9 விருதுகளுக்குப் பரிந்துரைக்கப்பட்டுள்ள வேலையில்லா பட்டதாரி!

தென்னிந்திய மொழி திரைப்படங்களுக்காக ஆண்டுதோறும் வழங்கப்படும் சர்வதேச விருதான சைமாவுக்கு 9 பிரிவுகளில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது தனுஷின் வேலையில்லா பட்டதாரி.

கடந்த ஆண்டு மலேசியாவில் பிரம்மாண்டமாக நடைபெற்ற இவ்விழா இந்த ஆண்டு துபாயில் ஆகஸ்ட் 6 மற்றும் 7ம் தேதி நடைபெறுகிறது.

SIMA awards: Dhanush's VIP nominated under 9 categories

இவ்விழாவில் தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் தெலுங்கு மொழிகளில் வெளியான சிறந்த படங்களைத் தேர்வு செய்து சிறந்த படம், நடிகர்கள், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களுக்கு விருதுகள் வழங்கப்படும்.

அதன்படி கடந்த வருடம் வெளியான சிறந்த படங்களை தேர்வு செய்து பட்டியலை சைமா குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

SIMA awards: Dhanush's VIP nominated under 9 categories

அதில் தனுஷ் நடிப்பில் வெளியான ‘வேலையில்லா பட்டதாரி' சிறந்த துணை நடிகை, சிறந்த நடன அமைப்பாளர், சிறந்த பாடலாசிரியர், சிறந்த பாடகர், சிறந்த காமெடி நடிகர், சிறந்த அறிமுக இயக்குனர், சிறந்த நடிகை, சிறந்த நடிகர், சிறந்த படம் என 9 பிரிவுகளுக்கான விருதுகளுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இதில் தனுஷ் மட்டுமே மூன்று பிரிவுகளில் பரிந்துரை செய்யப்பட்டிருக்கிறார்.

SIMA awards: Dhanush's VIP nominated under 9 categories

விஜய் நடித்த ‘கத்தி' படம் 8 பிரிவுகளுக்கும், சித்தார்த் மற்றும் பாபிசிம்ஹா நடித்த ‘ஜிகர்தண்டா' 7 பிரிவுகளுக்கும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

 

பிரச்சினைகளுடன் சேர்த்து காதலையும் சமாளிப்பவன்தான்... மாரி!

சென்னை: நடிகர் தனுஷிற்கும் வடசென்னைக்கும் அப்படி என்ன ராசியோ, தொடர்ந்து தனது படங்களில் வடசென்னை பையனாகவே நடிக்கிறார். நடிகர் தனுஷின் நடிப்பில் வெளிவந்த பொல்லாதவன், புதுப்பேட்டை, அநேகன் மற்றும் சுள்ளான் படங்களைத் தொடர்ந்து மாரி படத்திலும் லோக்கல் சென்னைப் பையனாகவே நடித்திருக்கிறார் தனுஷ்.

Maari: Dhanush Acting Dove Racer

மாரி படத்தில் கதைப்படி புறா ரேஸில் கலந்து கொள்பவராக நடித்திருக்கிறார் தனுஷ். புறா ரேஸில் கலந்து கொண்டு ஏற்படும் மோதல்கள் மற்றும் அதனால் ஏற்படும் பிரச்சினைகளை தனுஷ் எப்படிச் சமாளிக்கிறார் என்பதை காதலுடன் இணைத்துக் கூறியிருக்கிறாராம் இயக்குநர் பாலாஜி மோகன்.

Maari: Dhanush Acting Dove Racer

மேலும் புறா ரேசைத் தவிர்த்து படத்தில் நிறைய விஷயங்களைச் சொல்லி இருக்கிறேன், தனுஷை இந்தப் படம் நிச்சயம் மாஸ் ஹீரோவாக உயர்த்திக் காட்டும் என்று நம்பிக்கை தெரிவித்து இருக்கிறார் பாலாஜி மோகன்.

வடசென்னை என்ற பெயரிலேயே தனுஷ் வெற்றிமாறன் இயக்கத்தில் ஒருபடம் நடிப்பது குறிப்பிடத்தக்கது.

 

இங்கே கைதூக்கிவிட ஆளில்ல.. தள்ளிவிட நிறைய பேர் இருக்காங்க!- ஷாம் பேட்டி

ஷாம் நடிக்க வந்து 13 ஆண்டுகள் ஆகிவிட்டன. அண்மையில் வெளியான 'புறம்போக்கு' அவருக்கு 25வது படம்.

ஒரு சாக்லேட் பாயாக அறிமுகமாகி, கதாநாயகிகளுடன் டூயட் பாடி அவர்களின் உள்ளங்கவர் கள்வனாக ரொமான்ஸ் செய்து வலம் வந்துகொண்டிருந்த ஷாம், '6' படத்துக்குப் பின் ஆக்ஷன் ஹீரோவாக மாறினார்.

பாம்பு சட்டை உரிப்பதைப் போல தனக்குள் இருந்த அர்ப்பணிப்புள்ள நடிகனை உரித்துக் காட்டினார். அவரது 25 வது படமாக இப்போது வந்திருக்கும் 'புறம்போக்கு' படத்தில் அழுத்தமான மெக்காலே பாத்திரம் மூலம் இன்னும் பலபடிகள் மேலேறி கம்பீரமாக நிற்கிறார்.

ஊடகங்களின் ஒட்டு மொத்த பாராட்டையும் பெற்ற சந்தோஷத்திலிருந்த ஷாமைச் சந்தித்தபோது பல விஷயங்களைப் பகிர்ந்து கொண்டார்.

எஸ்.பி. ஜனநாதன் இயக்கத்தில் முதலில் 'இயற்கையில் நடித்தீர்கள். இப்போது 'புறம்போக்கு'... இரு அனுபவங்களையும் ஒப்பிடமுடியுமா?

அப்போது எனக்கும் பெரிய அனுபவம் இல்லை. அவரும் புதுமுக இயக்குநர். போகப்போக அவரைப்பற்றி நிறைய அறிந்தேன். அப்போது எங்களுக்கும் அவ்வளவு புரிதல் இல்லை.ஆனால் போகப் போக புரிந்தது. அவர் ஒரு முதிர்ச்சியான சிந்தனை கொண்டவர். அவர் நடிகர்களுக்காக கதை செய்யமாட்டார். பாத்திரங்களுக்காக நடிகர்களைத் தேடுபவர். ஜீவா சாருக்குப் பின் மீண்டும் 2 வது பட வாய்ப்பை ஜனாசார் இயக்கியதில் மகிழ்ச்சி. மக்களின் நாடித்துடிப்பு தெரிந்தவர் அவர் . பலதுறை ஞானம் உள்ளவர். அவர் இயக்கத்தில் மீண்டும் நடித்தது நிச்சயமாக எனக்கு மறக்கமுடியாதது.​ ​ஒரு கதாநாயகன் என்றால் 10 பேரை அடித்துதான் உருவாக வேண்டும் என்பதில்லை. ஜனா சார் அவ்வளவு அழகாகச் செதுக்குவார். அவர் பேசினால் மணிக்கணக்கில் கேட்டுக் கொண்டே இருக்கலாம். நான் பிகாம் படித்தது பற்றி எனக்கே சந்தேகம் வரும் அளவுக்குப் பேசுவார்.

Shaam completes 13 years in cinema

அவர் ஹீரோக்களிடம் கதை சொல்வது தனி பாணி. அவர்களை அழுத்தமாகவும் யதார்த்தமாகவும் சித்தரிப்பது எனக்குப் பிடிக்கும். அவர் பழகும் எளிமை பிடிக்கும். இத்தனை ஆண்டுகளாக தொடர்பில் இருக்கிறோம். இயற்கையில் நான் சரியாக நடிக்கவில்லையோ என்று தோன்றும். அந்த குறையை 'புறம்போக்கு' படம் போக்கி விட்டது.​ ​ இது நிச்சயமாக எனக்கு மறு அவதாரம் போல அழுத்தமான அடையாளமாகியுள்ளது. ​என் வாழ்க்கையில் மறக்க முடியாத பாத்திரம் இது என்பதில் சந்தேகம் இல்லை.​ ​தியேட்டரில் எனக்குக் கிடைத்த வரவேற்பையும் ஆரவாரத்தையும் பார்த்து எனக்கு கண்ணீர் வந்து விட்டது சந்தோஷத்தில்.

உடன் நடித்த ஆர்யா, விஜய் சேதுபதி பற்றி?

நான், ஆர்யா, விஜய் சேதுபதி மூன்று பேரும் இப்படத்தில் ஏற்று நடித்தவை மூன்றுவித தனிப்பட்ட குணங்கள் கொண்ட குணச்சித்திரங்கள். அவரவர் பார்வையில் அவரவர் செய்வது சரி. யாரும் கெட்டவர் இல்லை. நாங்கள் மூன்று பேரும் இயக்குநரின் மூன்று பாத்திரங்களை ஆளுக்கொன்றாக சுமந்திருக்கிறோம்.

ஆர்யா என்னுடன் 'உள்ளம் கேட்குமே' படத்தில் அறிமுகமானவர். ஆர்யா என் தம்பி மாதிரி. என்னுடன் அறிமுகமான ஆர்யா இன்று வளர்ந்து இருப்பதில் ஒரு சகோதரன் போல எனக்கு மகிழ்ச்சிதான். ஆர்யா ஆரம்பம் முதல் என் நண்பன்தான்

இன்னொருவராக வரும் விஜய் சேதுபதியும் மிகவும் எளிய மனிதர். என்னிடம் மரியாதையும் அன்பும் காட்டினார். ஒருவருக்கு படப்பிடிப்பு இல்லை என்றாலும் அடுத்தவர் நடிப்பில் படப்பிடிப்பு நடந்தாலும் போவோம் ஒரே கேரவானில் பேசி அரட்டையடித்து சாப்பிட்டு ஜாலியாக இருந்தோம். எங்களுக்குள் ஆரோக்கியமான புரிதல் இருந்தது. ஈகோ இல்லை.​ ​நல்ல நண்பர்களாகவே கடைசிவரை இருந்தோம்.​ பாலிவுட்டில் இதுமாதிரி பலநடிகர்கள் சேர்ந்து நடிப்பது வழக்கமாக உள்ளது. அது போல இங்கும் வர வேண்டும்.

அடுத்து நடிக்கும் படங்கள் என்னென்ன?

ஏ.எம்.ஆர். ரமேஷ் இயக்கத்தில் 'ஒரு மெல்லிய கோடு​.​' ​ ​இசைஞானி இளையராஜா இசையமைக்கிறார். எனக்கு மனிஷா கொய்ராலா, ஸ்ருதி ஹரிஹரன் என்று இரண்டு கதாநாயகிகள் ஜோடியாக நடிக்கிறார்கள .​ ​அர்ஜுன் ​ சாருடன் நடிக்கிறேன். . இந்தப்படம் தமிழ், கன்னடம் என இரு மொழிப் படமாக உருவாகி வருகிறது. சென்னை பெங்களூர் என்று மாறிமாறி படப்பிடிப்பு நடந்து வருகிறது. என் கேரக்டர் கொஞ்சம் நெகடிவ் நிழல் விழுகிற மாதிரி இருக்கும்​.​ பாடல் காட்சிக்கு துருக்கி செல்ல இருக்கிறோம். இது ஒரு க்ரைம் கதை.

தெலுங்கில் நடிக்கிறீர்களா?

தெலுங்கில் இதுவரை 5 படங்கள் முடித்து விட்டேன். 'கிக்', ரேஸ்குர்ரம்' படங்களை இயக்கிய சுரேந்தர் ரெட்டியின் புதிய படத்தில் நடிக்கிறேன். செப்டம்பரில் தொடங்குகிறது.

சொந்தப் பட அனுபவம் சொல்வது என்ன? மீண்டும் தயாரிப்பில் ஈடுபடுவீர்களா?

சொந்தப் படமான '6' படம் எனக்கு லாபம் தரவில்லைதான் ஆனால் இழப்பையும் தரவில்லை. எனக்கு பெரிய மரியாதையையும் அடையாளத்தையும் பெற்றுத் தந்தது.

Shaam completes 13 years in cinema

ஷாம் விளையாட்டுப் பையனில்லை​.​ அர்ப்பணிப்பும் தேடலும் ஈடுபாடும் கொண்ட நடிகன் என்கிற பெயரைப் பெற்றுத் தந்துள்ளது. ​​அதுவரை மக்களும் ரசிகர்களும் என்னைப் பார்த்த பார்வைவேறு '6' படத்துக்குப் பிறகு பார்க்கிற பார்வை வேறு. மரியாதையும் கவனமும் கூடி இருக்கிறது. இப்படி நிறைய லாபம் கிடைத்து இருக்கிறது.

மீண்டும் படம் தயாரிப்பேன்​.​ ​​அந்தப்படம்​ ​​இதுவரை நடித்த 25 படங்களிலிருந்து​ முற்றிலும் புதுமையான இளமையான அவதாரம் என்று சொல்லும்படி ​ இருக்கும்

25 படங்களிலிருந்து கற்றதும் பெற்றதும்...

பெருமையாக, மகிழ்ச்சியாக இருக்கிறது. திருப்தியாக இருக்கிறது. ஆனால் இதை நினைத்துக் கொண்டு அப்படியே உட்கார்ந்து விடமுடியாது. ஓடவேண்டும்; உழைக்க வேண்டும்; உயர வேண்டும்.

நான் நடிக்க வந்து 13 ஆண்டுகள் ஆகிவிட்டன இன்றைய போட்டி நிறைந்த சினிமா சூழலில் இவ்வளவு நாள் தாக்குப் பிடித்து நிற்பதே பெரிய விஷயம்தான். எந்தவித சினிமா பின்னணியும் இல்லாமல் வந்தவன் நான். என்னை குருநாதர் ஜீவா அறிமுகப்படுத்தினார். ஊக்கம் தந்து வளர்த்தார். அவரும் திடீரென காலமாகிவிட்டார். ​​இங்கே கைதூக்கி விட யாருமில்லை. ​கீழே தள்ளிவிட நிறைய பேர் இருக்காங்க.. ​நானாகத்தான் சரியா த​​ப்பான்னு முடிவு பண்ணி நடிக்கிறேன்.

சிலர் கதை நல்லா சொல்றாங்க. ஆனா எடுக்கும்போது சொதப்புறாங்க. அந்த படத்தையும் பரவாயில்லைன்னு எப்படி பண்ணமுடியும்? இப்போதான் கரணம் அடிச்சு எழுந்திருக்கப் பார்க்கிறேன். மீண்டும் மீண்டும் கீழே விழுற தப்பை பண்ணிக்கிட்டே இருக்கமுடியுமா? யாருமே படம் பண்ண வராதபோது என் சொந்தக் காசைப் போட்டு லேசா நிமிர்ந்திருக்கேன் பாஸ். உசாரா இருக்கலைன்னா நீங்க பேட்டி கூட எடுக்கமாட்டீங்க. அப்புறம் எப்படி நடிக்க?

நடிக்கலைன்னா கூட பரவாயில்லை. தப்பான படம் பண்ணி வீட்ல உக்காரக்கூடாது. அதுதான் மகாக் கொடுமை. இடையில் அந்தக் கொடுமையை ரொம்பவே அனுபவிச்சிட்டேன்​.​ இருந்தாலும் நடித்துக் கொண்டிருக்கிறேன்.

பள்ளம் மேடுகள் ஏற்றம் இறக்கங்கள் இருந்தாலும் என் பயணம் தொடர்ந்து கொண்டிருக்கிறதே​.​ அதுவே மகிழ்ச்சி தானே?

நம்பிக்கையும் யதார்த்தமும் மிளிர்கிறது ஷாமின் பேச்சில். ஆல் தி பெஸ்ட் ஷாம்!

 

இயக்குநர் சேரன் எங்கே... என்னாச்சி அந்த சி2எச் திட்டம்?

கடைசியாக இயக்குநர் சேரனைப் பார்த்தது.. ஒரு திருமண விழாவில்தான். சினிமா நிகழ்ச்சிகளில் அவரைப் பார்க்கவே முடிவதில்லை.

சினிமா செய்தியாளர்களுக்கு இந்த நிலை என்றால், அவரை நம்பி சி2எச் நிறுவனத்தில் சிடி விற்க முதலீடு செய்தவர்கள் நிலையோ பரிதாபம்... அவரைப் பார்த்தே பல நாட்கள் ஆகிவிட்டனவாம்.

What happened to Cheran's C2H?

'ஜே கே. எனும் நண்பனின் வாழ்க்கை' படத்தின் சிடிக்கள் பத்துலட்சத்துக்கும் மேல் விற்பனையாக பெரும் வெற்றி அடைந்துவிட்டதாக விளம்பரமெல்லாம் கொடுத்த சேரன், அதன் பிறகு வேறு எந்தப் படத்தையும் சி2எச் மூலம் வெளியிடவே இல்லை.

‘ஜே.கே'வுக்குப் பிறகு ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் ஒரு புதுப்படத்தை வெளியிடப் போவதாகவும், அதற்காக 50 படங்களைத் தேர்வு செய்து வைத்திருப்பதாகவும் கூறியிருந்தது நினைவிருக்கலாம்.

அடுத்து என்ன செய்வது என்று தெரியாமலும், அவரைத் தொடர்பு கொள்ள முடியாமலும் அவரை நம்பி முதலீடு செய்தவர்கள் தேடிக் கொண்டிருப்பதாக கோலிவுட் பரபரக்கிறது.

சேரன் தொடங்கியது நல்ல முயற்சி.. அதை முழுமையாக முடிப்பார் என இன்னமும் நம்புகிறோம். பார்க்கலாம்!

 

ருத்ரம்மா தேவிக்கு குரல் கொடுத்த மெகா ஸ்டார்

ஹைதராபாத்: நடிகை அனுஷ்கா மற்றும் நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில் ஏராளமான நட்சத்திரங்கள் இணைந்து நடித்து வரும் ருத்ரம்மா தேவி படத்தின் படப்பிடிப்பு முழுவதும் முடிந்து படம் வெளியீட்டிற்குத் தயாராகி விட்டது.

சரித்திரப் பின்னணி கொண்ட இந்தப் படத்தில் அனுஷ்கா ராணியாக நடித்து இருக்கிறார், சரித்திரப் பின்னணியைக் கதைக்களமாகக் கொண்ட இந்தப் படத்திற்கு போட்டியாக இயக்குநர் ராஜமௌலியின் பாகுபலி படமும் வெளியிடத் தயார் நிலையில் உள்ளது.

Mega Star Chiranjeevi Give Voice For Rudrama Devi Movie

பாகுபலி மற்றும் ருத்ரம்மா தேவி இரண்டிலுமே அனுஷ்கா தான் நாயகி என்றாலும், ருத்ரம்மா தேவியை விட எல்லா விதத்திலும் பாகுபலி ஒருபடி மேலேயே உள்ளது. எனவே படத்தை எப்படியாவது விளம்பரப் படுத்திவிட வேண்டும் என்ற முனைப்பில் இருக்கும் ருத்ரம்மா தேவி இயக்குநர் குணசேகர், அதற்காக மெகா ஸ்டார் சிரஞ்சீவியை படத்திற்கு பின்னணிக் குரல் கொடுக்க வைத்திருக்கிறார்.

மிக நீண்ட வருடங்கள் கழித்து ஆட்டோ ஜானி படத்தின் மூலம் மீண்டும் நடிக்க வந்திருக்கும் மெகா ஸ்டார், ருத்ரம்மா தேவி படத்திற்கு குரல் கொடுத்திருப்பதால் கண்டிப்பாக அவரது ரசிகர்கள் படத்தைப் பார்ப்பார்கள். இதன் மூலம் சிரஞ்சீவி ரசிகர்கள் தவிர தெலுங்கு உலகின் தீவிர ரசிகர்களும் தற்போது ருத்ரம்மா தேவியில் மெகா ஸ்டாரின் குரலைக் கேட்க ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.

இந்த முயற்சி வெற்றியடைந்ததில் இயக்குநர் குணசேகர் தற்பொழுது மகிழ்ச்சியாக இருக்கிறாராம், மேலும் படம் வெளியிடுவதற்கு முன்பு இதைப் போன்ற சில அதிரடிகளையும் அரங்கேற்றத் திட்டமிட்டு உள்ளனராம் ருத்ரம்மா தேவி படக்குழுவினர்.

 

ரோஜா நாயகன் அரவிந்த் சாமி பிறந்த நாள் இன்று

சென்னை: 1991 ல் இருந்து 1998 வரை தமிழ்நாட்டில் பல இளம்பெண்களின் தூக்கத்தைக் கெடுத்த நாயகன் அரவிந்த் சாமியின் 48 வது பிறந்த நாள் இன்று. 1967 ம் ஆண்டு ஜூன் மாதம் 18 ம் தேதி சென்னையில் பிறந்தவர் அரவிந்த் சாமி. அன்றைய காலகட்டத்தில் பெண் பார்க்கச் சென்ற மாப்பிள்ளைகள் அரவிந்த் சாமியால் பெரும் துன்பங்களிற்கு ஆளானார்கள். மாப்பிள்ளை அரவிந்த் சாமியைப் போல இருக்க வேண்டும் என்பது அன்றைய ஒட்டுமொத்த இளம்பெண்களின் கனவாகவே இருந்தது.

இயக்குநர் மணிரத்னத்தின் தளபதி படம் மூலம் 1991 ம் ஆண்டில் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் அரவிந்த் சாமி, அறிமுகமான படத்திலேயே ரஜினி மற்றும் மம்முட்டி போன்ற பெரிய நடிகர்களுடன் நடித்தவர். அதற்கு அடுத்த ஆண்டில் மணிரத்னத்தின் ரோஜா படத்தின் மூலம் ஹீரோவாக மாறிய அரவிந்த் சுவாமி, ரோஜா படத்தின் மூலம் ஏகப்பட்ட இளம்பெண்களின் கனவு நாயகனாக மாறிவிட்டார்.

Aravind Swamy Turns 48

தமிழ் சினிமாவின் ஆணழகன் என்று வர்ணிக்கப்பட்ட இவர் தொடர்ந்து நடித்த பம்பாய், இந்திரா, மின்சாரக் கனவு மற்றும் என் சுவாசக் காற்றே போன்ற படங்களின் மூலம் தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கிக் கொண்டவர்.

தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் இந்தி உட்பட நான்கு மொழிகளிலும் 20க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார். 2013ம் ஆண்டு மீண்டும் சினிமாவில் நாயகனாக அறிமுகப்படுத்திய மணிரத்னத்தின் இயக்கத்தில் கடல் படம் மூலம் குணச்சித்திர நடிகராக காலடி பதித்திருக்கும் அரவிந்த்சாமி,தற்பொழுது தமிழில் தனி ஒருவன் மற்றும் இந்தியில் டியர் டாட் போன்ற படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

பிறந்த நாள் வாழ்த்துக்கள் அரவிந்த்...

 

13 வயது சிறுமியுடன் டூயட் பாடிய பிரபல பாப் பாடகர்

கனடா: கண்ணா லட்டு தின்ன ஆசையா படத்தில் வேண்டுமென்றே சந்தானம் கேவலமாக ஒரு பாட்டைப் பாடுவார் இடையில் பாடலின் வரிகள் தெரியாமல் அவர் தடுமாற , அதனைக் கண்டு மனம் வெதும்பும் விடிவி கணேஷ் நிஜமாகவே அந்தப் பாடலை மேடையேறிப் பாடுவார்.

சினிமாவில் அவ்வப்போது இந்த மாதிரி ஒரு சில காட்சிகள் ஏதேனும் ஒரு படத்தில் கட்டாயம் இருக்கும், அதே போன்று ஒரு சம்பவம் நேரில் நடந்தால் சம்பந்தப் பட்டவரின் மனநிலை எப்படி இருக்கும்.

சினிமாவில் மட்டும் அரங்கேறிய இந்த மாதிரி நிகழ்ச்சிகள் நேரிலும் நடந்து இருக்கிறது, நம்மூரில் அல்ல கனடா நாட்டில்.

கனடாவைச் சேர்ந்த சிட்னி போர்பே என்ற 13 வயது சிறுமி அறக்கட்டளை ஒன்றிற்கு நிதி திரட்டுவதற்காக வெஸ்ட் எட்மாண்டன் என்ற மாலில் நடந்த ஒரு விழாவிற்குச் சென்றிருந்தார்.

விழா மேடையில் நிதி திரட்டுவதற்கு ஏதாவது செய்தாக வேண்டுமே என்ற நல்ல எண்ணத்தில் இங்கிலாந்தைச் சேர்ந்த பிரபல பாப் பாடகர் எட் ஷீரனின் தி பெஸ்ட் மொமென்ட்( The Best Moment) என்ற பாடலை மிகவும் சுமாராகப் பாடிக் கொண்டிருக்க, திடீரென அங்கு நிஜமாகவே வந்த எட் ஷீரன் விழா மேடையில் ஏறி அந்த சிறுமியுடன் டூயட் ஆடி இருக்கிறார்.

எட் ஷீரனை நேரில் பார்த்த சிட்னி அதை கனவோ என்று எண்ணுவதற்குள் நிஜமான இந்த டூயட் அரங்கேற, சந்தோஷத்தில் சிட்னிக்கு காய்ச்சலே வந்து விட்டதாம்.

யூ டியூபில் இந்த வீடியோவை இதுவரை 55 லட்சத்திற்கும் அதிகமானோர் பார்க்க தற்போது இணையத்தில் வைரலாக மாறி விட்டது இந்த டூயட் வீடியோ.

 

ரசிகர்கள் எதிர்பார்க்கும் ஷாரூக்கானின் தில்வாலே... டிசம்பர் 18-ம் தேதி பிரமாண்ட ரிலீஸ்!

ஷாரூக்கானின் அடுத்த படம் தில்வாலே-வின் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வரும் டிசம்பர் 18-ம் தேதி உலகெங்கும் பிரமாண்டமாக வெளியாகிறது தில்வாலே.

SRK's Dilwale release date officially announced

இந்தியில் ‘சென்னை எக்ஸ்பிரஸ்', ‘சிங்கம்' உள்ளிட்ட பல படங்களை இயக்கிய ரோஹித் ஷெட்டியின் இயக்கத்தில் உருவாகி வரும் இந்தப் படத்தில் ஷாருக்கான் ஜோடியா மீண்டும் காஜோல் நடிக்கிறார்.

‘தில்வாலே' படத்தின் படப்பிடிப்பை பல்கேரியா உள்ளிட்ட வெளிநாடுகளில் நடத்தி வருகின்றனர். இதில் ஷாரூக் தம்பியாக வருண் தவான் நடிக்கிறார்,

காமெடி கலந்த ஆக்ஷன் படமாக உருவாகி வருகிறது தில்வாலே.

ஷாருக்கான்-காஜோல் ஜோடியாக பாஸிகர், தில்வாலே துல்ஹனியா லேஜாயேங்கே, குச் குச் ஹோதா ஹை, மை நேம் ஈஸ் கான் போன்ற படங்கள் இந்தி ரசிகர்களை மட்டுமில்லாமல் மற்ற மொழி ரசிகர்களையும் பெரிதும் கவர்ந்தவை. 22 ஆண்டுகளாக இருவரும் மிகப் புகழ்பெற்ற ஜோடியாகத் திகழ்கிறார்கள்.

 

வெற்றி எங்களுக்கே... மதுரையில் முழங்கிய சரத்குமார்!

சென்னை: அடுத்த மாதம் நடக்க விருக்கும் நடிகர் சங்கத் தேர்தலின் வேகம் நாளுக்குநாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இவர்கள் அடித்துக் கொள்வதைப் பார்த்தால் அனேகமாக துணை ராணுவம் வந்து தான் இந்தத் தேர்தலை நடத்தி வைக்க வேண்டும் போல.

நடிகர் சங்கம் தற்போது இரு பிரிவுகளாக பிரிந்து விஷால் அணி மற்றும் சரத்குமார் என இரு அணிகளாக சங்கத் தேர்தலை, எதிர்கொள்ள இருக்கிறது. இதில் மேலும் ஒரு திருப்பமாக நாங்கள் தவறு எதுவும் செய்யவில்லை எனவே எங்கள் அணி வெற்றி பெறும் என்று நம்புவதாக மதுரையில் பத்திரிக்கையாளர்கள் முன்னிலையில் பேட்டி அளித்திருக்கிறார் நடிகர் சரத்குமார்.

Sarathkumar Says” I Think We Are Winning This Election

மேலும் அவர் கூறுகையில் "நடிகர் சங்கத் தேர்தலில் முறைகேடுகள் எதுவும் நடைபெறவில்லை, எங்களை எதிர்ப்பவர்களின் பின்னணியில் அரசியல் இருப்பது போல தெரிகிறது. எனினும் நாளைக்கே சூழ்நிலைகள் மாறலாம், இன்று கருத்து வேறுபாட்டுடன் மோதிக் கொண்டவர்கள் நாளை சகோதரர்களாக மாறலாம்.

நாளையே நடிகர் சங்கம் மீண்டும் ஒற்றுமையாக மாறக் கூடிய சூழல் கூட இங்கு உருவாகலாம் என்றும் தனது பேட்டியில் கூறியிருக்கிறார் நடிகர் சரத்குமார்.

 

லிங்குசாமி பேனரில் போய் ஏன் நடிக்கிறாய்? - சிவகார்த்திகேயனை பின்வாங்கச் சொன்ன பிரபலங்கள்!

லிங்குசாமி கம்பெனியின் நிலைமை சரியில்லை.. அவர்கள் தயாரிப்பில் நடிக்க வேண்டாம் என்று தன்னைப் பலரும் அவநம்பிக்கையூட்டியதாகவும், அதை மீறி ரஜினி முருகன் படத்தில் நடித்ததாகவும் சிவகார்த்திகேயன் தெரிவித்தார்.

ரஜினிமுருகன் ட்ரைலர் வெளியீட்டு விழாவில் சிவகார்த்திகேயன் பங்கேற்றுப் பேசியது:

Many have discouraged me for acting in Lingusamy banner - Siva

இது என் எட்டாவது படம். இந்தத் தலைப்பு பற்றி பலரும் கேட்டார்கள். 'எதுக்கு இவனுக்கு இந்த வேண்டாத வேலை, இவனுக்கு என்னாச்சு என்பார்களே' என்று பயந்தேன்.

'ரஜினி முருகன்' கதை கேளுங்கள் என்றார் இயக்குநர் பொன்ராம். எனக்கு இரண்டே கேள்விகள் இருந்தன. ஏன் இந்தத் தலைப்பு? இதை எப்படி ஏற்றுக் கொள்ளும்படி செய்யப் போகிறார்? என்று. ஆனால் கதை சொல்ல ஆரம்பித்ததும் 20 நிமிஷத்தில் சரியாகத்தான் தலைப்பு வைத்திருப்பதாகத் தெரிந்துவிட்டது. நம்பிக்கை வந்தது.

சிரிப்புக்கு உத்தரவாதம்

'வருத்தப் படாத வாலிபர் சங்கம்' படத்துக்குப் பிறகு அடுத்தப் படம் என்பதில் எனக்கு கொஞ்சம் பதற்றமும் மன அழுத்தமும் இருந்தது. ஆனால் பொன்ராம் படத்தை எப்படி திரையரங்கில் ரசிப்பார்கள் என்று நினைத்து மட்டுமே படத்தை எடுத்தார். அப்படித்தான் ஒவ்வொரு காட்சியையும் எடுப்பார். சூரியண்ணனிடம் பேசிய போது இருவருக்கும் நடிப்பில் சிரிக்க வைக்க வாய்ப்பு இருக்கிறது என்றேன்.

வவாச மாதிரி இருக்காது

'வருத்தப் படாத வாலிபர் சங்கம்' படத்துக்கும் இதற்கும் என்ன வேறுபாடு, ஒரே மாதிரி இருக்குமா என்றெல்லாம் கேள்விகள் வந்தன. அதில் வேலைக்கே போகமாட்டேன் என்றிருக்கும் பாத்திரம். இதில் வேலை செய்கிற பாத்திரம். அதில் என் குடும்பம் பற்றி பெரியதாக எதுவும் இருக்காது. இதில் நிறைய இருக்கும். பெரிய புதிய முயற்சிகள் எல்லாம் எடுக்கவில்லை. ஜாலியாக சிரித்து விட்டு போக நாங்கள் உத்தரவாதம். படம் பார்த்தோம் ஜாலியாக இருந்தது என்றால் அதுதான் எங்களுக்கு ஆஸ்கார் விருது.

ராஜ்கிரண்

இதில் நடிக்க ராஜ்கிரண் சார் ஒப்புக் கொள்வாரா என்கிற சந்தேகம் இருந்தது. கதை பிடித்து ஒப்புக் கொண்டார். அவர் எவ்வளவு பெரிய நடிகர். அவர் கூட நான் நடிக்கிற மாதிரி காட்சி இருக்கிறதோ இல்லையோ எனக்குப் பெருமையாக இருக்கட்டும் என்று நான் அவருடன் நடந்து வருகிற மாதிரி ஒரு காட்சியை படமெடுத்து தரும்படி கேட்டேன். ராஜ்கிரண் சார் ஏழுநிமிட காட்சியை ஒரே டேக்கில் நடித்து அசத்தி எல்லாரையும் கலங்க வைத்துவிட்டார்.

சமுத்திரக்கனி

சமுத்திரக்கனி சாரிடம் இந்தக் கதை பற்றி நான் பேசியபோது அவர், எனக்கொரு கதை சொல்லி நீ நடிக்கிறாயா என்றார். அவருக்கு வில்லன் வேடம்தான். ஆனால் பெரிய பெரிய சண்டை எல்லாம் போடமாட்டார். அமைதியாக இருந்து நரித்தனம் செய்கிற வில்லன்.

ஓவரா பேசுவோம்

இந்தப் படத்தில் 4 பக்க வசனம் எழுதித் தந்தால் நாங்கள் 10 பக்கம் பேசுவோம். கடைசியில் இயக்குநர் தேவையானதை மட்டுமே எடுத்துக் கொள்வார். 'வருத்தப் படாத வாலிபர் சங்கம் 'படமே மூன்றரை மணிநேரம் இருந்தது. இயக்குநர்தான் குறைத்தார். தமிழ் பேசத் தெரிந்த படிக்கத்தெரிந்த அழகான கதாநாயகி கீர்த்தி சுரேஷ்.

லிங்குசாமி பேனரிலா நடிக்கிறாய்?

பலரும் கேட்டார்கள் ஏன் இந்தப் பேனரில் செய்கிறாய் என்று. அவர்களுக்குப் பிரச்னை இருக்கிறது என்றனர். எல்லாருக்கும்தான் பிரச்னை இருக்கிறது. நாம் படம் எடுத்தோம், ஓட வேண்டும், ஜெயிக்க வேண்டும் என்பதை விட, அது கஷ்டத்தில் இருக்கும் ஒருவருக்கு கூட நிற்கிற மாதிரி இருந்தால் அது மகிழ்ச்சிதானே?

மனுஷனா நடந்துக்க வேணாமா?

படம் வரும் போகும், ஓடும் ஓடாது. ஆனால் மனுஷனாக நடந்து கொள்ள வேண்டும் என்று நினைத்தேன் அதனால் இப்படிப்பட்டவர்களோடு சேர்ந்து ஜெயிக்க வேண்டும் என்று நினைத்தேன். சோதனையை சந்தித்தால்தான் சாதனை,'' என்றார்.