துபாய்: துபாயில் நடந்த விருது வழங்கும் விழா ஒன்றில் ஷாருக்கான் தனது சென்னை எக்ஸ்பிரஸ் படத்தில் வரும் லுங்கி டான்ஸ் பாடலுக்கு மலையாள சூப்பர்ஸ்டார்களான மோகன்லால் மற்றும் மம்மூட்டியுடன் சேர்ந்து ஆடினார்.
ஷாருக்கான் நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட்டான படம் சென்னை எக்ஸ்பிரஸ். இந்த படத்தில் ரஜினிகாந்துக்கு அர்ப்பணிப்பதாகக் கூறி லுங்கி டான்ஸ் என்ற பாடலை வைத்தனர். அந்த பாடல் தமிழக ரசிகர்களை கடுப்பேத்தினாலும் ஹிட்டும் ஆனது.
இந்நிலையில் துபாயில் விருது வழங்கும் விழா ஒன்று நடந்தது. இதில் ஷாருக்கான் லுங்கி டான்ஸ் பாடலுக்கு மலையாள சூப்பர்ஸ்டார்களான மோகன்லால் மற்றும் மம்மூட்டியுடன் சேர்ந்து ஆடினார்.
மோகன்லால் மற்றும் மம்மூட்டியும் லுங்கி அணிந்து மேடையில் ஆடினர்.
இது குறித்து ஷாருக்கான் ட்விட்டரில் கூறியிருப்பதாவது,
மம்மூட்டி மற்றும் மோகன்லால் சார் அதிக அன்பை அளித்தார்கள். நான் நடிகனாக காரணமாக இருந்த நடிகர்களிடம் இருந்து அன்பை பெற்றதை நினைக்கையில் அழுகை வருகிறது என்று தெரிவித்துள்ளார்.