ஜூனியர் என்டிஆருடன் நடிக்க ஸ்ருதி ஹாஸன் மறுப்பு!


இந்த நடிகையுடன்தான் நடிப்பேன் என பொதுவாக ஹீரோக்கள்தான் முடிவு செய்வார்கள்.

ஹீரோயின்கள் இப்படி அதிகாரமாகச் சொல்ல முடியாது. பொதுவாக இவர்கள் பெரிய பின்னணி இல்லாமல் வருவதால் அவர்கள் நிலை அப்படி. ஆனால் ஒரு சில நடிகைகள் இதில் விதிவிலக்கு. காரணம் அவர்களின் சினிமா பின்னணி மற்றும் செல்வாக்கு.

இன்றைக்கு சினிமாவில் நான் இன்னாருடன்தான் நடிப்பேன், இவருடன் நடிக்க மாட்டேன் என்று சொல்பவர் கன்னடத்து குத்து ரம்யாதான். காரணம் அவரது பின்னணி.

அவருக்கு அடுத்து ஸ்ருதி ஹாஸன். இவரது பின்னணி என்னவென்று சொல்லவே தேவையில்லை!

தெலுங்கில் ரொம்ப பிஸியான நடிகை என்று கூறப்படும் ஸ்ருதி, அங்கு 'தம்மு' என்ற படத்தில் ஜூனியர் என்டிஆருடன் நடிக்க வந்த வாய்ப்பை முதலில் ஏற்றுக் கொண்டு, பின்னர் அவருடன் நடிக்க முடியாது என விலகிவிட்டாராம்.

தமிழில் வந்த பல வாய்ப்புகளையும், ஹீரோ யார் என்று கேட்டுவிட்டு ஸ்ருதி மறுத்துவிட்டதாக ஏற்கெனவே செய்தி வெளியானது. இந்த நிலையில் தெலுங்கில் முன்னணி நடிகரான ஜூனியர் என்டிஆர் படத்தை மறுத்துள்ளார்.

ஜூனியர் என்டிஆரையே வேண்டாம் என்று சொல்லிவிட்டாரே என்று டோலிவுட்டில் பரபரப்பாக பேச ஆரம்பித்துள்ளனர். இந்தியில் ஆமீர் கானுடன் நடிக்க வாய்ப்பு வந்ததால், அதற்காக இந்தப் படத்தை ஸ்ருதி வேண்டாம் என்று கூறிவிட்டதாகவும் பேசப்படுகிறது.

இப்போது ஸ்ருதிக்குப் பதில் காஜல் அகர்வாலை ஒப்பந்தம் செய்துள்ளார் ஜூனியர் என்டிஆர்.
 

விஜய் - சூர்யாவின் தீபாவளி ரிலீசால் முடங்கிய 15 புதுப்படங்கள்!


தீபாவளிக்கு விஜய் நடித்துள்ள வேலாயுதம் மற்றும் சூர்யா நடித்த 7 ஆம் அறிவு ஆகிய இரு படங்கள் வெளியாவதால், 15-க்கும் மேற்பட்ட புதிய படங்கள் முடங்கியுள்ளன.

7 ஆம் அறிவு 340-க் கும் மேற்பட்ட தியேட்டர்களில் வெளியாகிறது. சென்னை மற்றும் சுற்றுப்புறங்களில் 40 அரங்குகள் இந்தப் படத்துக்கு கிடைத்துள்ளன.

வேலாயுதம் சுமார் 300 தியேட்டர்களில் ரிலீஸ் ஆகிறது. இவ்விரு படங்களும் தமிழகம் முழுவதும் கூடுதல் தியேட்டர்களை பிடித்துக்கொண்டதால் வேறு படங்களுக்கு தியேட்டர்களே கிடைக்கவில்லை.

இதனால் தீபாவளிக்கு ரிலீசாகாமல் 15 படங்கள் முடங்கியுள்ளதாக பாக்ஸ் ஆபீஸ் வட்டாரத்தில் கவலை தெரிவித்தனர். தனுஷின் மயக்கம் என்ன படம் முன்பே முடிந்துவிட்டாலும், தியேட்டர் இல்லாததால்தான் வெளியாகவில்லை.

சிம்பு நடித்துள்ள ஒஸ்தி, அங்காடி தெரு மகேஷ் நடித்த கொஞ்சம் சிரிப்பு கொஞ்சம் கோபம், தாண்டவக்கோனே உள்ளிட்ட படங்கள் தீபாவளிக்காகத்தான் தயாராகின. ஆனால் தியேட்டர்கள் கிடைக்காத நிலையில் அவை தள்ளி வைக்கப்பட்டுள்ளன.

தீபாவளிக்குப் பிந்தைய வாரங்களில் வெளியிடலாம் என்றாலும் திரையரங்குகள் இல்லை என்று கைவிரித்துவிட்டார்களாம். எனவே வேலாயுதம், ஏழாம் அறிவு இரண்டும் முதலிரு வாரங்களில் எத்தனை தியேட்டர்களில் தூக்கப்படுகிறதோ அதைப் பொறுத்தே புதிய படங்களின் வெளியீட்டுத் தேதி முடிவாகும்.

ஷாருக்கானின் ரா ஒன் படம் மட்டும் விஜய், சூர்யா படங்களுடன் தீபாவளிக்கு வருகிறது. இந்தப் படத்துக்கு 20 தியேட்டர்கள் சென்னையிலும் புறநகர்களிலும் கிடைத்துள்ளன.

இது இந்தியில் இருந்து தமிழில் டப்பிங் செய்து வெளியிடப்படுகிறது. பெரும்பாலும் மல்டிபிளக்ஸ் தியேட்டர்களில் இப்படம் ரிலீஸ் செய்யப்படுகிறது.

7 ஆம் அறிவு படத்துக்கு இன்று முதல் முன்பதிவு தொடங்கியுள்ளது. வேலாயுதம் படத்துக்கு விரைவில் முன்பதிவு தொடங்கவுள்ளது.
 

ஆண்டிப்பட்டி கோர்ட்டில் ஆஜரானார் குஷ்பு


மதுரை: தேர்தல் வழக்கு விசாரணைக்காக நடிகை குஷ்பு ஆண்டிப்பட்டி கோர்ட்டில் ஆஜரானார்.

சட்டசபை தேர்தல் பிரச்சாரத்தின் போது விதிகளை மீறியதாக நடிகை குஷ்பு மீது ஆண்டிப்பட்டி மற்றும் தேனி பி.சி. பட்டி காவல் நிலையங்களில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இவ்வழக்கு ஆண்டிப்பட்டி நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வருகிறது. வழக்கு அவர் இன்று ஆஜராக வேண்டும் என நீதிமன்றம் கண்டிப்பாகக் கூறிவிட்டதால், ஆண்டிபட்டி கோர்ட்டில் குஷ்பு இன்று ஆஜரானார். அவர் வருவதாக செய்தி பரவியதால், குஷ்புவைப் பார்க்க ஏராளமானோர் கூடிவிட்டனர்.

திமுகவினர் குஷ்புவுக்கு பாதுகாப்பாக வந்தனர். இந்த வழக்கு விசாரணை மறுதேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டது.
 

விஜய் தந்த 'தங்கப் பரிசு'!


வேலாயுதம் படத்தில் பணியாற்றிய உதவி இயக்குநர்களுக்கு தங்கச் சங்கிலி மற்றும் தங்க மோதிரம் பரிசாக வழங்கியுள்ளார் நடிகர் விஜய்.

விஜய் நடிப்பில், ஜெயம் ராஜா இயக்கத்தில் உருவாகியுள்ள படம் வேலாயுதம். தீபாவளிக்கு வெளியாகும் இந்தப் படம், தெலுங்கில் வெளியான ஆசாத் என்ற படத்தின் தழுவலாகும்.

படம் முடிந்ததும், முழுமையாகப் பார்த்த விஜய், ரொம்பவே திருப்தி தெரிவித்தாராம். அதை வெறும் வார்த்தைகளாக மட்டும் காட்டாமல், தங்கப் பரிசா கொடுத்து அசத்தினாராம்.

உதவி இயக்குநர்கள் அத்தனை பேருக்கும் ஒரு தங்கச் சங்கிலி மற்றும் மோதிரம் பரிசளித்தாராம்.
 

50 நாட்களைக் கடந்தது மங்காத்தா!


முன்பெல்லாம் தமிழ் சினிமாக்கள் 25 வாரம் ஓடி வெள்ளிவிழா, 50 வாரங்கள் ஓடி பொன்விழாவெல்லாம் கொண்டாடியதுண்டு. அது ஒரு காலம்!

இன்றைக்கு 25 நாட்கள் ஓடினால் வெள்ளிவிழா, 50 நாட்கள் ஓடினால் பொன்விழா என்றாகிவிட்டது நிலைமை!

அஜீத்தின் மங்காத்தா படம் ஒரு வழியாக 50 நாட்களைத் தொட்டுவிட்டது. அஜீத்தின் பொன்விழாப் படம் இது.

படம் வெளியான ஒரு வாரத்துக்கு நல்ல கூட்டம். அதன் பிறகு படிப்படியாக கூட்டம் குறைந்துவிட்டது. இப்போது வார இறுதிகளில் பரவாயில்லை எனும் அளவுக்கு கூட்டம் வருகிறது. மற்ற நாட்களில் காற்று வாங்குகின்றன அரங்குகள்.

ஆனால் வசூலைப் பொறுத்தவரை இந்தப் படம் இதுவரை ரூ 80 கோடியை வசூலித்துவிட்டதாக அதிகாரப்பூர்வமற்ற புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. இந்தப் படத்தின் பட்ஜெட்டோடு ஒப்பிடுகையில், இதுவே பெரிய வசூல்தான்.

படம் நிறைய திரையரங்குகளில் வெளியாகி, இப்போது 90 சதவீத அரங்குகளில் தூக்கப்பட்டுவிட்டது. மீதியுள்ளவற்றில் ஒரு சில தியேட்டர்களிலாவது படத்தை 100 நாட்கள் ஓட வைத்துவிடுவார்கள். காரணம் அஜீத்தின் 50 வது படம். 100 நாள் ஓடிய பெருமை வேண்டுமல்லவா!
 

பூனம் பாண்டேவுக்கு முத்திப் போச்சு!-'பெட்ரூம் ஸ்டிரிப்டீஸை' வெளியிட்டார்!!!


பூனம் பாண்டேவுக்கு என்ன ஆயிற்று என்று தெரியவில்லை. முழு நிர்வாணமாக தரிசனம் தருவேன் என்று கூறிய அவர் இப்போது தனது அந்தரங்க உறுப்புகளை வெளிச்சம் போட்டுக் காட்டும் வீடியோக்களை படிப்படியாக வெளியிட்டு தனது புதிய இணையதளத்துக்கு சூப்பராக விளம்பரம் தேடி வருகிறார்.

இந்திய கிரிக்கெட் அணி உலகக் கோப்பையை வென்றால் முழு நி்ர்வாணமாக காட்சி அளிப்பேன் என்று அறைகூவல் விட்டார் பூனம். அப்படி அறிவிப்பு விடுவதற்கு ஒரு விநாடி முன்பு வரை அவரை நிறையப் பேருக்குத் தெரியாது. ஆனால் அவரது அறிவிப்பு பல லட்சம் பேரின் கவனத்தை சில நொடிகளில் ஈர்த்து விட்டது. ஆனால் இந்தியா உலகக் கோப்பையை வென்று இத்தனை மாதங்களாகியும் இதுவரை அவர் சொன்னதைச் செய்யவில்லை.

மாறாக அரை நிர்வாணம், முக்கால் நிர்வாணம், முக்கால் அரைக்கால் நிர்வாணம் என 'ரேஷன்' கணக்கில் தனது உடல் பாகங்களை வெளியுலகுக்கு காட்ட ஆரம்பித்துள்ளார்.

புதிதாக அவர் தொடங்கியுள்ள இணையதளத்திற்காக நூதன முறையில் விளம்பரம் தேடி வருகிறார் பூனம். இதற்காக பெட்ரூம் சீக்ரெட்ஸ் என்ற பெயரில் வீடியோ டிரெய்லர்களை அவர் வெளியிட்டு வருகிறார். முதல் வீடியோவில் குளிக்கும் காட்சியில் அவர் தோன்றினார். இதிலும் கூட அவர் முழுமையாக இல்லை. பிரா மற்றும் பேன்டீஸ் அணிந்து கொண்டு ஹேன்ட் ஷவருடன் குளிப்பது போல அதில் காட்சி அளித்தார் பூனம்.

இந்த நிலையில் தற்போது தனது பெட்ரூமில் ஸ்டிரிப்டீஸ் செய்தபடி காட்சி அளிக்கும் வீடியோவை வெளியிட்டுள்ளார்.அதில் படுக்கை அறையில் உட்கார்ந்தபடியும், வளைந்து நெளிந்தபடியும், நாக்கைச் சுழற்றியபடியும், பறக்கும் முத்தங்களைக் கொடுத்தபடியும் சாக்ஸை கழட்டுகிறார், ஷூவைக் கழற்றுகிறார். படுக்கையில் புரளுகிறார், டான்ஸ் மூவ்மென்ட் கொடுக்கிறார், முன்னழகையும், பின்னழகையும் மடக்கியும், முடக்கியும் காட்டுகிறார். இன்னும் என்னென்னவோ செய்கிறார்.

ஒவ்வொரு உடையாக கழற்றிப் போடும் பூனம் இறுதியாக தனது கருப்பு நிற மேலுடையையும் கழற்றி விட்டு வெள்ளை நிற டாப்ஸ் மற்றும் ஷார்ட்ஸுடன், பின்புறத்தைக் காட்டியபடி படுக்கையில் படுத்துக் கொண்டு விடை பெறுகிறார்.

இன்னும் என்னென்ன செய்யப் போகிறாரோ ...!

பூனம் பாண்டேவின் 'பெட்ரூம் ஸ்டிரிப்டீஸ்' வீடியோ!
 

ஐஸ்வர்யா ராய்க்கு 11-11-11-ல் பிரசவம்? - பல கோடி ரூபாய் பெட்டிங் ஆரம்பம்!!


நடிகை ஐஸ்வர்யா ராய் பிரசவத்தை வைத்து பல கோடி ரூபாய் பெட்டிங் ஆரம்பமாகியுள்ளது. ஏராளமான புக்கிகள் இந்த பெட்டிங்கில் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அபிஷேக்பச்சனை திருமணம் செய்த ஐஸ்வர்யா ராய் தற்போது 9 மாதம் கர்ப்பமாக உள்ளார். நேற்று மும்பையில் உள்ள வீட்டில் அவருக்கு ஆடம்பரமாக வளைகாப்பு விழா நடந்தது. இதில் அமிதாப்பச்சன், அபிஷேக்பச்சன், உறவினர்கள் மற்றும் பாலிவுட் நடிகைகள் பங்கேற்றனர்.

அப்பாவாகும் சந்தோஷத்தில் உள்ள அபிஷேக் பச்சன் இம்மாத இறுதிக்குள் படப்பிடிப்புகளை முடித்து விட தீவிரம் காட்டுகிறார். பிரசவத்தின் போதும், அதற்கடுத்த தினங்களிலும் ஐஸ்வர்யாராய் மற்றும் குழந்தையுடன் இருக்க திட்டமிட்டுள்ளார் அபிஷேக் பச்சன்.

இதற்கிடையே, ஐஸ்வர்யா ராய்க்கு நவம்பர் இரண்டாவது வாரத்தில் குழந்தைப் பிறக்கலாம் என டாக்டர்கள் தேதி குறித்துள்ளனர்.

நவம்பர் மாதம் 11-ம் தேதிக்குள் அவருக்கு டெலிவரி நடக்கலாம் என டாக்டர்கள் கூறியுள்ளனர். ஆனாலும் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த தேதியாகக் கருதப்படும் 11-11-11 அன்று அவரது பிரசவம் நடக்க வேண்டும் என ஐஸ்வர்யா ராய் மற்றும் பச்சன் குடும்பம் விரும்புவதால், அதற்கேற்ப ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.

இருந்தாலும் குழந்தையின் பிரசவத் தேதி யார் கையிலும் இல்லை அல்லவா? அமிதாப்பச்சனின் மொத்த குடும்பமும் குழந்தையை ஆவலோடு எதிர்பார்த்து காத்திருக்கிறது. அவருக்குப் பெண் குழந்தைதான் பிறக்கும் என சில ஜோசியர்கள் கணிப்பு வெளியிட்டுள்ளனர். மேலும் இந்தப் பிரசவம் 11-ம் தேதிதான் நடக்கும் என இந்த ஜோசியர்களும் கூறியுள்ளனர்.

பல கோடி பெட்டிங் ஆரம்பம்...

இந்த நிலையில், ஐஸ்வர்யா ராய்க்கு 11-11-11ல் பிரசவம் நடக்குமா நடக்காதா என்று பெரிய பெட்டிங்கே ஆரம்பித்துள்ளது மும்பையில். இதில் ஏராளமான புக்கிகள் ஈடுபட்டுள்ளனர்.

அதுமட்டுமல்ல, இந்த பெட்டிங்கில் பல கோடி ரூபாய் பணத்தையும் கட்டி வருகின்றனர் மக்கள். ஐஸ்வர்யா ராய்க்கு 11-11-11 தேதியிலேயே பிரசவம் நடக்க வேண்டும் என்றும் இவர்கள் பிரார்த்தனை செய்து வருகிறார்களாம்.

காரணம், "எங்களுக்கு பெட்டிங்கில் பணம் வரும் என்பது மட்டுமல்ல, ஐஸ்வர்யா ராய் என்ற உலக அழகிக்குப் பிறக்கும் குழந்தை ஒரு சிறப்பான நாளில் பிறந்தால் நல்லதுதானே," என்றார் இந்த பெட்டிங்கில் பணம் கட்டியுள்ள ஒரு நபர்.

நடிகை ஒருவரின் பிரசவத்துக்காக பெட்டிங் நடப்பது இந்தியாவில் இதுவே முதல்முறை.
 

மீண்டும் ஊமை விழிகள்... விஜயகாந்த் வேடத்தில் சரத்குமார்!


ஆபாவாணன் குழுவினர் தயாரித்து, இசையமைத்து, இயக்கி வழங்கிய பிரமாண்ட ஹிட் படமான ஊமை விழிகள் நினைவிருக்கிறதா... திரைப்படக் கல்லூரி மாணவர்களுக்கே தனி அங்கீகாரத்தைப் பெற்றுத் தந்த படம் அது.

அந்தப் படம் மீண்டும் தமிழில் தயாராகி வரப்போகிறது!

ஆபாவாணன் ஆசியோடு, திரைக்கதையில் சில மாற்றங்களுடன் வின்சென்ட் செல்வா இந்தப் படத்தை இயக்குகிறார். ப்ரியமுடன், யூத், வாட்டாக்குடி இரணியன் போன்ற படங்களைத் தந்தவர் வின்சென்ட் செல்வா என்பது நினைவிருக்கலாம்.

ஊமை விழிகளில் விஜயகாந்துக்கு பெரும் புகழைப் பெற்றுத் தந்த அந்த போலீஸ் அதிகாரி வேடத்தை, இந்த முறை சரத்குமார் ஏற்றுள்ளார்.

படத்தின் இதர நடிகர் நடிகைகள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் குறித்த விவரங்கள் இன்னும் வெளியாகவில்லை.
 

வேலாயுதத்துக்கு பெரிய தியேட்டர் வேணும் - கொடி பிடிக்கும் விஜய் ரசிகர்கள்


தீபாவளிக்கு வெளியாகும் விஜய்யின் வேலாயுதம் படத்துக்கு பெரிய தியேட்டர்களை ஒதுக்க வேண்டும் என்று நூற்றுக்கும் மேற்பட்ட விஜய் ரசிகர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

வேலாயுதம் படம் சென்னை மற்றும் புறநகர்களில் 38 திரையரங்குகளில் வெளியாகிறது. பெரும்பாலான பெரிய தியேட்டர்கள் ஏழாம் அறிவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளதால், அடுத்த நிலையில் உள்ள அரங்குகளே வேலாயுதத்துக்கு கிடைத்துள்ளன.

அண்ணா சாலையில் உள்ள தேவி திரையரங்க வளாகத்திலும் இந்தப் படம் வெளியாகிறது. தேவி வளாகத்தில் 4 அரங்குகள் இருந்தாலும் இரண்டுதான் பெரியவை. தேவி கலா, தேவி பாலா இரண்டும் சிறிய அரங்குகள். இந்த சிறிய அரங்குகள்தான் விஜய் படத்துக்கு ஒதுக்கப்பட்டுள்ளன.

தேவி மற்றும் தேவி பாரடைஸ் ஆகிய இரு பெரிய அரங்குகளும் உதயநிதி ஸ்டாலினின் ஏழாம் அறிவுக்கு ஒதுக்கப்பட்டுவிட்டன.

வேலாயுதத்துக்கு இந்த பெரிய அரங்குகளில் ஒன்றை ஒதுக்க வேண்டும் என்று கோரி 300-க்கும் மேற்பட்ட விஜய் ரசிகர்கள் தேவி திரையரங்க வளாகத்தில் கூடி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
 

வாக்களிக்க மறுப்பதா? - ரஜினி, கமல், த்ரிஷாவுக்கு கண்டனம்!!


உள்ளாட்சித் தேர்தலில் வாக்களிக்காமல் போன ரஜினி, கமல் உள்ளிட்ட நடிகர்களுக்கு இந்து மக்கள் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து இந்து மக்கள் கட்சி வெளியிட்டுள்ள அறிக்கை:

உள்ளாட்சி என்பது இதயம் போன்றது. மக்களுடன் நேரடி தொடர்பில் இருந்து பிரச்சினைகளை தீர்க்க கூடியது. இத்தேர்தலில் சிறப்பாக பணியாற்றக் கூடியவர்களை மக்கள் பிரதிநிதிகளாக தேர்வு செய்வது ஒவ்வொரு குடிமகனின் தலையாய கடமையாகும்.

சாதாரண பிரஜைகளை விட பிரபலங்களாக இருப்பவர்கள் நிச்சயம் ஓட்டு போட்டு தங்களின் ஜனநாயக கடமைகளை ஆற்றுவது அவசியம். திரையுலகில் இருக்கும் ரஜினி, கமல், சூர்யா, கார்த்தி, ஆர்யா, திரிஷா உள்ளிட்ட பல நடிகர், நடிகைகள் தேர்தலில் ஓட்டு போடாதது வேதனை அளிக்கிறது.

திரைப்படங்களில் அரசியல்வாதிகள் தேர்தல் வாக்காளர்களின் கடமை போன்றவற்றை காட்சிப்படுத்துகின்றனர். ஓட்டு போடுவதன் அவசியத்தை வற்புறுத்துகின்றனர். மக்கள் பிரதிநிதிகளின் கடமைகளை போதிக்கின்றனர். நிஜ வாழ்க்கையிலும் நடிகர், நடிகைகள் அதுபோல் இருக்க வேண்டும். ஊருக்கு ஒரு உபதேசம், தனக்கு ஒரு உபதேசம் என்று இருக்கக்கூடாது என ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள்.

நடிகர், நடிகைகள் தவறாமல் ஓட்டு அளிப்பது ரசிகர்களையும் ஜனநாயக கடமையாற்ற தூண்டுவதாக அமையும். அதை செய்ய வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்," என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
 

படப்பிடிப்பின்போது முதுகில் காயம் - மருத்துவமனையில் ஹிருத்திக் ரோஷன்!


மும்பை: பாலிவுட்டின் முன்னணி நடிகர்களில் ஒருவரான ஹிருத்திக்ரோஷனுக்கு படப்பிடிப்பின்போது முதுகில் அடிபட்டது. தற்போது அவர் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார்.

பிரபல டைரக்டர் கரன் ஜோகர் இயக்கி வரும் 'அக்னிபாத்' என்ற படத்தில் ஹிருத்திக் ரோஷன் நடித்து வருகிறார்.

நேற்று முன்தினம் இந்தப் படத்தின் சண்டைக்காட்சி படமாக்கப்பட்டது. அப்போது 110 கிலோ எடையுள்ள ஸ்டன்ட் நடிகரை ஹிருத்திக் ரோஷன் அலாக்காக தூக்குவது போல காட்சி அமைக்கப்பட்டு இருந்தது.

ஹிருத்திக் ரோஷன் தனியொரு ஆளாக அந்த குண்டு துணை நடிகரை தூக்க விரும்பினார். உடனே துணை நடிகரை ஹிருத்திக் ரோஷன் சட்டென்று தூக்கினார். இதில் அவருடைய முதுகில் காயம் ஏற்பட்டது. வலியால் துடித்தார் ஹிரித்திக்.

இதைத் தொடர்ந்து படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. ஹிருத்திக் ரோஷனை பிரீச்கேண்டி ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்று அனுமதித்தனர்.

ஹிருத்திக் ரோஷன் காயம் அடைந்ததால் அக்னிபாத் படம் வெளியாகும் தேதி தள்ளிப்போகும் என்று கருதப்படுகிறது.