விஜய்,சத்யராஜுடன் பணிபுரிவது புது அனுபவம் :ஷங்கர்

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
விஜய், சத்யராஜுடன் பணிபுரிவது புது அனுபவம் : ஷங்கர்

3/28/2011 11:38:25 AM

விஜய், சத்யராஜ், இலியானா போன்றோருடன் பணிபுரிவது புதிய அனுபவமாக இருக்கிறது என்று இயக்குனர் ஷங்கர் கூறியுள்ளார். ரஜினிகாந்த் நடித்த 'எந்திரன்' படத்தை அடுத்து, இந்தியில் ஹிட்டான '3 இடியட்ஸ்' படத்தை 'நண்பன்' என்ற பெயரில் ரீமேக் செய்கிறார் ஷங்கர். இதில் விஜய், சத்யராஜ், ஜீவா, ஸ்ரீகாந்த், இலியானா உட்பட பலர் நடிக்கின்றனர். இந்தப் படத்தின் இரண்டாவது ஷெட்யூல் டேராடூனில் நடந்து முடிந்துள்ளது. இதுபற்றி தனது வலைப்பதிவில் ஷங்கர் எழுதியிருப்பதாவது: 'நண்பன்' படத்தின் இரண்டாம் ஷெட்யூலும் முடிந்துவிட்டது. கல்லூரி தொடர்பான காட்சிகள் அனைத்தையும் டேராடூனில் எடுத்துள்ளோம். விஷுவலாக இந்த காட்சிகள் மிரட்டும். இந்தப் படத்தில், விஜய், சத்யராஜ், இலியானா, ஜீவா, ஸ்ரீகாந்த் போன்றோருடன் பணிபுரிவது புதிய அனுபவமாக இருக்கிறது. விஜய், சத்யராஜ் காம்பினேஷன் பிரஷ்சாகவும் வித்தியாசமாகவும் இருக்கும். நண்பர்களாக நடிக்கும் விஜய், ஜீவா, ஸ்ரீகாந்த் ஆகியோரின் கெமிஸ்ட்ரி, பிசிக்ஸ் எல்லாம் கேமராவுக்கு முன்னால் மட்டுமல்ல, பின்னாலும் சூப்பராக ஒர்க்கவுட் ஆகியுள்ளது. அனைவரும் அவரவர் கேரக்டரோடு ஒன்றியிருக்கிறார்கள். 'எந்திரன்' படத்தில் இருந்து அனைத்து விதத்திலும் 'நண்பன்' மாறுபட்டு இருக்கும். இவ்வாறு ஷங்கர் கூறியுள்ளார்.





Source: Dinakaran
 

அசினுக்கு கேரளா ஆனது பாங்காக்

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
அசினுக்கு கேரளா ஆனது பாங்காக்

3/28/2011 11:40:03 AM

'ரெடி' இந்தி படத்துக்காக பாங்காக்கில் இருந்தபோது கேரளாவில் இருப்பதை போன்றே உணர்ந்தேன் என்றார் அசின். இதுபற்றி அவர் கூறும்போது, 'கேரளா எப்போதும் பசுமையாக இருக்கும். பாங்காக்கில் நாங்கள் ஷூட்டிங் நடத்திய இடமும் அப்படியே இருந்தது. அது வேறு நாடு என்கிற எண்ணம் எனக்கு வரவில்லை. கேரளாவில் இருப்பதை போன்றே உணர்ந்தேன். இந்தப் படத்துக்காகத்தான் அதிக நாட்கள் வெளிநாடுகளில் செலவழிக்க வேண்டியதாக இருந்தது' என்றார்.





Source: Dinakaran
 

மனம் மாறினார் திவ்யா

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
மனம் மாறினார் திவ்யா

3/28/2011 11:42:49 AM

ரசிகர்களின் வேண்டுகோளுக்காக, நடிப்பதில்லை என்ற முடிவை வாபஸ் பெற்றுள்ளதாக திவ்யா கூறியுள்ளார். 'தண்டம் தஷகுணம்' என்ற கன்னட படத்தின் பாடல் வெளியீட்டு விழாவுக்கு செல்லாததால் திவ்யா மீது புகார் செய்தார் தயாரிப்பாளர் கணேஷ். தன்னிடம் வாங்கிய கடனை தயாரிப்பாளர் தராததால்தான் விழாவுக்கு செல்லவில்லை என்றார் திவ்யா. இதையடுத்து கன்னட தயாரிப்பாளர் சங்கம் திவ்யாவுக்கு ஒரு வருடம் தடை விதித்தது. ஆனால், நடிகர் சங்கம் திவ்யாவுக்கு ஆதரவாக கொடி பிடித்தது. இதற்கிடையில் திவ்யா, 'கன்னட திரையுலகினருடன் சண்டைப்போட என்னிடம் சக்தி இல்லை. இதனால் கன்னட சினிமாவில் இனி நடிக்க போவதில்லை' என்று அறிவித்திருந்தார். இந்நிலையில், 'இந்தப் போட்டியில் நான்தான் வென்றேன். எனக்கு நடிகர் சங்கமும் நல்ல உள்ளம் கொண்ட திரையுலகினரும் ஆதரவு தெரிவித்துள்ளனர். எனது பணம் திரும்ப கிடைத்துவிட்டது. எனது ரசிகர்கள் தொலைபேசியிலும் இணையதளம் மூலமாகவும் கன்னட சினிமாவை விட்டு செல்ல வேண்டாம் என அன்புடன் கேட்டுக்கொண்டதால் என் முடிவை வாபஸ் பெற்றுள்ளேன்' என்று திவ்யா கூறியுள்ளார்.





Source: Dinakaran
 

நல்ல படங்களுக்காக விட்டுக் கொடுக்கலாம்

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
நல்ல படங்களுக்காக விட்டுக் கொடுக்கலாம்

3/28/2011 11:48:57 AM

'சிங்கம் புலி' படத்தில் இரண்டாவது ஹீரோயினாக நடித்திருந்தார் சவுந்தர்யா. இவர் நடித்த பல காட்சிகள் படத்தில் நீக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதுபற்றி சவுந்தர்யா கூறியதாவது: நான் நடித்த சில காட்சிகள் படத்தில் இல்லை. ஆனால் அதற்காக வருத்தப்படவில்லை. நல்ல கேரக்டரில் நடித்திருக்கிறேன். நல்ல படங்களில் நடிக்கும்போது இதுபோன்ற விட்டுக் கொடுத்தல் சகஜம்தான். இப்போது தமிழில் 'காந்தர்வன்', 'மல்லுக்கட்டு' படத்தில் நடித்து வருகிறேன். ஒன்றில் கிராமத்து பெண், மற்றொன்றில் நகர்புறத்து கல்லூரி மாணவி. தமிழ் சினிமாவில் நல்ல இடத்தை பிடிக்க நீண்ட நாள் போராடும் நடிகைகளில் நானும் ஒருத்தி. அதனால் படங்களை தேர்வு செய்வதில் கவனமாக இருக்கிறேன்.





Source: Dinakaran
 

ஷாமின் 6

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
ஷாமின் 6

3/28/2011 11:45:01 AM

'முகவரி', 'காதல் சடுகுடு', 'தொட்டி ஜெயா', 'நேபாளி' படங்களை இயக்கிய வி.இசட். துரை, அடுத்து இயக்கும் படத்துக்கு '6' என்று தலைப்பு வைத்துள்ளார். இந்தப் படத்தில் ஷாம் ஹீரோ. அவர் 3 வேடங்களில் நடிக்கிறார். ஹீரோயின் உட்பட மற்ற டெக்னீஷியன்கள் தேர்வு நடந்து வருகிறது.





Source: Dinakaran
 

நாசர் ரசித்து நடித்த படம்

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
நாசர் ரசித்து நடித்த படம்

3/28/2011 11:43:40 AM

ஜெயராம் கிரியேஷன் சார்பில் ஜே.ரவி தயாரிக்கும் படம் 'மகாராஜா', சத்யா, நாசர், கருணாஸ், அஞ்சலி நடிக்கிறார்கள். டி.மனோஹரன் இயக்குகிறார். இமான் இசை. இதன் பாடல் வெளியீட்டு விழா, சென்னையில் நேற்றுமுன்தினம் நடந்தது. விழாவில், நாசர் பேசியதாவது: இப்போது வாரத்திற்கு நாலைந்து சிறிய பட்ஜெட் படங்கள் வெளிவருகிறது. இது ஆரோக்கியமான விஷயம். இப்போதுள்ள இளைஞர்கள் புத்தி கூர்மை உள்ளவர்களாக இருக்கிறார்கள். இதனால் சில நேரம் பெருமையாக இருக்கிறது. சில நேரம் கோபம் வருகிறது. அப்படி கோபப்பட்டால் அதற்கும் விளக்கம் வைத்திருக்கிறார்கள். இப்படிப்பட்ட தலைமுறை இடைவெளிகளின் மோதலை காமெடியாகவும், கமர்சியலாகவும் சொல்லும் படம் இது. எனது 25 வருட சினிமா வாழ்க்கையில் நான் ரசித்து நடித்த கேரக்டர் இந்தப் படத்தில் கிடைத்தது. இது எனக்கு முக்கியமான படமாக இருக்கும்.





Source: Dinakaran
 

கமலின் விஸ்வரூபம்

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
கமலின் விஸ்வரூபம்

3/28/2011 11:47:16 AM

செல்வராகவன் இயக்கத்தில் கமல் நடிக்கும் படத்துக்கு விஸ்வரூபம் என்று பெயரிடப்பட்டுள்ளதாக கமல்ஹாசன் தெரிவித்தார். கமல் ஜோடியாக சோனாக்ஷி சின்ஹா நடிக்கிறார். தமிழ், இந்தியில் தயாரிக்கப்படும் இதன் படப்பிடிப்பு பெரும்பாலும் லண்டனில் நடக்கிறது. சைக்காலஜிகல் த்ரில்லர் படமான இதன் ஷூட்டிங் அடுத்த மாதம் தொடங்குகிறது.





Source: Dinakaran
 

ஆதிபகவனில் முன்னாள் ஹீரோயின் சாக்ஷி

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
ஆதிபகவனில் முன்னாள் ஹீரோயின் சாக்ஷி

3/28/2011 11:50:12 AM

அமீர் இயக்கும் 'ஆதிபகவன்' படத்தில் முன்னாள் ஹீரோயின் சாக்ஷி ஒரு பாடலுக்கு டான்ஸ் ஆடுகிறார். தமிழில், 'புதையல்', 'மாப்பிள்ளை கவுண்டர்', 'வேதம்', 'மானஸ்தன்' உட்பட பல்வேறு படங்களில் ஹீரோயினாக நடித்தவர் இந்தி நடிகை சாக்ஷி. கன்னடம் மற்றும் தெலுங்கு படங்களிலும் நடித்த இவர், திருமணத்துக்குப் பிறகு நடிக்காமல் இருந்தார். இப்போது, நீண்ட இடைவெளிக்குப் பிறகு அமீர் இயக்கத்தில் ஜெயம் ரவி, நீது சந்திரா நடிக்கும் 'ஆதிபகவன்' படத்தில் ஒரு பாடலுக்கு ஆடுகிறார். இதன் ஷூட்டிங் பின்னிமில்லில் பிரமாண்ட செட் அமைத்து நடைபெற்று வருகிறது. இந்த பாடலுக்காக, வெளிநாட்டில் இருந்து 150 டான்சர்கள் வரவழைக்கப்பட்டுள்ளனர்.





Source: Dinakaran