'தலைவா'வை தமிழகத்தில் திரையிடமுடியாது!- சென்னை, செங்கல்பட்டு தியேட்டர் உரிமையாளர்கள் அதிரடி

சென்னை: அரசின் ஒத்துழைப்பின்றி தலைவா படத்தைத் தமிழகத்தில் திரையிட முடியாது என சென்னை - செங்கல்பட்டு மாவட்ட திரையரங்க உரிமையாளர்கள் சங்கம் அதிரடியாக அறிவித்துள்ளது.

விஜய் நடித்த தலைவா படத்தை தமிழகத்தில் 500 ப்ளஸ் அரங்குகளிலும், வேறு சில நாடுகளிலும் திரையிட முடிவு செய்திருந்தனர். கேரளா, ஆந்திரா, கர்நாடகா மற்றும் மும்பையில் இந்தப் படம் வெளியாகிறது. நாளை மறுநாள் ரிலீஸ் என அறிவிக்கப்பட்ட நிலையில் இந்தப் படத்தைத் திரையிடுவதில் பல்வேறு சிக்கல்கள் எழுந்துள்ளன.

'தலைவா'வை தமிழகத்தில் திரையிடமுடியாது!- சென்னை, செங்கல்பட்டு தியேட்டர் உரிமையாளர்கள் அதிரடி  

இப்போது படம் வெளியாகுமா என்ற நிலை உருவாகியுள்ளது.

இந்தப் படத்துக்கு தலைவா என தலைப்பு வைத்ததிலிருந்தே சிக்கல்தான். காரணம், அடுத்த சிஎம் என்ற இலக்கை முன்வைத்து விஜய்யும் அவர் தந்தை எஸ்ஏ சந்திரசேகரும் பேசி வந்த பேச்சுகள் ஆட்சியாளர்களை மிகவும் அதிருப்திக்குள்ளாக்கியிருப்பதாகக் கூறப்படுகிறது.

படத்தின் கதையும் அரசியல் களத்தை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுவதால், படத்துக்கு வரிவிலக்கு உள்பட எந்த சலுகையும் அரசுத் தரப்பிலிருந்து கிடைக்காத நிலை.

இந்த சூழலில் படம் வரும 9-ம் தேதி, அதாவது நாளை மறுநாள் உலகெங்கும் 2000 அரங்குகளில் வெளியாகும் என தயாரிப்பாளர் அறிவித்தார்.

அந்த செய்தி வெளிவந்த அடுத்த சில நிமிடங்களில் படத்தின் முன்பதிவு நிறுத்தப்பட்டது. மேலும் படத்தை வெளியிடுவதில்லை என்றும் திரையரங்கு உரிமையாளர்கள் தரப்பில் பேச ஆரம்பித்தனர்.

திரையரங்கு உரிமையாளர்கள் அவசர கூட்டம்

இந்த சூழலில் சென்னை - செங்கல்பட்டு மாவட்ட திரையரங்க உரிமையாளர்கள் சங்கத்தின் அவசர கூட்டம் இன்று சென்னையில் கூடியது.

அரசுக்கு எதிரான படமாகக் கருதப்படும் தலைவாவை வெளியிட அரசின் ஒத்துழைப்பு, தியேட்டர்களுக்குப் பாதுகாப்பு மிகவும் அவசியம். இந்த இரண்டும் உறுதி செய்யப்படாத நிலையில் தலைவா படத்தை வெளியிடுவது நல்லதல்ல என்ற உண்மை புரிந்து, தமிழகமெங்கும் படத்தை வெளியிடுவதை நிறுத்த முடிவு செய்துள்ளோம். அரசின் ஒத்துழைப்பும் பாதுகாப்பும் உறுதி செய்யப்பட்டால் மட்டுமே இந்தப் படத்தை திரையிடுவது குறித்து பரிசீலிப்போம், என அறிவித்துள்ளனர்.

இதனால் திரையுலகிலும் விஜய் ரசிகர்கள் மத்தியிலும் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

 

தலைவா படத்தைத் திரையிட்டால் பாதுகாப்பு தர முடியாது - போலீஸ் கைவிரிப்பு

தலைவா படத்தைத் திரையிட்டால் பாதுகாப்பு தர முடியாது - போலீஸ் கைவிரிப்பு

சென்னை: தலைவா படத்தைத் திரையிட்டால் ஏற்படும் சட்டம் ஒழுங்குப் பிரச்சினையைக் கட்டுப்படுத்துவது கஷ்டம். தியேட்டர்களுக்கு பாதுகாப்புத் தர முடியாது என உள்ளூர் போலீஸ் தெரிவித்துள்ளதாக தியேட்டர் உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

தலைவா படம் நாளை மறுநாள் ரிலீசாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில், அந்தப் படத்துக்கு எதிராக ஏகப்பட்ட சிக்கல்கள் கிளம்பியுள்ளன.

படத்தை வெளியிட முடியாது என்று சென்னை - செங்கை மாவட்ட திரையரங்க உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ள நிலையில், படம் வெளியாகும் திரையரங்குகளுக்கு தங்களால் பாதுகாப்பு தரமுடியாது என அந்தந்த மாவட்ட போலீசார் திரையரங்க உரிமையாளர்களுக்கு வாய் மொழியாகக் கூறிவிட்டார்களாம்.

சேலம், தர்மபுரி, நாமக்கல் மாவட்டங்களில் தலைவா படம் வெளியாகவிருந்த திரையரங்க உரிமையாளர்கள், தங்களை நேரில் அழைத்து இந்த விஷயத்தைப் போலீசார் கூறியதாகத் தெரிவித்தனர்.

சென்னையின் மிக முக்கியமான விநியோகஸ்தரும், திரையரங்க உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவமருமான அபிராமி ராமநாதனை நேரில் அழைத்த தென் சென்னையின் ஆளுங்கட்சி எம்எல்ஏவும் முன்னாள் அமைச்சருமான ஒருவர், 'இந்தப் படத்தை திரையிடுவது நல்லதாகப் படவில்லை. பாத்து இருந்துக்கங்க' என்று அறிவுறுத்தியதாகக் கூறப்படுகிறது.

 

யு.எஃப்.எக்ஸ் சேனலின் ‘ஃபேம் புக்’: வெற்றிமாறன் பேட்டி

யு.எஃப்.எக்ஸ் சேனலின் ‘ஃபேம் புக்’: வெற்றிமாறன் பேட்டி

யு.எஃப்.எக்ஸ். சேனலில் பிரபலங்களின் சாதனைகள் மற்றும் தற்கால நிகழ்வுகளைச் சொல்லும் நிகழ்ச்சி 'ஃபேம் புக்.'

நடிகர் - நடிகைகள், இசை, விளையாட்டு, தொழில் முனைவோர் என ஒவ்வொரு துறையிலும் வரலாறு படைத்த சாதனையாளர்களை நேரடியாகப் பேட்டி காணும் நிகழ்ச்சி இது.

பிரபலங்கள் செய்த சாதனை என்ன, அதற்காக அவர்கள் என்னென்ன முயற்சிகளை மேற்கொண்டனர், சாதனை படைக்க உதவி புரிந்தவர்கள் யார் போன்ற தகவல்களை, பிரபலங்கள் அவர்களாகவே பகிர்ந்து கொள்கின்றனர்.

இந்தவாரம் இயக்குநர் வெற்றிமாறன் தன்னுடைய பெர்சனல் பக்கங்களை புரட்டிப் பார்க்கிறார். வாரம்தோறும் வெள்ளிக்கிழமை இரவு 8.30 மணி முதல் 9 மணி வரை யு.எஃப்.எக்ஸ். சேனலில் இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது. இதன் மறு ஒளிபரப்பு செவ்வாய் மற்றும் வியாழக்கிழமைகளில் மாலை 6.30 மணிக்கும், சனிக்கிழமை மாலை 4 மணிக்கும் ஒளிபரப்பாகிறது.

 

தலைவா... 4000 தியேட்டரெல்லாம் இல்லீங்க!- தயாரிப்பாளர் அறிவிப்பு

தலைவா... 4000 தியேட்டரெல்லாம் இல்லீங்க!- தயாரிப்பாளர் அறிவிப்பு  

சென்னை: தலைவா படம் 2000 தியேட்டர்களில் மட்டுமே ரிலீசாகவிருப்பதாக அதன் தயாரிப்பாளர் அறிவித்துள்ளார்.

விஜய் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள தலைவா படம் நாளை மறுதினம் வெளியாகிறது.

இந்தப் படம் 4000 அரங்குகளில் வெளியாவதாக செய்தி பரவி வந்தது. உலகம் முழுவதும் வெளியாகும் ஹாலிவுட் படங்களே அதிகபட்சம் 3500 தியேட்டர்களில் வெளியாவது கடினம் என்றுள்ள சூழலில், விஜய் நடித்த தமிழ்ப் படம் 4000 அரங்குகளில் வெளியாவதாக வந்த செய்திகள் பலரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது.

இந்த நிலையில் படம் எத்தனை அரங்குகளில் வெளியாகிறது என்ற தகவலை தயாரிப்பாளர் சந்திரபிரகாஷ் ஜெயினே அறிவித்துள்ளார்.

தலைவா படம் தமிழகம், ஆந்திரா, கேரளா உள்பட உலகெங்கும் 2000 அரங்குகளில் வெளியாகும் என அவர் கூறியுள்ளார்.

தமிழகத்தில் 500 அரங்குகளிலும், ஆந்திராவில் 300 அரங்குகளிலும், கேரளாவில் 100 அரங்குகளிலும், மும்பையில் 100 தியேட்டர்களிலும், மலேசியா - சிங்கப்பூரில் 50 தியேட்டர்களிலும் வெளியிடத் திட்டமிட்டிருப்பதாக அவர் கூறினார். பிரிட்டன், அமெரிக்காவில் 100 தியேட்டர்களுக்கு மேல் வெளியாகிறதாம் தலைவா.

 

அடப்பாவிகளா... அஜீத்தின் ஆரம்பம் பட காட்சியை 'நெட்'டில் லீக் பண்ணிட்டாங்களாம்!

சென்னை: அஜீத் குமாரின் ஆரம்பம் படத்தில் வரும் ஒரு காட்சி இன்டர்நெட்டில் கசிந்துள்ளது.

விஷ்ணுவர்தன் இயக்கத்தில் அஜீத் குமார், நயன்தாரா, ஆர்யா, டாப்ஸி உள்ளிட்டோர் நடித்துள்ள ஆரம்பம் படம் செப்டம்பரில் ரிலீஸாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. படத்தின் இசை வெளியீட்டு விழா இந்த மாதம் நடக்கலாம் என்று கூறப்படுகிறது.

அடப்பாவிகளா... அஜீத்தின் ஆரம்பம் பட காட்சியை 'நெட்'டில் லீக் பண்ணிட்டாங்களாம்!  

இந்த படத்திற்காக அஜீத் குமார் ஜிம்முக்கு சென்று உடலை கும்மென்று ஆக்கினார். படத்தில் சண்டை காட்சிகளில் அவர் கார், பைக், படகு ஆகியவற்றில் பல சாகசங்களை செய்துள்ளார்.

இந்நிலையில் ஆரம்பம் படத்தில் வரும் ஒரு காட்சியை யாரோ இன்டர்நெட்டில் வெளியிட்டுள்ளனர்.

 

'தலைவா' டிக்கெட் முன்பதிவை திடீர் என்று நிறுத்திய சென்னை தியேட்டர்கள்

சென்னை: சென்னை தியேட்டர்களில் தலைவா படத்திற்கான டிக்கெட் முன்பதிவு திடீர் என்று நிறுத்தப்பட்டுள்ளது.

விஜய்யின் தலைவா படம் ரம்ஜான் பண்டிகை தினமான நாளை மறுநாள் உலகமெங்கும் ரிலீஸ் ஆகிறது. விஜய் ரசிகர்கள் தலைவா படத்தின் முதல்நாள் முதல் காட்சியை பார்க்க டிக்கெட்டை முன்பதிவு செய்து வருகின்றனர்.

'தலைவா' டிக்கெட் முன்பதிவை திடீர் என்று நிறுத்திய சென்னை தியேட்டர்கள்

இந்நிலையில் சென்னை நகரில் உள்ள தியேட்டர்கள் தலைவா பட டிக்கெட் முன்பதிவை திடீர் என்று இன்று நிறுத்தியுள்ளன. இதற்கான காரணம் இன்னும் தெரியவில்லை. இந்த பிரச்சனைக்கான காரணம் விரைவில் தெரிய வரும்.

தலைவா தமிழகத்தில் மட்டும் 978 ஸ்கிரீன்களில் ரிலீஸ் ஆகிறது என்று தகவல் கிடைத்துள்ளது.