பாயும் புலி இசை வெளியீடு.. கலந்து கொண்டவர்களுக்கு "அக்னி சிறகுகள் புத்தகம்"

சென்னை: விஷால் - காஜல் அகர்வால் நடிப்பில் சுசீந்திரன் உருவாக்கி இருக்கும் பாயும் புலி திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா, இன்று காலை சென்னை சத்யம் திரை அரங்கத்தில் நடைபெற்றது.

இந்த விழாவில் கவிஞர் வைரமுத்து, மனோபாலா, தயாரிப்பாளர் பாரிவேந்தர், இசையமைப்பாளர் இமான் மற்றும் ஒளிப்பதிவாளர் வேல்ராஜ் போன்ற உள்ளிட்ட திரைப்படக் குழுவினர் அனைவரும் கலந்து கொண்டனர்.

Paayum Puli Audio Launch

இசை வெளியீட்டு விழாவில் மறைந்த மக்களின் ஜனாதிபதி அப்துல்கலாமிற்கு மரியாதை செய்யப்பட்டது, அவரின் திரு உருவப் படத்தை பாயும் புலியின் தயாரிப்பாளர் பாரிவேந்தர் திறந்து வைத்தார்.

இசை வெளியீட்டில் கலந்து கொண்ட அனைவருக்கும் மக்களின் ஜனாதிபதி அப்துல்கலாம் அவர்கள் எழுதிய அக்னி சிறகுகள் புத்தகம் வழங்கப்பட்டது, மேலும் படத்திற்கு ஒதுக்கப்பட்ட தொகையில் மிச்சமான பணத்தை 2 பெண்களின் கல்வி உதவித்தொகையாக வழங்கினர்.

இந்த உதவியை நடிகர் விஷாலும், தயாரிப்பாளர் பாரிவேந்தரும் இணைந்து வழங்கியுள்ளனர்.

நல்ல விஷயம் பாயும் புலிக்கு வாழ்த்துக்கள்...

 

படுத்துக் கிடக்கும் மார்க்கெட்டை தூக்கி நிறுத்த விரும்பும் நயன்தாரா... டோலிவுட்டில்

சென்னை: டோலிவுட்டில் மீண்டும் முன்னணி நடிகையாக வேண்டும் என்று விரும்புகிறாராம் நயன்தாரா.

கோலிவுட்டின் முன்னணி நடிகையாக உள்ளவர் நயன்தாரா. தெலுங்கு திரை உலகிலும் ஒரு காலத்தில் நயன்தாரா முன்னணி நடிகையாக இருந்தார். ஆனால் தற்போது டோலிவுட்டில் அவரது மார்க்கெட் நிலைமை சரியில்லை.

Nayanthara tries to revive her career in Tollywood

தெலுங்கு படங்களில் நடிக்க அவருக்கு வாய்ப்புகள் கிடைக்க மாட்டேன் என்கிறது. இந்நிலையில் அவர் வெங்கடேஷ் ஜோடியாக நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார். கிராந்தி மாதவ் இயக்கும் இந்த படம் காதலை அடிப்படையாகக் கொண்டது.

இந்த படம் தெலுங்கில் படுத்துக் கிடக்கும் தனது மார்க்கெட் தூக்கி நிறுத்தும் என்று நம்புகிறார் நயன்தாரா. இந்த படம் கைகொடுத்தால் கோலிவுட்டை போன்றே டோலிவுட்டிலும் ராணியாக வலம் வர விரும்புகிறார் அவர்.

நயன்தாரா 4 தமிழ் படங்களில் நடித்து முடித்துள்ளார், இரண்டு படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

 

பாகுபலி 2 ம் பாகத்தின் தலைப்பு மஹாபலி?

ஹைதராபாத்: கடந்த ஜூலை மாதம் 10 ம் தேதி வெளியாகி உலகமெங்கும் ஹாலிவுட் படங்களுக்கு நிகரான புகழையும், வசூலையும் ஒருசேரக் குவித்து வரும் திரைப்படம் பாகுபலி.

இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமௌலியின் இயக்கத்தில் தென்னிந்திய நட்சத்திரங்கள் நடித்து வெளியான இந்தப்படம் இன்றுவரை வசூலில் சக்கைப் போடு போட்டு வருகின்றது. இதுவரை சுமார் 450 கோடியை வசூலித்திருக்கும் இத்திரைப்படம் விரைவில் 500 கோடியைத் தொடவுள்ளது.

Baahubali 2: Title Changed Mahapali?

பாகுபலி படத்தின் 2ம் பாகம் விரைவில் எடுக்கப்பட உள்ளது 40% படப்பிடிப்புகள், ஏற்கனவே முடிந்து விட்ட நிலையில் மீதமுள்ள 60% படப்பிடிப்புகள் விரைவில் தொடங்கப் படவுள்ளன.

பாகுபலியின் முதல் பாகத்தில் ஒரு ட்விஸ்ட்டுடன் படத்தை முடித்திருந்தார் ராஜமௌலி, அதனால் 2 ம் பாகத்திற்கு ரசிகர்களிடம் அபரிமிதமான எதிர்பார்ப்பும், வரவேற்பும் இருக்கிறது.

எனவே 2 ம் பாகத்தை இன்னும் பிரமாண்டமாக புதிய லொகேஷன்களில் எடுக்க முடிவு செய்திருக்கிறார் இயக்குநர், இதற்காக வட இந்தியாவின் சில இடங்களுக்கும் விசிட் செய்து இடங்களைத் தேர்வு செய்து வருகிறார் ராஜமௌலி.

பாகுபலி படத்தின் முதல் பாகம் வட இந்தியாவிலும் வசூலை வாரிக் குவித்து வருகிறது எனவே 2 ம் பாகத்தில் சில முக்கியமான பாலிவுட் நடிகர்களை நடிக்க வைக்கலாம் என்பது ராஜமௌலியின் திட்டமாக இருக்கிறது.

நாளுக்குநாள் பாகுபலி படத்தின் 2 ம் பாகத்தைப் பற்றி ஏகப்பட்ட செய்திகள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன, இந்நிலையில் பாகுபலியின் 2 ம் பாகத்தின் தலைப்பு மாறலாம் என்று கூறுகிறார்கள்.

மஹாபலி என்று பாகுபலியின் 2 ம் பாகத்திற்கு தலைப்பு வைத்திருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளன, விரைவில் இதனை படப்பிடிப்புக் குழுவினர் உறுதி செய்தி அதிகாரப்பூர்வமான தகவலை வெளியிடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ராஜமௌலி காரு நீங்க தலைப்பே இல்லாமக் கூட படமெடுக்கலாம்...