உங்களுடைய மகள் பொது இடத்தில் முத்தம் கொடுத்தால் ஏற்பீர்களா?... ஷோபனா கேள்வி

திருவனந்தபுரம் : முத்தம் கொடுப்பது என்பது மிகவும் தனிப்பட்ட விசயம். அதை பொது இடங்களில் செய்வது ஏன் என கேள்வி எழுப்பியுள்ளார் நடிகை ஷோபனா.

கேரளாவில் ஆரம்பித்து இன்று நாடு முழுவதும் சர்ச்சைக்குரிய விவாதப் பொருளாகி உள்ளது முத்தப் போராட்டம். பலத்த எதிர்ப்புகளையும், கண்டனங்களையும் பெற்று வரும் இந்த முத்தப் போராட்டத்திற்கு தடை விதிக்க முடியாது என கேரள அரசு தெரிவித்துள்ளது.

உங்களுடைய மகள் பொது இடத்தில் முத்தம் கொடுத்தால் ஏற்பீர்களா?... ஷோபனா கேள்வி

இந்நிலையில், நடன நிகழ்ச்சிக்காக பெங்களூரு சென்றிருந்த நடிகை ஷோபனா, முத்தப் போராட்டம் குறித்த தனது கருத்துக்களைத் தெரிவித்துள்ளார்.

‘முத்தம் கொடுப்பது என்பது தனிப்பட்ட விஷயம். அது தனிப்பட்ட பிரச்சினை. ஆனால் அதை பொது இடங்களில் செய்வது ஏன் என்பது தான் எனக்கு புரியாத விஷயமாக உள்ளது.

இந்த போராட்டத்தை நடத்துபவர்கள் தாங்கள் செய்வது சரி என்று வாதாடலாம். ஆனால், தங்களது மகள்கள் பொது இடத்தில் நடந்து கொண்டால் அதை அவர்கள் பார்த்துக் கொண்டிருப்பார்களா, ஏற்பார்களா... என்று கேட்டுள்ளார் ஷோபனா.

 

2014-ம் ஆண்டின் சிறந்த ஆல்பம் கத்தி! - ஐட்யூன்ஸ் தேர்வு

2014-ம் ஆண்டின் சிறந்த ஆல்பமாக அனிருத் இசையில் வெளியான கத்தி படப் பாடல்களை ஐட்யூன்ஸ் நிறுவனம் தேர்வு செய்துள்ளது.

விஜய்-சமந்தா நடிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கி தீபாவளிக்கு வெளிவந்த படம் ‘கத்தி'. இப்படத்திற்கு அனிருத் இசையமைத்திருந்தார்.

இவருடைய இசை இசையைப் பாராட்டி அனிருத்துக்கு பியானோ ஒன்றைப் பரிசளித்தார் விஜய்.

2014-ம் ஆண்டின் சிறந்த ஆல்பம் கத்தி! - ஐட்யூன்ஸ் தேர்வு

இந்நிலையில், இந்த ஆண்டின் சிறந்த ஆல்பமாக ‘கத்தி' படத்தின் பாடல்களை ஐடியூன்ஸ் நிறுவனம் தேர்வு செய்துள்ளது. இது அனிருத்துக்கு மிகுந்த சந்தோஷத்தைக் கொடுத்துள்ளது. அனிருத்துக்கு படக்குழுவினரும், திரையுலகை சேர்ந்தவர்களும் தங்களது வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளனர்.

இப்படத்தின் பாடல்கள் உரிமையை பெற்ற ஈராஸ் மியூசிக் நிறுவனம் அனிருத்துக்கு பாராட்டுக்களை தெரிவித்ததோடு, ‘கத்தி' படத்தின் பாடல்கள் சிறந்த ஆல்பமாக தேர்வானதை எண்ணி பெருமை அடைகிறோம் என்றும் அறிவித்துள்ளது.

ஐட்யூன்ஸுக்கு நன்றி தெரிவித்துள்ளார் அனிருத்.

 

பிபாஷா பிசாசா?

மும்பை: அலோன் என்ற இந்தி படத்தில் நடிகை பிபாஷா பாசு பேயாக வந்து மிரட்ட உள்ளார்.

2007ம் ஆண்டு தாய்லாந்தில் அலோன் என்ற பெயரில் பேய் படம் ஒன்று வெளியானது. அந்த படம் தாய்லாந்து தவிர உலக அளவிலும் வசூலை அள்ளிக் குவித்தது. அந்த படத்தை தற்போது அதே பெயரில் இந்தியில் ரீமேக் செய்துள்ளனர்.

படத்தில் பிபாஷா பாசு ஒட்டிப் பிறந்த இரட்டையராக வருகிறார். அவர் பேயாக வந்து ரசிகர்களை மிரட்ட உள்ளார். இந்த படம் மூலம் சின்னத்திரை நடிகர் கரண் சிங் க்ரோவர் பாலிவுட்டில் ஹீரோவாக அறிமுகம் ஆகிறார்.

பிபாஷா பிசாசா?

பாலிவுட் படத்தில் சிக்ஸ் பேக் இல்லாமலா? பேய் படமானாலும் இதிலும் கரண் சிக்ஸ் பேக்ஸோடு தான் வலம் வருகிறார். ஒட்டிப் பிறந்த இரட்டையரில் ஒருவர் இறந்து மற்றொருவர் மூலம் பழி வாங்க துடிப்பதே கதை ஆகும். இந்த படம் வரும் ஜனவரி மாதம் 16ம் தேதி ரிலீஸ் ஆகிறது. படத்தின் முதல் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. அதில் பிபாஷா அசத்தலாகவும், மிரட்டலாகவும் உள்ளார்.

பிபாஷா பிசாசா?  

பூஷன் பட்டேல் இயக்கியுள்ள படத்தை பனோரமா ஸ்டுடியோஸ் என்ற பேனரில் குமார் மங்கத் பதக், அபிஷேக் பதக், பிரதீப் அகர்வால் மற்றும் ஆன்டிஸ் ஆகியோர் தயாரித்துள்ளனர்.

பூஷன் பட்டேல் முன்னதாக ராகினி எம்.எம்.எஸ்.2, 1920 ஈவில் ரிட்டர்ன்ஸ் ஆகிய வெற்றி படங்களை இயக்கியவர்.

 

கோச்சடையான் பார்த்து காசை வேஸ்ட் பண்ணிய ரசிகர்களுக்கு 'லிங்கா' கட்டணத்தில் தள்ளுபடி?

சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து, கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் லிங்கா திரைப்படம் வரும் வெள்ளிக்கிழமை ரிலீசாக உள்ள நிலையில், சமூக வலைத்தளங்களில் ஒரு ஜோக் பரவி வருகிறது.

ரஜினிகாந்த் நடிப்பில் மோசன் கேப்சரிங் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி அனிமேஷன் திரைப்படமாக இந்த ஆண்டு மே 23ம்தேதி வெளியானது கோச்சடையான். ரஜினிகாந்த்தின் மகள் சவுந்தர்யா இப்படத்தை இயக்கியிருந்தார். சுமார் 125 நிமிடங்கள் ஓடக்கூடிய அந்த படத்தை பார்த்த ரசிகர்கள், ஒருநாள் முழுக்க தியேட்டரில் உட்கார்ந்திருந்ததை போல உணர்ந்ததாக புலம்பினர்.

கோச்சடையான் பார்த்து காசை வேஸ்ட் பண்ணிய ரசிகர்களுக்கு 'லிங்கா' கட்டணத்தில் தள்ளுபடி?

பாபா, குசேலன் வரிசையில் கோச்சடையானும் சேர்ந்தது ரஜினி ரசிகர்களுக்கு சோகமே. ஆனால் குசேலனில் ரஜினி கெஸ்ட் ரோலில் நடித்தார் என்றும், கோச்சடையான் அனிமேஷன் படம் என்றும் கூறி சமாளித்து வருகின்றனர் ரசிகர்கள்.

இந்நிலையில்தான் கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் லிங்கா வரும் வெள்ளிக்கிழமை வெளியாகிறது. இது வழக்கமான சூப்பர் ஸ்டார் பட மசாலாவாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு உள்ளதால் மினிமம் கியாரண்டிக்கு பாதிப்பிருக்காது என்பது தயாரிப்பாளர்கள் எண்ணம். ஆனால் ரசிகர்களுக்கோ, கோச்சடையானை பார்த்ததில் இருந்து சூடுள்ள பால் டம்ளரில் வாய் வைத்த பூனை நிலைமை. எனவேதான் சிவாஜி, எந்திரனுக்கு இருந்த 'ஹைப்' லிங்காவுக்கு கிடைக்காமல் போயுள்ளது.

இதைமுன்வைத்துதான் ஒரு ஜோக் இணையத்தில் பரவி வருகிறது. அது இதுதான்: "கோச்சடையான் படம் பார்த்தவர்களுக்கு லிங்கா பட டிக்கெட்டில் டிஸ்கவுண்ட் தருவார்களா" என்பதுதான் அந்த கேலி கேள்வி.

கோச்சடையானுக்கும் ரஜினி படத்திற்கே உரிய கட்டணம்தான் வசூலிக்கப்பட்டது. ஆனால் கையில் சூடுபட்டது என்னவோ ரசிகர்கள்தான். எனவே அந்த கணக்கை லிங்காவில் சரிகட்ட வேண்டாமா? என்பதுதான் கோச்சடையான் பார்த்து குழம்பி திரியும் ரசிகர்களின் கேள்வியாக உள்ளது.

 

ஸ்ருதி ஹாஸனை கண்கலங்க வைக்கும் வதந்திகள்

சென்னை: நான் வளர்வது பிடிக்காத யாரோ என்னை பற்றி வதந்திகளை பரப்புகிறார்கள் என்று ஸ்ருதி ஹாஸன் தெரிவித்துள்ளார்.

விஜய்யை வைத்து சிம்பு தேவன் இயக்கி வரும் படத்தில் ஸ்ருதி ஹாஸன் நடித்து வருகிறார். இது தவிர அவர் கை நிறைய இந்தி படங்கள் வைத்துள்ளார். மேலும் ஒரு தெலுங்கு படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார்.

ஸ்ருதியின் குத்தாட்டத்தை கண் குளிர பார்க்க ஆந்திர ரசிகர்கள் துடிக்கிறார்கள். இதனால் அவருக்கு அள்ளிக் கொடுத்து குத்தாட்டம் போட வைக்க தெலுங்கு தயாரிப்பாளர்கள் தயாராக உள்ளனர்.

மகேஷ் பாபுவுக்கும் எனக்கும் சண்டையா, அதை ஏன் கேட்கிறீங்க: ஸ்ருதி

இந்நிலையில் மகேஷ் பாபுவுக்கும், ஸ்ருதிக்கும் இடையே பிரச்சனையாம். அதனால் தான் ஸ்ருதி மகேஷ் பாபு நடித்துக் கொண்டிருக்கும் படத்தில் இருந்து விலகிவிட்டார் என்று கூறப்பட்டது.

இது குறித்து அறிந்த ஸ்ருதி கூறுகையில்,

நான் முன்னணி நடிகையாக வளர்ச்சி அடைவதை பொறுத்துக் கொள்ள முடியாதவர்கள் தான் என்னை பற்றி தவறான செய்திகளை பரப்புகிறார்கள். நான் விஜய், மகேஷ் பாபு உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் நடிப்பதை அவர்களால் தாங்கிக்கொள்ள முடியவில்லை என்றார்.

 

விஷாலைத் தொடர்ந்து தாக்கும் நடிகர் சங்க நிர்வாகிகள்

நடிகர் விஷாலை அத்தனை சீக்கிரம் விடுவதாக இல்லை நடிகர் சங்க நிர்வாகிகள்.

மீண்டும் அவரைத் தாக்கிப் பேசியதோடு, கண்டனமும் தெரிவித்துள்ளனர்.

நடிகர் சங்கத்துக்கு விரைவில் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக தற்போதைய நடிகர் சங்க பொதுச் செயலாளர் ராதாரவி, துணைத் தலைவர் கே.என்.காளை ஆகியோர் நாடக நடிகர்களிடம் ஆதரவு திரட்டி வருகிறார்கள்.

விஷாலைத் தொடர்ந்து தாக்கும் நடிகர் சங்க நிர்வாகிகள்

சமீபத்தில் திருச்சியில் நடந்த நாடக நடிகர்கள் ஆலோசனை கூட்டத்தில் இவர்கள் விஷாலையும், நாசரையும் கடுமையாக விமர்சித்துப் பேச, அது பெரிய புயலைக் கிளப்பியது.

நடிகர் சங்கத்திலும் புகார் அளிக்கப்பட்டது. இதற்கு விளக்கம் அளிக்கும்படி இருவருக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டது.

இந்த நிலையில் விஷால் நடிகர் சங்கத்துக்கு எதிரான நடவடிக்கைகளில் தொடர்ந்து ஈடுபடுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. விஷால் இதுபோன்ற செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டால் சங்கத்தில் இருந்து நீக்கப்படுவார் என்று சங்கத் தலைவர் சரத்குமார் சரத்குமார்.

இந்த நிலையில் மதுரையில் நடந்த சங்கரதாஸ் சாமிகள் குருபூஜை விழாவில் நடிகர் சங்க துணைத் தலைவர் கே.என்.காளை, செயற்குழு உறுப்பினர் பிரகாஷ் ராஜேந்திரன் ஆகியோர் பங்கேற்றனர்.

இதில் நாடக நடிகர் சங்க துணைத் தலைவர் கலைமணி பங்கேற்று பேசும்போது, "சரத்குமார், ராதாரவி போன்றோர் நாடக நடிகர்கள் நலனுக்காக போராடி வருகிறார்கள். அவர்களுக்கு எதிராக விஷால் போன்ற சில நடிகர்கள் செயல்படுகின்றனர். மன்சூர் அலிகான் நாடக நடிகர்களை இழிவுபடுத்தி பேசி வருகிறார்.

நாடக நடிகர்களை தென்னிந்திய நடிகர் சங்கத்தில் உட்கார வைத்தவர் ராதாரவி. எனவே சரத்குமார், ராதாரவி கரத்தை வலுப்படுத்த வேண்டும். சங்கத்துக்கு எதிராக செயல்படும் விஷால், மன்சூர் அலிகானை கண்டிக்கிறோம். எங்களுக்கு நடிக்கவும் தெரியும், அடிக்கவும் தெரியும்," என்றனர்.

 

லிங்கா முதல் நாள் முதல் காட்சி ஜூரம்... நள்ளிரவு 12 மணி காட்சிக்கு தயாராகும் ரசிகர்கள்!

லிங்கா படத்தில் தங்கள் தலைவரின் ஆக்ஷனைக் காண ஆவலுடன் காத்திருக்கும் ரஜினி ரசிகர்கள், முதல் நாள் முதல் காட்சியை நள்ளிரவு 12 மணிக்கே காணத் தயாராகி வருகின்றனர்.

சென்னை உள்பட தமிழகத்தின் அனைத்து ஏரியாக்களிலுமே லிங்காவுக்கு நள்ளிரவு 12 அல்லது 1 மணி மற்றும் அதிகாலை 4.30 மணி சிறப்புக் காட்சிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

லிங்கா முதல் நாள் முதல் காட்சி ஜூரம்... நள்ளிரவு 12 மணி காட்சிக்கு தயாராகும் ரசிகர்கள்!

லிங்கா வெளியாகும் அத்தனை அரங்குகளிலுமே இந்த சிறப்புக் காட்சிகள் நடக்கின்றன. அந்தந்த பகுதி ரஜினி ரசிகர் மன்ற நிர்வாகிகள் இந்த காட்சிகளுக்கான டிக்கெட்டுகளை வாங்கியுள்ளனர். அதிகாரப்பூர்வமான ரிசர்வேஷன் இன்றிலிருந்துதான் என்றாலும், மூன்று நாட்களுக்கு முன்பிருந்தே சிறப்புக்காட்சிக்கான டிக்கெட்டுகள் விற்கப்பட்டுவிட்டன.

சென்னையில் காசி, சைதை ராஜ், பரங்கிமலை ஜோதி, குரோம்பேட்டை வெற்றி, ஏஜிஎஸ் உள்ளிட்ட அரங்குகளில் நள்ளிரவுக் காட்சிகள் நடக்கின்றன.

சில அரங்குகளில் அதிகாலை 4.30 மணிக் காட்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

காலையில் ரஜினி பிறந்த நாள் நிகழ்ச்சிகளில் பங்கேற்க வேண்டியிருப்பதால் பெரும்பாலான ரசிகர்கள் இந்த நள்ளிரவு மற்றும் அதிகாலை சிறப்புக் காட்சிகளையே விரும்புகின்றனர்.

 

சந்தானத்துக்கு ஜோடியானார் ப்ரியா ஆனந்த்!

ஹீரோ யாராக இருந்தால் என்ன... லைம்லைட்டில் இருக்க வேண்டும் என்பது ப்ரியா ஆனந்த் பாலிசி.

அந்த பாலிசிப்படி, இரண்டாம் நிலை ஹீரோக்களுடன் ஜோடி போட்டு வந்த ப்ரியா, அடுத்த ரவுண்டுக்கு ஆயத்தமாகிவிட்டார்.

சந்தானம் ஹீரோவாக நடிக்கும் படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்கிறார் ப்ரியா ஆனந்த்.

சந்தானத்துக்கு ஜோடியானார் ப்ரியா ஆனந்த்!

‘சிவா மனசுல சக்தி', ‘பாஸ் என்கிற பாஸ்கரன்' ஆகிய படங்களை இயக்கிய ராஜேஷிடம் உதவியாளராக பணியாற்றியவர் அருண் பிரசாத். இவர் இயக்கும் படத்தில்தான் சந்தானம் ஹீரோ. ப்ரியா ஹீரோயின்.

‘கண்ணா லட்டு திண்ண ஆசையா' சேது, சக்தி ஆகியோரும் இந்தப் படத்தில் நடிக்கின்றனர். இன்னும் பெயரிடப்படாத இப்படத்தை இந்த மாதம் கடைசி வாரத்தில் தொடங்குகிறது.

 

லிங்கா தரிசனத்திற்காக காத்திருக்கும் ஜிகர்தண்டா இயக்குனர்

சென்னை: லிங்காவின் அதிகாலை தரிசனத்திற்காக காத்துக் கொண்டிருக்கிறேன் என ஜிகர்தண்டா இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் தெரிவித்துள்ளார்.

பீட்சா படம் மூலம் கோலிவுட்டுக்கு வந்தவர் இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ். என்ஜினியரிங் படித்துள்ள அவர் பீட்சாவை அடுத்து சித்தார்த்தை வைத்து ஜிகர்தண்டா படத்தை எடுத்து வெற்றி கண்டார்.

லிங்கா தரிசனத்திற்காக காத்திருக்கும் ஜிகர்தண்டா இயக்குனர்

அடுத்தடுத்து இரண்டு வெற்றிப் படங்களை கொடுத்துள்ள அவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ரசிகர் ஆவார். ரஜினியின் லிங்கா படம் ரிலீஸாக இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் கார்த்திக் தான் தனது தலைவரை ஷிமோகாவில் சந்தித்து பேசியதையும், அவர் ஜிகர்தண்டா படத்தை புகழ்ந்ததையும் ஃபேஸ்புக்கில் தெரிவித்துள்ளார்.

ரஜினியை சந்தித்து பேசிய தருணங்கள் விலை மதிக்க முடியாதது என்று கார்த்திக் தெரிவித்துள்ளார். கார்த்திக் இயக்கிய ஜிகர்தண்டா படத்தில் நடித்த கருணாகரன் லிங்காவிலும் நடித்துள்ளார்.

கருணாகரனை லிங்காவில் ரஜினிக்கு அருகில் பார்க்க மகிழ்ச்சியாகவும், பெருமையாகவும் உள்ளதாக கார்த்திக் ட்விட்டரில் தெரிவித்துள்ளார். மேலும் டிசம்பர் 12ம் தேதி அதிகாலை தரிசனத்திற்காக காத்துக் கொண்டிருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

 

லிங்கா யாருடைய கதையையும் காப்பியடித்து எடுக்கப்பட்டதல்ல! - ரஜினி பேச்சு

ஹைதராபாத்: லிங்கா படத்தின் கதைக்கு நான்கு பேர் சொந்தம் கொண்டாடுகின்றனர். இதில் உண்மையில்லை. இந்தக் கதை பொன் குமரன் எழுதியது. மிகச் சிறந்த கதை. இதில் நடித்திருப்பது மகிழ்ச்சியாக உள்ளது," என்று ரஜினிகாந்த் கூறினார்.

ஹைதராபாதில் நடந்த லிங்கா படத்தின் அறிமுக நிகழ்ச்சியில் ரஜினி கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் அவர் சுத்தத் தெலுங்கில் நகைச்சுவை ததும்பப் பேசியது அனைவரையும் மகிழ வைத்தது. அவரது பேச்சிலிருந்து...

60 வயதில் என்னை டூயட் பாட வைத்தது கடவுள் கொடுத்த தண்டனை- ரஜினி பேச்சு

சமீபத்தில் நடந்த புயல் நிவாரண நிதி திரட்டும் கலை நிகழ்ச்சிக்கு என்னையும் அழைத்திருந்தனர். ஆனால் அன்றைக்கு எனது குடும்பத்தில் முக்கிய திருமண நிகழ்ச்சி இருந்ததால் இங்கு வரமுடியவில்லை. ஆனால் சென்னைக்குத் திரும்பியதும், என்னால் எவ்வளவு உதவித் தொகை தர முடியுமோ அதை அளிப்பேன்.

நான்கரை ஆண்டுகளுக்குப் பிறகு வரும் எனது நேரடிப் படம் இது. நடுவில் கோச்சடையான் படம் வந்தது. அது வேறு வகைப் படம். அனிமேஷனில் எடுத்திருந்தார்கள். லிங்கா நேரடிப் படம்.

முதலில் இத்தனை பிரமாண்ட படத்தை ஆறே மாதங்களில் முடித்திருப்பது. பெரிய நடிகர், பெரிய பட்ஜெட் என்பதை வைத்து இதைச் சொல்லவில்லை. இந்தப் படத்தின் சப்ஜெக்ட் அத்தனை பெரிது. சுதந்திர காலத்துக்கு முந்தைய 1930கள் மற்றும் 40களில் நடக்கும் கதை இது. இந்தக் கதைக்காக ஒரு பெரிய அணை கட்ட வேண்டியிருந்தது.

பெரிய பெரிய ரயில் சண்டைகள், யானைகள், குதிரைகள் இந்தப் படத்தில் இடம்பெற்றுள்ளன. குறைந்தது 40 காட்சிகளிலாவது ஆயிரத்துக்கும் மேற்பட்ட நடிகர் நடிகைகள் இடம்பெற்றனர். இத்தனை பிரமாண்ட ஷூட்டிங்கை ஆறே மாதங்களில் முடித்தது சாதாரணமானதல்ல. ஹேட்ஸ் ஆப் டு டைரக்டர் கேஎஸ் ரவிக்குமார், அவரது யூனிட் மற்றும் தயாரிப்பாளர் ராக்லைன் வெங்கடேஷ்.

நாங்களெல்லாம் நடிகர்கள் ஒன்றுமே இல்லை.. ஷூட்டிங்குக்கு வருவோம், நடிப்போம், போய்விடுவோம். ஆனால் இந்த டெக்னீஷியன்கள் அசாதாரணமாக உழைத்து 6 மாதங்களில் படத்தை முடித்தார்கள். அந்த உழைப்பு பாராட்டத்தக்கது.

இந்தப் படத்தில் மூணு ஆச்சர்யங்கள் இருக்கு. முதல் ஆச்சர்யம் பெரிய பெரிய டெக்னீஷியன்கள் சாபு சிரில், ரஹ்மான், ரத்னவேலு, சோனாக்ஷி, அனுஷ்கா எல்லாருமே ரொம்ப பெரிய, பிஸியான ஆர்டிஸ்ட்கள். படம் பார்க்கும்போது அவர்களின் உழைப்பு உங்களுக்கு தெரியும்.

இரண்டாவது ஆச்சர்யம், படம் வெளியாகும் நேரம் பாத்து நாலு அஞ்சு பேர் இந்தக் கதை என்னுடையது என சொந்தம் கொண்டாடி வழக்கு தொடர்ந்தனர்.

ட்விட்டர்ல ஒண்ணு பார்த்தேன். அதில் ரஜினி படத்துல கதை இருக்கா, அப்படி அவர் படத்துல கதை இருந்தா, அந்தக் கதைக்கு நாலு பேர் சொந்தம் கொண்டாடறாங்கன்னா நான் அந்தப் படத்தை முதல்ல பார்ப்பேன்னு ஒருத்தர் போட்டிருந்தார்.

உண்மையிலேயே இந்தப் படத்தில் நல்ல கதை இருக்கிறது. ஆனா அது அந்த நாலு பேரோடது இல்லை. பொன் குமரனுடையது. எனக்கு ரொம்பப் பிடிச்ச கதை. இதில் நடிச்சது பெருமையா இருக்கு.

மூன்றாவது ஆச்சர்யம்... நான் இந்தப் படத்துல ரொம்பக் கஷ்டப்பட்டு நடிச்சிருக்கேன். ரொம்ப ரொம்ப கஷ்டப்பட்டு நடிச்சதுன்னா அந்த ரயில் சண்டையோ, க்ளைமாக்ஸ் சண்டையோ அல்ல... இந்த ஹீரோயின்களோட டூயட் பாடி நடிச்சதுதான். சத்தியமா சொல்றேன்.

இந்த சோனாக்ஷியை சின்னக் குழந்தையா இருக்கும் போதிலிருந்து எனக்குத் தெரியும். என் மகள்கள் ஐஸ்வர்யா, சவுந்தர்யா கூடவே வளந்தவங்க. அவங்க கூட டூயட் பாடணும்னு சொன்னதும் எனக்கு வியர்த்துடுச்சி. என்னோட முதல் படமான அபூர்வ ராகங்கள்ல முதல் ஷாட் நடிச்சப்ப கூட இப்படி டென்ஷன் இருந்ததில்லை எனக்கு.

நடிகர்களுக்கு ஏதாவது தண்டனை கொடுக்கணும்னு கடவுள் நினைச்சாருன்னா, 60 வயசுல நடிகர்களுக்கு டூயட் பாடற தண்டனையைக் கொடுக்கலாம்.

மேக்கப் போட்ட பானுவுக்கு நன்றி. கேமராமேன் ரத்தினவேலு கூட சென்னையில நடந்த ஆடியோ விழாவுல வெளிப்படையா சொல்லியிருந்தாரு. நான் ரஜினிகாந்தை ரொம்ம்பக் கஷ்டப்பட்டு இளமையா காட்டியிருக்கேன்... ரொம்ப ரொம்ப கஷ்டப்பட்டு அழகா காட்டியிருக்கேன்னு சொன்னாரு. ரொம்ப கஷ்டப்பட்ட இளமையான காட்டினதா சொன்னது ஓகே.. அழகா காட்டியிருக்கேன்னு சொன்னது...(பலமாக சிரிக்கிறார்)..

இந்தப் படம் 6 மாதத்தில் முடிந்ததை நான் சாதனையாகச் சொல்வேன். என்னைப் போன்ற ஒரு சீனியர் நடிகர், இந்த துறையில் இவ்வளவு சம்பாதித்த பிறகு, அந்தத் துறைக்கு ஏதாவது ஒரு நல்லது செய்ய வேண்டும், இங்குள்ள இளம் கலைஞர்களுக்கு ஒரு உதாரணத்தைத் தரவேண்டும். அதுதான் இந்த லிங்கா. இதை ஒரு சபதமாக எடுத்துக் கொண்டு செயல்பட்டோம். அதை ரவிக்குமார் சாதித்துக் காட்டினார்.

ஹாலிவுட்டில் கூட படங்கள் தொடங்குவதற்கு முன்பு பல மாதங்கள், ஏன் வருடங்களைக் கூட எடுத்துக் கொண்டு முன் தயாரிப்புப் பணிகளைச் செய்கிறார்கள். ஆனால் படப்பிடிப்பை 3 அல்லது நான்கு மாதங்களில் முடித்துவிடுகிறார்கள்.

ராஜமவுலியின் பாஹுபலி இதில் விதிவிலக்கு. இதில் அவரைச் சேர்க்க வேண்டாம். அவர் ஒரு அற்புதமான கலைஞர். இந்தியாவின் நம்பர் ஒன் கலைஞராக வரக்கூடியவர். சந்தேகமில்லை. சொல்லப்போனால், எனக்கு வாய்ப்பு கிடைத்தால் அவருடன் பணியாற்றுவதை சந்தோஷமாகக் கருதுவேன்.

ரவிகுமார், இந்தப் படத்தின் கேப்டன். சிறப்பாகப் பணியாற்றினார்.

அடுத்து அல்லு அரவிந்த் சொன்னதுபோல, தயாரிப்பாளர் ராக்லைன் வெங்கடேஷ். அவர் ஒரு மிகச் சிறந்த மனிதர். ஆபத்பாந்தவன். பலனை எதிர்ப்பார்க்காமல் கூப்பிட்ட நேரத்தில் ஓடி வந்து உதவுபவர். அதனால்தான் அவர் இங்கே அமர்ந்திருக்கிறார்.

ரத்னவேலு இந்தப் படத்துக்காக மிக கஷ்டப்பட்டார். கொட்டும் மழையில் படம்பிடித்தார். அனுஷ்கா மிக அருமையான பெண். சிறந்த நடிகை. அவருக்கு நன்றி.

அடுத்து ஜெகபதி பாபு. பிறக்கும்போதே வெள்ளிக் கரண்டியோடு பிறந்தவர். சினிமாவில் ஜென்டில்மேன் எனலாம். குசேலனில் என்னுடன் நடித்தவர். இந்தப் படத்தில் அவரை நன்றாகப் புரிந்து கொண்டேன். தொடர்ந்து அவருடன் பணியாற்ற விரும்புகிறேன்.

என் படங்களை தமிழ் ரசிகர்கள் எப்படி விரும்பி ரசிக்கிறார்களோ, அதே உற்சாகத்துடன் தெலுங்கு ரசிகர்களும் ரசித்து என்னை ஊக்கப்படுத்தி வருகின்றனர். இந்தப் படமும் உங்களை மகிழ்விக்கும் வகையில் இருக்கும். உங்கள் ஆதரவும் உற்சாகமும் எனக்குக் கிடைக்கும் என நம்புகிறேன்," என்றார்.

 

நம் நாட்டு ஜனாதிபதி மோடியாம்: சொல்கிறார் நடிகை கரிஷ்மா

மும்பை: நம் நாட்டின் குடியரசுத் தலைவர் நரேந்திர மோடி என்று இந்தி நடிகை கரிஷ்மா தன்னா பிக் பாஸ் 8 நிகழ்ச்சியில் தெரிவித்துள்ளார்.

பாலிவுட் நடிகர் சல்மான் கான் நடத்தி வரும் டிவி ரியாலிட்டி ஷோ பிக் பாஸ். தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சியின் 8வது சீசன் நடந்து வருகிறது. பிக் பாஸ் நிகழ்ச்சியில் இந்தி நடிகை கரிஷ்மா தன்னா கலந்து கொண்டுள்ளார்.

நம் நாட்டு ஜனாதிபதி மோடியாம்: சொல்கிறார் நடிகை கரிஷ்மா

இந்நிலையில் கடந்த வார நிகழ்ச்சியின்போது சல்மான் பிக் பாஸ் போட்டியாளர்களின் பொது அறிவை சோதிக்க பல்வேறு கேள்விகள் கேட்டார். அப்போது நம் நாட்டின் குடியரசுத் தலைவர் யார் என்ற கடினமான கேள்வியை சல்மான் கேட்டார். அதற்கு கரிஷ்மா நரேந்திர மோடி என்று பதில் அளித்து அனைவரையும் வியக்க வைத்தார். அவருக்கு நம் நாட்டின் பிரதமர் யார், குடியரசுத் தலைவர் யார் என்றே தெரியாததை பலரும் சமூக வலைதளங்களில் கிண்டல் செய்து வருகிறார்கள்.

முன்னதாக காபி வித் கரண் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பாலிவுட் நடிகை ஆலியா பட் நம் நாட்டின் குடியரசுத் தலைவர் யார் என்ற கேள்விக்கு முன்னாள் மகராஷ்டிரா முதல்வர் பிரித்விராஜ் சவானின் பெயரை தெரிவித்தார்.

பொது அறிவில் ஆலியா தான் ஞானசூனியம் என்றால் கரிஷ்மா அவருக்கு மேல் உள்ளார் என ரசிகர்கள் தெரிவித்து வருகிறார்கள்.

 

வருண் மணியனுடன் தனி ஜெட்டில் போய் தாஜ்மகாலை ரசித்த த்ரிஷா!

நிச்சயதார்த்தம், திருமணம் என யாருடன் இணைத்து பேசப்பட்டாரோ, அதே வருண் மணியன் மற்றும் தோழிகளுடன் ஸ்பெஷல் ஜெட் விமானத்தில் பறந்து போய் தாஜ் மகாலின் அழகை ரசித்துள்ளார் த்ரிஷா.

வருண் மணியனுடன் தனி ஜெட்டில் போய் தாஜ்மகாலை ரசித்த த்ரிஷா!

சமீபத்தில் ஆக்ரா சென்றார் திரிஷா.அங்கு யமுனை நதிக்கரையில் அமைந்துள்ள காதலின் சின்னமான தாஜ்மகாலை கண்டுகளித்தார். இதற்காக தனியாக ஜெட் விமானம் ஒன்றை ஏற்பாடு செய்து தனது தோழிகளுடன் சென்று சுற்றிப் பார்த்துள்ளார்.

வருண் மணியனுடன் தனி ஜெட்டில் போய் தாஜ்மகாலை ரசித்த த்ரிஷா!

இந்த ஏற்பாடுகளைச் செய்தவர் அவரது வருங்கால கணவர் என செய்திகளில் அடிபட்டு, பின்னர் த்ரிஷாவால் மறுக்கப்பட்ட வருண் மணியன்தான். இந்தப் படங்களை த்ரிஷாவே அவரது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.

வருண் மணியனுடன் தனி ஜெட்டில் போய் தாஜ்மகாலை ரசித்த த்ரிஷா!

தாஜ்மகால் அருகில் நின்று தான் எடுத்துக் கொண்ட போட்டோக்களைப் பகிர்ந்துள்ள அவர், கூடவே தாஜ்மகாலை அழகையும் வர்ணித்துள்ளார்.

 

ரித்திக்கின் பேங் பேங் சாதனையை முறியடித்த என்னை அறிந்தால் டீஸர்

சென்னை: அஜீத்தின் என்னை அறிந்தால் பட டீஸர் ரித்திக் ரோஷனின் பேங் பேங் பட டீஸர் சாதனையை முறியடித்துள்ளது.

கௌதம் மேனன் இயக்கத்தில் அஜீத் குமார் நடித்துள்ள என்னை அறிந்தால் படத்தின் டீஸர் கடந்த 4ம் தேதி வெளியிடப்பட்டது. டீஸர் வெளியான 32 மணிநேரத்தில் 15 லட்சம் பேர் அதை பார்த்துள்ளனர். மேலும் ட்விட்டரிலும் #MostLikedIndianTeaserYennaiArindhaal என்ற ஹேஷ்டேக் இரண்டு நாட்களாக டிரெண்ட் ஆனது.

பாலிவுட்டை திரும்பிப் பார்க்க வைத்த என்னை அறிந்தால் டீஸர்   | த்ரிஷா  

என்னை அறிந்தால் டீஸரை இதுவரை 62 ஆயிரம் பேர் யூடியூப்பில் லைக் செய்துள்ளனர். இது ரித்திக் ரோஷனின் பேங் பேங் பட டீஸரின் சாதனையை முறியடித்துள்ளது. பேங் பேங் டீஸருக்கு யூ டியூப்பில் 61 ஆயிரத்து 429 லைக்குகள் கிடைத்தன.

பாலிவுட் பட டீஸர் வெளியானால் அதை இத்தனை பேர் பார்த்தனர், அத்தனை பேர் பார்த்தனர் என்று செய்திகள் வரும். ஆனால் தற்போது முதன்முறையாக பாலிவுட்காரர்களை திரும்பிப் பார்க்க வைத்துள்ளது என்னை அறிந்தால் டீஸர்.

என்னை அறிந்தால் பொங்கல் பண்டிகை ஸ்பெஷலாக வரும் ஜனவரி மாதம் ரிலீஸ் ஆக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.