மாயா... பேயாக உங்களை ஆட்டிப் படைக்க வரும் நயன்தாரா!

கோடம்பாக்கமே பேயாக மாறிக் கொண்டிருக்கிறது. முன்னணி ஹீரோக்களுக்கும் பேய் பிடித்துவிட்டது. இதில் நயன்தாரா மட்டும் சும்மா இருப்பாரா?

அவரும் ரசிகர்ளைப் பேயாக ஆட்டிப் படைக்கத் தயாராகிவிட்டார். அவர் நடித்த புதிய படமான மாயா விரைவில் வெளிவர இருக்கிறது.

Nayanthara's 'Maya' to hit screens this month

ஒரு குழந்தைக்குத் தாயாக நடிக்கும் நயன்தாரா, பேய் பிடித்த பெண்ணாக மாறி ரசிகர்களை கலங்கடிக்கப் போகிறாராம்.

மாயா படத்தை எஸ்ஆர் பிரபு தயாரிக்க, அஸ்வின் சரவணன் இயக்குகிறார். இவர் இதற்கு முன் குறும்படங்கள் சிலவற்றை இயக்கியுள்ளார். நெடுஞ்சாலையில் நடித்த ஆரி இதில் நயன்தாரா ஜோடியாக நடிக்கிறார்.

பிப்ரவரியிலேயே ஷூட்டிங் முடிந்துவிட்ட, இந்தப் படம் மே மாதத்திலேயே வெளியாகவிருந்தது. சூர்யா - நயன்தாரா நடித்த மாஸ் பட வெளியீட்டுக்காக காத்திருந்தனர். விரைவில் வெளியாகவிருக்கிறது மாயா.

 

மாசு படத்துக்கு வரிவிலக்கு தராதது ஏன்? - தமிழக அரசு விளக்கம்

சூர்யா நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கிய ‘மாசு என்கிற மாசிலாமணி' படத்துக்கு கேளிக்கை வரிவிலக்கு மறுக்கப்பட்டது ஏன் என்று விளக்கம் அளித்துள்ளது தமிழக அரசு.

இந்தப் படத்தில் அதிகமான வன்முறைக் காட்சிகள், ஆங்கில வசனங்கள் இடம்பெற்றுள்ளதால் வரிவிலக்கு அளிக்கப்படவில்லை என தமிழக அரசு அறிவித்துள்ளது.

Why Masssu not eligible for Tax Exemption

மாசு படத்தை 7 பேர் அடங்கிய தேர்வுக்குழு பார்வையிட்டு கீழ்க்கண்ட குறைகளைச் சுட்டிக் காட்டியுள்ளது.

1) படத்தில் ஆங்கிலச் சொற்களின் பயன்பாடு அதிகமாக உள்ளது.

2) கதைக்கரு பழிக்குப் பழி வாங்குவதாக உள்ளதால் தமிழ்ப் பண்பாட்டுக்கு உகந்ததாக இல்லை.

3) அதிகமான வன்முறைக் காட்சிகள் இடம்பெற்றுள்ளன.

இக்காரணங்களால் மாசு படம் வரிவிலக்குக்குத் தகுதியானது அல்ல என்று பரிந்துரை செய்துள்ளார்கள். ஏழு உறுப்பினர்களும் கேளிக்கை வரிவிலக்கு அளிப்பதற்குப் பரிந்துரை செய்யவில்லை என்பதால் மாசு படத்துக்கு வரிவிலக்கு அளிக்க அரசு மறுத்துள்ளது.

Why Masssu not eligible for Tax Exemption

படத்தைப் பார்வையிட்ட தேர்வுக்குழுவின் பரிந்துரை விவரங்கள்:

Why Masssu not eligible for Tax Exemption

படத்தைப் பெரிதாக்கிப் பார்க்கவும்:

Why Masssu not eligible for Tax Exemption
 

அழைத்துப் பேசுமளவுக்கு விஷால் பெரிய ஆள் அல்ல - ராதாரவி

நடிகர் சங்க தேர்தல் தொடர்பாக விஷாலை அழைத்துப்பேசும் அளவிற்கு அவர் ஒன்றும் பெரிய ஆள் இல்லை என்று நடிகர் ராதாரவி கூறியுள்ளார்.

தென்னிந்திய திரைப்பட நடிகர் சங்க தேர்தல் ஜூலை 15ம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில் தமிழகம் முழுக்க உள்ள நாடகக் கலைஞர்களைச் சந்தித்து சரத்குமாருக்கு ஆதரவு சேகரித்து வருகிறார்.

Vishal is not a big force, says Radha Ravi

மதுரை நாடக நடிகர் சங்கத்திற்கு வருகை தந்த நடிகர் ராதாரவி செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது அவர் கூறுகையில், "வருகிற நடிகர் சங்க தேர்தலில் சரத்குமார் அணி நிச்சயம் வெற்றி பெறும். நடிகர் சங்கத்தில் சிலர் பிரச்னைகளை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

எந்தவொரு பிரச்னைகளையும் சந்திக்க நாங்கள் தயாராக உள்ளோம். விஷால் பேசி வருவதை பார்த்தால் அவர் சொந்தமாகப் பேசுவதுபோல் தெரியவில்லை, யாரோ தூண்டிவிட்டு அவரை பேச வைப்பதாக தெரிகிறது.

நடிகர் சங்க தேர்தல் தொடர்பாக, விஷாலை அழைத்துப் பேசும் அளவிற்கு அவர் ஒன்றும் பெரிய ஆள் இல்லை," என்றார்.

 

நயன்தாரா - விக்னேஷ் சிவன் நெருக்கமான செல்பி படங்கள்.. மறுபடி முதல்லேருந்தா?

நயன்தாராவின் காதல் விவகாரம் கிசுகிசு அந்தஸ்திலிருந்து செய்தியாக மாறிவிட்டது கடந்த சில தினங்களாக.

அவரும், நானும் ரவுடிதான் பட இயக்குநர் விக்னேஷ் சிவனும் காதலிப்பதாகவும், ரகசிய திருமணம் செய்து கொண்டதாகவும் முதலில் கிசுகிசுக்கள் வெளியாகின. அதனை இருவருமே மறுத்தார்கள்.

Nayanthara's romantic selfies with Vignesh Sivan

படம் முடிவடைந்த நிலையில், படக்குழுவினர் மொத்தமாக படம் எடுத்து வெளியிட்டார்கள். அதில் நயன்தாராவும் இயக்குநரும் மிக நெருக்கமாக இருந்தனர்.

இப்போது இருவரும் கேரவனுக்குள் அணைத்தபடி செல்பி எடுத்து வெளியிட்டுள்ளனர். அந்தப் படங்கள் இருவருக்கும் இடையிலான உறவை அப்பட்டமாகக் காட்டிவிட்டன.

இருவரும் மலையாளி என்பதால் இந்த காதல் வெற்றி பெறும் என்கிறார்கள்.

சிம்புவும் நயன்தாராவும் காதலித்து, பின் செம சண்டை போட்டுக் கொண்டிருந்த காலத்தில், அவர்களுக்கிடையில் தூதுவராக செயல்பட்டவர் இந்த விக்னேஷ் சிவன் என்பது குறிப்பிடத்தக்கது.

 

ருத்ரமாதேவி ட்ரைலரை வெளியிட்டார் இளையராஜா!

ருத்ரமாதேவி படத்தின் ட்ரைலரை வெள்ளிக்கிழமை வெளியிட்டார் இசையமைப்பாளர் இளையராஜா.

இந்தியாவின் முதல் ஸ்டீரியோஸ்கோப் 3 டி சரித்திரப் படமாக உருவாகியுள்ளது ருத்ரமாதேவி. குணசேகர் இயக்கியுள்ள இந்தப் படம் தமிழ் - தெலுங்கில் நேரடிப் படமாக உருவாகியுள்ளது. மலையாளத்தில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியாகிறது.

Ilaiyaraaja released Rudhramadevi trailer

காகதீய வம்சத்தைச் சேர்ந்த பெரும் அரசியான ருத்ரமா தேவியின் வாழ்க்கை வரலாறுதான் இந்தப் படம்.

பெரும் பொருட்செலவில் உருவாகியுள்ள ருத்ரமாதேவி படத்துக்கு இளையராஜா இசையமைத்துள்ளார். லண்டனின் இந்தப் படத்துக்கு சிம்பொனி ஆர்கெஸ்ட்ரா வைத்து பின்னணி இசைச் சேர்த்துள்ளார்.

Ilaiyaraaja released Rudhramadevi trailer

இந்தப் படத்தின் ட்ரைலரை நேற்று வெள்ளிக்கிழமை தனது இசைக் கூடமான பிரசாத் லேபில் வெளியிட்டார்.

இந்த நிகழ்ச்சியில் படத்தின் தமிழ் தயாரிப்பாளரான தேனாண்டாள் பிலிம்ஸ் ராமசாமி, இயக்குநர் குணசேகர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Ilaiyaraaja released Rudhramadevi trailer

அனுஷ்கா, ராணா, அல்லு அர்ஜூன் உள்ளிட்டோர் நடித்துள்ள ருத்ரமாதேவி, வரும் ஜூன் 26-ம் தேதி உலகெங்கும் வெளியாகிறது.

 

விஜய் ஆன்டனி படத்தின் நாயகி ரகசிய திருமணம்!

விஜய் ஆன்டனியின் நான் படத்தில் நடித்த விபா ரகசிய திருமணம் செய்துகொண்டார்.

'லீலை' படம் மூலம் தமிழில் அறிமுகமானவர் விபா. ‘நான்' படத்தில் விஜய் ஆண்டனியுடன் நடித்தார். ‘மதில்மேல் பூனை' படத்தில் விஜய் வசந்த் ஜோடியாக நடித்தார். ‘சும்மா நச்சுன்னு இருக்கு' என்ற படத்திலும் நாயகியாக நடித்தார்.

Actress Viba's secret marriage

விபாவுக்கு பெரிய படங்கள் அமையவில்லை. சமீபகாலமாக பட வாய்ப்புகளும் குறைந்து விட்டன.

இந்த நிலையில் அவர் திடீர் திருமணம் செய்து கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது. நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் நண்பர்கள் மட்டும் இந்த ரகசிய திருமணத்தில் கலந்து கொண்டார்களாம்.

Actress Viba's secret marriage

திருமணம் நடந்தது உண்மைதான் என்று மட்டும் கூறிய விபாவின் பெற்றோர், மாப்பிள்ளை பற்றிய விவரங்களை சொல்ல மறுத்துவிட்டனர்.

 

'பாபநாசம்' திரைப்படத்தின் அட்டகாசமான 2வது டிரைலர் வெளியீடு! கொண்டாடும் ரசிகர்கள்

சென்னை: மலையாளத்தில் ஜீது ஜோசப் இயக்கத்தில், மோகன்லால், மீனா நடிப்பில் வெளியாகி பெரும் வெற்றிப் பெற்ற படம் ‘த்ரிஷ்யம்'. இந்தப் படத்தை இயக்கிய அதே இயக்குநர், அதை தமிழில் ரீமேக் செய்துள்ளார்.

இதில் கமல்ஹாசனுடன் கௌதமி, சார்லி , கலாபவன் மணி, அருள்தாஸ் மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். ஜிப்ரான் இசைமைத்திருக்கிறார். பாபநாசம் திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து படம் வெளியீட்டுக்குத் தயாராக உள்ளது.

Kamal Hassan's Pabanasam movie's second trailer released

இப்படத்தின் முதல் டிரைலர் ஏப்ரல் 30ம் தேதி வெளியிடப்பட்டது. தெரிந்த கதைதான் என்றபோதிலும், உலக நாயகன் கமல்ஹாசன் நடிப்பில் அதை பார்த்த ரசிகர்கள் நல்ல வரவேற்பு அளித்தனர். இதனால் யூடியூப்பில் டிரைலர் அதிக ஹிட் அடித்தது.

இந்நிலையில், பாபநாசம் திரைப்படத்தின் 2வது டிரைலர் இன்று வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 1 நிமிடம் 46 விநாடிகள் கொண்டதாக இந்த டிரைலர் அமைந்துள்ளது.

Kamal Hassan's Pabanasam movie's second trailer released

கமல்ஹாசன், கவுதமி உள்ளிட்ட படத்தில் வரும் கேரக்டர்கள் அனைவருமே நெல்லைத் தமிழை அழகாக உச்சரிக்கின்றனர். கமல்ஹாசன் ஒரு காட்சியில் காண்பிக்கும் முக பாவனை சில விநாடிகள் டிரைலரில் அப்படியே ஓடவிடப்பட்டுள்ளது.

மகாநதி திரைப்படத்தில் மகளை இழந்து பரிதாபமாக பார்க்கும் முகபாவனையை போல இதிலும் கமல்தனது பாவனையை காண்பித்துள்ளதாக புகழ்கின்றனர் சமூக வலைத்தளங்களில். இந்த டிரைலரும் மெகா ஹிட் அடிக்கும் என்பதற்கு உதாரணமாக, டிவிட்டரில் இந்திய அளவில் பாபநாசம் திரைப்பட பெயர் டிரெண்ட் ஆகியது.

 

ஜெயம் ரவி... ரோமியோ ஜூலியட்டுக்கு இந்த வரவேற்பு போதுமா!!

ரசிகர்கள் இழுத்துத் தள்ளியதால் ஜெயம் ரவி காலில் சுளுக்கு!

ரசிகர்கள் ஆர்வக் கோளாறில் இழுத்துத் தள்ளியதால் நடிகர் ஜெயம் ரவி காலில் சுளுக்கு ஏற்பட்டது. அவர் போட்டிருந்த டி ஷர்ட்டும் கிழிந்தது.

Jayam Ravi mobbed during Romeo Juliet Theater visit

ஜெயம் ரவி - ஹன்சிகா நடித்துள்ள ரோமியோ ஜூலியட் படம் நேற்று வெளியானது.

இந்தப் படம் ஓடும் தியேட்டர்களில், ரசிகர்களிடம் வரவேற்பு எப்படி உள்ளது என்பதைத் தெரிந்து கொள்ள படக்குழுவினருடன் கிளம்பினார் ஜெயம் ரவி.

ஆல்பர்ட் திரையரங்குக்குள் ஜெயம் ரவி நுழைந்ததுமே ரசிகர்கள் ஆரவாரமாக அவரை வரவேற்றனர். கூடியிருந்த ரசிகர் கூட்டத்தைப் பார்த்ததும் மகிழ்ச்சியடைந்த ரவி, உள்ளே நுழைய முயன்றார். ஆனால் ஆர்வம் மிகுதியால் அவரைச் சூழ்ந்த ரசிகர்கள் அவர் கையைப் பிடித்து இழுத்தனர். சிலர் அவர் போட்டிருந்த டி ஷர்ட்டை பிடித்து இழுக்க அது கிழிந்து போனது.

அப்போது நிலை தடுமாறி தியேட்டர் படிகளில் கால் பிசகிவிட்டது. இதனால் கடும் வலியோடு திரும்பினார் ஜெயம் ரவி.

Jayam Ravi mobbed during Romeo Juliet Theater visit

மாலை நடந்த பத்திரிகையாளர் காட்சிக்கு நொண்டியபடி வந்தார் ஜெயம் ரவி.

அப்போது இந்த சம்பவம் குறித்துப் பேசுகையில், "படத்துக்கு வரவேற்பு எப்படி இருக்கிறது என்று பார்க்கப் போனேன். செம்மையா வரவேற்பு கொடுத்தாங்க. சந்தோஷம், மகிழ்ச்சி. ரசிகர்களின் இந்த உற்சாகம்தான் படத்துக்குக் கிடைத்த வெற்றி. அதற்கு முன் இந்த வலி ஒரு பொருட்டே அல்ல," என்றார்.

 

'செல்லாது செல்லாது.. நாட்டாமை நடிகர் சங்க தேர்தலை நிறுத்து!' - விஷால் அதிரடி

சென்னை: ஜூலை 15-ஆம் தேதி நடைபெற இருக்கும் தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தலுக்குத் தடை விதிக்கக் கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார் நடிகர் விஷால் மற்றும் அவரது ஆதரவாளர்கள்.

இது தொடர்பாக நடிகர்கள் விஷால், நாசர், கார்த்தி ஆகியோர் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர்.

Vishal seeks ban to Nadigar Sangam election

அதில், "தென்னிந்திய நடிகர் சங்கத்தின் புதிய நிர்வாகிகளைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் ஜூலை மாதம் 15-ஆம் தேதி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

அன்றைய தினம் புதன்கிழமையாக உள்ளது. அதற்குப் பதிலாக அடுத்து வரும் விடுமுறை நாள்களில் நடத்தவும், தேர்தலில் முறைகேடு நடைபெறாமல் இருப்பதைத் தடுக்க உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதியை நியமிக்கவும் உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரியுள்ளனர்.

இந்த மனுவை விசாரணைக்கு ஏற்றுக் கொண்டுள்ளனர் நீதிபதிகள். திரையுலகில் பெரிய சங்கமான நடிகர் சங்கத்தின் ஒரு பகுதியினர் விஷாலுக்கு ஆதரவாக இருப்பதால், இந்த முறை சரத்குமார் - ராதாரவி அணிக்கு பெரும் சவால் ஏற்பட்டுள்ளதாக திரையுலகில் பேச்சு நிலவுகிறது.

 

மனைவியை விவாகரத்து செய்கிறார் நடிகர் பாலா

தன் மனைவி அம்ருதாவை விவாகரத்து செய்யப் போவதாக அறிவித்துள்ளார் நடிகர் பாலா.

தமிழில் 'அன்பு' படம் மூலம் கதாநாயகனாக அறிமுகமானவர் பாலா. காதல் கிசுகிசு, அம்மா அப்பா செல்லம், கலிங்கா, மஞ்சள் வெயில் உள்ளிட்ட படங்களில் நாயகனாக நடித்துள்ளார்.

Bala announces his divorce with wife Amritha

மலையாளத்தில் முன்னணி நடிகராகத் திகழும் பாலா, கடந்த ஆண்டு ரிலீசான 'வீரம்' படத்தில் அஜித் தம்பிகளுள் ஒருவராக நடித்தார்.

பாலாவுக்கும் கேரளாவைச் சேர்ந்த அம்ருதாவுக்கும் 2010-ல் திருமணம் நடந்தது. இவர்களுக்கு அவந்திகா என்ற பெண் குழந்தை உள்ளது. அம்ருதா மலையாள படஉலகில் பின்னணி பாடகியாகத் திகழ்கிறார்.

பாலா - அம்ருதா இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்துள்ளனர். ஆரம்பத்தில் இதுபற்றி வெளியில் காட்டிக் கொள்ளாமலிருந்த இருவரும், 'எங்கள் குடும்ப விஷயங்கள் பற்றி எதையும் வெளியிட வேண்டாம்' என வேண்டுகோள் விடுத்திருந்தனர்.

இந்த நிலையில் மனைவியை பிரிந்து விட்டதாக பாலா இப்போது அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார். அவர் கூறும் போது என் மனைவியை நான் விவாகரத்து செய்யப்போகிறேன். இந்த மாத இறுதியில் நீதிமன்றத்தில் விவாகரத்து வழக்கு தாக்கல் செய்யப்படும். பிரிவுக்கான காரணம் பற்றி எதையும் சொல்ல விரும்பவில்லை. யாரையும் குற்றம் சாட்டவும் விரும்பவில்லை.

இந்த விவாகரத்து விவகாரம் பட உலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

ரோமியோ ஜூலியட் படத்தை திருட்டு வீடியோ எடுத்த மூவர் கைது

கோவை: ஜெயம் ரவி - ஹன்சிகா நடித்து நேற்று வெளியான ரோமியோ ஜூலியட் படத்தை திருட்டுத் தனமாக வீடியோ எடுத்த மூன்று பேரை போலீசார் கைது செய்தனர்.

கோவை பீளமேடு உடையாம்பாளையம் சாலையில் உள்ள தியேட்டரில் ஜெயம் ரவி நடித்த ரோமியோ ஜூலியட் படம் திரையிடப்பட்டுள்ளது. நேற்று முதல்காட்சி படம் ஓடிக்கொண்டிருந்தபோதே, படம் பார்த்துக் கொண்டிருந்த 2 பேர் திரையில் ஓடிய படத்தை வீடியோ காமிராவில் படம் பிடித்துக் கொண்டிருந்தனர். அருகில் இருந்த சிலர் இது குறித்து தியேட்டர் நிர்வாகத்துக்கு தகவல் தெரிவித்தனர்.

Romeo Juliet video piracy: 3 arrested at Kovai

உடனே தியேட்டர் நிர்வாகத்தினர் பீளமேடு போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அவர்கள் தியேட்டருக்கு விரைந்து வந்து 2 பேரையும் மடக்கி பிடித்தனர்.

அவர்கள் பெயர் சுப்புராஜ், கண்ணன் என்றும் மதுரையைசு சேர்ந்தவர்கள் என்றும் தெரியவந்தது. இவர்களுக்கு உதவியாக தியேட்டர் ஊழியர் செல்வம் இருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரையும் பிடித்தனர். மேலும் 2 பேர் தப்பி ஓடி விட்டனர்.

இவர்கள் வீடியோ காமிரா மூலம் திரையில் படத்தை வீடியோ எடுத்து திருட்டு சி.டி. தயாரித்து விற்பனை செய்ய முயன்றது தெரியவந்தது. கைதான 3 பேரிடம் இருந்து லேப்டாப், வீடியோ காமிரா ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

 

பார்ரா, டாக்டரை அறைந்த பாடகருக்கு யாரு சப்போர்ட் செய்வதுன்னு?

மும்பை: பாடகர் மிகா சிங் டாக்டரை அறைந்தது சரி என்றும், அறை வாங்கிய நபர் குடிபோதையில் இருந்ததாகவும் பார்க்க தீவிரவாதி போன்று தெரிந்ததாகவும் பாலிவுட் நடிகை ராக்கி சாவந்த் தெரிவித்துள்ளார்.

பாலிவுட் பாடகர் மிகா சிங் இரண்டு விஷயங்களுக்கு பெயர் போனவர். ஒன்று அருமையாக பாடுவார், மற்றொன்று அடிக்கடி ஏதாவது சர்ச்சையில் சிக்கிக் கொள்வார். டெல்லியில் கடந்த ஏப்ரல் மாதம் நடந்த இசை நிகழ்ச்சியில் மிகா சிங் கலந்து கொண்டு பாடினார்.

அந்த நிகழ்ச்சியின்போது அவர் மேடையில் வைத்து கண் டாக்டர் ஒருவரை அறைந்தார். அந்த வழக்கில் நேற்று அவர் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். இந்நிலையில் இது குறித்து பாலிவுட் நடிகை ராக்கி சாவந்த் கூறுகையில்,

Rakhi Sawant 'stands by' Mika Singh over slapgate

அதிர்ச்சி

மிகா சிங் கைது செய்யப்பட்டார் என்பதை அறிந்து அப்படியே நான் ஷாக் ஆகிவிட்டேன். மிகா செய்தது மிகவும் சரியே. அவர் டாக்டரை அறைந்ததில் தவறு எதுவும் இல்லை.

டாக்டர்

நாங்கள் மலேசியாவில் இருந்தபோது மிகாவிடம் டெல்லியில் நடந்த சம்பவம் பற்றிய விவரங்களை கேட்டேன். அப்போது அவர் கூறுகையில், டாக்டர் குடிபோதையில் பெண் கலைஞர்களை கோபமடைய வைத்ததாக தெரிவித்தார்.

மிகா

அந்த டாக்டர் குடிபோதையில் மிகாவுடன் புகைப்படம் எடுத்துக் கொள்ள விரும்பியுள்ளார். அவர் பாதுகாவலர்களை பிடித்து தள்ளிவிட்டு மேடைக்கு வந்துள்ளார். உண்மையான ரசிகராக இருந்தால் நிகழ்ச்சி முடிந்த பிறகு மிகாவுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டிருக்கலாமே.

தீவிரவாதி

மிகா அறைந்த டாக்டர் பார்க்க தீவிரவாதி போன்று இருந்தார். யார் கண்டார், அவர் மனித வெடிகுண்டாகக் கூட இருக்கலாம். டாக்டர் விளம்பரத்திற்காக போலீசில் மிகா மீது புகார் கொடுத்ததிருக்கிறார் என்றார் ராக்கி சாவந்த்

ராக்கி

2006ம் ஆண்டு மிகா சிங் தனது பிறந்தநாள் பார்ட்டியில் ராக்கி சாவந்தின் உதட்டில் முத்தமிட்டு சர்ச்சையில் சிக்கினார். அவர் எப்படி முத்தம் கொடுக்கலாம் என்று பொங்கி எழுந்த ராக்கி மிகா மீது போலீசில் புகார் அளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

ஒரு குப்பைக் கதை, சென்னை கூவம் நதிக்கரையோர மக்களின் கதை!

​ஒரு குப்பையான விஷயத்தை பெரிது படுத்தினால் அது வாழ்க்கையில் எவ்வளவு தூரம் கொண்டு சென்று நிம்மதியைக் கெடுக்கிறது என்பதுதான் ஒரு குப்பைக் கதை.

புதுமணத் தம்பதி இருவரிடையே எழும் ஒரு சிறு பிரச்சினையின் தொடர்ச்சி, வளர்ச்சி, முடிச்சு, அதிர்ச்சி, விளைவு, முடிவு என்ன என்பதே திரைக்கதையின் பயணம். பெயரில் குப்பை இருந்தாலும், இது ஒரு குடும்பக் கதைதான்.

Oru Kuppai Kathai based on real life story

பல படங்களில் நடன இயக்குநராகப் பணிபுரிந்து தினேஷ் மாஸ்டர்தான் இதில் நாயகனாக நடித்துள்ளார். சமுத்திரக்கனி, அமீர், மிஷ்கின் ஆகியோர் கேட்டு நடிக்க விரும்பிய கதை இது. தினேஷ் மாஸ்டர் நடித்துள்ளார். 'வழக்கு எண்18/9 ' ,'ஆதலால் காதல் செய்வீர்' படங்களில் அசாதாரண முகம் காட்டிய கதாநாயகி மனிஷா யாதவ்தான் நாயகி.

காமெடிக்கு யோகிபாபு உள்ளார். நாயகனின் அம்மாவாக ஆதிரா வருகிறார். மற்றபடி பெரும்பாலும் புது முகங்கள் நடித்துள்ளனர். சிறு சிறு வேடங்களில் தலை காட்டிய பலர், இதில் பிரதான பாத்திரங்களைச் சுமந்துள்ளனர்.

காளி ரங்கசாமி இயக்கியுள்ளார். அம்மா காளியம்மாள் அப்பா ரங்கசாமி இரண்டு பெயர்களும் இணைந்ததுதான் காளி ரங்கசாமி. இவரது இயற்பெயர் ரபோனி கண்ணன். இவர் இயக்குநர்கள் எழில், அஸ்லம் ஆகியோரிடம் பணிபுரிந்தவர். தன்னிடம் இணை இயக்குநராக பணிபுரிந்த காளி ரங்கசாமியை தன் பிலிம்பாக்ஸ் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் மூலம் இயக்குநராக்கியுள்ளார் அஸ்லம்.

அமீர், சேரன், ராதாமோகன் ஆகியோரிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்தவரும் 'பாகன்' படத்தை இயக்கிய வருமான அஸ்லம், தன் இணை இயக்குநரும் 15 ஆண்டுகால நண்பனுமான காளிரங்கசாமிக்கு படவாய்ப்பு கொடுத்து தன் நிறுவனத்தின் மூலம் தயாரிக்கிறார்.

'காதல்', 'கல்லூரி' போன்ற படங்களிள் இசையமைப்பாளர் ஜோஷ்வா ஸ்ரீதர் இப்படத்துக்கு இசை அமைத்துள்ளார். 'அஞ்சாதே' ,'சித்திரம் பேசுதடி', 'நந்தலாலா' படங்களில் பணிபுரிந்த மகேஷ் முத்துசாமிதான் இதற்கு ஒளிப்பதிவாளர். பாடல்கள் நா. முத்துக்குமார்.

சென்னைதான் கதைக்களம். குறிப்பாக அடித்தட்டு குடிசைப் பகுதியில் கதை நடப்பதால் கூவம் நதிக்கரையோரம்தான் பெரும்பகுதி படப்பதிவு நடந்துள்ளது. பிரபலமான பல்லவன் நகர், சிந்தாதிரிப் பேட்டை குப்பங்களிலும் படமாகியுள்ளது சென்னையில் பல அழுக்கான பகுதிகளும் படத்தில் அழகாக இடம் பெற்றுள்ளன.

Oru Kuppai Kathai based on real life story

இயக்குநரின் அனுபவம்

''இது ஒரு ஏழைப் பையன் மற்றும் பெண் சார்ந்த வாழ்க்கை. நிஜமான ஒருவரின் வாழ்வில் நடந்ததையே கதையாக்கியுள்ளேன்,'' என்றவர் குடிசைப்பகுதி மக்கள் நல்ல ஒத்துழைப்பு தந்ததாகவும் கூறுகிறார்.

தயாரிப்பாளர் அஸ்லம்

''வெள்ளையான மனிதர்களின் மனசு அழுக்காக இருக்கும். அழுக்கான மனிதர்களின் மனசு வெள்ளையாக இருக்கும் என்பதை படப்பிடிப்பு அனுபவத்தில் உணர்ந்து கொண்டேன் .குடிசைப்பகுதி மக்கள் நல்ல உதவி செய்தார்கள். படப்பிடிப்புக்கு குடம்,பாத்திரம், சாப்பாடு போன்ற உதவிகள் எல்லாம் செய்தனர். தொல்லை தரவில்லை,'' என்கிறார்.

Oru Kuppai Kathai based on real life story

அழுத்தமான காட்சிகள்

கதை அழுக்கான மக்கள் பற்றியதாக இருந்தாலும் காட்சிகள் அழுத்தமானதாக இருப்பதால் ரசிக்க வைக்கும்படி இருக்கும்.

நாயகன் முனிசிபாலிடியில் வேலை பார்ப்பவன். நாயகி வெளியூரில் மலையூரிலிருந்து சென்னைக்கு வந்திருப்பவள். படத்தில் ஏழ்மை வருகிறது. ஆனால் படம் அது பற்றி பேசவில்லை. வாழ்க்கை பற்றியே பேசுகிறது.

இது 43 நாட்களில் படப்பிடிப்பு முடிக்கப் பட்ட படம். படத்தில் கதையோடு ஒட்டிய 4 பாடல்கள் உள்ளன. மகேஷ் முத்துசாமியின் ஒளிப்பதிவு யதார்த்த அழகுக்காக பேசப்படும். மொழி தெரியாதவர்கள் நாம் ஈரானிய படங்களை ரசிப்பது போல கதையை அனைவரும் ரசிப்பர்.

தமிழில் இது ஒரு 'ஸ்லம் டாக் மில்லியனர்' என்று பேசும் வகையில் யதார்த்தப் பதிவாக இருக்கும் என்கிறார் இயக்குநர்.