சினிமா வாய்ப்பு.... போலிகளை நம்பி பெண்கள் ஏமாறவேண்டாம் - இயக்குநர் சசிகுமார்

Fake Offers Sasikumar Warns New Comers

என்னுடைய பெயரை தவறாகப் பயன்படுத்தி சினிமா வாய்ப்பு வாங்கித் தருவதாக வெளியாகும் செய்திகள் அல்லது நபர்களை நம்பி பெண்கள் ஏமாற வேண்டாம் என்று இயக்குநரும் நடிகருமான எம் சசிகுமார் அறிவித்துள்ளார்.

சசிகுமாரின் அடுத்த படத்தில் நடிக்க வாய்ப்புத் தருவதாகச் சொல்லி, போலி ஈ-மெயில் முகவரிகளை வைத்தும், வலைத் தளங்களை வைத்தும் சிலர் மோசடி செய்து வருகிறார்களாம். இதுபற்றி ஏற்கெனவே ஒருமுறை எச்சரித்திருந்தார் சசிகுமார்.

இப்போது மீண்டும் அத்தகைய மோசடிகள் அரங்கேறி வருவதால், மீண்டும் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அதில், "சினிமா என்ற பிரமாண்ட உலகை நோக்கி நாள்தோறும் பல ஆயிரக்கணக்கானோர் வந்த வண்ணம் உள்ளனர்.இது வரவேற்கத் தக்கதுதான். ஆனால் எப்படியாவது சினிமாவில் நுழைந்துவிட்டால் போதும் என்ற ஆர்வத்தில் போலிகளை நம்பி ஏமாந்துவிடுவது வருத்தமளிக்கிறது.

சமீபத்தில் என் பெயரைச் சொல்லி சிலர் சினிமா வாய்ப்புத் தருவதாக சிலரைத் தொடர்பு கொண்டு பேசி இருக்கிறார்கள். எப்போதுமே என்னுடைய படங்களுக்கு ஆட்களைத் தேர்வு செய்யும் போது நேரடியாக என் கம்பெனிக்கே அழைத்துப் பேசுவதுதான் வழக்கம். போனிலோ, ஈ மெயில் மூலமாகவோ தொடர்பு கொள்ளும் வழக்கம் கிடையாது.

என் பெயரில் போலி ஈ மெயில் முகவரிகளையும், பேஸ்புக், ட்விட்டர் கணக்குகளையும் சிலர் ஆரம்பித்திருக்கிறார்கள்.

இதுநாள் வரை எந்த சமூக வலைத் தளங்களிலும் நான் இல்லை. அதனால் வலைத் தளத் தகவல்களையோ, ஈ மெயில்களை வைத்தோ என் படத்தில் வாய்ப்பு கொடுப்பதாக சொல்லப்படுவதை யாரும் நம்ப வேண்டாம்.

குறிப்பாக , சினிமாவை நோக்கி வரும் பெண்கள் இந்த விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும். காரணம், சினிமா உலகம் எந்த அளவுக்கு அழகானதோ, அதே அளவுக்கு ஆபத்தானதும கூட.

சினிமாவை நோக்கி வருபவர்கள் ஜெயிக்கிறார்களோ, இல்லை போராடுகிறார்களோ, எந்த விதத்திலும் அவர்கள் ஏமாற்றப்பட்டுவிடக் கூடாது என நினைப்பவன் நான்.

என்னுடைய பெயரை வைத்தே சிலர் ஏமாற்று வலை விரிப்பது, எனக்கு மிகுந்த வருத்தத்தையும் அதிர்ச்சியையும் அளிக்கிறது.

என் பெயரை மட்டுமல்ல, வேறு யார் பெயரைச் சொல்லி வாய்ப்பு தருவதாகக் கூறி வலை விரித்தாலும் அதுகுறித்து தீர விசாரியுங்கள் என்பதே என் வேண்டுகோள். சினிமாவில் பெண்களின் சாதிப்புகளுக்கு வாய்ப்புகள் கொட்டிக் கிடக்கின்றன. ஆனால், அந்த இலக்கை அடைவதற்கு ஆர்வமும் அவசரமும் மட்டுமே இருந்தால் போதாது, ஆராய்ந்து பார்க்கும் பக்குவமும் இருக்க வேண்டும்," என கூறியுள்ளார்.

 

சூப்பர் ஸ்டாரின் கோச்சடையான் ஜூலையில் வெளியாகும் - தயாரிப்பாளர் அதிகாரப்பூர்வ அறிவிப்பு

Rajinikanth S Next Be Released July In 4 Languages

ரசிகர்கள் பெரும் ஆவலுடன் எதிர்ப்பார்க்கும் படமான ரஜினியின் கோச்சடையான் வரும் ஜூலை மாதம் வெளியாகும் என படத்தின் தயாரிப்பாளர் டாக்டர் முரளி மனோகர் அறிவித்துள்ளார்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் - தீபிகா படுகோன் ஜோடியாக நடிக்க, அவர்களுடன் சரத்குமார், ஜாக்கி ஷெராப் உள்ளிட்ட இந்திய திரையுலகின் முக்கிய நட்சத்திரங்கள் கைகோர்த்துள்ள படம் கோச்சடையான்.

அவதார் படம் போல, 3 டியில் மோஷன் கேப்சரிங் தொழில்நுட்பத்தில் தயாராகி வருகிறது. இந்திய சினிமாவில் இந்த தொழில்நுட்பத்தில் வரும் முதல் படம் இது. 3டி வசதி இல்லாத அரங்குகளுக்காக 2டியிலும் இந்தப் படம் வருகிறது.

லண்டன், கேரளா மற்றும் சென்னை ஸ்டுடியோக்களில் இதன் படப்பிடிப்பு நடந்து முடிந்தது. போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் முழு வீச்சில் நடந்து வருகின்றன.

ஆனால் படம் வெளியாகும் தேதி குறித்து உறுதியாக எதுவும் அறிவிக்கப்படாமல் இருந்தது. மேலும் இந்தப் படம் தொடர்பாக இதுவரை இரண்டு ஸ்டில்கள் மட்டுமே வெளியாகியுள்ளன. மற்றதெல்லாம் பிரஸ்மீட் ஸ்டில்கள்தான்.

தமிழ், ஆங்கிலம், இந்தி, ஜப்பான் மற்றும் தெலுங்கில் வெளியாகும் கோச்சடையான், வெளியீட்டுத் தேதி குறித்து தயாரிப்பாளர் டாக்டர் முரளி மனோகர் கூறுகையில், "படத்தில் அறிமுகப்படுத்தப்படும் புதிய தொழில்நுட்பங்கள் கணிசமாக நேரம் எடுக்கின்றன. தி அவெஞ்சர்ஸ் படத்துக்கு 3 டி மற்றும் அதற்கான ஸ்டீரியோ டி ஒலி தொழில் நுட்பத்தைக் கொடுத்த ஹாலிவுட் குழுவினர் இந்தியா வந்து கோச்சடையானுக்கு, அதே தொழில்நுட்பங்களைச் செய்து வருகின்றனர்.

தாமதத்துக்கு இது ஒரு முக்கிய காரணம். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் எப்போதுமே தன்னைப் பற்றியோ தன் படங்கள் பற்றியோ பெரிதாக புகழ மாட்டார். அடுத்தவர்கள் சொன்னாலும் அமைதியாக இருந்துவிடுவார்.

ஆனால் அவரே படத்தைப் பார்த்து வியந்தார். இயக்குநர் ரவிக்குமாரும் நினைத்ததை விட 10 மடங்கு பிரமாதமாக வந்திருப்பதாகப் பாராட்டினார்.

இந்தப் படம் திரைக்கு வரும்போது, இன்னும் மேம்பட்ட வடிவில் இருக்கும். அதற்கான வேலைகள் வேகமாக நடக்கின்றன.

ரஜினி சார் சாதாரண ஹீரோ அல்ல. இந்திய சினிமாவில் வேறு எவர் படங்களுக்கும் இல்லாத முக்கியத்துவம் அவரது படங்களுக்கு மட்டுமே உண்டு. இதையெல்லாம் விட முக்கியம், ரஜினி சார் உடல்நிலை சரியான பிறகு வரும் முதல் படம் கோச்சடையான்தான். எனவே அவரது ரசிகர்களின் எதிர்ப்பார்ப்பு எப்படி இருக்கும் என்பது புரிந்து, அதையெல்லாம் ஈடுகட்டும் வகையில் இந்தப் படம் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்தப் படத்தின் பட்ஜெட் ரூ 100 கோடி. இந்தப் படத்துக்கு அதைவிட அதிகம் செலவு செய்தாலும் நியாயம்தான். ஜப்பானில் ரிலீஸ் செய்யும் உரிமை பற்றி பேசிக் கொண்டிருக்கிறோம். இந்தியாவில் இந்தப் படத்துக்கான விலை இன்னும் நிர்ணயிக்கப்படவில்லை," என்றார்.

பட வெளியீட்டுத் தேதி குறித்துப் பேசியுள்ள முரளி மனோகர், "ஜூலை மாதம் வெளியிடுவது பொருத்தமாக இருக்கும் என நம்புகிறோம். ஏப்ரலுக்குள் போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் முடிந்துவிடும். இதுகுறித்த அனைத்து முடிவுகளையும் எடுக்கும் உரிமையை ஸ்டுடியோ டி நிறுவனத்திடமே விட்டுவிட்டோம் (போஸ்ட் புரொடக்ஷன் பொறுப்பேற்றுள்ள நிறுவனம்). படத்தின் நீளம் 2 மணி 5 நிமிடங்கள் கொண்டதாக இருக்கும்," என்றார்.

இத்தாலிய, ப்ரெஞ்ச் மொழிகளிலும் கோச்சடையான் வெளியாகப் போகிறது.

 

என் பெயரை இழுக்காதீங்க! - இயக்குநர் மகிழ் திருமேனி

Magizh Thirumeni Denies Arya Project

எனது புதிய படத்துக்கான ஹீரோவை அறிவித்துவிட்டதாக வந்த செய்திகளில் உண்மையில்லை என்று இயக்குநர் மகிழ் திருமேனி அறிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கை:

என் அடுத்த படத்துக்கான ஹீரோவின் பெயரை நான் அறிவித்திருப்பதாக வந்திருக்கும் செய்திகளை பார்க்க வேடிக்கையாக இருக்கிறது. என் அடுத்த படத்துக்கான ஹீரோவைக் குறித்து நான் எந்த பத்திரிக்கையாளரிடத்திலும் எந்த கருத்தையும் இதுவரை கூறவில்லை என்பதை பணிவுடன் தெரிவித்துக் கொள்கிறேன். அப்படியாக வந்த தகவல் முற்றிலும் உண்மைக்கு புறம்பானது.

மேற்கண்ட வதந்தியை பார்த்து அவசரப்பட்டு கருத்து கூறியவர்கள் அனைவரையும் தயவுசெய்து என் பெயரை இனிமேலும் இழுக்க வேண்டாம் என கேட்டுக் கொள்கிறேன்.

என்னை போலவே அவர்களுக்கும் வேறு எவ்வளவோ முக்கியமான பணிகள் இருக்கும் என நம்புகிறேன். என் அடுத்த படத்துக்கான ஸ்கிரிப்ட் வேலைகளில் ஈடுபட்டிருக்கிறேன். எனது அடுத்த படத்துக்கான அறிவிப்பை விரைவில் வெளியிடுவேன்.

மேற்கொண்டு தகவல்களுக்கு என் பிஆர்ஓ ஜான்சனைத் தொடர்பு கொள்ளுங்கள்," என்று தெரிவித்துள்ளார்.

முன்தினம் பார்த்தேனே, தடையறத் தாக்க படங்களை இயக்கியவர் மகிழ் திருமேனி. அடுத்து ஆர்யாவை வைத்து தன் புதிய படத்தை ஆரம்பிக்கப் போகிறார் என சில தினங்களுக்கு முன் செய்தி வெளியாகி, அதை ஆர்யாவும் ஒப்புக் கொண்டிருந்தது நினைவிருக்கலாம்.

 

தலைவா படத்தில் எனக்குத்தான் முக்கிய வேடம் - ராகினி நந்த்வானி

Rahini Nandhwani Claims Her Role Thalaiva Is Crucial

விஜய் நடிக்கும் தலைவா படத்தில் எனக்கு முக்கியத்துவம் அதிகம். 2வது முக்கிய பாத்திரமே நான்தான், என்கிறார் அதில் விஜய்க்கு ஜோடியாக வரும் ராகினி நந்த்வானி.

ஏஎல் விஜய் இயக்கத்தில், விஜய் நடிக்கும் தலைவா பட ஷூட்டிங் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

இந்தப் படத்தில் விஜய்க்கு ஜோடியாக முதலில் அமலா பால் அறிவிக்கப்பட்டார். படப்பிடிப்பு தொடங்கிய சில தினங்களில், அமலா பாலுக்கு நிகரான வேடத்தில் இன்னொரு நாயகியை அறிமுகப்படுத்துவதாக அறிவித்தனர். அவர் ராகினி நந்த்வானி. தொலைக்காட்சி தொடர்களில் நடித்தவர இவர்.

விஜய்யின் மும்பை காதலியாக வருகிறார். இவரும் விஜய்யும் நடிக்கும் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன. விரைவில் ஆஸ்திரேலியாவில் இறுதிக் கட்ட படப்பிடிப்பு நடக்கவிருக்கிறது. அதிலும் ராகினி நடிக்கிறார்.

விஜய்யுடன் நடித்த அனுபவம் குறித்து ராகினி கூறுகையில், "தலைவா பட வாய்ப்பு கிடைத்தது எதிர்ப்பாராத இனிய அதிர்ச்சி.

இந்தப் படத்தில் என் வேடம் மிகவும் எளிதானது. காரணம் நான் ஒரு வட இந்திய பெண்ணாகவே இதில் நடித்தேன். எனது வசனங்கள் முழுவதும் இந்தி தான். ஒவ்வொரு முறையும் விஜயுடன் நடிக்கும் போது எனக்கு படபடப்பாக இருக்கும்.

இந்த படத்தில் நான் ஏதோ வந்து போகும் கதாபாத்திரம் அல்ல. படத்தின் 2-வது முக்கிய கதாபாத்திரம். விஜயுடன் ஒரு பாடலில் கூட நடித்துள்ளேன். விஜய் மிகவும் எளிமையானவர். நம்பிக்கைக்கு உரியவர்," என்றார்.

இந்த இரண்டாவது ஹீரோயின் விவகாரமே அமலா பாலை கடுப்பேற்றியிருந்தது. இந்த நேரத்தில் இப்படி ஒரு பேட்டி!

 

ஆணாதிக்கம் நிறைந்த சினிமா.. லட்சுமி ராமகிருஷ்ணன் சாடல்

Male Chauvinism Film Industry Says Lakshmi Ramakrishnan

சென்னை: சினிமாத் துறையில் ஆண்களின் ஆதிக்கம் அதிகளவில் இருப்பதாக திரைப்பட இயக்குனர் லக்ஷ்மி ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

மும்பை பெண்கள் சர்வதேச திரைப்பட விழா தொடர்பாக இன்று செய்தியாளர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், திரைப்பட நடிகை விஜி சந்திரசேகர், இயக்குனர் நந்தினி, லட்சுமி ராமகிருஷ்ணன் குட்டி பத்மினி உள்ளிட்டோர் கலந்துக்கொண்டனர். இதில் கலந்துகொண்டு பேசிய லட்சுமி ராமகிருஷ்ணன் கூறியதாவது:

சினிமாவில் நடிகர்களுக்கு கொடுக்கப்படும் சம்பளம், கதாபாத்திரம், மரியாதை ஆகியனவற்றை நடிகைகளுக்கு தருவதில்லை. கூலித் தொழிலாளிகளுக்கு ஊதியம் வழங்குவதில் பாகுபாடு காட்டுப்பட்டு வந்தது. அதற்கு ஆண்கள் உடல் ரீதியாக அதிக பலம் பொருந்தியவர்கள் என்ற சப்பை கட்டும் கூறப்பட்டு வந்தது ஆனால் முழுக்க முழுக்க திறமை சார்ந்தது. ஆனால் இங்கும் ஏன் இந்தப் பாகுபாடு காட்டப்படுகிறது என்றார்.

இதேபோல் இயக்குநர் நந்தினி பேசுகையில் சிறு வயதிலிருந்தே ஆண் குழந்தைகளுக்கு பெண்களை மதிக்க வேண்டும், அவர்களை அடிக்கவோ துன்புறுத்தவோ கூடாது என்ற படிப்பினையை செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

 

தலிபான்களை தவறாகக் காட்டிய விஸ்வரூபம் தவறான படம்தான்!- இது அமீர் பேச்சு!!

Ameer Blasts Viswaroopam Portraying Talibans Bad

சென்னை: தன் நாட்டுக்காகப் போராடும் தலிபான்களைத் தவறாக சித்தரிக்கும் விஸ்வரூபம் தவறான படம்தான். விடுதலைப் புலிகளைப் போலத்தான் தலிபான்களும்... - இப்படிக் கூறியிருப்பவர் இயக்குநர் அமீர்!

விஸ்வரூபம் படம் பல்வேறு பரபரப்புகளை, சர்ச்சைகளைக் கிளப்பி, ஒருவழியாக வெளியாகி ஓடி முடிக்கும் சூழலில், மீண்டும் பரபரப்பைக் கிளப்பியிருக்கிறார் இயக்குநர் அமீர்.

சமீபத்திய பேட்டி ஒன்றில், "விஸ்வரூபம்' படத்தில் இஸ்லாமியர்கள் தவறாக சித்தரிக்கப்படவில்லை. ஆனால் தலிபான் போராளிகள் தவறாக சித்தரிக்கப்பட்டிருக்கிறார்கள்.

ஆப்கன் மக்களுக்காகவும், அவர்களின் உரிமைகளை மீட்கவும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தை எதிர்த்துப் போராடும் ஒரு போராளியை விஸ்வரூபத்தில் தவறாகச் சித்தரித்திருக்கிறார்கள்.

எப்படி ஈழத்திற்காகப் போராடிய போராளிகளான பிரபாகரனையும் அவரது கூட்டாளிகளையும் தவறாக சித்தரிச்சா என்ன வருமோ அதுதான் விஸ்வரூபம்.

எப்படி இந்த போராளிகளை தீவிரவாதிகள் என்று சொல்லக் கூடாதோ அப்படித்தான் தலிபான் போராளிகளையும் தீவிரவாதிகள் என்று காட்டக் கூடாது. ஆனால் இங்குள்ள அமைப்புகளோ, கட்சிகளோ இதை எதிர்க்காமல் விட்டு விட்டார்கள்.

இப்போதுதான் அது பற்றிய விவாதத்தை வைத்திருக்க வேண்டும். யாரும் செய்யவில்லை. ஆக, விஸ்வரூபம் படத்தின் மூலம் தன் மண்ணுக்காகப் போராடும் தலிபான் போராளிகளை தவறாகச் சித்தரித்திருக்கிறார்கள் என்பதுதான் உண்மை," என்று கூறியுள்ளார்.

 

ஜீன்ஸ் - டி சர்ட்டுக்கு எதிர்ப்பு கிளம்பியதால் சுடிதாரில் வந்து ஏழுமலையானை தரிசித்த தமன்னா!

Tamanna Visits Tiruppati   

சினிமா நட்சத்திரங்கள் நினைத்த நேரத்தில் சென்று திருப்பதி ஏழுமலையான வழிபட முடிகிறது. எந்த வரிசையிலும் காத்திருக்கத் தேவையில்லை. நேராக காரில் வந்து கோயிலுக்கு முன் இறங்கினால் போதும்... அங்குள்ள குருக்களில் ஒருவர் ஓடோடி வந்து அவர்களை வரவேற்று நேராக மூலஸ்தானத்துக்கே அழைத்துப் போய் அரை மணி நேரம் அமர வைத்து லட்டு, பட்டு கொடுத்து அனுப்பி வைக்கிறார். ஜருகண்டி பிஸினஸே கிடையாது.

குறிப்பாக நடிகைகள். இப்போதெல்லாம் தினசரி நடிகைகள் திருப்பதி மலைக்குப் போய் சாமி தரிசனம் செய்கிறார்கள். பொதுமக்களும் போகிறார்கள். ஆனால் அவர்கள் 12 மணி நேரம் அங்கு பூட்டப்பட்ட அறைகளில் காத்திருக்க வேண்டும்.

திருமலையில் நேற்றைய ஸ்பெஷல் தமன்னா வருகைதான். அம்மணி நேற்று அடக்க ஒடுக்கமாக சுடிதாரில் வந்திருந்தார்.

சில மாதங்களுக்கு முன் அவர் தொப்புள் தெரிய பேன்ட் சட்டை போட்டு வந்ததால், பக்த கோடிகளின் கவனம் சிதைந்துவிட்டதாம். எனவே சிலர் கண்டனம் தெரிவித்து கோஷம் கூட போட்டார்கள்.

எனவே யார் கவனமும் கலையக் கூடாது என்ற நல்லெண்ணத்தில் உடம்பை முழுசாக மறைத்து வந்திருந்தார் தமன்னா.

அவர் வந்த தகவல் அறிந்ததும் பக்தர்களும், ரசிகர்களும் சூழ்ந்தார்கள்.

வழக்கம் போல மேல்சட்டை கூட அணியாத ஒரு பூசாரி ஓடி வந்தார். அவருடன் நேராக கோவிலுக்குள் சென்ற தமன்னா, பயக்தியுடன் சாமி கும்பிட்டனர். அரைமணி நேரத்துக்கும் அதிகமாக அவர் சாமியைக் கும்பிட்டார்.

ராஜபக்சேவுக்கு கொடுத்தது போலவே லட்டு மற்றும் பட்டுத் துணி கொடுத்தனர் தமன்னாவுக்கு. கோவிலுக்கு வெளியே அவருக்காக காத்திருந்த ரசிகர்கள் மொய்க்க ஆரம்பிக்க, சிரித்தபடியே பை சொல்லிவிட்டு காரில் ஏறிப் பறந்தார் தமன்னா!

 

வசந்த மாளிகை பிரஸ் ஷோ... கைத்தட்டி, விசிலடித்து உற்சாகத்துடன் பார்த்த செய்தியாளர்கள்!

ரிலீசாகி 40 ஆண்டுகள் கடந்த பிறகும், கொஞ்சம் சுமாரான பிரிண்டுடன் இருக்கும் ஒரு படத்தை இத்தனை உற்சாகத்தோடு பார்க்க முடியுமா? முடியும் என நிரூபித்தது வசந்த மாளிகை படம்.

இந்தப் படத்தை கொஞ்சம் அங்கே இங்கே பட்டி பார்த்து 'புதுப்பொலிவுடன்' என்ற தலைப்போடு மீண்டும் வெளியிடுகிறார்கள்.

1972-ல் வெளியான வெளியான இந்தப் படம், தெலுங்கில் வெளியான பிரேம் நகர் என்ற படத்தின் தமிழ் வடிவம்.

an experience with sivaji ganesan vasantha maaligai
டி ராமாநாயுடு தயாரிப்பில், கேஎஸ் பிரகாஷ் ராவ் இயக்கியிருந்தார். இந்தப் படம் சிவாஜியின் திரையுலக வாழ்க்கையில் முக்கிய மைல்கல்லாக அமைந்தது. வசூலில் மிகப் பெரிய சாதனையைச் செய்தது.

தமிழகத்தில் மதுரை நியூ சினிமா திரையரங்கில் 200 நாட்களும், சென்னை - சாந்தி திரையரங்கில் 175 நாட்களும், கிரௌன், புவனேஸ்வரி திரையரங்குகளிலும், திருச்சி - ராஜா திரையரங்கிலும் 140 நாட்களுக்கும் ஓடியது.

இலங்கையில் கேபிடல், வெலிங்டன் ஆகிய திரையரங்குகளில் முறையே 287 மற்றும் 208 நாட்கள் ஓடி சாதனை படைத்தது. இலங்கையில் அதிக நாட்கள் ஓடிய படம் என்ற பெருமை இன்றுவரை வசந்த மாளிகைக்குத்தான்.

ஒரு படத்துக்கு ஒரே நாளில் பல ஊர்களில் விழா எடுப்பது என்ற புது ட்ரென்ட்டை உருவாக்கியதும் இந்த வசந்த மாளிகைதான்.

இப்படத்தின் 100வது நாள் விழா ஒரே நாளில் திருச்சி, தஞ்சாவூர், கும்பகோணம், மயிலாடுதுறை ஆகிய நான்கு ஊர்களில் 1973ம் ஆண்டு ஜனவரி 7ம் தேதி கொண்டாடப்பட்டது.

காலை 10 மணிக்கு திருச்சியிலும், பகல் 3 மணிக்கு தஞ்சாவூரிலும், மாலை 7 மணிக்கு கும்பகோணத்திலும், இரவு 10 மணிக்கு மயிலாடுதுறையிலும் விழா நடந்தது.

இந்தப் படம் வரும் 8-ம் தேதி மீண்டும் தமிழகம் முழுவதும் திரையிடப்படுகிறது. அதனையொட்டி நேற்று செய்தியாளர்களுக்கு ஆர்கேவி அரங்கில் சிறப்புக் காட்சி போட்டுக் காட்டினார்கள்.

பலமுறை பார்த்த படம்தான் என்றாலும், ஏகப்பட்ட பேர் பார்க்க வந்திருந்தார்கள்.

வசந்த மாளிகை பிரிண்ட் சுமார் என்றாலும்... பார்த்த அனுபவம் நிஜமாகவே சூப்பராகத்தான் இருந்தது.

ஒவ்வொரு காட்சிக்கும் கைத்தட்டி, விசிலடித்து, குறிப்பாக வசனங்களுக்காக கைத்தட்டி ரசித்ததை இந்தப் படத்தில்தான் பார்க்க முடிந்தது.

கவியரசரோடு ஒப்பிட வேறு எவருக்கும் தகுதியில்லை என்பதை ஒவ்வொரு வரிகளும் மீண்டும் மீண்டும் உணர்த்திக் கொண்டே இருந்தன.

நடித்தவர்கள், இயக்குநர், தயாரிப்பாளர் என பெரும்பாலானோர் தெலுங்கு என்றாலும்... எத்தனை பிரமாதமாக தமிழை கவுரவப்படுத்தியிருக்கிறார்கள்!

படத்தில் டிஎம்எஸ் பாடியதாகவே தெரியவில்லை.. சிவாஜியே பாடுவதுபோலத்தான் உணர முடிந்தது. வசனங்களைப் பேசும் சிவாஜியின் குரல்தான், ஒரு கிண்ணத்தை ஏந்துகிறேன்... பாடல் வரிகளையும் பாடியது போல அத்தனை பர்பெக்ஷன்!!

 

மங்காத்தா எஃபெக்ட்: அஜீத்துக்கு வரும் நரைமுடி வேண்டுகோள்

Please Ajith Act With Grey Hair Atleast For A Song

சென்னை: மங்காத்தா படத்தில் அஜீத் நரைமுடியோடு நடித்தது ஹிட்டானதால் அதே மாதிரி தங்கள் படங்களிலும் நடிக்குமாறு இயக்குனர்கள் அவரிடம் வேண்டுகோள் விடுக்கின்றனராம்.

மங்காத்தா படத்தில் அஜீத் குமார் டை அடிக்காமல் நரைத்த முடியுடனேயே நடித்திருந்தார். ஹீரோக்கள் எத்தனை வயதானாலும் கரு, கருவென்ற முடியுடன் வருகையில் அஜீத் இப்படி வெளுத்த தலையுடன் வருவதை ரசிகர்கள் எப்படி ஏற்றுக்கொள்ளப் போகிறார்களோ என்று மங்காத்தா படக்குழுவினருக்கு ஒரு கலக்கம் இருந்தது.

ஆனால் அஜீத்தின் நரைத்த முடி கெட்டப் ஹிட்டாகிவிட்டது. நரைத்த முடியில் அஜீத் அம்சமாகத் தான் இருக்கிறார் என்று ரசிகர்கள் தெரிவித்தனர். இதையடுத்து அஜீத்தை வைத்து படம் எடுப்பவர்கள் தங்கள் படத்தில் ஒரு பாட்டுக்காவது நரைத்த முடியுடன் வருமாறு கோரிக்கை விடுக்கிறார்களாம்.

அவர் நரைத்த முடியுடன் வந்தால் படம் ஹிட் என்று நினைக்கிறார்களோ?

 

சிம்பு வீட்டு நாய் செத்து போச்சாமே?

Simbu Mourns His Dog Death

நடிகர் சிலம்பரசனின் வீட்டில் அவருக்கு செல்லமாக இருந்த நாய் இறந்து போனதில் மனிதர் படு அப்செட் ஆக இருக்கிறார்.

நடிகர்கள், நடிகைகள் எல்லோருக்குமே செல்லப்பிராணி என்றால் அது நாய்தான். எஸ்.டி.ஆர் எனப்படும் சிலம்பரசன் நீண்ட நாட்களாக வளர்த்த வந்த நாய் உடல்நலக்குறைவினால் திடீரென இறந்துவிட்டது.

இதை தாங்கிக் கொள்ள முடியாத எஸ்.டி.ஆர் டுவிட்டரில் அஞ்சலி செலுத்தியுள்ளார். மனிதர்களின் மிகச்சிறந்த நண்பன் நாய். நன்றியுள்ள பிராணியும் கூட. அந்த நண்பனின் இழப்பை எண்ணி வருந்துகிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

 

இப்போதைக்கு கவனமெல்லாம் சினிமாவில்தான் - அசின்

Asin S Present Focus Only On Cinema

இப்போதைக்கு என் கவனமெல்லாம் சினிமாவில்தான். அமெரிக்க காதலருடன் திருமணம் என்று வரும் செய்திகள் உண்மையில்லை என்று வழக்கம் போல மறுப்பு தெரிவித்துள்ளார் அசின்.

நடிகை அசின் அமெரிக்காவில் வசிக்கும் இந்திய இளைஞர் ஒருவரை காதலிப்பதாக செய்திகள் கிளம்பின கடந்த வாரத்திலிருந்து.

இந்த காதல் விரைவில் திருமணத்தில் முடியவிருப்பதாகவும், அதனாலேயே எந்த இந்திப் படத்தையும் அவர் ஒப்புக் கொள்ளவில்லை என்றும் கூறப்பட்டது.

அடிக்கடி அமெரிக்கா போய் காதலரைச் சந்தித்துவிட்டு வரும் அசின், கடைசியாக தமிழில் பிரமாண்ட படம் ஒன்றில் மட்டும் நடித்துவிட்டு பை சொல்லப் போகிறார் என்று செய்திகள் வந்தன.

ஆனால் இதனை அசின் வழக்கம் போல மறுத்துள்ளார். இதுகுறித்து அவர் தரப்பில் வெளியிடப்பட்டுள்ள விளக்கம்:

'அசினுக்கும் அமெரிக்க காதலருக்கும் திருமணம் என்ற செய்தியை மறுக்கிறோம். அசினின் முழுகவனமும் சினிமாவில்தான் இருக்கிறது. எனவே அசினுக்கு இப்போது திருமணம் இல்லை. புதுப்படங்கள் குறித்து விரைவில் தெரிவிப்போம்,'' என்றார்.

காதல் முத்தினா கடைத் தெருவில் போஸ்டராக தொங்கித்தானே தீர வேண்டும்!