ரஜினி படத்தை இயக்குகிறேனா? - பி வாசு விளக்கம்


சூப்பர் ஸ்டார் ரஜினியை வைத்து நான் படம் இயக்குவதாக வருகின்ற செய்திகள் தனக்கு மிகுந்த சங்கடத்தை உள்ளாக்கியிருப்பதாகவும், அப்படி ஒரு திட்டம் தன்னிடம் இல்லை என்றும் இயக்குநர் பி வாசு கூறியுள்ளார்.

கேஎஸ் ரவிக்குமார் மேற்பார்வையில் இளைய மகள் சௌந்தர்யா இயக்கும் கோச்சடையான் படத்தை முடித்ததும், அடுத்து ராணாவில் நடிப்பார் ரஜினி என்று கூறப்பட்ட நிலையில், திடீர் திடீரென ரஜினி இந்தப் படத்தில் நடிக்கிறார், இன்னாருடன் இணைகிறார் என்று செய்திகள் வெளியான வண்ணம் உள்ளன.

முதலில் ரஜினியும் - ஷங்கரும் இணைந்து படம் பண்ணுகிறார்கள். இது முதல்வனின் இரண்டாம் பாகம். இந்தப் படம் முடிந்ததும் ராணா என்று கூறப்பட்டது.

அடுத்த சில தினங்களில், சிவாஜி பிலிம்ஸுக்காக பி வாசு இயக்கத்தில் ஒரு குறுகிய கால படத்தில் ரஜினி நடிப்பார் என்று செய்தி வந்தது. கடந்த வாரம் முழுக்க இந்த செய்திதான் மீடியாவில் அதிக முக்கியம் பெற்றுவருகிறது.

இந்த நிலையில், ரஜினியுடன் இப்போதைக்கு தாம் இணைந்து படம் எதுவும் பண்ணவில்லை என்று இயக்குநர் பி வாசு அறிவித்துள்ளார்.

இதுகுறித்து இன்று அவர் கூறுகையில், "இது முழுக்க முழுக்க யூகத்தில் வெளியாகியுள்ள செய்திதான். நான் சமீபத்தில் ரஜினியிடம் படம் பண்ணுவது குறித்து பேசவே இல்லை. எனது அடுத்த கன்னடப் படம் 'ஆ ரக்ஷகா'வில் பிஸியாக இருக்கிறேன்," என்றார்.
 

சிம்புவுக்கு வெண்கலம்தான்!!


தனுஷின் ‘வொய் திஸ் கொலவெறிடி…’ என்ற தமிங்கிலீஷ் பாட்டு தாறு மாறாக ஹிட்டானதைத் தாங்க முடியாமல், சிம்பு உருவாக்கிய 'ஒரு வார்த்தைப் பாட்டு'க்கு யுட்யூப் வெண்கல விருதை கொடுத்துள்ளது.

தனுஷ் கொலவெறி என்று எதையோ பாடி, யுட்யூப்பில் ஏற்றி, அதற்கு கிடைத்த ஹிட்ஸை வைத்து பிரபலமாக்க ஆரம்பித்தார். ஒரு மாதத்துக்குள் அந்தப் பாட்டு 3 கோடி ஹிட்ஸைப் பெற்றுவிட்டது யு ட்யூப் தளத்தில். அடுத்த சில தினங்களில் அதே ரூட்டைப் பிடித்தார் சிம்பு. உலகில் உள்ள பல மொழிகளில் உள்ள காதல் என்ற வார்த்தையை மட்டும் எடுத்து ஒரு ட்யூனுக்கு ஏற்பட பாடினார். அதே சோனி மியூசிக் மூலம் இதனை யுட்யூபில் பிரபலப்படுத்த ஆரம்பித்தார்.

அதற்கு தோதாக வந்தார் பிஆர்ஓ நிகில் முருகன். அவரது அசத்தல் பிரமோஷன் இந்தப் பாட்டுக்கு ஒரு பலமாக அமைந்துவிட்டது. ஒருவழியாக இந்த வீடியோவை ஒரு மில்லியன் பேர் பார்த்துவிட, ஒரு விருதைக் கொடுத்திருக்கிறது யுட்யூப். தனுஷுக்கு தங்க விருதைக் கொடுத்தவர்கள், சிம்புவுக்கு கொடுத்திருப்பது வெண்கல விருதாம்.

இதுகுறித்து அனுப்பப்பட்ட பிரஸ் ரிலீஸில் தன்னை 'சூப்பர் ஸ்டார் சிம்பு' என்று சிம்புவே போட்டுக் கொண்டிருப்பதுதான் காமெடி (நீங்களாவது சொல்லக் கூடாதா நிகில்?!)!

ஒரிஜினலுக்கு தங்கம்… அதற்குப் போட்டியாக வந்த பாட்டுக்கு வெண்கலம்... ரெம்ப்ப நல்லாத்தான் ஜட்ஜ் பண்றாங்க!!
 

ரூ.18 கோடி மதிப்பிலான நிலம் மோசடி- சினிமா இயக்குநர் மீது வழக்கு


நெல்லை: நெல்லையில் 18 கோடி ரூபாய் மதிப்புள்ள 4 ஏக்கர் நிலத்தை போலி ஆவணங்கள் மூலம் மோசடி செய்த சினிமா டைரக்டர் உள்ளிட்ட 9 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

மேலப்பாளையத்தை சேர்ந்தவர் ரகுமத் பீவி. இவருக்கும், இவரது சகோதர, சகோதரிகளுக்கும் நெல்லை வண்ணார்பேட்டை தெற்கு பைபாஸ் சாலை அருகில் ரூ.18 கோடி மதிப்பில் 3 ஏக்கர் 80 சென்ட் நிலம் உள்ளது. இதை கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் மேலப்பாளையத்தை சேர்ந்த முகமது மைதீன், பர்கீஸ், ஆயிஷா, செய்யது மைதீன், பாத்திமுத்து, கோவில்பட்டியை சேர்ந்த கார்த்திகேயன், ஆபிரகாம், சென்னையை சேர்ந்த பாண்டியன், கணேஷ் ஆகிய 9 பேர் போலி ஆவணங்கள் மூலம் பல கோடி ரூபாய்க்கு விற்று விட்டனர்.

இந்த விபரம் கடந்த சில மாதங்களுக்கு முன் ரகுமத் பீவி அவரது குடும்பத்தினருக்கு தெரிய வந்தது. இதுகுறித்து நெல்லை மாநகர குற்றப்பிரிவு போலீசில் ரகுமத் பீவி புகார் செய்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. இதையடுத்து ரகுமத் பீவி நெல்லை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

சம்பந்தப்பட்டவர்கள் மீது வழக்கு பதிவு செய்ய மாநகர குற்றப்பிரிவு போலீசாருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. இதன் பேரில் மாநகர குற்றபிரிவு இன்ஸ்பெக்டர் பொன்னரசு மற்றும் போலீசார் முகமது மைதின், பர்கீஸ், ஆயிஷா உள்ளிட்ட 9 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

இதில் நிலமோசடி செய்த முகமது மைதீன் சினிமா இயக்குநராம்.
 

ரமணா ரீமேக்கில் ஷாரூக்கான்- ஜோடியாக நடிப்பாரா ஐஸ்வர்யா?


தமிழ், தெலுங்கில் பெரும் வெற்றி பெற்ற ரமணா படத்தின் இந்தி ரீமேக்கில் நடிக்கிறார் ஷாரூக்கான். இந்தப் படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்க முதலில் ஐஸ்வர்யா ராயிடம் பேசப்பட்டது. ஆனால் இப்போது அவர் நடிப்பாரா என்பது உறுதிப்படுத்தப்படவில்லை.

தமிழில் ரமணா படம் பெற்ற வெற்றிதான், அந்தப் படத்தின் ஹீரோவான விஜயகாந்தின் அரசியல் இமேஜை தூக்கி நிறுத்த உதவியது என்றால் மிகையல்ல.

ஊழல் பேர்வழிகளை ஒழித்துக்கட்டி, லஞ்சம் கொடுப்பதும் வாங்குவதும் தவறு என்ற நிலையை நாட்டில் உருவாக்கும் ஒரு பேராசிரியர் வேடத்தில் கலக்கியிருந்தார் விஜயகாந்த்.

அந்தப் படம் தெலுங்கிலும் ரீமேக் செய்யப்பட்டு பெரும் வெற்றியைக் குவித்தது.

இப்போது ரமணா இந்திக்குப் போய்விட்டது. பிரபல இயக்குநர் சஞ்சய் லீலா பன்சாலி இதன் உரிமையைப் பெற்றுள்ளார். தமிழில் இயக்கிய ஏஆர் முருகதாஸ் இயக்க, ஷாரூக்கான் நாயகனாக நடிக்கிறார்.

இந்தப்படத்தில் ஐஸ்வர்யா ராய் நடிப்பார் என்று முதலில் கூறப்பட்டது. ஆனால், இப்போது அவர் சஞ்சய் லீலா பன்சாலி தயாரிக்கும் இன்னொரு படமான 'பஜிரோ மஸ்தானி'யில் இதே ஷாரூக்கானுடன் ஜோடியாக நடிக்கிறார். எனவே ரமணா ரீமேக்கில் அவர் நடிப்பாரா என்பது கேள்விக்குறியாகியுள்ளது.
 

12.12.12-ல் ரஜினியின் மேலும் ஒரு சுயசரிதைப் புத்தகம் வெளியீடு!


புதிதாக எழுதப்பட்டுள்ள ரஜினியின் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகம், அவரது பிறந்த தினமான 12.12.12 அன்று வெளியாக உள்ளது.

சில ஆண்டுகளுக்கு முன் காயத்ரி என்ற மருத்துவர், ரஜினியின் சுயசரிதையை எழுதியிருந்தார். ஆங்கிலம், தமிழில் வெளியாகி விற்பனையில் பெரும் சாதனைப் படைத்தது இந்தப் புத்தகம்.

இப்போது, மேலும் ஒரு ரஜினி சுயசரிதைப் புத்தகம் வெளியாகவிருக்கிறது. இந்தப் புத்தகம் சூப்பர் ஸ்டாரின் மறக்க முடியாத பிறந்த நாளாக கொண்டாடப்படவிருக்கும் 12.12.12 அன்று வெளியாக உள்ளது.

சினிமா விமர்சகரான ராமச்சந்திரன் என்பவரால் எழுதப்பட்டுள்ள இந்தப் புத்தகம் ரஜினியின் வாழ்க்கையைப் பற்றிய முழுமையான புத்தகமாக இருக்கும் என்றும், அவரது வாழ்க்கையில் நடந்த சுவாரஸ்யமான சம்பவங்களின் தொகுப்பாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.

பெங்குவின் பதிப்பகம் இந்தப் புத்தகத்தை வெளியிடுகிறது.
 

தனுஷுடன் காதலா? - ஸ்ருதி ஹாஸன் விளக்கம்


தனுஷுக்கும் எனக்கும் தொடர்பு இருப்பதாக வந்துள்ள செய்திகள் அடிப்படையில்லாதவை என்று கமல் மகளும் நடிகையுமான ஸ்ருதிஹாஸன் கூறியுள்ளார்.

ரஜினியின் மூத்த மகள் ஐஸ்வர்யா இயக்கிவரும் '3' என்ற படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடிக்கிறார் ஸ்ருதிஹாஸன்.

இந்தப் படத்தில் நடித்ததன் மூலம் தனுஷும் ஸ்ருதியும் மிகவும் நெருக்கமாகிவிட்டதாகவும், இருவரும் பார்ட்டி, நிகழ்ச்சிகள் என ஒன்றாக சுற்றுவதாகவும், இது ரஜினி குடும்பத்தில் பெரும் புகைச்சலை உண்டாக்கியிருப்பதாகவும் கூறப்படுகிறது.

ஏற்கெனவே தனுஷ் தொடர்பாக பல வதந்திகள் உள்ளதால், இந்த ஸ்ருதிஹாஸன் விவகாரத்தை வெறும் வதந்தியாக யாரும் எடுத்துக் கொள்ளவில்லை. ஸ்ருதிஹாஸனும் இப்போது மூன்றாவது முறையாக கிசுகிசுக்கப்படுகிறார்.

இந்த நிலையில், இப்போது தனுஷுடன் இணைத்து வெளியாகும் செய்திகள் குறித்து அவர் விளக்கம் அளித்துள்ளார்.

"இது கொஞ்சமும் அடிப்படையில்லாத செய்தி. புத்தாண்டு அன்று நான் என் அம்மா, தங்கையுடன் கோவாவில் பார்ட்டி கொண்டாடினேன். என்னுடன் நடித்தவர்களிலேயே ரொம்ப கன்வீனியன்டாக இருந்தவர் தனுஷ். அதனால் அவருடன் அதிக நட்புண்டு. ஆனால் எனக்கு நல்ல பிரெண்டான ஐஸ்வர்யாவின் கணவருடன் தொடர்பு வைத்துக் கொள்ளும் அளவுக்கு இல்லை. தொழில் ரீதியாகத்தான் எனக்கும் தனுஷுக்கும் நட்பு உள்ளது. வேறு எதுவும் இல்லை," என்கிறார் ஸ்ருதி.

தனுஷ் தரப்பில் எந்த விளக்கமும் வெளியாகவில்லை.
 

ப்ரியதர்ஷன் உதவியுடன் இந்திக்குப் போகிறது 'போராளி'!


சசிகுமார் நடிப்பில், சமுத்திரக்கனி இயக்கத்தில் உருவாகி, விமர்சகர்கள் மத்தியில் பாராட்டையும் ரசிகர்களின் வரவேற்பையும் பெற்ற போராளி படம், அடுத்து இந்திக்குப் போகிறது.

இந்தப் படம் இந்தியில் உருவாக உதவி செய்பவர் பிரபல 'ரீமேக் மாஸ்டர்' ப்ரியதர்ஷன்தான்.

சமுத்திரக் கனி - சசிகுமார் கூட்டணியில் ஏற்கெனவே வந்த நாடோடிகள் வெற்றிப் படத்தை இப்போது ப்ரியதர்ஷன் இந்தியில் எடுத்து வருகிறார். சமீபத்தில் ரிலீசான போராளி படத்தை தனது திரையரங்கில் பார்த்த ப்ரியதர்ஷன், இந்தியில் இந்தப் படம் சிறப்பாக வரும் என்று கருத்து கூறியுள்ளார்.

இந்தியில் சமுத்திரக்கனியே இயக்கட்டும் என்றும் அதற்கான உதவிகளைச் செய்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார். போராளி படத்தின் இந்தி ஸ்க்ரிப்டை மட்டும் ப்ரியதர்ஷன் இயக்குகிறார்.

பொருத்தமான நடிகர்களைத் தேர்வு செய்யும் வேலையில் மும்முரமாக உள்ளனர் சமுத்திரக் கனியும் ப்ரியதர்ஷனும்.
 

வித்யாபாலனுக்கு ஆயுசு கெட்டி: நியூசிலாந்து நிலநடுக்கத்தில் உயிர் தப்பினார்


பிரபல இந்தி நடிகை வித்யாபாலன், கடந்த சில தினங்களுக்கு முன்பு நியூசிலாந்தில் ஏற்பட்ட நில நடுக்கத்தில் இருந்து அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

தி டர்ட்டி பிச்சர் படத்தின் மூலம் சில்க் ஆக நடித்து தமிழ் ரசிகர்களையும் கொள்ளை கொண்டவர் இந்தி நடிகை வித்யாபாலன். டர்ட்டி பிக்சர் படம் வெற்றி பெற்றதை கொண்டாடவும், ஓய்விற்காகவும் வித்யாபாலனும், அவர் திருமணம் செய்து கொள்ளப் போகும் சித்தார்த்ராய் கபூரும் நியூசிலாந்து சென்றனர்.

அங்குள்ள கிறிஸ்ட் சர்ச் பகுதியில் தங்கிய அவர்கள் பிறகு அங்கிருந்து குயீன்ஸ் ஸ்டஷனுக்கு புறப்பட்டனர். அப்போது திடீரென்று நில நடுக்கம் ஏற்பட்டது. கட்டிடங்கள் இடிந்தன. இதில் வித்யாபாலன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினாராம். அவர் தங்கி இருந்த இடங்களும் சேதமடைந்தன.

கிறிஸ்ட் சர்ச்சில் இருந்து வித்யாபாலன் புறப்பட்ட சில நிமிடங்களில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக கூறப்பட்டது. இது பற்றிய தகவல் அறிந்ததும் வித்யாபாலன், சித்தார்த், குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்தார்கள். அவர்கள் இருவருக்கும் தொடர்பு கொண்டு பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்து கொண்ட பின்னரே நிம்மதி பெருமூச்சு விட்டுள்ளனர் இருவரின் பெற்றோரும்.

நல்லவேளையாப் போச்சு போங்க...!
 

அப்துல்கலாம் வெளியிட்ட 'கிருஷ்ணவேணி பஞ்சாலை' இசை!


தமிழ் சினிமாவைப் பொருத்தவரை இது ஒரு வித்தியாசமான நிகழ்ச்சிதான். பொதுவாக எந்த சினிமா விழாவிலும் பார்க்க முடியாத மனிதரான நமது முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் அப்துல் கலாம், கிருஷ்ணவேணி பஞ்சாலை படத்தின் இசையை வெளியிட்டு வாழ்த்தியுள்ளார்.

ஸ்டுடியோ அல்லது திரையரங்கில் விழா வைத்தால் அப்துல் கலாம் வருவது சந்தேகம் என்பதால், நேராக அவர் தங்கியிருக்கும் விருந்தினர் இல்லத்துக்கே போய், அவர் கையால் வெளியிட வைத்து வாழ்த்துப் பெற்றனர் படக்குழுவினர்.

யதார்த்தமான கதைக் களத்தில் உருவாகியுள்ள படம் கிருஷ்ணவேணி பஞ்சாலை. வி தனபால் இயக்கியுள்ளார். என் ஆர் ரகுநந்தன் இசையமைத்துள்ளார். வைரமுத்து, தாமரை பாடல்களை எழுதியுள்ளனர். மின்வெளி மீடியா தயாரித்துள்ளது.

படத்தின் பாடல்களை இயக்குநர் மகேந்திரன் வெளியிட, முதல் பிரதியை அப்துல் கலாம் பெற்றுக் கொண்டார்.

இந்த நிகழ்வில் இயக்குநர் தனபால், வி பொன்ராஜ், இசையமைப்பாளர் ரகுநந்தன், எடிட்டர் காசி விஸ்வநாதன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

சினிமா இசைத் தகட்டை அப்துல் கலாம் வெளியிடுவது இதுவே முதல்முறை!
 

நார்வே தமிழ் திரைப்பட விழா 2012... இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள் ஆர்வம்!


பொதுவாக ஒரு திரைப்பட விருது வழங்கும் விழா அல்லது சர்வதேச திரைப்பட விழா என்றால் அது பல விதங்களில் வளைந்து கொடுப்பதாகவே அமைந்துவிடும்.

தெரிந்தவர், பிரபலம், வேண்டப்பட்டவர் என பல வெளியில் தெரியாத பிரிவுகளின் கீழ், விருதுகள் வழங்கப்படும் அல்லது படங்கள் தெரிவு செய்யப்படும்.

ஆனால் இந்த மாதிரி நிர்ப்பந்தங்கள் எதுவும் இல்லாமல், படங்களை அதன் தரம் மற்றும் நடுவர்குழுவினரின் நேர்மையான விமர்சனங்களின் அடிப்படையில் மட்டுமே தேர்வு செய்யும் ஒரு விழா என்ற பெயரைப் பெற்றுள்ளது நார்வே தமிழ் திரைப்பட விழா.

கடந்த ஆண்டு மூத்த இயக்குநர் ஒருவரின் பலத்த சிபாரிசில் இந்தியாவில் தேசிய விருதுகளைப் பெற்றது ஒரு படம். ஆனால் அதே படம் நார்வே திரைப்பட விழாவுக்கு வந்தபோது, எந்த சிபாரிசு, பின்னணி பற்றியும் கவலைப்படாமல், உண்மையில் அந்தப் படம் எதற்கு தகுதியோ அந்தப் பிரிவில் ஒரே ஒரு விருது மட்டுமே வழங்கப்பட்டது. இந்த விழாவின் நேர்மைக்கு இதுவே சாட்சி என சக கலைஞர்கள் பாராட்டு தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

தமிழ் சினிமாவின் இன்றைய மதிப்புக்குரிய படைப்பாளிகளான ஜனநாதன், மிஷ்கின், சசிகுமார், ராதா மோகன், சீனு ராமசாமி, பிரபு சாலமன், சமுத்திரக்கனி என பலரும் நேரில் பங்கேற்று பாராட்டு தெரிவித்த விழா நார்வே திரைப்பட விழா.

இந்த ஆண்டு தனது 3 வது சர்வதேச தமிழ் திரைப்பட விழாவை நார்வேயின் ஆஸ்லோ மற்றும் லோரன்ஸ்கூ நகரங்களில் ஏப்ரல் 25 முதல் 29 வரை நடத்துகிறார்கள்.

முழுக்க முழுக்க தமிழர் படைப்புகளுக்காகவே உலகில் நடத்தப்படும் ஒரே திரைப்பட விழா. சிறந்த படைப்பாளிக்கு தமிழர் விருது என்ற பெருமைக்குரிய விருதினை வழங்கும் இந்த விழாவுக்கு தங்கள் படங்களை அனுப்ப தமிழ்ப் படைப்பாளிகள் பலரும் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

சின்னப் படம், பெரிய படம், கலைப் படம், கமர்ஷியல் படம் என்ற பேதமின்றி, நல்ல படம், மக்கள் ரசனையை உயர்த்தும் படம் என்ற அடிப்படையில் இந்த விழாவுக்கான 15 படங்கள் தேர்வு செய்யப்படுகின்றன.

இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள் அல்லது ஹீரோக்கள் தங்கள் படங்களை இந்த விழாவுக்கு அனுப்பி வைக்க இன்னும் 10 நாட்கள்தான் உள்ளன. வரும் ஜனவரி 15-ம் தேதிக்குள் இந்த விழாவில் பங்கேற்பதற்கான படிவங்களை அனுப்பிவைத்துவிட வேண்டும்.

இதற்கு நுழைவுக் கட்டணம் எதுவும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

"நல்ல படத்தை எடுத்தும், மக்களிடம் உரிய அங்கீகாரம் கிடைக்கவில்லையே என்ற மனக்குறை உள்ள படைப்பாளிகளுக்கு ஒரு பெரிய மரியாதையை பெற்றுத் தரும் களமாக நார்வே தமிழ் திரைப்பட விழா அமைந்துள்ளது. இந்த விழாவுக்கு வரும் படங்களை, நார்வேயுடன் நிறுத்திக் கொள்ளாமல், உலகின் முக்கியமான சில திரைப்பட விழாக்களுக்கும் கொண்டு செல்லும் திட்டமுள்ளது. இதன் மூலம் தமிழ்ப் படங்களின் வீச்சு சர்வதேச அளவில் இன்னும் விரிவடையும். வர்த்தக எல்லையும் விரியும். விழா குறித்த அறிவிப்பு வெளியான பிறகு, நல்ல வரவேற்பு உள்ளது. தமிழகத்திலிருந்து தொடர்ந்து படைப்பாளிகள் பேசி வருகிறார்கள். மிகுந்த கவுரவத்துக்குரிய விருதாக தமிழர் விருது வடிவம் பெற்றிருப்பது தமிழர்கள் அனைவரையும் மகிழ வைத்துள்ளது," என்றார் நார்வே தமிழ் திரைப்பட விழாவின் இயக்குநர் வசீகரன்.

நார்வே அரசின் ஆதரவுடன் இந்த விழா நடப்பது குறிப்பிடத்தக்கது. குறும்படங்களை அனுப்ப இன்னும் ஒரு மாதம் வரை அவகாசம் உள்ளது.

விழாவில் பங்கெடுக்க விரும்பும் படைப்பாளிகள், தயாரிப்பாளர்கள் www.ntff.no என்ற இணைய தளத்தைப் பார்க்கலாம். அல்லது tamilfilmfestival@gmail.comமின் முகவரியில் தொடர்பு கொள்ளலாம் என வசீகரன் தெரிவித்தார்.
 

கமலின் 'காக்கி சட்டை'யை கையில் எடுக்கிறார் நரேன்!1


முகமூடி படத்தில் வில்லன் பாத்திரம் ஏற்று நடித்து வரும் நரேன், அடுத்து கமல்ஹாசனின் முத்திரைப் படங்களில் ஒன்றான காக்கிச் சட்டையின் ரீமேக்கில் நடிக்கவுள்ளாராம்.

ஜீவா கதாநாயகனாக நடிக்கும் முகமூடி படத்தை தற்போது மிஸ்கின் இயக்கிவ ருகிறார். இந்த படத்தில் புதுமையாக நரேனை வில்லானாக நடிக்க வைத்துள்ளார் மிஸ்கின். இவர்தான் மலையாளத்து நரேனை தமிழுக்கு சித்திரம் பேசுதடி மூலம் கூட்டி வந்தவர். தொடர்ந்து அஞ்சாதே படத்திலும் வித்தியாசமான வேடத்தில் நரேனை நடிக்க வைத்திருந்தார். இதில் பிரசன்னா வில்லனாக நடித்தார்.

மலையாளத்திலேயே உழன்று கொண்டிருந்த தனக்கு தமிழில் நல்ல அறிமுகத்தை ஏற்படுத்திக் கொடுத்தவர் என்பதால் முகமூடி படத்தில் வில்லனாக நடிக்க உடனே ஒப்புக் கொண்டாராம் நரேன்.

இந்தப் படத்திற்கு அடுத்து கமல்ஹாசன் நடிப்பில் வெளியாகி பெரும் வெற்றி பெற்ற காக்கிசட்டை படத்தின் ரீமேக்கில் நடிக்கப் போகிறாராம் நரேன்.

கமல் சார் நடித்த கதாபத்திரத்தில் நடிக்கப் போகிறேன். இதை எந்தவித குறையில்லாமல் செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார் நரேன்.

காக்கி சட்டை படத்திற்காக இப்போதே பயிற்சிகளை எடுத்து வருகிறாராம். முகமூடி படத்திற்கும் சேர்த்தே இந்தப் பயிற்சியாம்.

கமல்ஹாசன், மாதவி, அம்பிகா ஆகியோரது நடிப்பிலும் சத்யராஜின் வித்தியாசமான வில்லத்தனத்திலும் உருவாகி வெற்றி பெற்ற படம் காக்கி சட்டை. இப்படத்தில்தான் வில்லத்தனத்தில் புது முத்திரை பதித்தார் சத்யராஜ். அப்படத்தில் அவர் பேசிய தகடு தகடு வசனம் இன்றளவும் பிரபலமானது என்பது நினைவிருக்கலாம்.

கமலுக்கு கன கச்சிதமாக பொருந்திய காக்கிசட்டை நரேனுக்கு எப்படி இருக்கும் என்பது படத்தைப் பார்த்தால்தான் தெரியும்.
 

முல்லைப் பெரியாறு - உண்ணாவிரதத் திட்டத்தைக் கைவிட்டது இயக்குநர்கள் சங்கம்!


சென்னை: முல்லைப் பெரியாறு அணையை உடைக்கும் கேரளாவின் சதியைக் கண்டித்தும், அணையைக் காக்கக் கோரியும் வரும் ஜனவரி -ம் தேதி தேனியில் நடக்கவிருந்த உண்ணாவிரதம் கைவிடப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சுமுகமான சூழல் உருவாகி வருவதால் உண்ணாவிரதம் கைவிடப்படுவதாகவும், தேவைப்பட்டால் மீண்டும் ஒட்டு மொத்த தமிழ் திரையுலகமும் பொங்கி எழும் என்றும் இயக்குநர் சங்கத் தலைவர் பாரதிராஜா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கை:

முல்லைப் பெரியாறு அணைப் பிரச்சினையை முன்வைத்து தேனி மாவட்டம் வீரபாண்டியில் தமிழ் திரைப்பட இயக்குநர்கள் சார்பில் 8.1.12 அன்று மாபெரும் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்கு அனைத்து திரைத்துறை சங்கங்களின் ஆதரவையும் இயக்குநர்கள் சங்கம் கோரியிருந்தது.

இந்தச் சூழ்நிலையில், "முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 120 அடியாகக் குறைக்க முடியாது. 1979-ம் ஆண்டு முதல் 132 அடி தண்ணீர் தேக்கி வைக்கப்படுகிறது. அதனால் அணைக்கு எந்த பாதிப்பும் இல்லை. மேலும் நில நடுக்கத்தாலும் பாதிப்பு வர வாய்ப்பில்லை என தொழில்நுட்ப வல்லுநர் குழு அறிக்கையிலும் தெரிவிக்கப்பட்டுள்ளது" என்பதை எடுத்துக்காட்டிய உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி ஏ எஸ் ஆனந்த் தலைமையிலான குழு, கேரளாவின் அனைத்து வாதங்களையும் நிராகரித்துள்ளது. இதுகுறித்த செய்திகள் பத்திரிகைகளில் வந்துள்ளன.

இந்தத் தீர்ப்பு மூலம் தமிழக கேரள எல்லைகளில் மீண்டும் இயல்பு நிலை திரும்பத் தொடங்கியுள்ளது. இந்தச் சூழ்நிலையில் வரும் 8-ம் தேதி நடைபெறுவதாக இருந்த போராட்டத்தை கைவிடும்படியும், தேவைப்பட்டால் மொத்த திரையுலகமும் இணைந்து போராடலாம் என்றும் திரையுலகப் பிரமுகர்கள் பலர் கூறிய கருத்துக்கு மதிப்பளித்து, வரும் 8.1.12-ம் தேதி நடக்கவிருந்த உண்ணாவிரதப் போராட்டத்தை ரத்து செய்வதென்று தமிழ்நாடு இயக்குநர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது.

இந்தப் போராட்டத்துக்கு தங்கள் ஆதரவு தேவை என்று கேட்ட உடனே, செயற்குழுவைக் கூட்டி உடனடியாக தங்கள் ஆதரவைத் தெரிவித்த நடிகர் சங்கம், அதன் தலைவர் ஆர் சரத்குமார், செயலர் ராதாரவி மற்றும் நிர்வாகக் குழுவினருக்கு இயக்குநர்கள் சங்கம் தனது இதயம் கனிந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறது.

இப்படியொரு போராட்டம் அறிவித்த உடனே அதில் பங்கெடுத்துக் கொள்ள முன்வந்த இயக்குநர்கள், உதவி இயக்குநர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்," என அந்த அறிக்கையில் பாரதிராஜா குறிப்பிட்டுள்ளார்.
 

இந்த வருஷம் யாருக்கெல்லாம் டும்டும்டும்?


இந்த ஆண்டு நிச்சயம் கல்யாணம் செய்துகொள்வார்கள் என்று கூறப்படும் நடிகைகள் மூன்று பேர். நயன்தாரா, சினேகா, ஜெனிலியா ஆகிய மூவரும்தான் அவர்கள்.

நயன்தாரா திருமணம் கடந்த ஜூலையிலேயே நடக்கவிருந்தது. ஆனால் பல்வேறு காரணங்களால் தள்ளிப் போனது. இந்த ஆண்டு நிச்சயம் நடக்கும் என்கிறார்கள்.

சினேகா - பிரசன்னா திருமணம் உறுதியாகிவிட்டது. இந்த ஆண்டு ஏப்ரல் அல்லது மே மாதம் திருமணம் நடக்கலாம் என்று தெரிகிறது. இருவரும் ஜோடியாக விழாக்களுக்கு வருகிறார்கள். இணைந்தே விருதுகளைப் பெறுகிறார்கள். சினேகா கைவசம் இப்போது சூப்பர் ஸ்டாரின் கோச்சடையான்தான். அதை முடித்ததும் திருமணம் என்பது உறுதி.

ஜெனிலியாவுக்கு நிச்சயதார்த்தம் சமீபத்தில் முடிந்தது. பிப்ரவரி மாதம் மொத்தம் 5 நாட்கள் இந்தத் திருமணம் நடக்கிறது. பெரிய இடத்து மாப்பிள்ளை. மத்திய அமைச்சர் விலாஸ்ராவ் தேஷ்முக்கின் மகனும் நடிகருமான ரித்தேஷ் தேஷ்முக்தான் மணமகன். ஜெனிலியா கைவசமும் இப்போதைக்கு வேறு படங்கள் இல்லை.

அட்வான்ஸ் திருமண வாழ்த்துக்கள்!
 

தனுஷ் - ஸ்ருதிஹாஸன் நெருக்கம் - கடும் கோபத்தில் ரஜினி குடும்பம்!!


உடல்நிலை சரியில்லாமல் போய், மருத்துவர்களின் முயற்சி மற்றும் ரசிகர்களின் அன்பு பிரார்த்தனைகளால் நலம் பெற்று வந்த சூப்பர் ஸ்டாரை நிம்மதியாக இருக்கவிடமாட்டார்கள் போலிருக்கிறது சுற்றியிருப்பவர்கள்.

முன்னணி ஆங்கில நாளிதழ் ஒன்று இன்று வெளியாகியிருக்கும் செய்தி (வதந்தி அல்ல!) கோலிவுட்டில் மிகப்பெரிய சலசலப்பை உண்டாக்கியிருக்கிறது. அது தனுஷ் - ஸ்ருதி ஹாஸனின் நெருக்கம்!

3 படத்தில் தனக்கு ஜோடியாக நடிக்கும் ஸ்ருதி ஹாஸனுடன் தனுஷ் மிக மிக நெருக்கமாகப் பழகுவதாகவும், அது பகிரங்கமாக ரஜினி குடும்பத்தில் பெரும் பிரச்சினையாக வெடித்திருப்பதாகவும் உறுதியாக செய்தி வெளியாகியுள்ளது.

தனுஷ் – ஸ்ருதி நெருக்கம் காரணமாக, சூப்பர் ஸ்டார் ரஜினி அமைதியிழந்து தவிப்பதாகவும், அவரும் அவரது மனைவி லதாவும் இதுகுறித்து தனுஷின் தந்தை கஸ்தூரி ராஜாவிடம் பேசியதாகவும் அந்த செய்தி தெரிவிக்கிறது.

"ஐஸ்வர்யா நிலையை நினைத்தால் எங்களுக்கு கவலையாக உள்ளது. உடனடியாக உங்கள் மகனுடன் பேசுங்கள். நிலைமையை சரி செய்ய முடியுமா… அல்லது நாங்கள் வேறு வழியில் இதை டீல் பண்ணவா" என்று சற்று கோபத்துடனே ரஜினி தரப்பில் கேட்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

மண்டபத்தில் தன்னைச் சந்திக்க வரும் நெருங்கிய நண்பர்களிடம் இந்த விவகாரத்தைச் சொல்லி வருத்தப்பட்டுள்ளார் ரஜினி. “எப்பேர்பட்ட மனிதர் அவர்… திருமணத்தின் போது தனுஷ் செய்த அத்தனை சில்லரைத்தனங்களையும் அவர் பொறுத்துக் கொண்டார். அதன் பிறகும் தனுஷ் திருந்தவில்லை. ஐஸ்வர்யா – தனுஷ் கொஞ்ச காலம் பிரிந்து இருந்ததும் நடந்தது. ஆனால் அனைத்தையும் பொறுத்துக் கொண்ட ரஜினியை மேலும் மேலும் டென்ஷனாக்குகிறார் தனுஷ்,” என்றார் ரஜினியை அடிக்கடி சந்திக்கும் அவரது நண்பர் ஒருவர்.

இந்தப் பிரச்சினையை விரைவில் சரி செய்வதாக கஸ்தூரி ராஜா உறுதியளித்துள்ளாராம்.

ஸ்ருதி ஹாஸன் ஏற்கெனவே மும்பையில் ஒருவரை காதலித்து, கொஞ்ச நாள் அவருடன் இருந்ததாகச் சொல்கிறார்கள். தெலுங்கு நடிகர் சித்தார்த்துடன் சில மாதங்கள் ஒன்றாக வாழ்ந்ததும் (கமல் ஆசியுடன்), பின்னர் அவரை விட்டுப் பிரிந்து வந்ததும் நினைவிருக்கலாம்.

சித்தார்த்தைப் பிரிந்த பிறகுதான் இந்த ‘3′ படத்தில் நடித்தார் ஸ்ருதி. அதுவும் ஏற்கெனவே ஒப்பந்தமான அமலா பாலை நீக்கிவிட்டு ஸ்ருதியை ஒப்பந்தம் செய்தார் ஐஸ்வர்யா. இப்போது அதுவே அவருக்கு எதிராக திரும்பியுள்ளது.

புத்தாண்டு தினத்தன்று மனைவி ஐஸ்வர்யாவின் பிறந்த நாளைக் கூட பொருட்படுத்தாமல், ஸ்ருதியுடன் ட்ரிங்ஸ் பார்ட்டிக்குப் போனாராம் தனுஷ். இதைக் கேள்விப்பட்டு பயங்கர மூட் அவுட் ஆகிவிட்டாராம் ரஜினி. தமன்னா, பூனம் பாஜ்வா என இளம் நாயகிகளின் தண்ணிப் பார்ட்டிகளில் தவறாமல் ஆஜராகிவிடுகிறார் தனுஷ். கொலவெறி பாட்டுக்கு கிடைத்த தாறுமாறான ஹிட்டும், மும்பையில் கிடைத்துள்ள புதிய சினேகிதங்களும் அவரை தலைகால் புரியாமல் ஆட வைப்பதாக ரஜினிக்கு நெருக்கமானவர்கள் கடுப்புடன் கூறுகின்றனர்.

யாரடி நீ மோகினி என்ற படத்தில் நடித்தபோது, நயன்தாராவுடன் ஏகத்துக்கும் நெருக்கமாகி, எல்லை மீறிப் போனதும், நயன்தாராவை கிண்டி நட்சத்திர ஓட்டலில் நிரந்தரமாகத் தங்க வைத்திருந்ததும் செய்தியாக ஏற்கெனவே வந்ததுதான். அப்போது ரஜினி தன் பாணியில் கண்டிக்க, தனுஷ் வாலைச் சுருட்டிக் கொண்டாராம். இப்போது மீண்டும் ஸ்ருதியுடன் லீலையை ஆரம்பித்துள்ளது பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது.

இந்த செய்தி உண்மைதானா?அல்லது '3' படத்தின் பப்ளிசிட்டியின் ஒரு அங்கமா என்றும் இன்னொரு தரப்பினர் பேசிக் கொள்கிறார்கள்.
 

விவசாயிகளுக்கு பணம் வேண்டாம், வாழ வழி செய்யுங்கள்- தங்கர்பச்சான் கோரிக்கை


சென்னை: தானே புயலால் வாழ்வாரதாரம் இழந்து நிற்கும் மக்களுக்கு அரசு தக்க நிவாரணம் ஏற்படுத்தி தரவேண்டும் என்று திரைப்பட இயக்குநர் தங்கர்பச்சான் முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

கடலூர் சென்று புயல் பாதித்த பகுதிகளை பார்வையிட்டு வந்த அவர் சென்னையில் பத்திரிக்கையாளர்களிடம் கூறியதாவது, .

மிகவும் பின்தங்கிய மாவட்டங்களான விழுப்புரம், கடலூர் மாவட்டங்கள் இனி மீண்டும் பழைய வாழ்கைக்கு எழவே வாய்ப்பில்லாத அளவுக்கு தானே புயலால் சேதம் அடைந்துள்ளது. உயிர்ச்சேதம் அதிகம் இல்லை என்பதால் யாரும் கண்டுகொள்ளாமல் இருக்கின்றனர்.

வாழ்வாதாரம் பாதிப்பு

உயிர்ச்சேதம் என்பதை விட இரு மாவட்டங்களின் வாழ்வாதாரமான பயிர்ச்சேதம், பொருள் சேதம், வாழ்வாதார சேதம் ஏற்பட்டுள்ளது. புயல் தாக்கி 5 நாட்கள் ஆகியும், இன்றும் அங்குள்ள மக்கள் குடிக்க நீரீன்றி, உண்ண உணவின்றி, படுக்க இடமின்றி கேட்பாரற்று கிடக்கிறார்கள்.

அம்மாவட்டங்களிலுள்ள விவசாயிகள் புயல் தாக்கிய அதிர்ச்சியிலிருந்து இன்னும் மீளாமல் இருக்கிறார்கள். அப்பகுதி மக்களின் குரலாக தமிழக அரசிடமும், மத்திய அரசிடமும் சில கோரிக்கைகளை வைக்கிறேன்.

அழிந்து போன பயிர்கள் எல்லாம் நெல், கரும்பு போன்ற குறுகியகாலப் பயிர்கள் இல்லை. நட்டு வைத்த பிறகு 12 ஆண்டுகள் கழித்து ஆயுள் வரை பலன் தரக்கூடிய மரப் பயிர்களான முந்திரி, பலா, மா போன்றவைகளெல்லாம் அழிந்து போய்விட்டன.

வாழ வழி தேவை

தமிழக முதல்வர் அவர்கள் ஒருமுறை நேரில் சென்று அம்மாவட்டங்களை சுற்றிப் பார்க்க வேண்டுகிறேன். இப்பகுதி மக்கள் உங்களைத்தான் நம்பியிருகிறார்கள். அவர்களிடம் இனி இழப்பதற்கு உயிரைத் தவிர வேறேதும் இல்லை.

நிவாரணம் என்ற பெயரில் அம்மக்களுக்கு பண உதவி கொடுக்கவேண்டாம். வெறும் நிவாரணம், மானியம், கடன் தள்ளுபடியால் மட்டும் விவசாயிகளின் வாழ்வு உயர்ந்து விடாது. நமது அரசு விவசாயம் குறித்து நன்கு அறிந்த முதல் நிலை அமைச்சர்களையும், ஐ.ஏ.எஸ். அதிகாரிகளையும் நியமித்து துரிதமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். அவர்களுக்கு வேண்டிய வாழ்வாதாரங்களை உடனே செய்து தாருங்கள் என்று கேட்டுக் கொள்கிறேன்.

அடிப்படை தேவை இல்லை

ஐந்து நாட்களாகியும் அடிப்படைத் தேவைகளில் 5 சதவீதம் கூட தீர்க்க முடியாத அம்மாவட்ட ஆட்சியரை மாற்றி செயலில் இறங்க வேண்டும். பாதிக்கப்பட்ட மாவட்டத்தில் உள்ள ஒவ்வொரு குடும்பத்தினருக்கும் வேலை வாய்ப்பையும் மற்றும் மாற்றுப் பயிர் திட்டத்தையும், விவசாய உற்பத்திக்கான அனைத்து இடுபொருட்களையும் அரசே தரவேண்டும். விவசாய மக்களுக்கு தண்ணீர் வசதியை அரசு செலவில் ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். விவசாயத்திற்கான பொருட்களை அரசே குறைந்த விலையில் விற்பனை செய்ய வேண்டும்.

மதுக்கடைகளை மூடவேண்டும்

பாதிக்கப்பட்ட மாவட்ட மக்களின் பிள்ளைகளுக்கு, வரும் பத்தாண்டுகளுக்கான அரசு மற்றும் தனியார் பள்ளி, கல்லூரிகளின் படிப்பு செலவுகள் முழுவதையும் அரசு ஏற்றுக் கொள்ள வேண்டும். அத்துடன் அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் வேலை வாய்ப்பினை தகுதியுள்ளவர்களுக்கு உடனடியாக ஏற்படுத்தித் தரவேண்டும்.

பள்ளிகளில் காலை, பிற்பகல் என இரண்டு வேளைகளிலும் உணவு தரவேண்டும். மேலும் மேலும் மக்களை சிந்திக்க விடாத, சோம்பேறிகளாக, ஏழைகளாக, உயிர்கொல்லிகளாக மாற்றும் மதுக்கடைகளை உடனே அகற்றிட வேண்டும்.

அம்மாவட்ட மக்களின் மனதில் உள்ள வேதனைகளைத் தீர்க்க முதலமைச்சர் அவர்கள் உடனடியாக, மத்திய அரசிடம் நிதியைக் கேட்டு பெற்று அம்மாவட்ட மக்களின் வாழ்வாதாரத்தை மீட்டுக் கொடுக்க வேண்டும் என்று தங்கர்பச்சான் வேண்டுகோள் விடுத்தார்.
 

புதுப்பட டிவிடி விற்பனை - பர்மா பஜாரில் 2 பேர் கைது


சென்னை: சென்னை பர்மா பஜார் நடைபாதை கடைகளில் இருந்து 400 புதுப்படம் மற்றும் 100 ஆபாச டிவிடிக்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

திருட்டு டிவிடிக்கள் விற்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

சென்னை பாரிமுனை பர்மா பஜார் அருகே நடைபாதையில் புதுப்பட டிவிடி, ஆபாச டிவிடி விற்பனை செய்யப்படுவதாக போலீசுக்கு தகவல் கிடைத்ததன்பேரில் வடக்கு கடற்கரை இன்ஸ்பெக்டர் ராமமூர்த்தி மற்றும் போலீசார் அப்பகுதியில் அதிரடி சோதனை நடத்தினர்.

இதில் அங்கு விற்பனை செய்யப்பட்ட மெளனகுரு, போராளி, ராஜபாட்டை உள்ளிட்ட படங்களின் 400 டிவிடிக்கள் 400 மற்றும் 100 ஆபாச டிவிடிக்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

இவற்றை விற்ற தண்டையார்பேட்டையை சேர்ந்த முகமது (37), அம்பத்தூர் பாடியை சேர்ந்த சரவணன் (33) ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
 

வக்கீலுடன் காதலா... இந்த ஆண்டின் குட் ஜோக்! - நமீதா 'கலகல'


மும்பை: வக்கீல் ஒருவருடன் காதல் என பத்திரிகைகளில் என்னைப் பற்றி வந்துள்ள செய்தி இந்த ஆண்டின் மிகப் பெரிய ஜோக் என்று கூறியுள்ளார் நடிகை நமீதா.

தமிழ் சினிமாவின் கவர்ச்சிப் புயல் நடிகை நமீதா. அஜீத், விஜய் என முன்னணி நடிகர்களுடன் நடித்த அவர், இப்போது நல்ல கதையுள்ள வேடங்களை மட்டும் தேர்ந்தெடுத்து நடிக்கிறார். தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளிலும் பிஸியாக உள்ளார்.

நடிப்புத் தொழிலுடன் கூடவே, ரியல் எஸ்டேட் தொழிலிலும் கால்பதித்துள்ளார். இதற்கென மும்பையில் பெரிய அலுவலகம் அமைத்துள்ளார். ஆம்பி வேலி, சென்னை உள்ளிட்ட இடங்களில் தனது ரியல் எஸ்டேட் வர்த்தகத்தை விரிவுபடுத்தியுள்ள நமீதா, பெரும்பாலும் தங்குவது சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தனது வீட்டில்தான்.

இந்த நிலையில் நமீதா தனது நண்பர் பரத் கபூரைப் பிரிந்து, வக்கீல் ஒருவருடன் காதல் வயப்பட்டிருப்பதாக செய்தி வெளியானது.

இதுகுறித்து நமீதாவைத் தொடர்பு கொண்டு விசாரித்தோம்.

செய்தியைக் கேட்டு சிரித்த நமீதா, அடுத்து இப்படிச் சொன்னார்:

"சினிமாவில் இந்த ஆண்டின் மிகப் பெரிய ஜோக் இதுவாகத்தான் இருக்கும். என் அலுவலகத்தில் மூன்று வக்கீல்கள் இருக்கிறார்கள். மூவருக்கும் வயது 60க்கும் மேல்!

60 வயதுக்கு மேற்பட்ட ஒருவருடன் சுற்ற வேண்டிய அவசியம் எனக்கு ஏன் வரப்போகுது... எழுதுவதற்கு முன் கொஞ்சம் கூட யோசிக்கவே மாட்டாங்களா?

தயவு செய்து எங்கப்பா கிட்ட இந்த சமாச்சாரத்தை சொல்லிடாதீங்க. ஏன்னா எங்க ஆபீஸ்ல இருக்கிற மூன்று வக்கீல்களின் வேலையும் போயிடும். வயசானவங்க பாவம் சும்மா விடாது!" என்றார் மாறாத சிரிப்புடன்.
 

தனுஷூம் நானும் நணபர்கள் தான் : சர்ச்சைக்கு ஸ்ருதி பதில்!

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
3 படத்தில் தனக்கு ஜோடியாக நடிக்கும் ஸ்ருதி ஹாஸனுடன் தனுஷ் மிக மிக நெருக்கமாகப் பழகுவதாக செய்திகள் வெளியாகின. பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கும் இந்த விஷியம், ஸ்ருதி காதுகளுக்கு அடைந்தது. இதனையடுத்து, முதன் முறையாக இந்த செய்தியை ஸ்ருதி மறுத்துள்ளார். 'இந்த செய்தியில் துளியும் உண்மையில்லை' என்று கூறிய ஸ்ருதி, 'தனுஷூம் நானும் நணபர்கள் தான்' என்று கூறினார்.


 

உண்ணாவிரதம் - முன்னணி ஹீரோக்கள் பங்கேற்பார்களா?

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
முல்லைப் பெ‌ரியாறு விவகாரம் தொடர்பாக தமிழ் திரைப்பட இயக்குனர்கள் வரும் 8ஆம் தேதி முல்லைப் பெ‌ரியாறு அணை அருகில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்துகின்றனர். இதில் கலந்து கொள்ள இயக்குனர்கள் சங்கம் சார்பில் நடிகர்களுக்கும், பெப்சி தொழிலாளர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. முல்லைப் பெ‌ரியாறு விவகாரத்தில் ர‌ஜினி, கமல், அஜீத், விஜய் உள்ளிட்ட மாஸ் நடிகர்கள் இதுவரை எந்தக் கருத்தும் தெ‌ரிவிக்கவில்லை. இதற்கு கடும் கண்டனம் எழுந்தது. பாரதிராஜா நடிகர்களை பெயர் குறிப்பிடாமல் மொத்தமாக தாக்கிப் பேசியது நினைவிருக்கலாம். இப்போது வெளிப்படையாக அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில் முன்னணி நடிகர்கள் உண்ணாவிரதத்தில் பங்கேற்பார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது.


 

இந்திக்கு போகும் "அப்படி போடு"

bollywood news, latest bollywood news, tamil bollywood news, bollywood latest news, bollywood masala, cinema news
இளைய தளபதி விஜய் நடித்த 'கில்லி' படததில் 'அப்படி போடு' பாட்டு சூப்பர் ஹிட்டானது. இதனையடுத்து பாட்டின் பீட் இந்தி திரையுலகத்தில் அசத்தி வருகிறது. சமீபத்தில அமிதாப் பச்சான் தன்னுடைய படத்தின் ஒரு காட்சியில் 'அப்படி போடு 'பாடலின் ஒரு சில வரிகளை பாடி அசத்தினார். இந்நிலையில் பாட்டின் உரிமத்தை அக்ஷய குமார் வாங்கியுள்ளார். தற்போது தான் நடித்து வரும் 'நாம் ஹய் பாஸ்' என்ற படத்தில் 'அப்படி போடு' பாடலை ரீமேக் செய்துள்ளார். இந்த படம் முடிந்த பிறகு, தமிழில் கார்த்தி நடித்து ஹிட்டான 'சிறுத்தை' படத்தின் இந்தி ரீமேக்கில் நடிக்கிறார் அக்ஷய குமார்.


 

இந்திக்கு போகும் "அப்படி போடு"

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
இளைய தளபதி விஜய் நடித்த 'கில்லி' படததில் 'அப்படி போடு' பாட்டு சூப்பர் ஹிட்டானது. இதனையடுத்து பாட்டின் பீட் இந்தி திரையுலகத்தில் அசத்தி வருகிறது. சமீபத்தில அமிதாப் பச்சான் தன்னுடைய படத்தின் ஒரு காட்சியில் 'அப்படி போடு 'பாடலின் ஒரு சில வரிகளை பாடி அசத்தினார். இந்நிலையில் பாட்டின் உரிமத்தை அக்ஷய குமார் வாங்கியுள்ளார். தற்போது தான் நடித்து வரும் 'நாம் ஹய் பாஸ்' என்ற படத்தில் 'அப்படி போடு' பாடலை ரீமேக் செய்துள்ளார். இந்த படம் முடிந்த பிறகு, தமிழில் கார்த்தி நடித்து ஹிட்டான 'சிறுத்தை' படத்தின் இந்தி ரீமேக்கில் நடிக்கிறார் அக்ஷய குமார்.


 

காலாவிதியான மார்க்கெட் : விட்ட மார்க்கெட்டை பிடிக்க பிரசாந்த் முயிற்சி!

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
தமது திருமண வாழ்க்கையால், தன் வாழ்வையும், சினிமா மார்க்கெட்டை தொலைத்த பிரசாந்த், விட்ட மார்க்கெட்டை பிடிக்க தீவிர முயிற்சியில் இறங்கியுள்ளார். அதுமட்டுமின்றி தான் ஒரு நல்ல நடிகர் என்பதை மம்பட்டியான் படத்தின் மூலம் நிரூபித்திருக்கிறார் பிரசாந்த். தற்போது தன் கையில் மூன்று படங்களை கையில் வைத்திருக்கும் பிரசாந்த் மீண்டும் வெளி இயக்குனர்களிடம் கதை கேட்க ஆரம்பித்துவிட்டார். இதுபற்றி அவர் கூறும்போது, 'அடுத்து மூன்று படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கேன். மூணுமே பெ‌ரிய இயக்குனர்களின் படங்கள். அவர்களே அந்தப் படங்களைப் பற்றி கூறுவார்கள் என்பதால் இப்போது அதுபற்றி நான் பேசப் போவதில்லை. இந்த மூன்றுப் படங்களையும் முடித்தப் பிறகு மீண்டும் என் தந்தை இயக்கத்தில் நடிப்பேன்.' என்று கூறினார்.


 

கார்த்தியுடன் ஜோடி சேரும் நாயகிகள்!

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
சுராஜ் இயக்கத்தில கார்த்தி நடிக்கும் பெய‌ரிடப்படாதப் படத்தில் மொத்தம் நான்கு நாயகிகளாம். தற்போது அனுஷ்கா மற்றும் கார்த்தி சம்பந்தப்பட்ட காட்சிகளை எடுத்து வரும் சுராஜ், படத்தை மிகவும் காமெடியாக எடுக்க முடிவு செய்துள்ளாராம். மேலும் கார்த்தியுடன் நிகிதா, சனுஜா மற்றும் மேக்னா போன்ற நடிகைகள் ஜோடியாக நடிக்கின்றனர். கேரளாவில் இந்தப் படப்பிடிப்பு நடந்து வருகிறது என்பது லேட்டஸ்ட் தகவல்.


 

படத்தை இயக்குவது குறித்து ரஜினியுடன் பேசவில்லை!

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
ரஜினி - ஷங்கர் கூட்டணியில் ஒரு படம் வரும் வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. இதற்கிடையில்தான் இன்னொரு வதந்தி கோடம்பாக்கத்தை கலக்கி வருகிறது. கோச்சடையான் முடிந்ததும் ரஜினி ராணாவை எடுக்காமல், பி வாசு இயக்கத்தில் சிவாஜி பிலிம்சுக்காக ஒரு குறுகிய கால படம் ஒன்றை நடிக்க விரும்புவதாக அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது. ஆனால் பி.வாசு அந்த செய்தியை முற்றிலும் மறுத்துள்ளார். 'இதுவரை தான், சூப்பர் ஸ்டார் ரஜினியிடம் படம் இயக்குவது குறித்து எந்த ஒரு தகவலும் சொல்லவில்லை. அவரும் இதுவரை என்னை அணுகவில்லை' என்று பி.வாசு கூறியுள்ளார்.


 

அதிக தமிழ் படங்களில் நடிக்க ஆசையில்லை!

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
சென்ற வருடம் தமிழில் ஹன்சிக்காவிற்கு சிறப்பான வருடமாக அமைந்து. விஜய், ஜெயம் ரவி, தனுஷ் முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்தார் ஹன்சிகா. தற்போது அவரை தேடி நிறைய தமிழ் படங்கள் வருகிறதாகவும், ஆனால் வரும் ஒரு சில வாய்ப்பினை மட்டும் ஹன்சிகா ஏற்றுக் கொள்வதாகவும் செய்திகள் வெளியாகின. இதுபற்றி அவரிடம் கேட்டதற்கு, 'நிறைய தமிழ் படங்களில் நடிக்க ஆசையில்லை, காரணம் தமிழில் நான் நல்ல பெயர் எடுக்க வேண்டும், நிறை தமிழ் பட வாய்ப்புகள் வந்தாலும், எல்லாவற்றையும் ஒப்புக் கொள்வதில்லை. நல்ல கதைக்கு மட்டும் நடிக்க ஒப்புக் கொண்டுள்ளேன். இதனால் தான் நிறைய தமிழ் படங்கள் நடிப்பதை விட பெயர் நடிகையாக இருக்க விரும்புகிறேன்' என்று கூறினார்.