இயக்குநரானார் பிரபல எடிட்டர் ஆன்டனி

பிரபல எடிட்டர் ஆன்டனி அடுத்து இயக்குநராக மாறியுள்ளார். படத்தின் பெயர், தயாரிப்பாளர், நடிகர் நடிகைகள் குறித்த விவரங்களை விரைவில் அறிவிக்கவிருக்கிறார்.

வேட்டையாடு விளையாடு, கஜினி, அயன், எந்திரன், நண்பன் உள்ளிட்ட ஏராளமான படங்களின் படத் தொகுப்பாளராகப் பணியாற்றியவர் ஆன்டனி.

இயக்குநரானார் பிரபல எடிட்டர் ஆன்டனி

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநர்கள் அத்தனைப் பேரின் முதல் தேர்வு ஆன்டனிதான். இப்போது அஜீத்தின் என்னை அறிந்தால் படத்தின் எடிட்டிங் வேலைகளைப் பார்த்து வருகிறார்.

இந்த நிலையில் அடுத்து இயக்குநர் அவதாரமெடுத்துள்ளார் ஆன்டனி. இன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்தின் ஷூட்டிங்கை அவர் ஏற்கெனவே தொடங்கிவிட்டார். படம் குறித்த விவரங்களை இன்னும் அவர் வெளியிடவில்லை.

இந்தப் படத்தில் சத்யராஜ் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.

 

செரீன் மீண்டும் ஹீரோயினாக நடிக்கும் 'திகில்'

பெரிய நடிகையாக வலம் வருவார் என்று எதிர்ப்பார்க்கப்பட்டு திடீரென காணாமல் போய் மீண்டும் வந்திருக்கும் செரீன் நடிக்கும் புதிய படம் திகில்.

அசோக் நாயகனாக நடிக்கும் இந்தப் படத்தை மிராக்கிள் மூவி மேக்கர்ஸ் என்ற புதிய பட நிறுவனம் தயாரிக்கிறது.

செரீன் மீண்டும் ஹீரோயினாக நடிக்கும் 'திகில்'

கல்கி ஸ்ருதி, ரவிகாளே, விஜய் ஆனந்த், ஜெயஸ்ரீ ராஜ், அரவிந்த் ஆகியோரும் இந்தப் படத்தில் நடிக்கிறார்கள்.
பாடல்களை அண்ணாமலை எழுத, ஆஸ்லி மண்டோனிகா இசையமைக்கிறார்.

எழுதி இயக்கி இருப்பவர் - சந்தோஷ் கொடன்கேரி.

படம் பற்றி இயக்குனரிடம் கேட்டபோது, "இந்த படம் ஒரு இரவில் நடக்கும் ஹாரர் திரில்லர் படம். தொலைக்காட்சி

செரீன் மீண்டும் ஹீரோயினாக நடிக்கும் 'திகில்'

ஒன்றில் பணியாற்றி கொண்டிருக்கும் செரீனுக்கு திருமணம் நிச்சயம் செய்யப்படுகிறது. திடீரென்று சில நாட்கள் அவருக்கு விடுமுறை கிடைக்க எட்டு மாதம் கழித்து திருமணம் நிச்சயிக்கப்பட்டவரைப் பார்க்க அவரிடம் சொல்லாமல் செல்ல முடிவு செய்கிறார்.

சென்னையில் இருந்து கர்நாடகாவில் உள்ள கூர்க் என்ற இடத்தை வந்தடைகிறார். கூர்க் மலைப் பிரதேசம் என்பதால் இரவுப் பயணத்தைத் தவிர்பதற்காக வாடகை வீடு ஒன்றில் தங்குகிறார். அங்கு அவருக்கு எல்லா வசதிகளும் கிடைகின்றன.

செரீன் மீண்டும் ஹீரோயினாக நடிக்கும் 'திகில்'

அந்த வீட்டில் ஒரு இடத்தில் துப்பாக்கி மற்றும் பழைய கத்தி இருப்பதை பார்த்து அதிர்ச்சியாகிறார். விடிவதற்கு முன்பு அவர் சந்திக்கும் திகில் அனுபவங்கள்தான் படத்தின் திரைக்கதை. இந்தஅ படத்திற்காக ஒரே இடத்தில் இருபது நாட்கள் இரவு மட்டுமே படப்பிடிப்பை நடத்தினோம். படத்தின் இறுதிக்கட்ட வேலைகள் நடைபெற்றுக் கொண்டிருகின்றன. விரைவில் அனைவருக்கும் ஒரு திகில் அனுபவம் காத்திருக்கிறது," என்றார்.

 

மோக்கியாவுக்காக காத்திருக்கும் மார்க்கெட் இல்லா இளம்ஹீரோயின்கள்

சென்னை: மோக்கியாவின் அழைப்புக்காக மார்க்கெட் இல்லாத இளம் ஹீரோயின்கள் காத்திருக்கிறார்களாம்.

மோக்கியா நகைச்சுவை நடிகர் என்றாலும் படத்தில் அவருக்கு பெரும்பங்கு உள்ளது. படத்தில் தனக்கு ஜோடி வேண்டும் என்று அவர் கேட்கிறாராம். உங்களுக்கு யாரை சார் ஜோடியாக்க என்று கேட்டால் மார்க்கெட் இல்லாமல் இருக்கும் இளம் ஹீரோயின்களின் பெயர்களை தெரிவிக்கிறாராம் மோக்கியா. ஏற்கனவே லவ் நாயகி மோக்கியா ஜோடியாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் தான் நடித்து வரும் ஒரு படத்தில் தனக்கு ஜோடியாக உயர்ந்த நடிகரின் ஜோடியாக நடித்த இரண்டு எழுத்து நடிகையை நடிக்க வைக்குமாறு கூறியுள்ளாராம். மோக்கியா இப்படி மார்க்கெட் இல்லாத இளம் ஹீரோயின்களை தனக்கு ஜோடியாக்குமாறு பரிந்துரைக்கும் செய்தி காத்து வாக்கில் அவர்களுக்கும் சென்றுள்ளது.

இந்த செய்தியை கேட்ட மார்க்கெட் இல்லா இளம் ஹீரோயின்கள் டென்ஷன் ஆகாமல் இதன் மூலம் மீண்டும் மார்க்கெட்டை பெறலாமே என்று நினைக்கிறார்களாம். அதனால் மோக்கியா தனது பெயரை பரிந்துரைத்து அழைக்கக் கூடாதா என்று வழி மேல் விழி வைத்து காத்திருக்கிறார்களாம்.

மோக்கியா நகைச்சுவை தவிர்த்து சோலோ ஹீரோவாகவும் அவ்வப்போது அவதாரம் எடுக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

இளையராஜா என் கடவுள், தலைவன், உயிர், இதயத்துடிப்பு: சொல்வது தனுஷ்

சென்னை: இளையராஜா தான் தனது கடவுள், தலைவன், இசை, உயிர் என்று தனுஷ் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

தனுஷ் தனது மனைவி ஐஸ்வர்யா இயக்கி வரும் வை ராஜா வை படத்தில் ஒரு பாடலை எழுதியுள்ளார். கௌதம் கார்த்திக், ப்ரியா ஆனந்த், டாப்ஸி நடிக்கும் இந்த படத்திற்கு யுவன் ஷங்கரா ராஜா இசைப்பணியை கவனித்துள்ளார். படத்தில் தனுஷ் எழுதிய பாடலை யுவன் இசையில் இளையராஜா பாடியுள்ளார்.

இளையராஜா என் கடவுள், தலைவன், உயிர்: சொல்வது தனுஷுங்கோ!

இந்நிலையில் தனுஷ் ட்விட்டரில் கூறியிருப்பதாவது,

என் கடவுள் !! என் தலைவன் !! என் இசைஞானி !! என் இசை !! என் உத்வேகம் !! என் உயிர் !! என் இதயத்துடிப்பு !! என் இளையராஜா :) என்று தெரிவித்துள்ளார்.

இதை பார்த்த இசைஞானி ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தனுஷின் இந்த திடீர் பாசத்தை பார்த்த பலரும் இது என்ன புது பெர்ஃபாமஷ்ன்ஸ் என்று தெரிவித்துள்ளனர்.

இளையராஜா என் கடவுள், தலைவன், உயிர்: சொல்வது தனுஷுங்கோ!

தனுஷ் தற்போது பாலாஜி மோகன் இயக்கி வரும் மாரி படத்தில் நடித்து வருகிறார். படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு முடிந்து தற்போது இரண்டாம் கட்ட படப்பிடிப்பு நடந்து வருகிறது.

இந்த படத்தின் மூலம் காஜல் அகர்வால் முதன்முறையாக தனுஷுடன் ஜோடி சேர்ந்துள்ளார்.

 

சென்சார் ஆனது லிங்கா... எந்த வெட்டும் இல்லாமல் யு சான்றிதழ்!

சென்னை: ரஜினியின் லிங்கா படம் நேற்று சென்சார் ஆனது. எந்த காட்சியும் நீக்கப்படாமல் சுத்தமான யு சான்று கிடைத்துள்ளது படத்துக்கு.

கேஎஸ் ரவிக்குமார் இயக்கத்தில் ரஜினி இருவேடங்களில் நடிக்க அவருக்கு ஜோடியாக சோனாக்ஷி, அனுஷ்கா நடித்துள்ள லிங்கா படம் வரும் டிசம்பர் 12-ம் தேதி ரஜினி பிறந்த நாளில் திரைக்கு வருகிறது.

சென்சார் ஆனது லிங்கா... எந்த வெட்டும் இல்லாமல் யு சான்றிதழ்!

இந்தப் படத்தை நேற்று சென்சாருக்கு அனுப்பினர். படம் பார்த்த தணிக்கைக் குழுவினர் படத்தின் எந்தக் காட்சிக்கும் ஆட்சேபம் தெரிவிக்காமல் யு சான்றளித்தனர்.

இந்தப் படம் 2 மணி 54 நிமிடங்கள் ஓடுவதாக தகவல்கள் கிடைத்துள்ளன. இது கிட்டத்தட்ட படையப்பா படத்துக்கு சமமான நீளம் என்பது குறிப்பிடத்தக்கது.

லிங்காவுக்கு சென்சார் சான்று கிடைத்துவிட்டதால், ரஜினி பிறந்த நாளன்று படம் வெளியாவது நூறு சதவீதம் உறுதி செய்யப்பட்டுள்ளது.

 

லிங்காவை 32 கோடிக்கு வாங்கியது ஜெயா டிவி.. இந்திய திரையுலகில் புதிய சாதனை!

சென்னை: ரஜினியின் லிங்கா படத்தை ரூ 32 கோடிக்கு வாங்கி அசர வைத்துள்ளது ஜெயா தொலைக்காட்சி.

இந்திய சினிமா வரலாற்றில் எந்தப் படத்தின் தொலைக்காட்சி உரிமைக்கும் இவ்வளவு பெரிய தொகை விலையாகத் தரப்பட்டதில்லை.

லிங்காவை 32 கோடிக்கு வாங்கியது ஜெயா டிவி.. இந்திய திரையுலகில் புதிய சாதனை!

இந்தப் படத்தை வாங்க சன் டிவி பெரும் முயற்சி மேற்கொண்டது. ரூ 28 கோடி வரை தர முன்வந்தது. ஆனாலும் படத்தைத் தராமல் இருந்தனர். இந்த நிலையில் ரூ 32 கோடி கொடுத்து லிங்காவின் தொலைக்காட்சி உரிமையைப் பெற்றுவிட்டது ஜெயா தொலைக்காட்சி.

இந்திய சினிமாவில் இவ்வளவு பெரிய தொகை இதுவரை எந்தப் படத்துக்கும் தரப்பட்டதில்லை. அந்த வகையில் இதுவும் லிங்கா படத்தின் புதிய சாதனையாகும்.

 

பேரரசுவின் 'திகார்' இசை.... சென்னையில் வெளியிடுகிறார் கிரண் பேடி!

பேரரசு இயக்கத்தில் உருவாகியுள்ள திகார் என்ற படத்தின் இசையை இன்று சென்னையில் வெளியிடுகிறார் முன்னாள் காவல்துறை அதிகாரி கிரண்பேடி.

திருப்பாச்சி, சிவகாசி, திருப்பதி உட்பட பல படங்களை இயக்கியவர் பேரரசு. தற்போது இவர் திகார் என்ற படத்தை இயக்கி வருகிறார்.

பேரரசுவின் 'திகார்' இசை.... சென்னையில் வெளியிடுகிறார் கிரண் பேடி!

இப்படத்தில் மலையாள நடிகர் உன்னி முகுந்தன் நாயகனாக நடிக்கிறார். நயாகியாக மும்பை மாடல் அகன்ஷா பூரி அறிமுகமாகிறார். பார்த்திபன் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.

மலையாளத்தில் மம்முட்டி நடித்து மாபெரும் வெற்றிபெற்ற ‘சாம்ராஜ்யம்' படத்தின் கதையின் தொடர்ச்சிதான் இந்தப் படம் என்கிறார்கள்.

சேகர் வி.ஜோசப் ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார் ஷபீர்.

இப்படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடைபெறுகிறது.

விழாவில் முன்னாள் ஐ.பி.எஸ் அதிகாரி கிரண்பேடி இசையை வெளியிட, இந்திய சுதந்திரத்திற்காக போராடிய தியாகச் செம்மல் வா.உ.சிதம்பரம் பிள்ளை அவர்களின் வாரிசு சி.வா.சிதம்பரம் பெற்றுக்கொள்கிறார்.

சென்னை ஆர்கேவி ஸ்டுடியோவில் இன்று பிற்பகல் நடக்கும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க தாம் ஆவலுடன் இருப்பதாக கிரண்பேடி ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

 

நடிகை ஜெனிலியாவுக்கு ஆண் குழந்தை

பிரபல நடிகை ஜெனிலியாவுக்கு மும்பையில் நேற்று ஆண் குழந்தை பிறந்தது.

பாய்ஸ் படத்தில் இயக்குநர் ஷங்கரால் அறிமுகம் செய்யப்பட்டவர் ஜெனிலியா. தொடர்ந்து சச்சின், வேலாயுதம், சந்தோஷ் சுப்பிரமணியம், உத்தமபுத்திரன் ஏராளமான படங்களில் நடித்தார். தெலுங்கிலும் முன்னணி நாயகியாகத் திகழ்ந்தார்.

நடிகை ஜெனிலியாவுக்கு ஆண் குழந்தை

அவருக்கும், மராட்டிய மாநில முன்னாள் முதல்-மந்திரி விலாஸ்ராவ் தேஷ்முக்கின் மகனும், நடிகருமான ரிதேஷ் தேஷ்முக்குக்கும் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.

இந்த ஆண்டு ஜெனிலியா கர்ப்பம் அடைந்தார். நிறைமாத கர்ப்பிணியாக இருந்த அவருக்கு நேற்று ஆண் குழந்தை பிறந்தது. இத்தகவலை ரிதேஷ் தேஷ்முக் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

ஜெனிலியாவும், ரிதேஷும் ‘துஜே மேரி கசம்' படம் மூலமாக இந்தியில் அறிமுகம் ஆனார்கள். அப்போது அவர்களுக்குள் காதல் மலர்ந்தது. தொடர்ந்து நான்கு இந்திப் படங்களில் ஜோடியாக நடித்த பின், பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர்.

 

விஜய்யின் அடுத்த படத்துக்கு ரஷ்யாவில் ட்யூன் போடும் ஜிவி பிரகாஷ்

விஜய்யின் அடுத்த படத்துக்கு ரஷ்யா போய் ட்யூன் போடப் போகிறாராம் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ்குமார்.

தலைவா படத்துக்குப் பிறகு விஜய்யுடன் மீண்டும் இணைகிறார் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ். இது விஜய்ய்யின் 59வது படமாகும். ஜிவி பிரகாஷுக்கு 50 வது படம். அட்லீ இயக்குகிறார்.

விஜய்யின் அடுத்த படத்துக்கு ரஷ்யாவில் ட்யூன் போடும் ஜிவி பிரகாஷ்

எனவே மிகுந்த சிரத்தையெடுத்து இசையமைக்கப் போகிறாராம். இந்தப் படத்துக்கான ட்யூன்களை ரஷ்யாவின் பிரேக் பகுதிக்குப் போய் தங்கி இசையமைக்கப் போகிறாராம் ஜிவி. இந்தத் தகவலை அவரே வெளியிட்டுள்ளார்.

சமீபத்தில்தான் ஒரு விளம்பரப் படத்துக்காக சிம்பொனி இசையமைக்க ஜெர்மனிக்குப் போய் வந்தார் ஜிவி என்பது குறிப்பிடத்தக்கது.

 

திலீப் குமார் நலமுடன் இருக்கிறார் - அமிதாப் பச்சன்

மும்பை: திலீப் குமார் நல்ல ஆரோக்கியத்துடன் உள்ளார் என நடிகர் அமிதாப் பச்சன் தெரிவித்துள்ளார்.

91 வயதாகும் திலீப் குமார், பாலிவுட்டின் மிகப் பெரிய நடிகர். சாதனையாளர். தன்னுடன் கதாநாயகியாக நடித்த சாய்ரா பானுவை திருமணம் செய்து கொண்டார்.

சமீபத்தில், நடிகர் சல்மான் கானின் வளர்ப்பு தங்கையான அர்பிதாவுக்கு மும்பையில் நடைபெற்ற திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் இந்த தம்பதியர் கலந்துக் கொண்டனர்.

திலீப் குமார் நலமுடன் இருக்கிறார்  - அமிதாப் பச்சன்

இந்நிலையில், திலீப் குமார் உடல் நிலை குறித்து மோசமான வதந்திகள் சமூக வலைத்தளங்களில் பரவின. இது அவரது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை அளித்தது.

இதனையடுத்து, அவரது இல்லத்துக்கு ஏராளமான விசாரிப்புகள் குவியத் தொடங்கின. இந்த விவகாரத்துக்கு அமிதாப் பச்சன் தற்போது முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

இது தொடர்பாக தனது ‘ட்விட்டர்' பக்கத்தில், 'யூசுப் சாஹிப் (திலீப் குமாரின் இயற்பெயர்) பற்றி சில அடிப்படையற்ற வதந்திகள் பரப்பப்பட்டு வருகின்றன.

நான் இப்போது தான் சாய்ரா பானுவுடன் தொலைபேசியில் பேசினேன். திலீப் குமார் நலமாக இருப்பதாக அவர் தெரிவித்தார்,' என்று தெரிவித்துள்ளார்.

 

சர்வதேச விழாவில் சாகித்ய அகாடமியின் கவிதை அரங்கம் : கபிலன் வைரமுத்து பங்கேற்பு

வருகிற டிசம்பர் 6ஆம் தேதி கொச்சியில் நடைபெறவிருக்கும் சாகித்ய அகாடமியின் தெற்கு வடகிழக்கு கவிதை விழாவில் கலந்து கொண்டு கவிதை வாசிக்க தமிழகத்தில் இருந்து எழுத்தாளர் கபிலன் வைரமுத்துவும் கவிஞர் ரவி சுப்ரமணியமும் அழைக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிகழ்வில் வடகிழக்கு மாநிலங்களைச் சேர்ந்த இளம் இலக்கியவாதிகளும் அனுபவம் மிக்க எழுத்தாளர்களும் தங்கள் கவிதைகளை மேடையேறிப் பகிர்ந்து கொள்கிறார்கள்.

சர்வதேச விழாவில் சாகித்ய அகாடமியின் கவிதை அரங்கம் : கபிலன் வைரமுத்து பங்கேற்பு

மொழியின் மூலமாக இந்தியாவின் பல்வேறு சமூக பண்பாட்டு உறவுகளைப் பலப்படுத்துவதே இந்த நிகழ்ச்சியின் நோக்கம்.

கொச்சி எர்ணாகுளத்தில் நவம்பர் 29ஆம் தேதி தொடங்கும் சர்வதேச புத்தகத் திருவிழாவின் ஒரு முக்கிய நிகழ்வாக சாகித்ய அகாடமியின் கவிதை அரங்கம் கருதப்படுகிறது.

இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலிருந்து பல்துறை பிரமுகர்கள் கலந்து கொள்கிறார்கள்.

 

அஜீத்தின் 'அந்த' குணம் அப்படியே அனௌஷ்காவுக்கும் உள்ளது: ஷாலினி பெருமிதம்

சென்னை: கணக்கு பார்க்காமல் பிறருக்கு உதவும் அஜீத்தின் குணம் அப்படியே அனௌஷ்காவுக்கும் வந்துள்ளதை நினைத்து பெருமைப்படுகிறேன் என ஷாலினி தெரிவித்துள்ளார்.

கௌதம் மேனன் இயக்கத்தில் அஜீத் குமார் நடித்து வரும் என்னை அறிந்தால் படம் பொங்கலுக்கு ரிலீஸாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அஜீத் படப்பிடிப்பு தளத்தில் உள்ள அனைவரையும் சரிசமமாக பார்ப்பது, அவர்களுடன் அன்பாக பழகுவது தான் பலரையும் அவர் புகழ்பாட வைத்துள்ளது.

அஜீத்தின் 'அந்த' குணம் அப்படியே அனௌஷ்காவுக்கும் உள்ளது: ஷாலினி

அவர் அன்பாக பழகுவதோடு மட்டும் அல்லாமல் பலருக்கு உதவி செய்துள்ளார், செய்தும் வருகிறார். உதவி என்று கேட்டு வருவோருக்கு உதவுவதோடு, யாருக்காவது உதவி தேவைப்படுகிறது என்று அறிந்தால் தானாக சென்று உதவும் குணம் உள்ளவர் அஜீத்.

உதவி செய்யும்போது இது குறித்து வெளியே தெரிவிக்கக் கூடாது என்று அஜீத் அன்புக் கட்டளை இடுவதால் பலர் தெரிவிப்பது இல்லை. சிலர் மனது தாங்காமல் நன்றி உணர்ச்சியில் வெளியே கூறியது தான் நமக்கு தெரியும்.

இந்நிலையில் இது பற்றி ஷாலினி பிரபல பத்திரிக்கைக்கு அளித்த பேட்டியின்போது கூறுகையில்,

பிறருக்கு உதவி செய்வது என்றால் அஜீத் கணக்கே பார்க்க மாட்டார். அவரின் அந்த குணம் எங்கள் மகள் அனௌஷ்காவுக்கும் அப்படியே உள்ளதை நினைத்து நான் பெருமைப்படுகிறேன் என்று தெரிவித்துள்ளார்.