என் வாழ்வில் முக்கிய தூண்டுகோல் ரஜினி : ரகுமான்!

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

என் வாழ்வில் முக்கிய தூண்டுகோல் ரஜினி : ரகுமான்!

7/15/2011 3:50:56 PM

சிறுநீரக பிரச்னைக்காக சிகிச்சை பெற்று வந்த நடிகர் ரஜினிகாந்த், சிங்கப்பூரில் இருந்து பூர்ண குணமடைந்து நேற்று சென்னை திரும்பினார். சென்னை விமான நிலையத்தில் சூப்பர் ஸ்டாருக்கு ரசிகர்கள் அமோக வரவேற்பை தந்தனர். இந்நிலையில் சினிமாவிலுள்ள நட்சத்திரங்களும் சூப்பர் ஸ்டாரை நலம் விசாரித்து வருகின்றனர். இதனையடுத்து இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் தனது டூவிட்டரில் ரஜினியை புகழ்ந்து தள்ளியுள்ளார். தன்னுடைய டூவிட்டரில் 'என் வாழ்வில் முக்கிய தூண்டுகோலாக ரஜினிகாந்த் இருக்கிறார்Õ என குறிப்பிட்டிருக்கிறார் இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான். மேலும் சூப்பர் ஸ்டார் விரைவில் முழு உடல்தகுதி பெற்று ‘ராணா’ படப்பிடிப்பில் கலந்து கொள்ள இறைவனிடம் பிரார்த்தனை செய்வதாக ரகுமான் குறிப்பிட்டுள்ளார். ராணா படத்தில் இன்னும் இரண்டு பாடல்கள் மட்டுமே பாக்கி உள்ளதாக கூறிய ரகுமான், ரஜினியின் வருகைக்காக காத்திருக்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

 

தெய்வ திருமகள் - திரைப்பட விமர்சனம்


நடிப்பு - விக்ரம், அனுஷ்கா, அமலா பால், சந்தானம், நாசர், பேபி சாரா

பாடல்கள் - நா முத்துக்குமார்
இசை - ஜீவி பிரகாஷ்குமார்
ஒளிப்பதிவு - நீரவ்ஷா
எடிட்டிங் - ஆண்டனி

தயாரிப்பு - எம் சிந்தாமணி & ரோனி ஸ்க்ரூவாலா
எழுத்து - இயக்கம் - விஜய்

மக்கள் தொடர்பு - ஜான்சன்

கண்களைவிட்டு அகல மறுக்கும் இயற்கை காட்சிகள், மனதை வருடும் இசை, எந்த இடத்திலும் இயல்பு மீறாத நடிகர்கள், இறுதிக் காட்சி முடிந்த பிறகும் இருக்கையோடு கட்டிப் போடும் திரைக்கதை, மனதின் நெகிழ்ச்சியை கண்களில் வழிய வைக்கும் உயிர்ப்பான இயக்கம்...

-நாம் பார்ப்பது தமிழ் சினிமாதானா என்று ஒருமுறை கிள்ளிப் பார்த்துக் கொள்ள வேண்டியிருந்தது, தெய்வத் திருமகள் படம் முடிந்ததும்.

ஹாட்ஸ் ஆஃப் விஜய்... . படத்துக்குப் படம் அதிகரிக்கும் சினிமா மீதான உங்கள் காதலை, ரசிகர்களுக்கு நல்ல விஷயங்களை மட்டுமே தர வேண்டும் என்ற உங்கள் வைராக்கியத்தை பாராட்டாமல் இருக்க முடியவில்லை.

'ஐ யாம் சாம் என்ற ஆங்கிலப் படத்தின் தழுவல்தான் இந்த தெய்வத் திருமகள் என்றாலும், தமிழ் சினிமாவில் ஒரு முக்கியமான படம். வக்கிர அழுக்கும் மசாலா தூசும் நிறைந்த கோடம்பாக்கத்தில் பொலிவுறத் துடைத்தெடுத்து வந்த ரவிவர்மா ஓவியம் மாதிரி அத்தனை நேர்த்தி இந்தப் படத்தில்.

மனவளர்ச்சி குன்றிய கிருஷ்ணா (விக்ரம்) வுக்கும், அவரது காதல் மனைவிக்கும் பெண் குழந்தை பிறக்கிறது. ஆனால் அந்தக் குழந்தை பிறக்கும்போதே தாய் இறந்துவிட, மகளை வளர்க்கும் பொறுப்பு மனதளவில் குழந்தையாகவே உள்ள விக்ரமுக்கு. நிலா எனப் பெயரிட்டு வளர்க்கிறார்.

மகள் பள்ளி செல்லும் போது வருகிறது பிரச்சினை. ஒருநாள் திடீரென்று அந்த செல்ல மகளை கிருஷ்ணாவின் பணக்கார மாமனார் தூக்கிக் கொண்டு போய்விடுகிறார். மனவளர்ச்சி குன்றியவனுடன் குழந்தையை விட முடியாது என நியாயம் பேசுகிறார்.

வழக்கறிஞர் அனுராதா துணையுடன் நீதிமன்றம் போகிறான் கிருஷ்ணா. மகளைப் பார்க்க முடியாமல் தவி்க்கிறான். இந்த பாசப் போராட்டத்திலும் சட்ட யுத்தத்திலும் யார் ஜெயிக்கிறார்கள் என்பதை நெகிழ வைக்கும் விதமாய் சொல்லியிருக்கிறார் விஜய்.

தமிழில் இதற்கு முன் இதே மாதிரி பெற்றால்தான் பிள்ளையா, சின்னக் கண்ணம்மா என மிகச் சில படங்கள் இப்படி வந்திருந்தாலும், இந்தப் படம் அவற்றிலிருந்து ரொம்பவே வித்தியாசப்படுகிறது. காரணம், கதையின் நாயகன்.

மனப் பிறழ்வு (autism) நோயால் பாதிக்கப்பட்ட தந்தையாக விக்ரம். இவரது நடிப்பை வர்ணிப்பது, 'இனிப்பு இனிப்பாக இருக்கிறது' என்பதைப் போன்றதுதான். தனது அடுத்த பரிமாணத்தை கொஞ்சமும் அலட்டிக் கொள்ளாமல் தந்திருக்கிறார் மனிதர். இந்தக் காட்சி, அந்தக் காட்சி என பாகுபடுத்திப் பார்க்க முடியாத அளவுக்கு அசத்தியிருக்கிறார். நடிப்பு ராட்சஸன்!!

இவருக்கு அடுத்து நடிப்பில் இதயத்தைத் திருடுவது குழந்தை சாரா. அழகும் விவேகமும் நிறைந்த இந்தக் குழந்தை உண்மையிலேயே தெய்வத் திருமகள்தான் போங்கள்!

அனுஷ்காவுக்கு அருமையான வாய்ப்பு இது. அவரும் சிறப்பாக பயன்படுத்திக் கொண்டுள்ளார்.

குறிப்பிடத்தக்க இன்னொருவர் நம்ம சந்தானம். ஒரு வசனம் கூட எல்லைமீறாத அளவுக்கு அவரை சிறப்பாகக் கையாண்டிருக்கிறார் இயக்குநர் விஜய்.

குழந்தையின் சித்தியாக வருகிறார் அமலா பால். அழகாக வந்து போகிறார். எம்எஸ் பாஸ்கர், நந்தகுமாராக வரும் கிஷோர், சச்சின் கெடேகர், குறிப்பாக நாசர் என அனைவருமே உணர்ந்து நடித்துள்ளனர்.

நீதிமன்றக் காட்சிகள் வெகு யதார்த்தமாக சித்தரிக்கப்பட்டுள்ளன. கடைசி காட்சியில் நாசரின் முடிவான பதிலுக்காக பக்பக் இதயத்தோடு நீதிபதியே காத்திருக்க, அதைப்பற்றியெல்லாம் கவலைப்படாமல், அப்பாவும் மகளும் சைகையால் அன்பைப் பரிமாறிக் கொள்ளும் காட்சியில் அழாத கண்களில் கண்ணீர் வற்றிவிட்டதென்று அர்த்தம்!

ஜீவி பிரகாஷின் இசை உண்மையிலேயே பிரமாதம். இப்போதுதான் அவர் காட்சிகளை உணர்ந்து இசை தருகிறார். தந்தை பாடும் தாலாட்டில் இசையும் முத்துகுமாரின் வரிகளும் அற்புதம். அந்த கதை சொல்லும் பாடலை படமாக்கிய விதம், விஜய்க்குள் இருக்கும் சூப்பர் ஆக்ஷன் பட ஆர்வத்தைக் காட்டுகிறது.

விஜய்யின் இன்னொரு வலது கரமாக நீரவ்ஷா. ஏசி இல்லாத தியேட்டரில் கூட ஊட்டியின் குளிரை வரவழைத்துவிடுகிறார் நீரவ்.

படத்தின் மைனஸ் என்று பார்த்தால்.... காட்சிகள் மெதுவாக நகர்வது, முதல் பாதியில் வரும் நீளமான சில காட்சிகள். ஆனால் முதல் சில நிமிடங்களிலேயே படம் பார்க்கும் ரசிகனை கதைக்குள் ஈர்த்துவிடுகிறார் விஜய். அதன்பிறகு அந்த ரசிகன் எழுந்திருப்பது 'எ பிலிம் பை விஜய்' என்ற எழுத்துக்கள் ஒளிரும்போதுதான்.

அந்தக் காட்சியில் அத்தனை பேரும் பேதமின்றி கைதட்டியது, விஜய்யின் உழைப்புக்கு கிடைத்த அங்கீகாரம்.

கமர்ஷியல், க்ளாஸிக் என்ற எல்லைக் கோடுகளைத் தாண்டி பார்த்து அனுபவிக்க வேண்டிய படம்!
 

லிங்குசாமியின் அட்வைஸ்!

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

லிங்குசாமியின் அட்வைஸ்!

7/15/2011 3:28:46 PM

இயக்குனர் லிங்குசாமியின் திருப்தி பிரதர்ஸ் பேனரில் படம் செய்யும் இயக்குனர்களுக்கு புது அட்வைஸ் ஒன்றை சொல்லியிருக்கிறார். ‘கதைக்கு பொருத்தமான ஹீரோ கிடைக்கும்போதுதான் படம் வெற்றி பெறும். ஹீரோ தேர்வில் கவனமாக இருக்க வேண்டும்’ என தனது பேனரில் படம் இயக்க வருபவர்களுக்கு அட்வைஸ் வழங்குகிறார் டைரக்டர் லிங்குசாமி. அப்படி தேர்வு செய்ததால் தான் மைனா போன்ற படங்கள் மக்கள் மத்தியில் அதிமாக பேசப்பட்டதாக லிங்குசாமி கூறினார்.

 

நட்சத்திர கூட்டம் கட்டாயமில்லை

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

நட்சத்திர கூட்டம் கட்டாயமில்லை

7/15/2011 3:18:03 PM

'பார்த்தோம் பழகினோம்’ பட இயக்குனர் ராசு மதுரவன் கூறியது: 'பூ மகள் ஊர்வலம்’, 'பாண்டி’, 'மாயாண்டி குடும்பத்தார்’, 'கோரிப்பாளையம்’, 'முத்துக்கு முத்தாக’ படங்களையடுத்து 'பார்த்தோம் பழகினோம்’ படத்தை இயக்குகிறேன். பள்ளி பருவத்தில் என்னுடன் படித்த நண்பன், பெண்கள் பின்னால் சுற்றுவான். அப்படி சுற்றியவர்களில் ஒரு பெண் இவனை உயிருக்கு உயிராக காதலித்தாள். அந்த காதலி அதிசயமான ஒரு முடிவை எடுத்தாள். அந்த சம்பவமே கதையாக உருவாகி இருக்கிறது. அன்பு ஹீரோ, ஜோஸ்னா ஹீரோயின். 'ஜித்தன்’ ரமேஷுக்கு முக்கிய வேடம். எனது படங்களில் குடும்ப உறவுகளை அதிகம் அலசுவேன். இதனால் கடந்த 3 படங்களில் நட்சத்திர கூட்டம் அதிகம் பேர் இடம்பெற்றனர். எல்லா கதைக்கும் நட்சத்திர கூட்டம் என்பது கட்டாயமில்லை. 'பார்த்தோம் பழகினோம்’ படத்தில் நட்சத்திர கூட்டம் குறைவுதான்.

 

விவகாரத்து செய்யவில்லை, ஒன்னாத் தான் இருக்கோம்: பூமிகா


தனக்கும், தனது கணவருக்கும் இடையே எந்த பிரச்சனையும் இல்லை என்றும், ஒன்றாகத் தான் இருப்பதாகவும் நடிகை பூமிகா தெரிவித்துள்ளார்.

நடிகை பூமிகா, யோகா பயிற்சியாளர் பரத் தாகூரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். தற்போது இருவருக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டுள்ளதாகவும், அதற்காக பூமிகா மும்பை நீதிமன்றத்தில் விவகாரத்து கேட்டு மனு தாக்கல் செய்திருப்பதாகவும் செய்திகள் வெளியாகின.

குறிப்பாக பரத் தாகூர் படம் ஒன்றை எடுத்து நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும், இதனால் பூமிகா கடுப்பாகியுள்ளதாகவும் பேசப்பட்டது.

இதைப் பார்த்து பூமிகா அதிர்ச்சி அடைந்துள்ளார். இந்த செய்திகள் எல்லாம் வெறும் வதந்தி என்று கூறியுள்ளார்.

இது குறித்து அவர் கூறியதாவது,

எனக்கும், எனது கணவருக்கும் இடையே எந்த கருத்துவேறுபாடும் இல்லை. நாங்கள் ஒன்றாகத் தான் இருக்கிறோம். நாங்கள் விவாகரத்து பெற்று பிரிந்து வாழ்வதாக வதந்திகள் வந்த வண்ணம் உள்ளன. இதை நான் பலமுறை மறுத்துள்ளேன். ஆனாலும் வதந்திகள் நின்றபாடில்லை. இந்த வதந்திகளை நம்பாதீர்கள் என்றார்.

 

அப்போ குரோர்பதி... இப்ப லட்சாதிபதி: சோகத்தில் இலியானா!


தெலுங்கு நடிகை இலியானா தனது சம்பளத்தை ரூ. 1 கோடியாக குறைத்துள்ளார். இதன் மூலமாவது புதிய வாய்ப்புகள் கிடைக்கும் என்று எதிர்ப்பார்க்கிறார்.

தெலுங்கில் கொடிகட்டிப் பறக்கும் நடிகை இலியானா. சம்பள விஷயத்திலும் அவர் கொடிதான் உயரே பறந்தது. ரூ. 1 கோடி மட்டுமே கேட்டு வந்த இலியானா தனது படங்கள் வெற்றிகரமாக ஓடுவதால் சம்பளத்தை ரூ. 1.5 கோடியாக்கினார். நண்பன் படத்தில் அவர் சம்பளம் இதுதான்.

தற்போது அல்லு அர்ஜூனுடன் நடிக்க ரூ. 2 கோடி கேட்டுள்ளார். இவர் நாளுக்கு நாள் இப்படி ஒரேயடியாக சம்பளத்தை ஏற்றுவதால் அவரை ஒப்பந்தம் செய்யவே தயாரிப்பாளர்கள் தயங்கி வந்தனர்.

இப்போது அவர்களுக்கு ஒரு வாய்ப்பு வந்திருக்கிறது இலியானாவின் தொடர் தோல்விகள் காரணமாக.

இப்போது தோல்வி முகத்தில் உள்ள இலியானாவுக்கு இவ்வளவு கொட்டிக் கொடுப்பதை விட, புதுமுககங்களுக்கு குறைவாகக் கொடுத்து வேலை வாங்கலாமே என்ற நினைப்பில் தயாரிப்பாளர்கள் வேறு பக்கம் போய்விட்டார்களாம்.

அடடா எனக்கு வரவேண்டிய படமெல்லாம் மற்றவர்களுக்கு போகிறதே என்று இலியானா ஆதங்கப்பட்டுள்ளார். பின்பு தான் ஞானோதயம் பிறந்து தனது சம்பளத்தை ரூ. 1 கோடியாகக் குறைத்துள்ளார். நல்ல வேடம் என்றால் ரூ 50 லட்சத்துக்கும் ஓகே என்கிறாராம்!

 

நடிகை விஜயசாந்தியின் சென்னை நிலத்தை அபகரித்த முன்னாள் எம்.பியின் தம்பி கைது


சென்னை: சென்னை கோயம்பேட்டில் உள்ள தெலுங்கு நடிகை விஜயசாந்திக்குச் சொந்தமான நிலத்தை அபகரித்ததாக தமிழக முன்னாள் எம்.பி. ஒருவரின் தம்பியை போலீஸார் கைது செய்துள்ளனர்.

5.15 ஏக்கர் பரப்பளவிலான இந்த நிலம் விஜயசாந்தி உள்ளிட்ட 8 பேருக்குச் சொந்தமானதாகும். இதன் மதிப்பு ரூ. 130 கோடி என்கிறார்கள். இந்த நிலத்தை போலியான ஆவணங்களைத் தயாரித்து கடந்த 2008ம் ஆண்டு வெறும் ரூ. 8 கோடிக்கு விற்றுள்ளனர்.

இதுகுறித்து ஏற்கனவே போலீஸில் புகார் தரப்பட்டது. அதன் பேரில் மத்திய குற்றப் பிரிவு போலீஸார் 3 பெண்கள் உள்பட நான்கு பேரை கைது செய்துள்ளனர். இந்த நிலையில் தற்போது அதே நிலத்தை 70 கோடி ரூபாய்க்கு சிலர் விலை பேசி வருவதாக போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது. இதுதொடர்பாக புகாரும் வந்தது.

இதையடுத்து தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது. இறுதியில் வில்வமணி என்ற புரோக்கர் கைது செய்யப்பட்டார். இவர் முன்னாள் எம்.பி. ஒருவரின் தம்பியாவார். அந்த முன்னாள் எம்.பி. யார் என்பதை போலீஸார் தெரிவிக்கவில்லை. தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

 

பவுர்ணமி, தாஜ்மஹால்... தீபிகா படுகோன்!


தாஜ்மஹாலைக் காதலிக்காதவர்கள் யாராவது இருக்க முடியுமா… நம்ம ராணா நாயகி தீபிகா படுகோனேவும் இதற்கு விலக்கில்லை.

உலக அதிசயத்தில் ஒன்றாகவும், காதலின் சின்னமாகவும் கம்பீரமாக காட்சியளிக்கும் தாஜ்மஹாலுக்கு கடந்த ஆண்டில் மட்டும் தீபிகா 3 முறை சென்றுள்ளார். அதுவும் பவுர்ணமி அன்று தனியாகச் சென்று ரசித்திருக்கிறார்.

பவுர்ணமி நிலவே அழகு, அந்த அழகு நிலவின் வெளிச்சத்தில் தாஜ்மஹால் கொள்ளை அழகாகத் தெரியும். இதை பார்த்து ரசிக்கத்தான் தீபிகா தனியாகச் சென்றாராம்.

தீபிகாவின் இந்த ரகசிய தாஜ்மஹால் விசிட் அவர் நண்பர்களில் சிலருக்கு மட்டும் தான் தெரியுமாம். கடந்த ஆண்டு ஷூட்டிங்கிற்காக முதன்முதலாக தாஜ்மஹால் சென்றுள்ளார். அதன் அழகில் மயங்கி திரும்பத் திரும்ப சென்று கொண்டிருக்கிறார்.

தாஜ்மஹாலில் அப்படி என்னதான் பார்த்தாய்? என்று நண்பர் ஒருவர் கேட்டதற்கு தீபிகா கூறியதாவது,

நிலா வெளிச்சத்தில் தாஜ்மஹாலை பார்த்துக் கொண்டே இருப்பது நிம்மதியைத் தருகிறது என்று பதிலளித்தாராம்.

இந்தக் கேள்விய தீபிகாவிடம் கேட்டிருக்கவே வேண்டாம். காரணம் சித்தார்த் மல்லையாவை காதலிக்கும் அவர் நிலவொளியில் தனிமையில் என்ன மாதிரி மனநிலையில் இருந்திருப்பார் என்பதை புரிந்து கொள்ள முடிகிறதல்லவா!!

 

ரூ 45 லட்சம் விவகாரம்: வடிவேலு மீது பதிலுக்கு இணையதள ஆசிரியர் புகார்


சென்னை: வடிவேலுவால் ரூ 1 கோடி நஷ்டப்பட்ட மலேசிய நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் சார்பாக நடிகர் வடிவேலு மீது கமிஷனர் அலுவலகத்தில் புகார் கொடுத்தார் இணைய ஆசிரியர் செல்வகுமார்.

நடிகர் வடிவேலுவின் மேனேஜர் சங்கர் நேற்று முன் தினம் போலீஸ் கமிஷனர் திரிபாதியை சந்தித்து புகார் மனு ஒன்று கொடுத்தார்.

அப் புகார் மனுவில், “ரூ.45 லட்சம் பணம் கேட்டு, வடிவேலுவை ஒரு இணைய தள ஆசிரியர் செல்வகுமார் போனில் பேசி மிரட்டுகிறார். மலேசியாவில் கலைநிகழ்ச்சி நடத்த ஒப்புக்கொண்டுவிட்டு வரவில்லை என்றும் இதற்காக பணம் தரவேண்டும்.

இல்லாவிட்டால் இணைய தளத்தில் தவறான தகவல்களை வெளியிட்டு அசிங்கப்படுத்திவிடுவேன் என்றும் அந்நபர் அடிக்கடி மிரட்டுகிறார். இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்,”என்று கூறப்பட்டிருந்தது.

பதிலுக்கு புகார்…

இந்த நிலையில், வடிவேலு மீது இணையதள ஆசிரியர் செல்வகுமார் மோசடி புகார் மனு அளித்துள்ளார்.

அப்புகார் மனுவில், “நடிகர் வடிவேலு மலேசியாவில் நடந்த நட்சத்திர கலை விழாவுக்கு வருவதாக முன்பணம் பெற்றார். 2007-ம் ஆண்டு மலேசியாவை சேர்ந்த மைக்கேல் கானாவிடம் ரூ. 4 லட்சம் வாங்கினார். அந்த பணத்தை இன்றுவரை திருப்பித் தராமல் ஏமாற்றி வருகிறார்.

இந்திய தூதரகம் மூலமும் வடிவேலுக்கு பல கடிதங்கள் அனுப்பப்பட்டன. அப்போதைய முதல்வர் கருணாநிதிக்கும் கடிதம் அனுப்பப்பட்டது. ஆனாலும் பயன் இல்லை.

கலைநிகழச்சிக்கு வடிவேலு போகாததால் ரூ.1 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. எனவே வடிவேலு மீது புகார் அளிக்க எனக்கு பொது அதிகாரபத்திரம் வழங்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் புகார் அளிக்கிறேன். வடிவேலு மீதான புகாருக்கு போதுமான ஆதாரங்களையும், வீடியோ பதிவையும் கொடுத்துள்ளேன்,’’ எறு குறிப்பிட்டுள்ளார்.

 

ரூ 35 கோடி பட்ஜெட்டில் அஜீத் நடிக்கும் பில்லா -2 படம் நேற்று தொடங்கியது.


ரூ 35 கோடி பட்ஜெட்டில் அஜீத் நடிக்கும் பில்லா -2 படம் நேற்று தொடங்கியது.

சக்ரி டோலட்டி இயக்கும் இந்த படம், முன்பு வெளியாகி வெற்றி பெற்ற பில்லா படத்துக்கு முந்தைய கதையமைப்பைக் கொண்டதாகும்.

ஹதராபாதில் உள்ள ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் நேற்று படப்பிடிப்பு தொடங்கியது. முதல் நாள் ஷூட்டிங்கில் அஜீத், நாயகி ஹ்யூமா குரேஷி உள்ளிட்டோர் இந்தப் படப்பிடிப்பில் பங்கேற்றனர்.

ரூ 35 கோடி செலவில், இந்துஜா குழுமம் மற்றும் வைட் ஆங்கில் பிலிம்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்தின் முதல்கட்டப் படப்பிடிப்பு ஹைதராபாத் மற்றும் கோவா ஆகிய பகுதிகளில் நடக்கிறது.

மதராசபட்டணம் புகழ் செல்வகுமார் கலையை கவனிக்க, யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.

ஏப்ரல் 2012 ல் இந்தப் படம் வெளியாகும் என்கிறார்கள். அஜீத்தின் பொன்விழாப் படமான மங்காத்தா அடுத்த மாதம் வெளியாகிறது.

 

உலகைச் சுற்றி வந்த கமல்!


கிட்டத்தட்ட உலக ஒரு சுற்று சுற்றிவிட்டு, நேற்று சென்னையில் இறங்கினார் கமல் ஹாஸன்.

எதற்கு இந்த சுற்றல்… எல்லாம் விஸ்வரூபத்துக்காகத்தான்.

முன்பெல்லாம் எங்கெங்கே படப்பிடிப்பை வைத்துக் கொள்ளலாம் என டிஸ்கஸ் செய்து அங்குள்ள ஆட்களுக்கு சொல்ல ஏற்பாடு செய்யச் சொல்வார்கள்.

ஆனால் இப்போது நிலைமை மாறிவிட்டது. நேரடியாக சம்பந்தப்பட்ட லொகேஷனுக்கே போய், தங்கள் மனதில் உள்ள காட்சிக்கு அந்த இடம் பொருந்துகிறதா என்று பார்க்கிறார்கள். படத்துக்கு பட்ஜெட் போடுவது போல, இதற்கும் தனி பட்ஜெட்.

அப்படி போடப்பட்ட ஒரு பெரிய பட்ஜெட்டில் உலகைச் சுற்றிப் பார்த்து, லொகேஷன்களைத் தேர்வு செய்த விட்டு வந்திருக்கிறாராம் கமல்.

உலகிலேயே இதுவரை யாரும் பார்த்திராத பகுதிகளில் இந்தப் படத்தைப் படமாக்கப் போகிறாராம். படத்துக்கு பட்ஜெட் ரூ 100 கோடி.

ஆகஸ்ட் மாதம் படப்பிடிப்பு தொடங்குகிறது. முதல்கட்டமாக 45 நாட்கள் கனடா மற்றும் அமெரிக்காவில் படப்பிடிப்புக்கு திட்டமிட்டுள்ளனர்.

படத்தில் எல்லாம் முடிவாகிவிட்டது, ஒன்றைத் தவிர… அது, ஹீரோயின்!!

 

விரைவில் இந்திப் படத்தில் நடிக்கிறார் தமன்னா!

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
விரைவில் இந்திப் படத்தில் நடிக்கிறார் தமன்னா!

7/15/2011 12:24:42 PM

கேடி படம் மூலம் தமிழில் அறிமுகமான தமன்னாவின் முதல் திரையுலகப் பிரவேசம் நடந்தது இந்தியில். முதல் படம் ப்ளாப். இதனால் தெ‌ன்னிந்தியா பக்கம் கவனத்தை திருப்பினார். இப்போது சக்சஸ்ஃபுல் நடிகையாக மீண்டும் இந்திக்கு செல்கிறார். அஜய்தேவ்கானின் சமீபத்திய படங்களில் சிங்கம் படமே அதிக தொகைக்கு விற்பனையாகியுள்ளது. ஏறக்குறைய 80 கோடிகள். சிங்கம் தமிழில் வெளியான சிங்கத்தின் இந்தி ‌‌ரிமேக். அடுத்து தெலுங்குப் படமொன்றின் இந்தி ‌‌ரிமேக்கில் நடிக்கிறார். இந்தப் படத்திற்காக அவர் தமன்னாவை சிபா‌‌ரிசு செய்துள்ளார். தமன்னாவுக்கு தற்போ தமிழில் படங்களே இல்லை என்பது முக்கியமானது.




 

ஒரே நேரத்தில் இரண்டு படங்கள்

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
ஒரே நேரத்தில் இரண்டு படங்கள்

7/15/2011 12:21:26 PM

ஒரே நேரத்தில் இரண்டு படங்கள் என சீயானின் போக்கில் இப்போது ரொம்பவே மாற்றம். சுசீந்திரனின் ராஜபாட்டையில் நடிக்கும் அதேநேரம் அறிமுக இயக்குன‌ரின் கரிகாலன் படத்திலும் கவனம் செலுத்தி வருகிறார். ஹாரிஸ் இசையமைக்கும் இப்படம் ச‌ரித்திரப் பின்னணியை கொண்டது. ஆனாலும் கமர்ஷியல் படம்தான் என்று இப்போதே உறுதி தருகிறார். இந்த இரு படங்கœ பிறகு மீண்டும் இயக்குனர் விஜய்யுடன் இணையப் போகிறாராம். யுடிவி இந்தப் பத்தை தயா‌‌ரிக்கலாம் என்கிறார்கள்.




 

சிம்புவின் ஆசையை ஏற்க மறுத்த நயன்!

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

சிம்புவின் ஆசையை ஏற்க மறுத்த நயன்!

7/15/2011 12:12:58 PM

ஒஸ்தி படத்தில் ஒரு பாடலுக்கு ஆட சிம்பு நயன்தாராவிடம் கேட்டது இந்நேரம் தமிழகமெங்கும் தெ‌ரிந்திருக்கும். ஒஸ்தியின் ஒ‌ரி‌ஜினல் தபாங்கில் இந்தப் பாடல் இடம்பெறுகிறது. குத்துப் பாடல். ஆட முடியாது என்று கறாராக மறுத்திருக்கிறார் நயன்தாரா. அவருக்குப் பதில் ஸ்ரேயாவிடம் கேட்டிருக்கிறார்களாம். ஒரு பாடலுக்கு ஆடுவது ஸ்ரேயாவுக்கு புதிதல்ல. வடிவேலின் இந்திரலோகத்தில் ந.அழகப்பன் படத்துக்காக அவருடன் ஒரு பாடலுக்கு ஆடினார். ஸ்ரேயாவுக்காக பல லட்சங்கள் வா‌ரியிறைத்தார் வடிவேலு. வேறொன்றுமில்லை ஆடுவதற்குதான். பணம் கிடைத்தது… ஆனால் அ‌ஜித்துடன் நடிக்கும் வாய்ப்பு இதனால் ஸ்ரேயாவுக்கு பறிபோனது. சிம்புவுடன் ஆடுவதால் அப்படியொரு பாதிப்பு ஏற்பட வாய்ப்பில்லை. ஸ்ரேயா கண்டிப்பாக ஆடுவார் என்றே தோன்றுகிறது.

 

ஜாக்பாட் பூஜா

Television news, small screen news, chinnathirai news, television serials, chinnathirai serials, online chinnathirai serial

ஜாக்பாட் பூஜா

7/15/2011 12:18:20 PM

ஜெயா டிவியில் ஒளிப்பராகும் ஜாக்பாட் ஷோவில் நதியா நடத்தி வந்தார். இந்நிலையில் நதியாவுக்கு கல்தா கொடுக்க ஜெயா நிர்வாகம் ஏற்கனவே முடிவு செய்திருந்தது. நமிதா தொடங்கி பல பேர் அலசப்பட்டனர். இறுதியாக பெங்களூருவில் வேலைக்கு சென்று கொண்டிருக்கும் பூஜாவை பிடித்திருக்கிறார்கள். பூஜாஇலங்கையைச் சேர்ந்தவர். சீமானின் தம்பியில் நடித்த போது தமிழை சிறப்பாக கற்றுக் கொண்டார். சிங்களப் பெண்ணை எப்படி சீமான் தனது படத்தில் நடிக்க வைக்கலாம் என்று பூஜாவால் சீமானுக்கு எதிர்ப்புகளும் கிளம்பின. பூஜா சிங்களப் படத்தில் நடிக்கயிருக்கிறார் என்ற செய்தி தமிழகத்தில் ஆத்திர அலைகளை ஏற்படுத்தியது. இந்த பிரச்சனைகளுக்கெல்லாம் முடிவு கட்டியிருக்கிறது ஜெயா தொலைக்காட்சியின் நிர்வாகம்.

 

தள்ளி போகும் காஞ்சனா

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
தள்ளி போகும் காஞ்சனா

7/15/2011 12:09:36 PM

பார்ப்பவர்களை பயமுறுத்த வேண்டும் என்று லாரன்ஸ் எடுத்திருக்கும் படம் காஞ்சனா. முனி படத்தின் இரண்டாம் பாகம். இந்தப் படம் ஜூலை முதல் வாரத்தில் வெளியாகும் என்றார்கள். பிறகு ‌ரிலீஸ் தேதி 15 ஆம் தேதிக்கு மாறியது. படம் 15 ஆம் தேதி ‌ரிலீஸ் என விளம்பரமும் தந்தனர். இப்போது திடீரென மீண்டும் தேதியில் மாற்றம். 22 ஆம் தேதிதான் படம் வெளிவருகிறதாம். 15 ஆம் தேதி விக்ரமின் தெய்வத்திருமகள், ஹா‌ரிபாட்டர் ஏழாம் பாகம் என படங்கள் வெளியாகின்றன. இந்த நெருக்கடியில் காஞ்சனா ‌ரிலீஸ் தேதியை மாற்றியிருக்கிறார்கள்.




 

சென்னை விமான நிலையத்தில் ரஜினியை அவமதித்தார்களா?


சென்னை: சிறுநீரக பாதிப்புக்குச் சிகிச்சை பெற்று, பூரண குணமடைந்து சென்னைக்குத் திரும்பிய நடிகர் ரஜினிகாந்தை, விமான நிலையத்தில் அவமதிக்கப்பட்டதாக அவரது ரசிகர்கள் கூறுகிறார்கள்.

சிங்கப்பூருக்கு சிகிச்சைக்காக சென்றிருந்த ரஜினிகாந்த் புதன்கிழமை இரவு ஊர் திரும்பினார்.அவரை வரவேற்க பெருமளவில் ரசிகர்கள் விமான நிலையத்தில் திரண்டிருந்தனர்.

ரஜினிகாந்த் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானம் மூலம் புதன்கிழமை இரவு சென்னை திரும்பும் தகவல் கிடைத்ததால் அவரது ரசிகர்கள் புதன்கிழமை மதியம் முதலே மீனம்பாக்கம் விமான நிலையத்தில் குவியத் தொடங்கினார்கள்.

பாதுகாப்பு கருதியும், ரசிகர்களிடம் ரஜினி சிக்கி விடக் கூடாதே என்பதற்காகவும், ரஜினி எந்த வாயில் வழியாக வருவார் என்பதை இரவு 9.30 மணிவரை போலீஸார் ரகசியமாக வைத்திருந்தனர். இருப்பினும் ரஜினி வரும் பாதையைத் தெரிந்து கொண்ட ரசிகர்கள் அங்கு ஓடி காரை முற்றுகையிட்டனர். அவரை பத்திரமாக அங்கிருந்து அனுப்பி வைக்க தடியடி வரை போக வேண்டியதாயிற்று போலீஸாருக்கு.

முன்னதாக சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானத்தில் வந்திறங்கிய ரஜினிகாந்தும் மற்றவர்களும் வழக்கம்போல விமானப் பாலம் மூலம் வெளியே வந்தனர்.

வெளிநாட்டிலிருந்து வரும் பயணிகள் இமிக்ரேஷன் என்று அழைக்கப்படும் அனுமதி சோதனைக்குப் பிறகுதான் விமான நிலையத்திலிருந்து வெளியே செல்ல அனுமதிக்கப்படுவார்கள். முக்கியமான பிரமுகர்கள் இதுபோல வெளிநாட்டுப் பயணம் முடித்து இந்தியா திரும்புவதாக இருந்தால், அவர்களை விமானத்திலிருந்து இறங்கும் இடத்திலேயே வரவேற்று, இமிக்ரேஷன் அனுமதி அளிப்பது உண்டு.

இருப்பினும், ரஜினிகாந்த், 'இமிக்ரேஷன்' சோதனைக்கு நடத்தியே அழைத்துச் செல்லப்பட்டார். அவர் மூச்சிரைக்க நடந்து வந்ததைப் பார்க்கவே சங்கடமாக இருந்தது' என்று கண்கள் கலங்க தெரிவித்துள்ளார் பணியில் இருந்த காவல்துறை கான்ஸ்டபிள் ஒருவர்.

இதுபோன்ற நேரங்களில் பிரமுகர்களை ஏற்றிச் செல்ல டாடா சுமோ போன்ற வாகனங்கள்தான் பயன்படுத்தப்படும். ஆனால், ரஜினிகாந்த் ஒரு பழைய பஸ்ஸில் அழைத்துச் சென்று ஆறாவது வாயிலில் இறக்கிவிடப்பட்டார். ரஜினிகாந்த் ஒரு நோயாளியாக சிகிச்சை முடிந்து நாடு திரும்புகிறார் என்று தெரிந்தும் விமான நிலைய அதிகாரிகள் முன்னேற்பாடுகளைச் செய்திருக்க வேண்டாமா?'' என்று ஆதங்கம் எழுப்பியுள்ளனர் ரசிகர்கள்.

ரஜினி குடும்பத்தினர் மீதும் தவறு உள்ளது...

இத்தனை குளறுபடிகளுக்கும் ரஜினி குடும்பத்தினரும் ஒரு காரணம் என்கிறார் ரஜினி ரசிகர் ஒருவர்.

"1996-ல் ரஜினி வெளிநாட்டிலிருந்து திரும்பும்போது ரஜினி ரசிகர் மன்றத் தலைவர் சத்யநாராயணா முன்னேற்பாடுகளைக் கவனமாகச் செய்திருந்தார். அதேபோல, ரஜினி குடும்பத்தினர் முதல்வரின் அலுவலகத்தைத் தொடர்பு கொண்டிருந்தால், நிச்சயமாக அவர் தகுந்த ஏற்பாடுகளுக்கு உத்தரவிட்டிருப்பார். அவர்கள் சொல்லாதது தான் தவறு'' என்று கருத்துத் தெரிவித்தார் அவர்.
 

ரஜினியிடம் நலம் விசாரித்த கருணாநிதி- கனிமொழியின் நலம் விசாரித்த ரஜினி


சென்னை: சிங்கப்பூரில் சிகிச்சை பெற்று சென்னை திரும்பியுள்ள சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தை, திமுக தலைவர் கருணாநிதி தொலைபேசியில் தொடர்பு கொண்டு நலம் விசாரித்தார்.

அப்போது திகார் சிறையில் உள்ள கனிமொழியைப் பற்றியும், கருணாநிதியின் நலம் குறித்தும் ரஜினி விசாரித்துள்ளார்.

சிகிச்சை முடிந்து சிங்கப்பூரிலிருந்து புதன்கிழமை இரவு சென்னை வந்தார். கேளம்பாக்கம் பண்ணை வீட்டில் உள்ள அவரை வியாழக்கிழமை திமுக தலைவர் கருணாநிதி தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார்.

இதுகுறித்து திமுக தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

சிங்கப்பூரில் சிகிச்சைப் பெற்று திரும்பியுள்ள சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தை, தலைவர் கலைஞர் தொலைபேசியில் தொடர்பு கொண்டு நலம் விசாரித்தார். அப்போது என் மீது காட்டிய அக்கறைக்காக திமுக தலைவர் கருணாநிதிக்கு நன்றி தெரிவித்துக் கொண்ட ரஜினி, கனிமொழி குறித்தும் நலம் விசாரித்தார்.

-இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
 

ஹீரோயின் இல்லாத ஹீரோயின்: புலம்பும் மதுர் பண்டார்கர்


தனது படம் ஹீரோயினுக்கு இன்னும் எந்த ஹீரோயினையும் ஒப்பந்தம் செய்யவில்லை என்று இயக்குனர் மதுர் பண்டார்கர் தெரிவித்துள்ளார்.

மதுர் பண்டார்கர் 'ஹீரோயின்' என்ற படத்தை இயக்க முடிவு செய்து அதற்காக ஐஸ்வர்யா ராயை ஒப்பந்தம் செய்தார். ஒப்பந்தம் சில நாட்களிலேயே அமிதாப் தனது மருமகள் ஐஸ்வர்யா கர்ப்பமாக இருப்பதாகத் தெரிவித்தார்.

இந்த செய்தியைக் கேட்டு அனைவரும் சந்தோஷப்பட இயக்குனர் மதுர் பண்டார்கருக்கு மட்டும் தலையில் இடி விழுந்தது போலாகிவிட்டது. படத்திற்கு ஒப்பந்தம் செய்தபோது தான் கர்ப்பமாக இருக்கும் செய்தியை ஐஸ்வர்யா மறைத்துவி்ட்டார் என்று வருத்தப்பட்டார்.

ஹீரோயின் திரைக்கு வரும் முன்பே பரணுக்கு சென்றுவிட்டது. இந்நிலையில் மதுர் பண்டார்கர் தனது படத்தை தூசி தட்டி எடுத்து அதில் நடிக்க கதாநாயகியைத் தேர்வு செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளார் என்று செய்திகள் வந்தன. இதற்காக கரீனா கபூர் அல்லது பிரயங்கா சோப்ராவை அணுகக்கூடும் என்றும் கூறப்பட்டது.

நான் ஹீரோயின் படத்திற்காக புது கதாநாயகியைத் தேடுவதாக வரும் தகவல்கள் ஆதாரமற்றவை என்று அவர் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
 

இரண்டு மாதங்கள் ஓய்வு... ரஜினி ராணாவை மீண்டும் தொடங்குவது எப்போது?


சென்னை: நடிகர் ரஜினிகாந்த் உடல்நலம் பெற்று சென்னை திரும்பியுள்ள நிலையில் ராணா படத்தின் படப்பிடிப்பு மீண்டும் அக்டோபரில் தொடங்கும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அடுத்த செப்டம்பர் வரை ஓய்வெடுக்க உள்ள ரஜினிகாந்த், ராணா படப்பிடிப்பு தொடர்பாக இயக்குநருடன் ஆலோசனை நடத்த உள்ளார். அக்டோபர் மாதத்தில் படப்பிடிப்பு தொடங்கலாம் என்று திரைத்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

படம் தொடர்பான கலைஞர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களுக்கும் இந்த விஷயம் தெரிவிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. படப்பிடிப்பு தொடங்கும் வரை உள்ள இடைப்பட்ட காலத்தில் கதை மற்றும் திரைக்கதையை இன்னும் மெருகேற்றும் பணி நடக்கும் எனத் தெரிகிறது.

போயஸ் கார்டனில் உள்ள வீட்டில் வாஸ்துபடி மராமத்துப் பணிகள் நடப்பதால் ரஜினி இப்போது கேளம்பாக்கம் பண்ணை வீட்டில் தங்கி ஓய்வெடுப்பார்.

முன்னதாக சிங்கப்பூரில் 6 வார சிகிச்சைக்குப் பின்னர் ரஜினிகாந்த் நேற்று சென்னை திரும்பினார். விமானநிலையத்தில் ரசிகர்கள் அவரை தலைவா என கோஷம் எழுப்பி உற்சாகத்துடன் வரவேற்றனர்.

தனக்கே உரிய ஸ்டைல் மற்றும் சிரிப்புடன் கண்ணாடி அணிந்து வந்த ரஜினி, ரசிகர்களை நோக்கி கைகளை அசைத்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். ரசிகர்களுக்கு தன் நன்றியையும் தெரிவித்துக் கொண்டார். விரைவில் தன் ரசிகர்களைச் சந்திப்பார் அவர் என்றும் கூறப்படுகிறது.