தொடர்பு எல்லைக்குள் வந்தார் அஞ்சலி... திருமணம் குறித்து விளக்கம்!

சென்னை: அரசியல் புள்ளியுடன் காதல், திருமணம், அமெரிக்காவில் செட்டில் போன்ற செய்திகளுக்கு இன்று விளக்கம் அளித்துள்ளார் நடிகை அஞ்சலி.

நடிகை அஞ்சலிக்கும் தமிழகத்தின் பிரபல அரசியல் தலைவரின் மருமகனுக்கும் ரகசிய திருமணம் என்றும், இருவரும் அமெரிக்காவில் செட்டிலாகிவிட்டதாகவும் தகவல்கள் வெளியாகின.

தொடர்பு எல்லைக்குள் வந்தார் அஞ்சலி... திருமணம் குறித்து விளக்கம்!

குறிப்பாக தான் நடித்த மதகஜராஜா படத்தின் தெலுங்கு டப்பிங்குக்குக் கூட அவர் வர மறுப்பதாகவும் எங்கிருக்கிறார் என்றே தெரியவில்லை என்றும் படத்தின் ஹீரோவும் தயாரிப்பாளருமான விஷாலே வருத்தப்பட்டிருந்தார்.

இப்போது இந்த செய்திகளுக்கு விளக்கம் தெரிவித்துள்ளார் அஞ்சலி.

இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கை:

"கற்றது தமிழ் தொடங்கி இன்றுவரை பல்வேறு காலகட்டங்களில் எனக்கு ஊக்கமளித்து ஆதரித்த அனைத்து ஊடகங்களுக்கும் மனமார்ந்த நன்றி.

சமீபத்தில் சுந்தர் சி இயக்கத்தில் விஷாலுடன் நான் நடித்த மதகஜராஜா படத்துக்கு டப்பிங் பேச மறுத்ததாகவும், விளம்பர நிகழ்ச்சிகளுக்கு வர மறுப்பதாகவும், அரசியல் குடும்பத்தைச் சேர்ந்த ஒருவருடன் இணைத்தும் செய்திகள் வந்த வண்ணம் உள்ளன.

இவை அனைத்தும் முற்றிலும் தவறானவை என்பதை தெளிவுபடுத்த விரும்புகிறேன்.

இனி வரும் காலங்களில் என்னைப் பற்றிய செய்திகளுக்கு விளக்கம் தேவை எனில் newsfromanjali@gmail.com என்ற முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்," என்று தெரிவித்துள்ளார்.

 

தனுஷுடன் இணையும் கார்த்திக்!

தனுஷுடன் இணையும் கார்த்திக்!

சென்னை: தனுஷை வைத்து கேவி ஆனந்த் இயக்கும் புதிய படத்தில் நடிகர் கார்த்திக்கும் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.

எண்பதுகள் மற்றும் தொன்னூறுகளில் பிரபல நாயகனாகத் திகழ்ந்தவர் கார்த்திக். இப்போது நாடாளும் மக்கள் கட்சி என அரசியல் கட்சி ஆரம்பித்து அவ்வப்போது கிச்சு கிச்சு மூட்டி வருகிறார்.

சினிமாவில் நடிக்காமல் இருந்த அவர், இப்போது படங்களில் கவுரவ வேடம் அல்லது குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார்.

‘மாற்றான்' படத்திற்குப் பிறகு தனுஷை வைத்து கே.வி.ஆனந்த் இயக்கப்போகும் புதிய படத்தில் கார்த்திக்கும் நடிக்கிறார். ஏ.ஜி.எஸ். நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படம் வரும் செப்டம் 2-ம் தேதி புதுச்சேரியில் தொடங்குகிறது.

‘அயன்', ‘மாற்றன்' படங்களைப்போல இந்த படத்திற்காகவும் வெளிநாடு செல்லவிருக்கிறார் கே.வி.ஆனந்த். இப்படத்தின் நாயகி இன்னும் தேர்வாகவில்லை.

 

பிரபாகரனின் வாழ்க்கையை விவரிக்க வருகிறது தமிழ் திரைப்படம்

பிரபாகரனின் வாழ்க்கையை விவரிக்க வருகிறது தமிழ் திரைப்படம்

சென்னை: தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் வீரஞ்செறிந்த வாழ்க்கையை விவரிக்கும் திரைப்படத்தை உருவாக்க இருப்பதாக இயக்குநர் வ. கெளதமன் தெரிவித்துள்ளார்.

சந்தனக்காடு தொலைக்காட்சி தொடரின் மூலம் அறியப்பட்டு மகிழ்ச்சி திரைப்படத்தில் நாயகனாக நடித்தவர் வ. கெளதமன். தமிழ் உணர்வாளராகிய கெளதம் இயக்கப் போகும் புதிய படம் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனைப் பற்றியதாம்.

இது தொடர்பாக இயக்குநர் வ. கெளதமன் நம்மிடம் கூறுகையில், தலைவர் பிரபாகரனின் வீரம் செறிந்த, உலகை உலுக்கக் கூடிய வீர வரலாற்றை விவரிக்கும் திரைப்படமாக இது இருக்கும். தலைவரின் சிறு வயது முதல் நடந்திக்கடல் யுத்தம் வரையில் அவர் நடத்திய யுத்தங்களை உள்ளடக்கிய திரைப்படமாக்க திட்டமிட்டுள்ளோம்.

இந்தப் படத்துக்கான பெயர் பின்னர் அறிவிக்கப்படும் என்றார்.

 

தயாரிப்பு நிறுவனம் துவங்கும் சர்ச்சை நாயகி

சென்னை: இங்கிருந்து சென்று பாலிவுட்டில் போராடிக் கொண்டிருக்கும் நடிகை தயாரிப்பு நிறுவனம் துவங்கவிருக்கிறாராம்.

தமிழ் திரையுலகின் முன்னணி ஹீரோக்களுடன் நடித்து வந்த அந்த நடிகைக்கு பாலிவுட் ஆசை வந்து மும்பையிலேயே செட்டிலாகிவிட்டார். அங்கும் பட வாய்ப்புகள் இன்றி திண்டாடி வருகிறார். அண்மையில் வந்த ஒரு வாய்ப்பும் வேறு நடிகைக்கு சென்றுவிட்டது.

இந்நிலையில் நடிகை விரைவில் தயாரிப்பு நிறுவனத்தை துவங்குகிறாராம். அந்த நிறுவனத்திற்கு தனது தந்தையை எம்.டி. ஆக ஆக்கப் போகிறாராம். அந்த நிறுவனத்தின் மூலம் தமிழ் மற்றும் மலையாள படங்களை தயாரிக்க திட்டமிட்டுள்ளாராம் நடிகை.

அம்மணி சென்னையில் 4 பங்களாக்கள், நிலம் என்று ஏகப்பட்ட சொத்துக்களை வாங்கிப் போட்டுள்ளாராம். அப்படி என்றால் மீண்டும் சென்னையில் வந்து செட்டிலாகிவிடுவாரோ?