தாராளமா நிற்கட்டும்.. நாங்க பயப்பட மாட்டோம்! - சரத்குமார் அணி

நெல்லை: நடிகர் சங்கத் தேர்தலில் யார் வேண்டுமானாலும் தாராளமாக நிற்கட்டும், எங்களுக்கு பயமில்லை என்று சரத்குமார் தெரிவித்துள்ளார்.

நெல்லையில் நடந்த அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் விழா ஒன்றில் கலந்து கொண்ட சரத்குமார், நிருபர்களிடம் பேசுகையில், "நடிகர் சங்கத்திற்கு நாங்கள் பொறுப்புக்கு வரும்போது சங்கம் கடனில் இருந்தது. அதை அடைத்துள்ளோம்.

We never afraid to face Vishal and co in Elections, says Sarathkumar

சங்க கட்டடம் கட்டுவது குறித்த ஒப்பந்தம் குறித்து செயற்குழு, பொதுக்குழுவில் பேசப்பட்டு உள்ளது. அந்த ஒப்பந்தத்தால் சங்கத்திற்கு வருமானம்தான் வரும். இந்த ஒப்பந்தம் குறித்து எங்களிடம் யாரும் பேசவில்லை.

2013-ம் ஆண்டு நடந்த பொதுக்குழுவில் இன்று குற்றம் சாட்டுகிறவர்கள் சிறந்த தலைமை என்று பாராட்டி பேசினார்கள். நான் கடந்த முறையே பொறுப்பில் இருந்து விலகி கொள்கிறேன் என்றேன். அப்போது அவர்கள் நீங்கள் தொடர்ந்து இருக்க வேண்டும் என்றார்கள். இப்போது கட்டடம் கட்டி முடித்த பிறகுதான் போவேன் என்று கூறி இருக்கிறேன். ஏற்கனவே செயற்குழுவில் சூர்யா, சிம்பு உள்ளிட்டோர் இருந்து உள்ளனர்.

எங்கள் மீது சாட்டுக்கின்ற குற்றச்சாட்டு உண்மையானது அல்ல. அவர்களும் தேர்தலில் நிற்கிறார்கள். அவர்கள் பக்கம் நியாயம் இருந்தால் அவர்கள் வெற்றி பெற்று வரட்டும். அதை நாங்கள் தடுக்கவில்லை. நடிகர்களிடம் ஒற்றுமை வேண்டும். நடிகர் சங்க தேர்தலை விட்டு ஓடுவதற்கு நாங்கள் கோழையல்ல.

சங்கத்தில் அரசியல் கலந்துவிட்டதாக கூறுகிறார்கள். நடிகர் சங்க தேர்தல் அரசியலை புரட்டி போட்டு விடாது," என்றார்.

சண்டைக் காட்சியில் அஜீத் கழுத்தில் காயம்

சிவா இயக்கி வரும் புதிய படத்தின் படப்பிடிப்பில் ஒரு சண்டைக் காட்சியில் அஜீத்துக்கு கழுத்தில் காயம் ஏற்பட்டது. அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர்.

ஏஎம் ரத்னம் தயாரிக்கும் இந்தப் படத்தின் இரண்டாம் கட்டப் படப்பிடிப்பு நடந்து வருகிறது. இந்தப் படத்தில் அஜீத் ஜோடியாக ஸ்ருதியும் தங்கையாக லட்சுமி மேனனும் நடிக்கின்றனர். வில்லனாக கபீர் சிங்கும் நடித்து வருகிறார். அனிருத் இசையமைக்கிறார்.

Ajith injured during a fight scene

நேற்று நடந்த படப்பிடிப்பில் ஒரு சண்டைக் காட்சியில் அஜித் மற்றும் வில்லன் கபீர் சிங் மோதும் காட்சி படமாக்கப்பட்டது. அப்போது அஜித்தின் கழுத்துப் பகுதியில் காயம் ஏற்பட்டுவிட்டது. வலியால் அவதிப்பட்ட அஜித்துக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து ஓய்வெடுக்கும்படி அறிவுறுத்தினர்.

ஆனால் அஜித் அவர்கள் பேச்சைக் கேட்காமல், தொடர்ந்து படப்பிடிப்பில் ஈடுபட்டு, அன்றைய காட்சிகளை முடித்துக் கொடுத்த பிறகுதான் சென்றாராம்!

எலி - விமர்சனம்

Rating:
2.5/5

எஸ் ஷங்கர்

நடிகர்கள்: வடிவேலு, சதா, ஆதித்ய மேனன், பிரதீப் ராவத், மகாநதி சங்கர்

ஒளிப்பதிவு: பால் லிவிங்ஸ்டன்

இசை: வித்யாசாகர்

தயாரிப்பு: சிட்டி சினி கிரியேஷன்ஸ்

இயக்கம்: யுவராஜ் தயாளன்

தனது மறுபிரவேசப் படமான தெனாலிராமனில் விட்டதைப் பிடிக்க, அதே இயக்குநரின் துணையுடன் எலி அவதாரமெடுத்திருக்கிறார் காமெடிப் புலியான வடிவேலு.

இயக்குநரை வடிவேலு சரியாகப் பயன்படுத்திக் கொள்ளவில்லையா.. அல்லது காமெடிப் புலியான வடிவேலுவை இயக்குநர் சரியாக உபயோகப்படுத்த தவறிவிட்டாரா? அட இருவரிடமுமே சரக்கு அவ்வளவுதானா? என்றெல்லாம் கேட்க வைக்கிறது இந்த எலி.

60களில் நடக்கும் கதை. சிகரெட்டுக்கு தடை விதிக்கப்பட்ட காலகட்டம். அந்த நேரத்தில் சிகரெட் கடத்தலில் நம்பர் ஒன்னாகத் திகழும் பிரதீப் ராவத்தைப் பிடிக்க திட்டமிடுகிறது போலீஸ்.

Eli Review  

தனது குழுவுடன் சின்னச் சின்ன திருட்டுகள் செய்து சாமர்த்தியமாகத் தப்பி வரும் வடிவேலுவை உளவாளியாகப் பயன்படுத்தி, ராவத்தைப் பிடிக்க முயற்சிக்கிறது.

வடிவேலும் உளவாளி எலியாக, ராவத் கூட்டத்துக்குள் சாமர்த்தியமாகப் புகுந்துவிடுகிறார். இறுதியில் அந்த எலி வில்லனைக் காட்டிக் கொடுத்ததா... சிக்கிக் கொண்டதா என்பது க்ளைமாக்ஸ்.

60களில் நடக்கும் கதை என்பதால் அந்தக் காலகட்டத்தில் இருந்த 'மதராஸை'க் காட்ட ரொம்பவே பிரயத்தனப்பட்டிருக்கிறார்கள். அதேநேரம், ஏதோ ஒரு பழைய ஈஸ்ட்மென்ட் கலர் படம் பார்க்கும் உணர்வைத் தருகின்ற பல காட்சிகள். அதுவும் வடிவேலுவைக் கடத்தும் ஒரு காட்சி. பிரதீப் ராவத்தின் கோட்டை, உள்ளே சீட்டாடிக் கொண்டிருக்கும் அடியாட்களையெல்லாம் பார்க்கும்போது குடியிருந்த கோயில் நினைவுக்கு வருகிறது.

Eli Review

இந்தக் கதையில் யாராவது ஒரு ஆக்ஷன் ஹீரோ நடித்து, வடிவேலு பிரதான காமெடியனாக இருந்திருந்தால் படத்தின் ரேஞ்சே வேறு. ஆனால் 2.15 மணிநேரப் படத்தில் அத்தனை காட்சிகளிலும் வடிவேலுவே வருவது அலுப்பைத் தருகிறது.

தெனாலிராமனில் வடிவேலுவும் - யுவராஜ் தயாளனும் செய்த அதே தவறு இந்தப் படத்திலும். படம் முழுக்க வடிவேலு இருக்கிறார். ஆனால் சிரிப்பு எங்கோ ஓரிரு இடங்களில் மட்டுமே எட்டிப் பார்க்கிறது. குறிப்பாக படம் துவங்கும் முன் போடப்படும் குடி-புகைக்கு எதிரான பிரச்சார கார்டில்!

இவரை ஊமை என்று நினைத்து கைதிகள் ஊமைப் பாஷை பேசுவதும், நிஜமான ஊமைகளிடம் இவர் மாட்டிக் கொள்வதும் அரதப் பழசான காமெடிகள்.

Eli Review

உடனிருக்கும் காமெடியன்கள் ஒருவர் கூட சோபிக்கவில்லை. பாவா லட்சுமணன், மொட்டை ராஜேந்திரன், வெங்கல்ராவ் போன்றவர்களை ஓரிரு காட்சிகளில் ஓரம்கட்டியிருக்கிறார்கள்.

சதா வருகிறார். இரண்டு பாடல்களுக்கு நடனமாடுகிறார். பார்க்க பவாயில்லை என்று சொல்லுமளவுக்கு மேக்கப். கண்டிப்பாக இனி கொஞ்ச நாளைக்கு வடிவேலு டூயட் பாடக் கூடாது, பெண் வேஷத்தில் வரக் கூடாது என்று தடை போட வேண்டும்.

Eli Review

படத்தில் வரும் மேரே சப்னோ கி ராணி.. பாடல் பெரிய இளைப்பாறல். பின்னணி இசை என்ற பெயரில் பழைய ஜேம்ஸ் பாண்ட் பட ட்ராக்கைப் போட்டிருக்கிறார் வித்யாசாகர். பழைய காலப் படம் என்று ஒளிப்பதிவாளருக்கு ஒவ்வொரு காட்சியின் போதும் சொல்லிக் கொண்டே இருந்திருப்பார்கள் போலிருக்கிறது. அரதப் பழசாக காட்சிப்படுத்தியிருக்கிறார்.

படத்துக்குப் படம் பாடி லாங்குவேஜை மாற்றி, குலுங்கக் குலுங்க சிரிக்க வைத்த அந்த கைப்புள்ளயும், குளத்துப் பாண்டியும், ஸ்டைல் பாண்டியும் இன்னும் கண்முன் வலம் வருகிறார்கள். இன்னும் நம்பிக்கையிருக்கிறது... காமெடிப் புயல், பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம்!

சமூக இணையதளங்களில் ட்ரெண்டிங் ஆன விஜய்யின் புலி பட ஸ்டில்கள்!

விஜய்யின் புலி பட முதல் தோற்ற போஸ்டர்கள் நாளை நள்ளிரவு வெளியாகும் என்று கூறப்பட்ட நிலையில், இன்றே படத்தின் சில ஸ்டில்கள் இணையத்தில் வெளியாகி, சமூக வலைத் தளங்களில் ட்ரெண்டிங்காக உள்ளன.

Vijay's Puli movie stills released

சிம்பு தேவன் இயக்கத்தில் விஜய் - ஸ்ருதி ஹாஸன், ஹன்சிகா நடித்துள்ள புலி படத்தின் பின் தயாரிப்புப் பணிகள் நடந்து வருகின்றன.

இந்தப் படத்தின் முதல் தோற்றப் போஸ்டர்கள் நாளையும், முதல் சிறு முன்னோட்டப் படம் நாளை மறுநாள் விஜய்யின் பிறந்த நாளையொட்டியும் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Vijay's Puli movie stills released

இந்த நிலையில் புலி படத்தில் விஜய்யின் தோற்றம் குறித்த படங்கள் இன்று ஒரு பத்திரிகையில் வெளியாகியுள்ளன. ரசிகர்கள் இந்தப் படத்தை பரபரவென பகிர்ந்து வருகின்றன. இந்தப் படங்களில் விஜய் கையில் அம்பு - வில் வைத்துக் கொண்டு நிற்கிறார். இன்னொரு படத்தில் வித்தியாசமான காஸ்ட்யூம் அணிந்திருக்கிறார். மற்றபடி முகத்தில், கெட்டப்பில் எந்த மாறுதலும் இல்லை.

Vijay's Puli movie stills released

அந்தப் படங்களில் சில இங்கே உங்கள் பார்வைக்கு.

Vijay's Puli movie stills released

இந்தப் படம் விஜயதசமியையொட்டி பிரமாண்டமாக வெளியாகிறது.

மொபைல் போன் வைத்திருந்தால் எதைவேண்டுமானாலும் எடுப்பதா? நியூசென்ஸ்...! - கமல் காட்டம்

ஒரு மொபைல் போன் கையில் இருந்துவிட்டால் எதையும் படமெடுக்கும் உரிமை தனக்கு இருப்பதாக நினைப்பது தவறு என்று கண்டித்துள்ளார் கமல் ஹாஸன்.

பாபநாசம் படத்தின் செய்தியாளர் சந்திப்பின்போது, "பாபநாசம் திரைப்படம் அனுமதி இல்லாமல் மொபைலில் படம் எடுப்பதைப் பற்றி பேசுகிறது. இதைப்பற்றி தங்கள் கருத்து என்ன?" என்று கேட்கப்பட்டது.

Kamal strongly condemned mobile users attitude

அதற்கு பதிலளித்த கமல், "ஒரு மொபைல் போன் கையில் இருந்துவிட்டால், எதையும் படம் எடுக்கக் கூடிய உரிமை தனக்கு இருப்பதாக நினைத்துக்கொள்கிறார்கள். அருகில் வந்து நின்று ஃபோட்டோ எடுத்துவிட்டுத்தான், ஃபோட்டோ எடுத்துக்கலாமா என்றே கேட்கிறார்கள். அதுவும் ஒரு நடிகனாக இதை நான் அதிகமாக அனுபவிக்கிறேன். இது மிகவும் தவறானது. என் அனுமதியின்றி எனது அந்தரங்கத்தில் நுழைவதற்கு அவர்களுக்கு யார் உரிமை கொடுத்தது?

இவர்களைச் சொல்லியும் குற்றமில்லை. மொபைல் கம்பெனிக்காரன் விளம்பரத்திலேயே மிகப்பெரிய நியூசென்ஸ் செய்கிறான். ஒருவன் ஒருத்தியை ஃபோட்டோ எடுக்கிறான். அவள் உடனேயே அவனிடம் மயங்கி காதலில் விழுகிறாள். இதை என்ன சொல்வது," என்றார்.

ப்ரெஸ்ட் யோகாவிற்கு விளக்கம் சொல்லும் பூனம் பாண்டே… சல்மான்கானின் ரசிகையாம்

மும்பை: சல்மான் கானை யாருக்குத்தான் பிடிக்காது.. நானும் அவரது ரசிகைதான். ஐ லவ் சல்மான் கான் என்று கூறியுள்ளார் கவர்ச்சி நாயகி பூனம் பாண்டே. அதோடு மட்டுமல்லாது தன்னுடைய யோகா வீடியோவிற்கு உலகமகா விளக்கமும் அளித்துள்ளார்.

சர்வதேச யோகாதினம் நாளை கொண்டாட தயாராகி வரும் நிலையில் கரும கன்றாவியாய் ஒன்றை செய்து அந்த வீடியோவை யுடுயூப்பில் பதிவேற்றினார் சர்ச்சை நாயகி பூனம் பாண்டே. பூனம் ஸ்டைலில் யோகா செய்து ஃபிட்டாகவும், ஹாட்டாகவும் இருங்கள் என்று அவர் தெரிவித்துள்ளார்.

Poonam Pandey Opens-Up in Exclusive Interview

சமூக வலைத்தளங்களில் பரவி வரும் இந்த வீடியோவிற்கு ஏராளமான கண்டனக்குரல்கள் எழுந்தன. #YogaKaroTohPoonamPandeyJaisa(யோகா செய்தால் பூனம் பாண்டே போன்று செய்ய வேண்டும்) என்ற ஹேஷ்டேக் டுவிட்டரில் டிரெண்டானது. ராகுல்காந்தி எக்ஸ்பிரசன் எல்லாம் போட்டு கடுப்பேற்றியிருந்தனர் சிலர். இதற்கு விளக்கம் அளிக்கும் வகையில் பேசியுள்ளார் பூனம் பாண்டே.

யோகாவின் உதவியால் பல அற்புதமான பலன்களை பெறலாம் என்றும் யோகாவின் மகத்துவத்தை தான் பலரின் மூலம் கேள்விப்பட்டிருப்பதாகவும் எனவேதான் யோகா செய்து அதை வீடியோவாக வெளியிட்டதாகவும் பூனம் பாண்டை கூறியுள்ளார். இந்த வீடியோவிற்கு இப்படி ஒரு ரியக்சன் இருக்கும் என்று தான் எதிர்பார்க்கவில்லை என்றும் பூனம் பாண்டே தெரிவித்துள்ளார்.

சல்மான்கான் பற்றி பதில் கூறியுள்ள பூனம், சல்லுவை யாருக்குத்தான் பிடிக்காது? எல்லா பெண்களுக்கும் பிடிக்கும். நானும் பள்ளிப் பருவத்தில் இருந்தே சல்மான் கான் ரசிகைதான். ஐ லவ் சல்மான்கான் என்றும் கூறியுள்ளார் பூனம் பாண்டே.

அது சரி தன்னுடைய ஹெலன் படத்திற்கான ஹீரோவை தேர்வு செய்ய ஆன்லைனில் தகவல் வெளியிட்ட பூனம் பாண்டே, ‘என்னை கட்டிப்பிடிக்க வேண்டுமா, முத்தம் கொடுக்க வேண்டுமா? அப்படியானால் இந்த இணைய தள முகவரியில் தொடர்பு கொள்ளுங்கள்‘ என்று தடாலடியாக அறிவித்தவர்தானே பூனம் பாண்டே. யோகாவை விட்டு வைப்பாரா என்ன?

நடிகராக முழுவீச்சில் களமிறங்கும் ஜிவி பிரகாஷ்... ஜோடியாகும் எமி ஜாக்ஸன்!

டார்லிங் படத்தின் வெற்றி, ஜிவி பிரகாஷை கோலிவுட்டின் முக்கிய ஹீரோவாக்கிவிட்டது.

அவர் நடித்த பென்சில், த்ரிஷா இல்லனா நயன்தாரா போன்ற படங்கள் அடுத்தடுத்து வெளியாகத் தயாராக உள்ளன.

Amy Jackson is pairing up with GV Prakash

த்ரிஷா இல்லனா நயன்தாரா படத்தின் ட்ரைலர் மற்றும் பாடல்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதால், அடுத்த புதிய படத்தில் கையெழுத்திட்டுள்ளார்.

இயக்குநர் விஜய்யிடம் உதவி இயக்குநர்களாகப் பணியாற்றிய சங்கர் மற்றும் குணா ஆகியோர் இயக்கும் புதிய படம் இது. இதில் ஜி.வி.பிரகாஷுக்கு ஜோடியாக எமி ஜாக்சன் நடிக்க இருக்கிறார்.

ஜிவி பிரகாஷின் நலம் விரும்பிகள் வெற்றிமாறனும் அட்லியும் இதில் கைகோர்க்கின்றனர். வெற்றிமாறன் திரைக்கதையமைக்கிறார். அட்லி வசனம் எழுதவுள்ளார். ‘ரோமியோ ஜூலியட்' படத்தை தொடர்ந்து மெட்ராஸ் எண்டர்பிரைசஸ் நிறுவனம் சார்பாக நந்தகோபால் தயாரிக்கிறார்.

கிளாடியேட்டர் மாதிரி ஆக்ஷன் அட்வென்ச்சர் படம் புலி! - தயாரிப்பாளர்

ஹாலிவுட் படமான கிளாடியேட்டர் போல ஆக்ஷன் அட்வென்ச்சர் படமாக உருவாகியுள்ளது விஜய்யின் புலி என்கிறார் அதன் தயாரிப்பாளர்கள் ஷிபு தமீம் மற்றும் பிடி செல்வகுமார்.

விஜய்யின் புலி ஒரு அதியுச்ச கற்பனைப் படம் (பேன்டஸி) என்று கூறப்பட்டு வந்தது. அந்த அதியுச்ச கற்பனை எப்படி இருக்கும் என படத்தின் தயாரிப்பாளர்கள் பிடி செல்வகுமார் மற்றும் ஷிபு தமீம் ஒரு அறிக்கை மூலம் கூறியுள்ளனர்.

Vijay's Puli is like Russell Crowe's Gladiator in Tamil

அந்த அறிக்கை:

ரஸ்ஸல் குரோவ் நடித்த தி கிளேடியேட்டர் ஹாலிவுட் திரைப்படத்தைப் போன்ற ஆக்சன் அட்வென்ச்சர் படமாக புலி இருக்கும்.

விஜய்யின் கேரியரில் இந்தப் படம் முக்கியமானதாக அமையும்.

தென்னிந்திய மக்கள் ஒவ்வொருவரும் ஸ்ரீதேவி தமிழில் மீண்டும் நடிக்க வேண்டும் என விரும்புகிறார்கள். அவர் உண்மையில் இங்கு பிரபலமிக்கவர். அவரை நடிக்க வைக்க பல தயாரிப்பாளர்கள் அணுகியிருப்பர். ஆனால், புலி படத்தின் திரைக்கதையினை கேட்டு அதில் நடிக்க அவர் ஒப்பு கொண்டது எங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது.

அதிக பலம் மற்றும் அதிகாரங்கள் கொண்ட ஒரு குழுவின் தலைவியாக ஸ்ரீதேவி இதில் நடிக்கிறார்," என்று தெரிவித்துள்ளனர்.

காக்கா முட்டை... கர்நாடகத்தில் வரி விலக்கு பெற்ற முதல் பிறமொழிப் படம்!

வெளியாவதற்கு முன்னதாகவே தேசிய விருது உள்ளிட்ட பல சர்வதேச விருதுகளை வாங்கிய ‘காக்கா முட்டை'க்கு கர்நாடக அரசு முழுமையான வரிச்சலுகை அளித்துள்ளது.

தமிழகத்தில் சமீபத்தில் வெளியான இப்படத்தைப் பார்த்தவர்கள் அனைவரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

Kaakka Muttai to be the first Non-Kannada film to be Tax Free in Karnataka

தனுஷ் மற்றும் வெற்றிமாறன் தயாரிப்பில் மணிகண்டன் இப்படத்தை இயக்கியிருந்தார்.

இப்படம் கன்னடத்தில் விரைவில் வெளியாகவுள்ளது. கன்னடத்தில் இப்படத்திற்கு அம்மாநில அரசு முழுமையான வரிச் சலுகை கொடுத்திருக்கிறது.

தமிழ் படத்திற்கு கர்நாடக அரசு முழுமையான வரிச்சலுகை கொடுத்திருப்பது இதுவே முதல் முறையாகும். இதற்கு முன்பு அமிதாப் நடித்த 'பா' படத்திற்கு 50 சதவீத வரிச்சலுகை அளிக்கப்பட்டது.

கர்நாடகாவில் முழுமையான வரிச்சலுகை கிடைத்திருப்பது படக்குழுவினரை சந்தோஷத்திலும் வியப்பிலும் ஆழ்த்தியுள்ளது. விரைவில் படம் மலையாளத்திலும் வெளியாகிறது.

எதிர்பார்ப்பினை எகிற வைக்கும் “கோ 2” - பற்ற வைக்கும் அரசியல் படம்?

சென்னை: கே.வி.ஆனந்த் இயக்கத்தில் 2011 ஆம் ஆண்டு வெளிவந்த "கோ" திரைப்படம் மக்களிடம் சிறப்பான வரவேற்பினைப் பெற்றிருந்தது.

முதல் படமான "கோ"வில் ஜீவா கதாநாயகனாகவும், கார்த்திகா நாயர் கதாநாயகியாகவும் நடித்திருந்தனர். அவர்களுடன் பியா பாஜ்பாய், பிரகாஷ் ராஜ், அஜ்மல் ஆகியோரும் நடித்திருந்தனர்.

Upcoming KO 2 film fired with excitement

இரண்டாம் பாகம்:

இந்நிலையில் இப்படத்தின் "சீக்வெல்" எனப்படும் தொடர்ச்சியான "கோ 2" படத்தினை புதுமுக இயக்குனர் சரத் என்பவர் இயக்கி உள்ளார்.

அதே கதை இல்லையாம்:

பொதுவாக சீக்வெல் திரைப்படம் என்றாலே அதே நடிகர்கள், அதே குழுவினர், கிட்டதட்ட அவர்களின் கதையே என்பது போல தயாரிக்கப்படும்.

மாறிய கதைநாயகர்கள்:

ஆனால், கோ 2 படத்திலோ ஜீவாவிற்கு பதிலாக பாபி சிம்ஹாவும், கார்த்திகாவிற்கு பதிலாக நிக்கி கல்ராணியும் நடித்துள்ளனர். பிரகாஷ்ராஜ் மட்டும் வில்லன் இடத்தில் மாறாமல் ஆணியடித்து அமர்ந்திருக்கின்றார்.

இயக்குனரும் புதுசுதான்:

இப்படத்தின் இயக்குனர் சரத், விஷ்ணு வர்தன், சக்ரி டோலெட்டி ஆகியோரிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்துள்ளார். அவருடைய கதைதான் "கோ 2". இப்படத்தினை எல்ரெட் குமார் தாயாரித்து வருகின்றார்.

தாங்கிப் பிடிக்கும் தலைமைப் பண்பு:

கோ என்றால் அரசன் என்றும் தலைமை தாங்கும் பண்புடையவன் என்றும் அர்த்தம்... இந்நிலையில் வெளியாக உள்ள கோ 2ல் கிட்டதட்ட தலைமைப் பதவி ஒன்றில் இருப்பது போலவே பிரகாஷ் ராஜ் அமர்ந்திருக்கும் மோஷன் போஸ்டரும் வெளியாகியுள்ளது.

என்ன களம் கோ 2?:

அவரை துப்பாக்கி முனையில் மிரட்டிக் கொண்டு நிற்கின்றார் பாபி சிம்ஹா. எனவே, அரசியல் சார்ந்த கதைக்களமாக கோ 2 இருப்பதற்கு வாய்ப்புள்ளதாக் எதிர்பார்ப்புகள் இப்போதே எகிறியுள்ளன.

ஜூன் 21-ல் பர்ஸ்ட் லுக்.. 22-ல் டீசர்.. விஜய் ரசிகர்களுக்கு புலி ட்ரீட்!

புலி படத்தின் பர்ஸ்ட் லுக் எனும் முதல் தோற்ற போஸ்டர்கள் வரும் ஜூன் 21-ம் தேதியும், அதன் முதல் டீசர் எனப்படும் சிறுமுன்னோட்டப் படம் அடுத்த நாள் ஜூன் 22-ம் தேதியும் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ‘புலி' படத்தின் பர்ஸ்ட் லுக் வருகிற விஜய் பிறந்த நாளான ஜூன் 22-ந் தேதி வெளியிடப்போவதாக அப்படத்தின் இயக்குனர் சிம்புதேவன் சில தினங்களுக்கு முன் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தார்.

Puli first look on June 21st, teaser on 22nd

ஆனால் இப்போது விஜய் ரசிகர்களுக்கு இரட்டை சந்தோஷம் தரும் வகையில் இன்னொரு அறிவிப்பு வெளியிட்டுள்ளனர். அதன் படி இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வருகிற ஜூன் 21-ந் தேதி நடுஇரவு 12 மணிக்கு வெளியிடவுள்ளனர். அதைத் தொடர்ந்து 22-ந் தேதி நள்ளிரவு 12-மணிக்கு இப்படத்தின் டீசரை வெளியிடவுள்ளனர்.

பிறந்த நாளன்று விஜய் சென்னையில் இல்லாத குறையைப் போக்க இந்த டபுள் ரிலீஸ் போலிருக்கிறது!