இலியானாவின் செருப்பு மோகம்!


நடிகை இலியானாவுக்கு அழகான செருப்புகளை சேகரிப்பதில் அதிக ஆர்வமாம்.

கேடியில் அறிமுகமாகி அதோடு தமிழகக் கரையை கடந்து ஆந்திராவில் அடித்து வரும் புயல் தான் இலியானா. தற்போது நண்பன் படத்தின் மூலம் தமிழத்தை தாக்கத் திட்டமிட்டுள்ளது. இலியானாவுக்கு ஒரு மேனியா இருக்கிறது என்று உங்களுக்கு தெரியுமா?

அழகான புதுவித செருப்புகள் என்றால் அவருக்கு கொள்ளைப் பிரியமாம். எங்கு அழகான செருப்புகளைப் பார்த்தாலும் உடனே அதை வாங்காவிட்டால் இலியானாவுக்கு தூக்கமே வராது.

அன்மையில் சங்கரின் நண்பன் படத்திற்காக ஸ்பெயின் சென்றிருந்தார். ஊருக்குத் திரும்பி வருகையில் தன்னைக் கவர்ந்த செருப்புகளை எல்லாம் அள்ளி வந்திருக்கிறார். பணம் கொடுத்துத் தான் வாங்கியுள்ளார். ஓகே?

நல்ல வேளை கல்யாண மண்டபத்துக்கெல்லாம் போகும் அளவுக்கு இன்னும் மோகம் முற்றவில்லை…!

 

ரஜினி சென்னை திரும்புகிறார்: விமான நிலையத்திலேயே ரசிகர்களை சந்திக்கிறார்!

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

ரஜினி சென்னை திரும்புகிறார்: விமான நிலையத்திலேயே ரசிகர்களை சந்திக்கிறார்!

7/13/2011 3:37:10 PM

சிறுநீரக பிரச்னைக்காக சிகிச்சை பெற்று வந்த நடிகர் ரஜினிகாந்த், சிங்கப்பூரில் இருந்து இன்று இரவு சென்னை திரும்புகிறார். 2 மாதங்களுக்கு முன் சிறுநீரக பிரச்னை காரணமாக உடல் நிலை பாதிக்கப்பட்டார் ரஜினிகாந்த். இதையடுத்து போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். பின்னர் மேல் சிகிச்சைக்காக சிங்கப்பூரிலுள்ள மவுன்ட் எலிசபெத் மருத்துவமனையில் அவர் சேர்க்கப்பட்டார். சிகிச்சை முடிந்து சிங்கப்பூரிலுள்ள அபார்ட்மென்ட் ஒன்றில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கினார் ரஜினி. டாக்டர்கள் அறிவுரைப்படி அங்கு ஒரு மாதம் ஓய்வில் இருந்தார். அவரது மனைவி லதா, மகள்கள் ஐஸ்வர்யா, சவுந்தர்யா உடன் இருந்து ரஜினியை கவனித்துக் கொண்டனர். உடல் நலம் தேறியதையடுத்து சென்னைக்கு திரும்ப ரஜினி முடிவெடுத்தார். இன்று இரவு சிங்கப்பூரில்   இருந்து குடும் பத்தாருடன் விமானம் மூலம் அவர் சென்னை திரும்புகிறார். இரவு 10.30 மணிக்கு அவர் சென்னை வந்து சேருகிறார்.

 போயஸ் கார்டனில் உள்ள அவரது வீட்டுக்கு முதலில் செல்வார் என்றும் பின்னர் கேளம்பாக்கத்திலுள்ள பண்ணை வீட்டில் ஒரு மாதம் ஓய்வெடுக்க ரஜினி திட்டமிட்டுள்ளார் என்றும் தெரிகிறது. பண்ணை வீட்டில் இருக்கும் சமயத்திலேயே, இயக்குனர் கே.எஸ். ரவிக்குமாருடன் ÔராணாÕ பட டிஸ்கஷனில் அவர் கலந்து கொள்வாராம். இதையடுத்து ÔராணாÕ ஷூட்டிங்கில் ரஜினிகாந்த் பங்கேற்கும் காட்சிகள் செப்டம்பரில் படமாகும் என்று கூறப்படுகிறது.

ரசிகர்களை சந்திக்கிறார்

ரஜினி உடல் நலம் குன்றியபோது, ரசிகர்கள் வேதனையடைந்தனர். இதையடுத்து அவர் பூரண குணமடைய வேண்டி தமிழகம் முழுவதும் கோயில்களில் சிறப்பு வழிபாடுகளில் ஈடுபட்டனர். ரஜினியின் வீட்டிலும் சிறப்பு ஹோமம் நடத்தப்பட்டது. பெங்களூரில் உள்ள ரஜினியின் அண்ணன் வீட்டிலும் ஹோமம், சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. இப்போது ரஜினி குணமாகி திரும்புவதையடுத்து ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்துடன் உள்ளனர். அவரை நேரில் பார்க்கும் ஆவலிலும் உள்ளனர். ரசிகர்களை விமான நிலையத்திலேயே ரஜினி சந்திக்கிறார். லதா ரஜினி வெளியிட்ட அறிக்கையில், Ôரஜினியை பார்க்க வெளியூர்களிலிருந்து வரும் ரசிகர்கள், தேவையற்ற ஆபத்துகளை தவிர்க்க அரசு பஸ்கள், ரயில்களில் வர வேண்டும்Õ என தெரிவித்துள்ளார்.

 

கிசு கிசு - கதை சொல்ல பயப்படும் இயக்குனர்கள்

Kollywood news, bollywood news, hollywood news, Cinema news, movie review, cinema in tamil, tamil cinema news

கதை சொல்ல பயப்படும் இயக்குனர்கள்

7/13/2011 3:21:11 PM

நல்ல காலம் பொறக்குது…
நல்ல காலம் பொறக்குது…

உதவி இயக்குனருங்க பிரபல ஹீரோங்ககிட்ட கதை சொல்லப்போக பயப்படுறாங்களாம்… பயப்படுறாங்களாம்… கதை பிடிச்சிருந்தா, 'சப்ஜெக்ட்டை என்கிட்ட கொடுங்க. டைரக்டரை நான் சொல்றேன்Õனு ஹீரோக்கள் சொல்றாங்களாம்… சொல்றாங்களாம்… ஹீரோவே இப்படி கேக்கும்போது வாய்ப்பு கேட்டுபோறவங்களுக்கு இக்கட்டான நிலை ஏற்படுதாம். இதனால ஹீரோக்களை சந்திச்சி கதை சொல்லவே பயப்படுறாங்களாம்… உதவி இயக்குனருங்க பயப்படுறாங்களாம்…

சினிமாக்காரங்களுக்கு வீடு கட்டுறதுக்காக ஒதுக்க¤ய இடத்தை எல்லா சங்கத்துக்காரங்களும் போய் பார்த்து ஓகே சொன்னாங்க. ஆனா இப்போ திடீர்னு எங்களுக்கு அந்த இடம் பிடிக்கலேன்னு சில சங்கத்தாரு மாத்திப் பேசுறாங்களாம்… பேசுறாங்களாம்… இதனால மத்த சங்கத்துக்காரங்க குழப்பத்துல இருக்காங்களாம்… இருக்காங்களாம்…

அருணான நடிகரோட படத்துல நடிக்க மறுத்தாரு மம்தா நடிகை. இதனால இந்தி நடிகையை தேர்வு பண்ணினாங்க. இந்தி நடிகை திடீர்னு கல்தா கொடுத்ததால திரும்ப மம்தாகிட்ட பேசினாங்க. நடிகையும் நடிக்க சம்மதிச்சிட்டாரு. முதல்ல மம்தா மறுத்ததுக்கும், இப்போ ஓகே சொன்னதுக்கும் சம்பளம்தான் காரணமாம்… காரணமாம்… மம்தா நடிகை கேட்ட சம்பளம் தர்றதா தயாரிப்பு ஒத்துக்கிட்டதால, நடிகை ஓகே சொன்னாராம்… சொன்னாராம்…

 

காடு ஆக்கிரமிப்பை சொல்லும் கும்கி!

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
காடு ஆக்கிரமிப்பை சொல்லும் கும்கி!

7/13/2011 3:20:10 PM

'கும்கிÕ பட இயக்குனர் பிரபு சாலமன் கூறியது: 'மைனாÕ படத்தை அடுத்து 'கும்கிÕ கதையும் மலைகிராம காட்டுப் பகுதியையொட்டியதாக அமைந்தது. பயிற்சி பெற்ற யானைகளை 'கும்கிÕ என்று சொல்வார்கள். காடுகளைவிட்டு மக்கள் வாழும் பகுதிகளில் யானைகள் வந்து செய்யும் அட்டகாசங்கள் பற்றி பத்திரிகைகளில் படிப்பேன். அதையே கருவாக கொண்டு அழுத்தமான காதல் கதையையும் இணைத்து  இந்த ஸ்கிரிப்ட் உருவாக்கி இருக்கிறேன்.  யானைகளை பற்றி முழுமையாக தெரிந்துகொள்ள பண்ணாரி முதல் சூளகிரி மற்றும் ஓசூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சுமார் 4 ஆயிரம் கி.மீட்டர் அலைந்து மக்கள், அதிகாரிகள், யானை பாகன்களிடம் விவரங்கள் கேட்டறிந்தேன். ஒரு நாளைக்கு 250 கிலோ உணவு உண்டு, 150 லிட்டர் தண்ணீர் குடிக்கும் யானையின் தேவைகள் காடுகளில் நடக்கும் ஆக்கிரமிப்பால் குறைந்து வருகிறது. இதை பற்றியும் படத்தில் சொல¢கிறேன். இதில் ஹீரோவாக நடிக்க பல்வேறு புதுமுகங்களை பார்தேன். சிவாஜியின் பேரனும், பிரபுவின் மகனுமான விக்ரம் பிரபு பொருத்தமாக இருந்தார். அவர் ஹீரோவாக அறிமுகமாகிறார்.




 

பிரியங்காவின் டூப் மர்ம சாவு

bollywood news, latest bollywood news, tamil bollywood news, bollywood latest news, bollywood masala, cinema news
பிரியங்காவின் டூப் மர்ம சாவு

7/13/2011 3:18:37 PM

1978ம் ஆண்டில் அமிதாப் நடித்த 'டான்Õ வெளியாகி ஹிட்டானது. அப்படத்தை 2006ம் ஆண்டு ரீமேக் செய்து நடித்தார் ஷாருக்கான். இப்படமும் வெற்றி பெற்றதையடுத்து இதன் 2ம் பாகம் உருவாகி வருகிறது. ஹீரோயினாக பிரியங்கா சோப்ரா நடிக்கிறார். படத்தில் பிரியங்காவுக்கு பல்வேறு ஸ்டன்ட் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளது. ரிஸ்க்கான காட்சிகளில் அவருக்கு 'டூப்Õ போடுவதற்காக பெர்லினிலிருந்து பிபி என்ற நடிகையை வரவழைத்தனர். படத்தில் பல்வேறு கடினமான சண்டை காட்சிகளில் நடித்தார். சமீபத்தில் லண்டனில் ஷூட்டிங்கில் இருந்தபோது, ஓட்டல் அறையில் பிபி இறந்து கிடந்தார். அவர் எப்படி இறந்தார் என்பது மர்மாக உள்ளது. ஷாருக், பிரியங்கா இருவரும் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். இது குறித்து போலீஸ் விசாரணையும் நடக்கிறதாம்.




 

அஸ்தமனத்தில் 'சன் பிக்சர்ஸ்'?


தமிழ்த் திரையுலகைப் புரட்டிப் போட்ட சன் பிக்சர்ஸ் நிறுவனம் இனிமேல் எழ முடியாது என்று திரையுலகில் பரபரப்பாக பேசப்படுகிறது.

தமிழ்த் திரையுலகில் மறக்க முடியாத நிறுவனங்கள் எத்தனையோ. ஏவிஎம், ஜெமினி என பல நிறுவனங்கள் சகாப்தங்களைக் கண்ட திரையுலகம் தமிழ். ஆனால் கடந்த 5 ஆண்டுகளாக இவை எதுவுமே தமிழில் படமெடுக்க முடியாத நிலை. இவர்களை விட மோசமாக பாதிக்கப்பட்டவர்கள் சிறு படத் தயாரிப்பாளர்கள்தான். சிறிய அளவிலான முதலீட்டில் படம் எடுத்து அதில் வரும் லாபத்தை வைத்து பிழைத்து வந்தவர்கள் இவர்கள்.

இப்படி அத்தனை பேரின் பிழைப்பிலும் கிட்டத்தட்ட மண்ணைப் போட்டு மூடிய நிறுவனம் சன் பிக்சர்ஸ் என்கிறார்கள் அதனால் பாதிக்கப்பட்ட திரையுலகினர்.

எங்கிருந்தோ வந்த டைனசோர் போல தடாலடியாக வந்து திரையுலகத்தையே வளைத்துப் போட்டு விட்டது சன் பிக்சர்ஸ் நிறுவனம் என்பது திரையுலகினரின் கருத்து.

ஆரம்பத்தி்ல விநியோகத்தில் இறங்கியது சன் பிக்சர்ஸ். அதாவது படத்தை எடுத்து முடித்து விட்டு அதை வெளியிட்டால் லாபம் கிடைக்குமா, நஷ்டம் கிடைக்குமா என்ற சந்தேகத்தில் இருக்கும் தயாரிப்பாளர்களை அணுகி, அவர்களது தயாரிப்புச் செல்வை முழுமையாக கையில் கொடுத்து படத்தை அப்படியே வாங்கியது சன் பிக்சர்ஸ்.

இது ரிஸ்க் எடுக்கும் வாய்ப்பைக் குறைத்து, லாபத்தையும் கொடுத்ததால் பல தயாரிப்பாளர்கள் சன் பிக்சர்ஸிடம் படத்தைக் கொடுக்க முண்டியடித்தனர். ஆனால் அது நாளடைவில் சன் பிக்சர்ஸிடம்தான் படத்தைக் கொடுத்தாக வேண்டும் என்ற கஷ்ட காலத்திற்கு தயாரிப்பாளர்களைத் தள்ளி விட்டது.

ஆரம்பத்தில் சன் பிக்சர்ஸ் காட்டிய வழி சிறப்பாக இருப்பதாக கருதிய தயாரிப்பாளர்களுக்கு, பின்னர்தான் அது திரும்பி வரவே முடியாத ஒத்தையடிப் பாதை என்பது தெரிய வந்து திடுக்கிட்டனர்.

ஆனால் அவர்கள் விழித்து எழுவதற்குள் ரெட் ஜெயன்ட் மூவிஸ், கிளவுட் நைன் மூவிஸ் என்று கருணாநிதி குடும்பத்தினர் படையெடுத்து வந்து விட்டனர். இதனால் கலாநிதி மாறனின் சன் பிக்சர்ஸ், தயாநிதி அழகிரியின் கிளவுட் நைன், உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் என முக்கோணச் சிக்கலில் மாட்டிக் கொண்டனர் தமிழ்த் திரையுலகினர். எப்படி 'பெர்முடா' முக்கோணத்தில் சிக்கினால் அதோ கதியோ, அதே நிலைதான் தமிழ்ச் சினிமாக்காரர்களுக்கும் ஏற்பட்டது.

சன் பிக்சர்ஸ் நிறுவனம் இத்தனை காலத்தில் வாங்கி விநியோகித்த படங்களின் எண்ணிக்கை 18 ஆகும். அவர்கள் வாங்கி விநியோகித்த முதல் படம் காதலில் விழுந்தேன். கடைசியாக விநியோகித்த படம் எங்கேயும் காதல்.

சன் பிக்சர்ஸ் இதுவரை ஒரே ஒரு படத்தை மட்டுமே தயாரித்துள்ளது. அது ரஜினிகாந்த் நடித்த எந்திரன். இப்படத்தின் மூலம் ரூ. 179 கோடி அளவுக்கு சன் பிக்சர்ஸ் லாபம் ஈட்டியதாக கூறப்படுகிறது.

சன் பிக்சர்ஸால், சன் டிவிக்கு கிடைத்து வந்த லாபம் கிட்டத்தட்ட 11.5 சதவீதமாகும்.

சன் பிக்சர்ஸ் மீது தற்போது பெருமளவில் மோசடிப் புகார்களும், பண முறைகேடு புகார்களும் குவி்ந்து வருவதால் சன் பிக்சர்ஸ் நிறுவனம் விரைவிலேயே முடங்கி விடும் என்று திரையுலகில் பரபரப்பாக பேசிக் கொள்கிறார்கள்.

என்ன நடக்கும் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
 

'அதெல்லாம்' எனக்குச் சரிப்படாது! - நடிகை ஹாசினி


தற்போது எனக்கு கிளாமர் கதாபாத்திரங்கள் பொருந்தாது என்கிறார் நடிகா ஹாஸினி.

ஹாசினி?

'வேள்வி' படம் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் நடிகை ஹாசினி.

தனது திரையுலக வாழ்க்கை பற்றி அவர் கூறியதாவது,

எனது குடும்பத்தில் நான் தான் முதன்முதலாக நடிக்க வந்துள்ளேன். எனது அப்பா ஒரு ரியல் எஸ்டேட் அதிபர்.

சொந்த மாநிலம் ஆந்திரா. ஆனால் சென்னையில் தான் செட்டிலாகிவிட்டோம். நான் தற்போது பிளஸ் டூ படிக்கிறேன். இதுவரை இரண்டு படங்களில் நடித்துள்ளேன்.

வேள்வி படம் மூலம் கோலிவுட்டில் அறிமுகமானேன். அடுத்து வந்த அரும்பு மீசை குறும்பு பார்வையில் எனது நடிப்பை பார்த்து ஏராளமானோர் பாராட்டுகின்றனர். இதையடுத்து காதல் அதையும் தாண்டி புனிதமானது என்ற படம் வெளியாகவுள்ளது. படபிடிப்பு முடிந்து இறுதி கட்டப் பணிகள் நடக்கின்றது.

சினிமாவில் நடிக்கத் தேவையான அனைத்து பயிற்சிகளும் மேற்கொண்டுள்ளேன். தற்போது எனக்கு கிளாமர் கதாபாத்திரங்கள் பொருந்தாது. நடிக்க வேண்டிய அவசியம், நட்சத்திர அந்தஸ்து படங்களில் வாய்ப்பு கிடைத்தால் கிளாமராக நடிப்பேன். கிளாமர் என்பது நடிகைகளால் தவிர்க்க முடியாத ஒன்று.

எனது இயற்பெயர் மோகனா. நடிகை சுஹாசினியின் நடிப்பு எனக்கு மிகவும் பிடிக்கும். அவர் தான் என் ரோல் மாடல். அவர் மேல் கொண்ட பிரியத்தால் தான் எனது பெயரை ஹாசினி என்று மாற்றிக் கொண்டேன் என்றார்.
 

ஸ்ருதியுடன் நடிக்க மறுத்தாரா தனுஷ்?


இரண்டாம் உலகம் படத்துக்குப் பிறகு தனுஷ் நடிக்கப் போவது அவர் மனைவி ஐஸ்வர்யா இயக்கும் புதிய படம்தான் என்பது உறுதியாகியுள்ளது.

கமல் மகள் ஸ்ருதிதான் இந்தப் படத்தின் நாயகி என்பது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது. இடையில், ஸ்ருதியுடன் தனுஷ் நடிக்க மறுத்தார் என்று வந்த செய்திகளில் உண்மையில்லை என்று கூறப்பட்டுள்ளது.

படத்தில் நடிப்பது குறித்து ஸ்ருதியுடன் ஐஸ்வர்யாவே பேசி வருகிறாராம். எனவே கண்டிப்பாக அவர் நடிப்பது உறுதி என்கிறார்கள் ஐஸ்வர்யா தரப்பில்.

ரஜினியின் வருகைக்குப் பிறகு இந்தப் படத்தை அறிவிக்கக் காத்திருந்தார் ஐஸ்வர்யா. இன்று ரஜினி வருகிறார். எனவே இந்த வாரம் பட அறிவிப்பு வரக்கூடும்.

ரஜினியின் வாழ்த்துடன் ஆகஸ்டில் படப்பிடிப்பு துவங்கும் என்கிறார்கள்.
 

ஆந்திராவைக் கலக்கும் தமிழ்ப் படங்கள்!


ஆந்திராவில் இப்போதைக்கு லாபகரமான விஷயம் நேரடியாக தெலுங்குப் படம் தயாரிப்பதல்ல. தமிழ்ப் படங்களை அப்படியே டப் செய்வதுதான்.

தமிழில் சமீபத்தில் வெளியான அவன் இவன் மற்றும் கோ ஆகிய இரண்டு படங்களின் வசூலும் அங்குள்ள தயாரிப்பாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்களை ஆச்சர்யப்படுத்தியுள்ளது.

இந்த இரண்டு படங்களும் கடந்த இரு வாரங்களில் 16 கோடி ரூபாயை ஈட்டியுள்ளன.

பாலாவின் அவன் இவன் படத்தை விஷாலின் அண்ணன் விக்ரம் கிருஷ்ணா தெலுங்கில் வாடு வீடு என்ற பெயரில் வெளியிட்டார்.

தமிழில் சுமாராகப் போனாலும், தெலுங்கில் பி, சி சென்டர்களில் நல்ல வசூலைப் பெற்றுள்ளது இந்தப் படம்.

அதேபோல ஜீவா நடித்த கோ படம் ரங்கம் என்ற பெயரில் வெளியானது. பாடல்கள், கண்ணைக்கவரும் லொகேஷன், மேக்கிங் ஸ்டைல் என இந்தப் படம் அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்ததால் நல்ல வசூல் கிடைத்துள்ளது.

தமிழ்ப் படங்களின் ஓட்டத்தைப் பார்த்த தெலுங்கு சினிமா விநியோகஸ்தர்கள், இனி இந்த மாதிரி டப்பிங் படங்களுக்கான வரியை கணிசமாக உயர்த்த வேண்டும் என கொடிபிடிக்க ஆரம்பித்துள்ளனர்.
 

இளம்பெண் கொலை வழக்கு : அரியானா டிஜிபியிடம் நிலா விளக்கம்!

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
இளம்பெண் கொலை வழக்கு : அரியானா டிஜிபியிடம் நிலா விளக்கம்!

7/13/2011 12:42:59 PM

இளம்பெண் கொலை வழக்கில் சிக்கியுள்ள நிலா, திடீரென அரியானா டிஜிபியை சந்தித்து விளக்கம் அளித்தார். நடிகை நிலாவின் நிஜ பெயர் மீரா சோப்ரா. டெல்லி அருகே உள்ள குர்கான் பகுதியைச் சேர்ந்த இளம்பெண் கொலை வழக்கு தொடர்பாக, நிலாவை போலீசார் தேடி வருகின்றனர். இதுபற்றிய விவரம் வருமாறு: டெல்லியை சேர்ந்தவர் ருச்சி பூட்டன் (28). இவரது கணவர் சுமித் பூட்டன். சமீபத்தில் ருச்சி தனது வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். அவர் தற்கொலை செய்து கொண்டதாக கணவர் குடும்பத்தினர் தெரிவித்தனர். ஆனால் ருச்சியின் உறவினர்கள், அவரது சாவில் மர்மம் உள்ளதாக தெரிவிக்கின்றனர். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்தனர். அப்போது ருச்சியின் டைரி கிடைத்தது. அதில் தனக்கும் கணவருக்கும் அடிக்கடி சண்டை நடப்பது பற்றி எழுதி இருப்பதுடன், நிலாவுடன் கணவருக்கு தொடர்பு இருப்பதாகவும், நிலாவின் அழகுடன் தன்னை ஒப்பிட்டு இழிவுபடுத்துவார் என்றும் குறிப்பிட்டிருக்கிறார். இதையடுத்து ருச்சியின் சாவுக்கு உடந்தையாக இருந்ததாக, நிலா மீது குர்கான் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்நிலையில் நிலா அரியானா மாநில டிஜிபி மற்றும் போலீஸ் அதிகாரிகளை சந்தித்து விளக்கம் அளித்தார். ருச்சியின் சாவு குறித்து அவர் அளித்த விளக்கத்தை வாக்குமூலமாக போலீசார் பதிவு செய்து கொண்டனர்.




 

நிருபர்கள் சரமாரி கேள்வி : பதிலளிக்க முடியாமல் நடிகை ரஞ்சிதா திணறல்!

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
நிருபர்கள் சரமாரி கேள்வி : பதிலளிக்க முடியாமல் நடிகை ரஞ்சிதா திணறல்!

7/13/2011 11:06:30 AM

நித்யானந்தாவுடன் இருக்கும் சிடி குறித்து நிருபர்களின் சரமாரி கேள்விகளுக்கு பதில் சொல்ல திணறிய நடிகை ரஞ்சிதா பேட்டியை பாதியில் முடித்துக் கொண்டு வெளியேறினார். சாமியார் நித்தியானந்தாவும், நடிகை ரஞ்சிதாவும் ஒரே அறையில் நெருக்கமாக இருந்த சிடிக்கள் வெளியாகி பரபரப்பு ஏற்பட்ட பின்னர் ஒன்றரை ஆண்டுகளாக சென்னைக்கு வராமல் இருந்த ரஞ்சிதா, நேற்று திடீரென்று சென்னை வந்தார். போலீஸ் கமிஷனரை சந்தித்தார். இரவில் தி.நகர் நட்சத்திர ஓட்டலில் பேட்டியளித்தார்.

ரஞ்சிதா வந்து அமர்ந்தவுடன், எழுந்து நின்று போஸ் கொடுக்கும்படி போட்டோகிராபர்கள் கேட்டனர். Ôஇப்படி சொல்லி சொல்லியே என்னை தெருவுக்கு கொண்டு வந்திட்டீங்க' என்றார் ரஞ்சிதா. பின்னர் அவர் கூறியதாவது:
கடந்த ஆண்டு மார்ச் 2ம் தேதி என்னை பற்றி வீடியோ காட்சிகள் ஒளிபரப்பப்பட்டது. அதனால் எனது சுதந்திரம் பறிபோய் விட்டது. அந்த காட்சிகளை வெளியிட்ட டிவி, பத்திரிகைகள் மீது நடவடிக்கை எடுக்க போலீஸ் கமிஷனரிடம் மனு கொடுத்துள்ளேன். நான் ஒரு சாதாரண குடும்ப பெண். நடிப்பது என் தொழில்.  இவ்வாறு ரஞ்சிதா கூறினார். பின்னர் நிருபர்கள் கேள்விக்கு பதில் அளித்

ஒன்றரை ஆண்டுகளுக்கு பிறகு இப்போது திடீரென ஏன் புகார் கொடுக்க தோன்றியது?

அதற்கான சூழ்நிலை இப்போதுதான் அமைந்தது. எனக்கு சட்டம் தெரியாது.

சிலருடைய தூண்டுத லின் பேரில்தான் புகார் கொடுத்ததாக பேச்சு நிலவுகிறதே?

அப்படி இல்லை.

சன் டிவி மீது சிலர் வேண்டுமென்றே புகார் கொடுக்கின்றனர். அதை பயன்படுத்தி நீங்களும் ஆதாயம் தேட முயற்சிக்கிறீர்களா?

அப்படி இல்லை.

நித்யானந்தாவுடன் நீங்கள் இருந்த வீடியோ காட்சி உண்மை இல்லை என்கிறீர்களா?

ஆமாம். அது ஜோடிக்கப்பட்டது.

சிடியும், அதில் உள்ள காட்சிகளும் உண்மைதான் என்று கர்நாடகா நீதிமன்றத்தில் அந்த மாநில போலீஸ் நிரூபித்து அறிக்கை அளிக்கப்பட்டுள்ளதே?

அது சரியல்ல.

நீதிமன்றம் பொய் சொல்கிறது என்கிறீர்களா?

அந்த சிடியில் இருப்பது நான் இல்லை.

உங்களை பின்னால் இருந்து இயக்குவது யார்?

 நானாகத்தான் இயங்குகிறேன்.

முதல்வரை சந்திக்க போகிறீர்களா?

 வாய்ப்பு கிடைத்தால் சந்திப்பேன்.

 உங்கள் புகாரின் நோக்கம் என்ன?

அதையெல்லாம் சொல்ல முடியாது. கமிஷனரிடம் கூறிவிட்டேன். அவர் நடவடிக்கை எடுப்பார்.

இவ்வாறு ரஞ்சிதா கூறினார்.

இதன் பின்னரும் சிடி குறித்தும் புகார் குறித்தும் நிருபர்கள் சரமாரியாக கேள்வி கேட்டதால் அப்செட் ஆன ரஞ்சிதா பேட்டியை பாதியில் முடித்துக் கொண்டு வெளியேறினார்.

ரஞ்சிதா புகார் பின்னணி என்ன?

பேட்டியை முடித்து ரஞ்சிதா வெளியேறிய பின்னரும், அவரை பற்றிய விவாதமே நிருபர்கள் மத்தியில் நீடித்தது. சன் டிவி குழுமத்தை மட்டுமே குறை சொல்லும் நோக்கத்தையும், அதற்காகவே இவர் சென்னை வந்துள்ளதையும் புரிந்து கொண்ட  நிருபர்கள், கடந்த ஆண்டில் ரஞ்சிதா பற்றி பல தரப்பிலும் வெளியான செய்திகள் குறித்து அலசித் தீர்த்தனர். சாமியார் நித்யானந்தா - ரஞ்சிதா தொடர்பான சிடி கடந்த ஆண்டு டிவி சேனல்களிலும், நாளிதழ்கள் மற்றும் வாரப் பத்திரிகைகளிலும் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தமிழ் சேனல்களான ஜெயா, ஜெயா பிளஸ், விஜய், ராஜ், மக்கள், பாலிமர், வசந்த் டிவிகள்  மற்றும்  ஒரு டஜன் தெலுங்கு, கன்னட டிவிகளிலும், ஆங்கில சேனல்களான சிஎன்என்-ஐபிஎன், ஹெட்லைன்ஸ் டூடே, டைம்ஸ் நவ், என்டிடிவி மற்றும் நக்கீரன், தினமலர் இணையதளத்திலும் இந்த சிடி காட்சிகள் வெளியானது.  இதில் குறிப்பாக டி.வி.9 என்ற சேனலில் ரஞ்சிதாவின் படுக்கை அறைக் காட்சிகள் பற்றிய ஒரு முழுமையான செய்தி தொகுப்பே ஒளிப்பரப்பு செய்யப்பட்டது. அதில் நடிகையின் செயல் குறித்து பலர் தெரிவித்த கடுமையான விமர்சனங்களும் இடம்பெற்றன. இவர்களை பற்றியெல்லாம் வாய் திறக்காத இந்த நடிகை, சன் டிவி குழுமம் மீது மட்டும் குறி வைத்துள்ளதை பார்க்கும்போது, யாரோ எழுதிக் கொடுத்த புகாரை எடுத்து வந்துள்ளது மட்டுமல்ல; எங்கிருந்தோ இயக்குபவர்களின் வலையில் விழுந்துள்ளார் என்பதும் தெரிகிறது.




 

சம்பளப் பிரச்சினையை விவாதிக்க இன்று கூடுகிறது பெப்சி!


சென்னை: திரைப்பட தொழிலாளர்கள் சம்பள உயர்வுப் பிரச்சினை குறித்து விவாதிக்க இன்று மாலை கூடுகிறது பெப்சி எனப்படும் தென்னிந்திய திரைப்பட தொழிலாளர் சம்மேளனம்.

திரைப்பட தொழிலாளர்கள் சம்பள உயர்வு கேட்டு போராட்டம் நடத்தி வருகிறார்கள். வடபழனியில் உள்ள பெப்சி அலுவலகம் முன்பு நடக்கும் இந்த போராட்டம் தினமும் ஒரு வடிவில் தொடர்கிறது.

தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனத்தில் 23 சங்கங்கள் உள்ளன. இதில் 9 சங்கங்களில் தினக்கூலி தொழிலாளர்கள் இருக்கிறார்கள். இவர்கள் 50 சதவீதம் சம்பள உயர்வு கேட்கிறார்கள்.

ஆனால் தயாரிப்பாளர்கள் இதற்கு தயாராக இல்லை. தொழிலாளர்கள் போராட்டத்தால் சினிமா ஸ்டிரைக் ஏற்பட்டு படப்பிடிப்புகள் நிறுத்தப்படலாம் என்ற அச்சம் நிலவியது.

இந்த நிலையில் சினிமா தொழிலாளர்கள் சம்பள பிரச்சினை பற்றி விவாதிக்க இன்று மாலை பெப்சியின் பொதுக்குழு கூட்டம் அதன் தலைவர் வி.சி.குகநாதன் தலைமையில் நடக்கிறது.

இதில் சம்பள உயர்வு பற்றி அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 

விஜய்யை இன்னும் சரியாக பயன்படுத்தவில்லை! - அனுஷ்கா பேட்டி


விஜய் மிகவும் திறமைசாலி, ஆனால் அவரை இன்னும் முழுமையாக பயன்படுத்திக் கொள்ளவில்லை, என்று நடிகை அனுஷ்கா கூறியுள்ளார்.

வேட்டைக்காரன், சிங்கம் ஆகிய படங்களை தொடர்ந்து வெளிவர இருக்கும் தெய்வத் திருமகள் படத்தை ஆர்வத்தோடு எதிர்நோக்கி இருக்கிறார் அனுஷ்கா.

அருந்ததியாக நடிப்பில் மிரட்டிய அவர், இந்தப் படத்தில் வழக்கறிஞராக வித்தியாசமான வேடத்தில் நடித்திருக்கிறார். மதராசாப்பட்டினம் படத்தை இயக்கிய விஜய் இயக்கத்தில் உருவாகி இருக்கும் இந்தப் படத்தில் தனது பாத்திரம், விக்ரமோடு இணைந்து நடித்த அனுபவம் உள்ளிட்டவை பற்றி அனுஷ்கா உற்சாகமாக தனது கருத்துக்களை பகிர்ந்துகொண்டார்.

தெய்வத் திருமகள் படம் பற்றி...

மிகவும் வித்தியாசமான படம் இது. 5 வயது சிறுவனின் மனநிலை கொண்ட இளைஞனுக்கும் மகளுக்கும் இடையிலான பாசப் போராட்டத்தை மையமாக கொண்ட கதை. ஆனால் எல்லா பாத்திரங்களுக்குமே சமமான முக்கியத்துவம் உள்ள வகையில் கதை அமைந்திருக்கிறது. இதுவரை நான் நடித்த பாத்திரங்களிலேயே மிகவும் அற்புதமானது என்று சொல்லும் வகையில் எனது பாத்திரம் அமைந்துள்ளது.

உங்கள் பாத்திரத்தில் அப்படி என்ன விசேஷம்?

இதில் வழக்கறிஞராக வருகிறேன். வழக்கமான நாயகி போல இல்லாமல் படம் முழுவதும் வருவதுபோல எனது பாத்திரம் அமைந்திருக்கிறது. கதையை நகர்த்திச் செல்லும் முக்கியமான பாத்திரம். ஒரு நடிகையாக நடிப்பை வெளிப்படுத்த போதிய வாய்ப்பு உள்ள பாத்திரம்.

சிங்கம் படத்தின் பாத்திரத்திலிருந்து இது எப்படி மாறுபட்டது?

சிங்கம் முழுக்க முழுக்க கமர்ஷியலான படம். பாடல் காட்சிகளில் கவர்ச்சி இருக்கும். ஆனால் இந்தப் படம் மிகவும் சிறப்பானது. இதன் திரைக்கதை அற்புதமாக உருவாக்கப்பட்டுள்ளது. இயக்குனர் விஜய் கதை கூறியதுமே இதில் நடிக்க ஒப்புக்கொண்டுவிட்டேன். விக்ரம் அற்புதமாக நடித்திருக்கிறார். அமலாபாலும் சிறப்பாக நடித்திருக்கிறார். இசை அமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் இசையில் படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறார். கேமிராமேன் நீரவ் ஷாவும் உழைத்திருக்கிறார். அனைவருமே தங்கள் பங்கை சிறப்பாக செய்துள்ளனர்.

விக்ரமோடு நடித்த அனுபவம்...

விக்ரம் அற்புதமான நடிகர். நடிப்பில் அவருக்கு இருக்கும் ஈடுபாடு அசாத்தியமானது. அவரைப் பார்த்து பல விஷயங்களை கற்றுக்கொண்டேன்.

இதுவரை நீங்கள் நடித்த நாயகர்கள் பற்றி...

வேட்டைக்காரனில் விஜய்யோடு நடித்தேன். விஜய் மிகவும் திறமைசாலி. ஆனால் அவரது திறமை இன்னமும் சரியாக பயன்படுத்தப்படவில்லை. சூர்யா மிகச் சிறந்த நடிகர். படப்பிடிப்பில் 100 சதவீத ஈடுபாட்டோடு நடிப்பார். சிறந்த நடிகராக இருப்பதோடு, மனைவிக்கு சிறந்த கணவனாகவும், மகளுக்கு சிறந்த தந்தையாகவும் இருக்கிறார். விக்ரமை பொறுத்தவரை அவரது நடிப்பு அசாத்தியமானது. ஆனால் அதையும் மீறி அவர் பணிவோடு இருக்கிறார்.
 

கத்ரீனா என்ன முட்டாளா?


ஜிந்தகி நா மிலேகி தோபாரா படத்தில் தனது கதாபாத்திரம் பற்றி கேட்ட பிறகே கத்ரீனா ஓகே சொன்னார். கதை கேட்காமல் ஓகே சொல்ல அவர் என்ன முட்டாளா? என்று அப்படத்தின் இயக்குனர் ஜோயா அக்தர் கேள்வி எழுப்பியுள்ளார்.

ஜோயா அக்தரின் படம் ஜிந்தகி நா மிலேகி தோபாரா. இதில் ஹ்ரித்திக் ரோஷன், அபய் தியோல் மற்றும் பர்ஹான் அக்தர் நடித்துள்ளனர். கல்கி கொச்லின் மற்றும் கத்ரீனா கைப் ஆகியோர் கதாநாயகிகள்.

இந்த படத்தில் நடித்துள்ள கத்ரீனாவுக்கும், கல்கிக்கும் லடாய் என்று தகவல்கள் வந்தன. ஆனால் அதை கல்கி திட்டவட்டமாக மறுத்துள்ளார். இந்நிலையில் படத்தில் கத்ரீனாவுக்கு முக்கியத்துவம் இல்லாத சிறிய கதாபாத்திரம் என்று பேசப்படுகின்றது.

இது குறித்து இயக்குனர் ஜோயா அக்தரிடம் கேட்டதற்கு, அவர் கூறியதாவது,

கத்ரீனா கைப் என்ன முட்டாள் என்று நினைக்கிறீர்களா? அவர் ஸ்கிரிப்டை படித்துவிட்டு தான் படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டார். முக்கியத்துவம் இல்லாத கதாபாத்திரமாக இருந்திருந்தால் அவர் ஏன் ஒப்புக் கொண்டிருக்க வேண்டும். அவர் இந்த படத்தில் நடித்து, தற்போது படத்தை விளம்பரமும் செய்கிறார் என்றால், அவர் சந்தோஷமாக இருக்கிறார் என்று தான் நான் நினைக்கின்றேன்.

கத்ரீனா கைப் அவர் வாழ்க்கையை தான் விரும்பியபடி வாழ்பவர். இந்தியே தெரியாமல் பாலிவுட்டில் அறிமுகமாகி தற்போது முன்னணி நடிகைகளில் ஒருவர் ஆகியுள்ளார். இதில் இருந்தே அவர் திறமைசாலி என்று தெரியவில்லையா. அவர் திறமையை நான் மதிக்கிறேன் என்றார்.
 

போலி வீடியோ புகார்... சரமாரி கேள்வி... பதில் சொல்லாமல் வெளியேறிய ரஞ்சிதா!


சென்னை: நித்யானந்தாவுடன் நான் இருப்பதாக வந்த வீடியோ போலியானது என்று பிரஸ் மீட் வைத்து புகார் கூறிய ரஞ்சிதா, நிருபர்களின் அடுக்கடுக்கான கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாமல் பாதியில் வெளியேறினார்.

நித்யானந்தா சாமியாருடன் ஆபாச படத்தில் தோன்றியதாக பரபரப்பாக பேசப்பட்ட நடிகை ரஞ்சிதா, சென்னை தியாகராயநகரில் உள்ள ஸ்டார் சிட்டி ஓட்டலில் நேற்று இரவு நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

ரஞ்சிதாவை பேட்டி காணவும், படம் எடுக்கவும் 300-க்கும் மேற்பட்ட நிருபர்கள், புகைப்படக்காரர்கள், வீடியோகிராபர்கள் குவிந்துவிட்டனர். கழுத்தில் ருத்ராட்ச மாலையுடன் வந்திருந்தார் அவர்.

முதலில் சிரித்தபடி அனைவருக்கும் வணக்கம் தெரிவித்து, தன் தரப்பு நியாயத்தை எடுத்து வைத்தார்.

அவர் கூறுகையில், "நித்யானந்தாவுடன் நான் இருப்பதாக வந்த படம் போலியானது. இதை வெளியிட்டதன் மூலம் என் சொந்த வாழ்க்கை, சமூக வாழ்க்கை இரண்டையும் கொன்று விட்டார்கள். என்னை கேட்காமல், கற்பனையாக எழுதி, எனக்கு அவமானத்தையும், களங்கத்தையும் ஏற்படுத்தி விட்டார்கள்.

சன் டி.வி.யிலும், தினகரன், நக்கீரன் ஆகிய பத்திரிகைகளிலும் அருவறுக்கத்தக்க ஆபாச படங்களை பிரசுரித்து, என் வாழ்க்கையை சீர்குலைத்து விட்டார்கள். ஆனால் இந்த பிரஸ்மீட்டுக்கு அவர்களே இங்கு வந்து இருப்பது ஆச்சரியமாக இருக்கிறது.

168 வருட பாரம்பரியமுள்ள `நியூஸ் ஆப் த வேல்டு' என்ற ஆங்கில பத்திரிகை, போன் கால்களை ஒட்டுக்கேட்ட குற்றத்துக்காக மூடப்பட்டது. அதுபோன்ற நடவடிக்கையை என் வாழ்க்கையை கெடுத்தவர்கள் மீது எடுக்க வேண்டும். என் தனிப்பட்ட கண்ணியத்தை சீர்குலைத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்காதது ஆச்சரியமாக இருக்கிறது.

அந்த போலியான ஆபாச படங்களை வெளியிட்டபின், எனக்கு பாதுகாப்பு இல்லை. ஒன்றரை வருடங்களாக எனக்கு நீதி கிடைக்கவில்லை. அப்போது ஆட்சியில் இருந்தது எந்த அரசு என்று எல்லோருக்கும் தெரியும். அந்த அரசாங்கத்தில், எனக்கு பாதுகாப்பு இல்லாததால்தான் புகார் கொடுக்கவில்லை. புகார் கொடுத்திருந்தாலும் நடவடிக்கை எடுத்திருக்க மாட்டார்கள்.

நான் சென்னையில் கால் வைக்கக்கூடாது என்று சிலர் மிரட்டினார்கள். சென்னைக்குள் வந்தால், உன் மீது வழக்கு போட்டு உள்ளே தள்ளி விடுவோம் என்று மிரட்டினார்கள். சிலர் பணம் கேட்டு மிரட்டினார்கள். சட்டத்தில் என்னென்ன உரிமைகள் இருக்கிறது? என்று எனக்கு தெரியாது.

மதுரையில், தினகரன் பத்திரிகை அலுவலகம் தீவைத்து கொளுத்தப்பட்டு மூன்று பேர் எரிக்கப்பட்ட வீடியோ காட்சியை கோர்ட்டு 'டிஸ்மிஸ்' செய்தது. அதேபோல் என் சம்பந்தப்பட்ட போலியான வீடியோ காட்சிகளையும் தள்ளுபடி செய்ய வேண்டும்.

இப்போது எனக்கு தைரியம் வந்திருக்கிறது. தமிழக அரசு மீதும், முதல்வர் ஜெயலலிதா மீதும், போலீஸ் கமிஷனர் மீதும் முழுமையான நம்பிக்கை வந்திருக்கிறது.

என் வாழ்க்கையை சீர்குலைத்த சன் டி.வி, தினகரன், நக்கீரன் பத்திரிகைகள், லெனின் கருப்பன் ஆகியோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். எனக்கு நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது,'' என்று பேசினார்.

அடுத்து அவரிடம் சரமாரியாக கேள்வி எழுப்பினர் நிருபர்கள்.

பாதியில் வெளியேறினார்

இந்த வீடியோக்கள் போலி என்பதற்கு என்ன ஆதாரம் வைத்திருக்கிறீர்கள்? இந்த வீடியோ போலியானது அல்ல என தமிழக தடய அறிவியல் துறை மற்றும் பெங்களூர் சிபிசிஐடி போலீசார் உறுதிப்படுத்தியுள்ளார்களே?

வீடியோவில் இருப்பது ரஞ்சிதாவும் நானும்தான் என நித்யானந்தா சிபிசிஐடிக்கு அளித்த வாக்குமூலத்தில் கூறியிருக்கிறாரே, அது பொய்யா?

வீடியோ வெளியான உடன் தமிழக போலீசாரிடம் புகார் கூற முன்வராத நீங்கள், கர்நாடக போலீசாருக்கு டிமிக்கி கொடுத்தீர்களே, ஏன்?

'தினகரன் பத்திரிகை வழக்கு எரிப்பு வீடியோ உண்மைதான், ஆனால் அதை ஒரு சாட்சியாக கோர்ட் ஏற்க மறுத்தது. அதுதான் உங்கள் சம்பந்தப்பட்ட வீடியோவின் நிலையும் என கூற வருகிறீர்களா?

-இந்தக் கேள்விகளுக்கு சரிவர பதில் சொல்லாமல், பாதியிலேயே பிரஸ்மீட்டிலிருந்து வெளியேறினார் ரஞ்சிதா.
 

சிங்கப்பூர் சிகிச்சையை முடித்துக் கொண்டு ரஜினி இன்று சென்னை திரும்புகிறார்


சென்னை: சிங்கப்பூரில் சிகிச்சை மேற்கொண்டு குணமடைந்து ஓய்வெடுத்து வந்த நடிகர் ரஜினிகாந்த் இன்று சென்னை திரும்புகிறார். இந்திய நேரப்படி இரவு 10 மணி வாக்கில் சென்னை திரும்பும் ரஜினிக்கு ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளிக்க ஏற்பாடு செய்யபப்பட்டுள்ளது.

உடல் நலம் பாதிக்கப்பட்டு சென்னையில் இரு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்தார் ரஜினி. அதில் முன்னேற்றம் ஏற்படாத காரணத்தால், சிங்கப்பூரில் உள்ள மெளன்ட் எலிசபெத் மருத்துவமனைக்கு அவர் அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு நடந்த சிகிச்சையில் அவரது உடல் நலம் தேறியது. குணமடைந்த அவர் மருத்துவமனையிலிருந்து திரும்பி சிங்கப்பூரிலேயே ஒரு அபார்ட்மென்ட்டில் தங்கி ஓய்வெடுத்து வந்தார்.

தற்போது ஓய்வின் காரணமாக முழு குணமும் அடைந்துள்ளதாக கூறப்படுகிறது. இதையடுத்து இன்று சென்னை திரும்புகிறார் ரஜினிகாந்த். இந்திய நேரப்படி சிங்கப்பூரிலிருந்து மாலை 6மணிக்கு ரஜினி சென்னை கிளம்புகிறார். இரவு 10 மணி வாக்கில் சென்னையை வந்தடைவார்.

சென்னை வந்ததும் நேராக கேளம்பாக்கத்தில் உள்ள பண்ணை வீட்டுக்குச் சென்று ஓய்வெடுக்கவுள்ளார் ரஜினிகாந்த். போயஸ் தோட்ட இல்லத்தில் வாஸ்துப்படியான மாற்றங்கள் செய்யப்பட்டு வருவதால் அது முடிந்ததும்தான் போயஸ் தோட்ட வீட்டுக்கு ரஜினி வருவார்.

சிறப்பான வரவேற்பு

ரஜினிகாந்த் சென்னை வந்து இறங்கியதும் விமான நிலையத்தில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்க ரசிகர்கள் திட்டமிட்டுள்ளனர். விமான நிலையத்திலிருந்து ரஜினி செல்லும் வழியெங்கும் வரவேற்பு அளிக்கப்படவுள்ளதாம்.

அமைதியாக வரவேற்க வேண்டும்-லதா

இதற்கிடையே, ரஜினி ரசிகர்களின் அன்பினால் நெகிழ்ந்துள்ள அவரது மனைவி லதா ரஜினிகாந்த் விடுத்துள்ள அறிக்கையில், ரசிகர்களின் அன்புக்கு நன்றி தெரிவித்துள்ளார். மேலும் ரஜினியை வரவேற்க வரும்போது மிக மிக கவனமாகவும், அமைதியாகவும், யாருக்கும் எந்தத் தொல்லையும் இல்லாத வகையில் நடந்து கொள்ளுமாறும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
 

நித்தியானந்தா ஆபாசப் பட விவகாரம்-சன் டிவி, தினகரன், நக்கீரன் மீது போலீஸில் ரஞ்சிதா புகார்


சென்னை: தன்னையும் நித்யானந்தாவும் இணைத்து ஆபாசப்படம் வெளியிட்டதாக சன் டிவி, தினகரன் மற்றும் நக்கீரன் பத்திரிகை மீது சென்னை மாநகர கமிஷனரிடம் புகார் கொடுத்துள்ளார் நடிகை ரஞ்சிதா.

கடந்த வாரம் நித்யானந்தா சாமியாரின் சீடர்கள் சென்னை நகர போலீஸ் கமிஷனரை சந்தித்து புகார் மனு ஒன்றைக் கொடுத்தனர். அந்த புகார் மனுவில், நித்யானந்தா-நடிகை ரஞ்சிதாவை இணைத்து போலியான ஆபாச படங்களை வெளியிட்ட சன் டி.வி. மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தனர். அந்த புகார் மனு விசாரணையில் உள்ளது.

இந்த நிலையில், அதே குற்றச்சாட்டை கூறி நடிகை ரஞ்சிதாவும் புகார் கொடுத்துள்ளார். நேற்று பிற்பகல் 2.45 மணிக்கு ரஞ்சிதா தனது மூத்த சகோதரியோடும், சீனியர் வக்கீல் ராஜன் உள்பட சில வக்கீல்களோடும் போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு வந்தார்.

கமிஷனர் திரிபாதியை சந்தித்து அவர் புகார் மனு ஒன்றைக் கொடுத்தார். புகார் கொடுத்துவிட்டு வெளியே வந்த அவரிடம் கமிஷனரிடம் கொடுத்த புகார் மனுவின் நகல் காப்பியை தரும்படி நிருபர்கள் கேட்டனர். அதை தர இயலாது என்று ரஞ்சிதா கூறிச் சென்று விட்டார்.

இந்த நிலையில் நேற்று மாலை 6 மணியளவில் கமிஷனர் திரிபாதி, நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவரிடம், ரஞ்சிதா கொடுத்த புகார் மனு பற்றி நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.

இதற்கு பதில் அளித்து கமிஷனர் திரிபாதி கூறுகையில், "ரஞ்சிதா கொடுத்த புகார் மனுவில், ஆசிரமத்தில் நடந்ததாக போலியான வீடியோ காட்சிகளை வெளியிட்டு என்னை அவமானப்படுத்தி விட்டார்கள் என்றும், எனது புகழுக்கு களங்கம் ஏற்படுத்திவிட்டார்கள் என்றும், அதுதொடர்பாக சன் டி.வி. மீதும், நக்கீரன் உள்பட சில பத்திரிகைகள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

அந்த வீடியோ காட்சிகளை வெளியிடாமல் இருக்க பணம் கேட்டு மிரட்டினார்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார். எவ்வளவு பணம் கேட்டார்கள் என்பதுபற்றி புகாரில் இல்லை. யார், யார் பெயர் உள்ளது என்பது பற்றி மனுவை முழுமையாக படித்து பார்த்தால்தான் தெரியும்.

இந்த புகார் மனு மீது மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்துவார்கள். பெங்களூரில் நடக்கும் வழக்கு வேறு. இங்கு நடந்த சம்பவங்கள் தொடர்பாக இந்த புகார் மனு கொடுக்கப்பட்டுள்ளது. என்ன நடவடிக்கை என்பது பற்றி விசாரணை முடிந்தபிறகுதான் சொல்ல முடியும்.

சக்சேனா மீது நிறைய புகார்கள் இருந்தாலும், இதுவரை 3 புகார்கள் மீதுதான் அவர்மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது," என்றார்.
 

'விமான நிலையத்தில் என் ரசிகர்களை நடந்தே போய் பார்க்க ஆசைப்படுகிறேன்!' - ரஜினி நெகிழ்ச்சி


சென்னை: விமான நிலையத்தில் கூடும் என் ரசிகர்கள் ஒவ்வொருவரையும் நடந்தே போய் நேரில் சந்திக்க ஆசைப்படுகிறேன், என்று கூறியுள்ளார் ரஜினி.

இன்று மாலை 6 மணிக்கு சிங்கப்பூரிலிருந்து புறப்படும் ரஜினி 10.30 மணிக்கு சென்னை விமான நிலையத்தில் வந்திறங்குகிறார்.

அவரை வரவேற்க பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள் விமானநிலையத்தில் கூடுகிறார்கள்.

விமான நிலையத்தில் ரஜினி வரும்போது கூட்டம் நெருக்கியடிக்குமே என்ற கவலை லதா ரஜினி மற்றும் குடும்பத்தினருக்கு ஏற்பட்டுள்ளது. எனவே விமான நிலைய வாசலிலிருந்து காரில் அவரை உட்காரவைத்து ரசிகர்களை நோக்கி கையசைத்தபடி போக ஏற்பாடு செய்யத் திட்டமிட்டனர் லதா ரஜினி உள்ளிட்டோர்.

ஆனால் இந்த ஏற்பாட்டுக்கு மறுத்த ரஜினி, "இன்று நான் புதுப்பிறவி எடுத்து வந்திருப்பதே ரசிகர்களால்தான். என்னைப் பார்க்கத்தான் அவர்கள் வருகிறார்கள். எனவே நான் நடந்தே போய் அவர்களைப் பார்க்கப் போகிறேன். எனக்கு ஒன்றும் ஆகாது," என்று கூறியுள்ளார்.

ரஜினியின் இந்த புதிய முடிவைத் தொடர்ந்து, ரசிகர்கள் எங்கே கூட வேண்டும், எப்படி வரவேற்பு அளிக்க வேண்டும் என்பது குறித்து மன்ற நிர்வாகிகள் அனைவருக்கும் தகவல் அனுப்பப்பட்டுள்ளது.

மாலை 8 மணியிலிருந்து...

ரஜினியை வரவேற்க சென்னை உள்பட அனைத்து மாவட்ட ரசிகர்களும் மாலை 8 மணியிலிருந்து ரசிகர்கள் விமான நிலையத்தில் கூட ஆரம்பிக்கின்றனர். இதனால் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.