திருமணம் செய்தேனா? ஜெனிலியா கோபம்!

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

திருமணம் செய்தேனா? ஜெனிலியா கோபம்!

9/24/2011 11:45:21 AM

இந்தி நடிகர் ரிதேஷ் தேஷ்முக்குடன் மீண்டும் நடித்து வருகிறார் ஜெனிலியா. ஏற்கனவே இருவரும் காதலித்து வருவதாக தகவல்கள் வரும் நிலையில், இந்தப் பட ஷூட்டிங்கின் போது இவர்கள் திருமணம் செய்துகொண்டதாக மும்பை வட்டாரத்தில் செய்தி வெளியானது. இதுபற்றி ஜெனிலியா கூறியதாவது: கடந்த ஐந்து வருடங்களாக இதைப்பற்றியே பேசிக்கொண்டிருக்கிறார்கள். எனது தனிப்பட்ட வாழ்க்கைப் பற்றி மற்றவர்களுக்கு ஏன் இவ்வளவு அக்கறை என்று தெரியவில்லை. எங்களுக்கு திருமணம் நடக்கவில்லை என்று பலமுறை சொல்லிவிட்டேன். இதற்கு மேல் என்ன சொல்லவென்று தெரியவில்லை. நாங்கள் திருமணம் செய்துகொள்ளவில்லை. அப்படி சொல்பவர்கள் எங்கே, எப்போது நடந்தது என்று சொல்ல முடியுமா? என் கல்யாண தேதியையும் அவர்கள் அறிவித்தால் நன்றாக இருக்கும். தயவு செய்து இனிமேல் இதுபற்றி பேச வேண்டாம். இதை கோரிக்கையாகவே வைக்கிறேன். இப்படி வரும் செய்திகள் எங்கள் இருவருக்குமே பாதிப்பை ஏற்படுத்துகிறது. குடும்பத்திலும் சலசலப்புகள் ஏற்படுகின்றன. ரிதேஷை எனக்கு பல வருடங்களாகத் தெரியும். நீண்டகால நண்பர்களாக இருக்கிறோம். அதைத்தாண்டி எங்களுக்குள் ஏதுமில்லை. இவ்வாறு ஜெனிலியா கூறியுள்ளார்.

 

இந்தியில் ஷாட்கட் ரோமியோ ஆகிறது தமிழ் திருட்டுப் பயலே!

bollywood news, latest bollywood news, tamil bollywood news, bollywood latest news, bollywood masala, cinema news

இந்தியில் ஷாட்கட் ரோமியோ ஆகிறது தமிழ் திருட்டுப் பயலே!

9/24/2011 11:48:28 AM

'திருட்டுப்பயலே' படத்தை இந்தியில், 'ஷாட்கட் ரோமியோ' என்ற பெயரில் ரீமேக் செய்கிறார் சுசி கணேசன். ஜீவன், சோனியா அகர்வால், மாளவிகா நடித்த படம், 'திருட்டுப் பயலே'. இதை சுசி கணேசன் இயக்கியிருந்தார். இந்தப் படம் இந்தியில் ரீமேக் ஆகிறது. தமிழில் இயக்கிய சுசி கணேசன் இந்தியிலும் இயக்குகிறார். அமிஷா பட்டேலுடன் இணைந்து இந்தப் படத்தை தயாரிக்கும் சுசி கணேசன், இதுபற்றி கூறியதாவது: நீண்ட நாட்களுக்கு முன்பே இந்தப் படம் தொடங்க வேண்டியது. சில காரணங்களால் லேட் ஆகிவிட்டது. ஜீவன் கேரக்டரில் நீல் நிதின் முகேஷும், மாளவிகா கேரக்டரில் அமீஷா பட்டேலும் நடிக்கிறார்கள். சோனியா அகர்வால் கேரக்டருக்கு தமிழ் ஹீரோயினை நடிக்க வைக்கும் முயற்சியில் இருக்கிறோம். சில நடிகைகளிடம் பேசி வருகிறோம். இன்னும் முடிவாகவில்லை. இந்திக்காக, சில காட்சிகளில் மாற்றம் செய்துள்ளேன். ஹிமேஷ் ரேஷ்மியா இசை அமைக்கிறார். டெக்னிக்கலாக மிரட்டும் விதத்தில் படத்தை எடுக்க இருக்கிறோம். டிசம்பரில் ஷூட்டிங் தொடங்குகிறது. இவ்வாறு சுசி கணேசன் கூறினார்.

 

மயக்கம் என்ன போட்டோகிராபர் கதை!

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

மயக்கம் என்ன போட்டோகிராபர் கதை!

9/24/2011 11:57:55 AM

தனுஷ், ரிச்சா நடித்துள்ள படம், 'மயக்கம் என்ன'. இதுபற்றி நிருபர்களிடம் இயக்குனர் செல்வராகவன் கூறியதாவது: இந்தப் படத்துக்கு பல தலைப்புகள் மாற்றப்பட்டது உண்மை. இது சதாரண மனிதனின் வாழ்க்கையைச் சொல்லும் படம். அப்படிப்பட்டவன் வாழ்க்கையில் தடுமாற்றங்கள் இருக்கத்தானே செய்யும். அப்படித்தான் தலைப்பிலும் தடுமாற்றம். அண்ணன் தம்பி இணைந்து பணியாற்றுவதால் படம் சீக்கிரம் முடிந்து விடும் என்பதை தவிர வேறெந்த சவுகரியமும் இல்லை. இந்தப் படத்தில் ஒரு பாட்டு பாடியுள்ளேன். இதுதான் முதலும், கடைசியுமான பாட்டு. இனி பாடவே மாட்டேன். 'ஆயிரத்தில் ஒருவன்' மாதிரியான வித்தியாசமான படங்களை கைவிடவில்லை. அடுத்து புதிய முயற்சிகள் இருக்கும். போட்டோகிராபர்களை குறுகிய வட்டத்தில் வைத்து பார்க்கிறோம். அவர்கள் அதையும் தாண்டி சமூகத்துக்கு எவ்வளவு முக்கியமானவர்கள் என்பதை இதில் சொல்லியிருக்கிறேன். எனது எல்லாப் படங்களையும் போன்று இதிலும் கதாநாயகிக்கு முக்கியத்துவம் இருக்கும். அதை ரிச்சா சிறப்பாகச் செய்திருக்கிறார்.

 

7ஆம் அறிவை உருவாக்கியதில் கர்வம் இருக்கிறது : ஏ.ஆர்.முருகதாஸ்!

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

7ஆம் அறிவை உருவாக்கியதில் கர்வம் இருக்கிறது : ஏ.ஆர்.முருகதாஸ்!

9/24/2011 11:50:48 AM

ரெட் ஜெயன்ட் மூவீஸ் சார்பில் உதயநிதி ஸ்டாலின் தயாரிக்கும் படம், '7 ஆம் அறிவு'. சூர்யா, ஸ்ருதிஹாசன், ஹாலிவுட் வில்லன் ஜானி நடிக்கின்றனர். ஒளிப்பதிவு, ரவி கே.சந்திரன். இசை, ஹாரிஸ் ஜெயராஜ். பாடல்கள்: பா.விஜய், நா.முத்துக்குமார், கபிலன், மதன் கார்க்கி.  ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியுள்ளார். இதன் பாடல் வெளியீடு சென்னையில் நடந்தது. அஞ்சலி, லட்சுமி ராய், ருக்மணி, அபிநயா, இஷா ஷர்வானி ஆகியோரின் நடன நிகழ்ச்சி நடந்தது. படத்தின் டிரைலரை தனுஷ் வெளியிட, உதயநிதி ஸ்டாலின் பெற்றார்.

சூர்யா பேசும்போது, 'தமிழ் சினிமாவின் மைல் கல்லாக இந்தப் படம் இருக்கும். ஆயிரத்து 500 வருடங்களுக்கு முன் வாழ்ந்த மார்ஷியல் ஆர்ட்ஸ் குரு போதி தர்மனை, சீனாவில் கடவுளாக வணங்குகிறார்கள். அவர் தமிழர். காஞ்சிபுரத்தில் இருந்து அங்கு சென்றவர். அந்த வேடத்திலும் நடிக்கிறேன். சர்க்கஸ் கலைஞனாகவும் வருகிறேன்' என்றார். ஏ.ஆர்.முருகதாஸ் பேசும்போது, 'இதில் ஆராய்ச்சி இருக்கிறது. வரலாறு இருக்கிறது. மருத்துவம் இருக்கிறது. இதை நான் உருவாக்கி இருக்கிறேன் என்பதில் கர்வம் இருக்கிறது, திமிர் இருக்கிறது. படம் பார்த்த பிறகு ரசிகர்களும் கர்வப்படுவார்கள். படம் தீபாவளிக்கு ரிலீசாகிறது' என்றார். விழாவில் துரை தயாநிதி, எஸ்.பி.முத்துராமன், கே.எஸ்.ரவிகுமார், லிங்குசாமி, விஜய், சிவகுமார், கார்த்தி, அருண் விஜய், தனஞ்செயன் உட்பட கலந்து கொண்டனர். ஜெய், அஞ்சலி தொகுத்து வழங்கினர்.

 

சுந்தர்.சி இயக்கத்தில் விமல்!

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

சுந்தர்.சி இயக்கத்தில் விமல்!

9/24/2011 11:55:10 AM

சுந்தர்.சி இயக்கத்தில் விமல் நடிக்கிறார். 'நகரம்' படத்துக்குப் பிறகு, குஷ்புவின் அவ்னி சினி மேக்ஸ் தயாரிக்கும் படத்தை இயக்குகிறார் சுந்தர்.சி. பெயரிடப்படாத இப்படத்தில் அவர் நடிக்கவில்லை. விமல், 'தமிழ்ப் படம்' சிவா இணைந்து நடிக்கின்றனர். ஹீரோயின்களாக அஞ்சலி, பிந்து மாதவி நடிக்க பேச்சுவார்த்தை நடக்கிறது. தற்போது விமல் 'வாகை சூட வா', 'இஷ்டம்' படங்களில் நடித்து வருகிறார். சுந்தர்.சி இயக்கத்தில் அவர் நடிக்கும் படத்தின் ஷூட்டிங், நவம்பரில் தொடங்க இருக்கிறது.

 

நடிப்பு என் தொழில் அல்ல : ஸ்ரேயா கோஷல்!

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
நடிப்பு என் தொழில் அல்ல : ஸ்ரேயா கோஷல்!

9/24/2011 11:44:15 AM

'எந்திரன்' படத்தில், 'காதல் அணுக்கள்', 'விண்ணைத்தாண்டி வருவாயா' படத்தில் 'மன்னிப்பாயா', 'மைனா' படத்தில் 'நீயும் நானும்' உட்பட ஏராளமான ஹிட் பாடல்களை பாடியிருப்பவர் ஸ்ரேயா கோஷல். சினிமாவில் நடிக்க வருவது பற்றி அவர் கூறியதாவது:  இந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம், உருது என பலதரப்பட்ட மொழிகளில் பாடியிருக்கிறேன். பாடுவதுதான் என் தொழில். இந்திப் படங்களில் எப்போதோ நடிக்க கேட்டார்கள். மறுத்துவிட்டேன். பின்னர், தமிழ், தெலுங்கிலும் நடிக்க கேட்டார்கள். அது எனது தொழில் அல்ல. நடிப்பு என்பது வேறு களம். அதற்கான எந்த திறமையையும் நான் வளர்த்துக்கொள்ளவில்லை. பாடுவதில்தான் எனது முழுக்கவனமும். அதில் இன்னும் சாதிக்க ஆசைப்படுகிறேன். இவ்வாறு ஸ்ரேயா கோஷல் கூறியுள்ளார்.




 

இனி டைரக்ஷன் இல்லை

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
இனி டைரக்ஷன் இல்லை

9/24/2011 11:41:43 AM

நடிப்பில் கவனம் செலுத்தி வருவதால் மீண்டும் படம் இயக்கவில்லை என்றார் தம்பி ராமய்யா. 'மனுநீதி', இந்திரலோகத்தில் நா.அழகப்பன்' படங்களை இயக்கியவர் இவர். தற்போது 'கும்கி' ஷூட்டிங்கில் இருக்கும் அவர் கூறியதாவது: புதுமுகங்களை வைத்து நான் இயக்கி நடித்துள்ள 'ஒரு கூடை முத்தம்' விரைவில் ரிலீசாகிறது. தேசிய விருது வாங்கிய பிறகு நிறைய படங்களில் நடிக்க கேட்கிறார்கள். 'மைனா'வில் கையில் விலங்கு வைத்துக்கொண்டு நடித்தேன். 'கும்கி'யில் மிகப் பெரிய விலங்கான யானையுடன் நடிக்கிறேன். இதையடுத்து 'சாட்டை', 'கழுகு', 'வாகை சூட வா', 'ஒஸ்தி', 'வேட்டை', 'ராஜபாட்டை' படங்களும் இருக்கின்றன. என் உதவியாளர் ஜெய்சங்கர் இயக்குனராகும் 'மன்னாரு' படத்துக்கு வசனம், பாடல்கள் எழுதி நடிக்கிறேன். இதில் அப்புக்குட்டி ஹீரோ. இப்போது நடிப்பில் முழுநேரம் கவனம் செலுத்தி வருவதால், மீண்டும் படம் இயக்கவில்லை.




 

கேன்சர் குழந்தைகளுக்காக ஷெரீன் அறக்கட்டளை!

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
கேன்சர் குழந்தைகளுக்காக ஷெரீன் அறக்கட்டளை!

9/24/2011 11:42:48 AM

தேசிய ரோஸ் தினத்தையொட்டி பெங்களூர் கித்வாய் நினைவு மருத்துவமனைக்குச் சென்ற ஷெரின், அங்கு கேன்சர் பாதிக்கப்பட்ட குழந்தைகளை சந்தித்து நேற்றுமுன்தினம் பரிசு பொருட்கள் வழங்கினார். பின்னர் அங்கு நடந்த கருத்தரங்கில் கலந்து கொண்டார். இதுபற்றி அவர் கூறியதாவது: எனக்கு நெருக்கமானவர்கள் சிலரை கேன்சருக்குப் பறிகொடுத்திருக்கிறேன். அதனால் கேன்சர் குழந்தைகள் மீது அதிக அக்கறை உண்டு. ஆண்டுதோறும் ரோஸ் தினத்தில் மட்டும் இக் குழந்தைகளை சந்திப்பதில்லை, நேரம் கிடைக்கும்போதெல்லாம் இங்கு வந்து விடுவேன். வெறும் இனிப்பும், பரிசு பொருட்களும் இவர்கள் வியாதியை குணப்படுத்திவிடாது என்பது தெரியும். அதனால் நான் சம்பாதிக்கும் பணத்தில் ஒரு பகுதியை சேமித்து வருகிறேன். கணிசமான தொகை சேர்ந்ததும் அறக்கட்டளை துவங்கி கேன்சரால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு ஹீமோதெரபி சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்ய இருக்கிறேன்.




 

சோனா பாலியல் தொல்லை விவகாரம் : எஸ்.பி.பி.சரணுக்கு முன்ஜாமீன்!

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

சோனா பாலியல் தொல்லை விவகாரம் : எஸ்.பி.பி.சரணுக்கு முன்ஜாமீன்!

9/23/2011 10:34:27 AM

மது விருந்தின்போது நடிகை சோனாவை பாலியல் ரீதியாக எஸ்.பி.பி.சரண் தொல்லை கொடுத்தாக நடிகை சோனா போலீசாரிடம் புகார் செய்தார். இதனையடுத்து சோனாவை பாலியல் ரீதியாக தாக்குதல் நடத்தியதாக தொடரப்பட்ட வழக்கில் திரைப்பட தயாரிப்பாளர் எஸ்.பி.பி.சரணுக்கு இரு வார இடைக்கால முன்ஜாமீன் வழங்கியுள்ளது சென்னை உயர்நீதிமன்றம். மேலும் மறுஉத்தரவு வரும்வரை தினமும் காலை 8 மணிக்கு பாண்டிபஜார் போலீஸ் நிலையத்தில் ஆஜராகி சரண் கையெழுத்திட வேண்டும் என நீதிபதி கூறினார். முன்னதாக, எஸ்பிபி சரண் தன்னிடம் தவறாக நடந்ததற்கு வீடியோ ஆதாரம் இருப்பதாகக் கூறி அவற்றை போலீஸ் கமிஷனரிடம் ஒப்படைத்தார் சோனா. மேலும் இன்று (வெள்ளிக்கிழமைக்குள்) சரண் தன்னிடம் மன்னிப்புக் கேட்டால் வழக்கை வாபஸ் வாங்குவதாகவும் அவர் கூறியிருந்தார்.

 

ஹீரோயின் ஆகிறார் ஸ்ரேயா கோஷல்?

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
ஹீரோயின் ஆகிறார் ஸ்ரேயா கோஷல்?

9/23/2011 10:50:15 AM

பிரபல பின்னணி பாடகியான ஸ்ரேயா கோஷல், தமிழ், கன்னடம், மலையாளம், மராத்தி, பெங்காலி என பல மொழிகளில் சினிமா பின்னணி பாடல்களை பாடி பிரபலமடைந்தவர். பல மொழிகளிலும் 180க்கும் மேற்பட்ட படங்களில் பின்னணி பாடி, 4 தேசிய விருதுகளை பெற்றுள்ளார். தமிழில் விண்ணை தாண்டி வருவாயா, சில்லுனு ஒரு காதல் உள்ளிட்ட படங்களில் பாடியதற்காக பல விருதுகளைக் குவித்தவர். கோஷல் பார்க்க சினிமா நடிகைகளைப் போலவே படு அழகாக இருப்பார். இதனால் அவரை நடிக்க வைக்க பலரும் முயன்றனர். ஆனால் அவர் ஜகா வாங்கிக் கொண்டே வந்தார். எல்லாருக்கும் 'நோ' என்ற பதிலை மட்டுமே கொடுத்து வந்த கோஷலும் இப்போது நடிப்பு வலையில் விழுந்து விட்டதாக தெரிகிறது. இயக்குநர் ஒருவர் கூறிய கதையைக் கேட்டு மெய்மறந்து போய் விட்டாராம். அந்தக் கதையில் நான் நடிக்கிறேன் என்று கூறியுள்ளாராம்.




 

'பாசக்கார பயபுள்ளைக, ஐ லவ் யூ இந்தியா!': பாரிஸ் ஹில்டன்


பாரிஸ் ஹில்டன் 3 நாள் பயணமாக இந்தியா வந்திறங்கியுள்ளார். வந்ததுமே நம் நாட்டை ரொம்பவும் பிடித்துவிட்டதாம்.

நடிகை, சோஷியலைட், கோடீஸ்வரி, தொழிலதிபர், மாடல் அழகி என பல அவதாரங்களைக் கொண்டவர் பாரிஸ் ஹில்டன். தனது கைப்பைகள் உள்ளிட்ட அலங்காரப் பொருட்களை அறிமுகப்படுத்த 3 நாள் பயணமாக இந்தியா வந்துள்ளார். இன்று மும்பையில் உள்ள சத்ரபதி சிவாஜி சர்வதேச விமான நிலையத்தில் வந்திறங்கினார்.

அங்கு அவரை வரவேற்க நூற்றுக்கணக்கான ரசிகர்களும், பத்திரிக்கைக்காரர்களும் குவிந்திருந்தனர். இதைப் பார்த்த பாரிஸ் அடடா இந்தியர்களுக்குத் தான் என் மேல் எவ்வளவு பாசம் என்று நெகிழ்ந்துவிட்டார்.

சந்தோஷத்தில் ஐ லவ் யூ இந்தியா என்று தெரிவித்துள்ளார். இந்திய பயணம் ஒரு அருமையான அனுபவமாக இருக்கும் என்று அவர் டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

அவர் மும்பையில் உள்ள ஜேடபுள்யூ மாரியட் ஹோட்டலில் தங்கியுள்ளார். அவர் பாலிவுட் நட்சத்திரங்கள் உள்பட பல முக்கிய பிரமுகர்களை சந்திக்கவிருக்கிறார்.

பாரிஸ் ஹில்டனுக்கு ஷாருக்கான் பார்ட்டி தரப்போகிறார் என்று பேசப்பட்டது. ஆனால் ஷாருக்கிடம் கேட்டதற்கு நான் ரா ஒன் படத்தில் பிஸியாக உள்ளேன். பாரிஸுக்கு பார்ட்டியெல்லாம் கொடுக்கவில்லை என்றார்.

அதுவும் சரிதான்…!

 

கல்யாணமாகலைன்னு எத்தனை முறைதான் சொல்வது- ஜெனிலியா எரிச்சல்


எனக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை என்று இன்னும் எத்தனை முறை தான் சொல்வதோ என்று நடிகை ஜெனிலியா கடுப்பாகியுள்ளார்.

நடிகை ஜெனிலியாவுக்கும், இந்தி நடிகர் ரித்தேஷ் தேஷ்முக்கிற்கும் திருமணம் நடந்துவிட்டது என்று அவ்வப்போது செய்திகள் வருவதும் அதை ஜெனிலியா மறுப்பதும் தொடர் கதையாகிவிட்டது.

இது குறித்து ஜெனிலியா கூறியதாவது,

எனக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. அனைவரிடமும் சொல்லிவிட்டுத் தான் திருமணம் செய்வேன். கடந்த 5 வருடங்களாக எனது திருமணத்தைப் பற்றியே பேசுகிறார்கள். என் தனிப்பட்ட வாழக்கையில் அப்படி என்ன தான் அக்கறையோ. நானும் எனக்கு திருமணம் ஆகவில்லை என்று பலமுறை சொல்லிவிட்டேன். இதற்கு மேல் என்ன சொல்வது என்றே தெரியவில்லை.

தயவு செய்து இனிமேல் எனக்கு ரகசியமாக திருமணமாகிவிட்டது என்று பேசாதீர்கள். இதனால் என் குடும்பத்திலும், ரித்தேஷ் குடும்பத்திலும் சலசலப்பு ஏற்படுகின்றது. நானும் ரித்தேஷும் நல்ல நண்பர்கள் அவ்வளவு தான். நட்பைத் தாண்டி எங்களுக்குள் வேறொன்றுமில்லை என்றார்.

இரு வீட்டாரும் பச்சைக்கொடி காட்டிவிட்டார்கள், 2012-ல் திருமணம் என்றார்களே. அப்போ அது அவ்வளவு தானா?

 

இங்கிலாந்தில் இன்னமும் சக்கைபோடு போடும் மங்காத்தா


'தல' அஜித் குமாரின் 50-வது படமான மங்காத்தா இங்கிலாந்தில் இன்னும் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

அஜித் நடித்த படம் மங்காத்தா தமிழகத்தை ஒரு கலக்கு கலக்கிக் கொண்டிருக்கிறது. இது அனைவருக்கும் தெரிந்ததே. ஆனால் இங்கிலாந்திலும் மங்காத்தா சூப்பராக ஓடிக் கொண்டிருக்கிறது என்பது உங்களுக்குத் தெரியுமா?

இங்கிலாந்தில் கடந்த 31-ம் தேதி ரிலீஸ் ஆனதில் இருந்து இது வரை ரூ. 1. 24 கோடி வசூல் ஆகியுள்ளது. இன்னமும் சக்கை போடு போட்டுக்கொண்டிருக்கிறது. இங்கிலாந்தில் மட்டுமில்லை சிங்கப்பூர், மலேசியா, அமெரி்க்கா உள்ளிட்ட பல நாடுகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.

இங்கிலாந்தில் ரீலீஸ் ஆன முதல் வார இறுதியில் மங்காத்தா பாக்ஸ் ஆபீசில் 15-வது இடத்தில் இருந்தது. அதே நேரத்தில் சல்மானின் பாடிகார்டும் ரிலீஸ் ஆனது என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையே, மங்காத்தாவின் ஒட்டுமொத்த பாக்ஸ் ஆபீஸ் வசூல் ரூ. 40 கோடியைத் தொட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
 

ப்ளீஸ், என்னை செல்வராகவனுடன் இணைத்துப் பேசாதீங்க: சோனியா


தயவு செய்து என்னை செல்வராகவனுடன் இணைத்துப் பேசாதீர்கள் என்று நடிகை சோனியா அகர்வால் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

நடிகை சோனியா அகர்வால் விவாகரத்திற்குப் பிறகு கதாநாயகியாக நடிக்கும் படம் ஒரு நடிகையின் வாக்குமூலம். இது சோனியாவின் வாழ்க்கை வரலாறு என்று கூறப்பட்டது. ஆனால் அதை சோனியா மறுத்துள்ளார். சோனியா அகர்வாலின் சொந்த வாழ்க்கையே இந்த படம் என்றும், கணவர் வேடத்தில் நடிக்க செல்வராகவன் தோற்றத்தில் நடிகர் தேடுவதாகவும் செய்திகள் வெளியாயின.

இது குறித்து அவர் கூறியதாவது,

ஒரு நடிகையின் வாக்குமூலம் எனது வாழ்க்கையை அடிப்படையாக வைத்து எடுக்கப்படும் படம் அன்று. அது அனைத்து நடிகைகளின் கதையையும் சேர்த்து எடுக்கப்படுகிறது. இதில் செல்வராகவன் போன்று எந்த கதாபாத்திரமும் இல்லை. அதற்காக யாரையும் தேடவும் இல்லை. அதில் இருப்பதே ஒரு ஆண் கதாபாத்திரம். அவரும் தற்போது நடித்து வருகிறார்.

என் வாழ்க்கையில் அவ்வளவு பரபரப்பான சம்பவங்களில் இல்லை. என் வாழ்க்கையை கேலிக்குரியதாக ஆக்கும் அவசியம் இல்லை. இந்த படம் எந்த ஒரு குறிப்பிட்ட நடிகையின் வாழ்க்கையும் அல்ல. தயவு செய்து என்னை செல்வராகவனுடன் இணைத்துப் பேசாதீர்கள். நாங்கள் ஒருவர் மீது ஒருவர் மரியாதை வைத்துள்ளோம் என்றார்.
 

தேதி குறிப்பிடாமல் தள்ளிப் போனது சைப், கரீனா திருமணம்


மன்சூர் அலி கான் பட்டோடி மறைவையடுத்து சைப் அலி கான், கரீனா கபூர் திருமணம் தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

சைப் அலி கானும், கரீனா கபூரும் நெடுங்காலமாக காதலித்து வருகின்றனர். இந்தா, அந்தா என்று ஒரு வகையாக 2012-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் திருமணம் செய்து கொள்ள முடுவெடுத்தனர். இந்நிலையில் சைப் அலி கானின் தந்தை மன்சூர் அலி கான் பட்டோடி உடல் நலக்குறைவால் மரணம் அடைந்தார்.

இன்னும் ஒரு ஆண்டிற்கு சைப் வீட்டில் எந்த கொண்டாட்டங்களும் இல்லை. இதையடுத்து சைப், கரீனா திருமணம் தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

தந்தை குணமாகி வந்துவிடுவார், படோடியில் உள்ள பாரம்பரிய அரண்மனையில் வைத்து கரீனாவை திருமணம் செய்து கொள்ளலாம் என்று சைப் நினைத்திருந்தார். ஆனால் விதி வேறு விதமாக நடந்துவி்ட்டது.
 

ப்ளீஸ், என்னை செல்வராகவனுடன் இணைத்துப் பேசாதீங்க: சோனியா



தயவு செய்து என்னை செல்வராகவனுடன் இணைத்துப் பேசாதீர்கள் என்று நடிகை சோனியா அகர்வால் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
நடிகை சோனியா அகர்வால் விவாகரத்திற்குப் பிறகு கதாநாயகியாக நடிக்கும் படம் ஒரு நடிகையின் வாக்குமூலம். இது சோனியாவின் வாழ்க்கை வரலாறு என்று கூறப்பட்டது. ஆனால் அதை சோனியா மறுத்துள்ளார். சோனியா அகர்வாலின் சொந்த வாழ்க்கையே இந்த படம் என்றும், கணவர் வேடத்தில் நடிக்க செல்வராகவன் தோற்றத்தில் நடிகர் தேடுவதாகவும் செய்திகள் வெளியாயின.
இது குறித்து அவர் கூறியதாவது,
ஒரு நடிகையின் வாக்குமூலம் எனது வாழ்க்கையை அடிப்படையாக வைத்து எடுக்கப்படும் படம் அன்று. அது அனைத்து நடிகைகளின் கதையையும் சேர்த்து எடுக்கப்படுகிறது. இதில் செல்வராகவன் போன்று எந்த கதாபாத்திரமும் இல்லை. அதற்காக யாரையும் தேடவும் இல்லை. அதில் இருப்பதே ஒரு ஆண் கதாபாத்திரம். அவரும் தற்போது நடித்து வருகிறார்.
என் வாழ்க்கையில் அவ்வளவு பரபரப்பான சம்பவங்களில் இல்லை. என் வாழ்க்கையை கேலிக்குரியதாக ஆக்கும் அவசியம் இல்லை. இந்த படம் எந்த ஒரு குறிப்பிட்ட நடிகையின் வாழ்க்கையும் அல்ல. தயவு செய்து என்னை செல்வராகவனுடன் இணைத்துப் பேசாதீர்கள். நாங்கள் ஒருவர் மீது ஒருவர் மரியாதை வைத்துள்ளோம் என்றார்
 

ஐஸ்வர்யாவுக்கு இரட்டைக் குழந்தை?


ஐஸ்வர்யா ராய் வயிற்றில் ஒன்றுக்கு, இரண்டாக குழந்தைதகள் வளர்ந்து வருவதாக கூறப்படுகிறது. இதனால் அமிதாப் பச்சன் குடும்பமே மகிழ்ச்சியில் மூழ்கியுள்ளதாம்.

இருப்பினும் ஐஸ்வர்யா ராய் வயிற்றில் இரட்டை குழந்தைகள் வளருவது குறித்து பச்சன் குடும்பத்திலிருந்து அதிகாரப்பூர்வமாக எந்தத் தகவலும் தெரிவிக்கப்படவில்லை.

ஐஸ்வர்யா ராய்க்கும், அபிஷேக் பச்சனுக்கும் கடந்த 2007-ம் ஆண்டு திருமணம் நடந்தது. அதன் பின்னர் அவர் எப்போது கர்ப்பமாவார் என்று அவரது குடும்பத்தினரை விட மற்றவர்கள்தான் ஆர்வமாக எதிர்பார்த்து வந்தனர்.

இந்த நிலையில் சில மாதங்களுக்கு முன்பு தான் ஐஸ்வர்யா கர்ப்பமாக இருக்கிறார் என்று அமிதாப் பச்சன் அறிவித்தார்.

தற்போது ஐஸ்வர்யாவுக்கு இரட்டைக் குழந்தைகள் என்று மருத்துவர்கள் உறுதிபடுத்தியுள்ளதாக அவர்களுக்கு நெருங்கிய வட்டாரங்கள் தெரிவித்துளளது. இதனால் அமிதாப் குடும்பம் படுகுஷியாகியுள்ளது. இருக்காதா பின்னே இரட்டை சந்தோஷமாச்சே!.

ஐஸ்வர்யாவும், அபிஷேக்கும் மணி ரத்னத்தின் குரு படத்தில் கணவன், மனைவியாக நடித்திருந்தனர். அந்த படத்தில் அவர்களுக்கு இரட்டைக் குழந்தைகள் பிறப்பது போல காட்சி இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

எனக்கு குட்டி ஐஸ்வர்யா வேண்டும் என்று அபிஷேக்கும், பேரன் தான் வேண்டும் என்று அமிதாப்பும் தெரிவித்திருந்தனர். இருவரது விருப்பத்திற்கேற்ப இப்போது பெண் ஒன்றும், ஆண் ஒன்றுமாக பிறக்கப் போகிறதோ என்னவோ...!
 

கமிஷனரிடம் வீடியோ ஆதராம் கொடுத்தார் சோனா: பரபரப்பு பேட்டி


சென்னை: நடிகை சோனா சென்னை போலீஸ் கமிஷனர் திரிபாதியை சந்தித்து எஸ். பி. பி. சரணுக்கு எதிரான வீடியோ ஆதாரத்தை கொடுத்தார்.

மங்காத்தா வெற்றி பெற்றதற்காக அதில் நடித்த வைபவ் மதுவிருந்து கொடுத்தார். அதில் கலந்து கொண்ட தனக்கு எஸ்.பி.பி. சரண் பாலியல் தொல்லை கொடுத்ததாக நடிகை சோனா பாண்டிபஜார் போலீசில் புகார் கொடுத்தார். இதையடுத்து எஸ்பிபி சரண் மீது பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து சரண் முன்ஜாமீன் பெற்றுள்ளார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் கூடுதல் கமிஷனர் அபய்குமார் சிங்கை சந்தித்த சோனா தன்னிடம் வீடியோ ஆதாரம் இருப்பதாகத் தெரிவித்தார். அந்த ஆதாரத்தை பாண்டிபஜார் போலீசில் கொடுக்குமாறு அறிவுறுத்தப்பட்டார். ஆனால் அவர் வீடியோ ஆதாரத்தை பாண்டிபஜார் போலிசில் கொடுக்கவில்லை.

நேற்று பகல் 11. 30 மணிக்கு சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகம் வந்த சோனா கமிஷனர் திரிபாதியை சந்தித்து வீடியோ கேசட் ஒன்றைக் கொடுத்தார்.

முன்னதாக அவர் நிருபர்களிடம் கூறியதாவது,

நான் ஒரு தமிழ்ப்பெண். நாகர்கோவில் மாவட்டத்தில் உள்ள வெள்ளமடம் தான் எனது சொந்த ஊர். எனது தாய், ஆங்கிலோ இந்தியரான எனது தந்தையை காதலித்து திருமணம் செய்து கொண்டார். பூனேவில் பட்டப்படிப்பு படித்துக் கொண்டிருந்த நான் படிப்பை பாதியிலேயே நிறுத்திவிட்டு நடிக்க வந்துவிட்டேன். எனக்கு துணையாக எனது தாயார் உள்ளார் என்று கூறினார்.

தமிழ் பெண்ணாக இருந்து கொண்டு மது விருந்துக்கு அதுவும் தனியாகப் போகலாமா என்று கேட்டதற்கு,

நீங்கள் கேட்பது நியாயம் தான். ஆனால் என்ன செய்வது. சினிமாவில் இது எல்லாம் சகஜம். வெங்கட்பிரபு எனக்கு ஒரு படம் எடுத்துக் கொடுப்பதாக கூறியிருந்தார். அதனால் தான் அவருடைய அழைப்பை தட்டிக் கழிக்காமல் விருந்துக்கு சென்றேன். நான் சாப்பாடு மட்டும் தான் சாப்பிட்டேன். மது அருந்தும் பழக்கம் இருந்தது. ஆனால் அதை நிறுத்திவிட்டேன். எனக்கு 34 வயதாகிறது. நானும் ஒருவரை மணந்து, குழந்தை பெற்று வாழ ஆசைப்படுகிறேன். என் தாயார் எனக்கு நல்ல மாப்பிள்ளையை தேடி வருகிறார் என்றார்.

சரண் உங்களுக்கு எப்படி பழக்கம். அவர் உங்களை காதலித்தாரா என்றதற்கு,

எஸ்.பி. பாலசுப்பிரமணியம் என்கிற நல்ல மனிதருக்கு பிறந்த மோசமான மகன் தான் எஸ்.பி.பி. சரண். நாங்கள் ஒன்றும் காதலர்கள் அல்ல. சரண் ஏற்கனவே என்னிடம் தவறாக நடக்க முயற்சித்துள்ளார். அப்போதே நான் அவரை எச்சரித்தேன்.

ஆமாம், வீடியோ கேசட்டில் என்ன உள்ளது. அந்த மதுவிருந்தில் எடுக்கப்பட்டதா என்றதற்கு,

அந்த வீடியோவில் நானும், சரணும் இருக்கிறோம். நான் கொடுத்த புகாரின் அடிப்படையில் உள்ள ஆதாரம் அது. அதற்கு மேல் நான் எதுவும் கூற விரும்பவில்லை.

எஸ்.பி.பி. சரண் மன்னிப்பு கேட்டால் வழக்கை வாபஸ் பெறுவேன் என்று கூறியிருக்கிறீர்களே, ஏன்?

மன்னிப்பது தான் மனித மாண்பு. அவர் தனது தவறை ஒப்புக் கொண்டு மன்னிப்புக் கேட்டால் பிரச்சனையை இதோடு விட்டுவிடுவேன். வீடியோ கேசட்டை கொடுத்து நடவடிக்கையை துரிதப்படுத்துமாறு கமிஷனரை வற்புறுத்துவேன். என்னை சந்தித்து பேச வேண்டும் என்று எஸ்.பி. பாலசுப்பிரமணியம் தெரிவித்துள்ளார். அவரை நான் சந்திக்கவிருக்கிறேன் என்றார்.
 

ஆஸ்கர் விருதுப் போட்டி-எந்திரன் உள்பட 5 தமிழப் படங்கள் நிராகரிப்பு-மலையாளப் படம் தேர்வு


சிறந்த வெளிநாட்டுப் படத்திற்கான ஆஸ்கர் விருதுப் போட்டிக்கு இந்த முறை மலையாளப் படம் ஒன்று அனுப்பப்படுகிறது. இந்தப் போட்டியில் பங்கேற்ற எந்திரன், தெய்வத்திருமகள் உள்ளிட்ட 5 தமிழ்ப் படங்களும் தேர்வாகவில்லை.

எடிட்டர் பி.லெனினைத் தலைவராகக் கொண்ட 14 பேர் கொண்ட குழு இந்தியாவிலிருந்து இந்த ஆண்டு அனுப்பப்படும் படத்தைத் தேர்வு செய்ய நியமிக்கப்பட்டது. இந்தக் குழுவில் தமிழகத்தைச் சேர்ந்த கங்கை அமரன், ஏ.எஸ்.பிரகாசம் உள்ளிட்டோரும் இடம் பெற்றிருந்தனர்.

இந்தக் குழுவினர் எந்திரன், தெய்வத்திருமகள், கோ, ஆடுகளம், முரண் ஆகிய ஐந்து தமிழ்ப் படங்கள் உள்பட 16 படங்களைப் பரிசீலித்தனர். இறுதியில் மலையாளத்தில் வெளியான ஆதாமிண்டே மகன் அபு படம் தேர்வானது.

இந்தப் படத்தில் நாயகனாக நடித்த சலீம் சிறந்த தேசிய நடிகராக தேர்வு பெற்று, தனுஷுடன் சேர்த்து விருதளித்துக் கெளரவிக்கப்பட்டார் என்பது நினைவிருக்கலாம்.