காதலர் தினத்தை சைபுடன் அல்ல அஜய் தேவ்கனுடன் கொண்டாடும் கரீனா கபூர்

Kareena Stay Away From Hubby Saif This Valentines Day   

மும்பை: இந்த ஆண்டு காதலர் தினத்தை கஜோல் கணவர் அஜய் தேவ்கனுடன் கொண்டாடுகிறார் பாலிவுட் நடிகை கரீனா கபூர்.

பாலிவுட் நடிகை கரீனா கபூர் நவாப் குடும்பத்தைச் சேர்ந்த மன்சூர் அலி கான் பட்டோடியின் மகனும், நடிகருமான சைப் அலி கானை காதலித்து மணந்தார். திருமணத்திறக் பிறகும் அவருக்கு மவுசு குறைவில்லை. தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார். இம்ரான் கானுடன் நடிக்கும் படத்திற்காக அவர் மீண்டும் சைஸ் ஜீரோவுக்கு மாறப்போகிறார். அதாவது ஒல்லிக்குச்சியாகப் போகிறார்.

இந்நிலையில் தனது திருமண வாழ்க்கை குறித்து கரீனா கூறுகையில்,

திருமணத்திற்கு பிறகு நவாப் குடும்ப பேகமாக என்னை மாற்றிக் கொண்டுள்ளேன். இந்த ஆண்டு காதலர் தினத்தன்று நான் சைபுடன் இருக்க மாட்டேன். அன்று போபாலில் ஷூட்டிங்கில் நடித்துக் கொண்டிருப்பேன். இந்த காதலர் தினத்தை அமித்ஜி, அஜய் தேவ்கன் மற்றும் பிரகாஷ் ஜா ஆகியோருடன் கொண்டாடுகிறேன். இந்த ஆண்டு சைப் ஏதாவது பரிசு கொடுக்க வேண்டும். அவருக்கு நான் கடந்த அக்டோபர் மாதம் சிறந்த பரிசை அளித்தேன் என்று நினைக்கிறேன் என்றார்.

 

'பிரபாகரனைப் பற்றி படமெடுக்கப் போறீங்களா இயக்குநர் ரமேஷ்... ஒரு நிமிஷம்!'

A Letter Director Amr Ramesh S Proposed Movie On Prabha

சென்னை: விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் பற்றியோ, ஈழப் போராட்டம் பற்றிய எடுக்கப்படும் படம் வணிகம் சார்ந்து இருக்கக் கூடாது என தமிழ் உணர்வாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வீரப்பன் வாழ்க்கை குறித்து வனயுத்தம் என்ற பெயரில் படமெடுத்துள்ள இயக்குநர் ஏஎம்ஆர் ரமேஷ், அடுத்து பிரபாகரன் வாழ்க்கை வரலாறு குறித்து படமெடுக்கப் போவதாகக் கூறியுள்ளார்.

அவருக்கு முத்தமிழ் என்ற பெயரில் ஒரு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. கடித விவரம்:

ஈழப்போராட்டத்தைப் பற்றியோ, பிரபாகரன் அவர்களை பற்றியோ, ஈழ விடுதலைப் போராட்டம் பற்றியோ, அந்த மக்களை பற்றியோ, மாவீரர்களை பற்றியோ படம் ஒன்று எடுக்கப்படுமானால் அது "Battle of Algiers" மற்றும் "Hotel Rwanda" போன்ற படங்களை போன்று இருக்கவேண்டும். வெறும் வணிகம் சார்ந்ததாக இருக்கக்கூடாது.

இயக்குநர் ரமேஷ் அவர்களே "குப்பி" படம் நானும் பார்த்தேன். ராஜிவ்காந்தி என்ற தலைவனின் கொலையை மட்டுமே மையப்படுத்தி எடுத்துள்ளீர்கள். அவர் ஏன் கொலை செய்யப்பட்டார், சர்வதேசத்தின் சதி என்ன, புவிசார் அரசியல், வணிக போட்டி, ஈழ மக்களின் விடுதலை போராட்டம், இனப்படுகொலை, பண்பாடு சிதைப்பு இவற்றைப் பற்றி இல்லாமல் மொட்டையாக ராஜீவ் கொலையை மட்டுமே மையப்படுத்தி எடுத்தது, ஈழத்தையும், அதன் போராட்டத்தையும் மழுங்கடிக்கும் செயலே அன்றி வேறென்ன?

நீங்கள் பிரபாகரன் அவர்களை பற்றியும், ஈழத்தை பற்றியும் படம் எடுக்கிறேன் என்றவுடன் மகிழ்ச்சி அடைய பலர் இருக்கலாம். ஆனால் அது உலகை, உலக மக்களை உலுக்கும் படமாகவே இருக்கவேண்டும். நீங்கள் ஈழத்தை சார்ந்து படத்தை எடுப்பது சிறுமைபடுத்தும் செயலாகவே உணர்கிறேன்.

ஈழமக்கள் நிறைய தகவல்களை சொல்லி இருக்கிறார்கள் என்று சொல்வது உளவியல் ரீதியாக ஈழ விடயத்தை திசை திருப்பும் செயல். ஏன் ராஜபக்சேவின் இலங்கை ராணுவம் 150000 மக்களை கொன்றுள்ளதே. அந்த இனப்படுகொலையைப் பற்றி படம் எடுக்கலாமே... தீவிரவாதம் என்ற முத்திரை குத்தப்பட்டு அந்த விடுதலைப்போராட்டம் நசுக்கப்படுள்ளதே. அதைப்பற்றி எடுக்கலாமே... போர் முடிந்து நான்கு வருடங்கள் ஆகிறது போரைவிட கொடூரமான உளவியல் போர் அந்த மக்கள் மீது திணிக்கப்பட்டிருக்கிறது... அதைப்பற்றி திரைப்படம் எடுக்கலாமே...

மேதகு பிரபாகரன் அவர்களை பற்றி படம் எடுக்ககூடாது என்பதால் எங்கள் நோக்கம்...அவரைபற்றி எடுக்கவேண்டும் என்றால் 60 ஆண்டுகால ஈழ வரலாற்றை சார்ந்து எடுக்கவேண்டும். இல்லையென்றால் அது ராஜீவை மையப்படுத்தி எடுத்த 'குப்பி' போன்று குறுகிய வட்டத்திற்குள் அடைக்கப்பட்டுவிடும்.

போராளிகளா.. தீவிரவாதிகளா?

1) முதலில் அந்த போராட்டத்தை, பிரபாகரன் அவர்களை, விடுதலை புலிகளை, மாவீரர்களை சுதந்திர போராளிகளாக காண்பிக்கப் போகிறாரா (அல்லது) உலகம் சொல்வதுபோல் தீவிரவாதிகளாக காண்பிக்கப் போகிறாரா என்பதை தெளிவுபடுத்தவேண்டும்.

2) இதுவரை சுமார் 3 இலட்சம் மக்கள் கொல்லப்பட்டதை, 10 இலட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் புலம்பெயர்ந்துள்ளதை பதிவு செய்வாரா?

3) போரின் ஒரு ஆயுதமாக குழந்தைகளை கொன்றதை, பெண்கள் பாலியல் வன்புணர்ச்சி செய்யப்பட்டதை, கொடூரமாக கொல்லப்பட்டதை பதிவு செய்வாரா?

4) போரின் ஒரு ஆயுதமாக மருந்து, உணவு, அத்தியாவசிய பொருட்கள் தமிழர்களுக்கு கிடைக்காதவாறு செய்ததை பதிவு செய்வீர்களா?

5) 'தீவிரவாதிகளுக்கெதிரான போர்' என்ற பெயரில் சொந்த நாட்டு மக்கள் மீது விமான தாக்குதல் நடத்தப்பட்டதை பதிவு செய்வாரா?

6) திட்டமிட்ட போர் மூலம் தமிழ் மக்களின் மக்கள்தொகையை, பிறப்பு விகிதத்தை முப்பது ஆண்டுகளுக்கு முன்பு சிங்கள, தமிழ் மக்களின் எண்ணிக்கையையும், தற்போதுள்ள எண்ணிக்கையையும் படத்தில் சுட்டிகாட்டுவாரா?

7) போர் முடித்து ஆண்டுகள் ஆனபின்பும் மக்களின் வாழ்வாதாரங்களை, வாழ்விடங்களை அழித்து, அவர்களை துரத்தி அவ்விடத்தில் இராணுவ முகாம்கள் அமைத்ததை பதிவு செய்வாரா?

7) கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இந்திய பெருங்கடலை வைத்து நடக்கும் ஆதிக்கப்போட்டியில் ஈழமும், ஈழமக்களும் எவ்வாறு திட்டமிட்டு அழிக்கப்பட்டனர் என்பதை சொல்வாரா?

8) ஆலயங்கள், பள்ளிவாசல்கள், கிருத்துவ தேவாலயங்கள் இவற்றை எல்லாம் அழித்துவிட்டு புத்த மடாலயங்களாக, புத்த தேசமாக மாற்றப்பட்டுள்ளதை, மொழி, பண்பாட்டு, கலாச்சார அழிப்பை தனது படத்தில் பதிவு செய்வாரா?

9) இந்திய அமைதிப்படை செய்த அட்டூழியத்தை பற்றிய காட்சிகள் அப்படத்தில் இருக்குமா?

10) தொடர்ந்து நீங்கள் தமிழ் சமூகம் சார்ந்த விடயங்களான படங்களை, 'குப்பி', தற்போது 'வனயுத்தம்' அடுத்து 'பிரபாகரன்' பற்றிய படங்கள் எடுப்பதன் நோக்கம் என்ன?

11) 'காற்றுக்கென்ன வேலி', 'ஆணிவேர்', 'தேன்கூடு', 'எல்லாளன்' இவற்றுக்கு கிடைக்காத ஒப்புதல் உங்கள் படத்திற்கு மட்டும் எப்படி இந்திய அரசாங்கம் அனுமதி தருகிறது?

-இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

விண் டிவியில் காதலர் தின பட்டிமன்றம்!

Valentine S Day Pattimandram On Win Tv

விண் தொலைக்காட்சியில் காதலர் தினத்தை ஒட்டி சிறப்பு பட்டிமன்றம் ஒளிபரப்பாகிறது.

காதல் திருமணம் செய்த பிறகு காதல் உணர்வுகளுடன் வாழ்வது கணவனா, மனைவியா, என்ற தலைப்பில் சுவையான விவாதம் நடைபெற உள்ளது.

இதற்கான பட ஒளிப்பதிவு வரும் ஞாயிறு ( 10.02.13) மாலை 4 மணிக்கு சென்னை குரோம்பேட்டையில் உள்ள பாலாஜி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்ள ராமன் வளாகத்தில் நடைபெற உள்ளது.இந்த நிகழ்ச்சியில் கலைஞர் தொலைக்காட்சியின் முதுநிலை மேலாளர் ஃப்ளாரண்ட் பெரோரா, நீதியின் குரல் சி.ஆர். பாஸ்கரன் உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர்.

சிறப்பு அழைப்பாளர்களாக விண் தொலைக்காட்சி நிறுவனர் தி. தேவநாதன், எழுத்தாளர் லியாகத் அலிகான், திரைப்பட இயக்குநர், நடிகர் ரமேஷ்கண்ணா ஆகியோர் கலந்து கொள்ள உள்ளனர்.

இந்த பட்டிமன்றத்திற்கு தமிழ்நாடு பத்திரிக்கையாளர் சங்கத்தலைவர் டி.எஸ்.ஆர் சுபாஸ் நடுவராக செயல்பட்டு தீர்ப்பு வழங்குகிறார்.

‘கணவனே' என்ற தலைப்பில் வி.ராமலிங்கம், கே.ஜெயமணி, பிரித்தா, ஆர்.விஜயபோஸ், ப.செந்தில்குமார், ஆகியோர் பேச உள்ளனர்.

‘மனைவியே' என்ற தலைப்பில் புதிய தலைமுறை தன.சிவசங்கரன், இயக்குநர் பாரதி மோகன், பேராசிரியை வள்ளி, கவிஞர் மணிவேந்தன், ஸ்ரீராம் ஆகியோர் பேசுகின்றனர்.

இந்த பட்டிமன்றம் விண் டிவியில் பிப்ரவரி 14ம் தேதி காதலர் தினத்தன்று இரவு 8மணி முதல் 9 மணி வரை ஒளிபரப்பாக உள்ளது.

 

இந்த மாதம் இன்னும் இருக்கு 21 படங்கள்!

21 Movies Come At The End The Month   

இதுவரை தமிழ் சினிமா பார்த்திராத வகையில் இந்த பிப்ரவரி மாதத்தில் மட்டும் 23 படங்கள் வெளியாகின்றன. இதுவரை மூன்று படங்கள் வெளியான நிலையில், மேலும் 21படங்கள் ரிலீசுக்குக் காத்திருக்கின்றன.

கடந்த 1-ம் தேதி ‘கடல்', ‘டேவிட்', படங்கள் ரிலீசாகின. இன்று விஸ்வரூபம் படம் வெளியாகியுள்ளது.

நாளை வெள்ளிக்கிழமை என்பதால், ஏற்கெனவே அறிவித்தபுடி ‘சுடச்சுட', ‘நினைவோடு கலந்துவிடு', ‘அறியாதவன் புரியாதவன்' ஆகிய மூன்று படங்கள் வெளியாகின்றன.

வருகிற 14-ந்தேதி விமல், ஒவியா ஜோடியாக நடத்த 'சில்லுன்னு ஒரு சந்திப்பு', வீரப்பனைப் பற்றிய பரபரப்பு படமான வனயுத்தம், பேய்ப்படம் நான்காம் பிறை மற்றும் ‘நேசம் நெசப்படுதே' ஆகியவை வெளியாகின்றன.

வருகிற 15-ந் தேதி பிரபுதேவாவின் ‘ஆடலாம் பாய்ஸ் சின்னதா டான்ஸ்' படம் வெளியாகப் போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சில படங்களும் அன்றைக்கு வெளியாகக் கூடும்.

பிப்ரவரி 22-ந்தேதி அமீர் இயக்கத்தில் ஜெயம்ரவி நடித்த ‘ஆதிபகவன்', விமல், சிவகார்த்திகேயன் நடத்த ‘கேடி பில்லா கில்லாடி ரங்கா', சினேகா நடித்த ‘ஹரிதாஸ்', தருண்கோபி நடித்த ‘பேச்சியக்கா மருமகன்', தலக்கோணம், கருணாஸ் நடித்த ‘சந்தமாமா' ஆகிய 6 படங்கள் ரிலீசாகின்றன. இந்தப் பட்டியலில் பாலாவின் பரதேசியும் சேரப்போவதாக அறிவிப்பு வந்துள்ளது.

இவை தவிர, ‘கீரிப்புள்ள', ‘ஆண்டவ பெருமாள்', ‘கண்பேசும் வார்த்தைகள்', ‘சொன்னா புரியாது', ‘அர்ஜூனன் காதலி' போன்ற படங்களும் இம்மாதம் வருகின்றன. இவற்றின் ரிலீஸ் தேதி முன்னே பின்னே இருந்தாலும் இந்த மாத இறுதிக்குள் வெளியாகிவிடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

 

கமல் எனும் மகா நடிகன்...!

Kamal As An Actor Viswaroopam

விஸ்வரூபம் படத்தில், சர்ச்சைகளை கொஞ்சம் மறந்துவிட்டு பார்த்தால், கமலின் புதிய பரிமாணம் சினிமா ரசிகர்களை பிரமிக்க வைத்திருக்கிறது. ஒரு இயக்குநராக ஹேராமிலேயே தனது 'க்ளாஸ்'ஐ நிரூபித்துவிட்டவர் கமல். அவரது நடிப்புக்கு புதிதாக சான்றிதழ் தேவையில்லைதான்.

ஆனால் விஸ்வரூபத்தில் அந்த கதக் கலைஞராக வரும் முதல் 30 நிமிடங்களைப் பார்க்கும் எந்த சக கலைஞரும் கமலை நேசிக்க ஆரம்பித்துவிடுவார்கள். அந்த அளவு மிக நுட்பமாக உணர்வுகளை வெளிப்படுத்தியிருப்பார் கமல்.

குறிப்பாக 'உன்னைக் காணாத..' பாடலின் வரிகளுக்கு, இசைக்கு கமல் தரும் பாவங்கள் இருக்கிறதே.. அந்த கதக் மாஸ்டரே எழுந்து நின்று கைத்தட்டிப் பாராட்டியதாக வந்த செய்திகளில் கொஞ்சமும் மிகையில்லை என்றுதான் சொல்ல வேண்டும்.

கமல்ஹாஸன் நடையை எத்தனையோ படங்களில், எத்தனையோ விதங்களில் பார்த்திருப்போம். ஆனால் அமெரிக்க வீதிகளில் ஒரு நடனப் பெண்ணின் நளினத்தோடு நடந்து செல்வார் பாருங்கள்... ஏபிசி என அத்தனை க்ளாஸ் ரசிகர்களின் அப்ளாஸ்களையும் அள்ளும் நடிப்பு அது.

முதல் 30 நிமிடங்கள் ஒரு நாட்டியக் கலைஞனாகவே மாறிவிட்டார் கமல். போனை எடுக்க வரும்போது ஒரு நடை நடக்கிறார், சாலையில் ஓடும்போது, பேசும்போது காட்டும் முகபாவம், குரல், விரல்களால் முடியைக் கோதும்போது, கண்களில் நளினம் காட்டும்போது என மிக நுண்ணியமான விஷயங்களில் மிக மிக பிரயாசைப்பட்டு தனக்கு நிகர் ஒரு நடிகன் இல்லை என்பதை மீண்டும் நிரூபித்திருக்கிறார்.

அதே போல நாட்டியக் கலைஞன் என்ற மறைப்பிலிருந்து அவர் உண்மையிலேயே யார் என்பதை வெளிக்காட்டும் சூழல், அதை அவர் உணர்த்தும் விதம்... நடிப்புக்கு தனி இலக்கணமே சொல்கிறது.
மென்மை நடிப்பு மட்டுமல்ல... மிரளவைக்கும் ஆக்ஷனிலும் தனது நடிப்பு உலகத் தரம் என்பதை அழுத்தமாக நிரூபித்திருக்கிறார் கமல். ஜேம்ஸ்பாண்ட், இங்கிலாந்து துப்பறியும் நிபுணர் போல... இந்திய சினிமாவுக்கு கமல் ஒரு உதாரண கேரக்டரை உருவாக்கியிருக்கிறார் என்றால் மிகையல்ல.

இந்த விஸ்வரூபத்தில் விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டு வசூலில் முதலிடத்தைப் பிடித்திருப்பது கமல் எனும் அற்புதமான நடிகனே என்பது ரசிகர்களின், விமர்சகர்களின் ஒட்டுமொத்த தீர்ப்பு!

 

விஸ்வரூபம் சிறப்புக் காட்சி: நட்சத்திரங்கள் திரண்டனர்!

Film Fraternity Turns Viswaroopam Special Show   

சென்னை: சத்யம் திரையரங்கில் நடந்த விஸ்வரூபம் சிறப்புக் காட்சியில் தமிழ் சினிமா நட்சத்திரங்கள் திரண்டு வந்து பார்த்து மகிழ்ந்தனர்.

இந்தக் காட்சியின்போது, படத்தின் இயக்குநர் - ஹீரோ கமல்ஹாஸன் அனைவரையும் வரவேற்று, அவர்களுடன் படம் பார்த்தார்.

விஸ்வரூபம் படம் இன்று தமிழகம் முழுவதும் 500-க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியாகிறது. சென்னை நகரில் 30 அரங்குகளிலும், புறநகர்களில் 20 அரங்குகளிலும் வெளியாகிறது.

திரையுலகினருக்காக இந்தப் படத்தின் சிறப்புக் காட்சி நேற்று இரவு சத்யம் சினிமாஸ் அரங்கில் நடந்தது.

நடிகர் சங்கத் தலைவர் சரத்குமார், இயக்குநர்கள் விக்ரமன், ஆர்கே செல்வமணி, நடிகர் - இயக்குநர் சேரன், பார்த்திபன், சந்தானபாரதி, நடிகர் ஜெயராம், அவர் மனைவி நடிகை பார்வதி மற்றும் குழந்தைகள், இசையமைப்பாளர்கள் யுவன்சங்கர் ராஜா மற்றும் கார்த்திக்ராஜா, விவேக், நடிகைகள் குஷ்பு, ஸ்ரீப்ரியா, ராதிகா, மும்தாஜ், சுஹாசினி, நடிகர்கள் சாருஹாஸன், எஸ்வி சேகர், சிபிராஜ் உள்பட பலர் இந்த காட்சிக்கு வந்திருந்தனர்.

 

ரெண்டு பேருடன் தொடர்பு இருந்தது... ஆனா இப்ப விலகிட்டேன்! - காஜலின் காதல் ரகசியங்கள்

Kajal Agarwal S Love Affairs   

நடிகையான புதிதில் எனக்கு இரண்டு பேருடன் தொடர்பு இருந்தது. ஆனால் நேரத்தைக் கொல்லும் விஷயமாக அது தெரிந்ததால், பின்னர் அவர்களிடமிருந்து விலகிவிட்டேன், என்கிறார் நடிகை காஜல் அகர்வால்.

தமிழ், தெலுங்கில் முன்னணி நாயகியாக உள்ள காஜல் அகர்வாலின் காதல் அனுபவங்கள் குறித்து கேட்டபோது, முதல் முறையாக மனம் திறந்துள்ளார்.

அவர் கூறுகையில், "மும்பையில் நட்பாக இருப்பதென்பது சாதாரண விஷயம். என்னுடன் நட்பாக இருப்பவர்களை பிடிக்கும். அதே நேரம் என்னிடத்தில் நிறைய உரிமை எடுத்துக் கொண்டு பழகுவது பிடிக்காது. என்னுடன் நடிக்கும் ஹீரோக்களுடன் நட்பு ரீதியிலேயே பழகுகிறேன். அவர்கள் மும்பை வந்தால் வீட்டுக்கு அழைத்து சாப்பாடு போடுவேன்.

அந்த எல்லையை தாண்ட மாட்டேன். ஆண் நண்பர்களால் எனக்கு நிறைய பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளன. அதற்காக அழுது இருக்கிறேன்.

எனக்கு இரண்டு பேரிடம் தீவிரமான நெருக்கம் இருந்தது. அதில் ஒருவரிடம் நடிகையாவதற்கு முன்பு பழகினேன். இந்த தொடர்புக்காக நிறைய நேரம் ஒதுக்கவேண்டி இருந்தது. இதனால் அதை முறித்துக்கொண்டு விலகி விட்டேன். நடிகையான பிறகு இன்னொருவரின் தொடர்பையும் துண்டித்துக் கொண்டேன்," என்றார்.

 

400 திரையரங்குகளில் திருமதி தமிழ்... இது தேவயானி கணவரின் தில்லு!!

Devayani Release Thirumathi Tamil 400 Plus Theaters

இன்றைய கோலிவுட் ஹாட் செய்தி... தேவயானி கணவர் ராஜகுமாரனின் திருமதி தமிழ் படம்தான். இந்தப் படம், அதில் ராஜகுமாரனின் தோற்றம் குறித்து பலரும் கிண்டலாகப் பேசிவரும் சூழலில், அந்தப் படத்தை தமிழகத்தில் மட்டும் 400 அரங்குகளில் வெளியிட ஏற்பாடு செய்து வருகின்றனர் கணவனும் மனைவியும்.

தேவயானி சினிமாவை விட்டு டிவிக்குப் போய் பல ஆண்டுகள் ஆகிவிட்டன. அவர் கடைசியாக ஹீரோயினாக நடித்த படம் காதலுடன். இயக்கியவர் அவரது கணவர் ராஜகுமாரன்தான். இந்தப் படத்தைத் தயாரித்த வகையில் பெரிய நஷ்டத்தைச் சந்தித்து, நிதி நெருக்கடியில் சிக்கினார் தேவயானி. அதன் பிறகு டிவியில் கவனம் செலுத்தினார். அங்கு நம்பர் ஒன் இடத்தைப் பிடித்தார்.

கடன்களை எல்லாம் அடைத்த பிறகு, இப்போது மீண்டும் சினிமா தயாரிப்பில் மும்முரமாக இறங்கியுள்ளார் தேவயானி.

கணவர் ராஜகுமாரன்தான் இயக்குநர். ஹீரோவும் அவரே. பவர் ஸ்டாருக்கு சரியான போட்டி என்று சமூக வலைத்தளங்கள் கலாய்க்கும் அளவுக்கு எப்போதும் ஒரு இன்ச் மேக்கப், பழைய ரஜினி பட கவுபாய் காஸ்ட்யூம், ராமராஜனை தூக்கிச் சாப்பிடும் அளவுக்கு லிப்ஸ்டிக், நடன அசைவுகள் என மீடியாவுக்கு சரியான தீனியாகிவிட்டார் ராஜகுமாரன்.

ஆனால் இதற்காகவெல்லாம் அவர் கவலைப்பட்டதாகவே காட்டிக் கொள்ளவில்லை. என் படம் வெளியானால் தமிழகமே அதிரும் அளவுக்கு பெரும் வெற்றி பெறும் என்று கூறிவருகிறார். படத்தில் அவருக்கு இரண்டு ஜோடி. ஒருவர் தேவயானி. இரண்டு குழந்தைகளுக்கு தாயான அவர், இந்தப் படத்தில் ரெட்டை ஜடை, பாவாடை தாவணி என வருகிறார். இன்னொருவர் ஃபீல்ட் அவுட் ஆகிவிட்ட கீர்த்தி சாவ்லா.

இந்தப் படத்தை தமிழகம் முழுவதும் சொந்தமாக 400 தியேட்டர்களில் வெளியிடப் போகிறதாம் தேவயானியின் ராதே பிலிம்ஸ்.

இது ரிஸ்க்குதான். ஆனால் படம் நிச்சயமாக வெற்றிபெறும் என்ற நம்பிக்கை இருப்பதால் இவ்வளவு பிரமாண்டமாக ரிலீஸ் செய்கிறோம், என்கிறார் இயக்குனர் ராஜகுமாரன்.

கான்ஃபிடன்ஸ் பாஸ் கான்ஃபிடன்ஸ்!

 

முரட்டுக்காளை ரஜினி மாதிரி 4 தம்பிகளுக்கு அண்ணனாகும் அஜீத்

Ajith S Role Reminds Rajini S Murattu Kaalai Role

சென்னை: சிறுத்தை பட இயக்குனர் சிவா எடுக்கும் படத்தில் அஜீத்துக்கு 4 தம்பிகளாம். முரட்டுக்காளையில் சூப்பர் ஸ்டார் ரஜினியின் கதாபாத்திரம் நினைவுக்கு வருகிறதா?

அஜீத் குமார் விஷ்ணுவர்தன் படத்தை முடித்துவிட்டு சிறுத்தை பட இயக்குனர் சிவா இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கிறார். இந்த படத்தில் அஜீத் குமாருக்கு 4 தம்பிகளாம். பாசமான அண்ணனாக வருகிறாராம் அஜீத். அவருக்கு தம்பியாக மைனா புகழ் விதார்த், முனிஷ், பாலா மற்றும் சொஹைல் ஆகியோர் நடிக்கின்றனர்.

முரட்டுக்காளை படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தும் 4 தம்பிகள் மீது பாசமுள்ள அண்ணனாக நடித்திருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.

படத்தில் சென்டிமென்ட் காட்சிகளுக்கு குறைவிருக்காது என்று கூறலாம். இந்த படம் ஹைதராபாத் மற்றும் ராஜமுந்திரியில் படமாக்கப்படுகிறது. எல்லாம் இருக்கட்டும் விஷ்ணுவர்தன் படத்திற்கு இன்னும் தலைப்பை அறிவித்தபாடில்லையே.

 

ப்ரியங்கா சோப்ராவுக்குத் திருமணம் - டிவி நடிகரை மணக்கிறார்!

மும்பை: பாலிவுட்டின் பிரபல இந்தி நடிகை பிரியங்கா சோப்ராவுக்கு விரைவில் திருமணம் நடக்கிறது.

2000 ஆண்டில் உலக அழகிப் பட்டம் வென்றவர் ப்ரியங்கா. பாலிவுட்டின் மிகப் பிரபல நடிகை. 30 வயதாகும் அவர், மொகித் ரெய்னா என்ற டிவி நடிகரை மணக்கப் போவதாக செய்தி வெளியாகியுள்ளது.

மொகித் ரெய்னா இந்தியில் பிரபலமான டி.வி. நடிகர். இவரை தெரியாத இந்தி ரசிகர்களே இல்லை. நிறைய புராண தொடர்களில் நடித்துள்ளார். மகாதேவ் தொடரில் சிவனாக நடித்து அனைவர் மனதிலும் இடம்பெற்றவர்.

priyanka chopra enter wedlock with
பிரியங்கா சோப்ரா குடும்பத்தினருக்கு மொகித் ரெய்னாவை பிடித்துள்ளதாம். ப்ரியங்காவின் சித்திதான் ரெய்னாவை தேர்வு செய்தாராம்.

பிரியங்கா சோப்ராவும் இதற்கு சம்மதம் தெரிவித்துள்ளாராம். தற்போது கைவசமுள்ள 5 படங்களை முடித்துக் கொடுத்துவிட்டு திருமணம் செய்துகொள்ளப் போகிறாராம் ப்ரியங்கா.

இந்த செய்தி பாலிவுட்டில் பெரும் ஆச்சர்ய அலைகளை ஏற்படுத்தியுள்ளது. காரணம் ப்ரியங்கா சோப்ரா, பாலிவுட்டின் நம்பர் ஒன் நடிகை. கோடிகளில் சம்பளம் வாங்கிக் கொண்டிருக்கிறார். அவர் ஒரு டிவி நடிகரை மணந்து கொள்ள சம்மதித்திருப்பது பரபரப்புச் செய்தியாகியுள்ளது.