின் கூறினார்.


 

ஷாம் நடிக்கும் படம் கவர்னர் தொடங்கி வைத்தார்

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
ஏகே என்டர்டெயின்மென்ட்ஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனம் தயாரிக்கும் படம், 'ஏஸ் ராஜா ராணி ஜாக்கி மற்றும் ஜோக்கர்'. தமிழ், தெலுங்கில் தயாராகும் இதில் ஷாம், அல்லரி நரேஷ், வைபவ், ராஜூ சுந்தரம், சினேகா உல்லால், நீலம் உட்பட பலர் நடிக்கிறார்கள். அனில் சங்கரா தயாரித்து இயக்குகிறார். சர்வேஸ் முராரி ஒளிப்பதிவு. பப்பிலஹரி மகன் பப்பாலஹரி இசையமைக்கிறார். இந்தப் படத்தின் தொடக்க விழா சென்னையில் நடந்தது. கவர்னர் ரோசய்யா துவக்கி வைத்தார். நடிகர்கள் தியாகராஜன், சிம்பு, ஸ்ரீகாந்த், பிரசாந்த், மகதி, இயக்குனர் வெங்கட்பிரபு, தயாரிப்பாளர் தயாநிதி அழகிரி உட்பட பலர் கலந்துகொண்டனர். படம் பற்றி அனில் சங்கரா கூறும்போது, ''இது, 3டி படம்.  காமெடிக்கு முக்கியத்துவம் கொடுத்து படம் உருவாக்கப்படுகிறது. முதல்கட்ட ஷூட்டிங் சென்னை மற்றும் பாங்காக்கில் நடக்கிறது'' என்றார்.


 

சென்னை தம்பதி கதையில் நித்யா மேனன்

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
சென்னையில் வாழும் ஒரு தம்பதியின் வாழ்க்கையை மையமாக வைத்து படம் தயாராகிறது. இதுபற்றி கன்னடப் பட இயக்குனர் நாகாஷேகர் கூறியதாவது:
பல்வேறு கொலை வழக்குகளை கையாண்ட உதவி போலீஸ் கமிஷனர் அசோக்குமார் என்பவர் சொன்ன உண்மை கதைகளில் ஒரு கதையை படமாக்க இருக்கிறோம். ஏனென்றால் இந்த கதை அவ்வளவு சுவாரஸ்யமானது. ஒரு பெண்ணுக்காக பல கொலைகளை செய்தவனின் கதை இது.

ஏன் அப்படி செய்தான் என்பதற்கான காரணங்கள் வியக்கத்தக்க வகையில் இருக்கும். இது உண்மை கதை. இந்த ஜோடி திருமணம் செய்துகொள்ளாமல் இப்போதும் சென்னையில் வசித்து வருகிறது. இதில் போலீஸ் அதிகாரியாக, சரத்குமார் நடிக்கிறார். ஹீரோவாக சேத்தனும் ஹீரோயினாக நித்யா மேனனும் நடிக்கிறார்கள். உடல் ஊனமுற்றவராக இவர் நடிக்கிறார். தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னட மொழிகளில் படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளோம்.


 

கன்னடத்திலும் தங்கையாக நடிக்கிறார் சரண்யா மோகன்

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
'சமுத்திரம்' படத்தின் கன்னட ரீமேக்கில், காவேரி நடித்த தங்கை கேரக்டரில் நடித்து வருகிறார் சரண்யா மோகன். இதுகுறித்து அவர் கூறியதாவது:
'சமுத்திரம்' எனக்கு மிகவும் பிடித்த படம். பத்து முறையாவது பார்த்திருப்பேன். அதன் ரீமேக்கில் நடிப்பேன் என்று எதிர்பார்க்கவில்லை. அதிலும் காவேரி கேரக்டர் பவர்புல்லானது. படத்தை பலமுறை பார்த்திருந்தாலும் காவேரியை காப்பி அடிக்கவில்லை. எனது ஸ்டைலில் நடித்து வருகிறேன். இதுதவிர நான் நடித்த இன்னொரு கன்னடப்படம் விரைவில் வெளிவருகிறது. மலையாளத்தில் அப்பா மகள் உறவை சித்தரிக்கும் 'பேரினொரு மகன்' என்ற படத்தில் நடிக்கிறேன். தமிழில் இரண்டு கதைகளுக்கு ஒப்புதல் கொடுத்திருக்கிறேன். இன்னும் ஒப்பந்தம் கையெழுத்தாகவில்லை.


 

மனிதநேய பண்பாளர்களை அரசு அங்கீகரிக்க வேண்டும்

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
ரா.பார்த்திபன் மனிதநேய மன்றம் சார்பில் ரத்ததான முகாம் மற்றும் கண் தான முகாம் சென்னையில் நேற்று நடந்தது. இதில் எர்ணாகுளத்தைச் சேர்ந்த லாட்டரி வியாபாரி சுரேஷுக்கு, 'சிறந்த மனிதநேயன் விருது' வழங்கப்பட்டது. நீதிபதி சந்துரு அவருக்கு ஒரு லட்சம் ரூபாய்க்கான காசோலையை வழங்கினார். இதையடுத்து சுரேஷின் வாரிசுகள் படிக்க, 50 ஆயிரம் ரூபாய் வழங்கிய விவேக், பேசியதாவது:

60 வயதை தாண்டிய அய்யப்பன் என்பவர், வறுமை காரணமாக, சுரேஷ் கடையில் லாட்டரி சீட்டுகள் வாங்கினார். அதற்கான பணம் 250 ரூபாயைக் கொடுக்க முடியவில்லை. சுரேஷிடமே கொடுத்துவிட்டார். மறுநாள் அந்த சீட்டுக்கு ஒரு கோடி ரூபாய் பரிசு கிடைத்தது. விஷயத்தை அய்யப்பனிடம் சுரேஷ் சொன்னபோது, 'லாட்டரி சீட்டுகளுக்கான பணத்தை உங்களிடம் கொடுக்காத எனக்கு இந்த பரிசு கிடைப்பது நியாயம் இல்லை' என்று மறுத்தார். ஆனால் சுரேஷ் விடாப்பிடியாக, 'இது உங்களுக்கான சீட்டு. இதற்கான தொகை 250 ரூபாய் கொடுங்கள். நியாயமாக ஒரு கோடி ரூபாய் பரிசு உங்களுக்கே சேர வேண்டும்' என்று கொடுத்துவிட்டு சென்றார். ஏழ்மையிலும் இவ்வளவு நேர்மையாகவும், மனிதநேயத்துடனும் நடந்துகொண்ட சுரேசுக்கு, மனிதநேய மன்றம் விருது கொடுத்திருப்பதன் மூலம் பார்த்திபன் உயர்ந்துவிட்டார்.

இதுபோல் மனித நேயத்தில் சிறந்து விளங்குபவர்களை அரசு அங்கீகரித்து, உயர்ந்த விருதை வழங்க வேண்டும். இவ்வாறு விவேக் பேசினார். விழாவில், கே.பாக்யராஜ், பிரசன்னா, ரோகிணி, டாக்டர்கள் முருகப்பன், சுஜாதா உட்பட பலர் கலந்துகொண்டனர்.


 

கிசு கிசு - இசைஇயக்கம் திடீர் மோதல்

Kollywood news, bollywood news, hollywood news, Cinema news, movie review, cinema in tamil, tamil cinema news
உலக அழகி போட்டியில கலந்துகிட்ட பார்வதியான நடிகை, தல படத்துல நடிக்கிறாரு. ஏற்கனவே மலையாளத்துல நடிகை நடிச்ச படம் ஓடல. தல படம் ரிலீசாகப்போறதால அந்த மல்லுவுட் படத்தை தூசி தட்டி எடுக்கிறாங்களாம்... எடுக்கிறாங்களாம்... தல படம் வந்ததும் அந்த மல்லு படத்தை தமிழ்ல டப் பண்ணி ரிலீஸ் பண்ண தயாரிப்பு முடிவு பண்ணியிருக்காராம்... பண்ணியிருக்காராம்...

பாஸ் படம் தந்த இயக்கத்துக்கும் யுவ இசைக்கும் நல்ல கெமிஸ்ட்ரி இருந்துச்சு. இப்போ திடீர்னு இயக்கத்துக்கும் இசைக்கும் முட்டிக்கிச்சாம்... முட்டிக்கிச்சாம்... காட்டன் வீர ஹீரோவை வச்சு இயக்கம் பண்ணப்போற படத்துல யுவ இசை ஒர்க் பண்ண மாட்டாராம்... மாட்டாராம்... ஈகோ பிரச்னைதான் இதுக்கு காரணம்னு இண்டஸ்ட்ரில பேசிக்கிறாங்களாம்... பேசிக்கிறாங்களாம்...

காதல் நடிகைக்கு தமிழ்ல படங்களே இல்ல. மலையாளத்துல மட்டுமே வாய்ப்புகள் வருதாம்... வருதாம்... கிடைக்கிற செகண்ட் ஹீரோயின், மூணாவது ஹீரோயின் ரோல்கள்ல நடிகை திருப்தியா இருக்காராம். சொந்த ஊரான மலையாள தேசத்துல லீசுக்கு வீடும் எடுத்திருக்காராம். மல்லுவுட்ல பிசி ஆயிட்டா, அங்கேயே தங்கவும் முடிவு எடுத்திருக்காராம்... எடுத்திருக்காராம்...


 

இசை அமைப்பாளர், காமெடியனுக்கு கோடி, லட்சத்தில் சம்பளம் வேஸ்ட்

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
இசை அமைப்பாளர், காமெடி நடிகர்களுக்கு கோடி, பல லட்சங்களில் சம்பளம் தருவது வேஸ்ட் என்றார் இயக்குனர் விக்ரமன். புதுமுகங்கள் ஸ்ரீதரன், ஜெயசேகர், வெண்ணிலா, என்.பி.ராஜ சேகரன் உடையார் உள்ளிட்டோர் நடிக்கும் படம் 'அமிர்தயோகம்Õ. இதன் பாடல் கேசட்டை இயக்குனர் விக்ரமன் வெளியிட இயக்குனர் திருமலை பெற்றார். பிறகு விக்ரமன் பேசியதாவது:

என் படங்களுக்கு நானேதான் நகைச்சுவையும் எழுதுவேன். ஷூட்டிங் நேரத்தில் யாரும் சிரிக்க மாட்டார்கள். தியேட்டரில் வரவேற்பு இருக்கும். அதிகபட்சமாக காமெடி நடிகருக்கு 1 லட்சம்தான் தந்திருக்கிறேன். காமெடி காட்சிக்கு கவுண்டமணியை நடிக்க கேட்டால் 40 லட்சம் ரூபாய கேட்பார். அந்த பணத்தில் முக்கால்பாகம் படத்தை முடித்துவிடுவேன். இளையராஜாவை இசை அமைப்பாளராக போட்டால் அவரது பேருக்காக 10 லட்சம் ரூபாய் கூடுதல் வியாபாரம் இருக்கும். அவர் வாங்கும் சம்பளத்தைவிட யாருக்கும் அதிகமாக தருவது எனக்கு உடன்பாடில்லை.

எதற்காக இசைக்காக மட்டும் ஒன்றைகோடி ரூபாய் தர வேண்டும். என் படம் ஒன்றுக்கு ஏ.ஆர்.ரகுமான் இசை அமைத்தார். அதில் பிரபல கவிஞரை பாடல் எழுத அணுகினேன். திருத்தங்கள் சொன்னபோது கோபப்பட்டார். நான் சிறப்பு தமிழ் படித்திருக்கிறேன். எனக்கும் இலக்கணம் தெரியும். முட்டாள் இல்லை. உடனே அந்த கவிஞரை வேண்டாம் என்று பழனிபாரதி போன்ற புதிய கவிஞர்களுக்கு வாய்ப்பளித்தேன். ஒருவர் வாய்ப்பை மறுக்கும்போது இன்னொருவர் புதிதாக உருவாகிறார். ஒரு படத்துக்கு ராஜா மறுத்ததால்தான் ரகுமான் உருவானார். ரஜினி நடித்த 'அண்ணாமலை' படத்தை இயக்க மாட்டேன் என்று வசந்த் சொன்னதால்தான் சுரேஷ் கிருஷ்ணா உருவானார்.இவ்வாறு விக்ரமன் கூறினார்.இயக்குனர் ஏ.மாணிக்கராஜ் வரவேற்றார்.