முன்னாள் மந்திரியின் மருமகளை ரகசிய திருமணம் செய்த என்டிஆர் பேரன் நடிகர் தாரக் ரத்னா!

Ntr S Grandson Tarak Ratna Secretly

ஹைதராபாத்: முன்னாள் ஆந்திர அமைச்சர் மாதவ் ரெட்டியின் மருமகளும் டிசைனருமான அலெக்யா ரெட்டியை ரகசியமாக திருமணம் செய்தார் என்டி ராமராவின் பேரன் தாரக் ரத்னா.

என்டி ராமராவின் மகன் மோகன் கிருஷ்ணாவின் மகன்தான் இந்த தாரக் கரத்னா. இவரும் படங்களில் நடித்து வருகிறார். இவரது சமீபத்திய படம் நந்தீஸ்வருடு படத்தில் டிசைனராகப் பணியாற்றினார் அலெக்யா ரெட்டி. அப்போது இருவருக்கும் காதல் ஏற்பட்டதாம்.

கடந்த ஒன்றரை ஆண்டுகளாகக் காதலித்து, ஒரே வீட்டில் பார்ட்னர்களாக வசித்து வந்த இருவரும் சமீபத்தில் ரகசியமாகத் திருமணம் செய்து கொண்டனர்.

அலெக்யா ரெட்டி விவாகரத்து பெற்றவர். ஆந்திராவின் முன்னாள் உள்துறை அமைச்சர் மாதவ் ரெட்டியின் மகனை அவர் திருமணம் செய்தார். பின்னர் இருவரும் விவாகரத்து பெற்றுவிட்டனர்.

தாரக் ரத்னா - அலெக்யா ரெட்டி திருமணம் ரகசியமாக நடந்தாலும், இருகுடும்பத்தினரும் இதில் பங்கேற்றனர். நடிகர் பாலகிருஷ்ணாவும் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார். என்டிஆர் குடும்பத்தில் ஒருசிலர் மட்டும் திருமணத்துக்கு வரவில்லை.

என்டிஆரின் ஏழு மகன்களில் மிகவும் பணக்காரர் தாரக் ரத்னாவின் அப்பாவான மோகன் கிருஷ்ணாதான். தன் மகனுக்கு மிகப் பிரமாண்டமாக திருமணம் நடத்த ஆசைப்பட்டாராம். ஆனால் ஏற்கெனவே திருமணமாகி விவாகரத்து பெற்ற ஒரு பெண்ணை மகன் மணப்பதால், சத்தமில்லாமல் திருமணத்தை முடித்துவிட்டாராம்!

 

கண்ணீர் விட்டு அழுத கெளதம் மேனன்..!

Thanga Meengal Makes Gowtham Menon Cry

தங்க மீன்கள் என்ற படத்தைப் பார்த்து விட்டு எதுவும் பேசாமல் கண்ணீ விட்டு அழுதாராம் இயக்குநர் கெளதம் வாசுதேவ மேனன். அந்த அளவுக்கு அவரை அப்படம் வெகுவாக பாதித்து விட்டதாம்.

சினிமாவைப் பார்த்து ரசிகர்கள் உணர்ச்சிவசப்படுவதுதான் வழக்கம். ஆனால் சில படங்களைப் பார்த்து சினிமாக்காரர்களே நெகிழ்ந்து போய் விடுவதுண்டு. அப்படிப்பட்ட ஒரு படமாக உருவாகியிருக்கிறது தங்க மீன்கள்.

இயக்குநர் ராம் நடித்து, இயக்கியுள்ள படம்தான் தங்க மீன்கள். கற்றது தமிழ் படத்தின் இயக்குநர்தான் ராம். அப்படம் வர்த்தக ரீதியில் வெகுவாகப் போகாவிட்டாலும் கூட நல்ல படம் என்ற பாராட்டைப் பெற்றது. கதைக் கரு, கதையைச் சொன்ன விதம், தைரியம் ஆகியவற்றுக்காகப் பாராட்டப்பட்டார் ராம்.

அப்படத்திற்குப் பின்னர் அதில் நடித்த ஜீவாவும், அஞ்சலியும் வெகு தூரம் போய் விட்டனர். ஆனால் ராம் அப்படியே நின்று போய் விட்டார். இப்போது பெரும் இடைவெளிக்குப் பின்னர் மீண்டும் ஒரு உருக்கமான படத்துடன் வெளிவந்துள்ளார்.

தந்தைக்கு்ம், மகளுக்கும் இடையிலான பாச உணர்வு குறித்த படம்தான் தங்க மீன்கள். இதில் நாயகனாக நடித்திருப்பவர் ராம்தான். இப்படத்தின் கதையைக் கேட்ட இயக்குநர் கெளதம் மேனன், உருகிப் போய் விட்டாரம். தனது போட்டான் கதாஸ் நிறுவனமே இப்படத்தைத் தயாரிக்கும் என்று கூறி தயாரித்துள்ளார். படத்தின் முதல் காப்பியை அவருக்குப் போட்டுக் காட்டியுள்ளார் ராம். படத்தைப் பார்த்து முடித்த மேனன், எதுவும் பேச முடியாமல் அழுது விட்டாராம்.

இப்படம் குறித்து கெளதம் மேனன் கூறுகையில் தாரே ஜமீன் பர் படத்தைப் பார்த்து நான் நெகிழ்ந்து போனேன். இப்படிப்பட்ட படம் தமிழில் வேண்டும் என்று ஆசையாக இருந்தேன். அப்போதுதான் இயக்குநர் ராம் தங்க மீன்கள் கதையைச் சொன்னார். உடனே அது என்னைக் கவர்ந்து விட்டது. மேலும் அப்படத்தில் ஹீரோவாக அவரே நடிக்க வேண்டும் என்றும் நான்தான் சொன்னேன். காரணம், அவர் கதையைச் சொன்ன விதம். அவ்வளவு அருமையாக கதையை நடித்தேக் காட்டி விட்டார் ராம்.

படத்தில் தனது அபாரமான நடிப்புத் திறனைக் காட்டியுள்ளார் ராம். அவருக்குப் போட்டியாக பத்மப்ரியாவும், ரோகினியும் நடிப்பில் பிரமிக்க வைத்துள்ளனர் என்றார் மேனன்.

முதல் தடவை படத்தைப் பார்த்த போது அழுத மேனன், அடுத்தடுத்து மூன்று முறை பார்த்து விட்டாராம். மூன்று முறையும் அவரால் அழுகையைக் கட்டுப்படுத்த முடியவில்லையாம்.

கற்றது தமிழில் இசையில் கரைய வைத்த யுவன் ஷங்கர் ராஜாதான் இப்படத்திலும் இசை. ஒரு பாடலுக்கு நடித்தும் கொடுத்துள்ளாராம் யுவன். பாடல்களும், இசையும் பிரமிக்க வைத்துள்ளதாம். குறிப்பாக குழந்தைள் கீதம் என்ற பாடல் அத்தனை மாணவர்கள், சிறார்களை கட்டிப் போட்டு விடுமாம்.

இந்தப் பாடலை வைத்து தனியாக ஒரு இசை ஆல்பத்தையே உருவாக்கி விட்டனராம். இதற்காக பல்வேறு பள்ளிக்கூடங்களுக்குச் சென்று யுவன் ஷங்கர் ராஜா மாணவர்களை சந்தித்து அவர்களுடன் உரையாடி, ஆடிப் பாடியதை அப்படியே காட்சிப்படுத்தியுள்ளனராம்.

நல்ல படம் குறித்த செய்தியை கேட்கும்போதே எவ்வளவு சந்தோஷமா இருக்கு...

 

சுந்தரபாண்டியன் ஷூட்டிங்கில் பாலா - சசிகுமாருக்குப் பாராட்டு!

Bala Praises Sasikumar At Sundarapandian Sets

இயக்குநர் எம் சசிகுமார் நாயகனாக நடித்துக் கொண்டிருக்கும் புதிய படமான சுந்தரபாண்டியன் ஷூட்டிங் ஸ்பாட்டுக்கே வந்து பாராட்டியுள்ளார் இயக்குநர் பாலா.

போராளி படத்துக்குப் பிறகு சசிகுமார் நடிக்கும் புதிய படம் சுந்தரபாண்டியன். இந்தப் படத்தை எஸ் ஆர் பிரபாகரன் இயக்குகிறார். எஸ் ஆர் ரஹ்ந்தன் இசையமைக்கிறார்.

கும்கி படத்தில் நடித்த லட்சுமி மேனன் நாயகியாக நடிக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

சமீபத்தில் ஒரு நாள் படப்பிடிப்புத் தளத்துக்கு திடீர் விருந்தாளியாக வந்தார் இயக்குநர் பாலா.

செட்டிலிருந்த அனைவரும் அவரைப் பார்த்ததும் மகிழ்ச்சியுடன் வரவேற்றனர். படம் குறித்து நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்த பாலா, படத்தின் ஹீரோவும் தனது முன்னாள் உதவி இயக்குநருமான சசிகுமாரை வெகுவாகப் பாராட்டினார்.

"ரொம்ப கஷ்டப்பட்டு ஜெயிச்சவன் சசி. என்கிட்ட இருந்தபோது, இவனுக்குள் இப்படியொரு வெறித்தனமான சினிமா ரசிகன் இருப்பான் என்று தெரியவில்லை," என்றாராம்.

 

ஃபேண்டா குடித்து தமன்னாவை சந்தித்த அதிர்ஷ்டசாலிகள்

Fanta S Behind The Label Winners Me

ஃபேண்டா லேபிலுக்குப் பின்னால் அதிர்ஷ்ட போட்டியில் வென்றவர்களு்ககு நடிகை தமன்னாவை சந்தித்து பேசும் வாய்ப்பு கிடைத்தது.

கொக கோலா நிறுவனத்தின் கூல்டிரிங்கான ஃபேண்டாவின் தென்னிந்திய பிராண்டு அம்பாசிடராக நடிகை தமன்னா நியமிக்கப்பட்டார். நடிகை ஜெனிலியா திருமணமாகிப் போனதையடுத்து தான் தமன்னா பிராண்டு அம்பாசிடராகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் தனது வாடிக்கையாளர்களைக் கவர ஃபேண்டா புது முயற்சியில் இறங்கியது. இதையடுத்து கடந்த ஏப்ரல் மாதம் லேபிலுக்குப் பின்னால் அதிர்ஷ்டம் என்ற போட்டியை தமிழகத்தில் அறிமுகப்படுத்தியது. 1.25 லிட்டர், 2 லிட்டர் அல்லது 2.25 லிட்டர் ஃபேண்டா பாட்டில்களின் லேபிலுக்குப் பின்னால் வாடிக்கையாளர்களைக் கவரும் வகையில் பரிசுகள் அறிவிக்கப்பட்டிருந்தது. அதில் சில அதிர்ஷ்டசாலிகளுக்கு தமன்னாவை சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

அதன்படி அதிர்ஷ்டசாலிகள் சென்னையில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தமன்னாவை சந்தித்து பேசினர். வெற்றியாளர்களுக்கு தமன்னாவுடன் பேசியது கனவா, நனவா என்று தெரியாமல் சந்தோஷத்தில் மிதந்தனர்.

வெற்றியாளர் ஒருவர் கூறுகையில்,

எனக்கு மி்கவும் பிடித்த நடிகை தமன்னா. அவரை நேரில் சந்திப்பேன் என்று கனவிலும் நினைக்கவில்லை என்றார்.

 

டகுபதி ராணாவுடன் மீண்டும் த்ரிஷா காதல் - அடுத்த ஆண்டு திருமணம்?

The Reunion Trisha Raana Paves Star Weeding

தெலுங்கு சினிமாவில் இன்றும் முக்கிய இடத்தை வகிக்கும் த்ரிஷாவுக்கும் பெரிய இடத்துப் பிள்ளையான டகுபதி ராணாவுக்கும் மீண்டும் நெருக்கம் ஏற்பட்டுள்ளது.

விரைவில் இருவரும் காதலை அறிவிக்கும் அளவுக்கு இவர்களின் நெருக்கம் அமைந்துள்ளதாக தெலுங்கு சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

டகுபதி ராணாவுடன் கிசுகிசுக்கப்படாத நடிகைகளே இல்லை எனும் அளவுக்கு அவர் தீராத விளையாட்டுப் பிள்ளையாக இருக்கிறார் டோலிவுட்டில்.

முதலில் அவருக்கும் த்ரிஷாவுக்கும் நெருக்கம் என்று செய்தி வந்தது. ஆனால் கொஞ்ச நாளிலேயே இருவரும் கருத்து வேறுபாட்டில் பிரிந்து விட்டதாகக் கூறப்பட்டது.

த்ரிஷா இடத்தில் அடுத்து வந்தவர் ஜெனிலியா. அவரும் நிலைக்கவில்லை. அடுத்து ஸ்ரேயாவும் ராணாவும் ஒன்றாகவே வசிப்பதாக செய்தி வந்தது. ஆனால் ஸ்ரேயாவோ, ராணா குடும்பத்தில் தானும் ஒருத்தி என்றும், ஆனால் ராணாவை ரகசியமாக திருமணம் செய்யவில்லை என்றும் தெரிவித்தார்.

கொஞ்ச நாள் கழித்து பிரபு தேவாவுடன் த்ரிஷா நெருக்கமாக இருப்பதாகக் கூறப்பட்டது. அந்த நேரத்தில், த்ரிஷாவின் முன்னாள் பாய் பிரண்ட் ஆன ராணாவுடன் நயன்தாரா நெருக்கமாக இருப்பதாக செய்தி வெளியிட்டனர்.

இப்போது ஒரு சுற்று முடிந்து, மீண்டும் த்ரிஷாவும் ராணாவும் இணைந்துள்ளனர். சமீபத்தில் இருவரும் தனிப்பட்ட முறையில் மிக நெருக்கமாக புகைப்படங்கள் எடுத்துக் கொண்டார்களாம் ஹைதராபாதில். இதற்காக ஒரு சினிமா ஸ்டில் போட்டோகிராபரையும் அழைத்துச் சென்றிருந்தார்களாம்.

இந்த முறை தங்கள் காதலை இருவரும் அறிவிக்கக் கூடும் என்கிறார்கள். அடுத்த ஆண்டு திருமணமாகும் நட்சத்திர ஜோடி பட்டியலில் த்ரிஷா - ராணாவும் இடம்பெறக்கூடுமாம்!

 

பாண்டியராஜனின் ஆண்பாவம் படத்தை ரீமேக் செய்கிறார் உதயநிதி!

Udayanidhi Remake Aanpaavam

சென்னை: இளையராஜா இசையில் பாண்டியராஜன் நடித்து இயக்கி பெரும் வெற்றி கண்ட ஆண்பாவம் படத்தின் ரீமேக் உரிமையை பெரும் விலைக்கு வாங்கியுள்ளார் உதயநிதி ஸ்டாலின்.

இந்தப் படத்தை சந்தானமும் தானும் இணைந்து நடிக்க, ரீமேக் செய்ய உத்தேசித்துள்ளார்.

1985-ல் வெளியான படம் ஆண்பாவம். மறைந்த பாண்டியன் ஹீரோவாக நடித்திருந்தார். சீதா, ரேவதி, விகே ராமசாமி, ஜனகராஜுடன் பாண்டியராஜன் இன்னொரு ஹீரோவாக நடித்திருந்தார்.

இந்தக் காட்சி, அந்தக் காட்சி என்றில்லாமல், படம் ஆரம்பித்து நன்றி கார்டு போடும் வரை சிரித்துக் கொண்டே பார்த்த படம் ஆண்பாவம்தான். தமிழ் சினிமாவின் ட்ரென்ட்செட் படங்களில் ஒன்று இது.

படத்தின் முக்கிய ஹீரோ இசைஞானி இளையராஜா. அத்தனைப் பாடல்களும் தாறுமாறு ஹிட்!

விகே ராமசாமியும் அவரது அம்மாவாக நடித்திருந்த கொல்லங்குடி கருப்பாயியும் ரசிகர்களின் மனதில் நீங்காமல் நிலைத்துவிட்டார்கள்.

இந்தப் படத்தை இப்போது ரீமேக் செய்யும் முடிவில் இருக்கிறார் உதயநிதி. ஓகேஓகே வெற்றிக்குப் பிறகு, பெரிய வெற்றிப் படத்தைத் தந்தாக வேண்டிய கட்டாயத்தில் உள்ள உதயநிதிக்கு, ஆண்பாவம்தான் அதற்கேற்ற சரியான படம் என்று ஆலோசனை சொல்லப்பட்டதாம். அவரும் படத்தை மீண்டும் ஒருமுறை பார்க்க, பாண்டியராஜன் பாத்திரத்தில் தானும், பாண்டியன் பாத்திரத்தில் சந்தானமும் நடித்தால் பொருத்தமாக இருக்கும் என முடிவு செய்துள்ளாராம்.

படத்தை இயக்க மீண்டும் ராஜேஷையே கேட்டுக் கொண்டுள்ளாராம் உதயநிதி.

 

நயன்தாரா நல்ல ஆத்மா... ஒரே தொழிலில் இருப்பதால் அடிக்கடி பகிர்ந்து கொள்கிறோம்! - சொல்கிறார் சிம்பு

Nayanthara Is Good Soul Says Simbu   
சென்னை: நயன்தாரா பற்றியும், அவருடனான தனது நட்பு புதுப்பிக்கப்பட்டது குறித்தும் சிம்பு கருத்து தெரிவித்துள்ளார்.

நயன்தாரா நல்ல ஆத்மா என்றும், இருவரும் ஒரே தொழிலில் இருப்பதால் அடிக்கடி கருத்துக்களைப் பகிர்ந்து கொள்வதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நயன்தாராவும், சிம்புவும் நட்சத்திர ஓட்டலில் நடந்த விருந்து நிகழ்ச்சி ஒன்றில் திடீரென சந்தித்து பேசினர். நடிகர்-நடிகைகள் பலர் இந்த விருந்தில் பங்கேற்றார்கள்.

நயன்தாராவும், சிம்புவும் அருகருகே அமர்ந்து ஆழமாகப் பேசிக் கொண்டிருந்ததைப் பார்த்து, அவர்களைத் தனிமையில் விட்டுவிட்டு மற்றவர்கள் ஒதுங்கிப் போய்விட்டார்கள்.

நீண்டநேரம் இருவரும் மனம் விட்டுப் பேசிக்கொண்டு இருந்தனர். உடைந்து போன காதலை அவர்கள் புதுப்பித்துக் கொண்டதாக கூறப்பட்டது.

இதுகுறித்து சிம்பு கருத்து தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில், "நயன்தாரா, ஒரு நல்ல ஆத்மா. நாங்கள் நண்பர்களாகதான் இருக்கிறோம். எங்களுக்குள் காதல் என்று சொல்வது முட்டாள்தனமானது.

நாங்கள் நடிகர்களாக உள்ளோம். ஒரே தொழிலில் இருப்பதால் எங்களுக்கிடையே பகிர்ந்து கொள்கிறோம். நட்பையும் பகிர்ந்து கொள்கிறோம். சினிமா சம்பந்தமான விழாக்களிலும் பேசிக்கொள்கிறோம். அவரவர் வேலையை செய்து கொண்டு இருக்கிறோம். நயன்தாரா அவரது வேலையை சிறப்பாக செய்கிறார். அவர் நலமுடன் இருக்க எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்," என்றார்.
 

மனதிற்கு நிறைவு தரும் நிகழ்ச்சி தொகுப்பு: ஷில்பா

Namma Veetu Kalyanam Shilpa
விஜய் டிவியில் நம்ம வீட்டுக் கல்யணம் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் ஷில்பா விற்கு சீரியல் வாய்ப்பு வந்தாலும் அதில் நடிக்க விருப்பமில்லையாம். ஏனெனில் தனக்கு நடிக்கத் தெரியாது என்று ஓபனாக ஒத்துக்கொண்டுள்ளார்.

திரை உலக நட்சத்திரங்கள், பிரபலங்களின் திருமணத்தை தொகுத்து வழங்கும் ஷில்பா. திருமண நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவதற்காகவே அரசியல், சினிமா, விளையாட்டு என பலவற்றை கற்றுக்கொண்டிருக்கிறார். நட்சத்திர அந்தஸ்தில் உள்ளவர்கள் தங்கள் திருமணத்தை பற்றி சுவாரஸ்யமாக பேசும் போது இரு வீட்டாருக்கும் தெரியாத பல கதைகளை சுவாரஸ்யமாக தெரிவிக்கிறார்.

கேரளாவில் பிறந்தாலும் தமிழ் கலாச்சாரமுறைப்படியில் திருமணம் செய்து கொண்டார் ஷில்பா. இவரது கணவர் பரத் மத்தியபிரதேச மாநிலம் இந்தூரை சேர்ந்தவராம். நான்கு வருடங்கள் காதலித்து பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் முடித்துள்ளனர்.

நம்ம வீட்டுக் கல்யாணம் விஜய் டிவியில் 150 எபிசோடுகளுக்கு மேல் ஒளிபரப்பாகியுள்ளது. இந்த நிகழ்ச்சியில் கடந்த மார்ச் 25 ம் தேதி ஷில்பாவின் திருமண நிகழ்ச்சி ஒளிபரப்பானது. தன்னுடைய திருமண நிகழ்ச்சியை தானே தொகுத்து வழங்கியது தனக்கு பெருமை தரக்கூடியது என்கிறார் ஷில்பா.

ஷில்பா ஒரு தீவிர இந்துஸ்தானி இசைப் பிரியர். அதற்காக தற்போது முழுக்க முழுக்க ஹிந்துஸ்தானி இசை பாடல்களில் கவனம் செலுத்தி வருகிறார். கன்னடப் படம் ஒன்றில், ஒரு பாடலும் பாடியிருக்கிறார் ஷில்பா. விரைவில் தமிழிலும் பாடுவதற்கான முயற்சிகளைச் செய்து வருகிறார்.
 

எஸ். எஸ். ராஜமௌலி என்னும் திரை உலக ராட்சஷன்

Pani Rakshasudu Jakkanna S S Rajamouli
சினிமா நடிகர்கள் பற்றியும், நடிகைகள் பற்றியும் கொண்டாடும் மீடியாக்கள் இன்றைக்கு கொண்டாடுவது இயக்குநரை. எஸ்.எஸ்.ஆர் என்று அன்போடு அழைக்கப்படும் எஸ். எஸ். ராஜமௌலி இன்றைக்கு தெலுங்கு திரையுலகில் மட்டுமல்லாது தென்னிந்திய திரை உலகத்தின் மோஸ்ட் வாண்டட் இயக்குநர். சனிக்கிழமை மாலை நேரத்தில் சினிமாக்களை பார்க்கப்பிடிக்காமல் செய்தி சேனலை திருப்பியபோது புதிய தலைமுறை தொலைக்காட்சியில் எஸ்.எஸ். ராஜமௌலியின் வெற்றிப்பயணத்தின் தொகுப்பை ஒளிபரப்பினார்கள். அதுவே சுவரஸ்யம் மிக்க சினிமாவாக போல இருந்தது.

ஜூனியர் என்.டி.ஆர் ஐ வைத்து ஸ்டூடன்ட் நம்பர் 1 இயக்கியது தொடங்கி சாதாரண ஈ யை கதைக் கருவாக வைத்து மிரட்டியது வரை ஒவ்வொன்றாக எடுத்துக்காட்டினார்கள். நான் ஈ படம் பார்த்துவிட்டு யார் இந்த ராஜமௌலி என்று யோசித்த ரசிகர்கள் ராஜமௌலி என்றால் பணி ராட்சஷன் என்பதை புரிந்து கொண்டிருப்பார்கள். அப்படித்தான் செல்லமாய் அவர் அழைக்கப்படுகிறார். எந்த செயலானாலும் கடுமையாய் உழைத்து வெற்றியை ருசித்தபின்னர்தான் வேறு வேலையைப் பார்ப்பாராம்.

தனது முதல் படமான Student No: 1ல் ஆரம்பித்து தனது ஒன்பதாவது படமான ஈகா /நான் ஈ வரை ராஜமௌலி எடுத்துக்கொண்ட களன்கள், கதைகள், காதாபத்திரங்கள் என அனைத்தும் வேறு வேறு. ஆனால் வெற்றி மட்டும் தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறது.

ராஜமொளலியின் திரைப்பட வெற்றிக்கு அவர் மட்டுமே பாடுபடவில்லை அவருடன் அவருடைய தகப்பனார், மனைவி, குழந்தைகள் என அனைவரும் ஒன்றினைந்து பாடுபடுகின்றனர் என்று அந்த நிகழ்ச்சியில் ஒளிபரப்பினார்கள். திரைப்படத்துறையில் உள்ள எந்த இயக்குநருக்குமே கிடைக்காத பாக்கியம் இது.

எந்த வெற்றியும் எளிதில் கிடைத்து விடுவதில்லை. ராஜமௌலிக்கும் அப்படித்தான். ஆனால் அவர் இயக்கிய படங்களை ரீமேக் என்ற பெயரில் எடுத்து தமிழ் இயக்குநர்கள் சொதப்பிவிடுகின்றனர். இதில் ஒரு சில விதி விலக்கு. இந்த நிலை ‘நான் ஈ' திரைப்படத்திற்கும் வந்துவிடக்கூடாது என்று நினைத்துதான் ஒரே நேரத்தில் தெலுங்கிலும், தமிழிலும் வெளியிட்டாரோ என்னவோ. சலித்துப்போகுமளவிற்கு வெற்றியை ருசித்தும் சற்றும் தலைகனமில்லாத மனிதராக இருக்கும் எஸ்.எஸ்.ஆர் தென்னிந்திய திரை உலகின் வித்தியாசமான இயக்குநர் என்பதை புரிந்து கொள்ளமுடிந்தது.
 

சிவாஜி - 3 டி... 48 நிமிட காட்சிகள் வெட்டப்பட்டன!

Rajini S Sivaji 3 D Version Trimmed

சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினியின் மெகா ஹிட்சிவாஜி - தி பாஸ் படத்தின் 3 டி பதிப்பு 48 நிமிட காட்சிகள் வெட்டப்பட்டுள்ளன.

இன்றைய சூழல் மற்றும் படத்தின் நீளம் கருதி இந்த முடிவை எடுத்ததாக தயாரிப்பாளர் ஏவிஎம் சரவணன் கூறியுள்ளார்.

சிவாஜி 3 டியை கோச்சடையான் வெளியீட்டுக்கு முன், அதாவது வரும் செப்டம்பரில் வெளியிட முழு வீச்சில் வேலைகள் நடந்து வருகின்றன. சமீபத்தில் 3 டி தொழில்நுட்பத்துக்கு மாற்றப்பட்ட இந்தப் படத்தைப பார்த்த ரஜினி, அதில் செய்யப்பட்ட மாற்றங்கள் குறித்து திருப்தி தெரிவித்தார்.

இந்த நிலையில் படம் குறித்து தயாரிப்பாளர் ஏவிஎம் சரவணன் கூறுகையில், "சிவாஜி - தி பாஸ் 3 டி யில் இன்னும் சிறப்பாக வந்துள்ளது. படத்தைப் பார்த்து ரொம்ப ரசித்தார் ரஜினி சார். 3 டி படத்தின் நீளத்தைக் குறைத்திருக்கிறோம். மூன்று மணி நேரத்துக்கு அதிகமாக ஒடக்கூடிய இந்தப் படத்தை இப்போது 2.17 நிமிடங்கள் ஓடக்கூடிய வகையில் ட்ரிம் செய்திருக்கிறோம்," என்றார்.

சிவாஜி - தி பாஸ் 185 நிமிட நேரப் படம். இப்போது அதில் 48 நிமிடங்கள் குறைத்துள்ளார்களாம்!

 

சிவாஜி தொகுதியில் பிரச்சாரம் செய்ய விரும்பிய ரஜினி - கமல்: பிரபு வெளியிட்ட தகவல்

Rajini Kamal Wish Campaign Nadigar Thilagam Says Prabhu

சென்னை: சிவாஜி கணேசன் போட்டியிட்ட திருவையாறு தொகுதியில் ரஜினியும் கமலும் பிரச்சாரம் செய்ய விரும்பியதாக நடிகர் பிரபு கூறினார்.

நடிகர்திலகம் சிவாஜி கணேசன் நடித்த கர்ணன் படம் 1964-ல் ரிலீஸ் ஆனது. இப்படத்தை டிஜிட்டலில் புதுப்பித்து கடந்த மார்ச் 16-ந்தேதி தமிழகம் முழுவதும் மீண்டும் ரிலீஸ் செய்தனர்.

மொத்தம் 72 தியேட்டர்களில் திரையிடப்பட்டது. 30 திரையரங்குகளில் 25 நாட்களும், 14 திரையரங்குகளில் 50 நாட்களும், 3 திரையரங்குகளில் 75 நாட்களும் ஓடியது. சென்னையில் உள்ள சத்யம் தியேட்டரில் 150 நாட்கள் ஓடியது.

48 வருடங்களுக்கு பிறகு மறு வெளியீட்டில் சாதனை படைத்த ‘கர்ணன்' படத்தின் 150-வது நாள் வெற்றி விழாவை அகில இந்திய சிவாஜி மன்றம் தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கில் நேற்று இரவு நடத்தியது. மன்ற தலைவர் கே.வி.பி. பூமிநாதன் தலைமை தாங்கினார். சாந்தி சொக்கலிங்கம் வரவேற்று பேசினார்.

சிவாஜி மகன்கள் நடிகர் பிரபு, ராம்குமார், சேரன், விக்ரம்பிரபு மற்றும் குடும்பத்தினர் பங்கேற்றனர். இயக்குனர் பி.வாசு, நடிகர் ஒய்.ஜி. மகேந்திரன், இசை அமைப்பாளர் எம்.எஸ். விஸ்வநாதன், பாடகர் டி.எம்.சௌந்தரராஜன் உள்ளிட்ட திரையுலகினர் பலர் பங்கேற்றனர்.

‘கர்ணன்' படத்தில் நடித்த நடிகர் - நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களின் வாரிசுகளுக்கு நடிகர் பிரபு கேடயம் வழங்கினார்.

விழாவில் அவர் பேசுகையில், "கர்ணன் படம் 48 வருடங்களுக்கு பிறகு 150 நாட்கள் ஓடி சாதனை படைத்ததை சிவாஜி மீது கொண்ட ரசிகர்கள் இங்கு விழாவாக நடத்துகிறார்கள்.

சமீபத்தில் விமான நிலையத்தில் ஒரு பெண் என்னை சந்தித்து நீங்கள் சிவாஜி மகனா? என்று கேட்டார். சிவாஜி போல் எவராலும் நடிக்க முடியாது என்று சொன்னார். அப்பா மீது வைத்துள்ள பாசத்தை கண்டு மெய்சிலிர்த்தேன்.

அப்பா மறைந்து 11 வருடங்கள் ஆகின்றன. இன்றைக்கும் அவரது ரசிகர்கள் என்னுடன் இருக்கிறார்கள். இது எனக்கு பெரிய பலம்.

ரஜினி - கமல்

என் மகன் விக்ரம் பிரபு நடித்த ‘கும்கி' பாடல் வெளியீட்டு விழாவில் ரஜினி, கமல் பங்கேற்றனர். அப்பா மீதுள்ள பிரியத்தினால் நேரில் வந்து வாழ்த்தினார்கள்.

திருவையாறு தொகுதி தேர்தலில் சிவாஜி தோல்வி அடைந்திருக்ககூடாது. நாங்கள் இருவரும் அந்த தொகுதிக்கு வந்து சிவாஜியை ஆதரித்து தேர்தல் பிரசாரம் செய்ய விரும்பினோம். ஆனால் முடியவில்லை. அதைச் செய்திருக்க வேண்டும் என்று அவர்கள் என்னிடம் கூறினார்கள்.

சிவாஜி மேல் இருவரும் எந்த அளவுக்கு பாசம் வைத்துள்ளார்கள் என்பதை இதன் மூலம் தெரிஞ்சுக்கலாம்.

பாண்டிச்சேரி முதல்வர் ரங்கசாமி சிவாஜியின் தீவிர ரசிகர். அவர்தான் முதன் முதலில் சிவாஜிக்கு சிலை வைத்தார். இந்த விழாவுக்கு வாழ்த்துச் செய்தியும் அனுப்பி உள்ளார்.

சிறு வயதில் இருந்தே நான் பார்த்த பலர் இந்த விழாவுக்கு வந்துள்ளனர். அவர்களின் ஆதரவு எனக்கு தொடர்ந்து இருக்க வேண்டும்.

சிவாஜிக்கு மணி மண்டபம் கட்டவேண்டும் என்று பலர் இங்கு பேசினர். நாமே அதைகே கட்டலாம். ஆனால் மணி மண்டபத்துக்கு அங்கீகாரம் வேண்டும். எனவே பெரியவர்கள் அதை விரைவில் கட்டுவார்கள். கண்டிப்பாக அது நடக்கும்," என்றார்.

 

ரசிகர்கர்களின் மனசுக்கு நெருக்கமானவள்: நடிகை மானசா

Uthirippookal Heroine Manasa Interview

உதிரிப்பூக்கள் சீரியலில் அமைதியான நடிப்பின் மூலம் அழகாக ஸ்கோர் செய்கிறார் நடிகை மானசா. தமிழ் சீரியலுக்கு இவர் புதியமுகம் என்றாலும் தெலுங்கு, மலையாளம் திரைப்படங்களில் நடித்திருக்கிறார். இவர் நடிகர் விக்ராந்தின் மனைவி. விக்கிரமாதித்தன் இயக்கும் ‘உதிரிப்பூக்கள்' சீரியல் சூட்டிங்கில் பிஸியாக இருந்த மானசா தனது சீரியல் பயணம் தொடங்கிய கதையை நம்மிடையே பகிர்ந்து கொண்டார்.

சீரியல்னா காலையில் வந்தால் சாயுங்காலம் ஆச்சுன்னா கட்டாயம் வீட்டுக்குத் திரும்பிடலாம் என்ற உத் தரவாதம் இருக்கு. இந்த ஒரே காரணத்துக்காகதான் சீரியல் பக்கம் வர முடிவெடுத்தேன். எங்களுக்கு யஷ்வந்த் என்ற ஒன்றரை வயசு சின்ன பையன். அவன வீட்ல வெச்சுக்கிட்டு வெளியூர் ஷூட்டிங் எல்லாம் போக முடியாது.

நான் பிறந்து வளர்ந்தது முழுக்க சென்னைதான். சரளமா எனக்கு தமிழ்தான் வரும். அம்மா கனகதுர்கா ஒரு மலையாளி. அப்பா தெலுங்கு. அம்மா மலையாளத்தில் எழுபது படங்களுக்கு மேல நடிச்சிருக்காங்க. அப்பா பிரபலமான கேமராமேன். வீட்ல ரெண்டு மொழியோட ஆதிக்கம் இருந்தது. அதனால ரெண்டு லாங்வேஜும் கத்துக்க முடிஞ்சது.

வீட்ல அம்மா, அப்பா சினி ஃபீல்டுல இருந்தாலும் என்னோட எண்ட்ரி அவ்வளவு லேசில் நடக்கல. சிரமப்பட்டுதான் உள்ள வர வேண்டி இருந்தது.டெக்னிக்கலான விஷயத்தை கத்துக்கணும்னு எடிட்டிங் படிச்சேன். ஆனாலும், சின்ன வயசுல இருந்தே நடிப்பு மேல ஒரு ஈர்ப்பு. மலையாளத்திலும் தெலுங்கிலும்தான் சினிமா வாய்ப்புகள் வந்தது. நடிச்சேன். தமிழ்ல வரல. அதுக்கு காரணம் கண்டுபிடிக்க எல்லாம் நேரமும் இல்ல.

எங்கெல்லாம் புதுசு புதுசா ஹோட்டல் ஆரம்பிக்கிறாங்களோ அங்கெல்லாம் போய் மூக்குப் பிடிக்க சாப்பிடுறதுன்னா எனக்கு ரொம்ப இஷ்டம். தெருவோர தட்டுக் கடையில இருந்து பெரிய லெவல் ஸ்டார் ஹோட்டல் வரைக்கும் ருசிச்சு சாப்பிடுவேன். அப்புறம் படம் பார்ப்பதுன்னா உயிர். ஆனா விமர்சனம் பண்ண மாட்டேன்.

மானசா என்றால் ‘மனசுக்கு நெருக்கமானவர்' என்று அர்த்தம். நிச்சயம் தமிழ் ஆடியன்ஸின் மனசுக்கு நெருக்கமானவளாக ஒரு நாள் மாறுவேன் என்று சிரித்த முகத்தோடு கூறிவிட்டு சூட்டிங்கிற்கு தயாரானார் மானசா.

 

மறுபடியும் முதல்லேர்ந்து.... மீண்டும் நெருக்கமான சிம்பு - நயன்தாரா!!

Nayan Revives Her Relationship With Simpu   

சென்னை: சிம்புவும் நயன்தாராவும் தங்கள் நட்பையும் உறவையும் புதுப்பித்துக் கொண்டுள்ளனர் என்பதுதான் இப்போது கோலிவுட்டின் லேட்டஸ்ட் செய்தி!

சினிமா காதலர்களில் ஏக பரபரப்பைகத் கிளப்பிய ஜோடி சிம்பு - நயன்தாராதான்.

வல்லவன் படத்தில் நடிக்கும்போது இருவருக்கும் பற்றிக் கொண்டது. அதன்பிறகு இருவரைப் பற்றியும் செய்தி வராத நாளே இல்லை எனும் அளவுக்கு இருவரும் சுற்றித் தீர்த்தார்கள்.

கணவன் - மனைவி போலத்தான் அனைத்து இடங்களுக்கும் வந்து போனார்கள். இந்த நிலையில் திடீரென்று இருவரும் பிரிந்துவிட்டார்கள்.

இதற்கான காரணங்களை இருவருமே சொல்லவில்லை. ஆனால் நயன்தாரா மட்டும், சிம்பு தனக்கு நம்பிக்கை துரோகம் செய்துவிட்டதாக ஹைதராபாதில் கண்ணீருடன் பேட்டி கொடுத்தார்.

அதன்பிறகு தமிழில் ரொம்ப நாள் வரை நடிக்காமலே இருந்தார் நயன்தாரா (இப்போது தமன்னா இருக்கிறாரே... அப்படி!!).

பின்னர் மெல்ல அவரை மீண்டும் தமிழுக்கு வரவைத்தார்கள். ரஜினியெல்லாம் தலையிட்டு நயனுக்கு ஆறுதல் சொல்லி, தன் படங்களிலேயே வாய்ப்புக் கொடுத்தார் (சிவாஜி, குசேலன்). அதைத் தொடர்ந்து தனது அடுத்த ரவுண்டை கோலிவுட்டில் ஆரம்பித்த நயன்தாரா, மீண்டும் தனுஷுடன் இணைத்துப் பேசப்பட்டார்.

ஆனால் அது சிறிது காலம்தான். வில்லு படத்தில் நடித்தபோது அவருக்கும் படத்தின் இயக்குநர் பிரபுதேவாவுக்கும் காதல் ஏற்பட்டது. அதன் பிறகு, நயன்தாரா - பிரபு தேவா காதல் விவகாரம்தான் கடந்த நான்கு வருடங்களாக மீடியாவின் முதன்மைச் செய்தியாக இருந்தது. நயன்தாரா காதலுக்காக தன் மனைவியை விவாகரத்து செய்தார் பிரபு தேவா.

இன்னொரு பக்கம், பிரபுதேவாவை திருமணம் செய்ய, மதம் மாறி, கையில் அவர் பெயரை பச்சைக் குத்திக் கொண்டு நயன்தாரா தயாராக இருந்த நிலையில், இருவரின் காதலும் திடீரென முறிந்தது.

இதற்கும் காரணம், பிரபுதேவாவின் நம்பிக்கை துரோகம் என்று பேட்டியளித்தார் நயன்தாரா.

இப்போது, மீண்டும் தமிழ்ப் படங்களில் பிஸியாகிவிட்டார் நயன். கூடவே காதல் தோல்வியில் அவர் தவித்த சூழலில், மீண்டும் தன் பழைய காதலன் சிம்புவுடன் நெருக்கமாகியுள்ளார் (பிரபு தேவாவுடன் காதல் இருந்தபோதே, நயனும் சிம்புவும் ராசியாகிவிட்டது குறிப்பிடத்தக்கது).

இந்த நெருக்கத்துக்கு சாட்சியாக இருவரும் ஒரு பார்ட்டியில் எடுத்துக் கொண்ட படம்தான் இங்கே நீங்கள் பார்ப்பது. இது எத்தனை நாளைக்கோ...!