தம்பி ராமையா மகன் நாயகனாக அறிமுகமாகும் 'அதாகப்பட்டது மகாஜனங்களே'!

பிரபல நடிகரும் இயக்குநருமான தம்பி ராமையாவின் மகன் உமாபதி கதாநாகனாக அறிமுகமாகிறார். அந்தப் படத்துக்கு அதாகப்பட்டது மகாஜனங்களே என தலைப்பிட்டுள்ளனர்.

படத்துக்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியிருக்கிறார் இன்பசேகர்.

Thambi Ramayya's son debuts as hero

கதை குறித்து இயக்குநர் கூறுகையில், "நாம எவ்வளவுதான் புத்திசாலித்தனமாக கணக்குப் போட்டாலும், அதே பிரச்சனைக்கு வாழ்க்கை வேற ஒரு கணக்கு போட்டு வைத்திருக்கும். பின்பு நமக்கு நடக்கும் நிகழ்வுகளை பார்த்து சிரிப்பதா இல்லை அழுவதா என்று புரியாத நிலையில் நாம் தள்ளப்படுவோம்.

இந்த கதைக் கருவை மையமாக வைத்து விறுவிறுப்பும், நகைச்சுவையும் கலந்து உருவாகியிருக்கும் படம்தான் 'அதாகப்பட்டது மகாஜனங்களே'.

வித்தியாசமான தலைப்புக்கான காரணம் படத்தின் இறுதிக் காட்சியில் தெரிய வரும்," என்றார்.

தெலுங்கில் பிரபல கதாநாயகியான ரேஷ்மா ரத்தோர் இத்திரைப்படத்தின் மூலமாக தமிழில் கதாநாயகியாக அறிமுகமாகிறார். கருணாகரன் நகைச்சுவை கலந்த வித்தியாசமான கதாபாத்திரத்தில் படம் முழுக்க வருகிறார். மற்றும் ஆடுகளம் நரேன், பாண்டியராஜன், மனோபாலா புதுமுக நடிகர் தயாளன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

டி இமான் இசையமைக்க, பாடல்களை யுகபாரதி எழுதியிருக்கிறார். அட்டகத்தி மற்றும் குக்கூ படங்களின் ஒளிப்பதிவாளர் பிகே வர்மா இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.

சில்வர் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் நிறுவனத்தின் சார்பாக எஸ் ரமேஷ்குமார் தயாரித்திருக்கிறார்.

 

தொடங்கியது உள்குத்து

சென்னை: தமிழ் படங்களில் கதை இருக்கிறதோ இல்லையோ படங்களின் தலைப்புகள் புதுமையாக இருக்கின்றன, தலைப்பை எப்படியாவது மக்களின் மனதில் இடம்பிடிக்க செய்ய வேண்டும் என்ற கொள்கையுடன் இதற்காக ரூம் போட்டு யோசிப்பார்கள் போல.

இன்று தொடங்கியிருக்கும் உள்குத்து படத்தின் தலைப்பும் (பேரக் கேட்கும்போதே ஷாக்கா இருக்கா) இந்த வகையைச் சேர்ந்ததுதான். மெட்ராஸ் மற்றும் அட்டக்கத்தி படங்களை இயக்கிய ரஞ்சித்திடம் உதவி இயக்குனராக இருந்த கார்த்திக் ராஜூ இந்தப் படத்தின் மூலம் இயக்குனராக மாறியிருக்கிறார்.

Ulkuthu Movie Shooting Started

அட்டக்கத்தியில் நாயகன், நாயகியாக நடித்த தினேஷ்- நந்திதா ஜோடி இந்தப் படத்திலும் இணைந்து நடிக்கின்றனர், நான் கடவுள் ராஜேந்திரன் மற்றும் பாலா ஆகியோர் இந்தப் படத்தில் முக்கியமான வேடங்களில் நடிக்கின்றனர்.

காமெடி கலந்த காதல் கதையாக உருவாகும் உள்குத்து படத்தில் தினேஷ் - நந்திதா இருவரும், விற்பனைப் பிரதிநிதிகளாக நடிக்கின்றனர் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஜஸ்டின் பிரபாகரன் இசையில் பி.கே.வர்மா ஒளிப்பதிவு செய்யும் இந்தப் படத்தை கெனன்யா பிலிம்ஸ் சார்பில் செல்வக்குமார் தயாரிக்கிறார். 2 கட்டங்களாக நடைபெற இருக்கும் படப்பிடிப்பு முழுவதும் சென்னையிலேயே நடைபெற இருக்கின்றது.

அட்டக்கத்தி தினேஷ் உள்குத்து வேளைகளில் ஈடுபடுவாரோ?

 

ஆர்யாவை கதாநாயகிகளுக்குப் பிடிப்பது ஏன்? படவிழாவில் கலகலப்பு!

ஆர்யாவைப் கதாநாயகிகளுக்குப் பிடிக்க என்ன காரணம் அவரது நட்பும், பழகும் முறையும்தான் என்று கவிஞர் பா விஜய் கூறினார்.

யூடிவி மோஷன் பிக்சர்ஸ் மற்றும் விஷ்ணுவர்தன் பிலிம்ஸ் இணைந்து வழங்கும் படம் 'யட்சன்'.

ஆர்யா, கிருஷ்ணா, தீபா சன்னதி, சுவாதி நடித்துள்ளனர். விஷ்ணுவர்தன் இயக்கியுள்ளார். 'யட்சன்' என்றால் குபேரன், இயக்குபவன் என்று பொருளாம். இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா பிரசாத் லேபில் நடந்தது. அதுவே படத்தின் அறிமுக விழாவாகவும் அமைந்தது.

Why heroines like Arya? Pa Vijay's explanatiun

விழாவில் படத்தை இயக்கியுள்ள விஷ்ணுவர்தன் பேசும் போது, " இது 'ஆரம்பம்' படத்துக்கு முன்பே பேசப்பட்ட ஒரு விஷயம். ஆனந்த விகடனில் வந்த சுபா அவர்களின் தொடர்கதை திரை வடிவம் பெற்றுள்ளது. படத்தின் பாடல்கள் நன்றாக வந்து வரவேற்பைப் பெற்றுள்ளன. கம்போசிங், பாட்டு என்று நாங்கள் வெளிநாடு எல்லாம் போய் சிரமப்படவில்லை. தி நகரிலுள்ள ஒரே ரூமில்தான் இப்படிப்பட்ட பாடல்களை எல்லாம் உருவாக்கினோம்.

ஒளிப்பதிவாளர் ஒம்பிரகாஷ் என்னுடன் இணைந்துள்ள 2 வது படம்.

ஆர்யாவுடன் இது எனக்கு 5 வது படம். ஆர்யா என் ஹீரோ. அவரைப் பார்த்தாலே எதுவும் கேட்க வேண்டாம். கதை சொல்ல வேண்டாம். எப்ப மச்சான் ஷூட்டிங் போகலாம் என்பவர். அவருடன் என் தம்பி கிருஷ்ணாவும் இணைந்திருக்கிறார்.

Why heroines like Arya? Pa Vijay's explanatiun  

நான் எப்போ படம் தொடங்கினாலும் உன் தம்பியையும் நடிக்க வைப்பா என்பார்கள் அம்மா. அவருக்கு ஏற்ற மாதிரி கதை அமைந்ததால் இதில் நடிக்க வைத்திருக்கிறேன். ஆர்யா-கிருஷ்ணா இரண்டு பேரையும் நடிக்க வைக்க படாதபாடு பட்டேன். தீபா சன்னதிக்கு நல்ல நடிப்புக்கு இடம் தருகிற பாத்திரம்.

யுவன் என் ஆரம்பகாலம் முதல் என்னுடன் பெரிய பலமாக தொடர்பவர். நீ எத்தனை ஆல்பம் போட்டாலும் எனக்கு தனியா போட வேண்டும் என்று உரிமையோடு கேட்கிற நட்பு எங்களுடையது. படப்பிடிப்பே ஜாலியாக கலாட்டாவாக போனது,'' என்றார்.

பா விஜய்

பாடலாசிரியர் பா. விஜய் பேசும் போது, " நானும் விஷ்ணுவர்தனும், யுவனும் இணைந்து இது எட்டாவது படம். அதிலும் எல்லாப் படங்களிலும் எல்லாப் பாடல்களையும் எழுதியுள்ளேன். எங்கள் 3 பேரிடம் அப்படி ஒரு நட்பு, புரிதல் உள்ளது. இவர்களுக்கு எழுதும் போது மட்டும் பாடல் எழுதும் மனநிலையில் நான் போனதில்லை. நண்பர்களைப் பார்ப்பது போல போவேன். இந்தப் படத்தின் மூலம் ஆர்யா என்கிற நண்பனின் நட்பு கிடைத்தது.

ஆர்யாவை ஏன் எல்லாப் பெண்களும் கதாநாயகிகளும் விரும்புகிறார்கள் தெரியுமா? இதுவரை தெரியாது...இப்போது புரிகிறது. நட்புக்குஅவ்வளவு மரியாதை தருபவர். எளிமையாக, இனிமையாகப் பழகுபவர்.

இதுவரை மூவாயிரம் பாடல்கள் எழுதியிருக்கிறேன். நான் பிரஸ்மீட் வைத்து பாட்டெழுத மாட்டேன் என்று சொன்னதில்லை. நடிக்க வந்தபிறகு அப்படி பரப்பி விட்டார்கள். இதன் பாடல்களும் 'சர்வம்' படத்தின் பாடல்களைப் போல பெரிய வெற்றியடையும்,'' என்றார்.

யுவன் சங்கர் ராஜா

இசையமைப்பாளர் யுவன் சங்கர்ராஜா பேசும்போது, ''இந்த விஷ்ணுவர்தனின் படத்துக்கு மட்டும் யுவன் என்ன ஸ்பெஷலாக செய்திருக்கிறார் என்ன மேஜிக் செய்திருக்கிறார்? என்கிறார்கள். விஷ்ணுவர்தனின் துறுதுறுப்பும் எனர்ஜியும் பழகினாலே நமக்கும் வந்து விடும். அவரை பள்ளி நாட்களிலிருந்தே தெரியும். நல்லதோ கெட்டதோ முகத்துக்கு நேரே சொல்பவர்,'' என்றார்.

 

பிரபு தேவா தயாரிப்பில் ஜெயம் ரவி நடிக்கும் புதிய படம்

நடிகர் - இயக்குநர் பிரபு தேவா தொடங்கியுள்ள புதிய தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் 3 புதிய படங்களைத் தயாரிக்கிறார். அவற்றில் ஒரு படத்தில் ஜெயம் ரவி நாயகனாக நடிக்கிறார்.

பிரபுதேவா சமீபத்தில் ‘பிரபுதேவா ஸ்டுடியோஸ்' என்ற பெயரில் புதிய தயாரிப்பு நிறுவனம் ஒன்றை தொடங்கினார். இந்த தயாரிப்பு நிறுவனம் மூலம் 3 திரைப்படங்களை தயாரிக்கப் போவதாகவும் அறிவித்திருந்தார்.

Jayam Ravi to play lead in Probhu Deva production

இந்நிலையில், இவர் தயாரிக்கும் படங்கள் குறித்த தகவல்களை தெரிவிக்க பிரபுதேவா பத்திரிகையாளர்களைச் சந்தித்தார். இந்த பத்திரிகையாளர் சந்திப்பில் பிரபுதேவா தான் தயாரிக்கும் 3 புதிய படங்கள் குறித்த அறிவிப்பை வெளியிட்டார்.

அதன்படி, ஜெயம் ரவி நடிக்கும் புதிய படத்தை இவருடைய நிறுவனம் தயாரிக்கவிருக்கிறது. இப்படத்தை ‘ரோமியோ ஜூலியட்' படத்தை இயக்கிய லட்சுமணன் இயக்கவிருக்கிறார்.

இன்னொரு படத்தை பிரபல இயக்குநர் ப்ரியதர்ஷன் இயக்குகிறார். இப்படத்தை ஏற்கெனவே அமலாபால் தயாரிப்பதால், அவருடன் பிரபுதேவா இணை தயாரிப்பாளராக இணைந்திருக்கிறார். இந்த படத்தில் பிரகாஷ் ராஜ், ஸ்ரேயா உள்ளிட்டோர் நடிக்கவிருக்கின்றனர்.

மேலும், புதுமுக இயக்குனர் ஒருவர் இயக்கும் படத்தையும் பிரபுதேவா தயாரிக்கவிருக்கிறார்.

 

தமிழ்த் திரைப்படங்களுக்கு வரிவிலக்கு: விண்ணப்பித்த 5 வாரங்களில் முடிவு... உச்சநீதிமன்றம் உத்தரவு

சென்னை: தமிழ்த் திரைப்படங்களுக்கு வரிவிலக்கு தொடர்பாக விண்ணப்பித்த 5 வாரங்களில் முடிவு எடுக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நடிகரும் தயாரிப்பாளருமான உதயநிதி தனது ரெட் ஜெயன்ட் மூவிஸ் சார்பில் ஏழாம் அறிவு திரைப்படத்தைத் தயாரித்தார். படம் யூ சான்றிதழ் பெற்றபோதும் கூட அந்தப் படத்திற்கு வரிவிலக்கு அளிக்க தமிழக அரசு மறுத்து விட்டது.

Tax Exemption - Tamil movies

இதனை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார் உதயநிதி. வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதிகள் தமிழக அரசு தங்களின் அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தியது போன்று தெரியவில்லை என்று கூறி வழக்கைத் தள்ளுபடி செய்தனர்.

உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தனது ரெட்ஜெயண்ட் மூவிஸ் சார்பாக அப்பீல் செய்தார் உதயநிதி ஸ்டாலின். நேற்று இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் தமிழக அரசிற்கு ஒரு உத்தரவை பிறப்பித்தனர்.

அதில், திரைப்படத் தயாரிப்பாளர் வரி விலக்கு கோரி விண்ணப்பம் தாக்கல் செய்த 2 வாரங்களுக்குள் பார்வையிடும் குழுவினர் படத்தை திரையிடும் தேதியை அரசு சார்பில் தயாரிப்பாளருக்கு தெரிவிக்கவேண்டும்.

அந்த தேதியில் இருந்து அடுத்த 2 வாரங்களுக்குள் தயாரிப்பாளர் பார்வையிடும் குழுவுக்கு படத்தை திரையிடுவதற்கு ஏற்பாடு செய்யவேண்டும். பின்னர் படத்தை பார்த்த தேதியில் இருந்து சம்பந்தப்பட்ட படத்துக்கு வரிவிலக்கு அளிப்பதா? இல்லையா? என்பதை ஒரு வாரத்துக்குள் தமிழக அரசு தயாரிப்பாளருக்கு அறிவிக்கவேண்டும்.

மொத்தத்தில், ஒரு படத்திற்கு வரிவிலக்கு அளிப்பதா இல்லையா என்பதை தயாரிப்பாளர் வரிவிலக்கு கோரி விண்ணப்பித்த 5 வாரங்களுக்குள் தமிழக அரசு முடிவு செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது உச்சநீதிமன்றம்.

 

மிஷன் இம்பாசிபிள்-5: ஆச்சர்யங்களை அள்ளித் தரும் கிரிஸ்-க்ரூஸ் கூட்டணி!

டாம் க்ருஸ், ரெபேக்கா ஃபெர்குசன், சைமன் பெக் நடிப்பில் மிஷன் இம்பாசிபிள் தொடரின் ஐந்தாம் பாகமாய் வெளிவரும் திரைப்படம் ‘மிஷன் இம்பாசிபிள்:முரட்டு தேசம்' (Mission Impossible: Rogue Nation). ஆகஸ்ட் மாதம் 7 ஆம் தேதி உலகெங்கும் இப்படம் வெளியாகவுள்ளது. இந்தியாவில் வயாகாம்18 மோஷன் பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிடுகிறது.

Tom Cruise and Mcquarrie put together the dream team

மிஷன் இம்பாசிபிள் தொடரின் ஒவ்வொரு பாகமும் வெவ்வேறு இயக்குநரின் கைவண்ணத்தில் உருவாக வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர் டாம் க்ரூஸ்.

Tom Cruise and Mcquarrie put together the dream team

அந்த வகையில், இரத்தத்தை உறைய வைக்கும் ஆக்ஷன் காட்சிகளுக்காகவும், மெய் சிலிர்க்க வைக்கும் சாகச கட்சிகளுக்காகவும் தனக்கென ரசிகரக்ளைக் கொண்டுள்ள மிஷன் இம்பாசிபிள் தொடரின் ஐந்தாம் பாகத்தை க்ரிஸ் மெக்குவாரி இயக்கியுள்ளார்.

Tom Cruise and Mcquarrie put together the dream team

"மிஷன் இம்பாசிபிளின் இப்பாகத்தை இயக்குவது மிகவும் சவாலான ஒரு பணியாக இருந்தது. கதாநாயகன் டாம் க்ரூஸ் நடித்திருக்கும் ஈத்தன் ஹன்ட் கதாபாத்திரத்திற்கு இணையாக படத்தில் இருக்கும் அனைவருக்கும் முக்கியத்துவம் தரும் வகையில் திரைக்கதை எழுதியுள்ளேன். மேலும், ஈத்தன் ஹன்ட் கதாப்பாத்திரத்தின் வலிமைக்கு சவால் விடும் வகையில் இல்சா ஃபாஸ்ட் என்ற கதாப்பாத்திரம் அமைத்திருக்கிறோம். முந்தைய பாகங்களில் முக்கிய பாத்திரங்களில்தான் ஒரு பெண் நடிகர் வருவார். 'மிஷன் இம்பாசிபிள்:முரட்டு தேசம்' படத்தில் கதாநாயகியாக இல்சா ஃபாஸ்ட் கதாப்பாத்திரம் இருக்கும்.

Tom Cruise and Mcquarrie put together the dream team

பயங்கரவாத கும்பலைத்தேடி ஐஎம்எப்பின் அடுத்த இலக்கு என ‘கோஸ்ட் புரொட்டக்கால்' படத்தின் இறுதியில் குறிப்பிட்டிருக்கும். அதை அடிப்படையாகக் கொண்டு ‘முரட்டு தேசம்' எடுக்கப்பட்டுள்ளது," எனக் கூறுகிறார் இயக்குனர் க்ரிஸ் மெக்குவாரி.

இயக்குனர் கிரிஸ் மெக்குவாரி பற்றி கதாநாயகன் டாம் க்ரூஸ் கூறுகையில், "க்ரிஸ் ஒரு அற்புதமான படைப்பாளி, அவரது திரைக்கதை அமைப்பு என்னை வியக்க வைக்கிறது. ஒவ்வொரு காட்சியையும் சிறந்ததாய் இருக்க வேண்டும் என்று எண்ணுவதே எனக்கும் கிரிஸிற்கும் இருக்கும் பெரும் ஒற்றுமை" என்றார்.

 

பிரசாந்தின் சாகசம் - முதல் போஸ்டரை வெளியிடுகிறார் சிம்பு

பிரசாந்த் - அமண்டா நடித்துள்ள பிரமாண்ட படமான சாகசம் படத்தின் முதல் அசையும் போஸ்டரை நாளை வெளியிடுகிறார் நடிகர் சிம்பு.

மம்பட்டியான் படத்துக்குப் பிறகு பிரசாந்த் நடிக்கும் படம் சாகசம். இதில் பிரசாந்துக்கு ஜோடியாக லண்டன் அழகி அமண்டா நடித்துள்ளார். அருண்ராஜ் வர்மா இயக்கியுள்ள இந்தப் படத்துக்கு எஸ்எஸ் தமன் இசையமைத்துள்ளார்.

Simbu to unveil the first motion poster of Prashant's Sahasam

இந்தப் படத்தில் சிம்பு, லட்சுமி மேனன், சோனு நிகம் என பல பிரபலங்கள் பின்னணி பாடியுள்ளனர்.

மலேசியாவின் அழகான லொகேஷன்களில் படமாகியுள்ள சாகசம் படத்தின் முதல் அசையும் போஸ்டரை நடிகர் சிம்பு நாளை ஆன்லைனில் வெளியிடுகிறார். இதனை இன்று நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்த படத்தின் தயாரிப்பாளர் தியாகராஜன், "சாகசம் படத்தின் பாடல் வெளியீட்டை பிரமாண்டமாக நடத்தவிருக்கிறோம். விரைவில் அதுகுறித்த அறிவிப்பு வெளியாகும்," என்றார்.