'லவ் ஸ்டோரி' படத்தில் மீண்டும் நீச்சலுடையில் நயன்!

Nayanthara Appear Swimsuit

தெலுங்குப் படமான லவ் ஸ்டோரியில் மீண்டும் நீச்சலுடையில் நடிக்கிறாராம் நயன்தாரா.

பிரபுதேவாவுடன் காதலை முறித்துக் கொண்ட பிறகு நயன்தாராவுக்கு நிறைய படங்கள் குவிகின்றன.

ராணாவுடன் நடித்த 'கிருஷ்ணம் வந்தே ஜகத் குரும்' படம் நாளை ரிலீசாகிறது. சென்னையிலும் இந்தப் படம் வெளியாகிறது.

தமிழில் அஜீத், ஆர்யா மற்றும் உதயநிதி ஸ்டாலினுக்கு ஜோடியாக நடித்து வருகிறார்.

இந்நிலையில் தெலுங்கில் தயாராகும் ‘லவ் ஸ்டோரி' படத்தில் நீச்சல் உடையில் நடிக்கிறார் நயன்தாரா. இப்படத்தில் அவருக்கு ஜோடியாக நாகார்ஜுனா நடிக்கிறார்.

இந்தப் படத்தில் அவர் நீச்சல் உடையில் தோன்றுகிறாராம். ஏற்கெனவே பில்லா படத்தில் அஜீத்துடன் நீச்சல் உடையில் நடித்துக் கலக்கினார் நயன். அந்தப் படத்தில் கவர்ச்சி குண்டான நமீதாவுடன் போட்டி போட்டு கவர்ச்சி காட்டினார்.

இப்போது மீண்டும் கவர்ச்சிக் க(கு)ளத்தில் குதித்துள்ளார்!

 

கடல்... ரூ 2 கோடிக்கு ஆடியோவை வாங்கியது சோனி!

sony grabs kadal audio rights
ஏ ஆர் ரஹ்மான் இசையில் உருவாகியுள்ள கடல் படத்தின் இசை வெளியீட்டு உரிமையைப் பெற்றுள்ளது முன்னணி ஆடியோ நிறுவனமான சோனி.

மணிரத்னம் இயக்கத்தில் கவுதம், துளசி, அர்ஜுன், அரவிந்த்சாமி நடித்து வரும் படம் கடல்.

காதலும் மீனவர் பிரச்சினையும் பின்னிப் பிணைந்த கதையை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ள இந்தப் படத்தின் இசை பெரும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஏ ஆர் ரஹ்மான் இசையில் ஏற்கெனவே வெளியான நெஞ்சுக்குள்ள பாடல் ரசிகர்களைக் கிறங்கடித்துவிட்டது.

இந்த நிலையில் முழுப் பாடல்களையும் விரைவில் வெளியிட உள்ளனர். படத்தின் இசை உரிமையை சோனி நிறுவனம் பெற்றுள்ளது.

ரூ 2 கோடிக்கு ஆடியோ உரிமையைப் பெற்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுகுறித்து சோனி நிறுவனத்தின் தெற்குப் பகுதி பொறுப்பாளர் அசோக் பர்வானி கூறுகையில், "ரஹ்மானின் அருமையான இசையில் உருவாகியுள்ள கடல் பட பாடல்களை வெளியிடுவதில் மகிழ்ச்சி அடைகிறோம். இந்த ஆண்டு அவரது 3வது ஆல்பத்தை வளியிடுகிறோம். அடுத்த ஆண்டு ரஹ்மானின் மேலும் சில ஆல்பங்களை வெளியிடும் உரிமையைப் பெற்றுள்ளோம்," என்றார்.

 

50 வயது டெமி மூர் கையில் இன்னொரு 'பொம்மை'... வயது 26!

Demi Attached A 26 Year Old Toyboy

லாஸ் ஏஞ்சலெஸ்: ஜஸ்ட் 50 வயதேயாகும் ஹாலிவுட் முன்னாள் கனவுக் கன்னியிடம் 26 வயதே நிரம்பிய ஒரு இளைஞர் சிக்கியுள்ளார். ஒரு வருடத்திற்கு முன்புதான் இதேபோல இளைஞரான அஸ்டன் கட்சரிடமிருந்து பிரிந்து வந்தார் டெமி என்பது நினைவிருக்கலாம்.

டெமி மூர் கனவுக் கன்னியாக மட்டுமல்ல, கவர்ச்சிக் கன்னியாகவும் ஜொலித்தவர். இன்றும் கூட அவருக்கு செமத்தியான கிராக்கி இருக்கத்தான் செய்கிறது. கடந்த ஆண்டுதான் தனது காதலர் அஷ்டன் கட்சரை விட்டு விலகினார். இப்போது 26 வயதான விடோ ஸ்னாபெல் என்பவருடன் சுற்ற ஆரம்பித்துள்ளாராம்.

இவர் ஆஸ்கர் விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்ட ஜூலியன் ஸ்னாபெல்லின் மகன் ஆவார். இருவரும் சேர்ந்து நவோமி கேம்பல் தனது காதலர் விலாடிமிர் டோரோனின் 50வது பிறந்த நாளுக்கு ஜோடி போட்டுப் போயிருந்தார்களாம். இந்த பிறந்த நாள் விழா இந்தியாவின் ஜோத்பூரில் நடந்தது நினைவிருக்கலாம்.

டெமியும், அவரது புதுக் காதலரும் சேர்ந்து டான்ஸ் ஆடினார்களாம், ஒருவரை ஒருவர் கட்டிப் பிடித்துக் கொண்டார்ளாம், முத்தமிட்டும் கொண்டார்களாம்.

ஸ்னாபெல்லுக்கு வயசான கவர்ச்சிக் கன்னிகளைப் பிடிப்பது என்பது ஒரு பொழுதுபோக்காக இருந்து வருகிறதாம். இதற்கு முன்பு, அவருக்கு 21 வயதாக இருந்தபோது 44 வயதான எல்லி மெக்பெர்சன் என்ற சூப்பர் மாடல் அழகியுடன் நடை போட்டுக் கொண்டிருந்தார். அதேபோல 35 வயதான லிவ் டெய்லர் என்ற நடிகையுடனும் உலா வந்தவர்தான் ஸ்னாபெல். இப்போது 50 வயதைத் தொட்டு விட்ட டெமியுடன் டீலிங்கில் இறங்கியுள்ளார்.

டெமியை விட்டுப் பிரிந்த கட்சர் தற்போது அமெரிக்க டிவி நடிகையான 29 வயதான மிலா குனிஸுடன் புது உறவில் ஈடுபட்டுள்ளார் என்பது கொசுருச் செய்தி.

டெமியின் ஒரே கணவர் ப்ரூஸ் வில்லிஸ் என்பது பலரும் அறிந்த விஷயம்தான். இந்த இருவரும் 1998ம் ஆண்டு விவாகரத்து செய்து பிரிந்தனர். டெமிக்கு, ப்ரூஸ் மூலம் 3 மகள்கள் உள்ளனர் என்பது நினைவிருக்கலாம்.

 

ரஜினியின் புதுப்படம்.. இன்னுமொரு புதுப் புரளி!!

It Is Another Rumour On Rajini Ma

ரஜினியின் புதுப்படத்துக்கான கதை விவாதம் துவங்கியுள்ளது என்றும், இந்த படத்தை மணிரத்னம் இயக்குவார் என்றும் வெளியான தகவல்கள் அக்மார்க் டுபாக்கூர் என ரஜினி தரப்பில் உறுதிப்படுத்தியுள்ளனர்.

இப்போது கோச்சடையானில் நடித்து முடித்துள்ள சூப்பர் ஸ்டார் ரஜினி, தனது அடுத்த படம் குறித்து கே வி ஆனந்திடம் மட்டுமே இதுவரை ஆலோசித்துள்ளார். இதனை கேவி ஆனந்தும் உறுதிப்படுத்தியுள்ளார்.

இடையில் துப்பாக்கி வெற்றி காரணமாக ஏஆர் முருகதாசுக்கு ரஜினி ஒரு வாய்ப்பு வழங்கக் கூடும் என மீடியாவே கிளப்பிவிட்டுவிட்டது. அதற்கு முன்பு, ராஜமவுலிதான் ரஜினியின் அடுத்த இயக்குநர் என்று ஒரு கோஷ்டி அம்மன் கோயிலில் சத்தியம் அடித்துச் சொல்லிக் கொண்டிருந்தது.

இதெல்லாம் கப்ஸா என்று இப்போது அம்பலமாகிவிட்டது.

இந்த சூழலில், ரஜினியின் அடுத்த படத்தை மணிரத்னம்தான் இயக்கப் போகிறார் என்று சொல்ல ஆரம்பித்துள்ளனர். கடந்த மாதம் நாயன் படம் வெள்ளி விழா ஆண்டைக் கொண்டாடியபோது, கமலும் மணிரத்னமும் உடனடியாக புதிய படம் தொடங்குகிறார்கள்.. கதை விவாதம் ஆரம்பித்து காரசாரமாகப் போய்க் கொண்டிருக்கிறது என்றெல்லாம் அடித்துவிட்டது நினைவிருக்கலாம்.

இப்போது தோசையை அப்படியே ரஜினி பக்கம் திருப்பிப் போட்டுள்ளனர்.

ரஜினி தரப்பில் இதுகுறித்து விசாரித்த போது, "எவ்வளவோ எழுதிவிட்டார்கள். அதில் இதுவும் ஒண்ணு. தன் அடுத்த பட இயக்குநர் யார் என்று எந்த மீடியாவுக்கும் ரஜினி சின்ன க்ளூ கூட கொடுத்ததில்லை. அதை தனது தயாரிப்பாளருடனும் நெருங்கி நண்பர்கள் சிலரிடமும் மட்டும்தான் பகிர்ந்து கொள்வார். ஆனால் இன்னும் 6 மாதங்கள் கழித்துதான் தன் புதிய படத்தை தயாரிப்பாளர் மூலம் அவர் அறிவிப்பார்," என்றார்.

 

நூறு கோடியைத் தாண்டியதா துப்பாக்கி? கோடம்பாக்க ஜோசியர்களின் தப்புக் கணக்கு!!

சமீப நாட்களாக எந்த இணையதளம் அல்லது செய்தித் தாளைத் திறந்தாலும் துப்பாக்கி படத்தின் வசூல் கணக்குதான் பக்கத்துக்குப் பக்கம் விளம்பரமாகவோ, செய்தியாகவே வெளியாகிக் கொண்டிருக்கிறது.

thuppakki box office collection some facts and figures   
இது உண்மைதானா?

கோடம்பாக்கத்தின் பிரபல வசூல் ராஜா (அதாங்க பாக்ஸ் ஆபீஸ் பண்டிட்!) ஒருவரை தொடர்பு கொண்டு விசாரித்தோம்.

துப்பாக்கி படம் இதுவரை பிரேக் ஈவன் எனப்படும் அசலைத் தாண்டிய நிலைக்கு வந்திருக்கிறது என்பதுதான் உண்மை. அதெப்படி இவங்களுக்கு மட்டும் ரூ 100 கோடியைத் தாண்டிவிட்டது என்றுதான் தெரியவில்லை என்றார்.

சென்னை நகரில் மட்டுமே இந்தப் படம் ஓரளவு சுமாரான கூட்டத்துடன் ஓடிக் கொண்டிருப்பதாகவும், வெளியூர்களில் தூக்கப்படும் நிலையில்தான் இருக்கிறதென்றும் அவர் தெரிவித்தார். சென்னை விவரத்தை உறுதிப்படுத்திக் கொள்ள, சென்னை சினிமா ரசிகர்களின் நாடித் துடிப்பான காசி திரையரங்குக்கு சென்றோம். காலைக் காட்சிக்கு 25 சதவீத ரசிகர்கள் மட்டுமே வந்திருந்தனர்!

"ஏற்கெனவே நண்பன் படம் வெளியான போது, அந்தப் படம் தமிழ் சினிமாவின் அனைத்து சாதனைகளையும் முறியடித்து ரூ 100 கோடிக்கு மேல் வசூலைக குவித்து விட்டது என்று அறிவித்திருந்தார்கள். ஆனால் நிஜம் என்னவென்பது அடுத்த சில தினங்களில் வெளிச்சத்துக்கு வந்துவிட்டது. இப்போது மீண்டும் துப்பாக்கி படத்துக்கு அதே வேலையை ஆரம்பித்துள்ளனர். மாற்றான் பிஸினஸை நாங்கள் முறியடித்துவிட்டோம் என்று காட்டத்தான் இந்த பில்டப்," என்கிறார் பெயர் குறிப்பிட விரும்பாத இன்னொரு 'பண்டிட்'!

'தமிழ் சினிமாக்காரர்கள் வசூல் சாதனை என்று எதையாவது கொடுத்தால் அப்படியே நம்ப வேண்டிய அவசியமில்லை. காரணம், அதற்கு கணக்கு வழக்கும் இல்லை. பதிவேடுகளும் கிடையாது. குத்து மதிப்பாகத்தான் அடித்துவிடுவார்கள். கமல்ஹாஸன் தன் உன்னைப் போல் ஒருவன் படத்தக்கு 10 கோடி நஷ்டம் என்று வங்கியில் கணக்கு காட்டினாராம். அதை நம்பிக் கொண்டதைப் போல, துப்பாக்கியின் ரூ 100 கோடி வசூலையம் நம்பிக் கொள்ள வேண்டியதுதான்', என்கிறார் நம்மிடம் பேசிய ஒரு சீனியர் சினிமா ஜர்னலிஸ்ட்.

எதுக்கும் இந்த வம்பு.. தியேட்டர் வாரியாக வசூல் விவரங்களை தாணுவோ எஸ்ஏசியோ விளம்பரமாகக் கொடுத்துவிட்டால்... ரசிகர்கள், இன்கம்டாக்ஸ்காரர்களுக்கு வசதியாக இருக்குமே!

 

தூக்குக் கயிறோடு எஸ்ஏசியைத் தேடும் கே ராஜன்!

K Rajan Blasts Sa Chandrasekar

சென்னை: சின்னப்படத் தயாரிப்பாளர்களுக்கு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றாவிட்டால் தூக்கில் தொங்குவதாகக் கூறினார் சங்கத் தலைவர் எஸ்ஏசி. தூக்குக் கயிறு இருக்கு.. எஸ் ஏ சியைத்தான் காணோம், என்கிறார் தயாரிப்பாளர் சங்க எதிரணியைச் சேர்ந்த கே ராஜன்.

தயாரிப்பாளர் சங்கத்தில் நிர்வாகிகளாக உள்ள எஸ்ஏ சந்திரசேகர், கலைப்புலி தாணு உள்ளிட்டோரை கடுமையாக எதிர்த்து வருகிறது, கேயார் தலைமையிலான அணி.

இதனால் வாரம் à®'ரு முறை எஸ்ஏசி அணி நிருபர்களைச் சந்திப்பதும், அந்த சந்திப்புக்கு வரும் நிருபர்களை அப்படியே வழி மறித்து கேயார் அணி சந்திப்பதும் தொடர்கிறது.

நேற்று முன்தினமும் இந்த சந்திப்பும் வழி மறிப்பும் தொடர்ந்தது.

இதில் முன்னதாக நிருபர்களிடம் பேசிய எஸ் ஏ சந்திரசேகரன், "பொறுப்புக்கு வந்ததிலிருந்து எங்களை வேலை செய்யவே விடலா எதிர்த் தரப்பு. எப்பப் பார்த்தாலும் புகார், வழக்குன்னு தொந்தரவு கொடுத்துட்டே இருக்காங்க. அவங்கள மாதிரி கள்ள à®"ட்டுப் போட்டு ஜெயிச்சவங்க நாங்க இல்ல.." என்றார்.

பிரஸ் மீட் முடிந்ததும் வெளியே வந்த நிருபர்களை, அப்படியே அந்த ஹாலுக்கு வாங்க என்று கூட்டிச் சென்ற கேயார் மற்றும் ராஜன், "சிறு படத் தயாரிப்பாளர்களுக்கு ஏகப்பட்ட வாக்குறுதிகளைக் கொடுத்து பதவிக்கு வந்தார் எஸ் ஏ சந்திரசேகரன். வாக்குறுதிகளை நிறைவேற்றாவிட்டால் நாலு முழக் கயித்துல தொங்கிடறேன்னு சொன்னாரு. இப்ப தூக்குக் கயிறு இருக்கு... தொங்கறதுக்கு எஸ்ஏசியைத்தான் தேடிக்கிட்டிருக்கேன்," என்றார் படு காட்டமாக.

என்னது... à®'ரே கொல வெறியால்ல இருக்கு!

 

மனீஷா கொய்ராலா மருத்துவமனையில் அனுமதி

Manisha Koirala Hospital

மும்பை: பாலிவுட் நடிகை மனீஷா கொய்ராலா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பாலிவுட் நடிகை மனீஷா கொய்ராலா திடீர் என்று மயங்கி விழுந்தார் என்று கூறப்படுகிறது. இதையடுத்து அவரை மும்பையில் உள்ள ஜஸ்லோக் மருத்துவமனையில் நேற்று சேர்த்தனர். அங்கு அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். தற்போது அவர் நலமாக இருக்கிறார் என்று மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அவருக்கு சில பரிசோதனைகள் செய்யப்பட்டு வருகின்றன. அதன் முடிவுகள் வந்த பிறகு அவர் வீடு திரும்புவார் என்று கூறப்படுகிறது.

பாலிவுட்டில் முன்னணி நடிகையாக இருந்த மனீஷா திருமணத்திற்கு பிறகு அம்மா வேடத்திற்கு வந்துவிட்டார். தமிழில் தனுஷ் நடித்த மாப்பிள்ளை படத்தில் ஹன்சிகாவின் அம்மாவாக நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Actress Manisha Koirala is admitted at the Jaslok hospital in Mumbai on wednesday. It is told that she is doing fine now.

 

நடிகை புவனேஸ்வரிக்கு வலைவீச்சு

Actress Bhuwaneshwari range for the Web தியேட்டரில் ரகளை செய்த நடிகை புவனேஸ்வரியை போலீசார் தேடிவருகின்றனர்.

சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள ஒரு தியேட்டருக்கு நடிகை புவனேஸ்வரி மற்றும் தாமோதரன் ஆகியோர் வந்தனர். கார் பார்க்கிங் பகுதியில் சேலையூரை சேர்ந்த குமாருக்கும் தாமோதரனுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.

இது குறித்து தாமோதரன் தனது நண்பர்களுக்கு தகவல் தெரிவித்தார். உடனே அங்கு வந்த சிலர், குமாரை தாக்கி  தியேட்டரில் ரகளை செய்தனர்.   தகவலறிந்து அங்கு வந்த போலீசார் மீதும் அந்த கும்பல் தாக்குதல் நடத்தியது.  

இது குறித்து வழக்குப்பதிவு செய்த நீலாங்கரை போலீசார், நடிகை புவனேஸ்வரியையும், தாமோதரனையும் தேடிவருகின்றனர்.
 

ஆயிரத்துக்கு காம்பியரிங் செய்தவருக்கு சம்பளம் ஒரு கோடியா

Siva karthikeyan ask one crore salary பீச் படத்தில் அறிமுகமான சிவமான கார்த்தி நடிகர் முழுமையான ஹிட்டை இதுவரை தரவில்லை. தற்போது பீச் பட இயக்குனரின் படத்தில் கேடி பில்லாவாக நடித்து வருகிறார்.

இவரை ஒப்பந்தம் செய்ய வந்த தயாரிப்பாளரிடம் இவர் கேட்ட சம்பளம் ஒரு கோடி. நேற்றுவரை ஆயிரத்துக்கு காம்பியரிங் செய்தவருக்கு சம்பளம் ஒரு கோடியா என்று நெஞ்சைப் பிடித்து சொந்த ஊருக்கு திரும்பியவர்தான், இன்னமும் அதிர்ச்சியிலிருந்து மீளவில்லை என்கிறார்கள்.
 

போராட்டமாக வெடிக்கிறது ஸ்வேதா மேனன் 'லைவ் பிரசவ' விவகாரம்

திருவனந்தபுரம்: ஸ்வேதா மேனன் பிரசவ காட்சி நேரடியாக படமாக்கப்பட்ட விவகாரம் பெரிய சர்ச்சையாக வெடித்துள்ளது. இந்தக் காட்சி இடம்பெறும் படத்துக்கு எதிராக அரசியல் கட்சிகளும், சமூக அமைப்புகளும் போராட்டத்தில் குதித்துள்ளன.

swetha menon s kalimannu trouble

பிளெஸ்ஸி இயக்கும் களிமண்ணு என்ற மலையாளப் படத்துக்காக ஸ்வேதா மேனனின் நிஜ பிரசவ காட்சியை மும்பை மருத்துவமனையில் வைத்து நேரடியாக படமாக்கினர்.

இந்த செய்தி வெளியானதிலிருந்து கேரளாவில் அந்தப் படத்துக்கு எதிர்ப்பு வலுக்கிறது. பிரசவ காட்சியை இணைத்தால் படத்தை புறக்கணிப்போம் என்று மலையாள தியேட்டர் அதிபர்கள் சங்கம் அறிவித்து உள்ளது.

கேரள சபாநாயகர் கார்த்திகேயனும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். 'ஸ்வேதா மேனன் தனது பிரசவத்தை கேமராவில் பதிவு செய்ய அனுமதித்தது கண்டிக்கத்தக்கது. வியாபாரத்துக்காக இப்படி நடந்துள்னர். பண்பாட்டுக்கு விரோதமாக இந்த செயலை அனுமதிக்க கூடாது,' என்று கூறியுள்ளார்.

பாஜக போராட்டம்

இதற்கிடையில் பாரதீய ஜனதா மகளிர் அணியும் படத்துக்கு எதிராக போராட்டத்தில் குதித்துள்ளது. இதுகுறித்து அந்த அணியின் தலைவி ஷோபா சுரேந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், டஸ்வேதா மேனன் படத்தில் பணத்துக்காக தாய்மையை இழிவுபடுத்தி உள்ளனர். இது ஒரு அவமானச் செயல் ஆகும். இந்த படத்தை தடை செய்யும்படி அரசிடம் வற்புறுத்தியுள்ளோம், என்று குறிப்பிட்டுள்ளார்.

ஏற்கெனவே இந்த செயலுக்கு எதிராக இரு பொது நல வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. மனித உரிமை ஆணையத்திலும் புகார் தரப்பட்டுள்ளது.

 

அம்மாவின் கைப்பேசி... ஒலகத் தரம்னா... அது இதாங்க!


Rating:
2.0/5

-எஸ் ஷங்கர்

முதல் படமான அழகியிலிருந்தே அடிக்கடி தங்கர் பச்சான் அரற்றுவது 'ஒலக சினிமா'. வெறும் சினிமாக்காரராக இல்லாமல், கொஞ்சம் எழுதவும், ஏகத்துக்கும் பேசவும் தெரிந்தவர் என்பதால் இந்த அரற்றல் சமயத்தில் ஒப்பாரி ரேஞ்சுக்குப் போய்க் கொண்டிருக்கிறது.

ammavin kaipesi review

ஆனால் தமிழ் சினிமா ரசிகர்களின் போறாத காலம், அந்த ஒலக சினிமா அம்மாவின் கைப்பேசியாக வந்து தொலைத்துவிட்டது.

இனி தமிழ் சினிமா ரசிகர்களுக்காக சினிமா எடுக்க மாட்டேன் என பாஞ்சாலி சபதம் ரேஞ்சுக்கு சபதமெடுத்திருக்கும் பச்சான் வெளியிட்டுள்ள கடைசி தமிழ்ப் படம் என்ற சின்ன ஆறுதலோடு, படத்தின் விமர்சனத்தைப் படியுங்கள்.

பொறுப்பில்லாமல், வெட்டித்தனமாக சுற்றிக் கொண்டிருக்கும் கடைசி மகன் சாந்தனுவை, நாலு காசு சம்பாதித்து ஊரார் மதிக்கும்படி வரவேண்டும் என்று ஒரு நாள் வீட்டைவிட்டே துரத்திவிடுகிறார் அவரது அம்மா. அம்மாவின் ஆசையை சாந்தனு நிறைவேற்றினாரா? என்பது வழக்கம் போல க்ளைமாக்ஸ்.

இடையில் பிரசாத் என்ற பாத்திரத்தில், மீனாளை இறுக்கியணைச்சு உம்மா கொடுத்து பிழிந்தெடுக்கும் தங்கர் பச்சான் லூட்டிகளுக்கு தனி கட்டுரை தயார் பண்ண வேண்டும்.

படத்தின் ப்ளஸ் என்று எதையாவது சொல்ல ஆசைதான். ஆனால் தங்கரின் இந்த உலக கைப்பேசியில், அப்படி உருப்படியாக ஒரு காட்சியும் இல்லை. எதற்கெடுத்தாலும் கிராமத்தைக் காட்டுவதாகக் கூறி ஆடு, கோழி, கீரிப்பிள்ளை என கேமிராவில் சிக்கியதையெல்லாம் காட்சியாகத் திணித்து கடுப்பேற்றியிருக்கிறார் மனிதர்.

இங்கிருப்பவர்களுக்கு இசையே தெரியவில்லை என்று கூறி மும்பையிலிருந்து தங்கர் பிடித்து வந்திருக்கும் குல்கர்னியின் பாடல்களைக் கேட்டு, வயிறு அப்செட்டாகி பின் வாசல் வழியாக ஓடுகிறார்கள், படத்துக்கு வரும் பத்துப் பதினைந்து பேரும்!

என்னது... சாந்தனு நடிப்பு பத்தி கேக்கறீங்களா...? பாவம்... அவர் என்ன வச்சிக்கிட்டா வஞ்சனை பண்றார்...!!

நல்லா நடிக்கத் தெரிஞ்ச பொண்ணு இந்த இனியா... அவரையும் லிப் டு லிப்புக்கு மட்டும் ஊறுகாயா உபயோகப்படுத்தி ஓரமா உட்கார வச்சிடறார் தங்கர்.

தங்கர் பச்சானின் தகர டப்பா பாத்திரம் மட்டும் இல்லாமலிருந்தால் கூட இந்தப் படத்தை கொஞ்சம் சகித்திருக்கலாமோ என்னமோ...

அம்மாவின் கைப்பேசிகள்தான் துப்பாக்கிகளை வாழ வைத்துக் கொண்டிருக்கின்றன.. நியாயமாக விஜய், முருகதாஸ்கள் தங்கருக்கு நன்றி சொல்ல வேண்டும்!

 

பரதேசிக்கு 5 லட்சம் ஹிட்ஸ்!

இப்போதெல்லாம் ஒரு படம் ஹிட்டாகிறதோ இல்லையோ... அந்தப் படத்தின் ட்ரைலர் அல்லது சிங்கிள் பாட்டு யுட்யூபில் ஹிட்டானே பெரிய வெற்றியாகக் கொண்டாடும் போக்கு பிரபலமாகிவிட்டது.

பாலாவின் படம் கூட இதற்குத் தப்பவில்லை. பரதேசி படத்தின் ட்ரைலர் பெரும் வெற்றியடைந்துவிட்டதாக பப்ளிசிட்டி செய்ய வேண்டிய நிலை.

paradesi trailer hit   
அதர்வா, தன்ஷிகா, வேதிகா நடித்துள்ள இந்தப் படத்தின் டிரைலர் யு ட்யூபில் வெளியான 3 நாட்களிலேயே 5 லட்சம் பேர் பார்த்துவிட்டார்களாம். இது படத்தின் பெரிய வெற்றிக்கு முன்னோட்டம் என்று பாலா தரப்பு உற்சாகமடைந்துள்ளது.

ஒரு நூற்றாண்டுக்கு முந்தைய தேயிலைத் தோட்ட தொழிலாளர்களின் அவல வாழ்க்கையைச் சொல்லும் படமான பரதேசிக்கு ஆரம்பத்திலிருந்தே நல்ல எதிர்ப்பார்ப்பு உருவாகியிருந்தது.

ட்ரைலர் பார்த்தபோது அந்த எதிர்ப்பார்ப்பு இன்னொரு மடங்கு அதிகரித்தாலும், ஜிவி பிரகாஷின் பாடல்களும் ட்ரைலருக்கான இசையும் பெரிய ஏமாற்றத்தைத் தந்திருப்பதையும் சொல்லித்தான் ஆக வேண்டும்!

 

என்னால எல்லாம் ரஜினி மாதிரி முடியாது: தனுஷ்

I Can T Do Like Rajinikanth Dhanus   

சென்னை: எந்திரன் கதாபாத்திரம் போல் கிடைத்தால் நடிப்பீர்களா என்று தனுஷிடம் கேட்டதற்கு அது ரஜினிகாந்தால் மட்டும் தான் முடியும் என்றார்.

எந்திரன் படத்தில் சூப்பர் ஸ்டார் விஞ்ஞானியாகவும், ரோபோவாகவும் வந்து கலக்கியிருந்தார். ரோபோவான எந்திரன் ஐஸ்வர்யா மீது காதல் கொள்ளும் காட்சிகள் அனைவரையும் கவர்ந்தன. இந்நிலையில் எந்திரன் கதாபாத்திரம் போல் அமைந்தால் அதில் நடிப்பீர்களா என்று ரஜினிகாந்தின் மருமகனான தனுஷிடம் கேட்டதற்கு அவர் கூறுகையில்,

எந்திரன் போன்ற கதாபாத்திரம் எல்லாம் சூப்பர் ஸ்டாராக இருப்பவர்களால் தான் முடியும். ரஜினி தான் அந்த கதாபாத்திரத்திற்கு பொருத்தமானவர். அது போன்ற கதாபாத்திரத்தில் என்னால் நடிக்க முடியும் என்று எனக்கு தோன்றவில்லை என்றார்.

ஆடுகளம் படத்திற்காக தேசிய விருது பெற்ற தனுஷ் தற்போது மாரியான் மற்றும் ராஜ்னாஹா ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

 

லட்சுமிராய் வாய்ப்பு மாடல் அழகிக்கு கைமாறியது

Lakshmi opportunity to model change லட்சுமிராய் நடிப்பதாக இருந்த வாய்ப்பு பெங்களூர் மாடல் அழகி பார்வதிக்கு கைமாறியது. சமுத்திரகனி இயக்கும் படம் 'நிமிர்ந்து நில். ஜெயம் ரவி ஹீரோ. இதே படம் தெலுங்கில் நானி நடிக்க உருவாகிறது. இதில் கவுரவ வேடம் ஒன்றில் நடிக்க லட்சுமிராய்க்கு வாய்ப்பு சென்றது. அந்த வாய்ப்பு தற்போது பெங்களூர் மாடல் அழகி பார்வதி நாயருக்கு கைமாறியது. இது பற்றி பார்வதி கூறும்போது, 'ஹீரோவின் காதலியாக நடிக்கிறேன்.

எனக்கு மிகவும் பிடித்த வேடம் மட்டுமல்ல. எனக்கு பெருமையை தரக்கூடிய படமாக கருதுகிறேன். இதற்கிடையில் கன்னடத்தில் 'பரபிரம்ஹா என்ற படத்தில் நடிக்கிறேன். 2012ம் ஆண்டு எனக்கு நல்லவிதமாக அமைந்தது. டிசம்பர் மாதம் நான் நடித்த 2 மலையாள படங்கள் ரிலீஸ் ஆகிறது. இதுதவிர சில கன்னட படங்களிலும் நடித்து வருகிறேன். விரைவில் தமிழ், இந்தியில் தயாராகும் படத்தில் நடிக்க உள்ளேன். இதற்குமேல் வேறென்ன எனக்கு வேண்டும் என்றார்.
 

கமலுடன் மீண்டும் சேருவேனா? : சரிகா பரபரப்பு பேட்டி

Again join with Kamal? : Sarika interview கமலுடன் மீண்டும் சேர்ந்து வாழ்வது தொடர்பாக பதில் கூறினார் சரிகா. கமல்ஹாசன் மனைவி சரிகா. அவரைவிட்டு பிரிந்து மும்பையில் வாழ்கிறார். அவர் கூறியதாவது: 'கமலை விட்டு பிரிந்தபிறகு வாழ்க்கை எப்படி இருக்கிறது? என்கிறார்கள். என்னுடைய வாழ்க்கையையும், வாழ்வாதாரத்தையும் நான் நன்கு அமைத்துக்கொண்டிருக்கிறேன். என்னிடமிருந்து என் கவுரவத்தை யாரும் பறிக்க முடியாது. 'மகள்கள் ஸ்ருதி, அக்ஷராவிடம் சினிமா பற்றி பேசுவீர்களா? என்கின்றனர். சினிமாவை யார் விரும்புகிறார்களோ அவர்கள் எல்லோரிடமும் அதுபற்றி பேசுவேன். மகள்களை பொறுத்தவரை ஸ்ருதி இசையில் ஆர்வம் கொண்டவர், அக்ஷரா மேற்கத்திய நடனம் கற்றவர்.

இருவருமே நடிகையாகலாம். ஆனால் அவர்கள் தங்களுக்கான இடத்தை பெற்றிருக்கிறார்கள். பெற்றோர்களுடன் பிள்ளைகளை ஒப்பிட கூடாது. அவர்கள் தங்களுக்கான அடையாளத்தை ஏற்கனவே பெற்றிருக்கிறார்கள். தற்போது நாங்கள் பேசி ஒரு முடிவு எடுத்திருக்கிறோம். தக்க இடத்தை பெறும் வரையில் மகள்களை விட்டு தள்ளியே இருப்பதுதான் அது. அவர்கள் என் மகள்கள். அவர்கள் எங்கும் போய்விடப்போவதில்லை, நானும் எங்கும் போய்விடப்போவதில்லை. மீண்டும் அவர்களின் கரத்தை எப்போது வேண்டுமானாலும் பிடித்துக்கொள்வேன். அவர்கள் சுதந்திரத்தில் நான் குறுக்கிடமாட்டேன். அதனால்தான் என் பேட்டிகளில் அவர்களைப்பற்றி விவாதிப்பதில்லை.

அவர்களின் காதல் விவகாரங்களிலும் நான் தலையிடுவதில்லை. அது அவர்களின் சொந்த வாழ்க்கை. 'குழந்தைகளுக்காக கமலுடன் மீண்டும் வாழ்க்கையில் இணைவீர்களா? என்கின்றனர். அப்படியொரு விஷயம் நடக்க முடியாதபோது அது பற்றி ஏன் பேச வேண்டும்? யாரிடமும் நான் பேச தயாராக இல்லை. எனக்கும் என் மகள்களுக்கும் இடையில் என் வாழ்க்கையை போதுமான வகையில் அமைத்துக்கொண்டிருக்கிறேன். அதுபோதும். வாழ்க்கை என்பது இரண்டு வகை. ஒன்று எதில் தள்ளப்பட்டோமோ அதிலிருந்து விடுபடாமல் வாழ்வது. மற்றொன்று தினம் தினம் வாழ்க்கையை ரசித்து சந்தோஷமாக இருப்பது. இரண்டாவதை நான் தேர்வு செய்துகொண்டேன்.
 

ஜாக்கிசான் இந்தியா வருகை திடீர் ரத்து

Jackie cancels India visit ஜாக்கிசான் நடிக்கும் கடைசி ஆக்ஷன் படத்தின் ரிலீஸ் திடீரென்று தள்ளிவைக்கப்பட்டது. 100 படங்களில் நடித்திருக்கும் ஜாக்கிசான் 101 வது படமாக 'சைனீஸ் சோடியாக் 12 (சிஇசட் 12) என்ற படத்தில் நடித்திருக்கிறார். ஏற்கனவே அவர் நடித்து வெளியான 'ஆர்மர் ஆப் காட் படத்தின் 3ம் பாகமாக இது உருவாகி இருக்கிறது. உலகிலேயே வேறு எங்கும் கிடைக்காத 3 அபூர்வ பொருட்களை கொள்ளையடிக்க முயல்கிறார் ஜாக்கிசான். அவரை அதிரடிப்படை துரத்துகிறது. இதன் முடிவு என்ன என்பதுதான் கதை. இதுவரை எடுக்கப்பட்ட ஜாக்கி சான் படங்களிலே அதிக பொருட் செலவில் எடுக்கப்பட்ட படம் இதுதான்.

ஆஸ்திரேலியா, தாய்லாந்து உள்ளிட்ட 10 நாடுகளில் ஷூட்டிங் நடந்துள்ளது. இப்படத்தின் டிரைலர் வெளியிடப்பட்டது. டிசம்பர் 12ம் தேதி இப்படம் ரிலீஸ் ஆவதாக இருந்தது. தற்போது அது 20ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் புரமோஷனுக்காக பல்வேறு நாடுகளுக்கு ஜாக்கி சான் செல்கிறார். இந்தியா வருவதாக இருந்த திட்டத்தை பாதுகாப்பு காரணங்களால் ரத்து செய்துவிட்டார். இப்படத்தின் டிரைலர் வெளியிடப்பட்டது. மேலும் படத்தை பற்றிய புரமோஷனுக்காக ஜாக்கிசான் பாடிய பாடல் ஒன்றும் படமாக்கப்பட்டுள்ளது. இத்தகவலை இந்தியாவில் படத்தை வெளியிடும் இந்தோ ஓவர்சீஸ் பிலிம்ஸ் நிறுவனத்தை சேர்ந்த பெரோஸ் இலியாஸ் தெரிவித்தார்.
 

கிசு கிசு - தலை காட்டும் டைரக்டரு

Kodambakkam kodangi நல்ல காலம் பொறக்குது... நல்ல காலம் பொறக்குது....

சில நாளுக்கு முன்னாடி முக்தா தயாரிப்பு மேல வேல்டு ஹீரோ புகார் சொன்னாரு. அதே மாதிரி கோவையான யங்பிரதர் தயாரிப்பு மேல மணியான இயக்கம் புகார் சொல்லியிருக்காரு... சொல்லியிருக்காரு... ஹார்ட் கோயில் பட கதையை அந்த தயாரிப்பு கொடுத்தாரு. அதை ஏன்தான் இயக்கினேனோ. மகா மட்டமான கதைன்னு இத்தனை வருஷம் கழிச்சி சொல்லியிருக்காராம். பதிலுக்கு தயாரிப்பு, இயக்கத்துக்கு ஷாட் வைக்கிற டெக்னிக் கூட தெரியாது. கேமராமேன்தான் எல்லாம் பண்ணுவாங்கன்னு பதிலடி கொடுத்திருக்காராம். இந்த திடீர் சண்டைகளால கோலிவுட்காரங்க தலையில அடிச்சிக்கிறாங்களாம்... அடிச்சிக்கிறாங்களாம்...

படத்துல நடிச்சி இயக்குற கவுதமனான இயக்கம் அணை பட பிரச்னை நடந்தப்போ ஆர்ப்பாட்டம் பண்ண¤னாரு. சமீபத்துல ஒரு பங்ஷன்ல பேசறப்ப கலாச்சாரத்தை அழிக்க¤ற எந்த படமா இருந்தாலும் அதை தடுக்க வேண்டியது நம்ம டூட்டின்னு பேசினாராம்... பேசினாராம்... இதை கேட்டு மேடைலயிருந்த விஐபிங்க ஷாக் ஆயிட்டாங்களாம். இவர் வேற மொழி படத்த சொல்றாரா? இல்ல கோலிவுட் படங்களையே அட்டாக் பண்றாரான்னு ஒருத்தர ஒருத்தரு கேட்டுக்கிட்டாங்களாம். எதைபத்தியும் கவலப்படாத இயக்கம், தன்னோட பேச்சை மறுபடியும் வலியுறுத்தி பேசினாராம்... பேசினாராம்...

ஏழு வருஷமா படம் இயக்கமா இருந்த ராஜகுமார இயக்கம் அவரே நடிச்சி ஒரு படத்தை இயக்கி இருக்காராம்... இருக்காராம்... படத்த முடிச்சிட்டு இசைய வெளியிடுறதுக்கான ஏற்பாடு செய்யறதால கோலிவுட் பக்கம் தல காட்டமா இருந்தவரு, இப்ப தலை காட்ட ஆரம்பிச்சிருக்காராம். பைனான்ஸ் பிரச்னை முடிவுக்கு வந்ததாலதான் இயக்கம் தலை காட்டுறாராம்... தலை காட்டுறாராம்...
 

கேரம் கதையில் காதல்

சென்னை : சுண்டாட்டம், கேரம் விளையாட்டின் கதையாக இருந்தாலும் காதலுக்கும் முக்கியத்துவம் இருக்கிறது என்று அருந்ததி கூறினார். இதுபற்றி அவர் மேலும் கூறியதாவது: இது 1980,ல் வட சென்னையில் நடக்கும் கதை. கேரம் விளையாட்டை மையமாகக் கொண்ட படம் என்றாலும் இதில் காதலுக்கும் முக்கியத்துவம் இருக்கிறது. கதைப்படி ஹீரோ இர்பானின் தங்கையுடன் நான் படிப்பேன்.

தோழி வீட்டுக்கு அடிக்கடி செல்லும்போது எங்களுக்குள் காதல் ஏற்படுகிறது. வீட்டில் எதிர்ப்பு வருகிறது. இதைதாண்டி எங்கள் காதல் எப்படி ஜெயிக்கிறது என்பது போல கதை செல்லும். இயக்குனர் பிரம்மா.ஜி வித்தியாசமாக படத்தை இயக்கி உள்ளார். இந்தப் படம் எனக்கு திருப்புமுனையாக இருக்கும். இவ்வாறு அருந்ததி கூறினார்.

 

சென்னையில் கூத்து திருவிழா

சென்னை : டிசம்பர் 1,ம் தேதி முதல் 5,ம் தேதி வரை சென்னையில் கூத்து திருவிழா நடக்கிறது. புதுடெல்லியில் உள்ள தேசிய நாடகப்பள்ளியின் சார்பில் 'தெருக்கூத்து பயிலரங்கம்' நடந்து வருகிறது. நாற்பது நாட்கள் நடக்கும் இவ்விழாவின் ஒரு பகுதியாக சென்னையில் கூத்து திருவிழா நடக்கிறது. தேசிய நாடகப்பள்ளியும் சென்னை அருங்காட்சியகமும் இணைந்து இத்திருவிழாவை டிசம்பர் 1,ம் தேதி முதல் 5,ம் தேதிவரை நடத்துகிறது. சென்னை மியூசியம் வளாகத்தில் தினமும் மாலை 6.30 மணிக்கு நடக்கும் இத்திருவிழாவில், 'இந்திரஜித்', 'அரவான் களப்பலி', 'அர்ஜுனன் தபசு', 'திரவுபதி வஸ்திராபரணம்', 'ராமராவணா' ஆகிய கூத்துகள் நடத்தப்படுகின்றன.
 

ஹீரோவிடம் இயக்குனர் சொன்ன ரகசியம்

சென்னை : 'நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்' படத்தின் இயக்குனர் பாலாஜி தரணீதரன் கூறியதாவது: 'தென்மேற்குப் பருவக்காற்று' ஷூட்டிங் நடக்கும்போதே விஜய் சேதுபதியை ஹீரோவாக ஒப்பந்தம் செய்தேன். முதலில் அவரை தேர்வு செய்ய தயங்கினேன். பிறகு கதை சொன்னேன். அதில் சஸ்பென்ஸ் பகுதியையும் சொன்னேன். பிறகு மனம் அமைதியில்லாமல் தவித்தேன். இவர் வேறு யாரிடமாவது இதன் கதையையோ, சஸ்பென்ஸ் பற்றியோ சொல்லிவிட்டால், ரகசியம் வெளிப்பட்டு விடுமே என்று பயந்தேன். நல்லவேளை, விஜய் சேதுபதி யாரிடமும் சொல்லவில்லை. பிறகு நடிகர்களுக்கு அலுவலகத்திலேயே ஒரு மாதம் பயிற்சி நடத்தப்பட்டது.

இதனால், ஷூட்டிங்கில் எந்தவிதமான டென்ஷனும் இல்லாமல் பணியாற்ற முடிந்தது. விஜய் சேதுபதி, காயத்ரி ஆகியோரை தவிர அனைவரும் புதுமுகங்கள். இயல்பான நடிப்பு மூலம் ரசிகர்களை கட்டிப் போடுவார்கள் என்று நம்புகிறேன். படம் நாளை ரிலீஸ் ஆகிறது. நல்ல வரவேற்பு இருக்கும் என நினைக்கிறேன்.
 

தேவசகாயம் பிள்ளை வரலாறு படமாகிறது

சென்னை : மறைசாட்சி தேவசகாயம் பிள்ளையின் வாழ்க்கை வரலாறு, 'அருளாளர்' பெயரில் படமாகிறது. ரெயின்போ மூவிஸ் சார்பில் கே.புவனேஸ்வரி தயாரிக்கிறார். மதுமாறன் என்பவர் தேவசகாயம் பிள்ளை வேடத்தில் நடிக்கிறார். ஒளிப்பதிவு, வெங்கடேஷ். இசை, எம்.எஸ்.விஸ்வநாதன். பாடல்கள், முத்துலிங்கம். திரைக்கதை, வசனம் எழுதி கே.பி.மனோகரன் இயக்குகிறார். கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி, தக்கலை, முட்டம், பத்மநாபபுரம் அரண்மனை, உதயகிரி கோட்டை பகுதிகளில் படப்பிடிப்பு நடக்கிறது.
 

நண்பர்கள் கவனத்திற்கு பாடல் வெளியீடு

சென்னை : கிரீன் சேனல் நிறுவனம் சார்பில் வி.சகாதேவன், சுப்ராயன் தயாரிக்கும் படம் 'நண்பர்கள் கவனத்திற்கு'. சஞ்சய், வர்ஷன், மனிஷா ஜித், டாக்டர் சூரி நடிக்கிறார்கள். கே.ஜெயகுமார் இயக்குகிறார். பிரம்மா இசை. இதன் பாடல் வெளியீட்டு விழா நேற்று நடந்தது. தயாரிப்பாளர் சங்க செயலாளர் பி.எல்.தேனப்பன் வெளியிட, இயக்குனர் ஆர்.வி.உதயகுமார் பெற்றார். விழாவில் இயக்குனர்கள் சந்தானபாரதி, பாலசேகரன், பேரரசு, வி.பிரபாகர், பன்னீர் செல்வம் உட்பட பலர் கலந்து கொண்டனர். படம் பற்றி இயக்குனர் கே.ஜெயகுமார் கூறியதாவது:

நண்பர்களுக்குள் படிப்பு எத்தகைய பாதிப்பை உண்டாக்குகிறது என்பதுதான் கதை. இரண்டு ஹீரோக்களில் ஒருவர் படித்தவர், இன்னொருவர் படிக்காதவர். இருவரும் ஒரே பெண்ணை காதலிக்கிறார்கள். அந்த பெண் யாரை தேர்வு செய்கிறார்? ஏன்? என்பதுதான் கதை. இன்றைய இளைஞர்களுக்கு படிப்பு எவ்வளவு முக்கியம் என்பதையும், நண்பர்களை தேர்ந்தெடுப்பதில் எவ்வளவு கவனம் செலுத்த வேண்டும் என்பதையும் சொல்லியிருக்கிறோம்.
 

சட்டம் ஒரு இருட்டறை விளம்பரத்துக்கு சுற்றுப்பயணம்

சென்னை : தமன், ரீமாசென், பியா, பிந்து மாதவி நடிக்கும் படம், 'சட்டம் ஒரு இருட்டறை'.  இதன் டிரைலர் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. பின்னர் நிருபர்களிடம் இயக்குனர் சினேஹா பிரிட்டோ கூறியதாவது: பழைய படத்தில் இருந்து கருவை மட்டும் எடுத்துக்கொண்டு, இன்றைய டிரெண்டுக்கு ஏற்ப மாற்றங்கள் செய்துள்ளோம். ராஜ்குமாரின் ஒளிப்பதிவும், விஜய் ஆண்டனியின் இசையும் படத்துக்கு பலமாக இருக்கும். ரீமாசென் போலீஸ் அதிகாரியாக வருகிறார். தமன், பியா, பிந்து மாதவிக்கான காட்சிகளில் இளமையும், காதலும் துள்ளும். ஈரோடு மகேஷ் காமெடி வேடத்தில் அறிமுகமாகிறார்.

 ரீமாசென் பங்கேற்ற சேஸிங் காட்சியை அதிக சிரமத்துக்கிடையே படமாக்கினோம். டைரக்ஷன் என்பது சாதாரண விஷயம் இல்லை என்பதை புரிந்துகொண்டேன். முதலில் இப்படத்துக்கு 'தோழன்' என்று பெயரிட்டோம். அந்த காலகட்டத்தில் சாதனை படைத்த 'சட்டம் ஒரு இருட்டறை' பெயரே சிறப்பாக இருந்ததால், அதையே வைத்துவிட்டோம். படத்தை விளம்பரப்படுத்த திருச்சி, சேலம், மதுரை, கோவை, வேலூர் உட்பட தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்ய திட்டமிட்டுள்ளோம். இவ்வாறு சினேஹா பிரிட்டோ கூறினார்.

 

நீர்ப்பறவையில் டப்பிங் பேசாதது ஏன்?

சென்னை : நாளை ரிலீஸ் ஆகிறது 'நீர்ப்பறவை'. இதில் நாயகியாக நடித்திருக்கும் சுனேனா, கூறியதாவது: ஒரு நடிகைக்கு எப்போதாவதுதான் வாழ்நாள் கேரக்டர் கிடைக்கும். நீர்ப்பறவை படத்தில் எனக்கு கிடைத்திருக்கிறது. படப்பிடிப்புக்கு முன்பே இயக்குனர், 'பல நாள் வெயிலில் கஷ்டப்பட வேண்டியது இருக்கும். மேக்,அப் இருக்காது, கடலுக்குள் படப்பிடிப்பு இருக்கும்' என்றெல்லாம் சொன்னார்.  ஒப்புக் கொண்டு நடித்தேன்.

ஆனால் கேரக்டராக மாறியபின் அந்த கஷ்டம் தெரியவில்லை. நான் நடித்த மற்ற படங்களில் நிறைய வசனம் பேசுவேன். இதில் குறைவு. சர்ச்சோடு தொடர்புடைய அமைதியான பெண். அதனால் கண்களாலும், முகபாவனையாலும் பேச வேண்டியதை உணர்த்த வேண்டும். ஆரம்பத்தில் தடுமாறினேன். பிறகு இயக்குனர் கொடுத்த பயிற்சியால் பழகிவிட்டேன். கமர்சியல் படங்களிலும் நடித்திருக்கிறேன். ஆனால் இதுபோன்ற படத்தில் நடிக்கும்போது மனதுக்கு திருப்தியாக இருக்கிறது. நான் டப்பிங் பேசினால் தேசிய விருது கிடைக்க வாய்ப்பிருப்பதாகச் சொன்னார்கள். ஆனால் ஒரு காரணத்துக்காக நான் டப்பிங் பேசவில்லை. அது என்ன என்பதை படம் பார்க்கும்போது உணர்வீர்கள்.
 

எழுத்தாளனின் வாழ்க்கை

சென்னை : கருணாஸ், ஹரீஷ் கல்யாண், ஸ்வேதா பாசு, இளவரசு உட்பட பலர் நடிக்கும் படம் 'சந்தமாமா'. இதை இயக்கும் ஆர்.ராதாகிருஷ்ணன் கூறியதாவது:
கருணாஸ் எழுத்தாளர். ஹரீஷ் கல்யாண் பாடகர். சேல்ஸ் கேர்ள் ஸ்வேதா பாசு. இவர்கள் மூவரைச் சுற்றி பின்னப்பட்ட கதை. ஒரு எழுத்தாளனின் வாழ்க்கைப் பயணத்தில் நடந்த சம்பவங்களை மையப்படுத்தி படம் உருவாகியுள்ளது. இதற்காக பல எழுத்தாளர்களை சந்தித்தேன். அவர்கள் சந்தித்த பிரச்னைகளை சொன்னார்கள். அதிலிருந்து தேவையான விஷயத்தை எடுத்துக்கொண்டேன். இதில் மீரா ஜாஸ்மின் நடிப்பதாக இருந்தது. கால்ஷீட் பிரச்னையால் ஸ்வேதாவை ஒப்பந்தம் செய்தோம்.


 

நான்தான் சிறந்த நடிகர்

சென்னை : 'பரதேசி' படம் பற்றி நிருபர்களுக்கு பாலா அளித்த பேட்டி: 'பரதேசி' 1930,களில் நடந்த தேயிலைத் தோட்ட தொழிலாளர்களின் கதை. பிழைப்பு தேடி உள்நாட்டுக்குள்ளேயே அகதிகளாகவும், கொத்தடிமைகளாகவும் சென்ற மக்களின் கதை. நாவலைத் தழுவி எடுக்கப்படும் படம். நாமே கதை உருவாக்கி எடுப்பதை விட, நாவல்களை படமாக்குவது எளிதானது. படத்தின் ஹீரோவாக அதர்வாவை தேர்வு செய்ததற்கு காரணம்,

அவரது தோற்றம் கதைக்கு பொருத்தமாக இருந்ததோடு முரளியின் மகனுக்கு நான் செய்ய வேண்டிய கடமையாகவும் இருந்தது. என் படங்களில் நடிக்க ஹீரோக்கள் தயங்குவது தெரியும். வித்தியாசமான ஹேர்ஸ்டைல் வைத்து அழுக்கு மனிதனாக காட்டுவேன் என்பதால் பயப்படக்கூடும். என் படத்தில் நடித்த ஹீரோக்களில் யார் நல்ல நடிகர் என்று கேட்டால் எல்லோரையும் விட, நான்தான் நல்ல நடிகர். உங்கள் முன் நல்லவனாக நடித்துக் கொண்டிருப்பதால். இவ்வாறு பாலா கூறினார்.
 

வில்லனாக நடிப்பது எளிது

சென்னை : டாக்டர் வி.ராம் புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் படம், 'ஹரிதாஸ்'. கிஷோர், சினேகா, மாஸ்டர் பிருத்விராஜ்தாஸ் நடிக்கிறார்கள். ஜி.என்ஆர்.குமரவேலன் இயக்குகிறார். விஜய் ஆண்டனி இசை. ரத்னவேலு ஒளிப்பதிவு. படத்தில் நடித்தது பற்றி கிஷோர் நிருபர்களிடம் கூறியதாவது: தமிழில் வில்லனாகவும், குணசித்திர வேடங்களிலும் நிறைய நடித்திருக்கிறேன். இந்தப் படத்தில்தான் எமோஷனலான கதையின் நாயகனாக நடித்திருக்கிறேன். நான் பெரிய நட்சத்திரம் இல்லை. இன்னும் சொல்லப்போனால் நல்ல நடிகர்கூட இல்லை. என்னைப் போன்றவர்களை ஹீரோவாக வைத்து படம் எடுக்கும்போது தொழில்நுட்ப குழு பலமாக இருக்க வேண்டும்.

இந்தப் படத்தை பொறுத்தவரை நான் பெரிய ஆள் கிடையாது. படத்தின் இயக்குனர் குமரவேலன், ஒளிபதிவாளர் ரத்னவேலு, இசை அமைப்பாளர் விஜய் ஆண்டனி, எடிட்டர் ராஜாமுகமது என இவர்கள்தான் இந்தப் படத்தை உருவாக்குகிறார்கள். நான் இயக்குனர் சொன்னதை செய்தேன். 'நடிக்கும்போது அழுதுவிட்டேன்' என்று சிலர் சொல்வதை கேட்டு கேலி செய்திருக்கிறேன். ஆனால் இந்தப் படத்தில் நடித்தபோது பல காட்சிகளில் அழுதேன். அப்போதுதான் நான் இன்னும் நடிப்பில் பாஸாகவில்லை என்று தெரிந்தது. முறைப்போடு வில்லனாக நடித்து விடலாம். அது எளிது. சென்டிமென்டாக நடிப்பது கஷ்டம் என்பதை உணர்ந்திருக்கிறேன்.
 

காமெடியன்கள் கருத்து சொல்லக்கூடாது: சிட்டிபாபு

சென்னை : காமெடியன்கள் கருத்துசொன்னால் அதுவும் காமெடியாகிவிடும் என்று சிட்டிபாபு கூறினார். அவர் நிருபர்களிடம் கூறியதாவது: சன் டிவியால் உருவாக்கப்பட்டு 'தூள்' படம் மூலம் வளர்ந்தவன். தற்போது மாசானி, மதனகாமராஜா, 'தீயா வேலை செய்யணும் குமாரு' படங்களில் நடித்து வருகிறேன். சின்னத்திரையில் பிசியாக இருந்ததால் அதிக படங்களில் நடிக்கவில்லை. இப்போது முழுக் கவனத்தையும் சினிமாவில் செலுத்தி வருகிறேன்.

நான் இந்த கேரக்டருக்கு பொருத்தமானவன் என்ற நம்பி வருகிறவர்கள் படத்தில் நடிக்கிறேன். எனக்கென்று தனி பாணியை உருவாக்கி இயக்குனரின் நடிகராக நடித்து வருகிறேன். சில படங்களில் என்னை ஏதாவது கருத்து சொல்லுங்கள் என்பார்கள். காமெடியன்கள் கருத்து சொன்னால் அந்த கருத்தும் காமெடியாகி விடும் என்பது என் கருத்து. நமது வேலை சிரிக்க வைப்பது மட்டும்தான். தொடர்ந்து காமெடி கேரக்டர்களில் நடித்து மக்கள் மனதில் நிலையான இடத்தை பிடிக்க வேண்டும் என்பது ஆசை.