தைரியம் இருந்தா பெயரோடு திட்டி எழுதுங்க பார்ப்போம்! - நடிகர் சங்கம்

தைரியம் இருந்தா பெயரோடு திட்டி எழுதுங்க பார்ப்போம்! - நடிகர் சங்கம்

தமிழ் சினிமா நடிகர் நடிகைகளை அசிங்கமாகத் திட்டி மிரட்டல் கடிதம் எழுதுவோருக்கு நடிகர் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.

தைரியம் இருந்தா சொந்தப் பெயரைப் போட்டு திட்டி எழுத முடியுமா என கேள்வி எழுப்பியுள்ளது.

இதுகுறித்து நடிகர் சங்க தலைவர் சரத்குமார், பொதுச் செயலாளர் ராதாரவி, பொருளாளர் சந்திரசேகர் ஆகியோர் கூட்டாக வெளியிட்ட அறிக்கை:

நடிகர் சங்கத்தின் மூத்த உறுப்பினரான சிவகுமார் மற்றும் நாசர், விஷால், சந்தானம் ஆகியோருக்கு மிரட்டல் கடிதங்கள் வந்துள்ளதாக பத்திரிகை செய்தி மூலம் அறிந்து மிகவும் அதிர்ச்சியுற்றோம்.

கடந்த 31.1.2014 அன்று நடந்த சங்க செயற்குழுவில், சங்கத்திற்கு உறுப்பினர்களை தாக்கி வந்த மிரட்டல் கடிதங்கள் பற்றி விவாதித்து கண்டனம் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

நடிகர் சங்க உறுப்பினர்களின் நலனிலும் நல்வாழ்விலும் அக்கறை கொண்டுள்ள சங்க நிர்வாகம் இம்மாதிரி கோழைத்தனத்துடன் நம் சங்க உறுப்பினர்களுக்கு மிரட்டல் கடிதம் எழுதுபவர்களை கண்டிக்கிறோம். அந்த கடிதத்தை சங்க உறுப்பினர்கள் எழுதுவது போல் எழுதி உள்ளனர். இது கண்டிக்கத்தக்கது.

எந்த உறுப்பினருக்கும் பாதிப்பையும், மன உளைச்சலையும் ஏற்படுத்தும் செயல்களை சங்க நிர்வாகம் பொறுத்துக் கொள்ளாது. கடிதம் எழுதியவர்கள் தைரியம் இருந்தால் தங்கள் பெயர்களை போட்டு கடிதம் எழுதி இருக்க வேண்டும். மிரட்டடல் கடிதம் எழுதியவர்கள் முகத்திரையை கிழிப்போம். அதற்காக காவல்துறை உதவியை நாட உள்ளோம்.

இவ்வாறு அறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

 

புலிவால் படத்துக்கு தடை இல்லை.. தாராளமா வெளியிடலாம்!- உயர்நீதிமன்றம்

சென்னை: புலிவால் படத்தை இன்று அறிவித்தபடி வெளியிட்டுக் கொள்ளலாம்.. தடை ஏதுமில்லை என்று சென்னை உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது.

விமல், பிரசன்னா, அனன்யா, ஓவியா நடித்த படம் புலிவால். ஜி.மாரிமுத்து இயக்கியுள்ளார். ராதிகா சரத்குமார், லிஸ்டின் ஸ்டீபன் தயாரித்துள்ளனர். இப்படம் இன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது,

புலிவால் படத்துக்கு தடை இல்லை.. தாராளமா வெளியிடலாம்!- உயர்நீதிமன்றம்

(புலிவால் படங்கள்)

இதற்கிடையில் புலிவால் படத்துக்கு தடை விதிக்க கோரி கிரிபுஜா பட நிறுவனம் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. தனது வழக்கு மனுவில், " விடியல்' என்ற படத்தை தயாரிக்க நடிகர் சரத்குமாரின் ஆர்.ஆர்.மூவிஸ் நிறுவனத்துடன் கடந்த 2010ல் ஒப்பந்தம் போட்டோம். இதற்காக முன்பணமும் வழங்கப்பட்டது.

ஆனால் எங்கள் படத்தை எடுக்காமல் ‘சென்னையில் ஒரு நாள்' என்ற படத்தை எடுத்து வெளியிட்டனர். அதன் பிறகும் எங்கள் படத்தை எடுக்காமல் ‘புலிவால்' என்ற படத்தை எடுத்துள்ளனர். எனவே இந்த படத்துக்கு தடை விதிக்க வேண்டும்," என்று குறிப்பிட்டிருந்தனது கிரிபுஜா பிலிம்ஸ்.

புலிவால் படத்துக்கு தடை இல்லை.. தாராளமா வெளியிடலாம்!- உயர்நீதிமன்றம்

இந்த வழக்கு நீதிபதி ராமநாதன் முன்பு விசாரணைக்கு வந்தது. சரத்குமார் பதில் மனுதாக்கல் செய்தார். இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி ‘புலிவால்' படத்துக்கு தடை கேட்ட மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

 

இளையராஜாவை நேரில் சந்தித்த இயக்குநர் மகேந்திரன்

இசைஞானி இளையராஜாவை நேரில் சந்தித்தார் பிரபல இயக்குநர் மகேந்திரன் மற்றும் அவரது மகனும் இயக்குநருமான ஜான் மகேந்திரன்.

இயக்குநர் மகேந்திரனும் இளையராஜாவும் இணைந்து பணியாற்றிய படங்கள் தமிழ் சினிமாவின் குறிஞ்சி மலர்களாக மணம் வீசிக் கொண்டிருக்கின்றன.

மகேந்திரன் இயக்கிய சாசனம் தவிர மீதி எல்லாப் படங்களுக்கும் ராஜாதான் இசையமைத்துள்ளார்.

இளையராஜாவை நேரில் சந்தித்த இயக்குநர் மகேந்திரன்

சாசனம் படத்துக்குப் பிறகு பல ஆண்டுகள் எந்தப் படத்தையும் இயக்கவில்லை மகேந்திரன். இப்போது புதிய படம் ஒன்றை இயக்கும் முயற்சியில் உள்ளார்.

இந்த நிலையில் சமீபத்தில் இயக்குநர் பாலாவின் புதிய படத்துக்கான இசைக் கோர்ப்புப் பணிகளில் பிஸியாக உள்ளார் இளையராஜா.

இளையராஜாவை நேரில் சந்தித்த இயக்குநர் மகேந்திரன்

அவரை தன் மகனுடன் சென்று பிரசாத் ஒளிப்பதிவு கூடத்தில் நேரில் சந்தித்தார் இயக்குநர் மகேந்திரன். அவரை இயக்குநர் பாலாவும் கவிஞர் நா முத்துக்குமாரும் வரவேற்று அழைத்துச் சென்னர்.

ஒலிப்பதிவுக் கூடத்தில் அமர்ந்து ராஜாவின் இசைக் கோர்ப்பை ரசித்த மகேந்திரன், பாலா படத்துக்கு ராஜா இசையமைத்த சில புதிய பாடல்களைக் கேட்டு ரசித்தார். இருவரும் சில நிமிடங்கள் தங்களின் அடுத்த படங்கள் குறித்து பேசிக் கொண்டிருந்தனர்.

மகேந்திரன் இயக்கவிருக்கும் புதிய படத்துக்கும் ராஜாதான் இசையமைக்கிறார் என்ற பேச்சுகள் கிளம்பியுள்ளன.

இளையராஜாவை நேரில் சந்தித்த இயக்குநர் மகேந்திரன்
 

சமுத்திரக்கனி இயக்கத்தில் நடித்த அமலா, அடுத்து அவருடன் ஜோடி சேர்கிறார்!

'நிமிர்ந்து நில்' படத்தில் சமுத்திரக்கனி இயக்கத்தில் நடித்த அமலா பால், அடுத்து சமுத்திரக்கனி தயாரித்து நடிக்கும் படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்கிறார்.

சமுத்திரக்கனி இயக்கத்தில் ஜெயம் ரவி, அமலா பால் நடித்திருக்கும் 'நிமிர்ந்து நில்' படத்தின் இறுதிகட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

சமுத்திரக்கனி இயக்கத்தில் நடித்த அமலா, அடுத்து அவருடன் ஜோடி சேர்கிறார்!

சென்சார் முடிந்தவுடன் படத்தின் வெளியீட்டு தேதியினை அறிவிக்க இருக்கிறார்கள். படத்தை இம்மாதமே வெளியிட திட்டமிட்டுள்ளனர். அநேகமாக பிப்ரவரி 28 வெளியாகும் எனத் தெரிகிறது.

'நிமிர்ந்து நில்' படத்தைத் தொடர்ந்து சமுத்திரக்கனி ஒரு படத்தை தயாரித்து, நடிக்கவிருக்கிறார். 'கீதாரி' என்ற பெயரில்தான் உருவாக்கி வைத்திருக்கும் திகில் கதையை சொந்தமாக தயாரிக்கிறார் சமுத்திரகனி. சமூக சிந்தனை கருத்துக்களை சொல்லும் கதையாம் இது.

இப்படத்தில் நாயகியாக நடிக்கவிருக்கிறார் அமலாபால். சமுத்திரக்கனி, அமலா பால் ஆகியோரோடு கிஷோர் இப்படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். திகில் பின்னணியில் இப்படத்தின் கதை, திரைக்கதை அமைந்து இருக்கிறது. ஒரே கட்டமாக இப்படத்தின் மொத்த படப்பிடிப்பையும் முடிக்க திட்டமிட்டுள்ளனர்.

படத்தை சமுத்திரக்கனியே இயக்குகிறாரா... வேறு யாரையாவது வைத்து இயக்குகிறாரா என்பது இன்னும் முடிவாகவில்லை.

 

சிக்கலில் சீயான் படம்?

மெகா இயக்குநர், மெகா இயக்குநர், சிறந்த நடிகர் மூவரும் சேர்ந்திருக்கும் இரண்டாவது படம் அது.

கிட்டத்தட்ட படப்பிடிப்பு முடிந்து, பின் தயாரிப்புப் பணிகள் ஆரம்பிக்க வேண்டிய நேரத்தில், படம் சிக்கலில் சிக்கித் தவிக்கிறது.

காரணம்... வேறு யாருமில்லை. படத்தின் நாயகனேதானாம்.

படத்தின் பட்ஜெட் நூறு கோடிகளை விழுங்கி, மேலும் கேட்டு நிற்கும் தருணம் இது. இருப்பதையெல்லாம் பீறாய்ந்து படத்துக்கு முதலீடு செய்து வருகிறார் தயாரிப்பாளர். சொன்ன தேதியில் படத்தை வெளியிட்டே பழக்கப்பட்ட அவர், இரு படங்களை சொல்லாமல் கொள்ளாமல் ஒத்திப் போட்டுவிட்டார்.

இதை உணர்ந்த இயக்குநர் தன் சம்பளம் பற்றிக் கூட கவலைப்படாமல், சொந்தக் காசையும் கடனாகக் கொடுத்துள்ளாராம். 'நான்தான் படம் தயாரிப்பதை தற்காலிகமாக நிறுத்தியிருக்கிறேன். எனவே அந்தப் பணம் உங்களுப் பயன்படட்டும்' என்று கூறிவிட்டாராம்.

இப்படியொரு சூழலில், எனக்கு சம்பளத்தை எடுத்து வையுங்க என முரட்டுப் பிடிவாதம் காட்டுகிறாராம் ஹீரோ..

முதல் முறையாக அவரைப் பற்றி இப்படியொரு செய்தி வருவதால், நம்புவதா வேண்டாமா என யோசிக்கிறார்கள் மீடியாக்காரர்கள்.

 

ப்ரியா ஆனந்துக்குப் பிடித்த 'பாணா காத்தாடி'!

வளரும் நடிகர்கள் காதல் கிசுகிசுக்களில் சிக்காமல் இருந்தால்தானே ஆச்சர்யம்...

மறைந்த முரளியின் மகனும் பாணா காத்தாடி மூலம் அறிமுகமாகி, பரதேசியில் நல்ல நடிகராக பெயர் வாங்கியவருமான அதர்வா மட்டும் விலக்காக இருக்க முடியுமா...

அவருக்கும் காதல் பூத்திருக்கிறது, உடன் நடிக்கும் முன்னணி நாயகி ப்ரியா ஆனந்த் மீது.

இருவரும் இரும்புக் குதிரை படத்தில் நடித்தபோது காதல் பற்றிக் கொண்டதாம்.

ப்ரியா ஆனந்துக்குப் பிடித்த 'பாணா காத்தாடி'!

படப்பிடிப்பில் இருக்கும் நேரங்களைவிட, கூடிப் பேசி மகிழும் நேரங்கள்தான் அதிகமாம் இருவருக்கும்.

யூனிட் ஆட்களே பரப்பி வரும் இந்த பரபர கிசுகிசு குறித்து பிரியா ஆனந்திடம் கேட்டால், அட விடுங்க... என்பதுபோலப் பார்க்கிறார்.

ப்ரியா ஆனந்துக்குப் பிடித்த 'பாணா காத்தாடி'!

"அதர்வாவும் நானும் சினிமாவில் வளர்ந்து கொண்டிருக்கிற நட்சத்திரங்கள். எங்கள் நிலை உணர்ந்து நடக்கிறோம். படப்பிடிப்பில் கதைக்கு தேவையாக இருந்ததால் நெருக்கம் காட்டினோம். இதை வைத்து காதல் என்றால் எப்படி?

எங்களுக்குள் அப்படி எதுவும் இல்லை. நல்ல நண்பர்களாகவே பழகி வருகிறோம்," என்றார்.

நல்லாருந்தா சரி!