அடுத்த மாதம் தொடங்குகிறது அஜீத் - சிவா கூட்டணியின் புதிய படம்!

வீரம் படத்தை இயக்கிய சிவாவுக்கே தனது அடுத்த பட வாய்ப்பையும் அஜீத் வழங்கியிருப்பது தெரிந்த விஷயம்.

இந்தப் படத்தை அடுத்த மாதமே தொடங்கிவிடலாம் என அஜீத் கூறிவிட்டாராம்.

ஆரம்பம், என்னை அறிந்தால் படங்களைத் தொடர்ந்து இந்த புதிய படத்தையும் ஏ எம் ரத்னமே தயாரிக்கிறார்.

அடுத்த மாதம் தொடங்குகிறது அஜீத் - சிவா கூட்டணியின் புதிய படம்!

‘வீரம்' படத்தை கிராமத்துப் பின்னணியில் கொடுத்த சிவா, இந்தப் புதிய படத்தை நகரத்து சூழலை மையமாக வைத்து எடுக்கப் போகிறாராம்.

இயக்குனர் சிவா இயக்கிய ‘சிறுத்தை', ‘வீரம்' இரண்டிலுமே தமன்னாதான் நாயகியாக நடித்தார். ஆனால் இந்தப் படத்தில் அந்த சென்டிமென்டெல்லாம் கிடையாதாம்.

சமந்தாவிடம் பேசிக் கொண்டிருக்கிறார்களாம்.

 

அதெல்லாம் பர்சனல்... மீடியா பேசக்கூடாது!- சமந்தா கோபம்

சித்தார்த்துடனான எனது உறவு தனிப்பட்ட விஷயம். இதைப் பற்றி மீடியாக்கள் பேசுவதை நிறுத்த வேண்டும் என்று நடிகை அதெல்லாம் பர்சனல்... மீடியா பேசக்கூடாது!- சமந்தா கோபம்

ஆனால் சில மாதங்களுக்கு முன் இருவரும் திடீரென பிரிந்துவிட்டனர். இது மீடியாவில் பெரிய செய்தி ஆனது.

இன்று பிரபல ஆங்கில நாளிதழ் ஒன்றில் இருவரின் பிரிவு குறித்தும் பெரிய செய்தி வெளியிட கொந்தளித்துள்ளார் சமந்தா.

இதுகுறித்து அவர் கூறுகையில், "ஏதோ நான்தான் குற்றவாளி என்பதைப் போல அந்த செய்தியில் எழுதியிருக்கிறார்கள். என் மீது எந்தத் தவறும் இல்லை. மேலும் சித்தார்த் ஒரு சிறந்த மனிதர். எங்கள் இருவரின் தனிப்பட்ட விஷயங்கள் பற்றிப் பேசுவதை மீடியா உடனே நிறுத்த வேண்டும்," என்றார்.

 

மீண்டும் கவுதம் மேனனுடன் கைகோர்க்கும் ஏ ஆர் ரஹ்மான்

கவுதம் மேனனும் ஏ ஆர் ரஹ்மானும் முதலில் இணைந்த படம் விண்ணைத் தாண்டி வருவாயா. பாடல்களும் படமும் செம ஹிட்.

அடுத்து அதே படத்தை இந்தியில் ரீமேக்கினார்கள். ஆனால் எதிர்ப்பார்த்த அளவு போகவில்லை.

அதன் பிறகு ரஹ்மானும் கவுதம் மேனனும் மீண்டும் சேரவே இல்லை.

மீண்டும் கவுதம் மேனனுடன் கைகோர்க்கும் ஏ ஆர் ரஹ்மான்

கவுதம் மேனன் இளையராஜாவுடன் இணைந்து நீதானே என் பொன் வசந்தம் படம் செய்தார். அடுத்து என்னை அறிந்தால் படத்துக்காக மீண்டும் தன் பழைய பார்ட்னர் ஹாரிஸ் ஜெயராஜிடம் போனார்.

இப்போது மீண்டும் ஏ ஆர் ரஹ்மானை நாடியுள்ளார். இது சிம்பு - பல்லவி சுபாஷ் நடிக்கும் புதிய படத்துக்காக. இந்தப் படத்தை கடந்த ஆண்டே தொடங்கிவிட்டார் கவுதம். ஆனால் என்னை அறிந்தால் இயக்க வேண்டி வந்ததால், அப்படியே நிறுத்திவிட்டார். அந்தப் படத்துக்காக போடப்பட்ட டைட்டிலில் இசை ஏ ஆர் ரஹ்மான் என்றுதான் வருகிறது.

நேற்று முன்தினம் தனது பிறந்த நாளைக் கொண்டாடிய ரஹ்மான், இணையதளத்தில் நடந்த கேள்வி பதில் நிகழ்ச்சியில் இதனை உறுதிப்படுத்தினார்.

என்னை அறிந்தால் வெளியானதும், இந்த சிம்பு படம் தொடங்கிவிடும். இன்னும் ஒரு விண்ணைத் தாண்டி வருவாயாவாக இந்தப் படம் அமையட்டும்.

 

ஜோதிகா நடிக்கும் படத்தின் ஷூட்டிங் முடிந்தது.. அடுத்த படத்துக்கு தயாராகிறார்!

ஹவ் ஓல்ட் ஆர் யூ படத்தின் தமிழாக்கத்தில் நடித்துக் கொண்டிருக்கும் ஜோதிகா நடிக்கும் படத்தின் ஷூட்டிங் முடிந்தது.. அடுத்த படத்துக்கு தயாராகிறார்!

இந்நிலையில், மலையாளத்தில் வெளியாகி பெரிய அளவில் வெற்றியடைந்த ‘ஹவ் ஓல்டு ஆர் யூ' படத்தை தமிழில் ரீமேக் செய்ய முயற்சிகள் நடந்தன.

இதில், மலையாளத்தில் மஞ்சு வாரியார் நடித்த கதாபாத்திரத்தில் நடிகை ஜோதிகாவை நடிக்க வைக்க படக் குழுவினர் முயற்சி செய்தனர். மஞ்சு வாரியாரின் சினிமா மறுபிரவேசத்துக்கு இந்தப் படத்தின் வெற்றி பெரிதும் உதவியது.

அதேபோல், இந்த படத்திலும் ஜோதிகாவை நடிக்க வைக்க முயன்றனர். சூர்யாவும், குடும்பத்தினரும் இதற்கு ஓகே சொன்னதால், ஜோதிகாவும் நடிக்க ஆரம்பித்தார். படத்தை சூர்யாவின் சொந்த நிறுவனமே தயாரிக்கிறது. மலையாளத்தில் இயக்கிய ரோஷன் ஆண்ட்ரூஸ்தான் தமிழிலும் இயக்கி வருகிறார்.

இந்தப் படத்தின் ஷூட்டிங் விறுவிறுவென நடந்து முடிந்துவிட்டது. ஏப்ரல் மாதம் படம் திரைக்கு வரும் எனத் தெரிகிறது.

இந்த நிலையில், ஜோதிகாவை இன்னொரு படத்திலும் நாயகியாக நடிக்கக் கேட்டு வருகின்றனர். கதை கேட்டு ஓகே சொல்லிவிட்டாராம் அவர். அநேகமாக இதில் சூர்யாவும் நடிக்கக் கூடும் என்கிறார்கள்.

 

ரஜினியுடன் நடிக்க மறுத்த பிரபல நடிகை!

ரஜினியுடன் நடிக்க வேண்டும்.. - இந்திய சினிமாவில் பெரும்பாலான நடிகைகள் சொல்வது இந்த வாக்கியத்தைத்தான்.

அப்படிப்பட்ட ரஜினியுடன் நடிக்க ஒரு நடிகை மறுத்துவிட்டார். அவர் வைஜெயந்தி மாலா.

மூத்த கலைஞர்களை மதிப்பதில் ரஜினிக்கு நிகரில்லை. அவர்களுக்கு மரியாதை செய்யும் விதத்தில் அவர்களை தனது படங்களில் இடம்பெற வைப்பார் ரஜினி. நடிகர் திலகம் சிவாஜி கணேசனுடன் நான் வாழவைப்பேன், ஜஸ்டிஸ் கோபிநாத் போன்ற படங்களில் நடித்தவர், தான் சூப்பர் ஸ்டார் ஆன பிறகு அதே சிவாஜியை விடுதலை, படிக்காதவன், படையப்பா போன்ற படங்களில் கவுரவமான வேடங்களில் நடிக்க வைத்தார்.

ரஜினியுடன் நடிக்க மறுத்த பிரபல நடிகை!

ஜெய்சங்கர், ரவிச்சந்திரன், வடிவுக்கரசு, மனோரமா, பண்டரிபாய், விகே ராமசாமி, அசோகரன், சாவித்திரி, விஜயகுமாரி, கே ஆர் விஜயா, முத்துராமன், ஜெமினி கணேசன் என பல மூத்த கலைஞர்களுடன் பணியாற்றியுள்ளார்.

இப்படி பலருடன் நடித்து வந்த ரஜினி, தனது ஒரு படத்தில் நடிகை வைஜயந்தி மாலா நடிக்க வேண்டும் என விரும்பினார். மும்பையில் வெளியான ஒரு பத்திரிகையில் கண்ணாடி அணிந்து மிகவும் அலட்சியமாக வைஜெயந்திமாலா திரும்பி பார்க்கும் ஒரு புகைப்படத்தைக் கண்டார் ரஜினி.

நண்பர் சிரஞ்சீவியிடம் அந்த புகைப்படத்தை காட்டி, "ஒரு போட்டோவிலேயே அந்த கேரக்டரைக் காட்டுகிறார் பாருங்க.. நம்ம அடுத்த படத்தில் இவர் நடித்தால் நன்றாக இருக்கும். அதற்கேற்ப ஆக்டிங் ஸ்கோப் அவர்களுக்கு கொடுக்க வேண்டும்," என்றாராம் ரஜினி.

உடனே அதற்கான கதை விவாதம் முடிந்து, ரஜினிக்கு இணையாக ஒரு வேடமாக அமைத்தனர். படத்தை அல்லு அரவிந்த் தயாரிக்க முடிவானது.

வைஜயந்தி மாலாவிடம் தங்களுடன் ரஜினி நடிக்க விரும்புவதாக சொல்லப்பட்டது. அதன்பின் அவரிடம் அப்படத்தின் கதையையும், அவருடைய கதாபாத்திரத்தையும் சொல்லப்பட்டது.

கே.எஸ்.கோபாலகிருஷ்ணனின் பணமா பாசமா படத்தில் ஜெமினி, எஸ்.வரலட்சுமி மாப்பிள்ளை, மாமியாராக நடித்தது போல் அமைய வேண்டும் என்று எதிர் பார்க்கப் பட்டது. ஆனால் வைஜயத்ந்தி மாலா அப்படத்தில் நடிக்க மறுத்துவிட்டார். இதனால் சிரஞ்சீவி நேரில் வந்து கேட்டார். ரஜினியும் அவரிடம் வந்து பேசினார். ஆனால் வைஜயந்தி மாலா தன் முடிவிலிருந்து மாறவில்லை.

"ரஜினி இன்று இளைஞர்களின் மாபெரும் சக்தியாக விளங்கி வருகிறார். அவருடன் மோதுவது போன்ற கதாபாத்திரத்தில் நான் ஒரு போதும் நடிக்க மாட்டேன்," என்று சொல்லி விட்டார் வைஜயந்திமாலா.

இதனால் அந்த வாய்ப்பு முன்பு ரஜினிக்கு ஜோடியாக நடித்த ஸ்ரீவித்யாவுக்குப் போனது. மாமியாராக ஸ்ரீவித்யா ஒப்பந்தமானார்.

ஸ்ரீவித்யா சிறப்பாக நடித்து பாராட்டுக்களைப் பெற்றார். படமும் வெள்ளி விழா கண்டது. அந்தப் படம்தான் மாப்பிள்ளை.

 

ஜனவரி 23-ம் தேதி வருண் மணியனுடன் திருமண நிச்சயதார்த்தம்- ட்விட்டரில் அறிவித்தார் த்ரிஷா

சென்னை: வரும் ஜனவரி 23-ம் தேதி தயாரிப்பாளர் வருண் மணியனுடன் திருமண நிச்சயதார்த்தம் நடைபெறுவதாக இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தார் நடிகை ஜனவரி 23-ம் தேதி வருண் மணியனுடன் திருமண நிச்சயதார்த்தம்- ட்விட்டரில் அறிவித்தார் த்ரிஷா

கடந்த 2014-ம் ஆண்டில், த்ரிஷாவும் தயாரிப்பாளர் வருண் மணியனும் நெருக்கமாக இருப்பது போன்ற படங்கள் வெளியாகின. இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடந்துவிட்டதாக கூறப்பட்டது. ஆனால் இந்த செய்திகளை மறுத்தார் த்ரிஷா.

த்ரிஷாவுக்கு ஒரு நல்லது நடந்தால் உங்கள் அனைவருக்கும் சொல்வேன் என்று அவர் தாயார் உமா அறிவித்தார்.

ஆனால் இந்த திருமண செய்தி முழுக்க உண்மையானது என்றும், விரைவில் வெளிப்படையாக அறிவிக்கத்தான் போகிறார்கள் என்றும் மீடியா நம்பியது. அதற்கேற்ப, த்ரிஷாவும் வருண் மணியனும் தனி விமானத்தில் சுற்றுலா கிளம்பினார்கள்.

இந்த நிலையில்தான் த்ரிஷாவே தன் திருமணச் செய்தியை அறிவித்துள்ளார்.

இன்று ட்விட்டரில் அவர் வெளியிட்ட தகவலில், "ரசிகர்கள் மற்றும் மீடியா நண்பர்களுக்கு, வரும் ஜனவரி 23-ம் தேதி வருண் மணியனுடன் எனது திருமண நிச்சயதார்த்தம் நடக்கவிருக்கிறது. இது எங்கள் குடும்பத்துக்குள் நடக்கும் மிகவும் தனிப்பட்ட நிகழ்வு," என்று குறிப்பிட்டுள்ளார்.

ஜனவரி 23-ம் தேதி வருண் மணியனுடன் திருமண நிச்சயதார்த்தம்- ட்விட்டரில் அறிவித்தார் த்ரிஷா

அதே நேரம் திருமணத் தேதியை அவர் இன்னும் அறிவிக்கவில்லை. "திருமணத் தேதி பற்றி யாரும் ஊகங்கள் பரப்ப வேண்டும். தேதி முடிவானதும் உங்களுக்குத்தான் முதலில் தெரியவரும்," என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இதன் மூலம் த்ரிஷா திருமணம் குறித்து பல ஆண்டுகளாகத் தொடர்ந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.

 

நடிப்பதை நான் ஏன் நிறுத்த வேண்டும்... இரு புது படங்களில் ஒப்பந்தமாகியுள்ளேன்! - த்ரிஷா

திருமணமானாலும் நான் நடிப்பதை நிறுத்தப் போவதில்லை. புதிய படங்களில் ஒப்பந்தமாகப் போகிறேன் என்று நடிகை த்ரிஷா அறிவித்துள்ளார்.

நடிகை த்ரிஷா - வருண் மணியன் திருமண நிச்சயதார்த்தம் வரும் ஜனவரி 23-ம் தேதி நடக்கிறது. இதனை இன்று அறிவித்துள்ள த்ரிஷா, தான் திருமணத்துக்குப் பிறகு நடிப்பதில்லை என்று வந்த செய்திகளை மறுத்துள்ளார்.

நடிப்பதை நான் ஏன் நிறுத்த வேண்டும்... இரு புது படங்களில் ஒப்பந்தமாகியுள்ளேன்! - த்ரிஷா

இதுகுறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள ட்வீட்டில், "நடிப்பதை நிறுத்தும் எண்ணமே எனக்கு இல்லை. நான் ஏன் நிறுத்த வேண்டும்..? சொல்லப் போனால் இனிமேல் புதுப்படங்களை ஒப்புக் கொள்ளப் போகிறேன். இந்த 2015-ல் மட்டும் எனது நான்கு படங்கள் வெளிவரவிருக்கின்றன," என்று கூறியுள்ளார்.

நடிப்பதை நான் ஏன் நிறுத்த வேண்டும்... இரு புது படங்களில் ஒப்பந்தமாகியுள்ளேன்! - த்ரிஷா

வருண் மணியன் தொழிலதிபர் மட்டுமல்ல.. தயாரிப்பாளரும் கூட. வாயை மூடிப் பேசவும், காவியத் தலைவன் போன்ற படங்களைத் தயாரித்துள்ள அவர், மேலும் இரு புதிய படங்களைத் தயாரித்து வருகிறார். கணவருடன் இணைந்து இந்த தயாரிப்புப் பணிகளிலும் ஈடுபடப் போகிறாராம் த்ரிஷா.

 

ஆபாசப் படத்திலிருப்பது நானல்ல..! - மறுக்கும் வசுந்தரா

ஆபாசப் படம் மற்றும் வீடியோவிலிருப்பது நானல்ல என்று நடிகை வசுந்தரா மறுப்பு தெரிவித்துள்ளார்.

வட்டாரம், ஜெயம் கொண்டான், பேராண்மை படங்களில் நடித்தவர் வசுந்தரா. தேசிய விருது பெற்ற தென் மேற்கு பருவக்காற்று படத்தில் இவர்தான் நாயகி.

சமீபத்தில் ரிலீசான சொன்னா புரியாது, சித்திரையில் நீலாச்சோறு படங்களிலும் நாயகியாக நடித்தார்.

ஆபாசப் படத்திலிருப்பது நானல்ல..! -  மறுக்கும் வசுந்தரா

வசுந்தரா ஒரு ஆணுடன் நெருக்கமாக இருக்கும் ஆபாச படங்கள் இணையதளத்தில் வெளியானது. இவற்றை அவரே செல்பியாக எடுத்து இன்ஸ்டாகிராமில் வெளியிட்டிருந்தார்.

அவரது ஆபாச வீடியோவும் இணையத்தில் வெளியானது. இவை சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவின.

ஆபாசப் படத்திலிருப்பது நானல்ல..! -  மறுக்கும் வசுந்தரா

வசுந்தரா இவற்றைப் பார்த்து அதிர்ச்சியானார். தனது ட்விட்டர், இன்ஸ்டாகிராம் கணக்குகளை உடனடியாக மூடினார். மொபைல் போனையும் சுவிட்ச் ஆப் செய்து விட்டார்.

தற்போது இந்த ஆபாச படம் குறித்து கருத்து தெரிவித்து உள்ளார். அவர் கூறும் போது, "இன்டர் நெட்டில் வெளியான ஆபாச படத்தில் இருப்பது நான் அல்ல.

ஆபாசப் படத்திலிருப்பது நானல்ல..! -  மறுக்கும் வசுந்தரா

மார்பிங் மூலம் எனது முகத்தை நிர்வாண படத்துடன் இணைத்து இதை வெளியிட்டு உள்ளனர். இது போன்ற குற்றங்களில் ஈடுபடுவோரை போலீசார் கடுமையாக தண்டிக்க வேண்டும்," என்று கூறியுள்ளார்.

 

ஆம்பள படத்துக்கு யு சான்று.. பொங்கல் ரிலீஸ் நிச்சயம்!

விஷால் - ஹன்சிகா நடித்துள்ள ஆம்பள படத்துக்கு யு சான்று.. பொங்கல் ரிலீஸ் நிச்சயம்!  

‘அரண்மனை' படத்திற்குப் பிறகு சுந்தர்.சி இயக்கியுள்ள இந்தப் படத்தில் பிரபு, வைபவ், சந்தானம், சதீஷ் உள்பட பலரும் நடித்துள்ளனர். ஆக்‌ஷன் கலந்த காமெடி படமாக உருவாகியிருக்கும் இப்படத்திற்கு ஹிப்ஹாப் தமிழா ஆதி இசையமைத்திருக்கிறார்.

ஆம்பள படத்துக்கு யு சான்று.. பொங்கல் ரிலீஸ் நிச்சயம்!

இப்படத்தின் பாடல்கள் மற்றும் டிரைலர்கள் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்று வருகிறது. இதன் படப்பிடிப்பு சென்னையில் துவங்கி காரைக்குடி, கும்பகோணம், பொள்ளாச்சி, ஊட்டி உள்ளிட்ட பல பகுதிகளில் நடந்தது. பொங்கல் தினத்தன்று படத்தை வெளியிடுவதில் தீவிரமாக உள்ளனர்.

இதையடுத்து தணிக்கைக் குழுவுக்கு படம் நேற்று அனுப்பப்பட்டது. படத்தை பார்த்த தணிக்கை குழுவினர் படத்திற்கு யு சான்றிதழ் வழங்கியுள்ளனர்.

ஆம்பள படத்துக்கு யு சான்று.. பொங்கல் ரிலீஸ் நிச்சயம்!

பொங்கலுக்கு வெளியாகப் போவதாக அறிவிக்கப்பட்ட படங்களில் யு சான்று பெற்று தயாராக உள்ள ஒரே படம் ஆம்பளதான்.

 

மறுபடியும் பர்ஃபெக்ஷனிஸ்ட் படத்தின் ரீமேக்கில் இவரா?

சென்னை: அண்மையில் வெளியான சூப்பர் டூப்பர் இந்தி ஹிட் படத்தின் தமிழ் ரீமேக்கில் தமிழகத்தின் முதல்வர் பதவிக்கு ஆசைப்படும் நடிகர் நடிப்பார் என்று கூறப்படுகிறது.

தமிழகத்தின் முதல்வர் ஆக ஆசைப்பட்டு காய் நகர்த்தி வரும் அந்த நடிகர் பிரமாண்ட இயக்குனர் முதல் முறையாக செய்த ரீமேக் படத்தில் நடித்தார். பிரமாண்ட இயக்குனர் இந்தியில் சூப்பர் ஹிட்டான பர்ஃபெக்ஷனிஸ்ட் நடிகர் படத்தை தமிழில் இந்த நடிகரை வைத்து ரீமேக் செய்தார்.

மறுபடியும் பர்ஃபெக்ஷனிஸ்ட் படத்தின் ரீமேக்கில் இவரா?

இந்தி படத்துடன் ஒப்பிடுகையில் தமிழில் நடிகரின் நடிப்பு அந்த அளவுக்கு இல்லை என்று பலர் விமர்சனம் செய்தனர். இந்நிலையில் கடந்த மாதம் ரிலீஸான சூப்பர் டூப்பர் இந்தி ஹிட் படத்தை பிரமாண்ட இயக்குனர் பார்த்துவிட்டு அதை புகழ்ந்து தள்ளியுள்ளார்.

இயக்குனர், பர்ஃபெக்ஷனிஸ்ட் நடிகர் ஆகியோரின் பணியை அவர் மனம் திறந்து பாராட்டியுள்ளார். இந்நிலையில் பிரமாண்ட இயக்குனர் அந்த இந்தி படத்தை தமிழில் ரீமேக் செய்ய திட்டமிட்டுள்ளாராம். மேலும் முதல்வர் பதவிக்கு ஆசைப்படும் நடிகரை அணுகி படத்தை பார்க்குமாறும் தெரிவித்துள்ளாராம்.

இதனால் பிரமாண்ட இயக்குனர் அந்த நடிகரை வைத்து இந்தி படத்தை தமிழில் ரீமேக் செய்வார் என்று செய்திகள் வெளியாகியுள்ளன. இந்தியில் நடிப்புக்கு பெயர் போன பர்ஃபெக்ஷனிஸ்ட் நடித்தார். படத்தின் முக்கிய அம்சங்களில் ஒன்றே பர்ஃபெக்ஷனிஸ்டின் அருமையான நடிப்பு தான்.

இந்நிலையில் அதை தமிழில் இந்த நடிகரை வைத்து ரீமேக்கா...?

 

திரையில் மட்டுமல்ல, பொது இடங்களிலும் நான் அப்படித்தான்! - சமந்தா

கோவாவில் புத்தாண்டு கொண்டாட தோழிகளுடன் சென்றிருந்தார் சமந்தா. படுகவர்ச்சியான உடையில் போயிருந்த அவர், பைக் ஒன்றை வாடகைக்கு எடுத்துக் கொண்டு தோழியுடன் கோவா தெருக்களில் ஒரு ரவுண்ட் வந்தார்.

வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டே இருந்தார்கள் கோவாவுக்கு வந்திருந்த பயணிகள்.

தெலுங்கு விருது விழா ஒன்றில் முழு முதுகையும் காட்டியபடி உடை அணிந்து வந்தார். விழாக் குழுவினர் எல்லோர் கண்களும் அவர் முதுகிலேயே நிலை கொண்டிருந்தன.

திரையில் மட்டுமல்ல, பொது இடங்களிலும் நான் அப்படித்தான்! - சமந்தா  

இப்படி போகுமிடங்களிலெல்லாம் கவர்ச்சி காட்டுவது பப்ளிசிட்டிக்காகவா என்று கேட்டால், "சேச்சே... அதெல்லாம் இல்லை. உண்மையிலேயே எனக்கு கவர்ச்சியாக இருப்பது பிடிக்கும்.

எப்போதும் நான் சிரித்த முகமாய் இருக்கிறேன் என்பார்கள். சிறு வயதில் இருந்தே நான் அப்படித்தான். எப்போதும் சிரித்துக் கொண்டே இருப்பேன். அதுவே முகத்துக்கு அழகை தரும். சிலர் கேமரா முன்னால் மட்டுமே சிரிப்பார்கள். மற்ற நேரம் இறுக்கமான முகத்தோடு இருப்பார்கள்.

நடிகைகளை பொறுத்த வரை திரையிலும் பொது இடங்களிலும் அழகான தோற்றத்தோடு இருக்க வேண்டும். எனவேதான் நான் கவர்ச்சியான உடையில் வருகிறேன்," என்றார்.