ஓஹோ சம்பளம்... மீண்டும் நம்பர் ஒன் ஆனார் நயன்தாரா!


Nayanthara
சிம்பு, தனுஷ், பிரபுதேவாவுடன் கிசுகிசுக்கப்பட்டு, பின்னர் கொஞ்ச நாள் கோடம்பாக்கம் பக்கமே வராமலிருந்து, மீண்டும் நடிக்க ஆரம்பித்துள்ள நயன்தாராதான் இன்றைக்கு கோடம்பாக்கத்தின் நம்பர் ஒன் நாயகி.

தயாரிப்பாளர்கள் தரும் வரவேற்பு, கொடுக்கத் தயாராக இருக்கும் சம்பளம் மற்றும் ரசிகர்களின் ஆர்வம் என பல வகையிலும் நயன்தாரா பக்கமே தராசு சாய்வதால், அவருக்கு இந்த அந்தஸ்து கிட்டியுள்ளது.

நயன்தாராவுக்கு இன்றைய தேதியில் சம்பளம் ரூ 1.5 முதல் 1.75 கோடி என்கிறது கோடம்பாக்கம் வட்டாராம்.

இவரோடு ஒப்பிட்டால், இன்றுள்ள மற்ற நடிகைகள் பலரும் எங்கேயோ இருக்கிறார்கள்.

இவருக்கு அடுத்த நிலையில் அனுஷ்கா, காஜல் அகர்வால் மற்றும் தமன்னா ஆகியோர் உள்ளனர். த்ரிஷாவும் இந்த முதல் நிலை நாயகிகள் லிஸ்டிலேயே உள்ளது குறிப்பிடத்தக்கது, இவர்கள் சம்பளம் ரூ 1 முதல் 1.2 கோடி வரை போகிறது.

அமலா பால் எப்போது இந்த கோடீஸ்வர நடிகைகள் பட்டியலுக்கு வருவது என துடித்துக் கொண்டிருக்கிறார். இன்னும் ஒரு படம், ஒரே ஒரு படம் ஓடிவிட்டால், அவர் தயங்காமல் ஒற்றை விரலைக் காட்டிவிடுவார்!
 

மருமகள் நடத்திய பேஷன் ஷோவில் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி


Azhagiri
ஊனமுற்ற குழந்தைகளுக்காக நிதி திரட்ட தன் மருமகள் அனுஷா நடத்திய பேஷன் ஷோவை மனைவி காந்தியுடன் வந்து பார்த்தார் மத்திய அமைச்சர் முக அழகிரி.

ஊனமுற்ற குழந்தைகளுக்கு நிதி திரட்ட நடிகர்-நடிகைகளின் ஆடை அலங்கார அணி வகுப்பு நிகழ்ச்சி கிண்டி லீமெரிடியன் ஓட்டலில் நடந்தது. தயாரிப்பாளர் தயாநிதி அழகிரியின் மனைவி அனுஷா 'நெபர்டரி' அமைப்பு மூலம் இந்த நிகழ்ச்சிகளுக்கான ஏற்பாடுகளை செய்து இருந்தார்.

நடிகர்-நடிகைகள் கண்கவரும் உடையுடன் மேடையில் தோன்றினர். மாடல் அழகிகளும் அணி வகுத்தார்கள் நடிகர்கள் ஆர்யா, ஜீவா, சித்தார்த், மகத், ஷர்வானந்த் ஆகியோர் விதவிதமான தோற்றங்களில் தோன்றினர்.

ஒருகல் ஒரு கண்ணாடி என்ற ஒரே படத்தின் மூலம் டாப் ஹீரோக்களுக்கு இணையாக உயர்ந்துள்ள உதயநிதி ஸ்டாலின் தன் மனைவி கிருத்திகாவுடன் நிகழ்ச்சிக்கு வந்திருந்தார்.

நடிகைகள் சோனியா அகர்வால், பார்வதி ஒமனகுட்டன், டாப்சி, பூஜா ஹெக்டே, இந்தி நடிகை நர்கிஸ் ஆகியோர் கவர்ச்சி ஆடைகளில் அணிவகுத்து ரசிகர்கள் கவர்ந்தனர்.

சோனியா அகர்வாலும் அணி வகுப்பில் பங்கேற்றார். மத்திய ரசாயனம் மற்றும் உரத்துறை அமைச்சர் மு.க. அழகிரி, அவர் மனைவி காந்தி அழகிரி, இயக்குநர் கேஎஸ் ரவிக்குமார் உள்பட பலரும் திரளாகக் கலந்து கொண்டனர்.
 

அதெல்லாம் ஒரு பொதுக்குழுவா... நாங்கதான் உண்மையான தயாரிப்பாளர் சங்கம் - கலைப்புலி தாணு


kalaipuli thaanu
சென்னை: பொதுக்குழு என்ற பெயரில் சில தயாரிப்பாளர்கள் சேர்ந்து எங்களை நீக்கிவிட்டதாகக் கூறியிருப்பது செல்லாது. நாங்களே உண்மையான தயாரிப்பாளர் சங்கம். பெப்சியுடன் நாங்கள்தான் பேச்சு நடத்துவோம், என கலைப்புலி தாணு கூறியுள்ளார்.

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் உடைந்துள்ளது. அதிருப்தி கோஷ்டியினர் சென்னையில் நேற்று போட்டி பொதுக்குழுவை கூட்டி சங்கத்தின் தலைவரான எஸ்.ஏ.சந்திரசேகரன், செயலாளர் தேனப்பன், பொருளாளர் கலைப்புலி தாணு ஆகியோரை 6 மாதங்கள் சங்கத்தில் இருந்து நீக்கியதாக அறிவித்தனர்.

இப்ராகிம் ராவுத்தர் தலைமையிலான அட்ஹாக் கமிட்டிக்கும் அங்கீகாரம் வழங்கினர்.

ஆனால் இதை எஸ் ஏ சந்திரசேகரன் உள்ளிட்ட தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகள் ஏற்கவில்லை. தயாரிப்பாளர் சங்கத்துக்கு தேர்தல் மூலம் முறைப்படி தேர்வு செய்யப்பட்ட தங்களை நீக்க இவர்கள் யார் என்று கேள்வி எழுப்பியுள்ளனர்.

இதுகுறித்து தயாரிப்பாளர் சங்க செயலாளர் பி.எல்.தேன்னப்பன், பொருளாளர் கலைப்புலி தாணு ஆகியோர் கூறுகையில், "தயாரிப்பாளர் சங்க பொதுக்குழு விதிமுறைப்படி கூட்டப்படவில்லை. செயற்குழு அனுமதியில்லாமல் கூட்டப்பட்டு உள்ளது. அதில் உண்மையான பொதுக்குழு உறுப்பினர்கள் பங்கேற்கவில்லை. எனவே எங்களையும் எஸ்.ஏ.சந்திரசேகரனையும் நீக்கியது செல்லாது.

ஏற்கனவே சங்கத்தின் நிர்வாகிகள் பலர் ராஜினாமா செய்து விட்டதாகக் கூறினர். ஆனால் ராஜினாமாவை அவர்கள் வாபஸ் பெற்றுவிட்டனர். அப்புறம் அட்ஹாக் கமிட்டி எங்கே வந்தது.

ராஜினாமா செய்ததாக சொல்லப்பட்ட எடிட்டர் மோகன், கோவை தம்பி, தேனப்பன், மனோஜ்குமார், அமுதா துரைராஜ், சங்கிலிமுருகன், பவித்ரன், ராதாரவி, ஆர்.மாதேஷ் கப்பார், சந்திரபிரகாஷ் ஜெயின் உள்ளிட்டோர் பொதுக்குழுவில் பங்கேற்கவில்லை. இவர்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்த சத்யஜோதி தியாகராஜன், கே.ராஜன் ஆகியோரும் பொதுக்குழுவில் கலந்து கொள்ளவில்லை.

எனவே இந்த பொதுக்குழு சட்டத்துக்கு உட்படாதது. அவர்கள் முடிவை பொருட்படுத்த வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை. தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகளாக நாங்கள் தொடர்ந்து செயல்படுகிறோம். பதவிக்காலம் உள்ளவரை நாங்கள் இருப்போம். நாங்கள் நியமித்த குழுவினர்தான் பெப்சியுடன் சம்பள பிரச்சினை குறித்து பேச்சுவார்த்தை நடத்துவார்கள்," என்றனர்.

இதன் மூலம், யாருடன் சம்பளப் பிரச்சினை குறித்து பேசுவது என்ற குழப்பம் பெப்சி நிர்வாகிகளுக்கு ஏற்பட்டுள்ளது.
 

விமர்சகர்களுக்காக படம் எடுக்கவில்லை: திலீப்

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
திலீப், லட்சுமி ராய், பிஜூ மேனன் நடித்துள்ள மலையாள படம், 'மாயமோகினி'. ஜோஸ் தாமஸ் இயக்கியுள்ள இந்த படத்தில் இடைவேளை வரை பெண்ணாக நடித்துள்ளார் திலீப். இந்தப் படம் ஹிட்டாகியுள்ள நிலையில், படத்தில் இரட்டை அர்த்த வசனங்கள் அதிகமாக உள்ளது என்ற புகார் எழுந்துள்ளது. இதுபற்றி திலீப் கூறியதாவது: விமர்சகர்கள் எதையாவது சொல்லிக்கொண்டே இருப்பார்கள். அவர்களுக்காக படம் எடுக்கப்படுவதில்லை. 'டெல்லி பெல்லி', 'டர்ட்டி பிக்சர்' போன்ற படங்களை பாராட்டியவர்கள்தான் என் படங்களை விமர்சிக்கிறார்கள். அந்தப் படங்களிலும் இரட்டை அர்த்த வசனங்கள் இருந்தன. எனது படங்களில் வல்கராக எந்த காட்சியையும் வசனத்தையும் வைக்க மாட்டேன். படத்தின் வெற்றியையும் தோல்வியையும் ஒரே மாதிரியாகத்தான் எடுத்துக்கொள்கிறேன். ஒரே படம் ஹிட்டானால் உயரத்துக்கு சென்றுவிட்டதாக நினைக்கவில்லை. இங்கு உயரம் என்ற ஒன்று இல்லை. பெண்ணாக நடிப்பதற்கு என் மனைவி உட்பட என்னைச் சுற்றி இருக்கும் நிறைய பெண்களை இன்ஸ்பிரேஷனாக எடுத்துக்கொண்டேன். இப்படி நடிக்க கடுமையான டயட்டில் இருந்து எட்டு கிலோ உடல் எடையை குறைத்தேன். ரசிகர்கள் பாராட்டுவது மகிழ்ச்சியாக இருக்கிறது. இந்த பாராட்டுகள்தான் எனது அடுத்த படங்களை இன்னும் சிறப்பாக கொடுக்க உந்துசக்தியாக இருக்கிறது.
இவ்வாறு திலீப் கூறினார்.


 

தெலுங்கிலும் ஹோம்லியாக ஜெயிப்பேன் அஞ்சலி நம்பிக்கை

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
தெலுங்கிலும் ஹோம்லி கேரக்டரில் ஜெயிப்பேன் என்று அஞ்சலி கூறினார். அவர் மேலும் கூறியதாவது: 'எங்கேயும் எப்போதும்' தெலுங்கிலும் ஹிட்டான பிறகு நிறைய வாய்ப்புகள் வருகிறது. முதலில் தமிழ் படங்களில் மட்டும் நடித்தால் போதும் என்று நினைத்தேன். ஆனாலும் சொந்த மொழியில் நடிக்கும் வாய்ப்பை விட, மனம் வரவில்லை. முதல் படத்திலேயே வெங்கடேஷின் முறைப் பெண்ணாக நடிக்கிறேன். குடும்ப பாங்கான பெண்ணாக வருகிறேன். தெலுங்கில் வெற்றி பெற கிளாமராக நடிக்க வேண்டும் என்பதில் உடன்பாடு இல்லை. அங்கேயும் ஹோம்லி கேரக்டரில் ஜெயிப்பேன். சில படங்களுக்கு பிறகு கிளாமராக நடிப்பேன். முதலிலேயே கிளாமராக நடித்துவிட்டால் பிறகு ஹோம்லியாக நடிப்பது சிரமம். இனி தமிழ், தெலுங்கு இரண்டு மொழிகளிலும் கவனம் செலுத்துவேன்.


 

தயாரிப்பாளர் சங்க தலைவர் பதவி : எஸ்.ஏ.சந்திரசேகரன் 6 மாதம் நீக்கம்

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தலைவர் பதவியில் இருந்து எஸ்.ஏ.சந்திரசேகரனை 6 மாத காலம் நீக்கியிருப்பதாக, அட்ஹாக் கமிட்டி சார்பில் நடந்த பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. பெப்சி தொழிலாளர்களுக்கும், தயாரிப்பாளர் சங்கத்துக்கும் இடையே புதிய ஊதிய உயர்வு பேச்சுவார்த்தை நடந்து வந்தது. இதையடுத்து ஏற்பட்ட மோதலில், தயாரிப்பாளர் சங்கம் இரண்டாக உடைந்தது. எஸ்.ஏ.சந்திரசேகரன் தலைமையில் ஒரு அணியும், 'அட்ஹாக் கமிட்டி' என்ற பெயரில் அ.செ.இப்ராகிம் ராவுத்தர் தலைமையில் இன்னொரு அணியும் செயல்பட்டு வருகிறது. சமீபத்தில் தமிழக தொழிலாளர் நலத்துறை அமைச்சர் செல்லப்பாண்டியன் முன்னிலையில் நடந்த பேச்சுவார்த்தையில், பெப்சிக்கு ஆதரவாக தீர்மானத்தில் கையெழுத்து போட்டார் என்றும், இதனால் தலைவர் பதவியை எஸ்.ஏ.சந்திரசேகரன் ராஜினாமா செய்ய வேண்டும் என்றும் அட்ஹாக் கமிட்டியினர் போராட்டம் நடத்தினர். 'ராஜினாமா செய்ய முடியாது' என்று எஸ்.ஏ.சந்திரசேகரன் தெரிவித்தார். மேலும், தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகள் 20 பேர், யாரிடம் தங்கள் ராஜினாமா கடிதத்தைக் கொடுத்தனர் என்றும் கேள்வி கேட்டிருந்தார்.
இந்நிலையில் அட்ஹாக் கமிட்டி சார்பில் சென்னை நூறடி சாலையிலுள்ள ஓட்டல் ஒன்றில் நேற்று அவசர பொதுக்குழு கூட்டம் நடந்தது. அ.செ.இப்ராகிம் ராவுத்தர் தலைமை தாங்கினார். அப்போது செயலாளர் கே.முரளிதரனிடம், 19 பேர் தங்கள் ராஜினாமா கடிதத்தை அளித்தனர். அதை முக்தா சீனிவாசன் உட்பட சில மூத்த தயாரிப்பாளர்கள் படித்துப் பார்த்து ஒப்புதல் அளித்தனர். பிறகு பொதுக்குழு கூட்டம் நடந்தது. இதில் 300க்கும் மேற்பட்ட தயாரிப்பாளர்கள் கலந்துகொண்டனர். கூட்டத்தில் மாற்று அணியினர் சார்பில் ஏதாவது பிரச்னை ஏற்படலாம் என்று கருதி, போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

கூட்டத்தில் காரசார விவாதம் நடந்தது. எஸ்.ஏ.சந்திரசேகரன் மற்றும் அவரது அணியினரை தாக்கி பலர் ஆவேசமாகப் பேசினர். அப்போது தயாரிப்பாளர்கள் ரிஷிராஜ், தமிழரசன் உட்பட சிலர், எதிர்த்து குரல் கொடுத்தனர். இதையடுத்து அட்ஹாக் கமிட்டியைச் சேர்ந்தவர்கள், அவர்களை வெளியேற்றினர். இதையடுத்து நிருபர்களிடம் பேசிய இருவரும் 'இங்கு நடப்பது பொதுக்குழு கூட்டமே இல்லை. எங்கள் கருத்துகளைச் சொல்லும் உரிமை மறுக்கப்படுகிறது. இதை வன்மையாக கண்டிக்கிறோம்' என்றனர். பிறகு அவர்கள், கூட்டத்தை புறக்கணிப்பதாகச் சொல்லி, வெளியேறினர்.

பொதுக்குழு கூட்டம் முடிந்த பின், அட்ஹாக் கமிட்டியினர் தீர்மானங்கள் நிறைவேற்றினர். பின்னர்  அ.செ.இப்ராகிம் ராவுத்தர் நிருபர்களிடம் கூறியதாவது: தயாரிப்பாளர்கள், தொழிலாளர்கள் பிரச்னையை சுமூகமாக தீர்த்து வைக்க உதவிய தமிழக முதல்வருக்கும், தொழிலாளர் நலத்துறை அமைச்சருக்கும் நன்றி. தயாரிப்பாளர் சங்க நலனுக்கு எதிராக செயல்பட்ட எஸ்.ஏ.சந்திரசேகரன், கலைப்புலி எஸ்.தாணு, பி.எல்.தேனப்பன் ஆகியோரை 6 மாத காலத்திற்கு சங்கத்தை விட்டு நீக்கி வைக்க, அட்ஹாக் கமிட்டி முடிவு செய்துள்ளது. இந்த கமிட்டியின் தலைவராக நான் தேர்ந்து எடுக்கப்பட்டுள்ளேன்.

பெப்சி பேச்சுவார்த்தையை தொடர, அட்ஹாக் கமிட்டிக்கே முழு உரிமை கொடுக்கப்பட்டுள்ளது. 4 மாத காலத்துக்குள் தயாரிப்பாளர் சங்கத்துக்கு தேர்தல் நடத்துவது என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது. தயாரிப்பாளர் சங்க நிதியை நிர்வாகம் செய்யவும், காசோலைகளில் கையெழுத்து போடவும் எனக்கும், கே.முரளிதரனுக்கும் உரிமை அளிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.

பிறகு கேயார் பேசுகையில், ' 350க்கும் மேற்பட்ட தயாரிப்பாளர்கள் எங்களுக்கு ஆதரவு கொடுத்துள்ளனர். பெப்சி பேச்சுவார்த்தையை தொடர்ந்து நடத்துவோம். இதற்கு முன் 15 சங்கங்களுக்கான புதிய ஊதிய உயர்வு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மற்ற சங்கங்களுக்கான பேச்சுவார்த்தை தொடரும்'' என்றார். பெப்சியுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்துவதற்காக, அட்ஹாக் கமிட்டி சார்பில், அ.செ.இப்ராகிம் ராவுத்தர் தலைமையில் ஏ.வி.எம் முருகன், முக்தா சீனிவாசன், ஏ.வி.எம் சரவணன், கே.ஆர்.ஜி., கேயார், ஆர்.பி.சவுத்ரி, புஷ்பா கந்தசாமி, கே.ராஜன், பஞ்சு அருணாசலம், கே.முரளிதரன், டி.சிவா, ஆர்.கே. செல்வமணி, ஹென்றி, சி.வி.ராஜேந்திரன், ராதாகிருஷ்ணன், ஏ.எல்.அழகப்பன், ஞானவேல்ராஜா, வி.எம்.செல்வன், வி.சேகர், ஜெமினி ராகவா, சோழா பொன்னுரங்கம், கருணாஸ், பாலாஜி என, 24 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர்.


 

ராதிகா சுற்றிவளைப்பு : ஷூட்டிங்கில் பரபரப்பு

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
அஜ்மல், ராதிகா ஆப்தே நடிக்கும் படம், 'வெற்றிச்செல்வன்'. இதன் ஷூட்டிங் காஷ்மீரில் நடந்தது. அப்போது திடீரென்று சிலர் ரகளையில் ஈடுபட்டதாகத் தகவல் வெளியானது. இதுபற்றி படத்தின் இயக்குனர் ருத்ரனிடம் கேட்டபோது கூறியதாவது: சம்பவம் உண்மைதான். காஷ்மீரில் இருந்து தெகல்காம் செல்லும் வழியில் மலர்த்தோட்டம் ஒன்றில் ராதிகா ஆப்தே நடித்த காட்சியை படமாக்கிக் கொண்டிருந்தோம். அந்த பகுதியில் கடந்த சில வருடங்களாக ஷூட்டிங் நடக்கவில்லையாம். இதனால் வேடிக்கைப் பார்க்கக் கூட்டம் கூடியது. திடீரென்று வந்த சிலர், 'நாங்கள் காஷ்மீரிகள். நீங்கள் எப்படி இங்கு ஷூட்டிங் நடத்தலாம்' என்று கேட்டு ராதிகா ஆப்தேவை சுற்றிவளைத்து கெரோ செய்தனர். இதில் அவர் நடுங்கி விட்டார். எங்களுக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. பிறகு லோக்கல் புரொடக்ஷன் மானேஜர் ஒருவர், சமாதானம் பேசியும் கேட்காததால் அங்கிருந்து உடனடியாக வெளியேற வேண்டி வந்தது. இதையடுத்து வேறொரு இடத்தில் ஷூட்டிங் நடத்திவிட்டு திரும்பினோம்.


 

விஷால் ஜோடியாக கார்த்திகா

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
விமல், அஞ்சலி, சிவா, ஓவியா நடிக்கும் 'மசாலா கபே' படத்தை இயக்கி முடித்துள்ள சுந்தர்.சி, அடுத்து விஷால் நடிக்கும் படத்தை இயக்குகிறார். இதில் விஷால் மூன்று வேடங்களில் நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக நடிக்க பல ஹீரோயின்களிடம் பேசி வந்தனர். இப்போது 'கோ' கார்த்திகா ஒப்பந்தமாகியுள்ளார். இம்மாத இறுதியில் ஷூட்டிங் தொடங்கும் என்று தெரிகிறது. காமெடியுடன் கூடிய காதல் என்று படக்குழு தெரிவித்தது.


 

மூன்று ஹீரோக்களை இயக்குவது நட்புதான்

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
'3 பேர் 3 காதல்' படத்தில் அர்ஜுன், சேரன், விமல் நடிக்கிறார்கள். வெவ்வேறு காலகட்டத்தை சேர்ந்த ஹீரோக்களை இயக்குவது நட்புதான் என்றார் இயக்குனர் வசந்த். அவர் மேலும் கூறியதாவது: அர்ஜுன், சேரன், விமல் மூன்று பேருமே என் படத்தை விரும்புகிறவர்கள், என்னை விரும்புகிறவர்கள். அதனால் நான் கேட்டதும் சம்மதித்தார்கள். யாருக்கு முக்கியத்துவம், என்ற பேச்சுக்கு இடமில்லை. அவரவர் பங்களிப்பை அவரவர் செய்து கொடுக்கிறார்கள். இனி வரும் காலங்களில் பல ஹீரோக்கள் இணைந்து நடிக்கும் படங்கள் அதிகம் வரும். நானும் அந்த முயற்சியை எடுத்திருக்கிறேன். படம் வெளிவந்த பிறகுதான் இந்த கேரக்டரில் இவர்கள் நடித்ததுதான் சரி என்று தெரியும். மூன்று பேரை நான் இயக்குவதற்கும், என் இயக்கத்தில் அவர்கள் நடிப்பதற்கும் நட்பு மட்டுமே காரணம். என் படத்தில் பாடல்களுக்கு முக்கியத்துவம் இருக்கும். இதில் 6 பாடல்கள். நா.முத்துக்குமார் எழுதியுள்ளார். சேரன் சம்பந்தப்பட்ட பகுதிகள் படமாக்கப்பட்டு விட்டது. தற்போது அர்ஜுன் சம்பந்தப்பட்டவை படமாக்கப்பட்டு வருகிறது. அடுத்து, விமல் காட்சிகள் படமாக்கப்பட இருக்கிறது.


 

தமிழக்கு வருவது ஏன்? : ராம் உருக்கம்

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
செவந்தி மூவீஸ் சார்பில் ரவிகிஷோர் தயாரிக்கும் படம், 'ஏனென்றால் காதல் என்பேன்'. தமிழ், தெலுங்கில் தயாராகும் இந்தப் படத்தில் தெலுங்கு ஹீரோ ராம், தமன்னா நடிக்கிறார்கள். இந்தப் படத்தின் அறிமுக விழா சென்னையில் நடந்தது. இதில் ராம் பேசியதாவது: ஐதராபாத்தில் பிறந்தாலும், படித்தது, வளர்ந்தது சென்னையில்தான். 8 வருடங்களுக்கு முன்பு 'அடையாளம்' என்ற தமிழ் குறும்படத்தில் நடித்து வாய்ப்பு தேடினேன். 'காதல்', 'டிஷ்யூம்' பட வாய்ப்புகள் வந்து கடைசி நேரத்தில் கைநழுவிப்போனது. பிறகு தெலுங்கு படங்களில் நடித்தேன். ஆனால் தமிழில் நடிக்க வேண்டும் என்ற எனது கனவு நிறைவேறாமல் இருந்தது. இப்போது இந்தப் படம் மூலம் நிறைவேறியிருக்கிறது. தமிழ்நாட்டில் பிறந்து தெலுங்கில் பல வெற்றிகளை கொடுத்த கருணாகரன் இயக்கத்தில் அறிமுகமாவது இன்னும் மகிழ்ச்சியாக இருக்கிறது. காதல், காமெடி ஆக்ஷன் கலந்த கமர்சியல் படம். இதன் மூலம் தமிழ் ரசிகர்கள் என்னை ஏற்றுக் கொள்வார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது. இவ்வாறு அவர் பேசினார். நிகழ்ச்சியில் இயக்குனர்கள் ஏ.ஆர்.முருகதாஸ், லிங்குசாமி, பாலாஜி சக்திவேல், சரவணன், சசி, ஸ்டேன்லி, பாடலாசிரியர் மதன்கார்க்கி, இசை அமைப்பாளர் ஜீ.வி.பிரகாஷ்குமார், ஒளிப்பதிவாளர் ஆண்ட்ரோ, தமன்னா உட்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில், தயாரிப்பாளர் ரவிகிஷோர் நன்றி கூறினார்.


 

கவுதம் படத்தில் பாடினேனா?

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கும் படம், 'நீதானே என் பொன்வசந்தம்'. தமிழ், தெலுங்கில் உருவாகும் இந்தப் படத்தில் தமிழில் ஜீவாவும் தெலுங்கில் நானியும் ஹீரோவாக நடிக்கின்றனர். ஹீரோயினாக சமந்தா நடிக்கிறார். இளையராஜா இசை அமைக்கிறார். இந்தப் படத்தில் சமந்தா ஒரு பாடலை பாடியுள்ளதாக தகவல்கள் வெளியாயின. இதுபற்றி சமந்தாவிடம் கேட்டபோது, ''இளையராஜா இசையில் பாடும் வாய்ப்பு கிடைத்திருந்தால் சந்தோஷப்பட்டிருப்பேன். ஆனால், அப்படி ஏதும் நடக்கவில்லை'' என்று கூறியுள்ளார். தற்போது, மணிரத்னம் இயக்கும் 'கடல்' மற்றும் சித்தார்த் நடிக்கும் தெலுங்கு படத்தில் நடித்து வருகிறார் சமந்தா.


 

லிம்கா விளம்பரத்தில் நடிக்க கரீனாவுக்கு ரூ 2.5 கோடி சம்பளம்!


கோக் நிறுவனத்தின் லிம்கா குளிர்பான விளம்பரத்தில் நடிக்க நடிகை கரீனா கபூருக்கு ரூ 2.5 கோடி சம்பளம் பேசப்பட்டுள்ளது.

பாலிவுட்டில் விளம்பரங்களில் நடிக்க நடிகைகள் பெரும் ஆர்வம் காட்டுகின்றனர்.

குறிப்பாக கத்ரீனா கைப் மற்றும் கரீனா கபூருக்கு இடையே இதில் பெரும் போட்டியே நடக்கிறது.

சமீபத்தில் கத்ரீனா விளம்பர அம்பாசிடராக உள்ள மாஸா குளிர்பானத்தை கோக் நிறுவனம், கரீனா கபூருக்கு ரூ 2.5 கோடி கொடுத்து தங்களின் இன்னொரு பிராண்டான லிம்காவுக்கு விளம்பரம் செய்ய ஒப்பந்தம் செய்துள்ளது.

அசின் நடித்தா பான்டா விளம்பரமும், கத்ரினா கைஃப் நடித்த மாஸா விளம்பரமும் ஏற்கெனவே படுபிரபலம் என்பதால், 'இந்த விளம்பரங்களை விட சுவாரஸ்யமா நான் நடிக்கும் விளம்பரப் படத்தை எடுத்துத் தரணும்' என கண்டிஷன் போட்டுதான் ஒப்பந்தத்தில் கையெழுத்தே போட்டாராம் கத்ரீனா!

இத்துடன் அவர் 16 விளம்பரங்களில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

சினிமாவிலும் அவருக்கு ஏக மவுசு. சமீபத்தில் மதுர் பண்டார்கரின் ஹீரோயின் படத்தில் நடிப்பதற்காக அவருக்கு ரூ 8 கோடி சம்பளம் தர தயாரிப்பாளர் ஒப்புக்கொண்டது நினைவிருக்கலாம்.
 

ஹன்ஸிகாவிடமிருந்து விஷாலைப் பறித்த கார்த்திகா!


Karthika, Vishal and Hansika
முழுவேகத்தோடு இயக்குநராக களம் இறங்கியிருக்கிறார் சுந்தர் சி. பெரிய பட்ஜெட். பரபரப்பான நடிகர்கள் என வைத்து தன் மனைவி குஷ்புவின் பேனரில் படங்களை உருவாக்குகிறார்.

இப்போது கலாட்டா @ மசாலா கபே என்ற நகைச்சுவைப் படத்தை எடுத்து வரகும் சுந்தர், அடுத்ததாக அதிரடி ஹீரோ விஷாலை வைத்து ஒரு நகைச்சுவைப் படத்தை எடுக்கிறார்.

இந்தப் படத்தில் விஷாலுக்கு ஜோடியாக நடிக்கிறார் கார்த்திகா. கோ படத்துக்குப் பிறகு அவர் அன்னக்கொடியும் கொடிவீரனும் படத்தில் நடித்து வருகிறார். அதன் பிறகு அவர் ஒப்புக் கொண்டுள்ள படம் இது.

சமரன் படம் முடிந்ததும், இந்தப் புதிய படத்தில் நடிக்க ஆரம்பித்துவிடுவார் விஷால் என்கிறார்கள்.

ஆரம்பத்தில் இந்தப் படத்தில் விஷாலுக்கு ஜோடியாக ஹன்ஸிகாவைத்தான் ஒப்பந்தம் செய்திருந்தனர். ஆனால் விஷாலின் உயரத்தை மனதில் கொண்டு, கார்த்திகாவை இறுதி செய்துள்ளனர்.
 

பழைய பாணி கதை எடுபடாது

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
பழைய பாணியில் கதைகள் சொன்னால் எடுபடாது என்றார் இயக்குனர் பவித்ரன். இது பற்றி 'மாட்டுத்தாவணி' பட இயக்குனர் பவித்ரன் கூறியது: 'வசந்தகால பறவைகள்', 'சூரியன்', 'இந்து', 'ஐ லவ் இந்தியா' படங்களை இயக்கியபோது இருந்த டிரெண்ட் மாறிவிட்டது. இப்போது யதார்த்தமான படங்கள்தான் எடுபடுகிறது. 'காதலில் சொதப்புவது எப்படி?','ஒரு கல் ஒரு கண்ணாடி' போன்ற படங்களின் திரைக்கதைகள் மாறுபட்டு அமைக்கப்பட்டிருந்ததால் அது வரவேற்பு பெற்றுள்ளது. நான் இயக்கியுள்ள 'மாட்டுத் தாவணிÕ இப்போதைய டிரெண்டில்தான் உருவாகி இருக்கிறது. இப்படத்தின் சில காட்சிகளில் மாற்றம் செய்யப்பட்டு சமீபத்தில் ரீ ஷூட் செய்யப்பட்டது. 'களவாணி' விமல், சதீஷ், ராம், சூரி ஆகியோருடன் ஹீரோயின் ஜூலியட்  நடித்திருக்கிறார். பொறுப்பில்லாமல் சுற்றும் இளைஞர்களின் வாழ்க்கையை மையமாக வைத்து சொல்லப்பட்டிருக்கிறது. மதுரை பின்னணியிலான இக்கதை முழுக்க மதுரையில் உள்ள மாட்டுத்தாவணி பஸ் நிலையம் சுற்று வட்டாரப்பகுதிகளில் படமாக்கப்பட்டுள்ளது. தேவா இசை. விரைவில் ரிலீஸ் ஆகிறது.


 

பெண்கள் குழந்தை பெறும் மெஷின் அல்ல

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
பெண்கள் குழந்தை பெறும் மெஷின் அல்ல என்றார் காஜல் அகர்வால். அவர் கூறியதாவது:  10 வருடங்களுக்கு முன்பு பெண்கள், பொருளாதாரத்தில் முக்கிய இடம் வகித்ததில்லை. கல்யாணம் செய்துகொள்வது, மெஷின¢ போல் குழந்தைகளை பெற்றுக்கொள்வது என்ற நடைமுறையில்தான் இருந்தது. நல்லவேளையாக அந்த நிலை மாறி இருக்கிறது. சமுதாயத்தில் பெண் களுக்கு சம உரிமை வழங்கப்படுகிறது. எந்தவொரு பெண் ணுக்கும் தனது கனவை நனவாக்கும் சுதந்திரமான வாய்ப்பு அமைந்திருக்கிறது. அந்த வாய்ப்பு எனக்கும் அமைந்திருக்கிறது. என் தொழிலையும், வாழ்க்கையையும் சந்தோஷமாக அனுபவிக்கிறேன். ஒவ்வொரு பெண்ணும் இதை பயன்படுத்திக்கொள்ள வேண்டும். சுதந்திரமாக வாழ்வதற்கான தகுதியை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும். அப்படி இருந்தால் அது உங்களை சமுதாயத்தில் உயரமான இடத்துக்கு அழைத்துச் செல்லும்  என்பதில் சந்தேகமில்லை. இவ்வாறு காஜல் அகர்வால் கூறினார்.


 

ஹீரோ சம்பளத்தை நெருங்குகிறார்கள், கோடிக்கு மாறிய ஹீரோயின்கள்

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
பாலிவுட் ஹீரோயின்கள்போல் கோலிவுட் நடிகைகளும் கோடியை தாண்டி சம்பளம் பெறுகின்றனர். சிரஞ்சீவி மகன் ராம் சரண் தேஜா 'சன்ஜீர்' படம் மூலம் இந்தியில் அறிமுகமாகிறார். இதன் மார்க்கெட் விலை, எதிர்பார்ப்பை கூடுதலாக்க பாலிவுட் முன்னணி நடிகையை ஒப்பந்தம் செய்தனர். இதில் நடிப்பதற்காக பிரியங்கா சோப்ராவுக்கு ரூ.9 கோடி சம்பளம் தரப்பட்டுள்ளது. பாலிவுட்டில் மட்டுமல்ல, இந்தியாவிலேயே ஹீரோயின்களில் அதிக சம்பளம் பெற்ற நடிகை என்ற பெயரை தட்டிச் சென்றிருக்கிறார் பிரியங்கா. இதுவரை ஐஸ்வர்யாராய் அதிகபட்சமாக ரூ.6 கோடியும், கரீனா கபூர் ரூ.8 கோடியும் பெற்றிருக்கின்றனர்.

இது பற்றி தெலுங்கு பட தயாரிப்பாளர் கூறும்போது, 'Ôகோலிவுட், டோலிவுட் நடிகைகளும் பாலிவுட் ஹீரோயின்களைப்போல் கோடிகளை தொட்டிருக்கின்றனர். 'நண்பன்Õ படத்திற்காக இலியானா ரூ.1.5 கோடியும், காதல் விவகாரத்தால் நடிக்காமல் ஒதுங்கி இருந்த நயன்தாரா மீண்டும் நடிக்க வருவதால் அவரும் அதே அளவுக்கு சம்பளம் வாங்கியுள்ளார். த்ரிஷா ரூ. 1.2 கோடி வாங்கி இருக்கிறார். அனுஷ்கா, காஜல் அகர்வால் ஆகியோரும் கோடிகளை எட்டிப் பிடித்திருக்கின்றனர். தமன்னா, சமந்தா ஆகியோர் அதை எட்டிப்பிடிக்கும் நிலையில் உள்ளனர். 'இவ்வளவு அதிக சம்பளம் நடிகைகளுக்கு தருவது தேவையா?' என்று சிலர் கேட்கின்றனர்.

பாலிவுட் படங்களைப்போல் இப்போது வெளிநாடுகளில் கோலிவுட், டோலிவுட் படங்களும் வர்த்தக ரீதியான வரவேற்பு பெற்றிருக்கிறது. அதை ஒப்பிடும்போது ஹீரோயின்களுக்கு கோடிகளில் சம்பளம் தருவது தவறில்லை ÕÕ என்றார். 'மலையாளத்தை பொறுத்தவரை காவ்யா மாதவன் ரூ.17 லட்சம் பெறுகிறார். அதுபோல் கன்னடத்தில் திவ்யா ரூ.40 லட்சம் பெறுகிறார். கன்னடத்தில் 'சூப்பர்Õ படத்தில் நடிப்பதற்காக நயன்தாரா ரூ.50 லட்சம் பெற்றதுதான் அதிக சம்பளம¢' என்று கன்னட தயாரிப்பாளர் ஒருவர் குறிப்பிட்டார்.


 

கிசு கிசு - நடிகைக்கு தடை போட்ட காதலன்

Kollywood news, bollywood news, hollywood news, Cinema news, movie review, cinema in tamil, tamil cinema news
நல்ல காலம் பொறக்குது...
நல்ல காலம் பொறக்குது...

ஐகாட் ஹீரோவுடைய பிரதர் வருத்தமா இருக்காராம்... இருக்காராம்... நடிச்சு முடிச்ச முதல் படம் மாசக்கணக்குல பெட்டிய¤ல கிடக்குது. அடுத்த பட வாய்ப்பும் வரமாட்டேங்குதாம்... வரமாட்டேங்குதாம்... இதனால அண்ணன் நடிகரோட ஓட்டல் பிசினஸை தம்பி நடிகரு கவனிக்கிறாராம்... கவனிக்கிறாராம்... கொஞ்ச நாள் காத்திருந்துட்டு, மலையாள பட உலகத்துக்கு போக தம்பி நடிகரு முடிவு பண்ணியிருக்காராம்... பண்ணியிருக்காராம்...

வித்ய நடிகை நடிச்ச சில்க் கதை படத்தை சவுத் மொழிகள்ல ரீமேக் பண்ண திட்டம் போட்டாங்க. அதுக்கு அனுஷ்க நடிகைதான் சரியான சாய்ஸ்னு முடிவும் பண்ணினாங்க. ஆனா, நடிகை மறுத்துட்டாரு. அதுக்கு காரணம், நடிகையோ லவ்வராம்... லவ்வராம்... படத்துல கிளாமர் தூக்கலா இருக்கிறது லவ்வருக்கு பிடிக்கலையாம். இதுல நடிக்க வேணாம்னு அவரு சொன்னதால, நடிகையும் மறுத்துட்டாராம்... மறுத்துட்டாராம்...

ஹன்ட் பட இந்தி ரீமேக்ல நடிக்க இலி நடிகைகிட்ட கால்ஷீட் கேட்டாங்க. ஆனா, அதுக்கு ஓகேன்னும் சொல்லாம, நோÕன்னும் சொல்லாம நடிகை காலம் கடத்துறாராம்... கடத்துறாராம்... பெரிய ஹீரோயின்கள் எல்லோருமே இந்த படத்துல சின்ன ஹீரோ நடிக்கிறதால ஜகா வாங்குனாங்க. தான் மட்டும் எப்படி நடிக்கிறதுன்னு நடிகை யோசிக்கிறாராம்... யோசிக்கிறாராம்...


 

16 நாட்களில் எட்டுப் பாடல்கள் - கவுதம் மேனனுக்கு இளையராஜா தந்த இன்ப அதிர்ச்சி!


Ilayaraja
நடுநிசி நாய்களுக்குப் பிறகு சிதைந்துபோன கவுதம் மேனன் இமேஜ், நீதானே என் பொன்வசந்தம் பட அறிவிப்பு, இளையராஜா இசை என்றெல்லாம் அறிவிப்புகள் வந்த பிறகு, கம்பீரத்துக்கு திரும்பியிருக்கிறது.

சமீபத்தில் எந்தப் படப் பாடல்களுக்கும் இல்லாத எதிர்ப்பார்ப்பு நீதானே என் பொன்வசந்தம் படத்துக்கு உருவாகியுள்ளது.

சரி, இளையராஜா அப்படி என்னதான் இந்தப் படத்தில் விசேஷமாக செய்திருக்கிறார்...

சமீபத்திய தனது பேட்டியொன்றில் இப்படிச் சொல்லியிருந்தார் கவுதம்:

‘‘ஒவ்வொரு படம் தொடங்கும்போதும் ‘இதுக்கு ராஜா சார்தான் மியூஸிக்’னு யோசிப்பேன். ஆனா, அமையாது. இந்தப் படத்துக்கு கண்டிப்பா அவர்கிட்ட கேட்கலாம்னு தைரியம் வந்துச்சு. அவரைச் சந்திக்க அப்பாயின்மென்ட் வாங்கும்போதுகூட என்ன விஷயம் பேசப்போறேன்னு சொல்லவே இல்லை.

‘நான் ஒரு படம் பண்றேன். ஏற்கெனவே 50 சதவிகிதம் ஷூட்டிங் முடிஞ்சிருச்சு. இதுதான் கதை. இந்த மாதிரி மியூஸிக் வேணும்’னு சொல்லி, ஷூட் பண்ணின போர்ஷனைப் போட்டுக் காட்டினேன். எல்லாத்தையும் உள்வாங்கிட்டு பிரமாதமான டியூன்கள் தந்தார். ஒரே நாள்தான்... எனக்குத் திக்குமுக்காடிடுச்சு! ‘சார்... என்னால இவ்வளவு விஷயங்களையும் மனசுல ஏத்திக்க முடியலை. மீதியை நாளைக்கு வெச்சுக்கலாம்’னு சொன்னேன்.

‘ஒரு விஷயம் நல்லா நடக்கும்போது பிரேக் பண்ணாதீங்க’ன்னார்.

‘சார்... நீங்க கொட்றீங்க. என்னால முடியலை’னு சொல்லிச் சமாளிச்சேன். ‘இளையராஜா ஒரு பாடலை உருவாக்கும்போது, நாம கூட இருக்கிறதே பெரிய கொடுப்பினை’னு என்கிட்ட ஒரு ஸ்டார் நடிகர் சொன்னார். அது நூத்துக்கு நூறு உண்மை!

‘உங்க மெலடி எனக்கு வேணும். புது சவுண்ட், புது ட்ரீட்மென்ட்ல தரணும்’னு போய் நின்னேன். எல்லா பாட்டுக்கும் ஹார்மோனியத்தில் டியூன் போட்டு அதுக்கு நா.முத்துக்குமாரை வரிகள் எழுத வைச்சு, எந்த இசைக் கருவிகளின் ஒலிக்கோர்ப்பும் இல்லாம பாடவெச்சு பதிவு பண்ணோம். அந்தக் குரலை மட்டும் லண்டன் எடுத்துட்டுப் போய் ஹங்கேரியில் இருந்து வரவைச்ச சிம்பொனி ஆர்கெஸ்ட்ரா மூலம் பதிவு பண்ணோம்.

படத்தில் மொத்தம் எட்டுப் பாடல்கள். ஒரு பாட்டுக்கு இரண்டு நாள்னு கிட்டத்தட்ட 16 நாள்ல மொத்த ஒலிப்பதிவும் முடிஞ்சிருச்சு. மூணு வாரத்துல எல்லா பாடல்களும் ஷூட்டிங்கிற்கு ரெடி. இதுவும் ஒரு புது அனுபவம்தான்!’’

எட்டுப் பாட்டும் சூப்பர் ஹிட்டாகட்டும்!
 

இயக்குநரின் 'செல்லம்' தமன்னா!


ஏனென்றால் காதல் என்பேன்... - இது தமிழ் சினிமாவின் செல்லமாக இருந்து இப்போது தெலுங்கு சினிமா செல்லமாகிவிட்ட தமன்னாவின் புதிய படம்

தமிழ் - தெலுங்கில் தயாராகும் இந்தப் படத்துக்காக ஞாயிற்றுக்கிழமை பிரஸ் மீட் வைத்திருந்தார் நிகில் முருகன்.

ரொம்ப நாளாக சென்னைப் பக்கமே எட்டிப் பார்க்காத தமன்னா நேற்று கிரீன் பார்க்கில் 'தரிசனம்' தந்தார். கொளுத்தும் கோடையில் காஷ்மீரிலிருந்து வந்த ஐஸ் மாதிரி ஜில்லென்றிருந்தார்.

ஆள் மட்டுமல்ல, பேச்சும் செ ஜில்... முழுக்க முழுக்க தமிழில் அவர் பேச, போட்டோகிராபர்களை விட நிருபர்கள்தான் வைத்த கண் வாங்காமல் அவரைப் பார்த்துக் கொண்டே இருந்தனர்.

"நான் சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் வந்து இறங்கியதுமே என் மீது ஜில்லென்று ஒரு காற்று வீசியது. அந்த காற்றில் அன்பு மிதந்து வந்தது. தமிழ்நாட்டில் நிறைய பேர் என் மீது அன்பாக இருக்கிறார்கள். அந்த அன்புதான் என்னை முதலில் வரவேற்றது," என தமன்னா ஆரம்பிக்க, விசிலடிக்காத குறைதான்!

தமன்னா பேச்சில் 'அன்பு' தொடர்ந்தது...

"பையா படத்தின் பாடல்கள் வெளியீட்டுக்கு வந்தபோதும், அந்த அன்பு என்னை தழுவியது. இப்போதும் அதே அன்பு என்னைத் தழுவுகிறது.

நான் நன்றாக தமிழ் பேசுவதற்கு இயக்குநர்கள் லிங்குசாமி, பாலாஜி சக்திவேல், கருணாகரன் ஆகிய மூன்று பேரும்தான் காரணம். கருணாகரன் என்னை, 'செல்லம்' என்றுதான் அழைப்பார். அந்த 'செல்லம்' என்ற வார்த்தையில், அத்தனை அன்பு இருக்கும்.

இந்த படத்தின் கதாநாயகன் ராமிடம், கற்றுக்கொள்ள வேண்டிய விஷயங்கள் நிறைய இருக்கிறது. நான் கற்றுக்கொண்டேன்,'' என்றார்.

படத்தின் கதாநாயகன் ராம், இயக்குநர்கள் லிங்குசாமி, ஏ.ஆர்.முருகதாஸ், பாலாஜி சக்திவேல், சசி, சரவணன், எஸ்.எஸ்.ஸ்டான்லி, கருணாகரன், பட அதிபர்கள் ரவி கிஷோர், தனஞ்செயன், இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ், பாடல் ஆசிரியர் மதன் கார்க்கி, ஒளிப்பதிவாளர் ஆன்ட்ரோ ஆகியோரும் பேசினார்கள்.

நிகழ்ச்சியை, நிகில் முருகன் தொகுத்து வழங்கினார்.

யாரோ ஒரு டிவி தொகுப்பாளினி கெக்கே பிக்கேவென சிரித்தபடி, தமிழை மென்று துப்பி நிகழ்ச்சியைத் தொகுப்பதைவிட, நிகில் தொகுப்பது மி்க சிறப்பாக உள்ளது. இதை தயவு செய்து தொடருங்கள் நிகில்!
 

ஸ்டாலின் கூட்டத்தை திசை திருப்ப ‘ஒரு கல் கண்ணாடி’ தியேட்டரில் ரெய்ட்


Oru Kal Oru Kannadi Movie
மதுரையில் திமுக இளைஞரணி நேர்காணல் கூட்டம் மு.க.ஸ்டாலின் தலைமையில் நேற்று நடந்தது.

இக் கூட்டம் நடந்து கொண்டிருந்த நிலையில் திமுக பிரமுகருக்கு சொந்தமான ‘தமிழ் ஜெயா’ தியேட்டருக்குள் தல்லாகுளம் போலீசார், துணை கமிஷ்னர் திருநாவுக்கரசு தலைமையில் உள்ளே நுழைந்தனர்.

அங்கு ஸ்டாலின் மகன் உதயநிதி தயாரித்து, நடித்துள்ள ‘ஒரு கல் கண்ணாடி’ படம் ஓடிக் கொண்டிருக்கிறது.

டிக்கெட் விலை அதிகமாக வைத்து விற்பனை செய்வதாக கூறி தியேட்டரில் போலீசார் திடீர் சோதனை நடத்தினர். பின்னர் தியேட்டரில் இருந்த ஒன்றரை லட்சம் ரூபாயை போலீசார் எடுத்துச் சென்றனர்.

மேலும், தியேட்டர் ஊழியர்கள் 7 பேரையும் கைது செய்தனர். மதுரையில் ஸ்டாலின் கூட்டத்தை திசை திருப்பவே போலீசார் இந்த செயலில் ஈடுபட்டதாக திமுகவினர் குற்றம் சாட்டியுள்ளனர்.