சென்னை ஏர்போர்ட்டில் அதிகாலை வரை விஜயகுமார் -வனிதா கடும் மோதல்

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
சென்னை ஏர்போர்ட்டில் அதிகாலை வரை விஜயகுமார் – வனிதா கடும் மோதல்
12/28/2010 11:37:08 AM
நடிகர் விஜயகுமாருக்கும் அவரது மகள் வனிதாவுக்கும் இடையே குழந்தை ஹரி பிரச்னை விசுவரூபம் எடுத்துள்ளது. மாறி, மாறி குற்றச்சாட்டுகளை கூறி வருகின்றனர். இந்நிலையில், ஐதராபாத்தில் இருந்து விமானத்தில் விஜயகுமாரும் பேரன் ஹரியும் வருவதாக தெரியவந்ததையடுத்து, வனிதாவும் அவரது கணவர் ஆனந்தராஜூம் நேற்றிரவு சென்னை விமான நிலையத்தில் காத்திருந்தனர். 10.20 மணியளவில் விமானத்தில் இருந்து பேரனுடன் விஜயகுமார் இறங்கினார். இதை பார்த்தவுடன் வனிதா ஓடிச் சென்றார். 'என் மகனை என்னிடம் கொடுத்துவிடுங்கள்'  என விஜயகுமாரிடம் வாக்குவாதம் செய்தார். அதற்கு விஜயகுமார், 'பேரனை உன்னிடம் ஒப்படைக்க முடியாது' என்றார். இதனால் இருவருக்கும் கடும் சண்டை ஏற்பட்டது. விமான நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
தகவல் கிடைத்து, விமான நிலைய போலீசார் வந்தனர். விஜயகுமாரையும் வனிதாவையும் சமாதானப்படுத்தினர். ஆனால் இருவரும் தொடர்ந்து வாக்குவாதம் செய்ததால் குழந்தை ஹரியை விமான நிலைய  போலீஸ் ஸ்டேஷனுக்கு கொண்டு சென்றனர். அங்கு வைத்து இருவரையும் சமாதானப்படுத்தினர். இதிலும் உடன்பாடு ஏற்படவில்லை. அப்போது வனிதா, 'கோர்ட் உத்தரவுப்படி மகனை என்னிடம் ஒப்படைக்கவேண்டும். அதுவரை முதல் கணவர் ஆகாஷிடம்தான் இருக்கவேண்டும். விஜயகுமாரிடம் இருந்தால் பாதுகாப்பு இருக்காது' என்றார். ஆனால் விஜயகுமார், 'ஆகாஷிடம்தான் ஹரி  இருந்தான். அவர் டில்லி சென்றதால் ஐதராபாத்தில் இருந்த என்னிடம் ஹரியை ஒப்படைத்தார். சென்னைக்கு செல்லும்போது என் அம்மா மகேஸ்வரியிடம் ஹரியை கொடுத்துவிடுங்கள்' என்று கூறியிருக்கிறார். இதன்படி ஒப்படைக்கப் போகிறேன்' என்றார்.
இதன்பிறகு பேசிய வனிதா, 'விஜயகுமார் பொய் சொல்கிறார். மகனை வாங்காமல் இங்கிருந்து போகமாட்டேன்' என்று கத்தினார். இந்த தகராறு அதிகாலை 4 மணி வரை நடந்ததால் போலீசுக்கு பெரும் தலைவலி ஏற்பட்டது. இதையடுத்து போலீசார், டில்லியில் உள்ள ஆகாஷிடம் போனில் பேசினர். அவர், 'நான்தான் ஹரியை விஜயகுமாரிடம் கொடுத்தேன்' என்றார். இதையும் வனிதா நம்பவில்லை. இதன்பிறகு ஆகாஷ் கைப்பட எழுதிய கடிதத்தை போலீஸ் ஸ்டேஷனுக்கு ஃபேக்ஸ் செய்தார். இதையும் வனிதா நம்பவில்லை. இதனால் ஹரியை போலீசாரே வைத்துக்கொண்டு மகேஸ்வரியிடம் ஒப்படைப்பதாக கூறிவிட்டனர்.
இதுசம்பந்தமாக விஜயகுமாரும் வனிதாவும் தனித்தனியாக விமான நிலைய போலீசில் புகார் கொடுத்தனர். 'முதல் கணவரும் விஜயகுமாரும் சேர்ந்து நாடகம் நடத்துகின்றனர். கோர்ட் உத்தரவை அமல்படுத்தாமல் இருக்க சதி நடக்கிறது. இதுபற்றி போலீஸ் கமிஷனரிடம் இன்று புகார் கொடுக்கப்போகிறேன்'என வனிதா கூறினார். உதவி கமிஷனர் குப்புசாமி கூறுகையில், ''விஜயகுமார், வனிதா இருவரும் ஒருவர் மீது ஒருவர் மீது புகார் கொடுத்துள்ளனர். இரண்டு புகாரின் அடிப்படையில் சிஎஸ்ஆர் பதிவு செய்துள்ளோம். முதல் கணவர் ஆகாஷ் கூறியபடி பாட்டி மகேஸ்வரியை வரவழைத்து ஹரியை ஒப்படைத்துவிட்டோம். ஒப்படைக்கும்போது கோர்ட் உத்தரவை நீங்கள் நிறைவேற்றவேண்டும் என்று கேட்டுக்கொண்டோம்'' என்றார்.


Source: Dinakaran
 

கமல் படத்தில் நடிப்பதற்கு,அனுஷ்கா 6மாதங்கள் கால்ஷீட்?

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

கமல் படத்தில் நடிப்பதற்கு, அனுஷ்கா 6 மாதங்கள் கால்ஷீட்?

12/28/2010 12:01:52 PM

ஏற்கனவே அனுஷ்கா. ஆறடி உயரம், அவரது உயரத்தை போலவே அவரது கே‌ரியரும் அதிரடியாக உயர்ந்து வருகிறது. முதலில் விஜய், சூர்யா, விக்ரம் என அடுத்தடுத்த பெரிய ஹிரோக்களுடன் நடிக்கும் அனுஷ்காவிற்கு ஜக்பாட் அடித்துள்ளது. தலைவன் இருக்கின்றான் படத்துக்கு அனுஷ்காவை கமல் ஒப்பந்தம் செய்யவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

டிஸ்னி நிறுவனத்துடன் இணைந்து ராஜ்கமல் பிலிம்ஸ் இப்படத்தைத் தயாரிக்கும் என்று தெரிகிறது. படத்திற்காக அனுஷ்காவிடம் மொத்தமாக 6 மாதங்கள் கால்ஷீட் கமல் கேட்டிருப்பதாக தெரிகிறது. தற்போது தமிழில் சிம்புவுடன் வானம் படத்தில் நடிக்கும் அனுஷ்கா, வேறு புதிய படங்களில் நடிக்க கால்ஷீட் தராமல் உள்ளார்.

தலைவன் இருக்கின்றான் ஸ்கிரிப்ட் பணிகள் முழுமையாக முடிந்துவிட்டதாக கமல்ஹாஸன் சில தினங்களுக்கு முன் கூறியது நினைவிருக்கலாம். புத்தாண்டில் இந்தப் பதிய பட அறிவிப்பை வெளியிட உள்ளார் கமல்.


Source: Dinakaran
 

களவாணி படத்தின் நாயகன் விமல் ரகசியமாக திருமணம் செய்தார்

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

களவாணி படத்தின் நாயகன் விமல் ரகசியமாக திருமணம் செய்தார்

12/28/2010 11:56:33 AM

களவாணி படத்தின் நாயகன் விமல், அந்தப் பட பாணியிலேயே தனது காதலியை ரகசியமாய் திருமணம் செய்தார். சசிகுமார் தயாரித்து, பாண்டிராஜ் டைரக்டு செய்த ‘பசங்க’ படத்தில் அறிமுகமானவர், விமல். இதற்கடுத்து விமல் நடித்து வெளிவந்த படம் களவாணி. இந்த ஆண்டின் மிகப் பெரிய வெற்றிப் படங்களுள் ஒன்று அது, இப்போது களவாணி படத்தை தயாரித்த நசீர் அடுத்து, எத்தன் என்ற படத்தை தயாரிக்கிறார். இந்தப் படத்திலும் விமல் கதாநாயகனாக நடிக்கிறார். படப்பிடிப்பு கடந்த ஒரு மாத காலமாக கும்பகோணம் சுற்றுவட்டாரத்தில் நடக்கிறது. விமலுக்கும், திண்டுக்கல்லை சேர்ந்த அட்சயா என்ற பிரியதர்சினிக்கும் காதல் இருந்து வந்தது. பிரியதர்சினி, சென்னையில் உள்ள ஒரு தனியார் மருத்துவ கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார்.

விமல்-பிரியதர்சினி காதலை, பிரியதர்சினியின் குடும்பத்தினர் விரும்பவில்லை என்று கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து விமல்-பிரியதர்சினி இருவரும் ரகசிய திருமணம் செய்துகொள்ள முடிவு செய்தனர். அதன்படி, பிரியதர்சினி சென்னையில் இருந்து கும்பகோணம் சென்றார். கும்பகோணத்தில் தங்கியிருந்த விமலைச் சந்தித்தார். இருவரும் சுவாமிமலை சென்று அங்குள்ள முருகன் கோவிலில், ரகசிய திருமணம் செய்து கொண்டார்கள். திருமணத்துக்குப்பின், பிரியதர்சினியை பழையபடி கல்லூரிக்கு அனுப்பிவிட்ட விமல், கும்பகோணத்தில் தங்கி எத்தன் படப்பிடிப்பை தொடர்கிறார்.

இந்த திருமணம் குறித்து விமல் கூறுகையில், “என் சொந்த ஊர், மணப்பாறை. பிரியதர்சினியின் சொந்த ஊர், திண்டுக்கல். இருவரும் உறவினர்கள். அவள், என் அப்பா வழியில் எனக்கு மாமா மகள். சின்ன வயதில் இருந்தே எங்களுக்குள் நட்பு இருந்து வந்தது. எங்கள் நட்பு, காதலாக மலர்ந்தது. கடந்த ஒன்றரை வருடங்களாக இரண்டு பேரும் காதலித்து வந்தோம். இருவரும் திருமணம் செய்துகொள்ள விரும்பினோம். ஆனால், எங்கள் காதலை பிரியதர்சினியின் குடும்பத்தினர் ஏற்றுக்கொள்ளவில்லை.

அவளை ஒரு டாக்டர் மாப்பிள்ளைக்குத்தான் கொடுப்போம் என்பதில் உறுதியாக இருந்தார்கள். சினிமாவில் நான் நல்ல நிலைமையில்தான் இருக்கிறேன். எதிர்காலத்தில் முன்னணி நடிகராக வருவேன். உங்கள் மகளை நல்லபடியாக வைத்து காப்பாற்றுவேன் என்று மாமனார் குடும்பத்தினருடன் போராடினேன். “சினிமாக்காரனுக்கு எங்கள் பெண்ணை கொடுக்க மாட்டோம்” என்று கூறி விட்டார்கள். அதோடு நிற்காமல், பிரியதர்சினிக்கு தீவிரமாக டாக்டர் மாப்பிள்ளையை தேட ஆரம்பித்தார்கள். எனவேதான் நாங்கள் ரகசிய திருமணம் செய்து கொண்டோம். இரண்டு பேர் குடும்பத்து பெரியவர்கள் சம்மதத்துடன், சென்னையில் வரவேற்பு நிகழ்ச்சியை நடத்த முடிவு செய்து இருக்கிறோம்…,” என்றார்.


Source: Dinakaran
 

ஹீரோ,வில்லன் இரண்டுமே நான் தான்!

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

ஹீரோ, வில்லன் இரண்டுமே நான் தான்!

12/28/2010 12:18:57 PM

சில்வர்லைன் பிலிம் பேக்டரி சார்பில் எஸ்.பார்த்தி, எஸ்.எஸ்.வாசன் தயாரிக்கும் படம் 'சிங்கம் புலி'. சாய்ரமணி இயக்குகிறார். இரு வேடங்களில் ஜீவா நடிக்கிறார். திவ்யா ஸ்பந்தனா, ஹனிரோஸ் ஹீரோயின்கள். காமெடிக்கு சந்தானம். ஒளிப்பதிவு, பாலசுப்ரமணியெம். மணிசர்மா இசையில் நா.முத்துக்குமார், விவேகா, சாய்ரமணி, அண்ணாமலை பாடல்கள் எழுதியுள்ளனர்.

படத்தில், ஹீரோவும், வில்லனும் இரண்டுமே ஜீவா தான், படத்தில் வரும் இரண்டு ‌‌ஜீவாக்களில் ஒருவர் பொதுவான தமிழும், இன்னொருவர் சென்னை பாஷையும் பேசுகிறார். ச‌ரி, இந்த இரண்டு ‌ஜீவாவில் யார் வில்லன்? யார் ஹீரோ? அதுதான் திரைக்கதையின் சஸ்பென்ஸே என்கிறார் இயக்குனர்.


Source: Dinakaran
 

அனுஷ்கா விலகியதால் மாறியது கதை

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

அனுஷ்கா விலகியதால் மாறியது கதை

12/28/2010 12:54:27 PM

'காஞ்சனா’ படத்தை இயக்கி நடிக்கும் லாரன்ஸ் கூறியது: அனுஷ்கா நடிப்பதாக இருந்த 'காஞ்சனாÕ படத்தின் கதை அவர் நடிக்க முடியாமல் போனதையடுத்து முற்றிலும¢ மாற்றப்பட்டது. லட்சுமிராய் ஹீரோயினாக நடிக்கிறார். இப்படத்தில் அனுஷ்கா கதாபாத்திரத்தில் வேறு யார் நடிக்கப் போகிறார் என்கிறார்கள். அந்த கேரக்டர் படத்தில் இல்லை. ஆனால் மற்றொரு புதிய கேரக்டரை ஹைலைட்டாக சேர்த்திருக்கிறேன். அதை இன்னும் சில நாட்களில் தெரிவிப்பேன். இதற்கிடையில் தெலுங்கில் பிரபாஸ், அனுஷ்கா ஜோடியாக நடிக்கும் 'ரெபல்Õ என்ற படத்தை இயக்குகிறேன். ஜனவரி 2வது வாரம் ஷூட்டிங் தொடங்குகிறது. இது முழுக்க ஆக்ஷன் பின்னணியில் அமைந்த கமர்ஷியல் படம். இப்படத்தில் நான் நடிக்கவில்லை. டைரக்ஷன் மட்டும் செய்கிறேன். ஏற்கனவே தெலுங்கில் 'மாஸ்’, 'டான்’, 'ஸ்டைல்’ என 3 படங்கள் இயக்கி இருக்கிறேன். தமிழில் ராசு மதுரவன் இயக்கும் 'பக்கிÕ என்ற படத்தில் நடிக்க உள்ளேன். அதன் ஷூட்டிங்கும் ஜனவரியில் தொடங்கும்.


Source: Dinakaran