அகி மியூசிக் மோசடி... சிடிக்கள் வாங்க வேண்டாம்! - ரசிகர்களுக்கு இளையராஜா வேண்டுகோள்

சமீபத்தில் இளையராவின் பாடல்களை முறைகேடாக பயன் படுத்திவந்த மலேசியாவை சேர்ந்த அகி மியூசிக் நிறுவனத்தின் அகிலன் லட்சுமணன் உட்பட இன்னும் சில நிறுவனத்திற்கும் சென்னை உயர் நீதி மன்றம் தடை உத்தரவு பிறப்பித்தது.

அந்த செய்தி சில நாட்களுக்கு முன் பத்திரிகைகளில் வெளி வந்தது நினைவிருக்கலாம். ஆனாலும் நீதி மன்ற உத்தரவை மதிக்காமல் பல்வேறு வழிகளில் இளையராஜாவின் பாடல்களை விற்று வருவதாகத் தெரிகிறது.

இளையராஜாவை ஏமாற்றும் நோக்கத்துடன் தொடர்ந்து சட்ட விரோதமாக செயல்பட்டு எல்லோரையும் மோசடி செய்து வரும் அகி நிறுவனத்தின் அகிலன் லட்சுமணன் மோசடிக்கு தன் ரசிகர்கள் பலியாகக் கூடாது என்று ரசிககர்களுக்கு இளையராஜா வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.

அகி மியூசிக் மோசடி... சிடிக்கள் வாங்க வேண்டாம்! - ரசிகர்களுக்கு இளையராஜா வேண்டுகோள்

அவர் விடுத்துள்ள அறிக்கையில், "உலகம் முழுதும் வசித்து வரும் அன்பான என் ரசிகர்களே, நான் இசைமைத்த பலவேறு படங்களின் பாடல்களை மலேசியாவை சேர்ந்த அகி மியூசிக் நிறுவனத்தின் அகிலன் லட்சுமணன் என் அனுமதி இல்லாமல் முறைகேடாக விற்பனை செய்து வருகி்றார்கள்.

இப்படி பல ஆண்டுகளாக விற்று வரும் அகி நிறுவனம் எனக்கு சேர வேண்டிய ராயல்டியையும் கொடுக்காமல் ஏமாற்றி வருகிறது. இதனால் எனக்கு பெரிய அளவில் பொருள் இழப்பு ஏற்பட்டுள்ளது.

நீதிமன்றம் அகிலன் லட்சுமணன் நிறுவனத்திற்கு தடை உத்தரவு போட்டிருக்கிறது. ஆனாலும் தொடர்ந்து பாடல்களை விற்பனை செய்து வருவதாக அறிகிறேன்.

அகி மியூசிக் மோசடி... சிடிக்கள் வாங்க வேண்டாம்! - ரசிகர்களுக்கு இளையராஜா வேண்டுகோள்

அதனால் ரசிகர்கள் யாரும் அகி மியூசிக் உள்ளிட்ட நிறுவனங்கள் விற்பனை செய்யும் என் பாடல்களின் சிடிகளை வாங்க வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன். எனது பாடல்களின் அதிகாரப்பூர்வ விற்பனை நிறுவனம் குறித்து விரைவில் அறிவிக்கிறேன். அதுவரை ஐட்யூனிலும் எனது பாடல்கள் எதையும் தரவிறக்கம் (Download) செய்ய வேண்டாம் என்று அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்."

-இவ்வாறு அந்த அறிக்கையில் தன் ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்திருக்கிறார் இளையராஜா.

"இளையராஜாவிற்கு சொந்தமான இசையை தனக்குதான் சொந்தம் என்று வெற்று வாதம் செய்யும் அகிலன் லட்சுமணனின் கனவு ஒரு நாளும் பலிக்காது. அவரது இசை உல்கம் முழுதும் உள்ள இசை ரசிகர்களுக்கே சொந்தமானது" என்று இசைஞானி ஃபேன்ஸ் கிளப் துணைத் தலைவர் ஆல்பர்ட் ஜேம்ஸ் தெரிவித்துள்ளார்.

 

கத்தி பிரச்சினை இன்று சுமூகமாக முடியும்.. திட்டமிட்டபடி தீபாவளியன்று ரிலீஸ்! - லைகா நிறுவனம்

கத்தி ரிலீஸ் பிரச்சினை இன்று சுமூகமாக முடியும் என லைகா நிறுவனம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.

லைகா நிறுவனத்தின் கத்தி படத்தை தீபாவளிக்கு வெளியிடுவதை தமிழ் அமைப்புகள், திருமாவளவன் மற்றும் மாணவர் அமைப்புகள் எதிர்த்து வருகின்றன.

படம் வெளியாகும் தியேட்டர்கள் அறிவிக்கப்பட்டு, முன்பதிவு தேதியும் வெளியான நிலையில், எதிர்ப்பு நிலையிலிருந்து போராட்டக்காரர்கள் பின்வாங்கவில்லை.

கத்தி பிரச்சினை இன்று சுமூகமாக முடியும்.. திட்டமிட்டபடி தீபாவளியன்று ரிலீஸ்! - லைகா நிறுவனம்

இந்த நிலையில் படத்தை சுமுகமாக வெளியிட, தயாரிப்பாளர்களில் ஒருவரான அய்ங்கரன் கருணாமூர்த்தியுடன் கடந்த இரு தினங்களாக சென்னை போலீஸ் கமிஷனர் பேச்சு நடத்தி வருகிறார்.

இதுகுறித்து லைகா நிறுவனத் தரப்பில் விசாரித்தபோது, 'படம் நிச்சயம் வெளியாகிறது. அதில் எந்த மாற்றமும் இல்லை. இன்று அனைத்து விஷயங்களும் சுமூகமாக முடிந்துவிடும். ரிசர்வேஷன் விரைவில் தொடங்கும்,' என்று தெரிவித்தனர்.

தமிழகம் முழுவதும் 400 அரங்குகளில் கத்தி வெளியாகிறது.

வெளி மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளிலும் அதிக அரங்குகளில் படம் வெளியாகிறுது. அதற்கான பிரதிகள் நேற்று மாலையே அனுப்பப்பட்டுவிட்டது குறிப்பிடத்தக்கது.

 

நவம்பர் 7-ம் தேதி காவியத் தலைவன்

வசந்த பாலன் இயக்கத்தில், ஏ ஆர் ரஹ்மான் இசையில் உருவாகியுள்ள ‘காவியத் தலைவன்' படம் வரும் நவம்பர் 7-ம் தேதி வெளியாகிறது.

கடந்த ஆகஸ்ட் மாதமே வெளியாகவிருந்த படம் இது. ஆனால், ஒருசில காரணங்களால் படத்தின் ரிலீஸ் தேதியை ஒத்தி வைக்கப்பட்டது.

படம் வெளியாகும் தேதி உறுதியான நிலையில், இப்படத்தின் டிரைலரை தீபாவளிக்கு வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். ஏற்கெனவே, இப்படத்தின் டீசரும், பாடல்களும் வெளியாகிவிட்டன.

நவம்பர் 7-ம் தேதி காவியத் தலைவன்

20-ம் நூற்றாண்டில் வாழ்ந்த சினிமா, நாடக நடிகர்களை மையப்படுத்தி உருவாக்கப்பட்டு இப்படத்தில் சித்தார்த், பிருத்விராஜ், வேதிகா உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.

சித்தார்த் இந்த படத்தில் தலைவன்கோட்டை காளியப்ப பாகவதர் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். பிரித்விராஜ் மேலச்சிவல்பெரி கோமதி நாயகம் பிள்ளை என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார். ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார்.

இந்நிலையில், இப்படத்தை வருகிற நவம்பர் மாதம் 7-ந் தேதி வெளியிடத் திட்டமிட்டுள்ளனர். அன்றைய தேதியில், விமல் நடிப்பில் உருவாகியுள்ள ‘ஒரு ஊர்ல ரெண்டு ராஜா' படமும் வெளியாகவிருக்கிறது.

 

கொட்டும் மழையிலும் 'பூஜை'-க்கு நல்ல அட்வான்ஸ் புக்கிங்!

சென்னை: அடாத மழையையும் பொருட்படுத்தாது, தீபாவளிப் படமான விஷாலின் பூஜைக்கு டிக்கெட் முன்பதிவு செய்து வருகின்றனர் ரசிகர்கள்.

விஷால் - ஸ்ருதி ஹாஸன் நடிக்க, ஹரி இயக்கியுள்ள படம் பூஜை. தீபாவளியன்று இந்தப் படம் பிரமாண்டமாக ரிலீசாகிறது.

கொட்டும் மழையிலும் 'பூஜை'-க்கு நல்ல அட்வான்ஸ் புக்கிங்!

தமிழகத்தில் மட்டும் 350க்கும் மேற்பட்ட அரங்குகள் இந்தப் படத்துக்கென ஒதுக்கப்பட்டுள்ளன. விஷால் தயாரித்துள்ள இந்தப் படத்தை, வேந்தர் மூவீஸ் வெளியிடுகிறது.

இந்தப் படத்துக்கான கட்டண முன்பதிவு நேற்று தொடங்கியது. சத்யம் அரங்கில் மட்டும் இன்று ஆரம்பமானது.

சென்னையிலும் பிற பகுதிகளிலும் கடும் மழை தொடர்ந்து பெய்த போதிலும், மழையைப் பொருட்படுத்தாமல் ஏராளமான ரசிகர்கள் பூஜை படத்துக்கு முன்பதிவு செய்தனர்.

படம் குறித்து ரசிகர்கள் மத்தியில் நல்ல பேச்சு பரவி வருவதால், இன்றும் நாளையும் முன்பதிவு இன்னும் விறுவிறுப்பாக இருக்கும் என தியேட்டர் உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

 

டப்பிங் சீரியல்களால் தமிழக நடிகர்களுக்கு வேலையில்லை: நளினி

சென்னை: தமிழ் டிவி சேனல்களில் டப்பிங் சீரியல்களை ஒளிபரப்புவதால் தமிழ் நடிகர்களுக்கு வேலையில்லாமல் போய்விடுகிறது. எனவே டப்பிங் சீரியல்கள் ஒளிபரப்புவதை கட்டுப்படுத்த திட்டமிட்டுள்ளேன் என்று சின்னத்திரை நடிகர் சங்கத்தலைவி நடிகை நளினி கூறியுள்ளார்.

சமீபத்தில் நடந்த சின்னத்திரை நடிகர்கள் சங்கத் தேர்தலில் நளினி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். தனது பதவி காலத்தில் பல நல்ல திட்டங்களை செயல்படுத்த அவர் முடிவு செய்திருக்கிறார்.

டப்பிங் சீரியல்களால் தமிழக நடிகர்களுக்கு வேலையில்லை: நளினி

இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது:

பெண் உறுப்பினர்கள் அதிகம்

சின்னதிரை நடிகர்கள் சங்கத்தில் பெண்கள்தான் அதிக அளவில் உறுப்பினர்களாக இருக்கிறார்கள். அதனால் ஒரு பெண் தலைவராக வந்தால் நன்றாக இருக்கும் என்று என்னை தேர்வு செய்திருக்கிறார்கள்.

சொந்த கட்டிடம்

நானும் என்னால் முடிந்த பல திட்டங்களை செயல்படுத்த இருக்கிறேன்.சங்கத்திற்கென்று சொந்த கட்டிடம் வாங்க முயற்சிப்பேன். இதற்கு எப்படி நிதி திரட்டலாம் என்று யோசித்து வருகிறேன்.

டப்பிங் சீரியல்கள்

எங்கள் சங்க உறுப்பினர்கள் பலர் வேலையின்றி இருக்கிறார்கள்.

இந்த நிலையில் பல சேனல்கள் இந்தி, கொரியன், ஜப்பானிய சீரியல்களை டப் செய்து ஒளிபரப்புகிறது. இதனால் எங்கள் வேலை வாய்ப்பு பறிபோகிறது.

ஒன்றரை ஷிப்ட்

இது குறித்து சேனல்களுடன் பேச இருக்கிறேன். காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை வேலை செய்தால் ஒண்ணறை நாள் கால்ஷீட்டாக கணக்கில் கொள்ள வேண்டும் என்ற தயாரிப்பாளர்களை வற்புறுத்த இருக்கிறேன் என்றார் நளினி.

 

கோவா இந்தியன் பனோரமாவில் திரையிட 'குற்றம் கடிதல்'படம் தேர்வு

கோவா: கோவாவில் நடைபெறும் இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் ‘இந்தியன் பனோரமா' பிரிவில் திரையிட, தமிழில் இருந்து 'குற்றம் கடிதல்' திரைப்படம் தேர்வாகியுள்ளது.

45வது இந்திய சர்வதேச திரைப்பட விழா கோவாவில் வரும் நவம்பர் 20-ம் தேதி முதல் 30-ம் தேதி வரை நடைபெற இருக்கிறது. வருடந்தோறும் நடைபெறும் இத் திரைப்பட விழாவில் இந்தியாவில் அனைத்து மொழிகளிலும் தயாரிக்கப்பட்ட படங்களில் சிறந்தவைகள் தேர்வு செய்யப்பட்டு இந்தியன் பனோரமா என்கிற பிரிவில் திரையிடப்படும்.

அதன்படி இந்தாண்டு இந்தியன் பனோரமா பிரிவில் திரையிடுவதற்காக 181 படங்கள் கலந்து கொண்டன. அவற்றில் 26 படங்கள் திரையிடத் தேர்வு செய்யப்பட்டன, அதில் தேர்வாகியுள்ள ஒரே தமிழ்ப் படம் ‘குற்றம் கடிதல்' மட்டுமே. பிரம்மா. ஜி இப்படத்தை இயக்கியுள்ளார். ஜே.எஸ்.கே நிறுவனம் தயாரித்துள்ளது.

கோவா இந்தியன் பனோரமாவில் திரையிட 'குற்றம் கடிதல்'படம் தேர்வு

தங்கமீன்கள்

கடந்த வருடம் தேர்வான 'தங்க மீன்கள்' படமும் இதே ஜே.எஸ்.கே நிறுவனம் தயாரித்த படம் தான் என்பது குறிப்பிடத்தக்கது.

அனைவருக்கும் சமர்பணம்

இது குறித்து படத்தின் தயாரிப்பாளர் ஜேஎஸ்கே. சதீஷ்குமார் கூறியதாவது, "தமிழில் நல்ல படங்கள் வெளிவர வேண்டும் என நினைக்கும் பலருக்கும் இந்த கௌரவத்தை சமர்ப்பிக்கிறேன். இது மேலும் பல திறமைகளை ஊக்குவிக்கவும், உருவாக்கவும் உத்வேகத்தைக் கொடுக்கும்," என தெரிவித்துள்ளார்.

அளவில்லாத மகிழ்ச்சி

"ரொம்ப சந்தோஷமா இருக்கேன். தமிழ் திரையுலகில் இருந்து தேர்வாகி இருக்கும் ஒரே திரைப்படம், அதுவும் நான் தயாரித்திருக்கிறேன் என்ற போது எனது சந்தோஷத்திற்கு அளவே இல்லை.

திரில்லர் படம்

'குற்றம் கடிதல்' படத்தைப் பொறுத்தவரை எனது பெயரைத் தவிர மற்ற பெயர்கள் அனைத்துமே புதுசு. திரைப்பட விழாவில் திரையிடுகிற படம் என்றவுடன், திரைக்கதை ரொம்ப மெதுவாக இருக்கும் என்று நினைக்காதீர்கள். த்ரில்லர் வகை படம் தான் 'குற்றம் கடிதல்'.

நல்ல கதைகளில் கவனம்

கடந்த ஆண்டு 'தங்க மீன்கள்', இந்தாண்டு 'குற்றம் கடிதல்' இப்படி எனது தயாரிப்பு படங்கள் தேர்வாவதைப் பார்க்கும் போது தொடர்ச்சியாக நல்ல கதைகளில் கவனம் செலுத்தி வருகிறேன் என்ற நம்பிக்கை பிறக்கிறது"என்றார்.

குழந்தைகளின் வாழ்க்கை

குழந்தைகளின் வாழ்க்கையை மையமாக வைத்து தயாராகியுள்ள புதிய படம் ‘குற்றம் கடிதல்'. குழந்தைகளை குற்றவாளிகளாக அறிவித்து அவர்களின் வாழ்க்கையை நசுக்கிற கொடுமையை சொல்லும் படமாக உருவாகியுள்ள இப்படத்தில் அஜய், பிரசித்ரா, சாய் ஆகிய குழந்தைகள் நடித்துள்ளனர். ஜி.பிரம்மா என்பவர் இயக்கியிருக்கிறார். எஸ்.மணிகண்டன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இப்படத்திற்கு சங்கர் ரங்கராஜன் இசையமைத்துள்ளார்.

சர்வதேச திரைப்பட விழாக்களில்

இந்தப் படம் ஏற்கனவே ஜிம்பாம்வேயில் நடைபெற்ற சர்வதேச திரைப்படவிழாவில் திரையிடப்பட்டுள்ளது. தற்போது கோவாவில் நடைபெறும் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

 

விஜய் டிவியில் தலை தீபாவளி கொண்டாடும் கல்யாணி!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் நடித்த நடிகை கல்யாணிக்கு சமீபத்தில் திருமணமானது. இது அவருக்கு தலைதீபாவளி. அதேபோல தொகுப்பாளின் ரம்யா, டிடி ஆகியோருக்கும் இந்த தீபாவளிதான் தலைதீபாவளி.

தனது தலைதீபாவளியை விஜய் டிவியில் கொண்டாடுகிறார் நடிகை கல்யாணி. அக்டோபர் 22, புதன் கிழமை, தீபாவளி தினத்தன்று விஜய் டிவியில் ஒளிபரப்பாக உள்ள சிறப்பு நிகழ்ச்சிகள் மற்றும் சிறப்புத் திரைப்படங்களைப் பற்றிய விபரம்.

சிவகுமார் சொற்பொழிவு

காலை 7 மணிக்கு இன்றைய இளைஞர்கள் எதிர் கொள்ளும் பிரச்சனைகள் பற்றி பேசுகிறார் நடிகர் சிவகுமார்.

பிரியாமணி

நடிகை ப்ரியா மணி அவருடைய அம்மாவுடனும், நடிகை விஜயலட்சுமி அவருடைய அம்மாவுடனும் கலந்து கொள்ளும் மாறுபட்ட நிகழ்ச்சி...

விஜய் ஸ்டார்ஸ்

விஜய் டிவியின் பிரபல நட்சத்திரங்களான திவ்யதர்ஷினி, பாவ்னா, கோபி, குயிலி, செஃப் தாமு, தாடி பாலாஜி, கல்யாணி, ரிஷிகேஷ், ஸ்டாலின், ரம்யா, மகேஸ்வரி, சூப்பர் சிங்கர் ஜூனியர் 4 குழுவினர், ஜோடி குழுவினர், அது இது எது குழுவினர் ஆகியோர் பங்கு பெறும் கலகலப்பான நிகழ்ச்சி விஜய் ஸ்டார்ஸ்.

மான் கராத்தே

திருக்குமரன் இயக்கத்தில் அனிருத் இசையமைப்பில் சிவகார்த்திகேயன், ஹன்சிகா, சதீஷ், வம்சி கிருஷ்ணா மற்றும் பலர் நடித்து வெளியான புத்தம் புதிய திரைப்படம் மான் கராத்தே காலை 11 மணிக்கு ஒளிபரப்பாக உள்ளது.

விஜய் டிவியில் தலை தீபாவளி கொண்டாடும் கல்யாணி!

நான் சிகப்பு மனிதன்

திரு இயக்கத்தில் ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைப்பில் விஷால், லட்சுமி மேனன், இனியா மற்றும் பலர் நடித்து வெளிவந்த புத்தம் புதிய திரைப்படம். நான் சிகப்பு மனிதன் மேட்னிக்கு ஒளிபரப்பாகிறது.

காபி வித் டிடி

சிறப்பு காபி வித் டிடியில்‘பூஜை' படத்தின் நாயகன் விஷால், நாயகி ஸ்ருதிஹாசன் இருவரும் சிறப்பு விருந்தினர்களாகப் பங்கு பெறுகிறார்கள். பூஜை பட அனுபவங்களைப் பற்றியும் சிறப்பு காபி வித் டிடியில் பகிர்ந்து கொள்கிறார்கள்.

ராஜா ராணி

ஆர்யா, நயன்தாரா, ஜெய், நஸ்ரியா, சத்யராஜ், சத்யன் மற்றும் பலர் நடித்துள்ள ராஜா ராணி மாலை 6.30 மணிக்கு ஒளிபரப்பாகிறது. அட்லீ இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்திருக்கிறார்.

விஜய் டிவியில் தலை தீபாவளி கொண்டாடும் கல்யாணி!

தலை தீபாவளி

விஜய் டிவியின் நட்சத்திரங்களான சித்தார்த், கல்யாணி, ‘சால்சா' மணி ஆகியோரின் திருமணம் சமீபத்தில் நடைபெற்றது. அவர்களது தலை தீபாவளிக் கொண்டாட்டத்தை விஜய் டிவியுடன் கொண்டாடுகிறார்கள். ஆனால், ரம்யா, டிடி ஆகியோரின் தலைதீபாவளி அவரவர் வீட்டிலேயே கொண்டாடுகின்றனர்

 

பொங்கலுக்குத்தான் லிங்கா.. ரஜினி பிறந்த நாளன்று இசை வெளியீடு?

ரஜினியின் பிறந்த நாளன்று வெளியாகும் என்று எதிர்ப்பார்க்கப்பட்ட லிங்கா படம், பொங்கலுக்கு தள்ளிப் போடப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

கேஎஸ் ரவிக்குமார் இயக்கத்தில் ரஜினி இரு வேடங்களில் நடித்துள்ள லிங்கா படத்தின் படப்பிடிப்பு முடிந்துவிட்டது. ஆனால் இன்னும் ஒரு பாடல் காட்சி படமாக்கப்பட உள்ளது.

பொங்கலுக்குத்தான் லிங்கா.. ரஜினி பிறந்த நாளன்று இசை வெளியீடு?

படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் மற்றும் கிராபிக்ஸ் பணிகள் முழு வீச்சில் நடந்து வருகின்றன. இவை அனைத்தும் முடிவடையை திட்டமிட்டதை விட அதிக நாட்கள் தேவைப்படுகின்றன.

டிசம்பர் 12, ரஜினி பிறந்த தினத்தில் படத்தை வெளியிடவும், அதற்கு முன் தீபாவளிக்கு பாடல்களை வெளியிடவும் திட்டமிட்டிருந்தனர்.

ஆனால் இப்போது அதற்கு வாய்ப்பில்லாத நிலை.

பணிகள் இன்னும் முழுமையடையாததால் ஒரு மாதம் கழித்து பொங்கல் தினத்தில் படத்தை வெளியிட முடிவு செய்துள்ளார்களாம்.

தீபாவளிக்கு இன்னும் இரு தினங்களே உள்ள நிலையில் லிங்கா பாடல் வெளியீடு பற்றி எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. ரஜினி பிறந்த நாளன்று இசை வெளியீட்டு விழாவை நடத்தத் திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.

 

லைகா பெயருடன் ரிலீசானால் தீபாவளியின்போது கத்திக்கு பாதுகாப்பு தர முடியாது!- கமிஷனர்

சென்னை: கத்தி படத்தை லைகா புரொடக்ஷன்ஸ் பேனரில் வெளியிட்டே தீருவது என்பதில் உறுதியாக இருந்தால், தீபாவளி நேரத்தில் அந்தப் படத்துக்கு பாதுகாப்பு தர முடியாது என சென்னை மாநகர காவல் துறை ஆணையர் தெரிவித்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

நான்கு நாட்கள் கழித்து வெளியிடுவதாக இருந்தால் பரிசீலிக்கலாம் என்றும் கூறியுள்ளார்களாம்.

லைகா பெயருடன் ரிலீசானால் தீபாவளியின்போது கத்திக்கு பாதுகாப்பு தர முடியாது!- கமிஷனர்

கத்தி படத்தின் தயாரிப்பாளர்கள் லைகா நிறுவனத்தினர், இலங்கை அதிபர் ராஜபக்சேவுடன் நெருங்கிய தொடர்பில் உள்ளதால், அவர்கள் தயாரிக்கும் படத்தை வெளியிட அனுமதிக்க மாட்டோம் என்று கடந்த சில மாதங்களாக தமிழ் அமைப்பினர், மாணவர்கள், அரசியல் கட்சிகள் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

இந்தப் படம் வெளியாக நிச்சயிக்கப்பட்ட தேதி அக்டோபர் 22, தீபாவளி தினம்.

அன்றைய தினம் படம் வெளியாகுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. காரணம், லைகா பெயரை நீக்கிவிட்டு ரிலீஸ் செய்தால் மட்டுமே படத்தை வெளியிடுவோம். இல்லாவிட்டால் பெரும் போராட்டம் நடக்கும். குறிப்பாக படம் ஓடும் அரங்குகள் முன் ஆர்ப்பாட்டம் நடக்கும் என தமிழர் வாழ்வுரிமைக் கூட்டமைப்பும் மாணவர் அமைப்புகளும் எச்சரித்துள்ளன.

இன்னொரு பக்கம் விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் திருமாவளவனும், லைகாவின் இந்தப் படத்தை வெளியிடவே கூடாது என திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.

தங்களின் எதிர்ப்பை எழுத்துப் பூர்வமாக திரையரங்க உரிமையாளர்களுக்கும், விநியோகஸ்தர்களுக்கும் போராட்டக்காரர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் திரையரங்குகள் இந்தப் படத்தை வெளியிடத் தயங்கி நிற்கின்றன. டிக்கெட் முன்பதிவு அறிவிக்கப்பட்டாலும், இதுவரை ஒரு டிக்கெட் கூட விற்கப்படவில்லை.

படத்தின் வெளியீடு, அதற்கு எழுந்துள்ள எதிர்ப்புகள் குறித்து கடந்த இரு தினங்களாக சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. கத்தியின் இன்னொரு தயாரிப்பாளரான அய்ங்கரன் நிறுவனத்தின் கருணாமூர்த்தி இதில் பங்கேற்று பேசி வருகிறார்.

படத்திலிருந்து லைகா பெயர், லோகோ இல்லாமல் வெளியிடுவதாக இருந்தால் தீபாவளிக்கு வெளியிடலாம் என்று காவல்துறை தரப்பில் கூறப்பட்டுள்ளது. லைகா பெயரில்தான் வெளியிடுவோம் என்றால் தீபாவளி முடிந்து சில தினங்கள் கழித்து வெளியிட்டுக் கொள்ளுங்கள் என்று போலீஸ் தரப்பில் ஆலோசனை சொல்லப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

ஆனால் லைகா நிறுவனம் தனது முடிவில் உறுதியாக உள்ளதாம். இதனால் எந்த முடிவுக்கும் வரமுடியாமல் தவிக்கிறார்கள் திரையரங்க உரிமையாளர்கள்.

தீபாவளிக்கு வெளியாகும் இன்னொரு படமான பூஜைக்கு நேற்றே முன்பதிவு தொடங்கிவிட்டது.

 

தங்கைக்காக பாடும் ஸ்ருதிஹாசன்

தங்கை அக்ஷரா ஹாசனுக்காக அக்கா ஸ்ருதிஹாசன் ஹிந்துஸ்தானி பாடல் ஒன்றை பாடியுள்ளார்.

கமலஹாசனின் இளையமகள் அக்ஷரா ஹாசன் ஷமிதாப் என்ற இந்திப் படத்தின் மூலம் அறிமுகமாகிறார்.

அமிதாப் பச்சன், தனுஷ், ரேகா நடிக்கிறார்கள். பால்கி இயக்குகிறார், பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்கிறார். இளையராஜா இசையில் ஷமிதாப் படம் உருவாகிறது.

தங்கைக்காக பாடும் ஸ்ருதிஹாசன்

தங்கைக்காக பாடல்

ஷமிதாப்பில் தங்கை அக்ஷரா ஹாசன் ஹீரோயினாக அறிமுகமாக அக்கா ஸ்ருதி ஹாசன் ஒரு பாடல் பாடுகிறார்.

2வது இந்திப்பாடல்

ஸ்ருதி பாடும் இரண்டாவது இந்திப் பாடல் இது. இதற்கு முன்பு ஸ்ருதி ஹாசன் சோனாக்ஷி சின்ஹாவுக்காக தீவார் படத்தில் ரொமாண்டிக் பாடல் ஒன்றை பாடியிருக்கிறார்.

ஹிந்துஸ்தானி பாடல்

ஷமிதாப் படத்தில் இளையராஜா இசையமைப்பில் ஸ்ருதிஹாசன் ஹிந்துஸ்தானி பாடல் ஒன்றை பாடுகிறார். ஸ்ருதி முறைப்படி ஹிந்துஸ்தானி இசை கற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இசையோடு இணைந்த ஸ்ருதி

இசைஞானம் உள்ள ஸ்ருதி, இசையமைப்பாளராக ஆர்வம் காட்டினார், பின்னணிப் பாடல்களைப் பாடினார். ஆனால் அவருக்கு நடிப்புதான் கை கொடுத்தது. ஆனாலும் இசையையும்,பின்னணிப் பாடல்கள் பாடுவதையும் அவர் மறக்கவில்லை.

 

வெளியானது கத்தி ட்ரைலர்.. ரசிகர்களிடம் பெரும் வரவேற்பு!

லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள தீபாவளி ஸ்பெஷலான கத்தியின் ட்ரைலர் நேற்று வெளியானது.

வெளியான சில மணி நேரங்களில் லட்சக்கணக்கான ரசிகர்கள் அந்த ட்ரைலரைப் பார்த்துள்ளனர்.

நாளை மறுநாள் கத்தி படம் தீபாவளி ஸ்பெஷலாக வெளியாகிறது. லைகா நிறுவனம் தயாரிப்பில், ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் விஜய்- சமந்தா நடித்துள்ள இந்தப் படத்தை வெளியிடுவதில் இன்னும் சிக்கல் தீர்ந்தபாடில்லை.

வெளியானது கத்தி ட்ரைலர்.. ரசிகர்களிடம் பெரும் வரவேற்பு!

படம் வெளிவர இரு தினங்கள் மட்டுமே உள்ள நிலையில் படத்தின் ட்ரைலர் எனும் முன்னோட்டக் காட்சியை நேற்று மாலை வெளியிட்டனர்.

இந்த ட்ரைலர் வெளியான சில மணி நேரங்களில் 9 லட்சம் பேர்வரை பார்த்துள்ளனர்.

'பருப்பு, கொத்தமல்லி, கருவேப்பிலை வரைக்கும் கிராமத்துல இருந்து வரணும். ஆனா, ஒரு கிராமத்தான் செத்தா மூக்கை மூடிக்குவாங்களா... இப்ப வரவைக்கிறேன் பார் அத்தனை சேனல்களையும்,' என விஜய் பேசும் முத்திரை வசனம் இந்த ட்ரைலரில் இடம்பெற்றுள்ளது.

விஜய் ரசிகர்கள் இந்த ட்ரைலரை சமூக வலைத் தளங்களில் தீவிரமாக பகிர்ந்து வருகின்றனர்.

கத்தி - டிரைலர்