'ஹாலிவுட் மோஷன் கேப்சர் படங்களை விட நன்றாக இருக்கிறது கோச்சடையான்' - பில் ஸ்டில்கோ

லண்டன்: ஹாலிவுட்டில் வெளியாகும் மோஷன் கேப்சர் படங்களை விட எவ்வளவோ மேம்பட்டதாக உள்ளது ரஜினி நடித்துள்ள கோச்சடையான் படம், என்று பாராட்டியுள்ளார் ஹாலிவுட்டின் பிரபல மோஷன் கேப்சரிங் நிறுவனத் தலைவர் பில் ஸ்டில்கோ.

ஹாலிவுட்டில் அனிமேஷன் மற்றும் மோஷன் கேப்சரிங் தொழில்நுட்பத்தில் முன்னணி வகிக்கும் நிறுவனம் சென்ட்ராய்ட் மோஷன் கேப்சர் கம்பெனி.

இந்த நிறுவனத்தை உருவாக்கியவர் பில் ஸ்டில்கோ. இவர்தான் இப்போது தலைவராகவும் செயல்படுகிறார். லண்டனில் உள்ள பைன்வுட் ஸ்டுடியோவில் இந்த நிறுவனம் அமைந்துள்ளது.

'ஹாலிவுட் மோஷன் கேப்சர் படங்களை விட நன்றாக இருக்கிறது கோச்சடையான்' - பில் ஸ்டில்கோ

கோச்சடையான் 3டி படத்தைப் பார்த்த பில் ஸ்டில்கோ ஐஏஎன்எஸ் செய்தி நிறுவனத்துக்கு அளித்துள்ள எக்ஸ்க்ளூசிவ் பேட்டி:

நான் இந்தத் துறையில் கடந்த 15 ஆண்டுகளாக உள்ளேன். ஹாலிவுட்டில் இந்தத் தொழில்நுட்பம் புகுந்த ஆரம்ப நாளிலிருந்து படங்களைப் பார்த்து வருகிறேன். நிச்சயமாகச் சொல்வேன், இதற்கு முன் ஹாலிவுட்டில் இந்த மோஷன் கேப்சரிங் தொழில்நுட்பத்தில் வெளியான எத்தனையோ படங்களைக் காட்டிலும், பல மடங்கு சிறப்பாக வந்துள்ளது கோச்சடையான்.

இந்தப் படம் பற்றி, அது வெளியாகும் முன்பே சில விமர்சனங்கள் வந்ததை அறிந்தேன். ஆனால் நிச்சயம் அது வேறு ஏதோ காரணங்களுக்காக வந்திருக்கலாம். படம் பார்த்தால் அவர்கள் அமைதியாகிவிடுவார்கள்.

என் ஆர்வமெல்லாம், பத்தாண்டுகளில் இந்தத் தொழில்நுட்பம் எந்த அளவு வளர்ந்திருக்கிறது.. இதை இந்தியா எப்படி இனி பயன்படுத்திக் கொள்ளப் போகிறது என்பதுதான்.

கோச்சடையானை இதே தொழில்நுட்பத்தில் இதற்கு முன் வந்த எந்தப் படத்தோடும் ஒப்பிட முடியாது. காரணம், இந்தப் படம் உருவாக்கப்பட்ட விதம் மற்றும் பின்னணி.

இந்தப் படத்தை வேறு படங்களோடு ஒப்பிடுவது மிகவும் தவறு. வேறுபட்ட பட்ஜெட்கள், வேறுபட்ட கால அவகாசம் மற்றும் வேறுபட்ட அனுபவங்கள்தான் அதற்குக் காரணம். அடுத்த 5 அல்ல பத்தாண்டுகளில் இந்த மாதிரி ஒப்பீடுகள் கூட இருக்காது என நினைக்கிறேன். தாங்கள் எப்படிப்பட்ட தவறான முடிவுகளுக்கு வந்துவிட்டோம் என விமர்சகர்கள் உணர்வார்கள்.

எல்லா மோஷன் கேப்சர் படங்களும் அதிக பட்ஜெட்டில் உருவானவை என்று சொல்ல முடியாது.

டின் டின், அவதார் படங்களுக்கு பெரிய அளவில் செலவானது ஏன் என்று கேட்கிறார்கள். இந்தப் படங்கள் உருவானபோது, மோஷன் கேப்சரிங் தொழில்நுட்பம் அதன் ஆரம்பத்தில் இருந்தது. ஒவ்வொரு விஷயத்தையும் புதிதாகக் கண்டுபிடித்துப் பயன்படுத்தினோம். அந்த கண்டுபிடிப்புச் செலவும் படத்தின் பட்ஜெட்டில் சேர்ந்து கொண்டது.

ஆனால் இந்தியாவுக்கு அந்தக் கஷ்டம் இல்லை. இந்தத் தொழில்நுட்பத்தை மட்டும் பயன்படுத்தி படம் எடுத்ததால் ரூ 125 கோடியில் கோச்சடையானை எடுக்க முடிந்திருக்கிறது.

ரஜினிகாந்த் என்ற மிகப்பெரிய ஈர்ப்புள்ள நடிகர் இந்தப் படம் முழுக்க இருப்பதே, கோச்சடையானை மிகப் பெரிய அளவில் வெற்றி பெற வைக்கும் என நம்புகிறேன்.

இந்தப் படம் இந்தியப் பாரம்பரியத்தை வெளிப்படுத்தும் விதமாக அமைந்திருக்கிறது.

மோஷன் கேப்சர் டெக்னாலஜியை இந்திய சினிமாவில் அழுத்தமாக அறிமுகப்படுத்த ரஜினிகாந்த்தான் சிறந்த தேர்வு. இந்த மாதிரி ஒரு புதுமையான விஷயத்துக்கு அவர்தான் தேவை.

கோச்சடையானை குழந்தைகளுக்கான ஒரு அனிமேஷன் படம் என்று சிலர் பார்க்கிறார்கள். இது அவர்களின் சினிமா ரசனை எந்த அளவு பாமரத்தனமாக உள்ளது என்பதற்கு ஒரு உதாரணம். கிராபிக் நாவல்கள், காமிக்ஸ்களைப் படிக்கத் தவறியதாலேயே இப்படியெல்லாம் அவர்கள் பேசுகிறார்கள். இந்தப் படத்தை ஆதரிக்கத் தவறினால், இந்தத் தொழில்நுட்பத்தை தவறவிடுவதாக அர்த்தம்."

-இவ்வாறு பில் ஸ்டில்கோ கூறியுள்ளார்.

ஹாரி பாட்டர், அயன்மேன், ஹ்யூகோ, டோட்டல் ரீகால், வோர்ல்ட் வார்ஸ், 2012, லாஸ்ட் இன் ஸ்பேஸ், குவாண்டம் ஆப் சோலேஸ் உள்பட ஏராளமான படங்களுக்கு மோஷன் கேப்சரிங் மற்றும் 3 டி பணிகள் செய்தது பில் ஸ்டில்கோவின் சென்ட்ராய்ட் நிறுவனம். இப்போது கோச்சடையானுக்கும் மோஷன் கேப்சரிங் பணியாற்றியுள்ளது.

சென்னையில் இன்னொரு நிறுவனத்துடன் இணைந்து தமிழ் மற்றும் பிற மொழிப் படங்களுக்கு பணியாற்ற முடிவு செய்துள்ளது சென்ட்ராய்ட்.

 

சன்னி லியோன் நடிச்சும் வடகறிக்கு யு சான்றுதான்

கவர்ச்சிக்குப் பெயர் போன நடிகையான சன்னி லியோன் நடித்த, வடகறி படத்துக்கு யு சான்று வழங்கியுள்ளது சென்சார் குழு.

சன்னி லியோன் நடிச்சும் வடகறிக்கு யு சான்றுதான்

இந்திய வம்சாவளி நடிகையான சன்னி லியோன், கனடாவில் செட்டிலாகி நீலப் படங்களில் கொடிகட்டிப் பறந்து கொண்டிருந்தார்.

திடீரென அவரை ஒரு நாள் புடவை கட்டி பாலிவுட் நடிகையாகக் காட்டினர் ஜிஸ்ம் படத்தில். நிர்வாணமாகவே நடித்துக் கொண்டிருந்த பெண்ணை புடவையோடு பார்த்ததில் ஈர்ப்பு அதிகரித்துவிட, தொடர்ந்து பாலிவுட்டில் வாய்ப்புகள் குவிகின்றன.

இந்த நிலையில், அவருக்குப் பெரும் தொகை கொடுத்து தமிழுக்கும் அழைத்து வந்துவிட்டனர். முக அழகிரி மகன் தயாநிதி தயாரிக்கும் வடகறி படத்தில் அவர் ஹீரோ ஜெய்யுடன் ஒரு கவர்ச்சிக் குத்தாட்டம் போட்டுள்ளார்.

இதனால் படத்துக்கு சென்சாரில் ஏ அல்லது யு ஏ கிடைக்கும் என எதிர்ப்பார்த்த நிலையில், சென்சார் குழு படத்தைப் பார்த்தது. எந்த கட்டும் சொல்லாமல் யு சான்று கொடுத்துள்ளனர்.

முன்னாள் நீலப்பட நடிகை நடித்த ஒரு படம் இந்தியாவில் யு சான்று பெறுவது இதுவே முதல் முறை.

ஒருவேளை அவர்கள் எதிர்ப்பார்த்த அளவுக்கு கவர்ச்சி இல்லையோ

 

வருத்தப்படாத வாலிபர் சங்க தலைவருக்கு எதிராக குழிதோண்டும் 2 ஹீரோக்கள்

சென்னை: வருத்தப்படாத வாலிபர் சங்க தலைவருக்கு எதிராக இரண்டு இளம் ஹீரோக்கள் செயல்பட்டு வருகிறார்களாம்.

கோலிவுட்டில் இளம்ஹீரோக்கள் ஒருவரையொருவர் மேடையில் புகழ்ந்து பேசினாலும் நிஜத்தில் ஒருவர் படம் ஊத்திக் கொண்டால் மற்றவர்கள் பார்ட்டி வைத்து கொண்டாடுகிறார்களாம். இந்நிலையில் வருத்தப்படாத வாலிபர் சங்க தலைவர், வெற்றி சக்ரவர்த்தி நடிகர், பசங்க நடிகர் ஆகியோருக்கு இடையில் கடும் போட்டி நிலவுகிறது.

அதில் வெற்றி சக்ரவர்த்தியும், பசங்க நடிகரும் சேர்ந்து கொண்டு வாலிபர் சங்க தலைவருக்கு எதிராக வேலைகள் செய்கிறார்களாம். தங்களை தேடி வரும் வாய்ப்புகள் எதுவும் வாலிபர் சங்க தலைவருக்கு செல்லக் கூடாது என்பதில் அந்த இருவரும் உறுதியாக உள்ளார்களாம். அதனால் அவர்கள் சம்பளத்தையும் குறைத்துள்ளார்களாம். வாலிபர் சங்க தலைவரை தேடிச் செல்லும் வாய்ப்புகளை பெற அந்த 2 ஹீரோக்களும் முனைப்பாக உள்ளார்களாம்.

 

மோடி பிரதமரானதால் நாட்டை விட்டு வெளியேறுவேனா... ஷாரூக் விளக்கம்

மும்பை: பிரதமராகப் போகும் மோடிக்கு எதிராக தான் டுவிட்டரில் கருத்து எதுவும் பதியவில்லை என விளக்கமளித்துள்ளார் நடிகர் ஷாரூக்கான்.

நடந்து முடிந்த 16வது லோக்சபா தேர்தலில் பாஜக அதிக இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. அதனைத் தொடர்ந்து அக்கட்சியின் பிரதமர் வேட்பாளர் மோடி வரும் 26ம் தேதி பிரதமராக பதவியேற்க இருக்கிறார்.

மோடி பிரதமரானதால் நாட்டை விட்டு வெளியேறுவேனா... ஷாரூக் விளக்கம்

இந்நிலையில் கடந்த வெள்ளியன்று, அதாவது தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்ட அன்று, ‘மோடி வெற்றி பெற்றால் தான் இந்தியாவை விட்டே வெளியே சென்று விடுவதாக' இந்தி நடிகர் ஷாரூக்கான் டுவிட்டரில் தெரிவித்திருப்பதாக வெளியான செய்தியால் பரபரப்பு ஏற்பட்டது.

ஆனால், அத்தகவலை மறுத்துள்ளார் ஷாரூக். இது தொடர்பாக ஷாரூக் டுவிட்டரில் வெளியிட்டுள்ள மறுப்புத் தகவலில் கூறியிருப்பதாவது :-

டுபாக்கூர் டுவிட்....

நான் போடாத, டிவீட் பற்றி சில முட்டாள்கள் பேசி வருகிறார்கள். அவர்களுக்குப் பதில் சொல்ல இதுதான் நல்ல நேரம். அது ஒரு போலியான டுபாக்கூர் டிவிட். அதற்கு மேல் சொல்வதற்கு இல்லை.

இது தான் உண்மையான டுவிட்...

உண்மையில், மே 16ம் தேதி ஷாருக்கான் கொடுத்திருந்த ஒரு டிவிட்டில், ‘மக்கள் என்ன மாதிரியான ஒரு உறுதியான தீர்ப்பை அளித்துள்ளனர். இதன் மூலம் மாற்றம் ஒன்றே மாறாதது என்பதை நிரூபித்துள்ளனர். இப்போது மிகவும் வலிமையான, உண்மையான நம்பிக்கையான இந்தியாவுக்காக அனைவரும் இணைந்து செயல்பட வேண்டும் என்று கூறியிருந்தார்.

குழப்பத்திற்கு காரணம்...

இந்தக் குழப்பம் உருவாக முக்கியக் காரணம் நடிகர் கமல் ஆர்.கான் தான். காரணம் அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் தன்னை சுருக்கமாக கே.ஆர்.கே எனக் குறிப்பிட்டுள்ளார்.

எனது வாக்குறுதி...

முன்னாள் பிக்பாஸ் பக்கேற்பாளரான கமல் கான் தான் தனது டுவிட்டர் பக்கத்தில், ‘ஷாரூக் மற்றும் சிலர் தனது வாக்குறுதிகளை நிறைவேற்றுவார்களா எனத் தெரியவில்லை. ஆனால், மோடி பிரதமரானால் நான் முன்பே கூறியபடி இந்தியாவை விட்டே சென்று விடுவேன்'எனக் கூறியிருந்தார்.

எழுத்துப் பிழை...

ஷாரூக்கானை சுருக்கமாக எஸ்.ஆர்.கே எனக் குறிப்பிடுவது வழக்கம். இந்த ஒரு எழுத்துப் பிழையால் தான் இந்தக் குழப்பம் உண்டாகியுள்ளது.

 

கத்தி படத்தில் விஜய்க்காக பாட்டெழுதும் 'கவிஞர்' தனுஷ்!

ஏ ஆர் முருகதாஸ் இயக்கும் கத்தி படத்தில் விஜய்க்காக ஒரு பாடல் எழுதுகிறார் நடிகரும், அவ்வப்போது தன் படங்களில் மட்டும் பாடலாசிரியராக அவதாரம் எடுத்து வந்தவருமான தனுஷ்.

துப்பாக்கி படத்தின் வெற்றிக்குப் பிறகு விஜய்-ஏ.ஆர்.முருகதாஸ் மீண்டும் இணைந்திருக்கும் படம் கத்தி.

இப்படத்தின் ஷூட்டிங் கிட்டத்தட்ட இறுதிக் கட்டத்துக்கு வந்திருக்கிறது. விஜய்க்கு ஜோடியாக சமந்தா நடிக்க, அனிருத் இசையமைக்கிறார். இந்தப் படத்துல மொத்தம் 5 பாடல்கள்.

கத்தி படத்தில் விஜய்க்காக பாட்டெழுதும் 'கவிஞர்' தனுஷ்!

இவற்றில் ஒரு பாடலைத்தான் தனுஷ் எழுதப் போகிறார். இந்தப் பாடலை பாடப் போகிறவர் விஜய் என்பது இன்னொரு ஹைலைட்.

விஜய்யின் பெரிய ரசிகராக தன்னைக் காட்டிக் கொள்பவர் தனுஷ். அதனால் இந்தப் பாடல் எழுத வாய்ப்பு கொடுக்கப்பட்டதா என்றால்... இல்லை.. இசையமைப்பாளர் அனிருத், தனுஷின் கண்டுபிடிப்பல்லவா.. அந்த நன்றி விசுவாசம்தான் தனுஷை பாடல் எழுத வைத்திருக்கிறது!

 

இணையதளத்தில் கவர்ச்சி படம்: நடிகை ஸ்ருதி ஹாஸன் போலீசில் புகார்

ஹைதராபாத்: தன் அனுமதி இல்லாமல் தன்னை தகாத கோணங்களில் புகைப்படம் எடுத்து இணையதளத்தில் வெளியிட்டதை எதிர்த்து நடிகை ஸ்ருதி ஹாஸன் போலீசில் புகார் கொடுத்துள்ளார்.

நடிகை ஸ்ருதி ஹாஸன் ராம் சரண் தேஜாவுடன் சேர்ந்து நடித்த தெலுங்கு படம் யவடு. யவடு கடந்த ஜனவரி மாதம் 11ம் தேதி ரிலீஸானது. இந்நிலையில் யவடு படத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடித்தபோது ஸ்ருதியை தகாத கோணங்களில் புகைப்படம் எடுத்து அதை இணையதளத்தில் அனுமதி இன்றி வெளியிட்டுள்ளனர்.

இணையதளத்தில் கவர்ச்சி படம்: நடிகை ஸ்ருதி ஹாஸன் போலீசில் புகார்

இதையடுத்து ஸ்ருதி ஹைதராபாத் போலீசில் புகார் கொடுத்தார். இந்த விவகாரம் சிஐடி சட்டப்பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளது.

ஸ்ருதி நடித்த தெலுங்கு படமான ரேஸ் குர்ரத்தில் அவர் படுகவர்ச்சியாக போஸ் கொடுத்திருந்த புகைப்படங்கள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.

 

பரத் படத்துக்காக பாடிய காங்கோ நாட்டு ராப் பாடகர் யபாமா ஜோ!

ஐந்தாம் தலைமுறை சித்த வைத்திய சிகாமணி படத்தில் இடம் பெறும் ஒரு பாடலை காங்கோ நாட்டு ராப் பாடகர் யபாமா ஜோவைப் பாட வைத்துள்ளனர்.

இயக்குனர் கே பாலசந்தர் நல்லாசியுடன் ராஜம் புரொடக்ஷன்ஸ் சார்பில் புஷ்பா கந்தசாமி மற்றும் எஸ் மோகன் இணைந்து தயாரிக்கும் படம் 'ஐந்தாம் தலைமுறை சித்தவைத்திய சிகாமணி'. பரத் - நந்திதா ஜோடியாக நடிக்கின்றனர்.

பரத் படத்துக்காக பாடிய காங்கோ நாட்டு ராப் பாடகர் யபாமா ஜோ!

இதன் படப்பிடிப்பு பழனி, கோயம்புத்தூர், பொள்ளாச்சி மற்றும் கேரளா போன்ற இடங்களில் பரபரப்பாக நடைபெற்று வருகிறது.

இதில் ஐந்து பாடல்கள் இடம் பெற்றுள்ளன. 555 படத்துக்கு இசையமைத்த சைமன் இசையமைத்துள்ளார்.

பரத் படத்துக்காக பாடிய காங்கோ நாட்டு ராப் பாடகர் யபாமா ஜோ!

இப்படத்தில் கானா பாலா எழுதிய ஒரு பாடலுக்கு இன்னொருவர் பாடினால் புதுமையாக இருக்குமே என்று விரும்பினார் சைமன். எனவே, காங்கோ நாட்டைச் சேர்ந்த ராப் இசைக் கலைஞர் யபாமா ஜோ (YABAMA JO) -வை வைத்து "ஏழரை..." என்ற பாடலை பாட வைத்துள்ளார்.

யுகபாரதி எழுதிய "ஒண்ணுனா ரெண்டு..." என்ற பாடலை விஜய் ஆண்டனி பாடியுள்ளார். கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார் எல் ஜி ரவிச்சந்தர்.