சரியோ தவறோ... படம் நடிக்கிறாரோ இல்லையோ... தன்னைப் பற்றிய செய்தி எப்போதும் மீடியாவில் இருக்கும்படி பார்த்துக் கொள்வதில் கில்லாடி சிம்பு.
அவரது படங்கள் படு சொதப்பலாக இருந்தாலும் கூட ஏதாவது ஒரு சர்ச்சையையோ பரபரப்பையோ கிளறிவிட்டுவிடுவார்.
நடிக்க ஆரம்பித்த புதிதில் அறிமுக நடிகை முதல் கும்மென்று இருக்கும் அனுபவசாலி நடிகைகள் வரை அனைவருடனும் கிசுகிசுக்கப்பட்டவர் சிம்பு!
அதை அவர் மறுக்கவில்லை. அதைவிட முக்கியம் அவர் அப்பா டி ராஜேந்தர், 'அவருக்கு வாலிப வயசு... அப்படித்தான் இருப்பார்," என்று கூறி ஒதுங்கிக் கொண்டார்.
திடீரென்று சில மாதங்களாக ஆன்மீகவாதியாக வேடம் தரித்தார் சிம்பு. செம ரெஸ்பான்ஸ். எங்கும் அவரது இளம் துறவுக் கோலம்தான் செய்தி.
அதுவும் ஒரு குறுகிய காலம்வரைதான் நீடித்தது. இப்போது தடாலடியாக திருமணத்துக்கு அவர் தயாராவதாகவும், அவரைத் திருமணம் செய்யும் மணப் பெண் பெயரை அறிவிக்கப்போவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
தி நகரில் சிம்பு கட்டியிருக்கும் புதிய வீட்டின் திறப்பு விழாவுக்குப் பிறகு இந்தப் பெயரை வெளியிடப் போகிறாராம்.
தன்னுடன் வாலு, வேட்டை மன்னன் படங்களில் ஜோடியாக நடித்த ஹன்சிகாதான் சிம்புவின் கைப்பிடிக்கப் போகும் காதலி என அதற்குள் யூகங்கள் றெக்கை கட்டி முளைத்துள்ளன.